Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Saturday, May 14, 2011

தேர்தல் 2011 - சொல்வது என்ன?


யாருமே, ஏன் ஜெ.வே எதிர்பார்க்காத மாதிரி ஃபுல் மெஜாரிட்டியுடன் மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க இருக்கிறார் ஜெ. அவருக்கு வாழ்த்துக்களும், மக்களுக்கு வழக்கம் போல் அனுதாபங்களும். 5 வருடங்களுக்கு முன் நடந்த காட்சிகள் மறுபடியும் நடக்கிறது / நடக்க போகிறது, ஆனால் தலைகீழாக.

முடிவுகள் அறிவிக்க ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் கலைஞர் டிவியில் திமுக 20+ லீடிங், அதிமுக 2+ லீடிங், ஜெயா டிவியில் அதிமுக 20+ லீடிங், திமுக 2+ லீடிங் என்று காட்ட, கண்களை கசக்கிக் கொண்டு மீண்டும் ஒரு முறை திமுக-வா அதிமுக-வா என்று ஊர்ஜிதப்படுத்திக் கொண்டேன்.

ஒரு மணி நேரம் கழித்து சரிசமமாக வந்து கொண்டிருந்த லீடிங் லிஸ்ட் சன் டிவியில் சடாரென்று திமுக 41+ அதிமுக 101+ என்று எகிற, கலைஞர் டிவி பார்த்தால்...அட, அங்கேயும் அதே. அப்புறம் கொஞ்ச நேரத்தில் கலைஞர் டிவியில் 'மானாட மயிலாட' ரிப்பீட் டெலிகாஸ்ட் ஆனதில் இருந்து ஆரம்பிக்கிறது ஜெ-வின் வெற்றி. பத்தாததற்கு கலைஞரும், 'மக்கள் எனக்கு ஓய்வு தந்துள்ளனர்' அப்படீங்கிறார். ஞாநி சொன்னால் மட்டும் பூனூல் தெரியும். இனி அந்த நிகழ்ச்சிக்கு நடுவராக கலைஞர்ஜியை எதிர்பார்க்கலாம். 'கலைஞர்ஜிக்கு 10 மார்க் போடுது'-னு நம்ம நமீதா சொல்வதை ஆனந்தமாக கேட்கலாம். இந்த காட்சிகள் யாவும் ஐந்து வருடங்களுக்கு முன் ஜெயா டிவியில் நடந்தது இன்று கலைஞர்ஜிக்கு நடக்குது, அவ்வளவு தான்.

அதன் பின் நடந்ததெல்லாம் அறிவீர்கள்.

இனி நடக்கப்போவது? கலைஞர்ஜி அறிக்கை கொடுப்பார். அதில் வழக்கம் போல நாங்கள் 37.689546% ஓட்டுக்கள் வாங்கியிருக்கோம். போன தேர்தலை விட இது 0.000114464% மட்டுமே குறைவு. அதுக்கும் காரணம் இல்லாத 2ஜி பற்றி ஊடகங்கள் பரப்பிய பொய் பிரச்சாரமே காரணம். அப்புறம் தலித், தேர்தல் ஆணையம், ஆரிய சூழ்ச்சி, சூத்திரன் போன்ற லேபிள்கள் போட்ட அறிக்கை டெம்ப்ளேட் வரும். போன ஆட்சியில் நடந்த ஊழல்கள் தோண்டப்படும். குற்றப்பத்திரிக்கையில் சேர்க்காத பெயர்கள் சேர்க்கப்படும். 20-உடன் 60-ம் போகும்.


சரி! இந்த 'தேரு'தல் சொல்வது என்ன?

1) திமுக-வின் திடீர் கொபசெ 'வைகை புயல்' வடிவேலு (தலையெழுத்து) 'லூஸு', 'குடிகாரன்' போன்ற ஏக வசனங்களில் பேசினால் கூட்டம் மட்டுமே கூடும். ஓட்டுக்களாக விழாது. காமெடியன் காமெடியன் தான். சில கோடிகள்(!) கிடைக்குது என்பதற்காக, ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டார் வடிவேலு. அதுவும் இல்லாமல் தன் தனிப்பட்ட விரோதங்களை தீர்த்துக் கொள்ள தேர்தல்களத்தை பயன்படுத்தியதை என்னவென்று சொல்ல?

விஜயகாந்த் குடிக்கட்டும். அது அவருடைய தனிப்பட்ட விஷயம் என்பதை கூட உணரவில்லை வடிவேலு. கவர்மென்ட்டு கடை வெச்சு ஊத்தி கொடுத்தால் தப்பில்லை. அதை குடித்தால் மட்டும் தப்பு. இவர் பன்னியதை வெளியே சொன்னால் என்னவாகும்? இவர் குடிக்காதவர் இல்லை. மணமான இன்னொருவருடன் குடித்தனம் நடத்தாதவர் இல்லை,

பொது இடத்தில் வேட்பாளாரை அடித்ததாக சொன்னாலும், அதை எடிட் செய்து திரும்ப திரும்ப ஒளிபரப்பியது சன் டிவி & கோ-வுக்கே உரித்தான நாகரீகம் / பன்பு. நல்லது. அவர் கையால் அடி வாங்கியவர் மகாராஜா ஆகிட்டாராம். மாப்புக்கு ரிவர்ஸுல ஆப்பு.

பிரச்சாரம் என்பது தம்முடைய நிலையை விளக்க என்பது போய் அடுத்தவர் நிலையை இழுக்க என்று ஆகி கிட்டத்தட்ட 40 வருடங்கள் ஆகிறது. ஆரம்பித்து வைத்தவர்? வேறு யார்? கலைஞர்ஜி.

ஆனால், விஜயகாந்த் வடிவேலுவை கண்டுகொள்ளவில்லை. அவர் சொல்லும் காரணம், அவர் அரசியல் நடத்த வந்தது கலைஞர்ஜி + ஜெ-வை எதிர்த்து. டெம்பரரி கொபசெவை நம்பி இல்லை. 'ரிசல்ட் வந்ததும் பேசுகிறேன்'-னு சொன்ன வடிவேலு இப்போ விஜயகாந்தை பார்த்தால் என்ன பேசுவார்?

"நான் உங்கள பத்தி வெளையாட்டா பேசுனத எல்லாம் நீங்க உண்மைனு நம்பிட்டீங்க. பிலீவ் மீ. ஹைய்யோ...ஹைய்யோ..."


2) தி சாங் இஸ் டெடிகேட்டட் டு...வேற யாருக்கு? காங்கிரஸுக்கு தான்.

"நந்தவனத்தில் ஒரு ஆண்டி,
அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி,
கொண்டு வந்தானொரு தோண்டி,
அதை கூத்தாடி, கூத்தாடி போட்டுடைத்தாண்டி..."

2ஜி வைத்து திமுகவிடம் 63 ஸீட் பிடுங்கியாயிற்று. சரி! அதையாவது ஒழுங்காக 'இன்வெஸ்ட்' செஞ்சாங்களா? இல்லை. வாங்கியதும் செய்த முதல் வேலை, தொகுதிகளை உள் ஒதுக்கீடு செய்து கொண்டது. சரி! அதையாவது ஒழுங்காக செய்தார்களா? இல்லை. சண்டை நடுத்தெருவுக்கு வந்துவிட்டது.

