Showing posts with label அறிவியல். Show all posts
Showing posts with label அறிவியல். Show all posts

Wednesday, December 23, 2009

தி டைம் மெஷின் (2002)

ஏற்கனவே இந்த திரைப்படத்தை பற்றி எழுதியிருக்கிறேன். ஆனால், அப்பொழுது கதை புரியாமல் பார்த்தது. பின் சமீபத்தில் சப்-டைட்டிலுடன் பார்த்த போது தான், அந்த படத்தில் சொல்லப்படுவது என்னவென்று ஓரளவு புரிந்தது.



'முதலில்' அந்த பதிவில் இருந்து 'கொஞ்சம்':

காலம் என்பது நான்காவது பரிணாமம். காலத்தில் பயணம் என்பது முன்னோக்கியோ அல்லது பின்னோக்கியோ செல்வது. ஒருவனால் பூமியில் இருந்து மேலே பறந்து சென்று, முன்பிருந்த நிலையில் (past) பூமிக்கு திரும்ப முடியுமா? இப்படி பல கேள்விகள் தன்னகத்தே அடக்கி வைத்துள்ளது. ஒருவனால் சுலபமாக காலத்தை நோக்கி பயனிக்க முடிந்தால், எப்படி இருக்கும்? General Theory of Relativity-ன் படி, உலகில் ஒளியை விட வேகமாக பயனிக்கும் பொருள் கிடையாது. ஆனால், அந்த வேகமே பத்தாமல் போனால்? ஒரு உதாரணம், ஒளி (light) ஒரு வினாடியில் 1,86,000 மைல்கள் பயனிக்கும். அதாவது 2,99,793 கிலோ மீட்டர். ஒரு பொருளை நாம் பார்ப்பது, அந்தப் பொருள் வெளிப்படுத்தும் ஒளியாலேயே. ஒரு பொருள் சிகப்பாகத் தோன்றுகிறது என்றால், அந்தப் பொருள் அனைத்து வண்ணங்களையும் தன்னகத்தே எடுத்துக் கொண்டு, வெறும் சிகப்பு வண்ணத்தை மட்டுமே வெளியிடுகிறது என்று அர்த்தம். நீங்கள் ஒரு நட்சத்திரத்தைப் பார்க்கிறீர்கள். அது அங்கிருப்பது, அந்த நட்சத்திரம் வெளிப்படுத்தும் ஒளியாலேயே. ஆனால் அந்த ஒளி உங்களை வந்து சேர பல ஒளி ஆண்டுகள் ஆகும். அதனால், நீங்கள் பார்ப்பது எதுவும் அங்கு இல்லாமல் கூட இருக்கலாம். அந்த நட்சத்திரம் நகர்ந்து போய் இருக்கலாம். காரணம், இந்த உலகம் விரிவடைந்துகொண்டிருக்கிறது. அதனால், நாம் பார்ப்பது எல்லாமே கடந்த காலங்கள் தாம் (எல்லாம் மாயா). இது மட்டும் அல்ல, நீங்கள் பார்ப்பது எல்லாம் நீங்கள் பார்க்கும் இடத்தில் இல்லை. அதாவது, இந்த பிரபஞ்சமே வளைந்துள்ளது. அதனால், நீங்கள் நேராக பார்க்கும் எதுவும் நேர்க்கோட்டில் இல்லை. சற்றே பரவளையமாக இருக்கும்.

அதனால், ஒருவர் ஒளியை விட வேகமாக பயனிப்பவராக இருப்பாராயின்(??), General Theory of Relativity-ன் படி அவரால், காலத்தில் பின்னோக்கியும் பயனிக்க முடியும்.
The Time Machine (2002)

படத்தில் நம் நாயகன் அலெக்ஸான்டர் (Guy Pearce) ஒரு விஞ்ஞானி. காதலுக்கு நடுவில் அவ்வப்போது ஆராய்ச்சியில் இறங்குகிறார். ஒரு முறை காதலியுடன் ஒரு மாலை வேளையில் ஒரு பூங்காவில் இருக்கும் போது, இவர்களிடம் வழிப்பறிக்காக வந்த ஒரு திருடன் தவறுதலாக துப்பாக்கியை அழுத்திவிட, அது வெடித்து காதலி மரணமடைகின்றார்.



இதில் இருந்து மீள முடியாமல், 4 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து, காலத்தை நோக்கி பயனப்படும் ஒரு கலனை கண்டுபிடிக்கிறார். அதில் ஏறி 4 ஆண்டுகள் பின்னோக்கி சென்று, அதே பூங்காவிற்கு சென்று, முன்பு சென்ற நேரத்தை விட கொஞ்சம் முன் சென்று, காதலியை வேறு இடத்திற்கு அழைத்து செல்கிறார். அவளை காப்பாற்றிவிட்டதாக நினைக்கிறார். காதலிக்காக ரோஜாப்பூ வாங்க சாலையை கடந்து செல்லும் போது, காதலி தெருவில் செல்லும் ஒரு குதிரை வண்டி மேலே விழுந்து இறந்து போகிறார்.

ஆக, எத்தனை முறை திரும்ப சென்றாலும் விதியை மாற்ற முடியாது என்று அறிகிறான். ஏன் இறந்த காலத்தை மாற்ற முடிவதில்லை என்ற கேள்வி எழுகிறது? அந்த கேள்விக்கான விடையை அறிய காலத்தின் முன் நோக்கி பயனிக்கிறான். ஆண்டு கி.பி. 2030-க்கு செல்லும் பொழுது இவனின் கேள்வி சம்பந்தப்பட்ட ஒரு விளம்பரத்தை திரையில் பார்க்க, அங்கே இறங்கி ஒரு நூலகம் செல்கிறான். வேறு இடமெல்லாம் இல்லை. அவன் முன்பிருந்த இடமே இப்போது நூலகமாக மாறி இருக்கிறது. அங்கு கண்ணாடியில் பின்னால் மட்டும் இருக்கும் செயற்கை மனித பிம்பமான (Holographic AI Librarian) வாக்ஸ் 114-ஐ கேட்க, அது இன்னும் விடை கிடைக்கவில்லை என்று சொல்கிறது.

கி.பி. 2037-க்கு செல்லும் பொழுது அங்கே நிலவு வெடித்து சிதறுவதால் பூமி அழிவதை பார்க்கிறான். அந்த இடிபாடுகளில் இருந்து தப்பிக்க கலனில் ஏறும் போது, அடிபட்டு சுயநினைவை இழக்கிறான். நினைவு திரும்பும் போது அவன் பயனம் செய்யும் ஆண்டு கி.பி. 802,701.



அவனை மருத்துவம் பார்த்து காப்பாற்றுவது (மேலே இருக்கும் ;)) மாரா என்ற பெண். மனிதன் மறுபடியும் ஆரம்ப கால வாழ்க்கையில் இருப்பதை பார்க்கிறான். அங்கே இரு விதமான மனிதர்கள். குரங்குகள் போன்ற முக அமைப்பும் சுமார் 12 அடி உயர மெகா வேட்டையாடுபவர்கள் (Morlocks) மற்றும் வேட்டையாடப்படுபவர்கள் (Eloi). அவர்களால் மனிதர்களின் கனவுக்குள் ஊடுருவ முடியும். அப்படி ஊடுருவி அவர்களை பயமுறுத்துகிறார்கள் மார்லாக்ஸ். தினம் தினம் உணவுக்காக மனிதர்களை வேட்டையாடுகிறார்கள் மார்லாக்ஸ். ஒரு நாளைய வேட்டையில் மாராவை தூக்கி சென்று விடுகிறார்கள்.

அலெக்ஸ் அங்கே அந்த வோக்ஸ் 114 இன்னும் 'உயிருடன்' உள்ளதை கண்டுபிடித்து, மாராவை காப்பாற்ற, மார்லாக்ஸ் குகை அடைய வழி கேட்டுக் கொள்கிறான். வழி அறிந்து, உள்ளே செல்லும் அலெக்ஸ் அவர்களிடம் மட்டிக்கொள்கிறான். அங்கே கூண்டுக்குள் அடைக்கப்பட்ட மாராவையும், அங்கே அந்த மார்லாக்ஸின் தலைவனையும் பார்க்கிறான். அவன், மனிதனை போல் இருக்கும், புத்திசாலியான Über-Morlock. நிலவு உடைந்த பொழுது பூமியின் அடியில் தங்கி பிழைத்து வாழ்ந்தவர்கள் இந்த வேட்டையாடுபவர்கள். பூமியின் பேற்பரப்பிலேயே வாழ்ந்து பிழைத்து வந்தவர்கள் சாதாரன மனிதர்கள் (Eloi) என்று புரிய வைக்கிறான் அந்த தலைவன். அவனுடைய கலனையும் அங்கே கொண்டு வந்து விடுகிறார்கள் மார்லாக்ஸ்கள்.

அங்கே அலெக்ஸின் கேள்விக்கு அந்த தலைவன் மூலம் விடை கிடைக்கிறது. அவன் காதலி இறந்ததால் தான் அந்த கலனை அவனால் கண்டுபிடிக்க முடிகிறது. ஒரு வேளை இறக்கவில்லை என்றால் அந்த கலனை கண்டுபிடித்திருக்க மாட்டான். இவை இரண்டும் Mutually Exclusive (டாஸ் போடும் போது பூ/தலை, ஏதாவது ஒன்று மட்டும், மட்டுமே விழுவதை போல). அதனால் அந்த கலன் இருப்பதால், அவன் காதலி உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்று புரிய வைக்கிறான். அலெக்ஸுக்கு இப்பொழுது அவன் காதலி கிடைக்க வாய்ப்பில்லை என்று உணருகிறான்.

அலெக்ஸான்டர் திரும்ப அவன் காலத்திற்கு செல்ல கலன் ஏறுகிறான். அந்த கலன் கிளம்பும் போது அந்தன் தலைவனை உள்ளே இழுத்துக் கொள்கிறான் அலெக்ஸ். அந்த கலன் காலத்தின் முன்னே நோக்கி பயனிக்கும் போது உள்ளே அவர்கள் இருவரும் சண்டை போடுகிறார்கள். ஒரு (கால) கட்டத்தில் அந்த கலனில் இருந்து வெளியே தள்ளுகிறான் அந்த ஊபெர் மார்லாக்கை. அதாவது, எதிர்காலத்திற்கு சென்று அவனை வெளியே தள்ளிவிடுவதால், அவன் இறக்கிறான்.



கலனை நிறுத்தும் போது வருடம் 635,427,810. அந்த காலகட்டத்தில் அவர்கள் இருந்த குகை எல்லாம் அழிந்துவிடுவதை பார்க்கிறான். பின் திரும்ப அந்த குகைக்கே வந்து அந்த கலனை இயக்கி, கியரை செயலிழக்க வைக்கிறான். அது பயங்கரமான Time distortion-ஐ உருவாக்குகிறது. அதன் விளைவாக அந்த இடம் வெடித்து சிதறி பாதாள உலகம் அழிகிறது. அலெக்ஸ் அங்கேயே தங்கிவிடுகிறான்.

மறுபடியும் அந்த பதிவில் இருந்து:


இந்த படத்தில் எனக்கு பிடித்த சில காட்சிகள்

1) கதாநாயகன், ஒரு காட்சியில், கால இயந்திரத்தின் ஃபார்முலாவை கரும்பலகையில் எழுதிக்கொண்டிருப்பான். அந்தக் காட்சி க்லோஸ் அப்-ல் காட்டப்படும். மெள்ள காமெரா பின்னால் நகரும். அந்தக் காட்சியில், திரையில் ஒரு ஏனி தெரியும். அதாவது, கதாநாயகன் ஒரு ஏனியின் மேல் நின்று ஃபார்முலாவை எழுதிக் கொண்டிருப்பான். காமெரா பின்னால் நகரும். அந்தக் காட்சியில், அந்த அறை முழுக்க கரும்பலகையாக இருக்க, ஒரு ஏனியில் நின்றுக்கொண்டு அந்த ஃபார்முலாவின் continuation-ஐ எழுதிக்கொண்டிருப்பான்.

2) கால இயந்திரத்தில் அமர்ந்து அதை இயக்க ஆரம்பிக்க, அந்த அறையில் இருக்கும் (பல) கடிகாரங்கள் ஒரு கணம் நின்று, பின் பின்னோக்கி ஓட ஆரம்பிக்கும். அந்தக் காட்சி பார்க்கும் பொழுது ச்சும்மா 'நச்'னு இருக்கும்.

3) அந்தப் படத்தின் கடைசி காட்சியில் திரை இரண்டாகப் பிரிக்கப்பட்டிருக்கும். ஒன்று நிகழ்காலம், மற்றொன்று எட்டு இலட்சம் வருடங்களுக்குப் பிறகு. இரண்டும் ஒரே நேரத்தில் synchronised-ஆக வரும். இரண்டும் ஒரே இடத்தைக் காட்டுகிறது. முதல் பாதியில், கதாநயகனின் பாட்டி காவலரிடம், தன் பேரன் அந்த அறையில் தான் கடைசியாக இருந்ததாகவும், பின் காணாமல் போய்விட்டதாகவும் கூறுவாள். மற்றொரு பாதியில் (அதே இடத்தில், எட்டு இலட்சம் வருடங்களுக்குப் பிறகு) கதாநாயகன், அதுதான் தன் அறை என்றும், அதன் தொடர்பான காட்சியை விளக்கிக்கொண்டிருப்பான்.

4) தற்காலத்தில் இருந்து 50 வருடம் கழித்து பயனிக்கும் இடத்தில் ஒரு அருங்காட்சியகத்தில் பார்வையாளர்களுக்கு விளக்கமளிக்க ஒரு கண்ணாடியும் அதில் ஒரு உருவமும் தெரியும். அது ஒரு Virtual reality உருவம்.
அதனால், ஒரு வேளை யாராவது ஒரு முன்பின் பழக்கமில்லாதவர் வந்து உங்கள் வீட்டின் கதவை தட்டினால், திறக்க மறக்காதீர்கள். காரணம், அவர் உங்களுடைய 1000 தலைமுறைக்கு பிந்தைய உங்களின் பேரனோ/பேத்தியாகவோ டைம் மெஷினில் உங்களை பார்க்க வந்திருக்கலாம்... ;)

Wednesday, April 16, 2008

பகுதி 2 :: தொட்டால் பூ மலரும் - சைக்கான்கள்


போ..........ன பதிவில் உடலின் இயக்கங்களுக்கு பக்'கா' பலமாக இருக்கும் நியூரான்களை பற்றி பார்த்தோம். இப்போ சைக்கான்கள். சைக்கான்கள் பற்றி பொதுவான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. அதனால் தான் இந்த தாமதம்.

உங்களை யாராவது தொட்டால் உங்கள் மூளைக்கு, இருப்பை பொருத்து, 'உன்னை யாரோ தொடுறாங்க' என்று மூளைக்கு சிறு சிறு மின்சார அதிர்வுகள் மூலம் சமிக்சை கொடுப்பது இந்த நியூரான்களின் வேலை.

உடம்புக்கு நியூரான்கள். சரி! மனதுக்கு? இருக்கவே இருக்கிறது, இளிச்சவாய 'சைக்கான்'கள், கண்ணுக்கு புலப்படாத சைக்கான்கள். சைக்கான்கள் என்பவை "Mental units".

பொதுவான ஒரு விளக்கம், உதா, நாம் ஒரு கைவிளக்கை (டார்ச்)‍ஐ உபயோக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள் அதிலிருந்து ஒளிக்கற்றை வெளியேரும். ஆனால் அந்த கைவிளக்கில் ஒளி இல்லை. துப்பாக்கியின் விசையை அழுத்தும் பொழுது, அந்த துப்பாக்கியில் இருந்து குண்டு வெளிவருகிறது. ஆனால், அது போல அல்ல கைவிளக்கில். ஒளிக்கற்றை அந்த கைவிளக்கில் "இருக்கு. ஆனா இல்லை", "வரும். ஆனா வராது" போலத்தான். Potential என்று சொல்லப்படுவ‌தை போல. இதைப்போன்ற கண்ணால் கான முடியாத "Mental units" தான் சைக்கான்கள்.

இந்த சைக்கான்கள், முன்பே பார்த்த நியூரான்களின் டென்ட்ரைட்களுடன் இணைக்கப்பட்டிருக்கும். அதாவது, ஒவ்வொறு டென்ட்ரைட்களும் ஒவ்வொரு சைக்கான்களுடன் இணைக்கப்பட்டிருக்கும். உடம்பின் உணர்ச்சி பகுதிகள் நியூரான்களால் ஆனது போல மனதின் அல்லது ஆன்மாவின் அணுக்கள் தாம் சைக்கான்கள். அதாவது, சைக்கான்கள் ஒன்று சேர்ந்து ஆன்மாவை உருவாக்குகின்றன. இவைகள் அடிப்படை அணுக்கள். அடிப்படை என்றால்? நாமெல்லாம் (நன் ஆன்மாக்கள்) சில பில்லியன் வருடங்களுக்கு முந்தைய சைக்கான்கள். அணுக்கள், செல்கள், நியூரான்கள், விலங்குகள், குரங்குகள் மற்றும் நம் மூதாதையர்கள் ஆகியோறின் செயல்பாடுகளுக்கு இந்த (நம்முடைய) சைக்கான்களே காரணம்! இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த பிரபஞ்சத்தில் ஒரு குறிப்பிட்ட அளவுள்ள ஆன்மாக்களே இருப்பதாக நம்பப்படுகிறது. அந்த அளவு: 700 கோடி-க்கும் குறைவாக!!

