Friday, August 26, 2011

The Sixth Sense - 'அழகான' பேய் படம்!!!

வழக்கம் போல படத்தை தரவிறக்கம் செய்து பார்க்க பயப்பட்டு இத்தனை நாட்கள் பார்க்காமல் விட்ட படம் இது. எனக்கு horror படங்கள் என்றால் பயங்கர அலர்ஜி. 'யார்?' படத்தை (டிவியில்) பார்த்தே பாதியிலேயே ஓடி வந்துவிட்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இன்னும் 'காஞ்சனா' வேற பாக்கி இருக்கு.


வீட்டில் யாரும் இல்லாத பொழுது சற்றே தைரியம் வரவழைத்துக் கொண்டு பார்த்த படம். படத்தின் முதல் frame லோ வோல்டேஜில் எறியும் குண்டு பல்பில் இருந்து தொடங்குகிறது.

கதை:
"எனக்கு பாராட்டு கிடைச்சிருக்கு"
மால்கம் க்ரோவ் (ப்ரூஸ் வில்லீஸ்) ஒரு குழைந்தைகளுக்கான மனநல நிபுணர். அவர் மனைவி அன்னா க்ரோவ்-விடம் தனக்கு கிடைத்த பாராட்டு பத்திரத்தை கொண்டு வந்து காண்பித்துக்கொண்டிருக்கிறார். அவர்கள் தங்கள் படுக்கையரையில் தாங்கள் தனியாக இல்லை என்பதை உணருகின்றனர்.
யாரோ இருக்காங்க...
அங்கே ஏற்கனவே குளியலறையில் ஒருவன் கையில் துப்பாக்கியுடன் ஒளிந்துகொண்டிருக்கிறான். அவன் தன்னுடைய பழைய நோயாளி வின்சென்ட் என்று மால்கமிற்கு தெரிகிறது. வின்சென்ட் மால்கம்மிடம் சிறுவயது முதல் hallucinations (சந்திரமுகி மாதிரி) என்னும் நோய்க்காக சிகிச்சை மேற்கொள்கிறான். "இனிமேலும் நான் பயப்பட விரும்பவில்லை" என்றும் மால்கமால் தான் தான் வாழ்க்கையில் தோல்வி அடைந்ததாகவும் கூறி மால்கமை வயிற்றில் சுட்டுவிட்டு தானும் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்கிறான். குண்டு மால்கம்மின் வாயிற்றை துளைத்து முதுகு பக்கம் வெளியேறிவிடுகிறது. மால்கம் அடி வயிற்றை பிடித்த படி படுக்கையில் சரிகிறார்.

சில மாதங்கள் கழித்து, மால்கம் தன்னுடைய அடுத்த க்ளையின்டான கோல் சீர் (Cole Sear) என்னும் சிறுவனுடன் நேரத்தை கழிக்கிறார். கோலிற்கும் வின்சென்ட்டை போன்றே பிரச்சினை. கோல் முதலில் மால்கம்மை ஏற்க மறுக்கிறான். காரணம் மால்கம்மால் தன்னை காப்பாற்ற முடியாது என்று நினைக்கிறான். வின்சென்ட்டை காப்பற்ற முடியாமல் போனதால் சற்றே நம்பிக்கை இழந்திருந்தாலும் அந்த சிறுவனை காப்பாற்ற முயல்கிறார் மால்கம்.

ஒருமுறை சமையலறையில் கோலின் அம்மா அவனுக்கு வேறு ஒரு 'டை'யை கொடுக்க அடுத்த அறைக்கு சென்று சில வினாடிகளில் திரும்ப வந்து பார்த்தால் ஒரு கணம் உறைந்து போகிறாள். அந்த சமையலறையில் இருக்கும் ஒவ்வொரு Kitchen Cabinet கதவுகளும் திறந்திருக்கிறது. அவனுக்கு எட்டாத உயரத்தில் இருக்கும் கதவுகளும்.
பள்ளியில் பெண்சிலை உருட்டி விளையாடும் Cole
வகுப்பில் ஆசிரியர் அந்த பள்ளி 100 வருடங்களுக்கு முன் என்னவாக இருந்தது என்று கேட்க "மனிதர்களை கொல்லும் கொலைக்களன்" என்கிறான் கோல். ஆசிரியரோ இந்த இடம் நீதியை நிலைநாட்டும் கட்டிடம் என்கிறார். கோல், "அவர்கள் தானே மனிதர்களை கொல்கிறார்கள்" என்கிறான். மேலும், அந்த ஆசிரியர் (மட்டுமல்ல, யார்) முறைத்து பார்க்கும் விதமும் கோலிற்கு பிடிக்கவில்லை. இருவருக்கும் சண்டை வருகிறது. எல்லோரும் அவனை freak என்று சொல்வதும் பிடிக்கவில்லை. கோல் அந்த ஆசிரியரை "Stuttering Stephen" (திக்குவாய் ஸ்டீபன்) என்று திரும்ப திரும்ப சொல்ல, கோபத்தில் பல ஆண்டுகளாக மறந்து போயிருந்த அந்த திக்குவாய் பிரச்சினை மறுபடியும் அவருக்கு வந்துவிடுகிறது.
பலூனை எடுக்க மாடிக்கு செல்லும் Cole

ஒரு முறை நண்பனின் பிறந்த நாள் விழாவிற்கு செல்ல அங்கே மாடியில் ஒரு டஞ்சன் (dungeon) அறையை பார்க்கிறான் கோல். அதன் அருகில் செல்லும் போது உள்ளிருந்து ஒரு மனிதன் முதலில் மெதுவாக கேட்கும் பின் கத்தும் குரல் கேட்கிறது. அந்த குரல் உள்ளே மூச்சு முட்டுவதாகவும், தன்னை வெளியே வர உதவுமாறும், தான் தன் எஜமானனின் குதிரையை திருடவில்லை என்று சொல்வதாகவும் கேட்கிறது. அவன் பயந்து நிற்க அவனுடைய நண்பர்கள் இருவர் இவனை அதன் உள்ளே அடைத்து வைக்கின்றனர். பயந்து போய் கத்தி கத்தி மூர்ச்சையாகிறான் கோல். அவன் அம்மா வந்து அவனை வெளியே எடுக்கிறாள்.

இதை போன்ற சம்பவங்களால் கோல் ஏதோ அமானுஷ்ய விஷயத்திற்கு உள்ளாகிறான் என்பது நமக்கு தெரியவருகிறது. மால்கம் கோலிடம் தனக்கும் தன் மனைவிக்கும் இடையில் இடைவெளி அதிகமாகிவிட்டதாகவும் அவள் இப்பொழுதெல்லாம் தன்னிடம் பேசுவதே இல்லை என்கிறான். அதே சமயம் அடிக்கடி வீட்டில் அவன் திருமணம் நடந்த வீடியோ கேசட் அடிக்கடி பார்க்கிறாள் அன்னா. அதனால் கோலை இன்னொருத்தரிடம் விட்டுவிட்டு தான் விலகிவிடுவதாகவும் கூற, கோல் அழுகிறான். "உன்னால் மட்டும் தான் என்னை காப்பாற்ற முடியும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது" என்கிறான். அப்புறம் சமாதானம் ஆகி அவனை காப்பாற்றும் வழியை கண்டுபிடிக்கும் மால்கம் அவனிடம் திரும்ப வர, கோல் மால்கம்மிடம் கோபமாக+நக்கலாக பேசும் இடம் அருமை.
 "I see dead people..."
"...And then one day this person Malcolm meets a wonderful boy who reminds him of that one.  Reminds him a lot of that one.  Malcolm  decides to try to help this new boy. He thinks maybe if he can help this boy, it would be like helping that one too..." - Malcolm to Cole.