எனக்கென்னவோ ராகுல் & கோ ஒரு பெரிய்ய ப்ளான் போல தெரியுது. 63 வாங்கியதால், ஜெயித்தாலும் திமுக கண்டிப்பாக மெஜாரிட்டி வாங்க முடியாது. அதனால் காங்கிரஸ் தயவு வேண்டும். 2ஜியை வைத்து ஆட்சியில் பங்கு பெறாலாம். தோற்றால், இருக்கும் கொஞ்ச ஸீட்டை வைத்து ஜெவிடம் ஒட்டிக்கொள்ளலாம். இதனால் திமுகவை பலவீனப்படுத்தி 2016க்குள் காங்கிரஸை 2வது பெரிய கட்சியாக்கிவிடலாம். சரிங்க பாஸு. அதுக்கு சம்மதமானு நீங்க உங்க கட்சிகாரங்ககிட்ட மொதல்ல கேட்க வேண்டாமா? போங்க பாஸு. உங்களுக்கு இன்னும் உங்க கட்சிகாரங்களை பத்தியே தெரியல.

இதுக்கெல்லாம் காரணம்? ரிஸல்ட் எப்படி போனாலும், அடுத்து வர்ற உள்ளாட்சி தேருதல்ல காங்கிரஸ் தனித்து தான் நிக்க போறாங்களாம். 'தேரு'தலுக்கு பொறவும் தனித்தே தான் நிக்க போறாங்கனு தெரியல அவங்களுக்கு.

3) போன எம்பி தேருதல்ல திமுக+காங் கூட்டனி சீட்டுக்களை அள்ளியது. ஈழ ஆர்வலர்களின் பிரசாரத்தை காட்டிலும் பணம் விளையாடியதும் முக்கிய காரணம் என்பதை மறக்க முடியாது. பிரச்சாரம் அவ்வளாவாக எடுபடாதது ஒரு விதத்தில் ஆச்சரியம் கலந்த சோகம். இனம் அழிந்து கொண்டிருந்த போதும் பணம் கிடைத்தால் போதும் என்று வாக்காளன் நினைத்ததை எப்படி ஜீரனிக்க முடியும்?

ஆனால், இந்த தேருதல்ல ஈழ ஆர்வலர்களின் பிரச்சாரம் காங்கிரஸை தோற்கடிக்க முக்கிய காரணமென்றாலும் முழுமையான காரணம் அது மட்டும் அல்ல. பின்ன, கிரெடிட் கொஞ்சம் கூட திமுக + காங்கிரஸுக்கு கிடையாத என்ன? எம்.பி, மத்திய அமைச்சர், எம்.எல்.ஏ-வா இருந்த ஒருத்தர் தன் மனைவியை நிற்க வைக்க தாக்கல் செய்த விண்ணப்பத்துல கையெழுத்து கூட போடாம, தேவையான டாக்குமென்ட் வைக்காமலா தாக்கல் செய்வார். அவ்வளவு வெகுளியா நம்ம தொங்கபாலு? அப்புறம் கடைசி நாள்ல back up-ஆ அவர அவரே முன்மொழிஞ்சு வழிமொழிஞ்சு வழி வழின்னு வழிஞ்சாரு. இப்படிப்பட்ட வில்லத்தனத்த கலைஞரே செஞ்சிருக்கமாட்டார். சோனியாவும் ஆடிப் போயிருப்பார். ஆகா, இவ்வளவு திறமையானவர் கட்சிக்கு ஆபத்துனு மாத்தினாலும் மாத்திடுவாங்க. ஏன்னா, கட்சி அப்படி. பின்ன சரத் பவார், மம்தா, மூப்பனார் என்று தலைவர்களை உருவாக்கிய கட்சி ஆயிற்றே...

4) ஈழ ஆர்வலர்கள் காங்கிரஸ் 'மட்டும்' தான் இன அழிப்பிற்கு காரணம் என்று கண்டுபிடித்தது ஆச்சரியம் தான். ஆனால், எதிரியை விட துரோகி ஆபத்தானவன்னு தெரியல. துரோகம் செஞ்ச திமுக-வை (வெளிப்படையாகவேனும்) எதிர்க்காத காரணம் என்ன? ஆளுங்கட்சி என்ற பயமா? இல்லை இனப்பாசமா? காரணம் முன்னதை காட்டிலும் பின்னது என்றால்...மன்னிக்க வேண்டும். இப்படிப்பட்டவருக்கு சாமரம் வீசியதால் தான் கொத்து கொத்தாக மக்கள் கொல்லப்பட ஒரு காரணமாக நாமும் பாவம் சுமந்து நிற்கிறோம். இன்னுமா? திருந்துங்க.

சரி! ஆளுங்கட்சி என்பது தான் காரணம் என்றால், ஒன்று, காங்கிரஸ் இந்த ஜனநாயக ரீதியான எதிர்ப்பை ஜனநாயக ரீதியாக எதிர்கொண்டு திருப்பி அடிக்காமல் (மயான) அமைதி காத்தனர். இல்லையென்றால், காங்கிரஸில் சூடு சொரனையுள்ளவர்கள் இல்லை என்று அர்த்தமாகிறது. இந்த இரண்டு காரணங்களில் எதுவானாலும் எனக்கு சந்தோஷம். பின்னது என்றால் (ஒரு முன்னாள் காங்கிரஸ் அனுதாபியாக), இன்னும் சந்தோஷம் :)

5) என்னதான் அன்பான முதல்வருக்கு ஆனந்தி கடிதம் எழுதினாலும், புரொபஷனல்களை வைத்து விளாம்பரங்கள் எடுத்தாலும், வெடிக்காத கலர் டிவியா தேர்ந்தெடுத்து மேடையில கொடுத்தாலும், 108க்கு விளம்பரங்கள சன் டிவி + தன் டிவிக்கு மட்டும் கொடுத்தாலும், ஆஸ்பத்திரி கட்டாம அந்த பணத்த வெச்சு வெறும் இன்சூரன்ஸ் மட்டும் கொடுத்தாலும், ஒரு மழை வரைக்கும் தாக்கு பிடிக்கிற மாதிரி 'மாதிரி ரோடு' போட்டாலும், 90% கமிஷன் அடித்து 10% வேலை செய்யும் திட்டங்கள் தீட்டினாலும் சுனாமி போல ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய 2ஜி என்னும் எறுமை மேல ஏறி மகள் மூலமா எமன் வருவான்னு கலைஞர்ஜிக்கு தெரியாம போயிடுச்சே.



தகத்தகாய கதிரவனுக்கு கூட்டாத கட்சியை மகளுக்கு மட்டும் கூட்டி, கட்சி அவரை காப்பாற்றும், நான் காட்டிக் கொடுக்க மாட்டேன் (அதனால மத்தவங்களும் காட்டி கொடுக்க கூடாது) போன்ற அதிரடி லோ பட்ஜெட் படங்கள ஓட்டினாலும், நல்ல வாயை நாற வாயன் கெடுத்த மாதிரி ஆட்சியும் போய் இப்போ மகளையும் திகார்ல களி திங்க வெச்சுட்டீங்களே கலைஞர்ஜி. மகாபாரதத்தை மறுபடியும் ரீமேக் பன்னினால் கட்டாயம் உங்களுக்கு திருதராஷ்டிரன் கதாபாத்திரம் ஒதுக்க இப்பவே துண்டு போடுங்க. (ஹூம்...துண்டு போடுவது பத்தி சூரியனுகே டார்ச்சா?)

கடைசியில சூத்திரன், ஆரிய கூட்டம் அப்படீன்னு பிட்ட போட்டாலும், (வீர)மணியோசை கொடுத்து அறிக்கை விட்டாலும், வாலி + வைரமுத்து + சுபவீயை விட்டு "நற்றமிழில் என்னை பாடுக" என்று வாழ்த்த வைத்தாலும்,  இவற்றை காது கொடுத்து கூட கேக்கலியே இந்த 'சோற்றால் அடித்த பிண்டங்கள்'.

