Thursday, February 17, 2005

E = MC2

இந்த உலகில் சில விஷயங்கள் மாறாதது...அதில் ஒன்று ஒளியின் வேகம் (ஒளி - Light). ஒளி மட்டும் தான் இந்த உலகின் வேகமாக பயனிக்கக் கூடியது. ஒளியின் வேகத்தை உலகில் வேறெதுவும் மிஞ்சமுடியாது...இதை அடித்தளமாக கொண்டது தான் திரு. ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் "Theory of Relativity". இந்த சித்தாந்தம் சொல்வது "அறிவியலின் விதிகள் அனைத்தும் அனைத்து சுதந்திரமாக நகரும் பொருட்களுக்கும் அவைகளின் வேகத்தை கணக்கில் கொள்ளாமல் சமமாக இருக்க வேண்டும்". (ஐயோ! ஆங்கிலத்திலேயே படியுங்கள். அதாவது "The laws of science should be the same for all freely moving observers, no matter what their speed"). ஐன்ஸ்டீனின் மிகவும் பிரபலமான வான E = MC2 என்பது என்ன?

இங்கே E என்பது "சக்தி" அதாவது "Energy"
M என்பது "எடை" அதாவது "Mass"
C என்பது ஒளியின் "வேகம்" அதாவது "Velocity of Light"

நினைவில் கொள்க, ஒளியின் வேகம் என்றும் மாறாதது. அதனால், Energy-யும், Mass-ம் மட்டும் கருத்தில் கொண்டால், Mass கூடக் கூட in-take Energy கூடும் அதனால் வேகம் (Velocity) குறையும். அதாவது, வேகத்தால் ஏற்படக் கூடிய சக்தியுடன் (Energy) அதன் எடை (Mass) சேர்ந்துக் கொள்ளும். இன்னொரு கோனத்தில், எடை (Mass) கூட்டுதல், வேகத்தைக் (Velocity) குறைக்கும். அதனால், எடை (Mass) குறைய குறைய வேகம் (Velocity) அதிகரிக்கும். ஒளியில் எடை இல்லாததால் அதுவே உலகில் வேகமாக செல்லக்கூடியது.

உதாரணத்திற்கு, ஒளியில் 10 சதவிகிதம் வேகமாகச் செல்லும் ஒரு பொருள் தன் எடையில் இருந்து 0.5 சதவிகிதம் கூடுவதாக வைத்துக் கொள்வோம். ஒளியில் 90 சதவிகிதம் வேகமாகச் செல்லும் அதே பொருள் தன் எடையை விட இரு மடங்கு எடை கொள்ளும். இப்பொழுது அந்த பொருள் ஒளியின் வேகத்திற்கு இணையாக பயனிப்பதாக வைத்துக் கொள்வோம், அதன் எடை இன்னும் வேகமாக அதிகரிக்கும். அப்பொழுது அது மேலும் மேலும் வேகமாக செல்ல அதிக சக்தியை எடுக்கும். இது சாத்தியமாகாத காரணத்தினால், தனக்குள் எந்த எடையும் இல்லாத ஒளி மட்டுமே இந்த உலகில் வேகமாகச் செல்லும்.

சரி, இன்னும் புரியாமல் இருப்பவர்களுக்கு, Real Analysis முறையில் ஒரு நிரூபனம்...

இப்பொழுது நாம் (எடை இல்லாத) ஒளியை விட வேகமாக ஒரு (எடை உடைய) பொருளால் பயனிக்க முடியும் என்று வைத்துக் கொள்வோம். (இதற்கு ஆங்கிலத்தில் Hypothesis என்று பெயர்). அந்த பொருள் ஒளியின் வேகத்தை அடையும் பொழுது, E=MC2 என்னும் விதிப்படி அதிகப்படியான சக்தியை (Energy) எடுத்துக் கொள்ளும். காரணம் அதற்கு எடை (Mass) உள்ளது. எடை (Mass) கூடும் பொழுது அதன் வேகம் கண்டிப்பாய் குறையும். வேகம் குறையும் என்பது நாம் எடுத்துக் கொண்ட Hypothesis-க்கு முரனானது. இந்த முரண்பாடு எதனால் வந்தது என்று பார்த்தால், அது நாம் அந்த பொருளுக்கு எடை கொடுத்ததால். அதனால், ஒளியை விட இந்த உலகில் வேகமாக எந்த பொருளும் பயனிக்க முடியாது...


பிற்சேர்க்கை...