(இந்த பகுதி தான் படத்தின் முக்கியமான கட்டம்). இப்போது மால்கம் மேல் இவனுக்கு கொஞ்சம் போல நம்பிக்கை வருகிறது. அதனால் அவனிடம் மட்டும் சத்தியம் வாங்கி கொண்டு உண்மையை சொல்கிறான். அவன் சொல்வது "I see dead people...Some of them scare me". "கனவிலா?" என்று கேட்க. இல்லை, நிஜத்தில் என்கிறான் கோல். "நிஜத்தில் என்றால் சவபெட்டி/சுடுகாட்டிலா?" என்கிறான். இல்லை, "எப்பொழுதும்/எங்கேயும்" என்கிறான், கண்களில் வழியும் கண்ணீருடன். கோலிற்கு வந்திருப்பது வின்சென்ட்டிற்கு வந்த அதே hallucinations பிரச்சினை தான் என்று நினைக்கிறார் மால்கம். அதாவது மாயை என்று.
"நான் தூங்கும் வரை இங்கேயே இருக்க முடியுமா?"
பின் தான் உணருகிறார் வின்சென்ட்டிற்கு வந்த hallucinations பிரச்சினை இல்லை. இவனுக்கு வந்திருப்பது தான் வின்சென்ட்டிற்கு வந்தது. அதாவது கோல் உண்மையிளேயே ஆவிகளை/பேய்களை பார்க்கிறான். மாயை இல்லை என்று உணருகிறார்.

அவன் பார்ப்பது சில பேய்களை. ஒன்று, கணவனால் கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கபட்டு கைகளில் வெட்டுக்காயங்களுடன் கத்தும் ஒரு பெண் பேய். இரண்டு, தன்னை விட சற்றே வயது அதிகம் உள்ள ஒரு சிறுவன் "வா. என் தந்தை எங்கே துப்பாக்கியை வைத்திருக்கிறார் என்று காட்டுகிறேன், வா" என்று சொல்லி திரும்ப, அவன் பின்னந்தலை துப்பாக்கி குண்டால் பிளக்கப்பட்டு ரத்தம் வழிந்துகொண்டிருக்கிறது. அவன் மெல்ல கோலின் அறைக்கு சென்று மறைகிறான். மூன்றாவது, மேலே சொல்லப்பட்ட டஞ்சனில் அடைக்கப்பட்ட மனிதனின் குரல். நான்காவது, கைரா (Kyra) என்னும் அவன் வயதை ஒத்த பெண். அவனுடைய டென்ட்டிற்குள் வந்து தன் மேலேயே வாந்தி எடுத்துக்கொண்டு "I'm feeling much better now" என்று சொல்லும் பேய். (பேய்களை பார்க்கும் போதெல்லாம் வீட்டில் அவனே செய்துகொண்ட ஒரு டென்ட்டில் ஓடிச் சென்று ஒளிந்து கொள்வான். அதற்குள் கடவுள் சிலைகள் சில இருக்கும். உள்ளே உட்கார்ந்து கொண்டு சாமி கும்பிடுவான்). அடுத்து, அவன் படிக்கும் பள்ளியில் தூக்கில் தொங்கவிடப்படும் கணவன், மனைவி மற்றும் அவர்களின் மகன்.
கைரா (Kyra) - கோல்-ன் டென்ட்டினுள்

அவன் சொல்வதில் இருந்து சில விஷயங்களை தெரிந்து கொள்கிறார் மால்கம். அவன் பார்ப்பது இறந்து போனவர்களை. அந்த பேய்களில் சிலவற்றிற்க்கு தாங்கள் இறந்து போனது தெரிவதில்லை. தங்களுக்கு என்ன பார்க்கவேண்டும் என்று நினைக்கிறதோ அதை மட்டுமே பார்க்கிறது. ஒவ்வொரு பேயும் தனித்தனியாக தான் அவனை பார்க்க வருகிறது. அவை எல்லாவற்றிற்கும் பொதுவான விஷயம் - எல்லாமே இவனிடம் ஏதோ கேட்கின்றன. ஒரு வேளை அவை அனைத்தும் கோலிடம் உதவி கேட்கின்றன என்று உணர்கிறார் மால்கம். அதனால் அவனை தைரியம் வரவழைத்துக் கொண்டு அவைகள் பேசுவதற்கு காது கொடுத்து கேட்க சொல்கிறார் மால்கம். இது ஒரு விதத்தில் இறந்து போனவர்களுக்கு உதவ அவனுக்கு கிடைத்திருக்கும் கிப்ஃட் என்கிறார் மால்கம்.

முதலில் பயந்தாலும் அவன் அந்த கைராவிடம் பேசுகிறான். அவள் உடல் நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டு இறந்தவள். அவளிடம் கோல் பேச கைராவில் வீட்டிற்கு அவளுடைய funeral reception-க்கு மால்கம்முடன் செல்கிறான் கோல். அங்கே கைரா கோலிடம் ஒரு பெட்டியை கொடுக்கிறாள். அந்த பெட்டியில் இருப்பது விடியோ கேஸட். அதை கோல் கைராவின் தந்தையிடம் கொடுக்க அவர் போட்டு பார்க்கிறார். அந்த கேஸட்டில் கைராவின் அம்மா தினமும் அவளுக்கு உணவுடன் சேர்த்து தரையை துடைக்கும் திரவத்தை கொடுப்பதை பார்க்கிறார்கள் (Slow poisoning). அதனால் அடுத்து பாதிப்பிற்கு ஆளாகியிருக்கும் கைராவின் தங்கை காப்பாற்றப்படுகிறாள். மால்கம், தன் மனைவிக்கும் தனக்கும் இடைவெளி அதிகமாகிவிட்டதாக சொல்ல, கோல் மால்கம்மிடம், (இப்போது) தன் அனுபவத்தால், இரவில் அவள் தூங்கும் போது அவன் மனைவியுடன் பேசுமாறு சொல்கிறான்.

இப்பொழுது பயம் சற்று விலகிய கோல் தன் அம்மாவிடம் இதை பற்றி சொல்ல முடிவெடுக்கிறான், தான் இறந்துபோனவர்களை பார்ப்பதாகவும் சொல்கிறான். அப்பொது தான் அங்கே ஒரு விபத்து நிகழ, பத்து கார்களுக்கு பின்னால் இருக்கும் காரில் இருக்கும் கோலும் அவன் அம்மாவும் இருக்கிறார்கள். யாருக்கும் அடிபட்டிருக்காது என்று அவன் அம்மா சொல்ல, "ஒரு பெண் இறந்துவிட்டாள்" என்று கோல் சொல்கிறான். எப்படி தெரியும் என்று அவள் கேட்க அந்த இறந்து போன பெண் தன் கார் கதவின் அருகில் இருப்பதாக சொல்கிறான். அவன் அம்மாவின் கண்களுக்கு தெரிவதில்லை. அவனுக்கு தெரிகிறது. அந்த இறந்து போன பெண் அங்கிருந்து நகர்கிறாள், தலையின் இரத்தம் வழிந்துகொண்டு.
சற்று முன் இறந்த பெண்
கோல் அவளை நம்பவைக்க அவன் அம்மாவின் சிறுவயதில் நடந்த சம்பவத்தை சொல்கிறான். தன் நடன அரங்கேற்றத்திற்கு சிறு சண்டை காரணமாக வராதது பற்றி அவன் அம்மாவிற்கு அவள் அம்மாவின் (பாட்டியின்) மேல் கோபம். ஆனால், அந்த நடன நிகழ்ச்சிக்கு பாட்டி வந்திருந்ததாகவும் அவள் பார்க்காதவாறு மறைந்து அமர்ந்திருந்ததாகவும் சொல்கிறாள். மேலும் அவள் பாட்டியை புதைக்கும் போது ஒரு கேள்வி கேட்டதாகவும் அந்த கேள்விக்கு பதில் "தினமும்" ("Everyday") என்று பாட்டி சொன்னதாக சொல்கிறான். அந்த கேள்வி என்ன என்று கோல் கேட்க அவன் அம்மா "நான் அவளை பெருமைப்படுத்தினேனா?" ("Do I make her proud?") என்கிறாள். சமையலறையில் அந்த கதவுகளை திறந்ததும் அந்த பாட்டி தான் என்று சொல்கிறான்.