6) வெறும் ஐந்தே வருடங்களில் என்னன்ன திட்டங்கள், சேவைகள், உழைப்பு...அடடா!

ஈழப்பிரச்சினைக்கு கடிதங்கள் (மட்டும்) எழுதுவது, அதற்காக தபால் மற்றும் தந்தி துறையை வாங்கினால் ஸ்லோவா போகுமின்னு, ஈமெயில் அடிக்க ஐ,டி, துறையை வாங்கிய சாமர்த்தியம்...வல்லவராயனை புறமுதுகிட்டு ஓடவைத்த புலிகேசியையும் மிஞ்சிவிட்ட சானக்கியத்தனம்.

நாங்களும் வெச்சிருக்கோம்ல...சுபவீ-னு ஒரு ஆளை எங்க பக்கம்...

தமிழன் என்றால் திருடன் (அல்லது இந்து) என்ற வாதத்தை 2ஜி மூலமாக ஹிந்திவாலாக்களுக்கு அழுத்தந்திருத்தமாக பதிய வைத்து மூக்கின் மேல் விரலை வைக்க வைத்த சாதுர்யம் தான் என்ன?

ஒரு ரூபாய்க்கு அரிசி போட்டு 100 ரூபாய்க்கு மளிகை பொருட்கள் வாங்க வைத்து கவர்மென்டுக்கு லாபம் கொழிக்க வைக்கும் பிஸினஸ் டேக்டிஸ் என்ன?

அதுவும் ஒரு ரூபாய் அரிசி என்ன நஷ்டத்திலா கொடுக்க முடியும்? தமிழ் நாட்டுக்கே ஊத்தி கொடுத்து அந்த லாபத்துல தானே அரிசியே போடமுடிகிறது. என்னா சாமர்த்தியம்.

இயல் தமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ். இவை மூன்றும் மட்டுமா? நான்காவதாக கொடுத்தீங்களே...'மச்சான்' தமிழ். ஆக்க...கக்க...கா.

'ராஜராஜன் - 1000' என்று நெல்விதைக்கு பேர் வைத்து விவசாயிகளின் வயிற்றில் பாலை(வனம்) வார்த்த வள்ளல்தனம் (வில்லத்தனம் அல்ல) தான் என்ன? விவசாயத்துக்கு இலவச மின்சாரமா? தமிழ்ல கலைஞர்ஜிக்கு பிடிக்காத ஒரே வார்த்தை...(சும்மா தரும்) இலவசம்.

தசாவதார கமலுக்கும் 'சிவாஜி' ரஜினிக்கும் சிறந்த நடிகர்(!) விருதை ஒரே மேடையில் அதுவும் தமிழக அரசு செலவில் கொடுத்து, அதையும் கலைஞர் டிவியில் மட்டுமே ஒளிபரப்பிக் கொண்ட ராஜதந்திரத்தை ஈழ பிரச்சினையில் தான் காட்டிவிட முடியுமா என்ன?

எந்த எழுத்தாளரும் வாங்காத லட்சங்களை கதை-வசனம் எழுதியதற்காக வாங்கி எழுத்தாளர்கள் வயிற்றில் பொறாமை தீயை ஊற்றி, அவர்களை 'ஊக்கு'வித்து இலக்கியத்திற்கு ஆற்றிய பனிதான் என்ன?

இதையெல்லாம் விட, நாட்டுக்கு 1000 ரூபாய் போனாலும் பரவாயில்லை எனக்கு 1 ரூபாய் வந்தால் போதும் என்ற அரசியல் நிலைபாடு யாராலும் எடுக்க முடியாதது. அதும் அந்த 1,76,000 கோடி ரூபாய் நோட்டு...சான்ஸே இல்ல.

7) சோறு தன்னி கூட வேணாம். பாராட்டு விழா போதும். 'உன் கவிதையை படிக்கும் போது அது செக்‌ஷுவல் ஃபீலிங் உணர்ந்த மாதிரி"-னு வாலி பால் ஆடினாலும், "பெண் சிங்கம் எழுதும் Pen சிங்கம் நீ; பா.விஜய்க்கே பஞ்ச் எழுதும் இளைஞன் நீ" அப்படீன்னு வைரமுத்து சொன்னாலும், "கலைஞர்ஜி பைபாஸ்(ரூட்)ல போகலை"-னு ரஜினி போட்டுகொடுத்த போதும், வீரமணிக்கு கலைஞர் விருதும், கலைஞருக்கு பெரியார் விருதும் மாத்தி மாத்தி கொடுத்துகிட்டு 'நமக்கு நாமே' திட்டம் போல பாராட்டிக் கொண்டபோதும்...கடைசியில் 'விருதுக்கே விருது' என்ற நிலைக்கு நாக்கு தள்ளிய போது...அடடா!!!

8) ஆளுங்கட்சியா இருந்து தேருதல் சந்திக்கும் போதும் கலைஞர்ஜி மட்டும் ஜெயித்திடுவார். மீது 233-ம் ஜெ-வுக்கு. அதுல ஒரு பெருமை, "நான் மட்டும் தோற்கலை பாத்தியா? உன்னால முடியுமா?" குழந்தை மனசு கலைஞர்ஜிக்கு.

ஒவ்வொரு முறை ஆட்சிக்கு வந்ததும் 5 வருடம் அயராது பாடுபட்டு அடுத்த முறை ஜெ-வை ஆட்சியில் அமர வைப்பேன் என்ற சபதம் எடுத்திருக்கிறார் கலைஞர்ஜி. ஆனா, அந்த நன்றி கொஞ்சமாவது இருக்கிறதா அம்மையாருக்கு? முடிஞ்ச வரை டஃப் கொடுக்கிறார் ஜெ.

9) இந்த மக்களை 40 வருஷமா மேய்ச்சுகிட்டு தான இருக்கோம். 100, 200 தூக்கியெறிஞ்சா ஓட்டு போட்டுடுவாங்கனு நெனச்சது கரெக்டு தான். ஆனா, 1,76,000 அடிச்சுட்டு அதுல 1 ரூபா மட்டும் கொடுத்தா நாங்க ஓட்டு போட்டுடுவோமா என்ன? வெலவாசி ஏறிப்போச்சு பாஸு.

10) ஒரு விஷயத்துல பாராட்டலாம். இளைஞர்கள் என்ன தகிடுதத்தம் செய்தாகிலும் ஆட்சிக்கு வரலாம், தப்பில்லை என்ற கருத்தை மையமாக கொண்ட 'கோ' படத்தை தைரியமாக வெளியிட்ட ஆளுங்கட்சிக்கு சபாஷ். ஒரு வேளை புட்டுக்கும்னு படத்தை ரஷ் கூட பார்க்காமல் அவசர அவசரமாக வாங்கி வெளியிட்டுடாங்களா?

விதவிதமாக, பெண் சிங்கம், இளைஞன் போன்ற வெற்றிச் சித்திரங்கள் உட்பட, திரைக்காவியங்களை வழங்கிய ஆட்சி இல்லாமல் போனது தமிழர்களுக்கு சொல்லொனா துயரத்தையே தரும் வேதனையான விஷயம் தான். (என்னைய மாதிரியே அழுவுரியே. அதான் ஒரே ரத்தம்).


இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் இந்த தேர்தலை பத்தி.

