Tuesday, April 26, 2005

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் !!!

நாம் பலமுறை "ஐ.நா. சபையில் இந்தியாவிற்கு நிரந்தர உருப்பினர் பதவி - so and so நாடு ஆதரவு, பாகிஸ்தான் எதிர்ப்பு" என்று கேள்விப்பட்டிருப்போம். அதி இன்னா ரப்சரு-பா? ஐ.நா. என்பதன் விரிவாக்கம் "ஐக்கிய நாடுகள் சபை" (ஆங்கிலத்தில் UN - United Nations). இராக்கியருக்கு சதாம் ஹுசேனிடமிருந்து "சுதந்திரம்" வாங்குவதர்க்கு அமெரிக்கா "போர்" தொடுத்த போது, உம்மனாம் மூஞ்சியாக வெறும் அறிக்கை மட்டுமே வாசித்த அதே ஐக்கிய நாடுகள் சபை தான். இது என்ன அமைப்பு? எதற்காக இந்தியா அதில் நிரந்தர உருப்பினர் ஆக வேண்டும்?? அதற்கு எதற்கு பல நாடுகளின் ஆதரவைக் கோரவேண்டும்???

ஐ.நா. சபையில் தற்போது இந்தியாவையும் சேர்த்து மொத்தம் 189 உருப்பு நாடுகள் உள்ளன. ஐ.நா. சபையின் ஒரு அங்கம் தான் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில். இதன் முக்கிய நோக்கமே நாடுகளுக்கு இடையே அமைதியையும், பாதுகாப்பையும் உருதிப்படுத்துவது தான். தற்போது ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உருப்பினராக உள்ள நாடுகள் சீனா, பிரான்சு, ருஷ்யா, இங்கிலாந்து மற்றும் "பெரிய அண்ணன்" அமெரிக்கா. இந்த நாடுகள் யாவும் இரண்டாம் உலகப்போரின் வெற்றியால் உருப்பினராக்கப்பட்டவை. (1971-ல் "சீன மக்கள் குடியரசு" "சீனா"வாகவும், 1991-ல் "சோவியத் யூனியன்" "ருஷ்யா"வாகவும் மாற்றம் பெற்றன). இவைதவிர, மற்ற பத்து நாடுகள் 2 வருடத்திற்கு ஒரு முறை தேர்வு செய்யப்படும். இவற்றில் 5 நாடுகள் ஒவ்வொறு ஆண்டும் மாற்றப்படும். இந்த தேர்தல் ஒவ்வொறு சனவரி 1-ம் தேதியும் நடக்கும். ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா நாடுகள் ஒவ்வொன்றும் தலா இரண்டு நாடுகளையும் (மொத்தம் ஆறு), அரேபியா, ஆசியா மற்றும் கிழக்கு ஐரோப்பா நாடுகள் ஒவ்வொன்றும் தலா ஒரு நாட்டையும் (ஆறு + மூன்று = மொத்தம் ஒன்பது). பத்தாவது நாடாக ஒரு ஆசிய அல்லது ஆப்ரிக்க நாடு மாறி மாறி வரும். 2005-2006-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 நாடுகள்: அல்ஜீரியா, அர்ஜென்டினா, பெனின், பிரேசில், டென்மார்க், கிரேக்கம், ஜப்பான், பிலிபைன்ஸ், ரோமானியா மற்றும் தான்சானியா ஆகியவை.

இந்த பதினைந்து நாடுகளில் தற்போது ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உருப்பினராக உள்ள நாடுகள் special நாடுகள்.

1) இந்த நாடுகள் யாவும் Nuclear Non-Proliferation Treaty (NPT)-யின்படி அனு ஆயுதங்களை வைத்துக் கொள்ளலாம். மற்ற நாடுகள் அனு ஆயுதங்களை வைத்துக் கொள்ளக் கூடாது. ஏன், அனு ஆயுத சோதனை கூட செய்யக் கூடாது. இதைத் தான், Comprehensive Test Ban Treaty (CTBT) மூலம் நம் நாட்டை சில வருடங்களுக்கு முன் அமெரிக்கா நெருக்குதல் கொடுத்தது.