படத்தில் இருக்கும் ஒரு சுவாரஸ்ய ட்விஸ்ட் அப்படியே தொடர கீழ்கண்ட பத்தியை தயவு செய்து படிக்க வேண்டாம். படம் பார்த்து தெரிந்து கொள்க (கண்டிப்பாக படிக்க வேண்டுமென்றால் உங்கள் கீ-போர்ட்டில் Ctrl+A அல்லது மௌஸில் select/block செய்து படிக்கவும்)...

வீட்டிற்கு வரும் மால்கம் வீட்டில் தன் திருமண வீடியோ கேசட் ஓடிக்கொண்டிருக்க மனைவி தூங்குவதை பார்க்கிறான். தூங்கும் போது அவள் கையில் இருக்கும் திருமண மோதிரம் கீழே விழுகிறது. அப்போது தான் கவணிக்கிறான் தன் கையிலும் மோதிரம் இல்லாதிருப்பதை. மெல்ல மெல்ல நினைத்து பார்க்கிறான். சட்டென்று தன் முதுகை தடவி பார்க்க அவன் முதுகில் இரத்த கறை. ஆம். மால்கம் வின்சென்ட்டால் சுடப்பட்டபோதே இறந்து விடுகிறான். தான் இப்பொழுது வெறும் ஆவி மட்டுமே என்று உணருகிறான்.

இப்பொழுது மேலே முதலில் இருந்து
சிகப்பு வண்ணத்தில் இருக்கும் வரிகளை மறுபடியும் ஒரு சேர படித்து பாருங்கள், புரியும். எங்கேயும் மால்கம் கோலை தவிற வேறு யாரிடமும் பேசுவதில்லை. யாரும் மால்கம்மை கவனிப்பதும் இல்லை.


புரிகிறதா? கோலிற்கு மால்கம் ஒரு ஆவி என்பது ஏற்கனவே தெரிகிறது. மற்ற பேய்களை போல மால்கம் கோரமாக இல்லாததால் கோலிற்கு அவ்வளவாக மால்கம் மேல் பயம் இல்லை (என்று நான் நினைக்கிறேன்). பின் பக்கம் மட்டுமே அவனுக்கு இரத்த கறை. அதை படம் நெடுக காட்டப்படுவதும் இல்லை. மேலும் கோலின் வீட்டில் அவன் அம்மாவிற்கு எதிரில் மால்கம் அமர்ந்திருப்பது, கைராவின் வீட்டிற்கு அவனுடன் மால்கம் செல்வது, அன்னா தனியாக தன் திருமண நாளை ரெஸ்டாரன்ட்டில் கொண்டாடுவது (அங்கே மால்கம் வந்து பேசினாலும் அவள் பதில் பேசமாட்டாள். நமக்கு ஏதோ மனக்கசப்பு என்றே தோன்றும். ஒரு கணம் அவள் அவனை பார்ப்பதாய் நமக்கு தோன்றும். ஆனால் பின்னனியில் ஒரு சிறுவன் கத்துவது போல இருக்க அதை பார்ப்பாள் அன்னா), "I see dead people" என்று சொல்லும்போதும் "எங்கேயும்/எப்போதும்" என்னும்போது அங்கே மால்கம் பேயாக இருப்பது என்று மீண்டும் ஒரு முறை கவனித்து பாருங்கள். இதை போன்று எங்கும் இருவர் மட்டும் தனியாகவே இருப்பர். 


"I see dead people" என்னும் போது காமரா மெள்ள கோல் முகத்தை நோக்கி நகரும். இந்த ஒரு காட்சி படத்தில் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் க்ளூ. ஆனால் ஒருத்தரும் கண்டுபிடிக்கவில்லையாம்...

அவன் பேயாக இருப்பதால் தான் அவனால் தன் வீட்டில் வைன்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அறைக்குள் செல்ல முடியவில்லை. இப்பொழுது அவனுக்கு புரிந்துவிடுகிறது. தானும் இறந்துவிட்ட ஒரு பேய் என்று. ஆனால், எதற்காக மால்கம் கோலிடம் செல்ல வேண்டும்? காரணம், அவனுக்கு வின்சென்ட்டிற்கு உதவி செய்யமுடியாததற்கும் அவனை புரிந்து கொள்ள முடியாதற்கும் பதில் தேடி. அதாவது இவனுக்கும் மற்ற பேய்களை போல கோலிடம் உதவி தேவை. எல்லா பேய்களும் அவனிடம் உதவிக்கு தானே வருகிறது. இப்பொழுது அவனுக்கு விடை கிடைத்து விட்டது. கோல் பரிந்துரைத்தபடி தூக்கத்தில் அவன் மனைவியிடம் பேச அவள் பதில் அளிக்கிறான். பின் இனிமேல் அவளை தொந்தரவு செய்ய போவதில்லை, அவள் வாழ்க்கையை அவள் வாழட்டும் (அன்னாவிற்கு இப்போது புது தோழமை இருக்கிறது) என்று அவளை விட்டு விலகுகிறான்.

படத்தினை பற்றி...

படம் செம ஹிட். இயக்கம் மனோஜ் நைட் ஷயாமளன், புதுச்சேரிக்காரர். அவர் இயக்கிய படங்களில் வெற்றி பெற்ற மற்ற படங்கள். Signs, The Village இவற்றை தவிற மற்றவை ஓடவில்லை. ஆனால், டெக்னிகல் விஷயங்களுக்காக பரவலான பாராட்டுக்களை பெற்றிருக்கிறது அவர் படங்கள். இந்த படம் 6 ஆஸ்கர் அவார்டுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. படத்தில் டாக்டர் ஹில் என்னும் சிறு கதாபாத்திரத்தில் வருகிறார். ஏகப்பட்ட அவார்டுகளை அள்ளிய படம்.
Cole Sear (Haley Joel Osment)
படத்தில் கோல் சீர்-ஆக நடித்திருக்கும் அந்த சிறுவன்...அபாரம். பெயர் Haley Joel Osment. இந்த படம் பார்த்து தான் ஸ்பீல்பெர்க் தன் படமான A.I. Artificial Intelligence படத்தில் நடிக்க வைத்தார். The Sixth Sense-க்கு முன் நான் பார்த்தது A.I. Artificial Intelligence படத்தை தான். அதிலேயே அந்த பையனை மிகவும் பிடித்து போனது. (இந்த படத்தையும் கண்டிப்பா மிஸ் பன்னாதீங்க. இப்படியெல்லாம் கூட படம் எடுக்க முடியுமா என்று அதிர வைத்திருக்கிறார் ஸ்பீல்பெர்க்). அட்டகாசமான நடிப்பு. பட இடங்களில் கண்ணீரை வரவழைத்துவிடுவான். அதுவும் சில இடங்களில் அவன் படும் பாதிப்பை நமக்கும் உணர செய்துவிடுவான். நமக்கே அந்த பையனை காப்பாற்ற வேண்டும் என்று தோன்றும். படம் பாருங்கள். உங்களுக்கு இந்த பையனை மிகவும் பிடித்து போய்விடும். இந்த பையன் தான் Forrest Gump படத்தில் ஜூனியர் Forrest Gump-ஆக நடித்தவன்.

