Tuesday, May 30, 2006

எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது!!!???

எனக்கு கொஞ்ச நாளாவே ஒன்னு நடக்குது. அத அப்படி பகிர்ந்துக்கிறதுன்னு தெரியல. இருந்தாலும் சொல்லிபுடுறேன்.

நான் கையில் கடிகாரம் கட்டும் வழக்கம் இல்லாதவன். கையில் இருக்கும் கைபேசி-ல் (கரீகிட்டு தானே?) Screen Saver வைத்து மணியைப் பார்த்துக் கொள்வேன். எல்லாமே நல்லா தான் போய்ட்டிருக்கு. ஆனால், ஒரு 2-3 மாதங்களாகவே நான் நேரம் பார்க்கும் நேரத்தில் தான் பிரச்சினையே. அதாவது, நான் நேரம் பார்க்கும் பொழுதெல்லாம் நான் காணும் நேரம் "பெரும்பாலும்" magic numbers-ஆகவே உள்ளது. இதோ இப்பொழுது எழுதும் வரை.

உதா, 12:00, 02:00 etc. அதுவும் சில சமயம் 11:33, 12:12 இப்படியெல்லாம் நேரம் தெரிகிறது (அல்லது, அந்த நேரத்தில் நான் பார்க்கிறேன்). இது எப்பொழுதாவது ஒருமுறை என்றால் பரவாயில்லை. ஆனால், நான் நேரம் பார்க்கும் சமயங்களில் பெரும்பாலும் (65-75%) இப்படித்தான் தெரிகிறது. ஒரு சில சமயங்களில் 11:11, 09:09 கூட காட்டும். இத வெளியில் சொல்ல முடியல. காரணம், இது ஒரு வித்தியாசமான பிரச்சினையா(!) இருக்கு. நானும் probability எல்லாம் யோசிச்சு பாத்துட்டேன். ம்ஹூம், ஒன்னும் பயனில்லை. சரி! atleast இத பகிர்ந்துக்கலாமேன்னு தான் இந்தப் பதிவு. (ஒரே குஷ்டமப்பா...இது கஷ்டமப்பா).

எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது!!!??? யாருக்காவது தெரியுமா? (என்ன சொல்லி நான் எழுத?)

10 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. ஜக்கம்மாக்கிட்ட குறிகேட்டா எல்லாம் தெரிஞ்சுடும்:)

    ReplyDelete
  3. அது சரி! ஏன் சொல்லமாட்டீங்க!!

    ReplyDelete
  4. யாரோ செய்வினை வச்சிடாங்க சீனு .. இத சரி பண்ணனும்னா நீங்க என்னோட பேங்க் அக்கவுன்ட்ல ஒரு 1000 USD ய போடுங்க.. நான் உங்க கைபேசில நேரம் 33:44 வர்ற மாதிரி செட் செஞ்சிடுறேன் :-)

    உங்க கைபேசில எப்ப மணி 33:44 அப்படின்னு காட்டுதோ அப்ப இது சரியா பூடும்ன்னு சைதாபேட்டை உட்டாலக்கடி வடகறி சாமியார் சொல்லி இருக்குறாரு..

    ReplyDelete
  5. பல தடவைகளில் இப்படி எனக்கும் இருந்தது! மணிக்கூட்டில் 4 ஒரே இலக்கம். இது கூடப் பிரச்சனையா? எதைப் பெரிது படுத்துவதென விவஸ்தையில்லைய்யா,,,,????
    யோகன் - பாரிஸ்

    ReplyDelete
  6. "நானும் probability எல்லாம் யோசிச்சு பாத்துட்டேன். ம்ஹூம், ஒண்ணும் பயனில்லை."

    நீங்கள் சரியாக யோசிக்கவில்லை. உங்கள் பிரச்சினை என்ன? 11.00, 2.00 போன்று தெரிவதில்லை, எப்போது மணி பார்த்தாலும் 11.33, 09.09 என்றுதான் தெரிகிறது அல்லவா? விளக்கம் எளிமையானது.