சைக்கான்களின் பொதுவான குணங்கள்:

சைக்கான்களுக்கு மரணம் இல்லை. நாம் இறந்தவுடன் நம்முடைய நினைவுகள் எங்கும் போவதில்லை. ஒரு மனிதன் பிறப்பதற்கு ஒரு ஆன்மா தேவை. அந்த ஆன்மாவானது மறு அவதாரம் மூலமாக பரிணாம வளர்ச்சி கண்டிருக்கும். சைக்கான்கள் தங்கள் பரிணாம வளர்ச்சியின் பொழுது தங்கள் பொதுவான அடையாளத்தை தொலைக்காது. இது சைக்கான்களின் குணம். இறப்பு என்பது பிறப்பிற்கும் பரிணாம வளர்ச்சிக்கும் மிகத் தேவையானதாக இருக்கின்றது.

நமக்கு, நம் மூளைக்கு தெரிந்த செய்திகள் கணக்கிலடங்கா. நினைத்து பாருங்கள். பலவருடங்களுக்கு முன் நிகழ்ந்தவற்றையெல்லாம் நம் மூளை நியாபகம் வைத்திருக்கிறது. பல வருடங்களுக்கு முன் பார்த்த நண்பனை மறுபடியும் பார்த்தால் உடனே பழைய நியாபகங்கள் நம்மையும் அறியாமல் நம் மூளை தன்னுடைய‌ hard disk-ல் இருந்து எடுத்து வருகிறது. உடனே நம் மனதில் பலப்பல எண்ணங்கள் ஓடுகிறது. அவனால் பெற்ற நன்மைகள், அவனுடன் ஏற்பட்ட சண்டைகள், சமாதானங்கள், சந்தோஷங்கள், துக்கங்கள், இப்படி பலப்பல. இவையாவும் ஒலியை விட, மின்னலை விட, ஒளியை விட அதிக வேகத்தில் நமக்கு கிடைக்கிறது, சட்டென்று. இவை யாவற்றையும் எங்கு சேமித்து வைக்கிறது? எவ்வாறு சேமித்து வைக்கிறது? எப்படி அவை நியாபகத்திற்கு கொண்டு வரப்படுகிறது? அவ்வளவும் சுமார் 1.3 - 1.4 கிலோ எடையுள்ள திசுக்களால் ஆன 'மூளை' என்னும் பெயருடன் அழைக்கப்படும் ஒரு பொருளில்! (இவையெல்லாம் ஏன் மூளையில் சேமிப்பதாக சொல்லுகிறோம். காரணம், இவையெல்லாம் நம் மரபணுவில் அல்ல என்று சொல்லத்தான். மரபணுக்களால் கொஞ்சம் போல, ஆனால் சக்தி வாய்ந்த, தகவல்கள் சேமிக்கப்படுகின்றன, கணினியின் BIOS battery போல.).

ஆன்மாவிற்கும் மூளைக்கும் தொடர்பு உள்ளது. உதா, நாம் ஏதாவது ஒரு புகைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தால் நம் மூளையின் சில பகுதி துடிப்புடன் இருக்கும். இந்த இடங்களிளெல்லாம் நம் ஆன்மா துடிப்புடன் இருக்கிறதாக அர்த்தம். அதை போலவே நம் மற்ற உடல் சார்ந்த இயக்கங்களும். இவைகளை தற்போது உள்ள விஞ்ஞான சாதனங்களின் உதவியுடனேயே அறிந்துகொள்ளலாம். நாம் மனதில் நினைக்கும் எண்ணங்கள் உடல் சார்ந்த, உணரக்கூடிய சக்தியை கொடுக்கும் என்பது தெரிகிறது. எண்ணங்களுக்கும் உடல் ரீதியான‌ சக்தி உண்டு.

ஆக, நம் ஆன்மா என்னும் மனம் சம்பந்தப்பட்டவையும், மின் அதிர்வுகள் என்னும் உடல் அல்லது உணர்ச்சி சார்ந்தவையும் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளவை.

அடுத்து, ஆன்மாவும் சைக்கானும் ஒன்றை ஒன்று ஒத்துப்போகக்கூடியவை. இம்மானுவேல் கன்ட் என்னும் ஜெர்மானிய தத்துவ மேதையின் கூற்றுப்படி, சைக்கன்கள் என்னும் mental unit-கள் ஒரே நேரத்தில் வெவ்வேறு இடங்களில் துடிப்புடன் இருக்கும். எப்படி?

இப்படி. இந்த பிரபஞ்சத்தின் வெற்றிடங்களில், இன்ன பிற துகள்களின் நடவடிக்கைகள் ஆன்மாக்களின் நடவடிக்கைகளுடன் ஒத்துப் போக‌வேண்டும் என்ற கட்டாயம் தேவை இல்லை. மற்ற துகள்கள் என்றால் என்ன வேண்டுமானாலும் இருக்கலாம். கண்ணால் காணக்கூடிய எந்த பொருளும். தூசு அல்லது எரி கற்களோ அல்லது கோள் போன்றவை. மற்ற துகள்களின் நடவடிக்கைகள் போலவே ஆன்மாக்களின் துகள்களும், நம் சைக்கான்கள், இருக்காது அல்லது நடக்காது. காரணம், மற்ற துகள்களைப் போலவே ஆன்மாக்களையும் நடவடிக்கைகளால் அதன் இருப்பிடத்தை அறியலாம் என்றால் அதில் ஒரு சிக்கல் உள்ளது. முன்பே சொன்னது போல நடவடிக்கை அற்ற ஆன்மாகளின் இருப்பிடத்தை அறிய முடியாது அல்லவா?

ஆன்மாக்கள் சைக்கான் என்னும் அணுக்களால் ஆனவை. ஆன்மாக்களில் தான் புத்திக்கூர்மை இருக்கின்றது, மூளையில் அல்ல. புத்திக்கூர்மை அடைய முக்கிய காரணம், ஒரு உயிரினத்தின் கைகள். ஆமாம். கைகள் சுதந்திரமானால் தான் யோசிக்க முடியும். நாம் பிறந்த பின் நாம் நம் மனதுக்குள் கேள்விகள் எழும் தருனம் எது என்றால் நாம் நம் கைகளை உபயோகிக்க ஆரம்பித்த பின் தான். கவனித்துப் பாருங்கள். குழந்தை தவழ்ந்து சென்று அமர்ந்து தன் கைகளில் உள்ள தூசுக்களை பார்க்கும். அது தன் கைகளின் உபயோகத்தை பயன்படுத்திக்கொள்ள / புரிந்து கொள்ள‌ ஆரம்பிக்கிறது. மீன்களில் டால்பின்களைவிட எட்டு கைகள் கொண்ட ஆக்டோபஸ் மீன்கள் தாம் புத்திக்கூர்மை அதிகம் உடையவை!

மூளை சம்பந்தப்பட்ட விபத்துக்களின் நினைவுகளை இழந்தவர்கள் தனக்கு தெரியாதவற்றை கற்றுக்கொள்வதை விட, கூடிய சீக்கிரம் தாங்கள் மறந்தவற்றை கற்றுக்கொள்கிறார்கள். அதை போலவே, நாம் நம் முற்பிறவியின் நினைவுகளை நாம் சட்டென்று கற்றுக்கொள்ளலாம் (முற்பிறவி/மறுபிறவி இருப்பதாக வைத்துக்கொண்டால், இந்த சைக்கான் தத்துவம் படி).

ஆன்மாக்களை இயற்பியல் சொல்லும் சக்தி (எனர்ஜி)யுடம் ஒப்பிடலாம். எனர்ஜி என்பதை ஆக்கவும் முடியாது, அழிக்கவும் முடியாது. ஆனால் அதனை ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு மற்றலாம், ஒரு பொருளில் இருந்து மற்றொரு பொருளுக்கு உருமாற்றம் செய்யலாம், கூடு விட்டு கூடு பாய்வது மாதிரி. உதா, ஒரு யந்திரம் (மோட்டார்) சுற்றுவதாக வைத்துக் கொள்ளலாம். யந்திரம் சுற்ற சுற்ற அதில் இருந்து வெப்பம் வெளிப்படுகிறது. இங்கு இரண்டு சக்திகள் இருக்கின்றன. ஒன்று யந்திரம் என்னும் சக்தி, மற்றொன்று வெப்பம் என்னும் சக்தி. ஒன்றில் இருந்து மற்றொன்று உருவாகின்றது. இரண்டும் இந்த பிரபஞ்சத்தில் தான் இருந்தது. ஒன்று கரைய கரைய மற்றொன்று உருவாகின்றது. அதே போல ஆன்மாக்களுக்கும் அழிவில்லை. அவை இந்த பிரபஞ்சத்தில் தாம் இருக்கும். எங்கும் ஓடிவிடாது.

மற்றொரு சுவையான தகவல். ஒரு வகையில், இந்த உலகில் நாமெல்லாம் மேட்ரிக்ஸ் படத்தில் சொல்லப்படும் பேட்டரி போலத்தான். இந்த உலகின் மக்கள் தொகை ஒரு சம நிலையில் தான் இருக்குமாம். அதாவது இந்த உலகம் இயங்கக்கூடிய அளவில். மக்கள் தொகை அதிகமாக அதிகமாக ஏதாவது ஒரு பேரழிவோ அல்லது ஏதாவது ஒரு வகையில் (உதா, ஓரினச் சேர்க்கையாளர்கள் அதிகமாவது) போன்ற வழிகளில் மக்கள் தொகை கட்டுப்படுத்தப்படுவது உண்டு. அதேபோல, திடீரென்று மக்கள் தொகை கணிசமாக குறையும் பொழுது அதனை சமம் செய்ய மற்ற வழிகளில் மக்கள் தொகை அதிகரிக்க செய்யப்படும். உதா, இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய காலகட்டத்தில் உலகில் மக்கள் தொகை அதிகரித்ததை சொல்லலாம். இதற்கு காரணம், போரினால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் இருந்து வெளிவர என்று கூட குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும் வாதிடலாம். மேலும் 9/11 தாக்குதலுக்கு பிறகு சரியாக பத்து மாதங்கள் கழித்து அமெரிக்காவில் பிரசவங்கள் வழக்கதை விட அதிகமாக நடந்ததையும் குறிப்பிடுகிறார்கள். இதெல்லாம் காக்காய் உட்கார பனம்பழம் விழுவதை போலத்தான்.

மனிதர்களுக்கு மட்டும் தான் இது பொதுவானதா என்றால் மனிதனே ஒரு social animal தானே! அதலால் மிருகங்களுக்கும் இது பொருந்தும் தானே! அமெரிக்காவில் இயந்திரங்களில் பயன்பாடு அதிகரித்த காரணத்தினால், காட்டுக் குதிரைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது, கடந்த 10 - 20 வருடங்களாக. காரணம், காட்டுக் குதிரைகள் பழக்கப்பட்டு வீட்டுக் குதிரைகளாக உபயோகப்படுத்தப்பட்டன. இயந்திரங்களின் வரவால் அவைகளின் பயன்பாடு குறைந்தது.

இவற்றில் இருந்து என்ன தெரிகிறது? நியூரான்கள், சைக்கான்கள், மூளை, ஆன்மா ஆகியவை ஒன்றை ஒன்று சார்ந்துள்ளது.

மனம் சம்பந்தப்பட்டது தான் சைக்கான்கள். சரி! அப்படியென்றால் ஆன்மாவிற்கும் சைக்கானுக்கும் என்ன சம்பந்தம்?


பின் குறிப்பு: மறுமொழி மட்டுறுத்தலின் சோதனைக்காக இது ஒரு மீள்பதிவு.

Thursday, March 01, 2007

'சாம்பலாகக் கடவாய்' - ஒரு விஞ்ஞான பார்வை


ஒருவருடைய உடல் படுக்கையில் எலும்பு முதற்கொண்டு சாம்பலாக எரிந்து கிடக்க, அவர் படுத்த அந்த படுக்கை மட்டும் எந்த வித சேதாரமும் இல்லாமல் இருக்க முடியுமா? உடல் முழுவதும் எரிந்தாலும், ஒருவர் கழுத்தில் இருக்கும் மஃப்ளார் மட்டும் எரிந்து போகாமல் இருக்க முடியுமா? முடியும். "Spontaneous human combustion" சுருக்கமாக "SHC", தமிழில் "நெருப்பு மரணங்கள்", என்பது விஞ்ஞானபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படாத, கற்பனை என்றே எடுத்துக் கொள்ளப்பட்ட ஒரு கருத்து. இது விஞ்ஞான உலகுக்கு இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது. "நெருப்பு மரணங்கள்" சொல்வது, உடலுக்கு வெளியில் இருந்து நெருப்பிடப்படாமல், ஒருவருடைய உடலிலுக்குள்ளே இருந்து வரும் நெருப்பே அவரை கொல்வது. கொல்வது என்றால் சாதாரணமாக அல்ல. 640 டிகிரி செல்சியஸில் ஒருவருடைய உடல் முற்றிலும் சாம்பலாக குறைந்தது 4 மணி நேரமாவது தேவைப்படும். ஆனால், 20 முதல் 60 நிமிடங்களில்(!) இப்படி உடல் முற்றிலும் எரிந்து, எலும்பு முதற்கொண்டு, சாம்பலாக முடியுமா? அப்படிப்பட்ட நெருப்பு, வெளியில் இருந்து உடலில் செலுத்தப்படாமல், உடலுக்குள்ளே இருந்து கிளம்பினால்...? அது தான் இந்த "நெருப்பு மரணங்கள்". ஆனால், இது வெளியில் இருந்து பற்ற வைக்கப்பட்ட நெருப்பு மட்டும் அல்ல என்று விஞ்ஞானிகள் அடித்து சொல்கின்றனர். இது அரிதிலும் அரிதான ஒன்று. அதனால், பயப்படவேண்டாம் (ஏன்னா? நான் பயந்தேன்). ஆனால், அதனை பற்றி தெரிந்து கொள்ளலாம்.







இது வரை உலகில் 300 வருடங்காளில் 200க்கும் அதிகமாக இத்தகைய மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன, முதல் மரணம் பதியப்பட்டது 1663-ல். அதுவும் மனிதனுக்கு மட்டுமே...!!! அதனால் சோதனையும் செய்ய முடியாது. நேரடி சாட்சிகள் மட்டுமே உண்டு. அதுவும் மிக அரிதாகவே. காரணம், இது திடீரென்று நிகழ்ந்து விடுவதால். பிரிட்டனில் வருடத்திற்கு 5 மரணங்கள் இவ்வாறு நிகழ்கின்றன. உலகம் முழுவதும் வருடத்திற்கு 50 பேராவது இவ்வாறு இறகின்றனர்.







"நெருப்பு மரணங்கள்"-க்கான அறிகுறிகள்.



* நெருப்பு எந்த ஒரு வெளிதொடர்பில்லாமல் வெளிப்பட்டிருப்பது.

* நெருப்பானது பாதிக்கப்பட்டரின் உடலை தவிற, அருகில் இருக்கும் வேறு எந்த ஒரு பொருளுக்கும் சேதாரம் விளைவிக்காமல் இருப்பது.

* வழக்கமாக நெருப்பினால் ஏற்படும் மரணங்களை விட அதிக அளவில் உடல் எரியப்பட்டிருக்கும்.

* இந்த மரணங்கள் பெரும்பாலும் உள்ளரங்கில் நடைபெற்றிருக்கின்றன (வீடு, அறை...)

* கடும் சூட்டினால், அந்த நெருப்பை தாண்டியுள்ள பொருட்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

* நெருப்பு மரணங்களில் இறந்தவர்கள் பெரும்பாலும் வயதானவர்கள்.

* வழக்கமாக நெருப்பினால் ஏற்படும் மரணங்களில் உடல் தவிற மற்ற பாகங்கள் எரிந்து விடும். ஆனால், நெருப்பு மரணங்களில் இறந்தவர்களின் உடல் மட்டுமே பெரும்பாலும் எரிந்தும், மற்ற பாகங்களான தலை, கை, கால்கள் ஆகியன கொஞ்சமும் பாதிக்கப்படாமல் இருந்திருக்கின்றன.



"இது வரை உலகில் 300க்கும் அதிகமாக இத்தகைய நெருப்பு மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஆனால், இது வெளியில் இருந்து பற்ற வைக்கப்பட்ட நெருப்பு மட்டும் அல்ல என்று விஞ்ஞானிகள் அடித்து சொல்கின்றனர்."


விஞ்ஞானம் எப்படி விளக்குகிறது? ஒரு விளக்கம்: 'மெழுகுவர்த்தி' பற்றிய கற்பனை (the 'wick effect'). மெழுகுவர்த்தி ஆனது உள்ளே திரியை கொண்டு எரிகிறது. அந்த திரியை சுற்றியுள்ள மெழுகை கொண்டு எரிகிறது. மெழுகிவர்த்தி எரிந்தவுடன் அதன் திரியும் கூடவே எரிந்து விடுகிறது. அதே போல, மனித உடலுக்கு அவனுடைய எழும்புகள் திரியாகவும், உடலில் உள்ள கொழுப்புகள் மெழுகாகவும் இருக்கின்றது. மெழுகிவர்த்தி எரிந்து முடிய 1 மணிநேரம் கூட ஆகிறது. ஆனால், நெருப்பு மரணங்களின் படி 20 - 60 நிமிடங்களில் எல்லாமே முடிந்து விடுகிறது.



மெழுகுவர்த்தி எபெஃக்டை விளக்க ஒரு பன்றியை போர்வையில் சுற்றி, கொஞ்சம் போல பெட்ரோலை ஊற்றி எரித்தார்கள். நெருப்பு மரணங்கள் என்னவெல்லாம் செய்யுமோ அவற்றை நேரடியாக செய்து காண்பித்தார்கள்.