2) இதை விட முக்கியமானது, இந்த நாடுகள் யாவும் வைத்திருக்கும் வீட்டோ (Veto) அதிகாரம். வீட்டோ என்பது லத்தீனில் இருந்து வந்த வார்த்தை. ஐ.நா.வில் உருப்பினராக உள்ள எல்லா நாடுகளுமே மற்ற நாடுகளுக்கு பரிந்துரை மட்டுமே செய்ய முடியும். அவற்றின் மேல் திர்மானம் போடும் பொழுது இந்த பதினைந்து நாடுகளில் மூன்றில் இரண்டு பங்கு நாடுகள் (பதினைந்தில் ஒன்பது நாடுகள்) ஆதரிக்க வேண்டும். ஆனால் வீட்டோ அதிகாரத்தை வைத்து இந்த தீர்மானத்தை மேற்கூரிய ஐந்து நிரந்தர உருப்பினராக உள்ள நாடுகளில் ஏதேனும் ஒரு நாடு பயன்படுத்தியும் ரத்து செய்ய முடியும் (பதினைந்தில் ஒன்பது நாடுகள் ஆதரித்த பின்பும்). இது தான் அந்த வீட்டோ அதிகாரம். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஆரம்பித்த பிறகு இந்த வீட்டோ அதிகாரத்தை சீனா 5 முறையும், பிரான்சு 18 முறையும், ருஷ்யா 122 முறையும், இங்கிலாந்து 32 முறையும், அமெரிக்கா 79 முறையும் பயன்படுத்தி இருக்கின்றது. இந்த ஐந்து நாடுகளைத் தவிற, ஐ.நா.வில் உருப்பினராக உள்ள மற்ற நாடுகள், இந்தியாவையும் சேர்த்து, பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்ள மட்டுமே முடியும், அதுவும், இந்த கவுன்சில் ஒப்புக் கொண்டால் மட்டுமே.

இந்த special நாடுகள், ஒரு பிரச்சினை மற்ற நாடுகளை பாதிக்கும் பட்சத்தில், அவை விசாரனை நடத்த உரிமை உண்டு. இந்த பிரச்சினைகளுக்கான தீர்வை இந்த நாடுகள் சிபாரிசு செய்யலாம். இந்த உரிமை மற்ற நாடுகளுக்குக் கிடையாது. மேலும், இந்த கவுன்சில், சில தவிர்க்க முடியாத சூழ்நிலையில், அதிரடியாக காரியத்திலும் இறங்கலாம். உதா"ரணம்", 1950-ல் கொரியாவிற்கு எதிரான நடவடிக்கை, 1991-ல் கூட்டுப் படையை உபயோகித்து நடத்தப்பட்ட வளைகுடாப் போர். இவற்றிற்கு ஐ.நா.வின் உருப்பினர்கள் கொடை வள்ளல்களாக இருப்பார்கள். அதுவே, ஐ.நா.வின் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு அமெரிக்கா வாங்கிக் கட்டிக் கொண்ட வியட்னாம் பிரச்சினை, சதாம் வாங்கிக் கட்டிக் கொண்ட ஈராக் யுத்தம் ஆகியவற்றை சொல்லலாம். சமீபத்தில் (சதாம் ஹுசைனுக்கு எதிராக) நடந்த ஈராக் யுத்தத்திற்கு ஐ.நா. ஒப்புதல் அளிக்காததால் தான் அமெரிக்கா தன்னிச்சையாக போர் தொடுத்தது. அதனால் ஐ.நா.வின் கூட்டுப் படை கலந்துகொள்ளாததால் இந்தியாவும் தன் படைகளை அனுப்பத் தேவையில்லாமல் போய்விட்டது.