இந்த பையனை மனோஜ் தேர்ந்தெடுத்ததே சுவாரஸ்யமானது. Audition நடந்த போது இவன் மட்டுமே கழுத்தில் 'டை' கட்டிக்கொண்டு வந்தான். அவனுடைய பகுதியை படித்துவிட்டானா என்று கேட்க அவன் சொன்ன பதில் "நேற்று இரவு மூன்று முறை படித்தேன்". மீண்டும் "மூன்று முறை உன் பகுதியை படித்தாயா?" என்று கேட்க அவன் அதற்கு சொன்ன பதில் "இல்லை. நான் மூன்று முறை (என் பகுதியை அல்ல) திரைக்கதையை படித்தேன்" என்று. இந்த காரணங்களுக்காக அவன் தேர்ந்தெடுக்கப்பட்டான்.

படம் பேய்களை பற்றின படம் என்றாலும் அவ்வளவாக கோரமாக இல்லாமல் இருப்பது (என்னை போன்றவர்களுக்கு) ஆறுதல். வரும் 5-6 பேய்களும் படத்தில் சில நிமிடங்களே வந்து போகின்றன. ஆனால் படம் நெடுக அந்த பயத்தினை காட்சியமைப்பின் மூலமும் இசையின் மூலமும் உணர வைக்கிறார் இயக்குநர்.

ப்ரூஸ் வில்லீஸ் இடது கை பழக்கம் உள்ளவர். ஆனால், இடது கையால் எழுதுவது போல் படம் எடுத்தால் பார்ப்பவர்களுக்கு கையில் மோதிரம் இல்லாதது தெரிந்து விடும் என்பதால் வலது கையால் எழுத பழகிக்கொண்டார். மேலும் படத்தின் ஒரு காட்சியில் புத்தகத்தில் ஒரு பகுதியை பேனாவால் வட்டமிடும் இடத்தை வலதுகையால் கடிகாரச்சுற்றில் வரைவார். வழக்கமாக வலது கை பழக்கம் உள்ளவர்கள் anti-clockwise-ல் தான் வட்டமிடுவர்.

இந்த படத்தினை 2000 ஆண்டு சுமார் 8 கோடி பேர் வாடகை எடுத்துள்ளனர். இது ஒரு சாதனை.

படத்தில் சிகப்பு நிறம் வெகு வெகு சொற்பமாக அளவிலேயே இடம் பெற்றிருக்கிறது. சர்ச் கதவின் நிறம், பலூனின் நிறம், கார்பெட்டின் நிறம், ஒளிந்து கொள்ளும் டென்ட்டின் நிறம், வைன் வைக்கப்பட்டிருக்கும் அறைக்கதவின் தாழ்பாளின் நிறம் என்று பல இடங்களில் சிகப்பு நிறம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இவையாவும் மெய்யுலகமும் 'பேய் உலகமும்' ஒன்றுக்கொன்று உரசிக் கொள்ளும் இடங்கள். எப்பொழுதெல்லாம் பேய்கள்/ஆவிகள் கோலை பார்க்கின்றனவோ அங்கெல்லாம் சிகப்பு நிறம் இருக்கும் (சிகப்பு கலர் ஸ்வெட்டர்/சிகப்பு நிற டென்ட்).
கதவின் தாழ்ப்பாள்...
"You sleep now, Anna.  Everything will be different in the morning."
ஒரு நல்ல 'அழகான' திரில்லர்/ஹாரர் படம் பார்ப்பவர்கள் மிஸ் பன்னக்கூடாத படம் இது. டைரக்டருக்கு ஒரு ஸ்பெஷல் 'Like'.

Saturday, May 14, 2011

தேர்தல் 2011 - சொல்வது என்ன?


யாருமே, ஏன் ஜெ.வே எதிர்பார்க்காத மாதிரி ஃபுல் மெஜாரிட்டியுடன் மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க இருக்கிறார் ஜெ. அவருக்கு வாழ்த்துக்களும், மக்களுக்கு வழக்கம் போல் அனுதாபங்களும். 5 வருடங்களுக்கு முன் நடந்த காட்சிகள் மறுபடியும் நடக்கிறது / நடக்க போகிறது, ஆனால் தலைகீழாக.

முடிவுகள் அறிவிக்க ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் கலைஞர் டிவியில் திமுக 20+ லீடிங், அதிமுக 2+ லீடிங், ஜெயா டிவியில் அதிமுக 20+ லீடிங், திமுக 2+ லீடிங் என்று காட்ட, கண்களை கசக்கிக் கொண்டு மீண்டும் ஒரு முறை திமுக-வா அதிமுக-வா என்று ஊர்ஜிதப்படுத்திக் கொண்டேன்.

ஒரு மணி நேரம் கழித்து சரிசமமாக வந்து கொண்டிருந்த லீடிங் லிஸ்ட் சன் டிவியில் சடாரென்று திமுக 41+ அதிமுக 101+ என்று எகிற, கலைஞர் டிவி பார்த்தால்...அட, அங்கேயும் அதே. அப்புறம் கொஞ்ச நேரத்தில் கலைஞர் டிவியில் 'மானாட மயிலாட' ரிப்பீட் டெலிகாஸ்ட் ஆனதில் இருந்து ஆரம்பிக்கிறது ஜெ-வின் வெற்றி. பத்தாததற்கு கலைஞரும், 'மக்கள் எனக்கு ஓய்வு தந்துள்ளனர்' அப்படீங்கிறார். ஞாநி சொன்னால் மட்டும் பூனூல் தெரியும். இனி அந்த நிகழ்ச்சிக்கு நடுவராக கலைஞர்ஜியை எதிர்பார்க்கலாம். 'கலைஞர்ஜிக்கு 10 மார்க் போடுது'-னு நம்ம நமீதா சொல்வதை ஆனந்தமாக கேட்கலாம். இந்த காட்சிகள் யாவும் ஐந்து வருடங்களுக்கு முன் ஜெயா டிவியில் நடந்தது இன்று கலைஞர்ஜிக்கு நடக்குது, அவ்வளவு தான்.

அதன் பின் நடந்ததெல்லாம் அறிவீர்கள்.

இனி நடக்கப்போவது? கலைஞர்ஜி அறிக்கை கொடுப்பார். அதில் வழக்கம் போல நாங்கள் 37.689546% ஓட்டுக்கள் வாங்கியிருக்கோம். போன தேர்தலை விட இது 0.000114464% மட்டுமே குறைவு. அதுக்கும் காரணம் இல்லாத 2ஜி பற்றி ஊடகங்கள் பரப்பிய பொய் பிரச்சாரமே காரணம். அப்புறம் தலித், தேர்தல் ஆணையம், ஆரிய சூழ்ச்சி, சூத்திரன் போன்ற லேபிள்கள் போட்ட அறிக்கை டெம்ப்ளேட் வரும். போன ஆட்சியில் நடந்த ஊழல்கள் தோண்டப்படும். குற்றப்பத்திரிக்கையில் சேர்க்காத பெயர்கள் சேர்க்கப்படும். 20-உடன் 60-ம் போகும்.


சரி! இந்த 'தேரு'தல் சொல்வது என்ன?

1) திமுக-வின் திடீர் கொபசெ 'வைகை புயல்' வடிவேலு (தலையெழுத்து) 'லூஸு', 'குடிகாரன்' போன்ற ஏக வசனங்களில் பேசினால் கூட்டம் மட்டுமே கூடும். ஓட்டுக்களாக விழாது. காமெடியன் காமெடியன் தான். சில கோடிகள்(!) கிடைக்குது என்பதற்காக, ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டார் வடிவேலு. அதுவும் இல்லாமல் தன் தனிப்பட்ட விரோதங்களை தீர்த்துக் கொள்ள தேர்தல்களத்தை பயன்படுத்தியதை என்னவென்று சொல்ல?