சரி! ஜெ மட்டும் ஒழுங்கா என்று புத்திசாலித்தனமாக மடக்குபவர்களுக்கு: இன்னும் 5 வருஷம் கழித்து இதே பதிவு மீள் பதிவு செய்யப்படும். ஒரு வித்தியாசம், கலைஞர்ஜி என்ற வார்த்தைக்கு பதில் ஜெ. சிம்பிள்.

Wednesday, December 22, 2010

Times Now-க்கும் காங்கிரஸுக்கும்...ட்டொய்ங்... :)

Times Now-ன் களவானித்தனம்...அவர்கள் பாஷையில் சொல்வதென்றால் Times Now Exposed...


சுரேஷ் என்பவர் ஒரு ட்வீட் செய்திருக்கிறார். அவர் ட்விட்டர் ஐ.டி. @sureshnakhuaசுரேஷ் அந்த ட்வீட் இதுதான். "Congress is always worried abt MODI and loses its focus". அதாவது, "காங்கிரஸ் எப்போதுமே மோடியை பற்றியே கவலை கொண்டு தன் பார்வையை இழக்கிறது".


அன்றைக்கு Times now-ல் சுரேஷ் சொன்னதாக வந்த செய்தி, "காங்கிரஸ் மோடியை பற்றி கவலைக்கொண்டு தன் பார்வையை இழக்கக்கூடாது". முன்னது ஒரு விமர்சனம். பின்னது, Times Now சொன்னது, அட்வைஸ் தொனியில். சுரேஷ் காங்கிரஸ் அனுதாபியாக்கப்பட்டார்.
இதை பார்த்து டென்ஷனான சுரேஷ், Times Now-க்கு ஒரு மெயில் தட்டி வருத்தம் தெரிவிக்குமாறு கோருகிறார். அவர் அனுப்பியது அர்னாப் மற்றும் Times Now-kku. அந்த மெயிலின் சாராம்சம், "நீங்கள் நான் அனுப்பிய ட்வீட்டை உங்களுக்கு தேவையான விதத்தில், உங்களுக்கு தேவையான அர்த்தத்தில் மாற்றிக்கொண்டுள்ளீர்கள். என்னை காங்கிரஸ் அனுதாபி போல சித்தரித்துள்ளீர்கள். இதனால் என்னுடைய அடிப்படை கருத்துரிமை பறித்துள்ளீர்கள். அதனால் எனக்கு உங்களின் வருத்தம் எனக்கு எழுத்தால் தெரிவிக்கவேண்டும். அவ்வாறு இல்லையெனில், இதை பற்றி News Broadcasting Association, Ministry of Information and Broadcasting மற்றும் சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்க எனக்கு உரிமை உள்ளது. மேலும், இணையத்தில் இதை பற்றி பிரசாரம் செய்யவும் எனக்கு உரிமை உள்ளது" என்கிறார்.
5 மெயில்கள் + 7 நாட்களுக்கு பிறகு, Times Now-ன் திரு. Hector Kenneth, Senior Editor, "Times Now" பதிலளிக்கிறார். என்னவென்று? மற்றொருவர் உங்களின் அதே போன்ற பெயரில் கருத்து தெரிவித்திருக்கிறார். அதனைத் தான் தாங்கள் தவறாக குறிப்பிட்டிருக்கிறீர்கள் என்று.
இதற்கு சுரேஷ் பதிலளிக்கையில், 18ம் தேதி இரவு 9:13 முதல் இரவு 11:58 வரை Newshour-க்கு அனுப்பப்பட்ட ட்வீட்களின் தொகுப்பை அனுப்பி அதில் எதுவும் நீங்கள் சொன்னது போல் வேறொருவர் இல்லை என்கிறார். அதனால் அவர்கள் சொல்வது பொய் என்றும் வாதிடுகிறார். "நீங்கள் குறிப்பிட்டது போல், தாங்கள் ஒரு சீனியர் எடிட்டர். இதை போன்ற வாதம் வைக்கும் பொழுது கொஞ்சம் பொறுப்பு தேவை" என்கிறார்.
பின், அந்த 7 நாட்களில் அர்னாப் இந்த விஷயம் மனித தவறு என்றும் மன்னிக்க வேண்டுவதாகவும் கோருகிறார். அப்புறம், "Times Now as you know has no political bias, or agenda, and I would like to assure you once again on this account" என்கிறார் அர்னாப் கோஸ்வாமி.
ஆனால், Hector Kenneth இன்னும் அதே பல்லவியை பாடுகிறார்.
பின் ஒருவாறு வருத்தம் தெரிவிக்கிறார்.
Famous quote from this movie:
Arnab Goswami: "Times Now as you know has no political bias, or agenda, and I would like to assure you once again on this account" ;)


நன்றி: சுவாதி ப்ரதீப் மற்றும் அர்னாப் கோஸ்வாமி ;)


பிற்சேர்க்கை - 16-Mar-2011:
http://www.hindu.com/2010/12/20/stories/2010122055720200.htm


Fake tweets aired on TV news show
Priscilla Jebaraj


NEW DELHI: A recent controversy about fake Twitter comments being run onscreen during a news show has raised questions about the reliability of instant viewer feedback. From live SMS polls to tweeted views to texted queries, many of the methods used to increase the “buzz” of viewer-interactivity in real-time can be misused unless adequate filters are put in place.


On his ‘India at 9' programme on December 16, CNN-IBN's Editor-in-chief Rajdeep Sardesai discussed the question ‘Should lobbying be legalised?'


IBN sources say the question of the day is usually posted on the channel's website around noon. On this particular day, however, the question was posted at 5-07 p.m., according to the time-stamp on the website. Since there were not enough responses posted, an IBN staffer quickly concocted his or her own comments and aired them on screen, attributing them to five different Twitter IDs, according to IBN sources.


A suspicious viewer checked out the IDs and discovered that while three accounts were non-existent, the others had posted no tweets at all. He indignantly posted about this at dalalmedia.posterous.com (which, incidentally, has just two blog-posts), from where it spread within the blogosphere and among twitterati.


Mr. Sardesai initially responded to questions on Twitter, saying: “The comments that were picked up from ibnlive.com. should have been attributed to the web, not to twitter.” As the IBN website does not contain any of these particular comments, his listeners remained sceptical. However, an apology posted on the website later admitted that “This viewer feedback was wrongly attributed to Twitter accounts. We deeply regret the error and apologise for the same. We will take all steps to ensure that this is not repeated.”






Mr. Sardesai echoed this apology when contacted by The Hindu. “It was an unfortunate lapse that should not have happened. We have put in place systems to ensure it doesn't happen again,” he said, in a welcome example of the accountability needed to maintain the credibility of the news media.


Some bloggers have portrayed this as an example of media manipulation, noting that all five of the “fake” comments supported the legalising of lobbying -- despite the fact that a majority of the comments now on the IBN website reveal that the public is against such legalisation.


Mr. Sardesai vigorously refuted such suggestions, pointing out that the course of neither the debate, nor his final “Editor's Take” reflected the opinions of the “fake” comments in any way. “The problem is not lobbying, it's the misuse of authority and discretionary powers. Middlemen will always exist in a corrupted and opaque system that privileges influence-peddling. You can legislate lobbying, but can you legislate morality?” said the Editor's Take during the show.


It is clear that TV news editors are aware of the potential for misuse present in instant feedback. Several reputed channels have cut back on these gimmicks in recent years, despite the desire to display interactivity with their viewers. Times Now does not run SMS polls at all, according to Arnab Goswami, Editor-in-Chief of the channel.