இதன் படி எடுக்கப்பட்ட முடிவுகள்:


* இது மெல்ல, சீறாக நடக்கக்கூடிய முறை. அதனால் 5 முதல் 10 மணி நேரங்கள் பிடிக்கும். மேலே குறிப்பிடப்பட்ட பன்றி எரிய 7 மணி நேரங்கள் ஆனது, ஆனாலும் முழுவதுமாக எரிந்து முடியவில்லை.


* நெருப்பு மரணங்கள் ஏற்பட ஏதேனும் ஒரு சிறு நெருப்பு பொறியாவது தேவைப்படுகிறது. தீக்குச்சி, சிகரெட், எரிபொருள், ஸ்பார்க், பெர்ஃப்யூம், சாராயம் போன்றவை.


* இது மெல்ல, சீறாக உடம்பில் உள்ள கொழுப்பை எரிப்பதால், இதனால் இரையாக்கப்பட்டவர் கட்டாயம் இறக்கிறார்.



நெருப்பு மரணங்களில் இறந்தவர்களில் சில (கவனிக்க, வேறு வழியில்லாமல் 'நெருப்பு மரணங்கள்' என்று முடிவு கட்டப்பட்டவர்கள் இவர்கள்)







1) மேலே இருக்கும் ஹெலன் கான்வே என்னும் பெண்மனி, சில் வருடங்களுக்கு முன் எல்லோர் முன்பும் எரிந்து போனார். அது ஒரு நெருப்பு மரணம் என்பதற்கான அறிகுறிகளை தீயனைக்கும் படையில் இருந்த ஆர்னால்ட் என்னும், நெருப்பு மரணங்களை பற்றி ஓரளவேனும் தெரிந்த, இளைஞர் நுணுக்கமாக விசாரித்தார்.



கான்வே வயதான பெண்மனி. அவர் ஒரு தொடர்ந்து புகை பிடிப்பவர். எரிந்து போன பல சிகரெட் துண்டுகள் அவர் அறையில் இருந்தன. 1964 நவம்பர் 8ம் தேதி, நெருப்பு மரணம் அவரை தழுவும் பொழுது ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவரின் இரண்டு கால்கள் மட்டுமே மிஞ்சியிருந்தன. அவர் சாம்பலாக எடுத்துக் கொண்ட நேரம் 21 நிமிடங்கள் என்று ஆர்னால்டு ஊகித்திருந்தார். அவரே கான்வே வெறும் ஆறே நிமிடத்தில் சாம்பலாகியிருக்கவும் வாய்ப்புள்ளதாகவும் கூறினார். காரணம், நெருப்பு பிடிப்பதற்கு மூன்று நிமிடத்திற்கு முன்பு தான் கான்வேயின் பேத்தி பாட்டியுடன் பேசிக்கொண்டிருந்தாள். பின் அதன் 3வது நிமிடத்தில் தீயனைப்பு துறைக்கு சொல்லப்பட்டது. தீயனைக்கும் துறை வந்து சேர்ந்தது மற்றொரு 3 நிமிடத்தில்.
இந்த பெண்மனி இறக்கும் பொழுது, நெருப்பு அவரின் இருக்கைக்கு அடியில் இருந்து கிளம்பி மேல் நோக்கி எரிந்திருக்கலாம் என்றும், அவர் உடலில் இருந்த அபரிமிதமாக கொழுப்பு அந்த நெருப்பு மேலும் கொழுந்து விட்டெரிய காரணம் என்றும் பின் எரிந்து மிச்சம் இருந்த 'வஸ்து'வில் வழவழப்பான ஒரு திரவம் இருந்ததாகவும் (கொழுப்பின் மிச்சம்) கூறுகிறார். இதில் கவனிக்க வேண்டியது, அவர் சாய்ந்திருந்த முதுகு புறத்தில் இருந்த நாற்காலியின் பாகம் மட்டுமே எரிந்திருந்தது.



2) மற்றொரு சாட்சி, 1982-ல் லண்டன் எட்மான்டன்-ல், 62 வயதான ஜேன் சஃப்பின் என்ற மன நிலை பாதிக்கப்பட்ட பெண்மனியின் நெருப்பு மரணம். அவர் எரிந்தது அவரின் தந்தை மற்றும் உறவினரின் கண்ணெதிரில். எரிந்து பிற்பாடு மருத்துவமனையில் இறந்தார். அவர் தந்தை ஜேனின் மிக அருகில் அமர்ந்திருந்தார். திடீரென்று அவர் கண்களில் பளிச்சென்று ஒரு ஒளிப்பிழம்பு தெரிந்தது. ஜேனின் முகம் மற்றும் கைகளை சுற்றி நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. அவர் தந்தை கூறியது, கேன் கதறவோ அல்லது நகரவோ இல்லை என்றும், மாறாக அவர் தன் கைகளை அமைதியாக மடியில் வைத்து அமர்ந்திருந்ததாகவும் கூறினார். பின் அவர் தந்தை மற்றும் மருமகன் ஆகியோர் சேர்ந்து அவரை சமையலரையில் தண்ணீரின் அருகில் இழுத்து சென்று தீயை அனைத்தார்.



இதில் கவணிக்க வேண்டியது, அந்த சமையலரையில் எந்த பொருளும் நெருப்பினால் பாதிக்கப்படவில்லையென்றும், அவரின் உடையும் நெருப்பினால் பாதிக்கப்படவில்லையென்றும் கூறினர். மேலும் சாட்சிகளில் கூற்றுப்படி, அவர் உடலில் இருந்து வந்த நெருப்பின் புகை ஒரு மாதிரியான உருமல் சத்தத்துடன் வந்தது. ஜேன் மருத்துவமணையில் சுயநினைவோடு இருந்ததாகவும், ஆனால், அவரால் எதையும் பேச முடியவில்லை.8 நாட்கள் கோமாவின் இருந்து பின் இறந்தார். பின் விசாரணையில் ஜேன் நெருப்பு மரணத்தினால் தான் இறந்திருப்பார் என்று ஊகிக்கப்பட்டது.



3) 1967, செப்டம்பர் 13ம் தேதி, அதிகாலை, இலண்டனில் உள்ள லாம்பெத்-ல், 49 ஆக்லாந்து சாலையில் உள்ள ஒரு வீட்டில் இருந்து பளிச்சென்று வெளிச்சம் வந்தது. காலை 5:19 மணிக்கு ஒருவர் தீயணைக்கும் துறைக்கு தகவல் தெரிவித்தனர். 5:24-க்கு தீயணைக்கும் துறையினர் வந்தனர். அங்கு ராபர்ட் பெய்லி எரிந்து கொண்டிருந்த நிலையில் கண்டனர். ஆச்சர்யபடுத்தும் விதமாக, அந்த வீடோ அல்லது வீட்டில் இருந்த எந்த பொருளோ நெருப்பினால் பாதிக்கப்படவில்லை. அங்கே எரிந்து கொண்டிருந்த ஒரே பொருள்(!) ராபர்ட் பெய்லி மட்டுமே.



பார்த்தவர்கள் கூறியபடி, அவர் வயிற்றில் நான்கு இன்ச்க்கு ஒரு வெட்டு இருந்ததாகவும், அந்த வெட்டில் இருந்து மிக வேகமாக நீல நிற தீஜ்வாலைகள் வந்ததாகவும் கூறினர். அவர் படியில் இடது புறமாக திரும்பி படுத்துக்கொண்டிருந்ததாகவும், அவர் கால்களை மடக்கி வைத்திருந்து வலியில் புரண்டு கொண்டிருந்ததாகவும் கூறினர். தீ அவர் உடம்பில் இருந்து தான் வந்தது. வேறெங்கிலிருந்தும் இல்லை.



பெய்லியின் உடம்பில் இருந்த உடை, நெருப்பு வெளிவந்த அடி வயிற்றை தவிற மற்ற பகாங்களில் எந்த வித சேதாரமும் இன்றி இருந்தது. அவர் உடல் இருந்த படியில் மட்டும் சிறு துளை இருந்தது. அது நெருப்பினால் ஏற்பட்ட துளை. அந்த வீட்டில் மின்சாரமும் கேஸும் நிறுத்தப்பட்டிருந்தன.



இங்கு கவணிக்க வேண்டியது, தீயணைக்கும் துறை ஐந்து நிமிடத்தில் அங்கு வந்துவிட்டது. அவர் உடலிலும் நெருப்பு வந்த இடம் தவிற வேறு எந்த எடத்திலும் தீக்காயம் இல்லை. நெருப்பும் நீல தீப்பிழம்பு. அதனால், மெழுகுவர்த்தி (wick effect) பாணி கற்பனையும் இல்லை.



4) மிக சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் 1998 ஆகஸ்டு 24ம் தேதி ஸிட்னியில் நடந்தது. இந்த சம்பவத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட சாட்சிகள் உண்டு என்பதும் பாதிக்கப்பட்டவர் சிறிது காலம் வாழ்ந்தார் என்பதும் சிறப்பம்சம். அவர் பெயர் ஏக்னஸ் பிலிஃப். ஒரு காரில் அமர்ந்திருந்தார் ஏக்னஸ். திடீரென்று ஏக்னஸின் மகள் ஜாக்கி காரில் இருந்து புகை வருவதை பார்த்தார். ஒரு வழிப்போக்கர் காரிலிருந்த ஏக்னஸை வெளியே இழுத்து போட்டார். தீ அணைக்கப்பட்டது. ஏக்னஸிடமிருந்து வெறும் முனகல் சத்தம் மட்டுமே கேட்டது. அவருடைய மார்பு, அடிவயிறு, கழித்து, கை, கால்கள் ஆகிய இடங்களில் அதிக தீப்புண்கள் ஏற்பட்டன. ஒரு வாரம் கழித்து மருத்துவமணையில் இறந்தார் ஏக்னஸ்.







விசாரணையில் தீ எங்கிருந்து வந்தது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. அதாவது, வெளியில் இருந்து தீ வரவில்லை. காரின் எந்த மின்கசிவோ அல்லது பெட்ரோல் கசிவோ இல்லை. ஆனால், ஒரு வித்தியாசம், மற்ற நெருப்பு மரணங்களை போல தீ வெகுநேரம் நீடிக்கவில்லை. மாறாக, ஒரு சில நிமிடங்களே நீடித்தன.



5) இந்த நெருப்பு மரணத்தின் வெகு அறுகாமையில் சென்று மீண்ட ஜீனா வின்செஸ்டர் என்ன கூறுகிறார்? 1980 அக்டோபர் 9-ம் தேதி தன் தோழியுடன் காரில் சென்று கொண்டிருந்த அவரை சுற்றி திடீரென்று நெருப்பு. அவர் தோழி தான் அவரை காப்பாற்றினார். கார் ஒரு தொலைபேசி பூத்தை மோதி நின்றது. உயை பிழைத்துவிட்டார். உடம்பில் 20 சதவிகிதம் காயம். காவல்துறை விசாரணையில் வழக்கம் போல அவரை சுற்றி எந்த பிரச்சினையும் இல்லை. ஜீனா சொல்வது அவரால் எதையும் நியாபகப்படுத்த முடியவில்லை என்பது...



சரி! இதிலிருந்து தப்பித்த சிலர் கூறுவது?



1) ஜாக் ஏஞ்சல் - நான்கு நாட்கள் தூங்காமல் கண் விழித்த இவர், பின் தூங்க போயிருக்கிறார். தூக்கத்தில் தன் மார்பில் ஒரு வெடிப்பு ஏற்பட்டதாகவும், அதில் ஒரு ஓட்டை விழுந்ததாகவும், பின் தன் புட்டங்கள் எரிந்து விட்டதாகவும் கூறுகிறார். அவர் வலது கையில் மணிக்கட்டு முதல் விரல்கள் வரை வீக்கங்கள் இருந்ததாகவும், எந்த வலியும் தெரியாததால், வழக்கம் போல குளித்தல், உடை அனிதல் போன்ற வேலைகளை செய்திருக்கிறார். பின் அவர் தம் ஹோட்டலில் மயங்கி விழுந்திருக்கிறார். இவருக்கு தன் உடம்பு எரிந்தது, பிறகு மருத்துவமணையில் கண் விழித்தது, அதன் பிறகு தான் வலி தெரிந்திருக்கிறது. மருத்துவர்களால் இதை விளக்க முடியவில்லை.



2) வில்ஃபிரட் கெளதோர்ப் - சமையலறையில் விழுந்து கிடந்த இவர், ஸ்ட்ரோக் அடிக்கப்பட்டுவிட்டதாக நினைத்து மருத்துவமணைக்கு கொண்டுவரப்பட்டார். ஆனால், மருத்துவர் இவருக்கு ஸ்டிரோக் இல்லையென்றும், அவர் கை மிக மோசமாக எரிந்திருப்பதாகவும் கூறியிருக்கிறார். ஆனால் அவர் கையை மூடியிருந்த உடைகள் எதுவும் தீயால் பாதிக்கப்படவில்லை. இதில் முக்கியமாக, அவருடைய கையில் பெருவிரல் எரிய வில்லை என்பது தான். அவர் தற்கொலையும் முயற்சிக்க முடியாது. காரணம், அவர் அப்படி செய்திருந்தால் அது அவர் உயிருக்கே ஆபத்தாக இருந்திருக்கும். ஆனால் இந்த காயங்களை பார்த்தால் அவர் தற்கொலை முயற்சி செய்திருக்கவில்லை என்று கூறினர். பதினைந்து வாரங்கள் மருத்துவமணையில் இருந்தார் அவர். ஆனால், கெளதோர்ப்பால் என்ன நடந்தது என்று நினைவுப்படுத்த முடியவில்லை. பின் பதினெட்டு மாதங்கள் கழித்து இறந்தார்.



இவைகள் ஒரு பக்கம் என்றாலும், மற்றொரு பக்கம், SHC என்பது ஒரு மாயை (Myth) என்றே கூறுகின்றனர். உடம்பில் நாம் சாப்பிடும் பொருட்களால் சில வாயுக்கள் உருவாகிறதென்றும், அந்த வாயுக்கள் தீப்பிடிப்பதால் இது நிகழ்கிறது என்கின்றனர். அதனால், இவற்றை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவேண்டாம் என்றும் கூறுகின்றனர். மேலும், இந்தகைய மரணங்களில் ஏன் கால்கள் மட்டும் எரியாமல் இருக்கின்றன? இந்த கேள்விக்கு பொத்தாம் பொதுவாகவே விடை கிடைக்கின்றன. தீயினால் ஏற்படும் மரணங்களில் சில இப்படி, கால்கள் மட்டும் விடுபட்டு, நிகழலாம் என்றும் அவற்றை கண்டுகொள்ள தேவையில்லை என்றும் கூறுகின்றனர்.



சில ஒற்றுமைகள்:



* இறப்பவர்கள் பெருன்பாலும் வயதானவர்கள்.

* பெரும்பாலும் புகை பிடிக்கும் பழக்கம், மது அருந்தும் பழக்கம், அசைவம் உண்பவர்களாக உள்ளவர்கள்.

* பெரும்பாலும் சாட்சி இல்லாமல் நிகழ்கின்றன (திடீரென்று நடப்பதாலும் இருக்கலாம்).

* பாதிக்கப்பட்டவர் உடனடியாக இறக்கிறார்.

* சிறு தீப்பொறி எப்பொழுதும் தேவைப்படுகிறது.

* மெழுகுவர்த்தி எஃபெக்ட் நடக்கிறது.

* அனைவரும் சாம்பலாகின்றனர்.

* பெரும்பாலும் உள்ளரங்கில் நடக்கிறது.


நம் ஊரிலும் இவைகள நடந்திருக்கலாம். ஆனால், நமக்கு அது தெரியாமல் போகிறது. கிராமத்தில் வைக்கோல் போர்களில் ஏற்பவும் தீயை SHC-யுடன் ஒப்பிடலாம். காரணம், சூடான காற்று வைக்கோல் போர்களில் மோதும் பொழுது அவை உள்ளுக்குள் சூடேரி திடீரென்று பற்றி கொள்கிறது.



நெருப்பு மரணங்கள் எப்படி வேலை செய்கிறது என்பதின் 3 நிலைகளை இங்கே பாருங்கள்:





புள்ளி விவரங்கள்:



1950-களில் - 11 வழக்குகள்

1960-களில் - 7 வழக்குகள்

1970-களில் - 13 வழக்குகள்

1980-களில் - 22 வழக்குகள்


The remains of Dr John Irving Bentley, who possibly dies of spontaneous human combustion at his home in Northern Pennsylvania, USA, on 5 December 1966.







மற்ற புகைப்படங்கள்
















அறிவியலும், வானவியலைப் பற்றியும் என் மற்ற பதிவுகள்

அணுப்பிளவு (Nuclear Fission)

கால இயந்திரம்

E = MC2

கருந்துளைகள்

1-D, 2-D, 3-D, 4-D...

விண்கற்கள்

The Expanding Universe

அறிவியல் - வரமா / சாபமா?