விஜயகாந்த் குடிக்கட்டும். அது அவருடைய தனிப்பட்ட விஷயம் என்பதை கூட உணரவில்லை வடிவேலு. கவர்மென்ட்டு கடை வெச்சு ஊத்தி கொடுத்தால் தப்பில்லை. அதை குடித்தால் மட்டும் தப்பு. இவர் பன்னியதை வெளியே சொன்னால் என்னவாகும்? இவர் குடிக்காதவர் இல்லை. மணமான இன்னொருவருடன் குடித்தனம் நடத்தாதவர் இல்லை,

பொது இடத்தில் வேட்பாளாரை அடித்ததாக சொன்னாலும், அதை எடிட் செய்து திரும்ப திரும்ப ஒளிபரப்பியது சன் டிவி & கோ-வுக்கே உரித்தான நாகரீகம் / பன்பு. நல்லது. அவர் கையால் அடி வாங்கியவர் மகாராஜா ஆகிட்டாராம். மாப்புக்கு ரிவர்ஸுல ஆப்பு.

பிரச்சாரம் என்பது தம்முடைய நிலையை விளக்க என்பது போய் அடுத்தவர் நிலையை இழுக்க என்று ஆகி கிட்டத்தட்ட 40 வருடங்கள் ஆகிறது. ஆரம்பித்து வைத்தவர்? வேறு யார்? கலைஞர்ஜி.

ஆனால், விஜயகாந்த் வடிவேலுவை கண்டுகொள்ளவில்லை. அவர் சொல்லும் காரணம், அவர் அரசியல் நடத்த வந்தது கலைஞர்ஜி + ஜெ-வை எதிர்த்து. டெம்பரரி கொபசெவை நம்பி இல்லை. 'ரிசல்ட் வந்ததும் பேசுகிறேன்'-னு சொன்ன வடிவேலு இப்போ விஜயகாந்தை பார்த்தால் என்ன பேசுவார்?

"நான் உங்கள பத்தி வெளையாட்டா பேசுனத எல்லாம் நீங்க உண்மைனு நம்பிட்டீங்க. பிலீவ் மீ. ஹைய்யோ...ஹைய்யோ..."


2) தி சாங் இஸ் டெடிகேட்டட் டு...வேற யாருக்கு? காங்கிரஸுக்கு தான்.

"நந்தவனத்தில் ஒரு ஆண்டி,
அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி,
கொண்டு வந்தானொரு தோண்டி,
அதை கூத்தாடி, கூத்தாடி போட்டுடைத்தாண்டி..."

2ஜி வைத்து திமுகவிடம் 63 ஸீட் பிடுங்கியாயிற்று. சரி! அதையாவது ஒழுங்காக 'இன்வெஸ்ட்' செஞ்சாங்களா? இல்லை. வாங்கியதும் செய்த முதல் வேலை, தொகுதிகளை உள் ஒதுக்கீடு செய்து கொண்டது. சரி! அதையாவது ஒழுங்காக செய்தார்களா? இல்லை. சண்டை நடுத்தெருவுக்கு வந்துவிட்டது.

எனக்கென்னவோ ராகுல் & கோ ஒரு பெரிய்ய ப்ளான் போல தெரியுது. 63 வாங்கியதால், ஜெயித்தாலும் திமுக கண்டிப்பாக மெஜாரிட்டி வாங்க முடியாது. அதனால் காங்கிரஸ் தயவு வேண்டும். 2ஜியை வைத்து ஆட்சியில் பங்கு பெறாலாம். தோற்றால், இருக்கும் கொஞ்ச ஸீட்டை வைத்து ஜெவிடம் ஒட்டிக்கொள்ளலாம். இதனால் திமுகவை பலவீனப்படுத்தி 2016க்குள் காங்கிரஸை 2வது பெரிய கட்சியாக்கிவிடலாம். சரிங்க பாஸு. அதுக்கு சம்மதமானு நீங்க உங்க கட்சிகாரங்ககிட்ட மொதல்ல கேட்க வேண்டாமா? போங்க பாஸு. உங்களுக்கு இன்னும் உங்க கட்சிகாரங்களை பத்தியே தெரியல.

இதுக்கெல்லாம் காரணம்? ரிஸல்ட் எப்படி போனாலும், அடுத்து வர்ற உள்ளாட்சி தேருதல்ல காங்கிரஸ் தனித்து தான் நிக்க போறாங்களாம். 'தேரு'தலுக்கு பொறவும் தனித்தே தான் நிக்க போறாங்கனு தெரியல அவங்களுக்கு.

3) போன எம்பி தேருதல்ல திமுக+காங் கூட்டனி சீட்டுக்களை அள்ளியது. ஈழ ஆர்வலர்களின் பிரசாரத்தை காட்டிலும் பணம் விளையாடியதும் முக்கிய காரணம் என்பதை மறக்க முடியாது. பிரச்சாரம் அவ்வளாவாக எடுபடாதது ஒரு விதத்தில் ஆச்சரியம் கலந்த சோகம். இனம் அழிந்து கொண்டிருந்த போதும் பணம் கிடைத்தால் போதும் என்று வாக்காளன் நினைத்ததை எப்படி ஜீரனிக்க முடியும்?

ஆனால், இந்த தேருதல்ல ஈழ ஆர்வலர்களின் பிரச்சாரம் காங்கிரஸை தோற்கடிக்க முக்கிய காரணமென்றாலும் முழுமையான காரணம் அது மட்டும் அல்ல. பின்ன, கிரெடிட் கொஞ்சம் கூட திமுக + காங்கிரஸுக்கு கிடையாத என்ன? எம்.பி, மத்திய அமைச்சர், எம்.எல்.ஏ-வா இருந்த ஒருத்தர் தன் மனைவியை நிற்க வைக்க தாக்கல் செய்த விண்ணப்பத்துல கையெழுத்து கூட போடாம, தேவையான டாக்குமென்ட் வைக்காமலா தாக்கல் செய்வார். அவ்வளவு வெகுளியா நம்ம தொங்கபாலு? அப்புறம் கடைசி நாள்ல back up-ஆ அவர அவரே முன்மொழிஞ்சு வழிமொழிஞ்சு வழி வழின்னு வழிஞ்சாரு. இப்படிப்பட்ட வில்லத்தனத்த கலைஞரே செஞ்சிருக்கமாட்டார். சோனியாவும் ஆடிப் போயிருப்பார். ஆகா, இவ்வளவு திறமையானவர் கட்சிக்கு ஆபத்துனு மாத்தினாலும் மாத்திடுவாங்க. ஏன்னா, கட்சி அப்படி. பின்ன சரத் பவார், மம்தா, மூப்பனார் என்று தலைவர்களை உருவாக்கிய கட்சி ஆயிற்றே...

4) ஈழ ஆர்வலர்கள் காங்கிரஸ் 'மட்டும்' தான் இன அழிப்பிற்கு காரணம் என்று கண்டுபிடித்தது ஆச்சரியம் தான். ஆனால், எதிரியை விட துரோகி ஆபத்தானவன்னு தெரியல. துரோகம் செஞ்ச திமுக-வை (வெளிப்படையாகவேனும்) எதிர்க்காத காரணம் என்ன? ஆளுங்கட்சி என்ற பயமா? இல்லை இனப்பாசமா? காரணம் முன்னதை காட்டிலும் பின்னது என்றால்...மன்னிக்க வேண்டும். இப்படிப்பட்டவருக்கு சாமரம் வீசியதால் தான் கொத்து கொத்தாக மக்கள் கொல்லப்பட ஒரு காரணமாக நாமும் பாவம் சுமந்து நிற்கிறோம். இன்னுமா? திருந்துங்க.