ஒளி என்பது Photon என்னும் துகள்களால் ஆனது. Photon - Unit of Light. எப்படி எடையின் அளவை கிராம் என்கிறோமோ, அதை போல ஒளியின் அளவு இந்த Photon. Photon-களின் எடை என்ன தெரியுமா? பூஜ்யம். அதற்கு எடை கிடையாது. எடை இல்லாத ஒரு பொருள் தான் வேகமாக செல்லும். உங்களை சுமந்து கொண்டு பேருந்து 100 கி.மீ. வரை செல்ல முடியும். ஆனால், ஒரு யானையை சுமந்து கொண்டால், அதன் எடை காரணமாக வேகம் குறையும். அதனால், எடை வேகத்தை கட்டுப்படுத்துகிறது. இதையே மாற்றி சொல்ல வேண்டுமென்றால், எடை குறைவான ஒரு பொருளால் மிக வேகமாக பயனிக்க முடியும். எடையே இல்லாததால் ஒளி இந்த உலகின் வேகமாக பயனிக்கக் கூடியதாக இருக்கிறது.

Another பிற்சேர்க்கை...

'It's the Magna Carta of physics!' Albert Einstein's original theory of relativity manuscript goes on display for the first time


The original manuscript of Albert Einstein's groundbreaking theory of relativity has gone on display in its entirety for the first time.

Einstein's 46-page handwritten explanation of his general theory of relativity is being shown at the Israel Academy of Sciences and Humanities in Jerusalem as part of its 50th anniversary celebration.

In the manuscript, which helps explain everything from black holes to the Big Bang and contains the famous equation of E=MC², Einstein demonstrates an expanding universe and shows how gravity can bend space and time.



Israeli students inspect Albert Einstein's General Theory of Relativity on display in its entirety for the first time

The academy's president Menahem Yaari said: 'We wanted something unique that would have global significance, and fortunately we could have access to a manuscript that has never been seen in its entirety before.'

First published in 1916, the general theory of relativity remains a pivotal breakthrough in modern physics.



This is the first time the original manuscript has gone on display in its entirety for the first time



The manuscript contains Einstein's explanations of his theory, including equations such as the E=MC²


anoch Gutfreund, former president of the Hebrew University and chair of its academic committee for the Albert Einstein Archives said: 'It changed our understanding of space, time, gravitation, and really the entire universe.
'I refer to it as the Magna Carta of physics. It's the most important manuscript in the entire archives.'

Despite its central place in the canon of Einstein's work, the original manuscript has never attracted as much attention as the man himself.



Einstein left his papers to the Hebrew University in his will

According to Mr Gutfreund, museums around the world have been content to display only a few pages of the manuscript at a time, as part of larger features on the personal and professional accomplishments of perhaps the modern era's most influential scientist.

That is partly because the contents of the general theory, especially in the original German, remain too obscure for non-scientists.

It took Einstein eight years after publishing his theory of special relativity to expand that into his theory of general relativity, in which he showed that gravity can affect space and time, a key to understanding basic forces of physics and natural phenomena, including the origin of the universe.

But exhibit organisers say the significance of Einstein's pages of careful writing and diagrams will not be lost on casual viewers.

They say the display will present the manuscript in the context of the theory's legacy - which includes everything from modern space exploration to commercial satellite and GPS technology.

Mr Gutfreund said: 'The greatest challenge at the frontier of physics is to make progress on these issues, the ideas that Einstein developed, discarded, and the errors he made.

'People will be able to appreciate this even if they're not able to understand the contents.'

Einstein was one of the founders of the Hebrew University in Jerusalem.

He contributed the manuscript to the university when it was founded in 1925, four years after he was awarded the Nobel Prize in physics.

His will bequeathed the rest of his papers to the university upon his death in 1955.

The university is lending the manuscript to the academy for the anniversary celebration.

The manuscript will be on display until March 25, overlapping with the 131st anniversary of Einstein's birth on March 14.


Source:The Daily Mail Reporter

6 comments:

  1. Excellent, simple and easy to understand!!!

    Reine

    ReplyDelete
  2. ஒளியின் வேகம் 1,86,000 கிலோ மீட்டர் என்று தான் கேள்விபட்டு அதையே எல்லோரிடமும்
    கப்ஸா கூ ட விட்டிருக்கிறேன். நீங்கள் சொல்லிதான் அது மைல் என்று தெரிந்தது
    நன்றி
    இனியன் பாலாஜி

    ReplyDelete
  3. நீங்கள் கூறியது உண்மைதான். ஆனால் ஒரு சந்தேகம். வேகம் ஏன் குறைகிறது? ஒன்று அதிகரிக்கும் உராய்வால். அல்லது அதிகரிக்கும் நிறையால். நிறை வேகத்தை ஏன் குறைக்கிறது? ஈர்ப்புவிசை அந்நிறையை ஈர்ப்பதால். நியூட்டன் விதியின்படி ஒரு பொருள், ஒரு விசையால் தாக்கப்படும் வரை ஒன்று, நிலையாக நின்றுகொண்டிருக்கும் அல்லது, ஒரே சீரான வேகத்தில் ஒரே திசையில் நகர்ந்துகொண்டிருக்கும்.