இந்த ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தர உருப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் திட்டமும் இருக்கிறது. ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் நிரந்தர உருப்பினர் ஆவதற்கு பெரும் பாடு படுகின்றன (இந்த இரண்டு நாடுகள் தான் ஐ.நா.விற்கு அதிகமாக படைகளை அனுப்பும் நாடுகளில் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளது). ஜெர்மனியை பிரான்சு ஆதரிகின்றது. ஆனால், இத்தாலி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் ஜெர்மனிக்குப் பதிலாக பொதுவன ஒரு ஐரோப்பிய கூட்டமைப்பிற்கு இந்த இடத்தை வழங்கலாம் என விருப்பம் தெரிவித்துள்ளன. பிரான்சும், இங்கிலாந்தும் தங்கள் இடங்களை விட்டுக்கொடுத்தால் ஜெர்மனி இந்த மேற்கூரிய திட்டத்திற்கு உடன்படுவதாக தெரிவித்துள்ளது. உலகின் ஐந்தில் ஒரு பங்கு (!?) மக்கள் தொகையை வைத்திருக்கும் நம்மை பிரான்சு, இங்கிலாந்து, ருஷ்யா ஆகியவை ஆதரிக்கின்றன. இந்திய-சீன உறவின் முன்னேற்றத்தால் சீனாவும் நம்மை ஆதரிக்கின்றது. வழக்கம் போல் பாகிஸ்தான் இதை எதிர்க்கிறது. இன்னொரு புறம், ஜப்பான் நிரந்தர உருப்பினர் ஆவதற்கு எதிர்ப்பு இல்லாமல் இல்லை. கிழக்கு ஆசிய நாடுகள், குறிப்பாக சீனா, வட மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் ஜப்பானை எதிர்க்கிறது.

தற்போதைய ஐ.நா. பொதுச் செயலாளர் திரு.கோபி அன்னானும் இந்த நிரந்தர உருப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு ஒரு குழுவை பரிசீலிக்கச் சொன்னார். அந்த குழு கூறியது, இந்த எண்ணிக்கையில் இன்னும் ஐந்து நாடுகளை சேர்த்துக் கொள்ளலாம் என்று சிபாரிசு செய்தனர். அந்த ஐந்து நாடுகள்: ஜப்பான், ஜெர்மனி, இந்தியா, பிரேசில் மற்றும் ஆப்ரிக்காவில் இருந்து ஒரு முக்கியமான நாடு. செப்டம்பர் 21, 2004-ல் இந்த நாடுகள் கூட்டாக மற்ற நாடுகளை ஆதரிப்பதாக ஒரு அறிக்கை வெளியிட்டது. இதை பிரான்சு மற்றும் இங்கிலாந்து ஆகியவை இதை ஆதரிப்பதாக கூரியது.

நம் நாடும் கூடிய விரைவில் நிரந்தர உருப்பினர் ஆகும் என்று நம்புவோம்...வாழ்க பாரதம்...வளர்க தமிழ்...

3 comments:

  1. ஐ.நா. சபையின் உலக அமைதி முயற்சி, மற்றும் போருக்கு எதிரான முயற்சிகளின் எமக்கு ஒன்றும் மரியாதை இல்லை ஈராக் மீது அமெரிக்கா தொடுத்த போரை தடுக்க முடியாத ஒரு மலட்டு அமைப்பு தான் ஐநா சபை மற்றும் பாதுகாப்பு குழு அதில் இந்தியா நிரந்தர உறுப்பு நாடாக இருந்தால் என்ன இல்லையென்றால் என்ன இந்தியா வல்லரசாவதிவிட நல்லரசாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம், இந்த சுட்டியில் என் கருத்தை படியுங்களேன் 2020ல் நாம் வல்லரசு

    ReplyDelete
  2. நல்ல விளக்கக் கட்டுரை.

    ReplyDelete