சரி! ஆளுங்கட்சி என்பது தான் காரணம் என்றால், ஒன்று, காங்கிரஸ் இந்த ஜனநாயக ரீதியான எதிர்ப்பை ஜனநாயக ரீதியாக எதிர்கொண்டு திருப்பி அடிக்காமல் (மயான) அமைதி காத்தனர். இல்லையென்றால், காங்கிரஸில் சூடு சொரனையுள்ளவர்கள் இல்லை என்று அர்த்தமாகிறது. இந்த இரண்டு காரணங்களில் எதுவானாலும் எனக்கு சந்தோஷம். பின்னது என்றால் (ஒரு முன்னாள் காங்கிரஸ் அனுதாபியாக), இன்னும் சந்தோஷம் :)

5) என்னதான் அன்பான முதல்வருக்கு ஆனந்தி கடிதம் எழுதினாலும், புரொபஷனல்களை வைத்து விளாம்பரங்கள் எடுத்தாலும், வெடிக்காத கலர் டிவியா தேர்ந்தெடுத்து மேடையில கொடுத்தாலும், 108க்கு விளம்பரங்கள சன் டிவி + தன் டிவிக்கு மட்டும் கொடுத்தாலும், ஆஸ்பத்திரி கட்டாம அந்த பணத்த வெச்சு வெறும் இன்சூரன்ஸ் மட்டும் கொடுத்தாலும், ஒரு மழை வரைக்கும் தாக்கு பிடிக்கிற மாதிரி 'மாதிரி ரோடு' போட்டாலும், 90% கமிஷன் அடித்து 10% வேலை செய்யும் திட்டங்கள் தீட்டினாலும் சுனாமி போல ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய 2ஜி என்னும் எறுமை மேல ஏறி மகள் மூலமா எமன் வருவான்னு கலைஞர்ஜிக்கு தெரியாம போயிடுச்சே.தகத்தகாய கதிரவனுக்கு கூட்டாத கட்சியை மகளுக்கு மட்டும் கூட்டி, கட்சி அவரை காப்பாற்றும், நான் காட்டிக் கொடுக்க மாட்டேன் (அதனால மத்தவங்களும் காட்டி கொடுக்க கூடாது) போன்ற அதிரடி லோ பட்ஜெட் படங்கள ஓட்டினாலும், நல்ல வாயை நாற வாயன் கெடுத்த மாதிரி ஆட்சியும் போய் இப்போ மகளையும் திகார்ல களி திங்க வெச்சுட்டீங்களே கலைஞர்ஜி. மகாபாரதத்தை மறுபடியும் ரீமேக் பன்னினால் கட்டாயம் உங்களுக்கு திருதராஷ்டிரன் கதாபாத்திரம் ஒதுக்க இப்பவே துண்டு போடுங்க. (ஹூம்...துண்டு போடுவது பத்தி சூரியனுகே டார்ச்சா?)

கடைசியில சூத்திரன், ஆரிய கூட்டம் அப்படீன்னு பிட்ட போட்டாலும், (வீர)மணியோசை கொடுத்து அறிக்கை விட்டாலும், வாலி + வைரமுத்து + சுபவீயை விட்டு "நற்றமிழில் என்னை பாடுக" என்று வாழ்த்த வைத்தாலும்,  இவற்றை காது கொடுத்து கூட கேக்கலியே இந்த 'சோற்றால் அடித்த பிண்டங்கள்'.

6) வெறும் ஐந்தே வருடங்களில் என்னன்ன திட்டங்கள், சேவைகள், உழைப்பு...அடடா!

ஈழப்பிரச்சினைக்கு கடிதங்கள் (மட்டும்) எழுதுவது, அதற்காக தபால் மற்றும் தந்தி துறையை வாங்கினால் ஸ்லோவா போகுமின்னு, ஈமெயில் அடிக்க ஐ,டி, துறையை வாங்கிய சாமர்த்தியம்...வல்லவராயனை புறமுதுகிட்டு ஓடவைத்த புலிகேசியையும் மிஞ்சிவிட்ட சானக்கியத்தனம்.

நாங்களும் வெச்சிருக்கோம்ல...சுபவீ-னு ஒரு ஆளை எங்க பக்கம்...

தமிழன் என்றால் திருடன் (அல்லது இந்து) என்ற வாதத்தை 2ஜி மூலமாக ஹிந்திவாலாக்களுக்கு அழுத்தந்திருத்தமாக பதிய வைத்து மூக்கின் மேல் விரலை வைக்க வைத்த சாதுர்யம் தான் என்ன?

ஒரு ரூபாய்க்கு அரிசி போட்டு 100 ரூபாய்க்கு மளிகை பொருட்கள் வாங்க வைத்து கவர்மென்டுக்கு லாபம் கொழிக்க வைக்கும் பிஸினஸ் டேக்டிஸ் என்ன?

அதுவும் ஒரு ரூபாய் அரிசி என்ன நஷ்டத்திலா கொடுக்க முடியும்? தமிழ் நாட்டுக்கே ஊத்தி கொடுத்து அந்த லாபத்துல தானே அரிசியே போடமுடிகிறது. என்னா சாமர்த்தியம்.

இயல் தமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ். இவை மூன்றும் மட்டுமா? நான்காவதாக கொடுத்தீங்களே...'மச்சான்' தமிழ். ஆக்க...கக்க...கா.

'ராஜராஜன் - 1000' என்று நெல்விதைக்கு பேர் வைத்து விவசாயிகளின் வயிற்றில் பாலை(வனம்) வார்த்த வள்ளல்தனம் (வில்லத்தனம் அல்ல) தான் என்ன? விவசாயத்துக்கு இலவச மின்சாரமா? தமிழ்ல கலைஞர்ஜிக்கு பிடிக்காத ஒரே வார்த்தை...(சும்மா தரும்) இலவசம்.

தசாவதார கமலுக்கும் 'சிவாஜி' ரஜினிக்கும் சிறந்த நடிகர்(!) விருதை ஒரே மேடையில் அதுவும் தமிழக அரசு செலவில் கொடுத்து, அதையும் கலைஞர் டிவியில் மட்டுமே ஒளிபரப்பிக் கொண்ட ராஜதந்திரத்தை ஈழ பிரச்சினையில் தான் காட்டிவிட முடியுமா என்ன?

எந்த எழுத்தாளரும் வாங்காத லட்சங்களை கதை-வசனம் எழுதியதற்காக வாங்கி எழுத்தாளர்கள் வயிற்றில் பொறாமை தீயை ஊற்றி, அவர்களை 'ஊக்கு'வித்து இலக்கியத்திற்கு ஆற்றிய பனிதான் என்ன?

இதையெல்லாம் விட, நாட்டுக்கு 1000 ரூபாய் போனாலும் பரவாயில்லை எனக்கு 1 ரூபாய் வந்தால் போதும் என்ற அரசியல் நிலைபாடு யாராலும் எடுக்க முடியாதது. அதும் அந்த 1,76,000 கோடி ரூபாய் நோட்டு...சான்ஸே இல்ல.

7) சோறு தன்னி கூட வேணாம். பாராட்டு விழா போதும். 'உன் கவிதையை படிக்கும் போது அது செக்‌ஷுவல் ஃபீலிங் உணர்ந்த மாதிரி"-னு வாலி பால் ஆடினாலும், "பெண் சிங்கம் எழுதும் Pen சிங்கம் நீ; பா.விஜய்க்கே பஞ்ச் எழுதும் இளைஞன் நீ" அப்படீன்னு வைரமுத்து சொன்னாலும், "கலைஞர்ஜி பைபாஸ்(ரூட்)ல போகலை"-னு ரஜினி போட்டுகொடுத்த போதும், வீரமணிக்கு கலைஞர் விருதும், கலைஞருக்கு பெரியார் விருதும் மாத்தி மாத்தி கொடுத்துகிட்டு 'நமக்கு நாமே' திட்டம் போல பாராட்டிக் கொண்டபோதும்...கடைசியில் 'விருதுக்கே விருது' என்ற நிலைக்கு நாக்கு தள்ளிய போது...அடடா!!!

8) ஆளுங்கட்சியா இருந்து தேருதல் சந்திக்கும் போதும் கலைஞர்ஜி மட்டும் ஜெயித்திடுவார். மீது 233-ம் ஜெ-வுக்கு. அதுல ஒரு பெருமை, "நான் மட்டும் தோற்கலை பாத்தியா? உன்னால முடியுமா?" குழந்தை மனசு கலைஞர்ஜிக்கு.

