யுவன் என்னோட ஃபேவரைட் இசையமைப்பாளர். ஆனாலும், அவர் சுடுறத ஒரு தனி திறமையாவே வெச்சுகிட்டிருக்கார். பயபுள்ள பயங்கர கில்லாடி (கற்பூர நாயகியே?). நந்தா வந்த புதுசில், இளையராஜா ஒரு தடவை யுவனிடம், 'முன் பனியா' படலை குறிப்பிட்டு, "இந்த பாட்டு என்னோட ஏதோ ஒரு பாட்டு. அது என்னான்னு சட்டுனு நினைவுக்கு வரலை. சொல்லிடுடா"-ன்னு கேட்டிருக்கார். ஆனா, அந்த பாட்டு அஃமார்க் ஏ.ஆர்.ஆரின் "பூங்காற்றிலே" பாடல். இரண்டும் அப்படியே ஒன்றிப் போகும். "கண்ணில் ஒரு வலியிருந்தால்..." சீக்குவென்ஸ் கூட அப்படியே "மனசில் எதையோ மறைக்கவும்..."-ன்னு போகும்.
தேவாவுக்கும் யுவனுக்கும் (அல்லது இளையராஜாவுக்கும்) பெரிய வித்தியாசமே மற்றவர் கவனிக்காமல் சுடுறது தான்...தேவா அப்படியே ஜெராக்ஸ். எக்ஸாமில் பிள்ளையார் சுழியையும் சேர்த்து காஃபி அடிப்பவர் போல. பழைய படங்களில் 'வேதா'ன்னு ஒருத்தர் இருந்தார். அவர் அப்படியே இந்தியில இருந்து சுடுவார், வல்லவன் ஒருவன் படத்தில் வரும் "மனம் என்னும் மேடையின் மேலே", "இன்னும் பார்த்துகொண்டிருந்தால் என்னாவது?" என்று. தேவாவும் வேதாவும் ஒன்னு (என்ன ஒரு பேர் பொருத்தம் பாருங்க).
ஆனா, யுவன் அவர் அப்பாவை போலவே பயங்கர கில்லாடிங்க. சுட்டாலும் தெரியாம சுடுறது. ஆனா, என்ன உறுத்தறதுன்னா, ஒரே பாட்ட 4 படங்களில திரும்ப திரும்ப உபயோகப்படுத்தறது தான்.
'காதல் கொண்டேன்' படத்தில் வரும் "மனசு ரெண்டும் பார்க்க" பாடலை அப்படியே 'கண்ட நாள் முதல்' படத்தில் "மேற்கே மேற்கே மேற்கே தான்" பாடலாக உபயோகப்படுத்திக்கொண்டவர், அதையே 'சென்னை 600028' படத்துக்காக "உன் பார்வை மேலே பட்டால்" ஆகியது. அப்புறமா பார்த்தால் இப்பொழுது 'சத்தம் போடாதே' படத்துக்கும் அதே பாடலை "காதல் பெரியதா; காமம் பெரியதா"-ன்னு மாறியிருக்கிறது. இரண்டு இரண்டு பாடலா திரும்ப திரும்ப கேட்டுப்பாருங்க. நான் சொல்றது தெரியும். மற்றபடி யுவனின் பெருமைகளை(?) போட ஒரு தனி பதிவே போடலாம்.
இளையராஜா ஒரு முறை சொன்னார். ஒரு பாடலை கேட்கும் பொழுது அது நம் ஆழ்மனதில் பதிந்துவிடும். பின்னாளில் ட்யூன் போடும்பொழுது அது தன்னையும் அறியாமல் அந்த ட்யூன் வந்து செட்டாயிடும். அதனால் காஃபி என்பது தடுக்க முடியாது என்று. சரி தான்! அதுக்காக இப்படியா?
8 கும்மாங்குத்துகள்...:
ஒரு விஷயம் சொன்னா கேப்பிங்களா? கேக்கலனாலும் நாங்க சொல்வோம்ல :)
யார்னா எதுனா பண்ணா அத அனுபவிக்கனும்.. ஆராயப் படாது.. மனசிலாயோ? :P
//ஒரு விஷயம் சொன்னா கேப்பிங்களா? கேக்கலனாலும் நாங்க சொல்வோம்ல :)
யார்னா எதுனா பண்ணா அத அனுபவிக்கனும்.. ஆராயப் படாது.. மனசிலாயோ? :P //
கரெக்டுங்க. ஆனா பாருங்க, தப்ப தப்பில்லாம செஞ்சா அந்த தப்பு தப்பே இல்லீங்களே! யுவனோட குவாலிட்டி தானே கெடுது. நான் தான் சொன்னேனே, நான் யுவன் இசைக்கு விசிறின்னு.
வழக்கமா யுவன் பன்னின படங்கள்ள படம் ஹிட் ஆகலைன்னாலும் பாட்டு நல்லா இருக்கும். தென்னவன் பாட்டு கேட்டிருக்கீங்களா? அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது பாட்டு கேட்டிருக்கீங்களா? கேட்டுட்டு சொல்லுங்க. ஆனா இப்போ சில படங்கள் ஹிட் ஆனாலும் பாட்டு ஹிட் ஆகல. உதா, திமிரு. இது தான் வேணாம்னு சொல்றேன்.
Manasu rendum [Film: Kaadhal Konden (2003)]
Lifted from the song 'A rose in the wind' by Anggun.
Listen to Manasu rendum | A rose in the wind
I came across this information in TFMpage and was rather surprised over two things - first, this is the second lift of YSR in the same movie that I had included a couple of weeks back and second, the amount of lift in this track. Blatant and in such a way that it puts a huge question mark over an upcoming (some may argue that Yuvan has crossed that stage with his so-called recent hits...that's besides the point, though) composer's creativity.
மற்ற காஃப்பிகள்
Live India Vs Australia 3rd One Day.
http://tv.haplog.com/sop.php?src=sop://broker.sopcast.com:3912/33407
Enjoy!!!தமிழ்.ஹப்லாக்.காம் Telugu.haplog.com Hindi.haplog.com Malayalam.haplog.com kannada.haplog.com music.haplog.com radio.haplog.com tv.haplog.com
(Tamil.Haplog.com)
Plz have a look ::
http://kaalapayani.blogspot.com/2008/04/blog-post_1552.html
yuvan is such a wonderfull music director, dont tell like this, he is great.
Hello, I am a big fan of him. Just sharing what he did/do...
makkal rasikka apdi seiraar