    உதாரணத்துக்கு 1.00 மற்றும் இரண்டு மணிகளை எடுத்துக் கொள்ளுங்கள். 1.00-க்கு அப்புறம், 1.01, 1.02 என்று வருகின்றன அல்லவா? அவ்வாறு 59 ரீடிங்குகள் உண்டு. முழு நம்பராக ஒரே ஒரு ரீடிங்தான். ஆக முழு மணி நேரம் தெரிய வேண்டுமானால் அதன் சாத்தியக் கூறு 1/60, மற்ற நேரங்கள் தெரியும் சாத்தியக் கூறு 59/60. அவ்வளவுதான் விஷயம்.

    உண்மையான டோண்டுதான் இப்பின்னூட்டம் இட்டான் என்பதற்கு சாட்சி, என் போட்டோ இப்பக்கத்தில் வர வேண்டும், மேலும் எலிக்குட்டி சோதனையில் என் பிளாக்கர் எண் 4800161 தெரிய வேண்டும். இரண்டு சோதனைகளும் சேர்ந்து வெற்றி பெற வேண்டும்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  7. 5 நிமிஷத்திற்கு ஒரு தரம் பார்த்துக்கிட்டே இருங்க.. இல்லைனா கண்ணாடிய மாத்துங்க.. இல்லைனா..மொபைல மாத்துங்க.. இல்லைனா.. மொபைல்ல டைம் பார்க்கறத நிறுத்துங்க..இல்லப்பா. நீங்க டைமே பாக்காமா வேற யாரையாவது கேட்டுகோங்க..அப்பாடா...இவ்ளோ ஐடியா போதுமா?!!

    ReplyDelete
  8. //சைதாபேட்டை உட்டாலக்கடி வடகறி சாமியார் சொல்லி இருக்குறாரு//
    அந்த "சைதாபேட்டை உட்டாலக்கடி வடகறி சாமியார்" பெயர் கார்த்திக் ஜெயந்த்-ஆ?

    //எனக்கும் இப்படி சில வேளைகளில் நடந்திருக்கு.//

    அப்பாடா! நான் மட்டும் தான்னு நினைச்சேன், எனக்கு இரு கம்பேனி கிடைச்சாச்சு...

    ReplyDelete
  9. //எதைப் பெரிது படுத்துவதென விவஸ்தையில்லைய்யா//

    யோகன் - இதில் பெரிதுபடுத்துவதில் எனக்கென்ன? ஏதோ சொல்லனும் போல இருந்துச்சு.

    //ஆக முழு மணி நேரம் தெரிய வேண்டுமானால் அதன் சாத்தியக் கூறு 1/60, மற்ற நேரங்கள் தெரியும் சாத்தியக் கூறு 59/60. அவ்வளவுதான் விஷயம்.//

    டோண்டு சார்,

    மற்ற நேரங்கள் தெரியும் சாத்தியக்கூறு என்னவோ 59/60. ஆனால், அந்த 59/60-ல் 11:33 வருவது என்பது மற்றொரு 1/60 தானே. So, ஒரு மணி நேரத்தில் (உதா, 11:00 to 12:00) முழு நேரம் பார்க்க probability 1/60, அதேபோல 11:33 பார்க்க மற்றொரு 1/60. ஆக, மொத்தம் 2/60 தானே? (ஸ்...அப்பா...ஓவரா கண்ண கட்டுதே...)

    //5 நிமிஷத்திற்கு ஒரு தரம் பார்த்துக்கிட்டே இருங்க.. இல்லைனா கண்ணாடிய மாத்துங்க.. இல்லைனா..மொபைல மாத்துங்க.. இல்லைனா.. மொபைல்ல டைம் பார்க்கறத நிறுத்துங்க..இல்லப்பா. நீங்க டைமே பாக்காமா வேற யாரையாவது கேட்டுகோங்க..அப்பாடா...இவ்ளோ ஐடியா போதுமா?!! //

    கவிதா,

    கலக்கிட்டீங்க போங்க. BTW, சென்னைல பயங்கரா வெயிலுங்க (இத வேற எதோடயும் போட்டு குழப்பிக்காதீங்க...)

    ReplyDelete