ஒவ்வொரு முறை ஆட்சிக்கு வந்ததும் 5 வருடம் அயராது பாடுபட்டு அடுத்த முறை ஜெ-வை ஆட்சியில் அமர வைப்பேன் என்ற சபதம் எடுத்திருக்கிறார் கலைஞர்ஜி. ஆனா, அந்த நன்றி கொஞ்சமாவது இருக்கிறதா அம்மையாருக்கு? முடிஞ்ச வரை டஃப் கொடுக்கிறார் ஜெ.

9) இந்த மக்களை 40 வருஷமா மேய்ச்சுகிட்டு தான இருக்கோம். 100, 200 தூக்கியெறிஞ்சா ஓட்டு போட்டுடுவாங்கனு நெனச்சது கரெக்டு தான். ஆனா, 1,76,000 அடிச்சுட்டு அதுல 1 ரூபா மட்டும் கொடுத்தா நாங்க ஓட்டு போட்டுடுவோமா என்ன? வெலவாசி ஏறிப்போச்சு பாஸு.

10) ஒரு விஷயத்துல பாராட்டலாம். இளைஞர்கள் என்ன தகிடுதத்தம் செய்தாகிலும் ஆட்சிக்கு வரலாம், தப்பில்லை என்ற கருத்தை மையமாக கொண்ட 'கோ' படத்தை தைரியமாக வெளியிட்ட ஆளுங்கட்சிக்கு சபாஷ். ஒரு வேளை புட்டுக்கும்னு படத்தை ரஷ் கூட பார்க்காமல் அவசர அவசரமாக வாங்கி வெளியிட்டுடாங்களா?

விதவிதமாக, பெண் சிங்கம், இளைஞன் போன்ற வெற்றிச் சித்திரங்கள் உட்பட, திரைக்காவியங்களை வழங்கிய ஆட்சி இல்லாமல் போனது தமிழர்களுக்கு சொல்லொனா துயரத்தையே தரும் வேதனையான விஷயம் தான். (என்னைய மாதிரியே அழுவுரியே. அதான் ஒரே ரத்தம்).


இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் இந்த தேர்தலை பத்தி.

சரி! ஜெ மட்டும் ஒழுங்கா என்று புத்திசாலித்தனமாக மடக்குபவர்களுக்கு: இன்னும் 5 வருஷம் கழித்து இதே பதிவு மீள் பதிவு செய்யப்படும். ஒரு வித்தியாசம், கலைஞர்ஜி என்ற வார்த்தைக்கு பதில் ஜெ. சிம்பிள்.

Sunday, April 03, 2011

இலங்கையை பழிவாங்கிய இந்தியா...

உலகக்கோப்பையை வென்றது இந்தியா. இந்தியா வென்றதை விட, இலங்கையை இந்தியா தோற்கடித்தது பல சிறப்புகளை உடையது.
3 விக்கெட் விழுந்ததும் தோனி உள்ளே வந்தது அனைவருக்கும் ஆச்சரியம் அளித்திருக்கும். எல்லாம் நல்லபடியாக முடிந்தது தான் தோனியின் வெற்றி. இல்லாவிட்டால், தோனி சொல்லியது போன்று "ஏன் ஸ்ரீசாந்த்? ஏன் அஸ்வின் இல்லை? ஏன் யுவராஜ் வரவில்லை?" போன்ற கேள்விகள் நிச்சயம் நிகழ்ந்திருக்கும்.

நான் முதல் 25 ஓவர்கள் பார்க்கவில்லை. காரணம், டென்ஷன் அதிகம். இலங்கை 274 அடித்ததும் எனக்கு நம்பிக்கை போய்விட்டது. ஒருவேளை இந்தியா உலக சாம்பியன் ஆகவேண்டுமென்றால் இத்தகைய இன்னிங்க்ஸ் தேவை.

நான் பார்க்காததற்கு இன்னொரு காரணம்...டாஸ்.

தோனி டாஸ் போட, சங்ககாரா "டெயில்" என்கிறார். விழுந்தது "ஹெட்" என்கிறார் ஆட்ட ரெஃப்பரி. தோனி சங்ககாராவுக்கு கை கொடுக்கிறார். ரவி சாஸ்திரியின் மைக் தோனியிடம் செல்ல விழைகிறது. ஆனால், குழப்பம். இருவரும் தான் தான் டாஸ் வென்றோம் என்கின்றனர். டாஸ் இந்த ஆட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது, காரணம், உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் எவரும் இரண்டாவதாக பேட்டிங் செய்ய விருபப்படமாட்டார்கள். நடந்த 9 இறுதி ஆட்டத்தில், 2 முறை தான் இரண்டாவதாக பேட்டிங் செய்தவர்கள் வென்றிருக்கிறார்கள். (இரண்டும் ஆஸ்திரேலியா என்று நினைக்கிறேன்). காரணம், ப்ரஷ்ஷர்...

சரி! தோனி டாஸ் போட்டார். சங்ககாரா கேட்டார். ஒருவேளை ரெஃப்பரிக்கு காது கேட்கவிலையென்றால், சங்ககாராவுக்கு தான் தெரிந்திருக்கும் தான் என்ன கேட்டோம் என்று. எதற்காக பொய் சொல்லவேண்டும் சங்கா? இதுவரை அவர் மேல் இருந்த மரியாதை எங்கு போனதோ தெரியவில்லை?
மற்றும், தோனி சண்டை போட்டிருக்க வேண்டும். ரஞ்சி கோப்பையில் இதே போன்ற பிரச்சினையின் பாதி நாள் ஆட்டம் தள்ளிப்போனது. தோனி இடத்தில் சங்ககாரா இருந்திருந்தால் சண்டை போட்டிருப்பார். தோனி சண்டை போடாதது வருத்தம் தந்தது.

ஆனால், விராத் கோலியின் விக்கெட் போனதும் தோனி வந்தது ஒரு விகையில் மிகப்பெரிய்ய ரிஸ்க். தோனி சரியான ஃபார்மில் இல்லை. ஆனால், இதை போன்ற சந்தர்ப்பங்கள் தோனிக்கு விருப்பம் தரக்கூடியவை. வேகமாக ரண்களை ஓடி ஓடி குவிக்க வேண்டும், பவுன்டரிகள் கிடைக்காது. ஓடி ஓடி உழைக்க வேண்டும். இது தோனி போன்ற கூல் பெர்ஸனாலிடிகளுக்கு அல்வா போன்றது. இது...ஒரு கேப்டனுக்கு அழகு சேர்க்கக்கூடியது.

ஒரு வேளை இந்தியா தோத்திருந்தால் இந்த டாஸ் பிரச்சினை பெரிய்ய பிரச்சினையாகியிருக்கும். அந்த வகையில் மேட்ச் ரெஃப்பரி கொஞ்சம் நிம்மதி அடைந்திருப்பார்.

இதையெல்லாம் விட, இந்த கோப்பை சச்சினுக்கு முக்கியமானது. காரணம், என்னவெல்லாம் சாதனை இருக்கிறதோ, அத்தனை சாதனைகளையும் செய்தாகியிருந்தாலும், சச்சின் இருந்த டீம் உலகக்கோப்பையை வென்றதில்லை. ("Sachin Resume completed...") ஒவ்வொரு உலகக்கோப்பையிலும் சச்சினின் ஃபெர்பார்மன்ஸ் சூப்பராக இருந்தாலும், மற்ற வீரர்கள் சோபிக்காமல் போனதால் சச்சினுக்கு ஏமாற்றம். கடைசியில் சச்சின் விளையாட ஆரம்பித்த பிறகு பிறந்தவர்கள் (கண்டிப்பாக சச்சினின் ஆட்டத்தை பார்த்து வளார்ந்தவர்கள் + இம்பிரஸ் ஆனவர்கள்) எல்லோரும் சேர்ந்து சச்சினுக்கு கோப்பையை வாங்கி கொடுத்தது அழகு...மறக்காதீர்கள், இந்த உலகக்கோப்பையிசும் சச்சினின் ஃபெர்பார்மன்ஸ் சூப்பர்...