Tuesday, September 19, 2006

அணுப்பிளவு (Nuclear Fission)

இந்த பிரபஞ்சம் மிகப் பெரியது. 'மிகப் பெரியது' என்றால்? சொல்லத் தெரியவில்லை. ஆனால் 'மிகப் பெரியது'. இந்த பிரபஞ்சம் எதனால் உருவாக்கப்பட்டது? எப்படி உருவாக்கப்பட்டது? இதன் ஆதி என்ன? அந்தம் என்ன? (இத்தன கேள்வி கேட்டா எந்த கேள்விக்கு மொதல்ல பதில் சொல்லுறது?)
இந்த பிரபஞ்சத்தில் உள்ள எந்த ஒரு பொருளை உடைத்துக் கொண்டேபோனாலும் கடைசியில் மிஞ்சிருப்பது அணுக்கள். நம்ம கதை இங்கே அணுக்கள் பற்றி இல்லை. உலகில் உள்ள எல்லா பொருட்களும் அணுக்களால் ஆனவையே. சில கேள்விகளுக்கு பதில் கிடைக்காது. இந்த உலகம் எப்பொழுது உருவானது? அப்படி ஒரு காலத்தில் உருவானது என்றால், உருவாவதற்கு முன் என்ன இருந்தது? வெற்றிடம்? அப்படியானால் அந்த வெற்றிடம் உருவாவதற்கு முன் என்ன இருந்தது?!!!
அணுக்கள் தாம் இந்த உலகின் மிகச் சிறிய பொருள். அப்போ அணுக்கள் உள்ளே இருப்பவை? கண்ணால் பார்க்க இயலாது. ஒரு குண்டூசி தலையில் 100 பில்லியன் பில்லியன் அணுக்களை உட்கார்த்தி வைக்க முடியும். ஒவ்வொரு அணுவும் மூன்று அடிப்படை பொருட்களால் உருவாக்கப்பட்டன.
1) இலத்திரன்கள் (எலெக்ட்ரான்கள்) - இவை -ve சார்ஜ் உள்ளவை.
2) புரோத்தன்கள் (ப்ரோட்டான்ஸ்) - இவை +ve சார்ஜ் உள்ளவை. இவை எலெக்ட்ரான்களை விட 1836 மடங்கு எடை கொண்டது.
3) நியூட்ரான்ஸ் - இவை எந்த சார்ஜும் இல்லாத, நடுநிலை மின்னேற்றம்.இவை எலெக்ட்ரான்களை விட 1839 மடங்கு எடை கொண்டது.
ப்ரோட்டான்களும், நியூட்ரான்களும் சேர்ந்து நியூக்லியான்ஸ் என்று அழைக்கப்படுகின்றன. இது உட்கரு. ஒவ்வொரு அணுவின் உட்கருவை ப்ரோட்டான்களும், நியூட்ரான்களும் சேர்ந்து உருவாக்குகின்றன. அதாவது, உட்கரு என்பது ப்ரோட்டான்கள் + நியூட்ரான்கள். இவ்விரண்டையும் சுற்றி, ஒரு சிமென்ட் கலவை அல்லது கோ(யி)ந்து போல, ஒரு கலவை (binding force) இருப்பதால் அவை உட்கருவை அப்படியே வைத்திருக்க உதவுகிறது. ஒரு அணுவை சுற்றிக் இருக்கும் எலெக்ட்ரான்களும் (-ve), உட்கருவில் இருக்கும் ப்ரோட்டான்களும் (+ve) ஒன்றை ஒன்று ஈர்த்துக் கொள்கிறது.
ஒரு அணு
சில்வர்-ன் அணு எண்
உட்கருவின் ஒரு பகுதியாக இருக்கும் நியூட்ரான்ஸ் சும்மா 'தேமே' என்று தான் இருக்கும். ஆனால், அது தான் இங்கே மேட்டரே. ஆக, இது ஒரு அணுவின் கட்டமைப்பு. இதைப் போல 92+ விதமான அணுக்கள் இருப்பதாக கண்டுபிடித்து பட்டியல் இடப்பட்டிருக்கிறது. அவை அடிப்படைத் தனிமங்கள். அவற்றை ஒவ்வொன்றையும் ஒவ்வொரு எண் வைத்து குறிப்பிடுகின்றனர். ஒவ்வொரு அணுவிலும் இருக்கும் உட்கருவில் உள்ள ப்ரோட்டான்களின் (+ve) எண்ணிக்கை தான் அது. இதை தான் 'அணு எண்' - Atomic Number - என்று அழைக்கின்றனர். பெரும்பாலும் ஒரு உட்கருவில் உள்ள இலத்திரன்களின் எண்ணிக்கை இந்த அணு எண்ணுடன் ஒத்துப் போகும். உதா, ஹைட்ரஜன் - 1, லித்தியம் - 2, ஆக்ஸிஜன் - 8, தங்கம் - 79, யுரேணியம் - 92. இவற்றை இங்கு காணலாம். மற்றபடி இவற்றை பற்றி விலாவரியாக பேச இங்கு தேவை இல்லை (அதாவது, எனக்கும் அவ்வளவு தான் தெரியும்னு அர்த்தம், புரிஞ்சுக்கோங்க).
உதா,
லித்தியம் - மாதிரி
அடுத்து, ஒவ்வொரு அணு குடும்பத்திலும் இன்னபிற உருப்பினர்களும் உண்டு. அவற்றை isotopes என்று அழைப்பர். இந்த குடும்ப அங்கத்தினர்கள் யாவரும் ஒரே எண்ணிக்கை புரோத்தன்களை வைத்திருப்பர். ஆனால், அவர்களுக்குள் உள்ள வித்தியாசம் அதன் நியூட்ரான்களின் எண்ணிக்கையே.
உதா, யுரேணியம்-ன் புரோத்தன்களின் எண்ணிக்கை என்னவோ 92 தான். ஆனால், அவற்றின் நியூட்ரான்களின் எண்ணிக்கை மாறுபடும். 142, 143, 146 என. புரோத்தன்கள் + நியூட்ரான்கள் = அணு எடை (Atomic Mass). அதனால், நம்மிடம் உள்ள யுரேணியத்தின் வகைகள் U234, U235, U238. இங்கு 234 என்பது 92 + 142.
இவற்றில் பல தனிமங்கள் தங்கள் நிலையிலேயே நிலையாக இருக்கும். ஆனால் 'சில' தனிமங்கள் எப்பொழுதும் ஏதாவது வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும். அவைகள் கதிரியக்கம் (radioactive) என்பர். உதாரணமாக, ரேடியம் (Ra88) தன்னில் இருந்து, தன் நியூட்ரான்கள் மற்றும் புரோத்தன்கள் உடன், சக்தி வாய்ந்த கதிர்களை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும். இரவில் கூட ஒளிருமே, கடைகளில் ஸ்டிக்கர்க்ளாக விற்ப்பார்கள். இது எந்த அளவு active-ஆக இருக்கும் என்றால், தன் சொந்த உட்கருவின் கட்டமைப்பையே மாற்றும் வரை active ஆக இருக்கும் ("சொந்த செலவுல சூன்யம் வைத்துக் கொள்வது"?). இப்படி தன் கட்டமைப்பே மாறும் பொழுது அது தன் குடும்பத்தையே மாற்றுகிறது. உதா, ரேடியம் (Ra88) தன்னுள் இருந்த சக்தியை எல்லாம் வெளியேற்றி வெளியேற்றி ரேடான் (Rn86) ஆக மாறி பின் காரீயம், Lead,(Pb82) ஆக மாறுகிறது. அது தன்னைத் தானே நிலை நிறுத்திக் கொள்ளும் வரை இப்படி நிலை மாறிக் கொண்டிருக்கும். இதற்குப் பெயர் இயற்கை உருமாற்றம் (Natural Transmutation), இது இயற்கையாக நடக்கும் பட்சத்தில். இப்படி ஒரு அணு தன் நிலையை தன்னைத் தானே மாற்றிக் கொள்ளும் பொழுது, ஏன் மனிதன் தன்னால் ஒரு அணுவின் நிலையை மாற்ற முடியாது என்று சிந்தித்ததன் விளைவு தான் செயற்கையாக உருமாற்றம் செய்வது.
இதன் படி, ஒரு கதிரியக்க உட்கருவை, (உதா, யுரேனியும், ரேடியம்), மிண்காந்த சக்தியைக் கொண்டு வெளிப்படுத்தப்படும் ஆல்ஃபா கதிர்களில் உள்ள உட்கருவில் 2 புரோத்தன்கள் மற்றும் 2 நியூட்ரான்கள் இருக்கும். 2 புரோத்தன்கள் + 2 நியூட்ரான்கள் = ஹீலியம் (He2). இந்த முறைக்கு Alpha decay என்று பெயர். இதுவும் ஒரு தனிமம் தான். இது வேகமாக நகரக் கூடியது, 1 வினாடியில் 2 கோடி மீட்டர்கள். இவை காற்றில் சில தூரங்கள் (இன்ச்-ல்) மட்டுமே பயணப்படும். அவற்றை சாதாரண காகிதங்களாலேயே தடுக்க முடியும். இந்த முறையில் 2 அணுக்கள் இழந்து அது வேறு ஒரு பொருளாக மாற்றம் பெருகிறது. உதா, யுரேணியம் (U92) 2 அணுக்களை இழந்து தோரியமாக (Th92) மாறுகிறது. சுருக்கமாக சொன்னால், நீங்கள் கடையில் வாங்கும் ரேடியமானது வெளிச்சத்தை உமிழ்ந்துக் கொண்டே இருக்கும். அந்த வெளிச்சம் தான் ஹீலியம் (He2). ஹீலியம் காலியாகிக்கொண்டே இருப்பதால் காலப்போக்கில், அந்த ரேடியம் (Ra88) ரேடான்-ஆக (Rn86) மாறுகிறது. ஆல்ஃபா கதிர்கள் தான் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட Nuclear Radiation.
இப்படி ஆல்ஃபா கதிர்களை ஒரு, உதா, நைட்ரஜன் மீது பாய்ச்சும் பொழுது, ஆல்ஃபா கதிர்களில் உள்ள ஒரு புரோத்தன், நைட்ரஜன் உட்கருவால் ஈர்க்கப்பட்டு அது ஆக்சிஜனாக மாறியது. இதற்குப் பெயர் செயற்கை உருமாற்றம் (Artificial Transmutation). மனிதன் ஒரு அணுவையே மாற்றுகிறான். இந்த ஆராய்ச்சிகள் அதன் பின் வந்த விஞ்ஞானிகளால் வலுப்பெற்றது.
ஆல்ஃபா கதிர்கள்

ஆல்ஃபா ஊடுருவல்
பின் 1939-ல் சில விஞ்ஞானிகளின் யுரேணியம் உருமாற்ற சோதனையின் பொழுது ஒரு நியூட்ரானை யுரேணியத்தின் உட்கருவின் மீது பாய்ச்சினார்கள். கவனிக்க, யுரேணியம் அதிக எடை கொண்டது. அப்பொழுது கிடைத்த விளைவு? அணுப்பிளவு (Nuclear Fission). ஒரு சிறு மாற்றத்திற்கு பதில், அணுக்களே இரண்டாக உடைந்தது. இது உலகை மற்றத்தக்க (அல்லது உலகின் வரைபடத்தை மாற்றத்தக்க) கண்டுபிடிப்பு. என்ன நடந்தது? அங்கே நடந்தது விஞ்ஞானத்தின் இரட்டிப்பு அதிசயம். விஞ்ஞானிகள் எதிர்ப்பார்க்காத அதிசயம்.
ஒன்று யுரேணியத்தின் உட்கருவை (கவனிக்க ப்ரோட்டான்கள் + நியூட்ரான்கள் கொண்டது) சேர்க்க வைத்திருக்கும் கோந்து (binding force) என்னும் கலவை பற்றியது. யுரேணியம் யுரேணியமாக இருந்த பொழுது இருந்த கலவையின் எடை, அவை இரண்டாக பிரிந்த அணுக்களில் இருந்த கலவையின் மொத்த எடையை விட அதிகமாக இருந்தது (அல்லது அதுவே தேவையானதாக இருந்தது). பிரிந்த பின் அந்த கலவையில் ஒரு பகுதி மட்டும் தனியே வந்து...வெடித்தது. ஏன் bold-ல் வெடித்தது? அது பெரும் சக்தியாக வெடித்தது. வெடித்து ஐண்ஸ்டீனின் E = MC2 என்னும் ஃபார்முலா படி எடையும் சக்தியும் ஒன்று என்று நிரூபித்தது. கீழே உள்ள படத்தினைப் பார்க்கவும்.
பிளக்கப்பட்ட அணு

நெட்டில் சுட்டது:
அணுப்பிளவைப் (Nuclear Fission) பற்றி பலருக்கும் தெரியும். ஹிரோஷிமா, நகசாகி நகரங்களின் பேரழிவிற்கும் அணுமின் நிலையங்களில் ஆக்கபூர்வ சக்தி உற்பத்திக்கும் அணுப்பிளவுதான் அடிப்படை. மாபெரும் அணுவின் பொருண்மைக்கும் (m0) அதைப் பிளக்கும்பொழுது உருவாகும் சிறு அணுக்களின் கூடுதல் பொருண்மைக்கும் (m1 + m2) இடையே உள்ள சக்தியின் வேறுபாட்டுக்கு நேர்விகிததில் சக்தி தோன்றுகிறது. இதையே ஐன்ஸ்டைனின் E = mc2 என்ற சமன்பாடு கணக்கிடுகிறது. அணுப்பிளவில் சக்தியுடன் கூட பக்கவிளைவாகக் கதிரியக்கம், வெப்பக்கதிர்வீச்சு போன்றவையும் நிகழ்கின்றன. இவற்றினால் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் ஏற்படும் பக்கவிளைவு அதிகம்.

இரண்டாவது? யுரேணியம் உட்கரு பிரியும் பொழுது சக்தியானது வெப்பமாகவும், வெடியாகவும் வெளிப்பட்டது. அப்பொழுது சக்தி வாய்ந்த கதிர்கள் வெளிப்படுகின்றன. அவை எக்ஸ்-ரேக்களை ஒத்திருந்தன. அப்பொழுது அதி வேகத்தில் சில நியூட்ரான்கள் வெளியேற்றப்படுகின்றன. அங்கே இன்னும் சில பல U235 இருப்பதால், அந்த நியூட்ரான்கள் மற்ற U235 அணுக்களை முன்பு சொன்ன அதே ஒன்றாவது அதிசயப்படி யுரேணியத்தைப் பிரித்து பிரித்து பிரித்து பிரித்து பிரித்து அவற்றை வெடிக்க வைக்கிறது.
விளைவு அல்ல!!! ஒரு தொடர் விளைவு (Chain Reaction), நம்ம பாலபாரதி அடுத்தடுத்து 'தம்' போடுவது போல, இரண்டே இரண்டு வினாடிகளில் மில்லியன் பில்லியன் பில்லியன் அணுக்கள் வெடிக்கின்றன. அதன் சக்தி எப்படிப்பட்டது என்றால், ஒரு பெரிய மைதானம் நிறைய டைனமைட்டை வெடிக்க வைத்தால் கிடைக்கக் கூடிய சக்தி, இந்த ஒரு சிறிய பந்து அளவிலான யுரேணியத்தை பிளப்பதால் உண்டாகும். எந்த ஒரு அதிசய கண்டுபிடிப்பும், ஆக்கபூர்வமாக பயன்படுத்தப்படுவதை விட, தற்காப்புக்கு பயன்படுத்தப் போய், பின் சமயம் கிடைக்கும் பொழுது அந்த நாட்டை அழிக்க பயன்படுத்திவிட்டு, அதன் பின் பிராயசித்தத்துக்காக அழிக்கப்பட்ட தேசத்தின் ராணுவ தேவைகளை கவனித்துக் கொள்வது. பாதிக்கப்பட்ட நாடும் சமாதானம் பேசிக் கொண்டு உலகிலேயே அதிகமாக ஆயுதங்களை தயார் செய்வது (கேட்டால் அது business).
சரி! அணு ஆயுதம் செய்ய ஒரு பந்து அளவிலான யுரேணியத்திற்கு என்ன செய்வது? மண்ணில் அதிகமாக கிடைக்கக் கூடிய யுரேணியத்தின் isotopes-களில் ஒன்றான U238-ஐ மலையளவு பிளவித்து செய்து U235-ஆக மாற்றி முதல் அணுகுண்டை செய்தார்கள். இதற்கு ஏராளமான மனித உழைப்பு தேவைப்பட்டது (அடுத்தவனை அழிக்கத்தான் ஓவர் டைமில் ஒர்க் பன்னுவோமே!!!). இங்கே கவனிக்க வேண்டியது, U235 மட்டுமே சங்கிலித் தொடரை அனுமதிக்கும், U238 அல்ல. ஆனால், புளூட்டோனியம் (Pu94) சங்கிலித் தொடரை அனுமதிக்கும்.
ஆக, அணுகுண்டு எப்படி வெடிக்கிறது என்று (மேலோட்டமாக) பார்த்தோம்.
(சுற்றிலும் சீல் செய்யப்பட்ட) ரியாக்ட்டர்களின் உதவியுடன், செயற்கையான(க) புளூட்டோனியம் தயாரிக்க மேற்கொண்ட முயற்சி வெற்றி பெற்றது. ரியாக்ட்டர்களில் இயற்கையான யுரேணியங்கள் (U235 மற்றும் U238) கம்பி வடிவில் வைக்கப்படுகின்றது. அந்த ரியாக்ட்டர்களில் உள்ள கிராஃப்பைட், U235 பிளக்கப்படும் பொழுது அதி வேகத்தில் வெளியாகும் சில நியூட்ரான்களின் வேகத்தை கட்டுப்படுத்துகிறது. அவற்றில் சில (கட்டுப்படுத்தப்படாத) நியூட்ரான்கள் மற்ற U235-க்களை பிளக்கும். அதனால், இது அந்த சங்கிலித் தொடரை கட்டுக்குள் வைத்திருந்து தொடர முடிகிறது. கட்டுப்படுத்தப்பட்ட நியூட்ரான்கள் U238-ஐ பிளக்க ஆரம்பிக்கிறது. U238 சங்கிலித் தொடரை அனுமதிப்பதில்லை. ஆனால் U235-ல் இருந்து வரும் ஒரு நியூட்ராணை எடுத்துக் கொண்டு U238-ஆனது முதலின் நெப்ட்யூனியம்-ஆக (Np93) மாறி, பின் அது புளூட்டோனியமாக (Pu94) மாறுகிறது. புளூட்டோனியம் (Pu94) சங்கிலித் தொடரை அனுமதிக்கும். அதனால், புளூட்டோனியம் உபயோகித்து அணுகுண்டு தயாரிக்க முடிந்தது. இங்கே, ரியாக்ட்டரே ஒரு அணுவிசை மையமாக இருக்க முடிகிறது. புளூட்டோனியம் கிடைப்பதுடன், அதன் விளைவாக மிக பயங்கரமான அளவில் வெப்பமும் வெளிப்படுவது நியூட்டனின் மூன்றாவது விதி. அந்த வெப்பத்தை கட்டுக்குள் கொண்டு வந்து அதை உபயோகிக்க முடிவதால் பல வழிகளில் உபயோகமாகிறது. அதன் ஒரு முக்கியமான உபயோகம் மின்சாரம்.
அறிவியலும், வானவியலைப் பற்றியும் என் மற்ற பதிவுகள்
கால இயந்திரம்
E = MC2
கருந்துளைகள்
1-D, 2-D, 3-D, 4-D...
விண்கற்கள்
The Expanding Universe
அறிவியல் - வரமா / சாபமா?