Mr. Sardesai said he would consider revealing the total number of SMSs received during the poll run on CNN-IBN's 10 p.m. show, rather than just posting percentages, which can give a distorted picture of public opinion. Instead of “live” feedback supposedly received during the course of a show, the channel now uses only feedback that has been previously posted on its website or sent to its Twitter ID, so that there is time to put a filter in place before comments are aired.

Monday, October 29, 2007

இந்தியா Vs பாகிஸ்தான் - எ 60:60 மேட்ச்


பாகிஸ்தானை பற்றின ஒரு ஜோக் உண்டு.

மன்மோகன் சிங்: அணுயுத்தம் வந்தால் பாகிஸ்தானின் 14 கோடி பேரையும் ஒரு சைக்கிள்காரரையும் யாராலும் காப்பாற்ற முடியாது.

புஷ்: யாரந்த சைக்கிள்காரர்?

மன்மோகன் சிங் (தன் செயலரிடம்): பார்த்தீங்களா? நான் சொல்லலை. 14 கோடி பாகிஸ்தானியரை பற்றி யாரும் கவலைபடமாட்டார்கள் என்று?



ஒரே மந்தையில் இருந்து பிரிந்த இரண்டு ஆடுகளாய், வெவ்வேறு பாதையில், வெவ்வேறு கொள்கைகளுடனும் செல்ல ஆரம்பித்து இன்று வரை நிற்காது அதே பாதையில் சென்று கொண்டிருக்கின்றன இரு நாடுகளும். பிறக்கும் பொழுதே ஒரு அறுவை சிகிச்சை. அந்த வடு மறைவதற்குள் அடுத்தடுத்து பாகப்பிரிவினையில் சண்டை.



ஒப்பீட்டளவில் பார்த்தால்,




















இங்கேஅங்கே
ஜனநாயகம். "இந்திய ஜனநாயகம் சிறப்பாக உள்ளது" - பாக். சுப்ரீம் கோர்ட் பாராட்டு.
எல்லை மீறுவது, லஞ்சம். எல்லை மீறுவது பயங்கரவாதம்.
ராணுவத்துக்கு நிதி ஒதுக்குவது ஜனநாயகப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர். ஜனநாயகத்துக்கு பணம் ஒதுக்குவது ஜனநாயாத்திற்கு சற்றேனும் தொடர்பில்லாத ராணுவ அதிபர்கள்.
கேள்வி கேட்க பணம் வாங்கினால் அதையும் எதிர்த்து கேள்வி கேட்கலாம். கேள்வி இருந்தால் தானே பணம்.
எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். வலமிருந்து இடமாகத்தான் எழுதவேண்டும்.
ஜனாதிபதி என்பவர் ரப்பர் ஸ்டாம்ப். ஜனாதிபதி / அதிபரை தவிர அனைவரும் ரப்பர் ஸ்டாம்ப்.
கோவிலுக்காக உண்டியல் குலுக்கல். தீவிரவாதத்துக்காக உண்டியல் குலுக்கல்.
ஊழல் அரசியல்வாதிகள் கூட சிறைக்கு செல்வதில்லை. அதிபர்களே தொங்கவிடப்படுவார்கள்.
குட்டி குட்டி அண்டை நாடுகளும் நம்மிடம் வாலாட்டும். வாலாட்ட பயிற்சி கொடுக்கப்படும்.
பணவீக்கத்திற்கு ஏற்ப பணம் அச்சடிக்கப்படுகிறது. இந்திய பணம் அச்சடிக்கப்படுகிறது.
இந்தியா ஜெயித்தால் இந்திய தேசிய கொடி பட்டொளிவீசி பறக்கும். பாகிஸ்தான் தோற்றால் இந்திய கொடி எரிக்கப்படும்.
ராணுவம் என்பது நாய்குட்டி போன்றது. ராணுவம் என்பது பூனைக்குட்டி போன்றது. (நாய்க்கும் பூனைக்கும் வித்தியாசம் தெரியும் அல்லவா?)
மூன்றாம் உலக நாட்டிற்கு முதலில் ஓடி உதவி செய்வோம். பூகம்பத்திற்கு இந்தியா உதவினாலும் ஏற்க முடியாத நிலை.
வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பித் தருவதில் உலக வங்கிக்கு நாம் செல்லப்பிள்ளை. கடன் வாங்கும் சூழ்நிலை எழவில்லை (முன்னேற்றம் பற்றி யோசித்தால் தானே...)
பசியை போக்க வெளிநாட்டிலிருந்து கடன். ஆயுதப் பசிக்காக வெளிநாட்டிலிருந்து கடன்.
அணுகுண்டு சோதனை. அடுத்த 15 நாட்களில் சீன அணுகுண்டு சோதனை.
நான் நிஜ துப்பாக்கியை தொட்டு கூட பார்த்ததில்லை. ???



ஒரு தாய் வயிற்றில் இருந்து பிறந்த குட்டிகளிடம் இவ்வளவு முரண்பாடுகள்.



இந்தியா உலக அளவில் கையூட்டு / ஊழல் ஆகியவற்றில் குறிப்பிட்ட இடத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கிறது. அடிப்படை வசதிகள் இன்னும் முழுமையாக எட்டப்படவில்லை. ஏழை பனக்காரன் வித்தியாசம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மாநிலத்திற்கு மாநிலம் எல்லை பிரச்சினை முதல் வேலை / தண்ணீர் பிரச்சினைகள். தனி நாடு கேட்டு போராடும் வட கிழக்கு மாநிலங்கள். மதக்கலவரங்கள் மறுபுறம். 1947-ல் பிறந்தவர் சீனியர் சிட்டிசன் ஆகியும் இன்னும் மக்களுக்கு சுத்தமான குடிநீர் கூட கிடைப்பதில்லை. நாட்டை சுற்றிலும் நம்மையே மிரட்டும் குட்டி குட்டி நாடுகள். இத்தனை பிரச்சினைகள் இருந்தும் நாம் பாகிஸ்தானை விட கொஞ்சம் போல் முன்னேற்றம் அடைந்திருக்கிறோம் என்றால் அதற்கு முக்கிய காரணம் நாம் நமக்காக தேர்ந்தெடுத்த பாதை. அது மக்களாட்சி. சீனாவுடன் ஒப்பிட்டால் நம் வளர்ச்சியின் வேகம் சற்று குறைவு தான். இதற்கு காரணம் சீனர் ஒருவர் சொல்வது போல, "எங்கள் ஊரில் அரசியல் உள்ளூர்மயமாகவும் நிர்வாகத்தை தேசிய அளவிலும் வைத்திருப்பதால் தான்". இந்தியாவிலோ இது தலைகீழ். அதனால் ஒப்பீட்டளவில் வளர்ச்சி சீனாவை விட குறைவு. ஆனால் இந்தியாவை விட பாகிஸ்தானிலோ நிலைமை இன்னும் மோசம். உள்கட்டமைப்பில் இருந்து எல்லாமே மோசம்.