    அவ்வாறாயின் விண்வெளியில் ஈர்ப்புவிசையே இல்லாத இரு கேலக்ஸிகளுக்கிடையே உள்ள வெளியில் ஒரு நிறையுள்ள பொருள் ஒளி வேகத்தில் நகர முடியுமல்லவா? இது சார்புக்கோட்பாட்டுக்கு ஏற்புடையதல்லவே?

    ReplyDelete
  4. //அவ்வாறாயின் விண்வெளியில் ஈர்ப்புவிசையே இல்லாத இரு கேலக்ஸிகளுக்கிடையே உள்ள வெளியில் ஒரு நிறையுள்ள பொருள் ஒளி வேகத்தில் நகர முடியுமல்லவா?//

    அப்படி நகர அந்த பொருளை ஏதானும் ஒரு விசை உந்தித் தள்ளவேண்டுமே? Mass resists motion?

    ReplyDelete
  5. நண்பரே, ஐன்ஸ்டீனின் கோட்பாட்டின்படி திணிவுடைய பொருளொன்று ஒளிவேகத்தில் பயணித்தல் இயலாத காரியம் என்பதை வலியுறுத்த, அவர் கூறும் கருத்தானது, "பொருளொன்று நகர்வதற்கு தன் திணிவின் ஒரு பகுதியை ஆற்றலாக மாற்றி செலவழித்தல் அவசியம். அப்பொருள் வேகமாக நகர்வதற்கு தனது ஆற்றலை இன்னும் அதிகமாகச் செலவழிக்கவேண்டும். அப்பொருள் தனது வேகத்தை குறையாமல் பார்த்துக் கொள்வதற்கு தொடர்ச்சியாக தனது ஆற்றலை வெளியிட வேண்டும். எனவே திணிவுடைய ஒரு பொருள் ஒளிவேகத்தில் தொடர்ச்சியாக நகரவேண்டுமாயின் அப்பொருளிடம் எல்லையில்லா ஆற்றல் (Infinite Energy) இருத்தல் வேண்டும். செயன்முறை ரீதியாக அவ்வாறான ஆற்றலுள்ள பொருள் காணப்படும் சாத்தியங்கள் இல்லாத காரணத்தினால், நிறையுள்ள பொருட்களால் ஒளிவேகத்திலோ, அதனை மிஞ்சிய வேகத்திலோ பயணிக்க முடியாது" என்பதாகும். (இதை எங்கேயோ படித்ததாக ஞாபகம். சரியாக நினைவில் இல்லை. தவறேதும் இருந்தால் தயவுசெய்து திருத்தவும்)

    நியூட்டன் கோட்பாட்டின்படி, ஏற்கனவே ஒரு விசையால் உந்தப்பட்ட நகரும் பொருளானது, இன்னொரு விசை அதன்மீது பிரயோகிக்கப்படும்வரை சீரான வேகத்தில் ஒரே திசையில் திசை மாறாமல் நிற்காமல் பயணித்துக்கொண்டே இருக்குமல்லவா?

    அப்படியாயின் மிக அதிகளவு திணிவைக் கொண்ட ஒரு பொருள், தன் திணிவை சக்தியாக மாற்றி, வேறு விசைகள் இல்லாத இடமொன்றில் தனது வேகத்தை படிப்படியாக அதிகரித்தால், ஒரு கட்டத்தில் அப்பொருளினால் ஒளி வேகத்தில் செல்ல முடியுமல்லவா? (அப்படிப் பயணம் செய்யும்போது தனது வேகத்தினைக் குறையாமல் பார்த்துக் கொள்வதற்காகாக, சக்தியினைத் தொடர்ச்சியாக செலவழிக்கவேண்டிய கட்டாயம் அப்பொருளுக்கு இல்லாமல் போய்விடுமே?) (ஏனெனில் வேகத்தினைக் குறைக்கும் காரணியான இன்னொரு விசை இப்பொருள் பயணிக்கும் இடத்தில் காணப்படவில்லையல்லவா?)

    எனவே, விசையொன்றும் காணப்படாத ஓரிடத்தில் பெருந்திணிள்ள ஒரு பொருள் ஒளிவேகத்திலோ, ஒளியை மிஞ்சிய வேகத்திலோ பயணித்தல் சாத்தியமல்லவா? இது சார்புக்கோட்பாட்டின்பட்டினை மறுதலிக்கின்றதே?

    ReplyDelete
  6. http://www.tamilpaper.net/?p=4190

    ஐன்ஸ்டைன் தியரிக்கு ஆபத்து... :)

    ReplyDelete