Wednesday, August 09, 2006

கால இயந்திரம் - உங்க ஆசையை சொல்லுங்க

சிறிய வயதில், ஒவ்வொரு கோடை விடுமுறைக்கும் சேலத்தில் இருக்கும் என் பாட்டி வீட்டிற்கு செல்வோம். என் உடன்பிறப்புக்கள் (cousions) மொத்தம், இந்தியாவின் சனத் தொகையில் கணிசமாக, சுமார் இருபது+. அதனால் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது. கேபிள் ஒளிப்பரப்பில் கோடை மாதங்களில் மட்டும், ஏப்ரல் மற்றும் மே மாதங்கள், நூரு ரூபாய் (இது பதினைந்து வருடங்களுக்கு முன்னால்). அதில் ஒரு நாளைக்கு நான்கு திரைப்படங்கள். மற்றும் இரண்டு மாதத்திற்கு என்னென்ன திரைப்படங்கள் என்ற பட்டியலும் கொடுக்கப்பட்டுவிடும். அங்கே பார்த்த ஒரு தெலுங்கு டப்பிங் படம், பெயர் 'அபூர்வ சக்தி 369' என்று நினைக்கிறேன். பாலகிருஷ்னா நடித்தது. கதை கால இயந்திரம் பற்றியது. அதில் நம்ம ஹீரோ இறந்த காலம், எதிர்காலம் எல்லாம் போய் சிலுக்குடன் டான்ஸ் எல்லாம் ஆடிவிட்டு வருவார்.

நான் பலதடவை சிந்தித்ததுண்டு. இப்படிப்பட்ட இயந்திரம் உருவாக்கப்பட சாத்தியமுண்டா? நம்மால் இறந்த காலத்தினை பற்றிய நினைவுகள் உண்டு. ஆனால், எதிர்காலம் பற்றிய நினைவுகள் (அ) கணிப்புகள் ஏன் இல்லை. நேரம் ஏன் எப்போதும் முன்னோக்கியே செல்கிறது? அபத்தமாக தோன்றினாலும், இப்படி நினைப்பதை நிறுத்த முடிவதில்லை.

காலம் என்பது நான்காவது பரிணாமம். காலத்தில் பயணம் என்பது முன்னோக்கியோ அல்லது பின்னோக்கியோ செல்வது. ஒருவனால் பூமியில் இருந்து மேலே பறந்து சென்று, முன்பிருந்த நிலையில் (past) பூமிக்கு திரும்ப முடியுமா? இப்படி பல கேள்விகள் தன்னகத்தே அடக்கி வைத்துள்ளது. ஒருவனால் சுலபமாக காலத்தை நோக்கி பயனிக்க முடிந்தால், எப்படி இருக்கும்? General Theory of Relativity-ன் படி, உலகில் ஒளியை விட வேகமாக பயனிக்கும் பொருள் கிடையாது. ஆனால், அந்த வேகமே பத்தாமல் போனால்? ஒரு உதாரணம், ஒளி (light) ஒரு வினாடியில் 1,86,000 மைல்கள் பயனிக்கும். அதாவது 2,99,793 கிலோ மீட்டர். ஒரு பொருளை நாம் பார்ப்பது, அந்தப் பொருள் வெளிப்படுத்தும் ஒளியாலேயே. ஒரு பொருள் சிகப்பாகத் தோன்றுகிறது என்றால், அந்தப் பொருள் அனைத்து வண்ணங்களையும் தன்னகத்தே எடுத்துக் கொண்டு, வெறும் சிகப்பு வண்ணத்தை மட்டுமே வெளியிடுகிறது என்று அர்த்தம். நீங்கள் ஒரு நட்சத்திரத்தைப் பார்க்கிறீர்கள். அது அங்கிருப்பது, அந்த நட்சத்திரம் வெளிப்படுத்தும் ஒளியாலேயே. ஆனால் அந்த ஒளி உங்களை வந்து சேர பல ஒளி ஆண்டுகள் ஆகும். அதனால், நீங்கள் பார்ப்பது எதுவும் அங்கு இல்லாமல் கூட இருக்கலாம். அந்த நட்சத்திரம் நகர்ந்து போய் இருக்கலாம். காரணம், இந்த உலகம் விரிவடைந்துகொண்டிருக்கிறது. அதனால், நாம் பார்ப்பது எல்லாமே கடந்த காலங்கள் தாம் (எல்லாம் மாயா). இது மட்டும் அல்ல, நீங்கள் பார்ப்பது எல்லாம் நீங்கள் பார்க்கும் இடத்தில் இல்லை. அதாவது, இந்த பிரபஞ்சமே வளைந்துள்ளது. அதனால், நீங்கள் நேராக பார்க்கும் எதுவும் நேர்க்கோட்டில் இல்லை. சற்றே பரவளையமாக இருக்கும். இதையெல்லாம் எதற்கு சொல்கிறேன் என்றால், கீழே உள்ள உதாரணம் அறிந்துகொள்ள:

இரண்டு கடிகாரங்களை எடுத்துக் கொண்டு ஒன்றை உயரமான இடத்திலும், மற்றொன்றை பூமிக்கு அருகிலும் வைத்தால், இரண்டாவது கொஞ்சம் மெதுவாகத் தான் ஓடும். அதே போல, இரட்டையராய் பிறந்தவர்களில், ஒருவர் மலை உச்சியிலும், ஒருவர் கடல் மட்டத்திலும் வளர்ந்தால், முதலாமவர் இரண்டாமவரை விட வயதில் பெரியவராக இருப்பார். ஆனால், வித்தியாசம் மிக மிக சொற்ப அளவிலேயே இருக்கும். இதற்குப் பெயர் 'Twin Paradox'. இப்பொழுது ஒரு விண்கலத்தை, நமக்கு (அருகில்) நான்கு ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் Alpha Centauri என்னும் நட்சத்திரத்திற்கு அனுப்புகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள், அவர் அங்கு சென்று திரும்பி வர எட்டு ஒளி ஆண்டுகள் ஆகும். ஒளி ஒரு வருடத்தில் எவ்வளவு தூரம் பயனிக்கிறதோ அதுவே ஒரு ஒளி ஆண்டு (Light Year) எனப்படும். அதனால், நேரத்தை அளக்க பொதுவான காரணி இல்லை எனலாம். அதனால், வின்வெளியில் பயனிப்பவர், பூமியில் இருப்பவரை விட, குறைவான நேரத்தையே எடுத்துக் கொள்வர். அதனால், ஒருவர் ஒளியை விட வேகமாக பயனிப்பவராக இருப்பாராயின்(??), General Theory of Relativity-ன் படி அவரால், காலத்தில் பின்னோக்கியும் பயனிக்க முடியும்.

There was a young lady of Wight
Who traveled much faster than light.
She departed one day,
In a relative way,
And arrived on the previous night


சரி! விஞ்ஞானத்தை விட்டு வெளியே வருவோம். 2002-ல் வந்த ஒரு ஆங்கில படம் The Time Machine. எச்.ஜி.வெல்ஸ் (H.G.Wells)-ன் புதினத்தை மையமாகக் கொண்ட திரைப்படம். 1960-ல் ஒரு படம் வெளிவந்திருக்கிறது. இது இரண்டாவது. கதை 1903-ல் நடப்பதாக. படத்தில் நாயகன், Guy Pearce, காலத்தை நோக்கி பயனிக்கும் ஒரு கலனை கண்டுபிடிப்பார். அதில் 50 வருடம் முன்னோக்கி பயனிப்பார். அங்கே போர் சூழலில் அடிபட்டு மயங்கி விட, மயக்கம் தெளிந்து எழும் பொழுதும், அந்த கலன் அவனை சுமார் 8 இலட்சம் வருடங்கள் பயனித்திருக்கிறது. அங்கே மனித இனம் இருபிரிவாக பிரிந்திருக்கிறது, வேட்டையாடுபவர்கள் மற்றும் வேட்டையாடப்படுபவர்கள். அங்கிருக்கும் வேட்டையாடப்படுபவர்களை காப்பாற்றும் பொருட்டு அதன் தலைவனை, கால இயந்திரத்தில் அனுப்பிவிட்டு கதாநாயகன் அங்கேயே தங்குவதாக கதை. இதில் எனக்கு முதல் பாதி படம் மட்டும் தான் பிடித்தது. பிற்பாதி கதை ச்சும்மா உடான்ஸ்.

இந்தப் படத்தில் எனக்கு பிடித்த காட்சிகள்.

1) கதாநாயகன், ஒரு காட்சியில், கால இயந்திரத்தின் ஃபார்முலாவை கரும்பலகையில் எழுதிக்கொண்டிருப்பான். அந்தக் காட்சி க்லோஸ் அப்-ல் காட்டப்படும். மெள்ள காமெரா பின்னால் நகரும். அந்தக் காட்சியில், திரையில் ஒரு ஏனி தெரியும். அதாவது, கதாநாயகன் ஒரு ஏனியின் மேல் நின்று ஃபார்முலாவை எழுதிக் கொண்டிருப்பான். காமெரா பின்னால் நகரும். அந்தக் காட்சியில், அந்த அறை முழுக்க கரும்பலகையாக இருக்க, ஒரு ஏனியில் நின்றுக்கொண்டு அந்த ஃபார்முலாவின் continuation-ஐ எழுதிக்கொண்டிருப்பான்.
2) கால இயந்திரத்தில் அமர்ந்து அதை இயக்க ஆரம்பிக்க, அந்த அறையில் இருக்கும் (பல) கடிகாரங்கள் ஒரு கணம் நின்று, பின் பின்னோக்கி ஓட ஆரம்பிக்கும். அந்தக் காட்சி பார்க்கும் பொழுது ச்சும்மா 'நச்'னு இருக்கும்.
3) அந்தப் படத்தின் கடைசி காட்சியில் திரை இரண்டாகப் பிரிக்கப்பட்டிருக்கும். ஒன்று நிகழ்காலம், மற்றொன்று எட்டு இலட்சம் வருடங்களுக்குப் பிறகு. இரண்டும் ஒரே நேரத்தில் synchronised-ஆக வரும். இரண்டும் ஒரே இடத்தைக் காட்டுகிறது. முதல் பாதியில், கதாநயகனின் பாட்டி காவலரிடம், தன் பேரன் அந்த அறையில் தான் கடைசியாக இருந்ததாகவும், பின் காணாமல் போய்விட்டதாகவும் கூறுவாள். மற்றொரு பாதியில் (அதே இடத்தில், எட்டு இலட்சம் வருடங்களுக்குப் பிறகு) கதாநாயகன், அதுதான் தன் அறை என்றும், அதன் தொடர்பான காட்சியை விளக்கிக்கொண்டிருப்பான்.
4) தற்காலத்தில் இருந்து 50 வருடம் கழித்து பயனிக்கும் இடத்தில் ஒரு அருங்காட்சியகத்தில் பார்வையாளர்களுக்கு விளக்கமளிக்க ஒரு கண்ணாடியும் அதில் ஒரு உருவமும் தெரியும். அது ஒரு Virtual reality உருவம்.

நான் பல தடவை யோசிப்பேன், நமக்கு ஒரு கால இயந்திரம் கிடைத்தால் எந்த காலத்துக்கு பயனிக்கலாம் என்று. இரண்டு காலங்கள் நினைவுக்கு வரும்.

1) பள்ளியில் படிக்கும் பொழுது ஏமாங்கத நாடு என்னும் கற்பனை நாட்டினைப் பற்றிய ஒரு சூழல் சொல்லப்பட்டிருக்கும். அந்த நாட்டில் தென்னை மரத்தில் இருந்து ஒரு முற்றிய தேங்காய் விழும் பொழுது அது வரும் வழியில் பாக்கு பரம் போன்றவற்றின் மேல் பட்டு அந்தப் பழங்களை சிதைத்து பின் கீழே விழும். அந்த பரங்களின் நெருக்கத்தினை அப்படி விவரித்திருப்பார்கள். மேலும், அரிசி கொத்த வரும் கோழிகளை துரத்த, அங்கிருக்கும் கிழவி தன் காதில் இருக்கும் தங்கத்தோட்டினை கழற்றி வீச, அது அங்கே நடைவண்டி ஓட்டிக் கொண்டிருக்கும் குழந்தைகளிம் நடை வண்டியின் சக்கரத்தில் மாட்டிக் கொள்வதாக அந்த நாட்டின் வளங்களைப் பற்றி சொல்லப்பட்டிருக்கும். இந்தக் காலங்கள் ஒன்று.

2) 'பொன்னியின் செல்வன்' படிக்கும் பொழுது நாம் என்னவோ அந்த காலத்திலேயே பயனிப்பது போல தோன்றும். அதுவும் அருள்மொழிவர்மனையும், வந்தியத்தேவனையும், குந்தவையும், நந்தினையையும், வானதியையும், பழுவேட்டரையரையும், அந்தக் கால காவிரியையும், மக்களையும், அந்தச் சூழலையும் வர்னித்திருப்பதைப் படிக்க படிக்க கால இயந்திரம் மட்டும் கிடைத்தால் அந்த காலகட்டதிற்கு செல்லவேண்டும் என்று தோன்றும்.


கடைசியாக, ஒருவேளை, உங்களுக்கும் அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் எங்கே, எந்த காலகட்டத்தில் பயனிக்க விரும்புவீர்கள்? காரணம் என்ன? ஏன்? நேரம் இருந்தால் தட்டுங்கள், ச்சும்மா...


அறிவியலும், வானவியலைப் பற்றியும் என் மற்ற பதிவுகள்

E = MC2
கருந்துளைகள்
1-D, 2-D, 3-D, 4-D...
விண்கற்கள்
The Expanding Universe
அறிவியல் - வரமா / சாபமா?

Tuesday, April 05, 2005

The Expanding Universe

மனித குலம் இப்பொழுது இருக்கும் நிலைக்கு எடுத்ததும் வந்து விடவில்லை. ஆதியில் மனிதன் இயற்கையை கண்டு பயந்தான். இயற்கை சீற்றங்கள் அவனை பாடாய் படுத்தி விட்டது. முனுக்கென்றால் அவன் உயிர் இழந்தான். இவை யாவும் அவனை யோசிக்க வைத்து விட்டது. இயற்கையை வெல்ல முடியுமோ முடியாதோ, அதன் சீற்றங்களிடமிருந்து தப்பிக்கவாவது வேண்டும் என்று யோசித்தான். அதன் விளைவு தான் விஞ்ஞானம். அது அறிவியல். மனிதன் discovery செய்ய போக அவன் invention செய்ய ஆரம்பித்தான். Discovery-யின் விளைவாக இந்த பிரபஞ்சத்தை ஆராய ஆரம்பித்தான். மண்னை உருக்கி பூதக் கண்ணாடி (lens) செய்ய ஆரம்பித்தான். அந்த ஆடியை வைத்து இந்த பிரபஞ்சத்தை ஆராய்ந்தான். அந்த ஆராய்ச்சி தலைமுறைகளைத் தாண்டி சென்றது. அங்கே கண்ட பல கோடி நட்சத்திரக் குடும்பங்களும், galaxy-க்களும் அவனை ஆச்சரியப்படுத்தின. அவன் பல கேள்விகளுக்கு விடை தேட ஆரம்பித்தான். அந்த கேள்விகளில் ஒன்று தான் "இந்த பிரபஞ்சம் விரிவடைகிறதா?". இதன் விடை "Universe is Expanding".

இந்த கேள்வியை கேட்கும் பொழுது எல்லோரும் ஒருவருக்கு நிச்சயம் நன்றி சொல்ல வேண்டும். அவர் தான் எட்வின் ஹப்பிள் (Edwin Hubble). அவர் தான் நாம் இந்த பிரபஞ்சத்தை நாம் பார்க்கும் பார்வையை மாற்றியவர். 1929-ல் அவர் இந்த பிரபஞ்சம் விரிவடைகிறது என்று காண்பித்தார். (ஆனால் அவரை 1983-ல், அவர் மறைந்து 36 ஆண்டுகளுக்கு பிறகு, தான் அங்கீகரித்து, Space Telescope-க்கு அவர் பெயரை வைத்தார்கள்.