காரணம் அங்கு நிலையான முக்கியமாக மக்களாட்சி ஆட்சி இல்லை. அதை விடவும் மக்களின் முன்னேற்றத்தை கண்டு கொள்ளாத அரசு. அங்கே உணர்ச்சி வேகத்தில் அரசியல் முடிவெடுக்கும் மக்களும் ஒரு காரணம். 1947 முதல் காஷ்மீர் என்ற வார்த்தை எத்துனை முறை உபயோகப்படுத்தப்பட்டிருக்கும், அரசியலுக்காக? பரந்திருந்த இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்து பிரிந்த ஒரே காரணத்தினால் எந்த செயலையும் நம்மோடு ஒப்பிட்டு பார்த்து ஒப்பிட்டு பார்த்தே வளர்ந்த நாடு. காஷ்மீர் கௌரவ பிரச்சினை ஆனது. இங்கே பட்டாசு வெடித்தால் அங்கே சீன பட்டாசு. இந்தியாவை உணவு உற்பத்தியில் முந்துவதை விட கிரிக்கெட்டில் வெற்றி பெறுவதை பற்றியே அதிகம் யோசிக்கும். "இ ஃபார் எனிமி" என்று பக்கத்தில் இந்திய வரைபடத்தை போட்டு சொல்லித்தரும் மதரசாக்கள். "ஐ ஹேட் இந்தியா" ஆர்குட் குழுவிற்கு எண்ணிலடங்கா உறுப்பிணர்கள் சேருவது என்று...



"வன்முறை என்பது இரு பக்கமும் கூர்மையுள்ள ஆயுதம். அது உபயோகப்படுத்துபவரையும் அழித்துவிடும்" - சொன்னவர் அறிஞர் அண்ணா. அவர் அன்றைக்கு சொன்னது இன்றைக்கு யாருக்கு பொருந்துதோ இல்லையோ, தற்போதைய சூழ்நிலையில் நம் அன்னாத்தே பாகிஸ்தானுக்கு பொருந்தும். என்ன தான் இருந்தாலும் நமக்கு ஒரு நாள் மூத்த அன்னாத்தேவாக பிறந்த தேசம் அல்லவா பாகிஸ்தான்? (இரட்டை குழந்தை என்றாலும் இரண்டாவதாக பிறப்பவர் தானே மூத்தவர்?)



பாகிஸ்தான் தன் வளர்ச்சிக்கு முந்துவதை விட இந்தியாவின் வளர்ச்சியை பார்த்து பொறுமியதே அதிகம். இந்தியாவை அதன் எதிரியாகவே பார்த்து பழக்கப்பட்ட நாடு. தீவிரவாதத்தை ஊக்குவிப்பது தன் வெளியுரவு கொள்கைகளில் ஒன்று என்பது போல செயல்பட்டது. ஆனால், இன்று அது தொடங்கிய தீவிரவாதம் அந்த தேசத்தின் இறையான்மைக்கே கேடு விளைவிக்கிறது. இது பாகிஸ்தானுக்கு மட்டும் அல்ல. அனைத்து நாடுகளுக்குமே பொருந்தும். ஏன்? இந்தியாவிற்கும் சேர்த்து தான். வளர்த்த கடா மார்பில் பாய்வது பழகி போன ஒன்றாகிவிட்டது தீவிரவாதத்துக்கு. முஜாகிதீன்களை வளர்த்த அமெரிக்காவாகட்டும், பின்லாடன் ஆகட்டும், ராஜீவ் மரணமாகட்டும், காஷ்மீர் தீவிரவாதிகளாகட்டும். இன்னும் எண்ணற்ற உதாரணங்கள்.



கொஞ்ச காலம் முன்பு இந்தியாவில் தீவிரவாதம் என்பது ஸ்பான்சர் செய்யப்படும் ஒரு முறையாகவே செயல்படுகிறது. இதற்கு முழு காரணமும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ எனப்படும் உளவு அமைப்பு. 1965-ல் இந்தியாவுடனான போருக்கு பிந்தைய காலகட்டத்தில் உருவாக்கப்பட்டு 1969-ல் விரிவுபடுத்தப்பட்டது. இதன் முக்கியமான வேலை இந்தியாவில் அதன் செயல்பாடுகளை தீவிரப்படுத்துவது. இதன் செயல்பாடு பயங்கரமானவை. இது பாகிஸ்தானின் மிகுந்த அதிகாரமிக்க ஒரு அமைப்பு. பாகிஸ்தானில் ஒரு தனி அரசாங்கம் போல செயல்படும். அதாவது, யாருக்கும் கட்டுப்படாது. உள்ளூர் அரசியலுக்காக ஐ.எஸ்.ஐ செய்யும் வேலைகளை கண்டுகொள்ளாமல் இருந்தும் அதை ஊக்குவித்து கொண்டும் இருந்தது பாகிஸ்தான். அதெல்லாம் 9/11 வரை தான். 9/11 உலகின் பல நாடுகளின் வெளியுறவு கொள்கைகளில் மாற்றம் பற்றி யோசிக்க வைத்தது. நடுவில் லண்டனில் நடந்த 7/7 வேறு சேர்ந்துக் கொண்டது. ஆனால், இந்த தேசங்களினால் இந்தியாவின் டிசம்பர் 13 கண்டுகொள்ளப்படவேயில்லை என்பது அமெரிக்க வெளியுரவு கொள்கைகளை அறிந்தவர்களுக்கு ஆச்சரியக்கூடிய விஷயம் அல்ல. வாஜ்பேயி பிரதமராக இருந்த பொழுது இதை வைத்து அமெரிக்க செலவில் தீவிரவாதிகளுக்கு வேட்டு வைக்கலாம் என்று முயற்சித்தார். அமெரிக்க, பிரிட்டன் கண்களுக்கு இவையெல்லாம் தெரியவேண்டுமா என்ன?

9/11 முழுமுதற் காரணகர்த்தாவாகிய பின்லாடனை தேடிப்பிடித்து கழுத்தை திருக வேண்டிய கட்டாயம் அமெரிக்காவுக்கு. பின்லாடன் ஆப்கான் மலைப்பகுதிகளில் ஒளிந்து கொண்டது வசதியாக போய்விட்டது. பின்னை தேடுகிறோம் லாடனை தேடுகிறோம் பேர்வழி என்று டேரா போட்டுக் கொண்டது. திருடனுக்கு அப்பொழுது தான் தேள் கொட்டியது. கத்தவும் முடியவில்லை. தாலிபான் விழுந்ததால் ஆப்கான் இப்பொழுது பாகிஸ்தானுக்கு குடைச்சல் கொடுக்கும் நாடு. ஆப்கானில் ஆண்கள் சவரன் செய்துவிட்டு வேலைக்கு போகிறார்கள். சதாமை அமெரிக்கா 'கொலை' செய்த பொழுதும் பேச முடியவில்லை. 9/11-க்கு பாகிஸ்தானும் மறைமுகமாக உதவியிருப்பது அமெரிக்காவுக்கு தெரியாமல் இல்லை. அதனை கண்டு கொள்ளாதது போல இப்பொழுது பாகிஸ்தானுடன் சேர்ந்து பின்லாடனை தேடிக்கொண்டேயிருக்கிறார்கள். இதனால் பாகிஸ்தானுக்கு பணம் / நல்ல பிள்ளை பட்டம் கிடைக்கிறது. இவையெல்லாம் சேர்த்து உள்ளே இருக்கும் காஷ்மீரப் 'போராளிகள்' கைகள் இப்போதைக்கு கட்டப்பட்டுள்ளன. முஷரஃப்புக்கும் வேறு வழியில்லை. வேண்டும் என்னும் பொழுது உபயோகப்படுத்திக் கொள்வதற்கும் பின் வேண்டாம் என்றால் எறிவதற்கும் அவர்கள் என்ன கறிவேப்பில்லையா? Trained professional போராளிகள். காஃபிர்களான அமெரிக்காவையும் இந்தியாவையும் எதிர்ப்பதற்காக மெருகேற்றப்பட்டவர்கள் இன்று பாகிஸ்தான் அரசாங்கம் பக்கம் தம் பார்வையை திரும்பியிருக்கிறார்கள். இப்பொழுது அவர்களின் முதல் எதிரி முஷரஃப்பாகி விட்டார். அதனால் தான் காஷ்மீரில் வெடிக்கவேண்டியதெல்லாம் இன்று பாகிஸ்தானுகுள்ளேயே வெடிக்கிறது.