20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஹப்பிள் தன் ஆராய்ச்சியை தொடங்குவதற்கு முன், "nebulae" (லத்தீனில் mist / cloud) என்ற நட்சத்திரக் கூட்டத்தை பற்றிய வாக்குவாதம் நடைப்பெற்றது. அந்த காலகட்டதில் நம் பால் வெளித் தோற்றத்திற்கு (Milky Way Galaxy) வெளியே பிற Galaxy-க்கள் இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை. ஹப்பிள் அந்த nebulae-க்கள் நம்முடைய பால் வெளித் தோற்றத்தை சேர்ந்தது இல்லை என்று கண்டுபிடித்தார். எப்படி கண்டுபிடித்தார்? இதற்கு அவர் அந்த காலக்ஸி-க்கள் வெளியிடும் வெளிச்சத்தின் wavelength-ஐ உபயோகித்தார். WaveLength என்பது இரு அலைகளின் தூரம். ஒளி (light) என்பது சீரான மற்றும் தொடர்ச்சியான அலைகளைக் கொண்டது. இந்த இரு பக்கத்து அலைகளுக்கான தூரத்தை wavelength என்பர். இந்த wavelength தான் ஒரு ஒளியின் நிறத்தை தீர்மானிக்கும். Wavelength அதிகமாக அதிகமாக நிறம் சிகப்பாகவும், குறைவாக குறைவாக ஊதா வாகவும் இருக்கும் (இது மனித கண்களுக்கான ஒரு விளக்கம்). நம் கண்களுக்கு ஒரு குறிப்பிட்ட wavelength (400 nm - ஊதா to 700 nm - சிகப்பு) உள்ள வெளிச்சம் மட்டுமே தெரியும். மற்றவை கண்ணுக்கு புலப்படாத ரேடியோ அலைகளாகவும் (அதிக wavelength, 10 சென்டிமீட்டர் முதல் சுமார் 100 கிலோ மீட்டர் வரை) , புற ஊதாக் கதிர்களாகவும் (குறைந்த wavelength உதா, X-Ray, Gamma-Ray, 100 நேனோ மீட்டர் முதல் 0.0000001 நேனோ மீட்டர் வரை) கண்ணுக்குத் தெரியாமல் வெளிப்படும்.

இந்த wavelength-களை வைத்து இந்த பிரபஞ்சம் விரிவடைகிறதா என்று கண்டுபிடித்தார். ஒரு காலக்ஸியில் இருந்து வெளிப்படும் வெளிச்சமானது (light) அதிக wavelength-ஐ கொண்டதாகவும், அதன் நிறம் சிகப்பை நோக்கி செல்வதாகவும் இருந்தால், அந்த காலக்ஸி நம்மிடம் இருந்து விலகி செல்கிறது என்று அர்த்தம். அதுவே குறைந்த wavelength-ஐ கொண்டதாகவும், அதன் நிறம் நீலத்தை நோக்கி செல்வதாகவும் இருந்தால், அந்த காலக்ஸி நம்மை நோக்கி வருகிறது என்று அர்த்தம். இவைகளை முறையே Red shift மற்றும் Blue shift என்று கூறுவர். அது என்ன Red Shift மற்றும் Blue shift? இதை அறிந்து கொள்வதற்கு முன், Doppler Effect-ஐ பற்றி தெரிந்து கொள்வோம். சாலையில் செல்லும் பொழுது ஒரு வாகனம் உங்களை (சேற்றை வரி இறைக்காமல்) கடந்து செல்வதைப் போல நினைத்துக் கொள்ளுங்கள். அந்த வாகனம் உங்களை நோக்கி வரும்பொழுது அதன் சத்தம் அதிகமாகவும், உங்களை கடந்து செல்லும் பொழுது அதன் சத்தம் குறைவாகவும் இருக்கும். இது எப்படி? அந்த வாகனம் உங்களை நோக்கி வரும் பொழுது அது ஒலி (sound) அலைகளை எல்லா பக்கமும் அனுப்பும். ஏதோ ஒரு பக்கத்தில் நீங்கள் இருப்பீர்கள். அந்த ஒலி (sound) உங்களையும் வந்து சேரும். (வந்து சேருவதை உங்களால் உணர முடியவில்லை என்றால் ஒரு நல்ல என்ட் specialist-ஐ, அதாவது ENT specialist-ஐ, பார்க்கவும்). அந்த ஒலி உங்களை நோக்கி வர வர அதன் wavelength சிறுகும். இப்படி சிறுகும் பொழுது அதன் frequency அதிகமாகும். (Frequency - ஒரு குறிப்பிட்ட நேரத்தில், பெரும்பாலும் ஒரு நொடியில், ஏற்படும் அலைகளின் எண்ணிக்கை) Frequency அதிகமாக அதிகமாக அதன் சப்தம் (அல்லது சங்கீதம்) அதிகரிக்கும். இதுவே, அந்த ஒலி (sound) உங்களை விட்டு விலகி செல்ல செல்ல அதன் wavelength அதிகமாகும். இப்படி அதிகமாகும் பொழுது அதன் frequency குறையும். Frequency குறைய குறைய அதன் சப்தம் குறையும். (இதை வைத்துத் தான் போக்குவரத்துக் காவலர்கள் நீங்கள் ஒரு வாகனத்தில் செல்லும் வேகத்தை கணக்கிட்டு, வேகமாக சென்றால் கண்டிக்கிறார்கள்).

ஆக, இந்த Doppler Effect-ஐ வைத்து Red Shift மற்றும் Blue Shift-ஐ விவரிக்கின்றனர். ஒரு பொருள் ஒரு குறிப்பிட்ட தூரத்தில் நிலையாக இருந்தால், அது பொதுவாக பச்சை நிர ஒளி அலைகளை வெளிப்படுத்தும். ஒரு பொருள் உங்களை நோக்கி வந்தால், அதன் wavelength குறைவாக இருக்கும். அதனால் அதன் frequency அதிகமாக இருக்கும். அதன் நிறம் நீல நிறமாக இருக்கும் (400 nm). இது Blue shift. அதுவே, ஒரு பொருள் உங்களை விட்டு விலகி சென்றல், அதன் wavelength நீளமாக (lengthy) இருக்கும். அதனால் அதன் frequency குறைவாக இருக்கும். அதன் நிறம் சிகப்பு நிறமாக இருக்கும் (700 nm). இது Red Shift. (அம்மாடியோவ்! ஒரே குழப்பமாக இருக்கிறதா...இது வரை புரியவில்லை என்றால் இன்னொரு முறை படிக்கலாம்...)

ஆக...ஒரு காலக்ஸியில் இருந்து வெளிப்படும் ஒளி Red Shift-ஆக இருந்தால் அந்த காலக்ஸி நம்மை விட்டு விலகிச் செல்வதாக அர்த்தம். அதுவே, அந்த காலக்ஸியில் இருந்து வெளிப்படும் ஒளி Blue Shift-ஆக இருந்தால் அந்த காலக்ஸி நம்மை நோக்கி வருவதாக அர்த்தம். இந்த பிரபஞ்சத்தில் உள்ள பெரும்பாண்மையான காலக்ஸிக்கள் Red shift-ஆகவே இருக்கிறது. அதனால், இந்த பிரபஞ்சம் விரிவடைகிறது. அவரால் இந்த சிகப்பு நிறங்களை (Red shift) வெளிப்படுத்தும் காலக்ஸிக்களின் தூரத்தை அளக்க முடியவில்லை. ஆனால், அவர் கண்டுபிடித்தது, இந்த காலக்ஸிக்கள் எவ்வளவு Red shift வெளிப்படுத்துகிறதோ அந்த அளவிற்கு தூரமானதாகும் என்று. அதாவது, தூரம் அதிகரிக்க அதிகரிக்க அது நம்மை விட்டு விலகிச் செல்லும் வேகம் அதிகரிகும். அதாவது, This Universe must be Expanding.

இந்த பிரபஞ்சம் விரிவடைகிறது என்றால் அதற்கு ஒரு மையப் புள்ளி இருக்கவேண்டும் அல்லவா? அது? அடுத்த blog-ல் பார்ப்போம்.

Thursday, March 31, 2005

விண்கற்கள்

விண்கற்களைப் பற்றி பெரும்பாலும் நமக்கு தெரிந்ததெல்லாம் கதைகள் தாம். விண்கற்கள் என்பது ஆங்கிலத்தில் Asteroids - Any of numerous small celestial bodies composed of rock and metal that move around the sun (mainly between the orbits of Mars and Jupiter). இந்த விண்கற்களை பெரிய கற்களாக உருவகம் செய்து கொள்ளலாம். இவை எப்படி உருவாகிறது? இந்த சூரிய குடும்பம் உருவாக்கத்தில் உதிர்ந்த கழிவுகள் தாம் இந்த விண்கற்கள். இவை பெரும்பாலும் கடினமான பாறை மற்றும் உலோகங்களால் உண்டானவை. அவைகள் இந்த புவியீர்ப்பு விசை இல்லாத பிரபஞ்சத்தில் (அனாமத்தாக) மிதந்து சென்று கொண்டிருக்கும். இப்படி அலைந்து கொண்டிருக்கும் கற்களும் தேவையான அளவு புவியீர்ப்பு விசை கொண்டால் ஒரு கிரகம் ஆகி அது தன் சொந்த பாதையில் "என் வழி, தனி வழி" என்று பயனிக்கும். இந்த புவியீர்ப்பு சக்தி இல்லாததால் அவையால் மற்ற விண்கற்களையோ அல்லது மற்ற கிரகங்களையோ ஈர்க்க முடிவதில்லை. இந்த சூரிய குடும்பத்தில் உள்ள எல்லா விண்கற்களும் ஒன்று சேர்ந்தாலும், அதன் அளவு நம் பூமியின் நிலவை விட சிறியதாக இருக்கும். இவற்றில் ஒன்று நம் பூமியை, பேருந்தில் செல்லும் பெண்களை உரசும் ரோமியோக்களைப் போல சும்மா just like that உரசினால்? வடிவேலு பாஷையில், "அம்புட்டு தேன்...பனக்காரன், ஏழை, நல்லவன், கெட்டவன், படித்தவன், படிக்காதவன், ஆட்டம் போட்டவன், அடங்கி இருப்பவன், Software Engineer எல்லா பயலுவளும் போக வேண்டியதுதேன்".

இந்த விண்கற்கள் பெரும்பாலும் செவ்வாய் மற்றும் வியாழன் கிரகத்திற்கு இடையில் சுற்றுபவை. இவை நம் பூமியைத் தாக்குவதற்கு எந்த அளவு சாத்தியம் இருக்கிறது என்று பார்த்தால், அது ஒவ்வொரு 100 மில்லியன் வருடத்திற்கு ஒரு முறை. அதனால் நாம் பதுகாப்பாகத்தான் இருக்கிறோம் (விண்வெளியின் மொழியில் "இப்போதைக்கு"). இந்த விசயத்தில் நம் முன்னோர்களான டைனோசர்ஸ் என்னவோ சுத்தமாக அதிர்ஷ்டம் அற்றவை தான். சுமார் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அவை இந்த மாதிரி ஒரு விண்கல்லால் தான் அதன் இனம் பூண்டோ டு அழிந்தன. அந்த நிகழ்ச்சியால் பூமியில் பல கால நிலை மாற்றங்கள் நிகழ்ந்தன. குளிர்ந்த பகுதிகள் சூடாகவும், சூடான பகுதிகள் குளிர்ந்த பகுதியாகவும் மாறின.

நம் சூரிய குடும்பத்தில் ஒரு aestroid belt உள்ளது. அது இரு பகுதிகளைக் கொண்டது. Inner Belt மற்றும் Outer Belt. Inner Belt என்பது நம் சூரியனில் இருந்து 250 மில்லியன் மைல் தொலைவிற்குள் இருப்பவை. மற்றவையாவும் இருப்பது Outer Belt-ல். இந்த belt-களுக்கு அப்பாலும் மிக சில விண்கற்கள் உள்ளன. நம் சூரிய குடும்பத்தில் சுமார் 26 பெரிய விண்கற்கள் உள்ளன. மேலும் லட்சக்கணக்கான சிறிய விண்கற்கள் உள்ளன. இந்த சிறிய விண்கற்கள் மணலின் அளவு கூட இருக்கும். இதில் மிகப்பெரிய விண்கல் ஜூன் 4, 2002-ல் கண்டுபிடிக்கப்பட்ட "Quaoar" ஆகும். இதன் விட்டம் 1,200 கி.மீ ஆகும். நம் பூமியில் பத்தில் ஒரு பகுதி விட்டம், அல்லது, நிலவின் மூன்றில் ஒரு பகுதி விட்டம் கொண்டது. அது சூரியனை 6 பில்லியன் கி.மீ சுற்றுகிறது. அது சூரியனை ஒரு சுற்று சுற்றி வர பூமியின் 286 வருடங்கள் ஆகிறது. இது பாறைகள் மற்றும் ஐஸ்களால் உருவானதாக "நம்பப்படுகிறது". மற்றொரு பெரிய விண்கல், "2001 KX76" ஆகும். இது புளூட்டோ கிரகத்தின் அருகில் சுற்றுகிறது. இதற்கு அடுத்து பெரிய விண்கல், "Ceres" ஆகும்.

Asteroid Name and NumberDiameter (km)Mass (kg)Mean Distance from the Sun (km)Orbital PeriodDiscoverer, Date of Discovery
1. Ceres960 x 9328.7 x 10204.139 x 108 km4.60 yearsPiazzi, 1801
2. Pallas570 x 525 x 482 km3.18 x 10204.145 x 108 km4.61 yearsHeinrich Olbers,1802
3. Juno240 km2.0 x 10192.7 AU4.36 yearsK. Harding, 1804
4. Vesta530 km3.0 x 10203.534 x 108 km3.63 yearsH. Olbers, 1807
5. Astraea..3.89 x 108 km (2.58 AU)4.13 yearsHencke, 1845
10. Hygiea430 km.4.703 x 108 kmxx yearsDe Gasparis, 1849
15. Eunomia272 km.3.955 x 108 kmxx yearsDe Gasparis, 1851
433. Eros(NEA)34.7 x 17.4 x 14 km7 x 1015 kg2.25 x 108 km
(1.5 AU)
1.76 yearsGustav Witt andAuguste H.P. Charlois, 1893
951. Gaspra34 x 20 km10 x 1015 kg2.05 x 108 km3.29 yearsGrigoriy N.Neujamin, 1916
1221. Amor (NEA)..1.45 x 108 km (0.97 AU)2.66 yearsE. Delporte, 1932
1862. Apollo (NEA)1.6 km2 x 1012 kg2.20 x 108 km (1.47 AU)1.81 yearsK. Reinmuth,1932
2062. Aten (NEA)..2.20 x 108 km (1.92 AU)0.95 yearsHelin, 1976


1989-ல் 0.4 கி.மீ விட்டமும், 74,000 கி.மீ வேகமும் கொண்டு பூமிக்கு மிக அருகில் ஒரு விண்கல் வந்தது. பூமியும் மயிரிழையில் தப்பியது. மயிரிழையின் தூரம் 6,40,000 கி.மீ. அதாவது 4,00,000 மைல்கள். பூமிக்கு மிக அருகில் வந்து சாதனை(!) படைத்தது டிசம்பர் 9, 1994-ல், 1,03,500 கி.மீ தூரத்தில் வந்த ஒரு கல். இதை 0.0007 AU என்று குறிப்பர். 1 AU அல்லது Astronomical unit என்பது பூமிக்கும் நிலவிற்கும் உள்ள தூரம். ஜூன் 2002-ல் visit அடித்த ஒரு விண்கல்லின் தூரம் பூமியில் இருந்து 1,20,000 கி.மீ. என்ன நாம் டைனோசர்களை விட மிகுந்த பாகியவான்கள் தானே? இல்லை என்று சொல்பவர்கள் இதையும் படியுங்கள்.

1970 வரை, விண்கற்கள் பற்றிய ஆர்வம் குறைவாகத்தான் இருந்தது. ஆனால், பிறகு சில சம்பவங்கள் இதை மாற்றியது. செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய கிரகங்களுக்கு இடையில் இருந்த aestroid belt-ல் இருந்து சில கற்கள் அதன் சுற்றுப்பாதையில் இருந்து பூமியின் அருகில் இருக்கும் முனைக்கு நகர்வது தெரிந்தது தான் இந்த மாற்றங்களுக்குக் காரணம். இவ்வாறு நுழையும் கற்கள் பூமியின் ஈர்ப்பு சக்தியால் பூமியை நோக்கி வருகின்றது.

சுமார் 200 மீட்டர் விட்டமுள்ள ஒரு கல், கடலில் விழுவதாக வைத்தாலும், அது ஆழிப் பேரலைகளை (சுனாமி) உருவாக்கும். சுமார் 1 கி.மீட்டர் விட்டமுள்ள ஒரு கல் எழுப்பும் புகை மண்டலம் இந்த பூமியில் சுமார் 1 வருடம் சூரிய ஒளி படாமல் வைக்கும். இதன் காரணமாக பூமியில் குளிர் அதிகரிக்கும். உணவுத் தட்டுப்பாடு வரும். இந்த 1 கி.மீட்டர் கல் தான் டைனோசார்ஸ் & Co. இனத்தின் அழிவுக்கும் காரணமாம்.

மார்ச் 23, 1989-ல் "1989 FC" என்னும் பெயரில், 0.3 மைல் விட்டத்தில், 1,000 one-megaton hydrogen bombs kinetic energy கொண்ட விண்கல் ஒன்று (ஹிரோஷிமாவில் போடப்பட்ட அனுகுண்டைப் போல 50,000 மடங்கு சக்தி வாய்ந்தது) பூமியில் அருகில் வந்து சென்றது. அருகில் என்றால், 2 A.U தான். அதுவும் இது கடந்து போகும் பொழுது தான் கண்டுபிடிக்கப்பட்டது.