எப்பொழுது ஒரு போராளிக்குழுக்கள் என்று கருதப்படுபவர்கள் அப்பாவி பொதுமக்களை கொல்ல ஆரம்பிக்கிறார்களோ அப்பொழுதே அவர்களுக்கு மக்களின் ஆதரவு கிடைப்பதில்லை. அவர்களுக்காக ஆரம்பித்து கடைசியில் அவர்களையே கொன்றால்? காலிஸ்தான் இயக்கம் தன் சொந்த மக்களின் ஆதரவை இழந்த பிறகு தான் பலமிழந்தார்கள். அமெரிக்காவை எதிர்க்கிறேன் என்று தன் சொந்த சகோதரர்களையே தினம் தினம் கொல்வது ஈராக்கில் ஆரம்பித்து இன்று பாகிஸ்தான் வரை வளர்ந்திருக்கிறது. இதற்கிடையில் ஈராக்கில் ஷியா - சன்னி சண்டை வேறு. அதுசரி, இந்த சண்டை வரும் என்று தெரிந்து தானே சிறுபாண்மையின சதாமை புஷ் அன்ட் கோ 'கொலை' செய்தார்கள். இப்போது பாகிஸ்தான் மக்கள் தீவிரவாதம் என்றால் என்ன என்று தெரிந்துகொள்வார்கள். அதனால் அவர்களல் இந்திய மக்களுடன் நெருக்கமாக உதவும். இது மேலும் அவர்களை மூர்க்கமாக்கும். அதனால் தங்களிடம் பட்டாசுகள் இருப்பு இருக்கும் வரை வெடித்துக்கொண்டே இருப்பார்கள். கராச்சியில் குண்டு வெடித்து ஆரம்பித்து, இஸ்லாமாபாத் மசூதி சம்பவம், சமீபத்தில் பேனசீர் நாடு திரும்புவது வரை சில்லரை சில்லரையாக மனித உயிர்கள் பலியாகின்றன. பெனசீரை 140 பேர் சொர்கத்திலிருந்து வெல்கம் அட்ரஸ் கொடுத்திருக்கிறார்கள். இன்னும் எவ்வளவு அப்பாவி பொதுமக்கள் இறக்கப்போகிறார்களோ?



ஒருவன் போராளியாக வேண்டும் என்றால் இந்த தேசத்தில் ஒரு தூப்பாக்கியோ வெடிகுண்டோ கிடைப்பது கொஞ்சம் கஷ்டம். ஆனால் பாகிஸ்தானில் அப்படி கிடைப்பது ஒன்றும் கஷ்டம் இல்லையே? இன்று அங்கே சதாரண சிவிலியன்கள் கைகளில் துப்பாக்கி கிடைப்பது இந்திய பணம் அச்சடிப்பது மாதிரி அவ்வளவு சுலபம். அப்பொழுது அரசாங்கம் கண்டுகொள்ளாமல் விட்டது. இன்று அந்த துப்பாக்கிகளை இப்பொழுது அவர்களுக்கெதிராகவே உபயோகிக்கிறார்கள்.



சூழ்நிலை இப்பொழுது முஷரஃப்பை தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டியதாக போய்விட்டது. இது தற்போதைக்கு இந்தியாவுக்கு சாதகம் என்பதில் சந்தேகம் வேண்டாம். இதில் முக்கியமான விஷயம் பாகிஸ்தான் வசம் இருக்கும் அணு ஆயுதங்கள். இது பாகிஸ்தான் அரசாங்கத்திடம் (முஷரஃப்பிடம்) இருப்பது நமக்கு சேஃப். ஆயுதமோ அல்லது ஆயுதம் தயாரிக்கும் வழிமுறைகளோ கொஞ்சம் கசிந்தாலும் அதை காட்ச் பிடிப்பதற்கென்றே காத்திருக்கிறார்கள் பின்லாடனும் அல்-ஜவாஹிரியும். இந்த கசிவுகள் பாகிஸ்தனின் அணுத்தந்தை வழியாககே போயிருக்கவேண்டியது. கொஞ்சம் யோசித்து பாருங்கள். இவற்றில் கொஞ்சம் பின்லாடன் குரூப்புக்கு போனால் என்ன நடக்கும்? முதலில் சொன்ன ஜோக் தான் நடக்கும்...

Tuesday, April 26, 2005

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் !!!

நாம் பலமுறை "ஐ.நா. சபையில் இந்தியாவிற்கு நிரந்தர உருப்பினர் பதவி - so and so நாடு ஆதரவு, பாகிஸ்தான் எதிர்ப்பு" என்று கேள்விப்பட்டிருப்போம். அதி இன்னா ரப்சரு-பா? ஐ.நா. என்பதன் விரிவாக்கம் "ஐக்கிய நாடுகள் சபை" (ஆங்கிலத்தில் UN - United Nations). இராக்கியருக்கு சதாம் ஹுசேனிடமிருந்து "சுதந்திரம்" வாங்குவதர்க்கு அமெரிக்கா "போர்" தொடுத்த போது, உம்மனாம் மூஞ்சியாக வெறும் அறிக்கை மட்டுமே வாசித்த அதே ஐக்கிய நாடுகள் சபை தான். இது என்ன அமைப்பு? எதற்காக இந்தியா அதில் நிரந்தர உருப்பினர் ஆக வேண்டும்?? அதற்கு எதற்கு பல நாடுகளின் ஆதரவைக் கோரவேண்டும்???

ஐ.நா. சபையில் தற்போது இந்தியாவையும் சேர்த்து மொத்தம் 189 உருப்பு நாடுகள் உள்ளன. ஐ.நா. சபையின் ஒரு அங்கம் தான் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில். இதன் முக்கிய நோக்கமே நாடுகளுக்கு இடையே அமைதியையும், பாதுகாப்பையும் உருதிப்படுத்துவது தான். தற்போது ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உருப்பினராக உள்ள நாடுகள் சீனா, பிரான்சு, ருஷ்யா, இங்கிலாந்து மற்றும் "பெரிய அண்ணன்" அமெரிக்கா. இந்த நாடுகள் யாவும் இரண்டாம் உலகப்போரின் வெற்றியால் உருப்பினராக்கப்பட்டவை. (1971-ல் "சீன மக்கள் குடியரசு" "சீனா"வாகவும், 1991-ல் "சோவியத் யூனியன்" "ருஷ்யா"வாகவும் மாற்றம் பெற்றன). இவைதவிர, மற்ற பத்து நாடுகள் 2 வருடத்திற்கு ஒரு முறை தேர்வு செய்யப்படும். இவற்றில் 5 நாடுகள் ஒவ்வொறு ஆண்டும் மாற்றப்படும். இந்த தேர்தல் ஒவ்வொறு சனவரி 1-ம் தேதியும் நடக்கும். ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா நாடுகள் ஒவ்வொன்றும் தலா இரண்டு நாடுகளையும் (மொத்தம் ஆறு), அரேபியா, ஆசியா மற்றும் கிழக்கு ஐரோப்பா நாடுகள் ஒவ்வொன்றும் தலா ஒரு நாட்டையும் (ஆறு + மூன்று = மொத்தம் ஒன்பது). பத்தாவது நாடாக ஒரு ஆசிய அல்லது ஆப்ரிக்க நாடு மாறி மாறி வரும். 2005-2006-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 நாடுகள்: அல்ஜீரியா, அர்ஜென்டினா, பெனின், பிரேசில், டென்மார்க், கிரேக்கம், ஜப்பான், பிலிபைன்ஸ், ரோமானியா மற்றும் தான்சானியா ஆகியவை.

இந்த பதினைந்து நாடுகளில் தற்போது ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உருப்பினராக உள்ள நாடுகள் special நாடுகள்.

1) இந்த நாடுகள் யாவும் Nuclear Non-Proliferation Treaty (NPT)-யின்படி அனு ஆயுதங்களை வைத்துக் கொள்ளலாம். மற்ற நாடுகள் அனு ஆயுதங்களை வைத்துக் கொள்ளக் கூடாது. ஏன், அனு ஆயுத சோதனை கூட செய்யக் கூடாது. இதைத் தான், Comprehensive Test Ban Treaty (CTBT) மூலம் நம் நாட்டை சில வருடங்களுக்கு முன் அமெரிக்கா நெருக்குதல் கொடுத்தது.

2) இதை விட முக்கியமானது, இந்த நாடுகள் யாவும் வைத்திருக்கும் வீட்டோ (Veto) அதிகாரம். வீட்டோ என்பது லத்தீனில் இருந்து வந்த வார்த்தை. ஐ.நா.வில் உருப்பினராக உள்ள எல்லா நாடுகளுமே மற்ற நாடுகளுக்கு பரிந்துரை மட்டுமே செய்ய முடியும். அவற்றின் மேல் திர்மானம் போடும் பொழுது இந்த பதினைந்து நாடுகளில் மூன்றில் இரண்டு பங்கு நாடுகள் (பதினைந்தில் ஒன்பது நாடுகள்) ஆதரிக்க வேண்டும். ஆனால் வீட்டோ அதிகாரத்தை வைத்து இந்த தீர்மானத்தை மேற்கூரிய ஐந்து நிரந்தர உருப்பினராக உள்ள நாடுகளில் ஏதேனும் ஒரு நாடு பயன்படுத்தியும் ரத்து செய்ய முடியும் (பதினைந்தில் ஒன்பது நாடுகள் ஆதரித்த பின்பும்). இது தான் அந்த வீட்டோ அதிகாரம். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஆரம்பித்த பிறகு இந்த வீட்டோ அதிகாரத்தை சீனா 5 முறையும், பிரான்சு 18 முறையும், ருஷ்யா 122 முறையும், இங்கிலாந்து 32 முறையும், அமெரிக்கா 79 முறையும் பயன்படுத்தி இருக்கின்றது. இந்த ஐந்து நாடுகளைத் தவிற, ஐ.நா.வில் உருப்பினராக உள்ள மற்ற நாடுகள், இந்தியாவையும் சேர்த்து, பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்ள மட்டுமே முடியும், அதுவும், இந்த கவுன்சில் ஒப்புக் கொண்டால் மட்டுமே.

இந்த special நாடுகள், ஒரு பிரச்சினை மற்ற நாடுகளை பாதிக்கும் பட்சத்தில், அவை விசாரனை நடத்த உரிமை உண்டு. இந்த பிரச்சினைகளுக்கான தீர்வை இந்த நாடுகள் சிபாரிசு செய்யலாம். இந்த உரிமை மற்ற நாடுகளுக்குக் கிடையாது. மேலும், இந்த கவுன்சில், சில தவிர்க்க முடியாத சூழ்நிலையில், அதிரடியாக காரியத்திலும் இறங்கலாம். உதா"ரணம்", 1950-ல் கொரியாவிற்கு எதிரான நடவடிக்கை, 1991-ல் கூட்டுப் படையை உபயோகித்து நடத்தப்பட்ட வளைகுடாப் போர். இவற்றிற்கு ஐ.நா.வின் உருப்பினர்கள் கொடை வள்ளல்களாக இருப்பார்கள். அதுவே, ஐ.நா.வின் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு அமெரிக்கா வாங்கிக் கட்டிக் கொண்ட வியட்னாம் பிரச்சினை, சதாம் வாங்கிக் கட்டிக் கொண்ட ஈராக் யுத்தம் ஆகியவற்றை சொல்லலாம். சமீபத்தில் (சதாம் ஹுசைனுக்கு எதிராக) நடந்த ஈராக் யுத்தத்திற்கு ஐ.நா. ஒப்புதல் அளிக்காததால் தான் அமெரிக்கா தன்னிச்சையாக போர் தொடுத்தது. அதனால் ஐ.நா.வின் கூட்டுப் படை கலந்துகொள்ளாததால் இந்தியாவும் தன் படைகளை அனுப்பத் தேவையில்லாமல் போய்விட்டது.

இந்த ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தர உருப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் திட்டமும் இருக்கிறது. ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் நிரந்தர உருப்பினர் ஆவதற்கு பெரும் பாடு படுகின்றன (இந்த இரண்டு நாடுகள் தான் ஐ.நா.விற்கு அதிகமாக படைகளை அனுப்பும் நாடுகளில் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளது). ஜெர்மனியை பிரான்சு ஆதரிகின்றது. ஆனால், இத்தாலி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் ஜெர்மனிக்குப் பதிலாக பொதுவன ஒரு ஐரோப்பிய கூட்டமைப்பிற்கு இந்த இடத்தை வழங்கலாம் என விருப்பம் தெரிவித்துள்ளன. பிரான்சும், இங்கிலாந்தும் தங்கள் இடங்களை விட்டுக்கொடுத்தால் ஜெர்மனி இந்த மேற்கூரிய திட்டத்திற்கு உடன்படுவதாக தெரிவித்துள்ளது. உலகின் ஐந்தில் ஒரு பங்கு (!?) மக்கள் தொகையை வைத்திருக்கும் நம்மை பிரான்சு, இங்கிலாந்து, ருஷ்யா ஆகியவை ஆதரிக்கின்றன. இந்திய-சீன உறவின் முன்னேற்றத்தால் சீனாவும் நம்மை ஆதரிக்கின்றது. வழக்கம் போல் பாகிஸ்தான் இதை எதிர்க்கிறது. இன்னொரு புறம், ஜப்பான் நிரந்தர உருப்பினர் ஆவதற்கு எதிர்ப்பு இல்லாமல் இல்லை. கிழக்கு ஆசிய நாடுகள், குறிப்பாக சீனா, வட மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் ஜப்பானை எதிர்க்கிறது.

தற்போதைய ஐ.நா. பொதுச் செயலாளர் திரு.கோபி அன்னானும் இந்த நிரந்தர உருப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு ஒரு குழுவை பரிசீலிக்கச் சொன்னார். அந்த குழு கூறியது, இந்த எண்ணிக்கையில் இன்னும் ஐந்து நாடுகளை சேர்த்துக் கொள்ளலாம் என்று சிபாரிசு செய்தனர். அந்த ஐந்து நாடுகள்: ஜப்பான், ஜெர்மனி, இந்தியா, பிரேசில் மற்றும் ஆப்ரிக்காவில் இருந்து ஒரு முக்கியமான நாடு. செப்டம்பர் 21, 2004-ல் இந்த நாடுகள் கூட்டாக மற்ற நாடுகளை ஆதரிப்பதாக ஒரு அறிக்கை வெளியிட்டது. இதை பிரான்சு மற்றும் இங்கிலாந்து ஆகியவை இதை ஆதரிப்பதாக கூரியது.

நம் நாடும் கூடிய விரைவில் நிரந்தர உருப்பினர் ஆகும் என்று நம்புவோம்...வாழ்க பாரதம்...வளர்க தமிழ்...