ஜூன் 30, 1908-ல் சுமார் 70 மீட்டர் (கனிக்கப்பட) விட்டமுள்ள ஒரு கல் 1000 சதுர கி.மீ பரப்பளவில் சைபீரியன் காட்டை அழித்தது. அதுவும் அந்த கல், பூமியில் மோதவில்லை. மாறாக, அது பூமியை நோக்கி பயணித்த வழியில் பூமியில் இருந்து 5 கி.மீ உயரத்தில் சைபீரியன் காட்டின் மேல் வெடித்தது (அதாவது ஆவியானது). ஆனால் அதன் சக்தி ஒரு பெரிய அனுகுண்டை விட சக்தி வாய்ந்தது. 30 கி.மீ சதுர காடுகள் தட்டையானது. மரங்கள் சட்டென்று ஒரு நொடியில் எரிந்து சாம்பலானது. 14 கி.மீ வரை மரங்கள் "ஒரு பக்கத்தில்" நிர் உரிஞ்சப்பட்டு வற்றியது. 200 கி.மீ தொலைவில் ஒரு வீட்டில் வேலை பார்த்திருந்த தச்சர்கள் தூக்கி எரியப்பட்டனர். Ground zero-வில் (பாதித்த பகுதியின் மையப் பகுதி) இருந்து 80 கி.மீ-க்குள் இருந்தவர்கள் இறந்தனர். அதுவும் இந்த கல் ஆவியாகக் கூடிய பொருளால் ஆனது. அதுவே பாறையாக இருந்திருந்தால்...???

"இதெல்லாம் சும்மா trailer தாம்மா...இன்னும் main picture-ஐ பாக்கலையே..."

Wednesday, March 16, 2005

1-D, 2-D, 3-D, 4-D...

சில விசயங்களை நாம் அறிந்திருப்போம், அனுபவித்திருப்போம். ஆனால் அவைகள் என்ன, எவ்வாறு நடக்கிறது என்று தெரியாது...அதில் ஒன்று தான் 3-D படங்கள். தமிழில் வந்த முதல் மற்றும் ஒரே 3-D திரைப்படம் "மை டியர் குட்டிச்சாத்தான்".

அது என்ன 3-D திரைப்படம்? இதற்கும் மற்ற படங்களுக்கும் என்ன வித்தியாசம்?

3-D-யை பார்ப்பதற்கு முன், முதலில் 1-D மற்றும் 2-D ஆகியவை என்ன என்று பார்க்கலாம். இங்கு "D" என்பது Dimension-ஐ குறிக்கிறது. அதாவது பரிமாணம். அதற்கு விளக்கம்...Dimension என்பது "the magnitude of something in a particular direction (especially length or width or height)".

1-D என்பது...ஒரு காகிதத்தில் ஒரு கோட்டை வரைந்து கொண்டு, அதில் ஒரு புள்ளியை வைக்கவும். இப்பொழுது அந்த புள்ளி அந்த கோட்டில் எங்குள்ளது என்ற கேள்விக்கு உதாரணமாக 5 சென்டிமீட்டர் தூரத்தில் என்பது பதிலாகும். இந்த 5 சென்டிமீட்டர் தூரம் என்பது "அந்த கோட்டின் ஏதாவது ஒரு மூலையில் இருந்து 5 சென்டிமீட்டர் தூரத்தில்..." என்று பொருள். இது 1-D ஆகும். (2-D பற்றி வரும் பொழுது இது இன்னும் தெளிவாகும்). இங்கு அந்த கோடு இருப்பது 1-D-ல். இங்கு ஒரு பரிமாணத்திலேயே அந்த புள்ளி இருக்கும் இடம் தெரிகிறது.

ஒரு காகிதத்தை எடுத்துக் கொள்ளவும். அந்த காகிதத்தில் எங்கேனும் ஒரு புள்ளியை குறித்துக் கொள்ளவும். இப்பொழுது அந்த புள்ளி அந்த காகிதத்தில் எங்கிருக்கிறது என்று சரியாக சொல்ல வேண்டும். முன்பு சொன்னதைப் போல 5 சென்டிமீட்டர் என்று சொல்ல முடியாது. காரணம், 5 சென்டிமீட்டர் என்பது எந்த திசையில் வேண்டுமானாலும் இருக்கலாம் (5 சென்டிமீட்டர் அரைவிட்டம், radius, கொண்ட ஒரு வட்டத்தைப் போல). எப்படிச் சொல்ல? இப்பொழுது ஒரே ஒரு co-ordinate பத்தாது. மற்றொன்று தேவை. இப்படிச் சொல்லலாம்...அந்த புள்ளி அந்த காகிதத்தின் ஒரு மூலையில் இருந்து 3 சென்டிமீட்டர் வலமாகவும் (X-Axis), அங்கிருந்து 4 சென்டிமீட்டர் வடக்கு நோக்கிச் சென்றால் (Y-Axis) கிடைக்கும் என்று. இது மிகச் சரியாக அந்த புள்ளியை கண்டுபிடிக்கும். இப்பொழுது அந்த புள்ளி இருப்பது ஒரு தட்டையில் (Plane). தட்டை என்பது இரு பரிமாணங்களை கொண்டது. இங்கு இந்த இரண்டு பரிமாணங்களும் இருந்தால் தான் தட்டையில் ஒரு புள்ளியை கண்டுபிடிக்க முடியும். இங்கு இந்த இரண்டு பரிமாணங்களும் ஒன்றை ஒன்று 90 டிகிரி கோனத்தில் perpendicular-ஆகத்தான் இருக்க வேண்டும். அதாவது ஆங்கில "L" போல.

அடுத்து, முப்பரிமாணம். ஒரு பெட்டியை எடுத்துக் கொள்ளலாம். அல்லது இன்னும் பரிச்சயமாக ஒரு அறையை எடுத்துக் கொள்ளலாம். அந்த பெட்டி அல்லது அறை என்பது என்னவென்றால், அடுக்கி வைக்கப்பட்ட காகிதங்கள். அவ்வளவே. அதாவது நீளம், மற்றும் அகலம் ஆகிய இரு பரிமாணத்துடன் மூன்றாவதாக "உயரம் / ஆழம்" என்ற பரிமாணத்தையும் சேர்த்துக் கொள்வது. அந்த அறையில் ஒரு பறவை இருப்பதாக நினைத்துக் கொள்ளவும். அந்த பறவை சரியாக எந்த இடத்தில் இருக்கிறது எனத் தெரிந்து கொள்ள, இரு பரிமாணத்தில் பார்த்தது போல "ஒரு மூலையில் இருந்து 3 சென்டிமீட்டர் வலமாகவும் (X-Axis), அங்கிருந்து 4 சென்டிமீட்டர் வடக்கு நோக்கிச் சென்றால் (Y-Axis) கிடைக்கும்" என்று கூரமுடியாது. காரணம் அந்த அறையில் இந்த இரு புள்ளிகள் குறிக்கும் இடங்கள் நிறைய உள்ளன. அதனால், மூன்றாவதாக ஒரு co-ordinate-ம் தேவைப்படுகின்றது. அந்த மூன்றாவது பரிமாணம் தான் உயரம். இப்பொழுது அந்த பறவை, அந்த அறையில், "ஒரு மூலையில் இருந்து 3 சென்டிமீட்டர் வலமாகவும் (X-Axis), அங்கிருந்து 4 சென்டிமீட்டர் வடக்கு நோக்கியும் (Y-Axis), அங்கிருந்து மேல் நோக்கி (Z-Axis) 5 சென்டிமீட்டர் சென்றால் கிடைக்கும்" எனக் கூறலாம். இங்கு இந்த மூன்று பரிமாணங்களும் இருந்தால் தான் அந்த அறையில் அந்த பறவையின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியும். இங்கு இந்த மூன்று பரிமாணங்களும் ஒன்றை ஒன்று 90 டிகிரி கோனத்தில் perpendicular-ஆகத்தான் இருக்க வேண்டும்.

அடுத்து, நான்காவது பரிமாணம். இந்த நான்காவது பரிமாணம் என்பது "நேரம்". அதாவது, அதே அறையில், அந்த பறவை பறந்து கொண்டே இருக்கும் பொழுது, அதன் இடம் மாறும். அந்த பறவையின் சரியான / நிலையான இருப்பிடத்தை காண நமக்கு நான்காவதாக ஒரு பரிமாணம் தேவைப்படுகின்றது. இப்பொழுது அந்த பறவை, அந்த அறையில், "ஒரு மூலையில் இருந்து 3 சென்டிமீட்டர் வலமாகவும் (X-Axis), அங்கிருந்து 4 சென்டிமீட்டர் வடக்கு நோக்கியும் (Y-Axis), அங்கிருந்து மேல் நோக்கி (Z-Axis) 5 சென்டிமீட்டர் சென்றால், அந்த பறவை ஒரு குறிப்பிட்ட 'நேரத்தில்' இருந்த இடம் கிடைக்கும்" எனக் கூறலாம். இங்கு இந்த நான்கு பரிமாணங்களும் இருந்தால் தான் அந்த அறையில் அந்த பறவையின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியும். இந்த நான்காவது பரிமாணம் எப்படி வந்தது என்பதற்கு ஒரு சுவையான வரலாறு உள்ளது. அதை "அப்பால கண்டுப்போம்".

கீழே படத்தில் இருப்பது முதல் 4 பரிமானங்களை விளக்கும் படம்.


இதைப் போல கணிதத்தில் மொத்தம் ஆறு பரிமாணங்கள் உபயோகிப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன். ஐந்தாவதும், ஆறாவதும் என்ன என்று எனக்குத் தெரியவில்லை. தெரிந்தால் கூறலாம்.

என்ன முப்பரிமாணங்கள் என்றால் என்ன என்பது விளங்கியதா? இப்பொழுது 3-D படத்திற்கு வருவோம். நாம் இரு கண்களால் பார்த்தால் நமக்குத் தெரிவது முப்பரிமாணத்தில். "ஒரு கண்ணை மூடிக்கொண்டு பார்த்தால் உலகம் தட்டையாகத்தான் தெரியும்" என்ற அன்னி பெசன்ட் அம்மையார், மகாகவி பாரதியாரிடம் கூரியது போல, நம் ஒரு கண்ணை மூடிக்கொண்டு பார்த்தால், நமக்குத் தெரிவது இரு பரிமானங்களில் (plane). ஒரு கண்ணை மூடிக்கொண்டு ஒரு பொருளை உயரத்தில் தூக்கிப் போட்டு பிடிப்பது சற்றே கடினமானது. நாம் நம் "இரு" கண்களால் பார்க்கும் பொழுது, இரண்டு கண்களுக்கும் வெவ்வேறு பிம்பங்கள் தெரியும். ஒரு பொருளை பார்க்கும் பொழுது நம் இரு கண்களும் அந்த பொருளை நோக்கி focus செய்கிறது. இந்த நிலையில், நாம் பார்க்கும் பொருளுக்கு பின்னாலும், முன்னாலும் இருக்கும் பொருள்கள் இரண்டு பிம்பங்களில் தெரிவதை "உணரலாம்". இதற்கு ஒரு சிறிய பயிற்சி.
ஒரு வெள்ளைத் தாளில் ஒரு சிறு படத்தை போடவும். இப்பொழுது அந்த தாளின் முன்பு ஒரு பேனாவை வைத்து, இப்பொழுது அந்த எழுதுகோலை நோக்கவும். அப்பொழுது பின்னால் உள்ள தாளில் உள்ள படம் இரண்டாகத் தெரிவதை உணரலாம்...(இதே போலத்தான், சில வருடங்களுக்கு முன்பு ஆனந்த விகடனின் பின்புற அட்டைகளில், 3-D உருவில் பார்க்க வாராவாரம் படங்களை வெளியிட்டதை வாசகர்கள் நினைவு கூறலாம்...)

அதே போல, நாம் பார்க்கும் திரைப்படங்கள் யாவும் இரு பரிமாணங்களில் மட்டுமே காட்டப்படுகிறது (அதாவது, plane-ல்). அதனால், இரு கேமராக்கள் உதவியுடன், சற்று தள்ளி வைத்து, ஒரே காட்சியை எடுக்கும் பொழுது (நம் கண்களைப் போல) ஒவ்வொரு கேமராவிற்கும் ஒவ்வொரு பிம்பம் (image) தெரியும். இந்த இரு பிம்பங்களும் overlap ஆகும் பொழுது, நம் பார்வை மாறுவதால், நமக்கு 3-D படங்கள் மங்கலாகத் தெரிகிறது. அதனால் தான், இந்த 3-D படங்களைப் பார்க்க சிறப்பு கண்ணாடி தேவைப்படுகின்றது. இந்த கண்ணாடி ஒரு கண்ணில் சிகப்பாகவும், மற்றொரு கண்ணில் நீலம் / பச்சை வண்ணத்திலும் இருக்கும். சிகப்பு வண்ணம் நீலம் / பச்சை கேமராவில் ஒளிபரப்பாகும் படத்தையும், நீலம் / பச்சை வண்ணம் சிகப்பு கேமராவில் வரும் படத்தையும் பிரித்து காட்டும். அதனால் நமக்கு நேரில் (இரு கண்களால்) பார்ப்பது போல தெரியும்.
இது ஒரு விதமான ஏமாற்று வேலையே. அதாவது, நம் மூளைக்கு 'அங்கு தெரிவது முப்பரிமாணம்' என்ற சேதி சொல்லப்படுவதால், மூளை அதற்கேப்ப நம் கண்களை அட்ஜஸ்ட் செய்கிறது.

Monday, February 21, 2005

கருந்துளைகள் (The Black Holes)

இந்த பரந்து விரிந்த பிரபஞ்சத்தில் என்னற்ற பல அதிசயங்களும், ஆச்சரியங்களும், மனிதனால் உணர்ந்துகொள்ள முடியாத பல விசித்திரங்களும் உள்ளன. பிரபஞ்சத்தில் இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் "என்னற்ற" விஷயங்கள் எல்லாமே பிரபஞ்சத்தின் பிரம்மாண்டத்திற்கு ஒப்பிட்டால் ஒன்றுமே இல்லை என சொல்லலாம். அவற்றில் ஒன்று தான் இந்த கருந்துளைகள் (Black Holes).

இங்கு சூரியன் என்பதை, சூரியன் போன்ற ஒரு நட்சத்திரத்தை என்று படித்துக்கொள்ளவும். சூரியன் கருந்துளை ஆவதற்கு அந்த அளவு அதற்கு 'கெப்பாகுட்டி' இல்லை.

வின்வெளியில் இந்த கருந்துளைகள் என்றால் என்ன? இந்த பிரபஞ்சத்தில் உள்ள கோடானு கோடி நட்சத்திரங்களில் ஒன்று நம் சூரியன் (அட! சரத் குமார் படம் இல்லை...). இந்த சூரியனானது தன்னுடைய வாழ்நாளில் பெரும்பகுதி நாட்களில் அதனுடைய மையப் பகுதியிலிருந்து சூட்டை வெளிப்படுத்தும். இந்த சூட்டை தன்னுள் உள்ள ஹைட்ரொஜெனை (H), Nuclear Fusion என்னும் முறையில் ஹீலியமாக (He) மாற்றி சூட்டை வெளிப்படுத்துகிறது.. இந்த பிரபஞ்சத்தில் அதிகமாக கிடைக்கக் கூடிய வாயு ஹைட்ரொஜென் ஆகும். ஒவ்வொறு ஹீலியம் உட்கரு (Nuclues) உருவாக நான்கு ஹைட்ரொஜென் உட்கருக்கள் தேவைப்படுகின்றன.ஒவ்வொறு ஹீலியம் உட்கருவும் ஹைட்ரொஜெனின் 4 உட்கருக்களின் 99.3% எடையை கொண்டுள்ளன. மீதி உள்ள 0.7% ஹைட்ரொஜென் சக்தியாக வெளிப்படுகின்றது. அதனால், சூரியனில் இருந்து வெளிப்படும் சக்தியை E=MC2 என்னும் ஐண்ஸ்டீனின் விதிப்படி கண்டுபிடிக்கலாம். இதன் படி, ஒவ்வொரு நொடிக்கும் 600 மில்லியன் டன் ஹைட்ரொஜெனை 596 மில்லியன் டன் ஹீலியமாக மாற்றுகிறது. மீதியுள்ள 4 மில்லியன் டன் சக்தியாக வெளிப்படுகிறது. (ஒரு மில்லியன் என்பது 10 இலட்சம், ஒரு டன் என்பது 1000 கிலோ கிராம்). இதன் படி, ஒவ்வொரு சதுர அங்குலத்திலிருந்து சூரியன் 40,000 வாட் வெளிச்சத்தை கொடுக்கிறது. இவையாவும் நம்முடைய சூரியனை பற்றியது. நம்முடைய சூரியனைப்போல 10 மடங்கு எடை அதிகம் கொண்ட ஒரு சூரியனை கற்பனை செய்து கொள்ளுங்கள். இவ்வாறு ஒரு நட்சத்திரம் (சூரியன்) சில பில்லியன் ஆண்டுகள் சக்தியை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும். ஒரு பில்லியன் என்பது 100 மில்லியன், ஒரு மில்லியன் என்பது 10 இலட்சம். சூரியனும் தன் சொந்த புவியீர்ப்பு சக்தியை கொண்டிருக்கும். இப்படி சூரியன் சக்தியை வெளிப்படுத்தும் ஆற்றலால் தான் அது தன் சொந்த புவியீர்ப்பு விசையால் சுருங்காமல் இருக்கிறது. சூரியனின் மேற்பரப்பில், இந்த புவியீர்ப்பு விசை Escape Velocity-யாக கணக்கிடும்பொழுது அது ஒரு நொடிக்கு சுமார் ஆயிரம் கிலோ மீட்டர் (1000) ஆகும் (நம் பூமியில் இது 9.8 Meter/Second 2 என நினைக்கிறேன்). அதாவது, ஒரு பொருளை சூரியனின் மேற்பரப்பில் இருந்து ஒரு விநாடிக்கு 1000 கிலோமீட்டர் வேகத்திற்குள் மேல் நோக்கி எரிந்தால், அது திரும்பவும் சூரியனை நோக்கி இழுக்கப்படும். அதுவே, 1000 கிலோமீட்டர்க்கு மேல் இருந்தால் அது வேகமாக துப்பப்படும். இது சூரியனின் சாதாரன நிலை.



ஆனால், ஒவ்வொரு தொடக்கமும் ஒவ்வொரு முடிவைக் கொண்டிருக்கும். அதன் படி, சூரியனில் உள்ள எரிபொருளும் சில பில்லியன் ஆண்டுகளில் தீர்ந்துவிடும். அப்படி தீரும் பொழுது, வெளியில் இருக்கும் அழுத்தம் தீர்ந்து போய்விடுகிறது. அதனால், சூரியன் தன் சொந்த புவியீர்ப்புக்கு பலியாக ஆரம்பிக்கிறது. அந்த புவியீர்ப்பு சூரியனை சுருங்கச் செய்கிறது. அப்படி சுருங்கும் பொழுது சூரியனின் பேற்பரப்பில் உள்ள புவியீர்ப்பு சக்தி அதிகமாகிறது. அதனால், அதன் Escape Velocity பலவாறு உயர்கின்றது. சூரியனின் விட்டம் சுமார் 60 கிலோமீட்டராக சுருங்கும் பொழுது, இந்த Escape Velocity-யானது ஒரு நொடிக்கு 300,000 கிலோமீட்டராக அதிகரிக்கின்றது. இந்த எண் ஒரு முக்கியமான எண். காரணம், இந்த வேகம் தான் இந்த பிரபஞ்சத்திலேயே ஒரு பொருள் அதிகமாக செல்லகூடிய வேகம். அது என்ன? அது தான் ஒளி. அதாவது, ஒரு பொருளை சூரியனின் (இனி அதன் பெயர் சூரியன் இல்லை) மேற்பரப்பில் இருந்து ஒரு விநாடிக்கு 300,000 கிலோமீட்டர் வேகத்திற்குள் மேல் நோக்கி எரிந்தால், அது திரும்பவும் சூரியனை நோக்கி இழுக்கப்பட்டுவிடும். ஆக, வேகமாக செல்லக்கூடிய ஒளியாலேயே சூரியனின் மேற்பரப்பில் இருந்து தப்பிக்க முடியாது. மேலும், அந்த கருந்துளை அருகில் இருக்கும் கிரகங்களும், விண்கற்களையும் (aestroids) தன் புவியீர்ப்பு சக்தியால் கபளீகரம் செய்ய ஆரம்பிக்கும். இங்கே ஒரு கேள்வி எழலாம். நாம் ஒரு பொருளை பார்ப்பதே ஒளியால் தான். ஒளியாலேயே கருந்துளைகளிடம் தப்பிக்கமுடியாது என்றால், பின் எவ்வாறு அந்த கருந்துளைகளை பார்க்கமுடியும்? அதற்கு திரு. மதன் அவர்கள் ஒரு அழகான விளக்கத்தை கொடுக்கிறார். "இப்படிப்பட்ட கருந்துளைகளை எவ்வாறு அறியலாம் என்றால், அரசியல் பொதுக்கூட்டத்திற்கு தலைவர் வந்துவிட்டாரா என்பதை தொண்டர்களிடம் எழும் பரபரப்பிலேயே அறிய முடியும். அதைப்போல, அந்த கருந்துளையின் சுற்றி இருக்கும் சிறு சிறு கிரகங்கள் மற்றும் விண்கற்கள் கருந்துளையை நோக்கி இழுக்கப்படும்".



Black Holes - A region of space-time from which it is not possible to escape to infinity. கருந்துளையின் மேற்பரப்பு "Event Horizon" என்று குறிப்பிடப்படுகிறது. இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் எண்ணற்ற கருந்துளைகள் இப்படி நட்சத்திரங்கள் சுருங்குவதால் மட்டுமே ஏற்பட்டதில்லை. மாறாக, Big Bang எனப்படுகின்ற இந்த பிரபஞ்சத்தின் பிறப்பு காலத்தில் இருந்த சூடான அண்ட வெளிகள் சுருங்கியதாலும் ஏற்பட்டிருக்கலாம். சுமார் ஒரு பில்லியன் டன் எடையுள்ள ஒரு கருந்துளையின் விட்டம் (Radius) என்னவாக இருக்கும். அசர வேண்டாம் 10 -13 சென்டிமீட்டர் தான். அதாவது பூஜ்யம் புள்ளிக்கு பிறகு 13 பூஜ்யம் பிறகு ஒரு ஒன்று சென்டிமீட்டர் (0.00000000000001 சென்டிமீட்டர்). இப்படிப் பட்ட ஒரு கருந்துளையை நம் பூமியின் மேற்பரப்பில் வைத்தால், அது பூமியின் மையப்பகுதியை நோக்கி மிக வேகமாக விழுவதை யாராலும் தடுக்க முடியாது. ஆக இந்த கருந்துளையை வைத்து அதன் சக்தியை உபயோகிக்க ஒரே வழி, அதை பூமியின் சுற்றுப்பாதைக்கு அருகாமையில் ஒரு சுற்றுப்பாதையில் வைத்திருப்பது தான். அதை அங்கு கொண்டு வருவதற்கு ஒரே வழி, நியூட்டனின் விதிப்படி, அந்த கருந்துளைக்கு முன் அதை விட ஒரு பெரிய எடை கொண்ட ஒரு பொருளை அதற்கு முன்னே tow செய்ய வேண்டும்!!! (இந்த விசயத்தை தயவு செய்து எந்த அரசியல்வாதிகளிடமும் சொல்ல வேண்டாம்... காரணம் இதற்கும் tender விட்டுவிடுவார்கள்...)



இந்த பிரபஞ்சத்தில் பல கருந்துளைகள் இருப்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. நம் பால்வெளித் தோற்றத்தில் Cygnus X-1 என்னும் கருந்துளையும், நமக்கு அருகாமையில் உள்ள காலக்ஸியில் Magellanic Clouds என்னும் கருந்துளையும் இருக்கின்றது. இப்படிப்பட்ட கருந்துளைகளின் மொத்த எண்ணிக்கை நிச்சயம் அதிகமாக இருக்கும். காரணம், இந்த பிரபஞ்சத்தின் வரலாற்றில் பல எண்ணற்ற நட்சத்திரங்கள் எரிபொருள் தீர்ந்து கருந்துளைகளாக ஆவியாகி போயிருக்கும். அவைகளின் எண்ணிக்கை நிச்சயம் இப்பொழுது இருக்கும் நட்சத்திரங்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கும். நம் பால்வெளித் தோற்றத்தில் மட்டும் சுமார் ஒரு இலட்சம் மில்லியன் கருந்துளைகள் இருக்கும். இந்த கணிப்பைப் பாருங்கள்...ஒளி (light) ஒரு வினாடியில் 1,86,000 மைல்கள் பயனிக்கும். அதாவது 2,99,793 கிலோ மீட்டர். இந்த ஒளி ஒரு வருடத்தில் எவ்வளவு தூரம் பயனிக்கிறதோ அதுவே ஒரு ஒளி ஆண்டு (Light Year) எனப்படும். அது, 9500000000000 கிலோ மீட்டர்கள். இப்பொழுது ஒரு ஒளி ஆண்டு நீளம், ஒரு ஒளி ஆண்டு அகலம், ஒரு ஒளி ஆண்டு உயரம் கொண்ட ஒரு பெட்டியை எடுத்துக் கொள்ளவும் (அதாவது கற்பனையில்). அந்த பெட்டியில் 300-க்கும் குறைவான கருந்துளைகளே இருக்கும்.

ஒரு கருந்துளையின் எடை குறைய குறைய (கவனிக்க, இது கருந்துளை ஆனபிறகு) அதன் தட்டவெட்ப நிலை கண்டபடி உயரும். வெப்பம் உயர உயர, அது மேலும் எடை இழக்கிறது. அது எடையற்று போகும் நிலையில், கடைசியாக அது வெடித்து கானாமல் போய்விடுகிறது. அந்த கடைசி நேர வெடியின் சக்தி மில்லியன் கணக்கான ஹைட்ரஜன் குண்டுகளை ஒரே இடத்தில் வைத்து வெடிக்கும் சக்திக்கு ஈடானது. சூரியனை விட சற்றே (!) பெரிய கருந்துளையின் வெப்பம், அதிகமில்லை gentlemen, ஒரு டிகிரியில் பத்து மில்லியன் பங்குதான் (மீண்டும் கவனிக்க, இது கருந்துளை ஆனபிறகு). இந்த வெப்பத்திலும் அது முழுவதும் கானாமல் போவதற்கு ஒரு மில்லியன் மில்லியன் மில்லியன் மில்லியன் மில்லியன் மில்லியன் மில்லியன் மில்லியன் மில்லியன் மில்லியன் மில்லியன் ஆண்டுகள் ஆகும்.

என்ன நாமெல்லாம் எம்மாத்திரம் எனப் புரிகிறதா?

Thursday, February 17, 2005

E = MC2

இந்த உலகில் சில விஷயங்கள் மாறாதது...அதில் ஒன்று ஒளியின் வேகம் (ஒளி - Light). ஒளி மட்டும் தான் இந்த உலகின் வேகமாக பயனிக்கக் கூடியது. ஒளியின் வேகத்தை உலகில் வேறெதுவும் மிஞ்சமுடியாது...இதை அடித்தளமாக கொண்டது தான் திரு. ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் "Theory of Relativity". இந்த சித்தாந்தம் சொல்வது "அறிவியலின் விதிகள் அனைத்தும் அனைத்து சுதந்திரமாக நகரும் பொருட்களுக்கும் அவைகளின் வேகத்தை கணக்கில் கொள்ளாமல் சமமாக இருக்க வேண்டும்". (ஐயோ! ஆங்கிலத்திலேயே படியுங்கள். அதாவது "The laws of science should be the same for all freely moving observers, no matter what their speed"). ஐன்ஸ்டீனின் மிகவும் பிரபலமான வான E = MC2 என்பது என்ன?

இங்கே E என்பது "சக்தி" அதாவது "Energy"
M என்பது "எடை" அதாவது "Mass"
C என்பது ஒளியின் "வேகம்" அதாவது "Velocity of Light"

நினைவில் கொள்க, ஒளியின் வேகம் என்றும் மாறாதது. அதனால், Energy-யும், Mass-ம் மட்டும் கருத்தில் கொண்டால், Mass கூடக் கூட in-take Energy கூடும் அதனால் வேகம் (Velocity) குறையும். அதாவது, வேகத்தால் ஏற்படக் கூடிய சக்தியுடன் (Energy) அதன் எடை (Mass) சேர்ந்துக் கொள்ளும். இன்னொரு கோனத்தில், எடை (Mass) கூட்டுதல், வேகத்தைக் (Velocity) குறைக்கும். அதனால், எடை (Mass) குறைய குறைய வேகம் (Velocity) அதிகரிக்கும். ஒளியில் எடை இல்லாததால் அதுவே உலகில் வேகமாக செல்லக்கூடியது.

உதாரணத்திற்கு, ஒளியில் 10 சதவிகிதம் வேகமாகச் செல்லும் ஒரு பொருள் தன் எடையில் இருந்து 0.5 சதவிகிதம் கூடுவதாக வைத்துக் கொள்வோம். ஒளியில் 90 சதவிகிதம் வேகமாகச் செல்லும் அதே பொருள் தன் எடையை விட இரு மடங்கு எடை கொள்ளும். இப்பொழுது அந்த பொருள் ஒளியின் வேகத்திற்கு இணையாக பயனிப்பதாக வைத்துக் கொள்வோம், அதன் எடை இன்னும் வேகமாக அதிகரிக்கும். அப்பொழுது அது மேலும் மேலும் வேகமாக செல்ல அதிக சக்தியை எடுக்கும். இது சாத்தியமாகாத காரணத்தினால், தனக்குள் எந்த எடையும் இல்லாத ஒளி மட்டுமே இந்த உலகில் வேகமாகச் செல்லும்.

சரி, இன்னும் புரியாமல் இருப்பவர்களுக்கு, Real Analysis முறையில் ஒரு நிரூபனம்...

இப்பொழுது நாம் (எடை இல்லாத) ஒளியை விட வேகமாக ஒரு (எடை உடைய) பொருளால் பயனிக்க முடியும் என்று வைத்துக் கொள்வோம். (இதற்கு ஆங்கிலத்தில் Hypothesis என்று பெயர்). அந்த பொருள் ஒளியின் வேகத்தை அடையும் பொழுது, E=MC2 என்னும் விதிப்படி அதிகப்படியான சக்தியை (Energy) எடுத்துக் கொள்ளும். காரணம் அதற்கு எடை (Mass) உள்ளது. எடை (Mass) கூடும் பொழுது அதன் வேகம் கண்டிப்பாய் குறையும். வேகம் குறையும் என்பது நாம் எடுத்துக் கொண்ட Hypothesis-க்கு முரனானது. இந்த முரண்பாடு எதனால் வந்தது என்று பார்த்தால், அது நாம் அந்த பொருளுக்கு எடை கொடுத்ததால். அதனால், ஒளியை விட இந்த உலகில் வேகமாக எந்த பொருளும் பயனிக்க முடியாது...


பிற்சேர்க்கை...

ஒளி என்பது Photon என்னும் துகள்களால் ஆனது. Photon - Unit of Light. எப்படி எடையின் அளவை கிராம் என்கிறோமோ, அதை போல ஒளியின் அளவு இந்த Photon. Photon-களின் எடை என்ன தெரியுமா? பூஜ்யம். அதற்கு எடை கிடையாது. எடை இல்லாத ஒரு பொருள் தான் வேகமாக செல்லும். உங்களை சுமந்து கொண்டு பேருந்து 100 கி.மீ. வரை செல்ல முடியும். ஆனால், ஒரு யானையை சுமந்து கொண்டால், அதன் எடை காரணமாக வேகம் குறையும். அதனால், எடை வேகத்தை கட்டுப்படுத்துகிறது. இதையே மாற்றி சொல்ல வேண்டுமென்றால், எடை குறைவான ஒரு பொருளால் மிக வேகமாக பயனிக்க முடியும். எடையே இல்லாததால் ஒளி இந்த உலகின் வேகமாக பயனிக்கக் கூடியதாக இருக்கிறது.

Another பிற்சேர்க்கை...

'It's the Magna Carta of physics!' Albert Einstein's original theory of relativity manuscript goes on display for the first time


The original manuscript of Albert Einstein's groundbreaking theory of relativity has gone on display in its entirety for the first time.

Einstein's 46-page handwritten explanation of his general theory of relativity is being shown at the Israel Academy of Sciences and Humanities in Jerusalem as part of its 50th anniversary celebration.

In the manuscript, which helps explain everything from black holes to the Big Bang and contains the famous equation of E=MC², Einstein demonstrates an expanding universe and shows how gravity can bend space and time.



Israeli students inspect Albert Einstein's General Theory of Relativity on display in its entirety for the first time

The academy's president Menahem Yaari said: 'We wanted something unique that would have global significance, and fortunately we could have access to a manuscript that has never been seen in its entirety before.'

First published in 1916, the general theory of relativity remains a pivotal breakthrough in modern physics.



This is the first time the original manuscript has gone on display in its entirety for the first time



The manuscript contains Einstein's explanations of his theory, including equations such as the E=MC²


anoch Gutfreund, former president of the Hebrew University and chair of its academic committee for the Albert Einstein Archives said: 'It changed our understanding of space, time, gravitation, and really the entire universe.
'I refer to it as the Magna Carta of physics. It's the most important manuscript in the entire archives.'

Despite its central place in the canon of Einstein's work, the original manuscript has never attracted as much attention as the man himself.



Einstein left his papers to the Hebrew University in his will

According to Mr Gutfreund, museums around the world have been content to display only a few pages of the manuscript at a time, as part of larger features on the personal and professional accomplishments of perhaps the modern era's most influential scientist.

That is partly because the contents of the general theory, especially in the original German, remain too obscure for non-scientists.

It took Einstein eight years after publishing his theory of special relativity to expand that into his theory of general relativity, in which he showed that gravity can affect space and time, a key to understanding basic forces of physics and natural phenomena, including the origin of the universe.

But exhibit organisers say the significance of Einstein's pages of careful writing and diagrams will not be lost on casual viewers.

They say the display will present the manuscript in the context of the theory's legacy - which includes everything from modern space exploration to commercial satellite and GPS technology.

Mr Gutfreund said: 'The greatest challenge at the frontier of physics is to make progress on these issues, the ideas that Einstein developed, discarded, and the errors he made.

'People will be able to appreciate this even if they're not able to understand the contents.'

Einstein was one of the founders of the Hebrew University in Jerusalem.

He contributed the manuscript to the university when it was founded in 1925, four years after he was awarded the Nobel Prize in physics.

His will bequeathed the rest of his papers to the university upon his death in 1955.

The university is lending the manuscript to the academy for the anniversary celebration.

The manuscript will be on display until March 25, overlapping with the 131st anniversary of Einstein's birth on March 14.


Source:The Daily Mail Reporter