அப்புறம், இந்தியாவில் ஃபீல்டிங். ஃபீல்டிங் இப்படி இருந்தே 274. இல்லையென்றால்...? 300+

இதையெல்லாம் விட இந்த கோப்பை ஏன் சிறந்தது என்றால்...இதை போன்ற ஆட்டத்தில், முக்கியமாக, உலகக்கோப்பை இறுதியாட்டத்தில் இரண்டவதாக பேட் செய்து வெற்றி பெருவது என்பது மிக மிக கடினம். ஆனானப்பட்ட மேற்கு இந்தியத்தீவே 1983-ல் 183 ரண்களை விரட்டாமல் தோற்றனர். 275 என்பது, கிட்டத்தட்ட பிரம்மாண்டமானது. 31/2 என்று கேள்விப்பட்டபோது ஒரு விருந்தில் இருந்தேன். மனது ஓடவில்லை. மனதை ஆக்கிரமித்தது தோனி போட்ட இரண்டாவது டாஸ்.

வீட்டிற்கு வந்ததும் 123/3 என்றதும் டிவி பார்க்க மனசு வரவில்லை. மற்ற சேனல்களில் எந்த சேனல் ஸ்கோரை போடுகிறதோ அந்த சேனல்களை பார்த்து கொண்டிருந்தேன். பின் ஒருவாரு மேட்ச் பார்க்க ஆயத்தமானேன். ஒவ்வொரு பந்தும் என் BP-யை எகிற வைத்தது.

சென்சுரியை நெருங்கும் கம்பீரை ஒவ்வொரு முறையும் தோனி சென்று ஆசுவாசப்படுத்தி, அவசரப்படாமல் ஆடுமாறு சொல்ல கம்பீரும் கொஞ்சம் நிதானமாக ஆடுகிறார். ஸ்கோர் 99ஆக இருந்தபோது கம்பீர் 50 ரண்கள். அவர் அவுட் ஆகும் போது ஸ்கோர் 223. கிட்டத்தட்ட 124 ரண்கள் சேர்த்த போது அதில் கம்பீரின் பங்கு 47. எம்புட்டு பொறுமை. நடுவில் வந்த பல புல்டாஸ்களில் கூட சிங்கிள் தான் எடுத்தார்கள். இருந்தாலும் கடைசியில் கம்பீர் அவசரப்பட்டு அவுட் ஆக, தொடர்ச்சியாக அதற்கு பின் ஒரு எல்.பி.டபிள்யூ அப்பீல், தோனி மயிரிழையில் ரன் அவுட்டில் இருந்து 3வது அம்பையரால் தப்பிக்கிறார் என்று ஆட்டத்தின் டென்ஷன் கூடியது.

பவர்ப்ளே வந்தது ஆபத்பாந்தவனாக. இருந்தாலும் பவர்ப்ளேயின் முதல் ஓவரை 'Chucking' மலிங்கா வீச, முதல் 4 பந்துகளில் ரண் இல்லை. பின் அந்த ஓவரில் 3 ரண்கள். அடுத்த ஓவரில் கொஞ்சம் அடித்து, பின் மறுபடியும் மலிங்கா. ஒரு வழியாக பவுன்டரிகளா கண்டுபிடித்து, கடைசியில் வின்னிங் ஷாட்டாகா சிக்ஸர் அடித்தார் தோனி...Stand by-யில் போன உயிருக்கு உயிர் வந்தது.''

கடைசியாக, பாகிஸ்தானை தோற்கடித்ததை விட, இலங்கையை தோற்கடித்ததும் தான் எனக்கு சந்தோஷம் அதிகம். அங்கே உட்கார்ந்திருந்த ராஜ'ஃபக்'ஷேவை 'Fcuk'கியது மனதிற்கு கூடிதல் சந்தோஷம். கூப்பிட்டு வைத்து **** அனுப்பியதற்கு நிகர் வேறில்லை. அது ஒன்றே போதும் சந்தோஷத்திற்கு.
எந்த உலக்கோப்பை ஃபைனலும் இந்த மேட்ச் மாதிரி இருந்ததில்லை.

கிரிக்கெட் ஆகட்டும், கால்பந்து ஆகட்டும். பல முறை ஒரு பக்கசார்பு கொண்டதாகவே இருந்திருக்கிறது. ஆனால், இந்த மேட்ச், ஆரம்பத்தின் இந்தியாவிற்கு சாதகமாகவும் (இலங்கை 10 ஓவரில் 31 ரண்கள்/1, 45 ஒவரில் 211/5). பின் 46 - 50 ஓவர்களில் இலங்கை பக்கமும், இந்திய இன்னிங்க்ஸ்ஸில் 31/2 என்று இருந்தது, கம்பீர் + விராத் கோலி பார்ட்னர்ஷிப்பில் நிற்க ஆரம்பித்து, பின் தோனி கம்பீருடன் சேர்ந்ததும் நிலைத்தது. பின் கம்பீர் அவுட் ஆக, சில ட்ராமாக்கள்...பின் சிக்ஸர் அடித்து வென்றது, ஐஸ்கிரீம் மேல் செர்ரி பழம் வைத்தது போன்றது.


அப்புறம், வெகு சுலபமாக சிக்ஸர அடிக்க முடியுமா? தோனி அடித்த முதல் சிக்ஸை கொஞ்சம் ஸ்லோ மோஷனில் பார்க்கவும். 

இன்னொன்றை மறக்காதீர்கள். இந்தியா ஃபைனல் வந்தது சாதாரணமாக இல்லை. இங்கிலாந்துடன் மோசமான பௌலிங்கால் டை ஆகி, தென் ஆப்ரிக்காவிடம் ஆப்பு வாங்கி, கால் இறுதியில் ஆஸ்திரேலியாவை (டாஸ் தோற்றும்) அபாரமாக தோற்கடித்து, அரை இறுதியில் பாகிஸ்தானை வென்று, இறுதி ஆட்டத்தில் (டாஸ் பிரச்சினையில் தோற்று) ஆட்டத்தை வென்றிருக்கிறோம்.

மாறாக, இலங்கை வென்றது சின்ன சின்ன டீம்களை. மற்றும் கால் இறுதியில் ஸ்பின் ஆகும் பிட்சில் எப்படி பௌலிங் போடுவது என்றே தெரியாத இங்கிலாந்தை மற்றும் அரை இறுதியில் நியூஸிலாந்தை வென்று ஃபைனல் வந்தது இலங்கை.

ஆனால், இந்தியாவின் தலைவிதி? இலங்கையுடனான இதை போன்ற ஃபைனல்களில் 17 முறையில் வெறும் 7 முறை மட்டுமே இந்தியா வென்றுள்ளது. மற்றும் 1996-ல் கேவலமாக தோற்று, ரசிகர்களின் கலாட்டாவினால் ஆட்டம் நிறுத்தப்பட்டு, கல்கத்தாவில் இருந்து வெளியேறினோம். அதற்கு சரியான பழிவாங்கல் இது. அது மட்டும் அல்லாமல், இலங்கை என்றாலே வெறும் வெறுப்பு மட்டுமே மிஞ்சுகிறது. இலங்கை என்பதை விட சிங்களர்கள் எனலாம். என்னை பொருத்த வரை 'சிங்கள நாய்கள்'.

மேட்ச் முடிந்ததும் சென்னை ஒரு ரவுன்ட் அடிக்க கிளம்பினேன். 3 மணிநேரம் சுற்றிவிட்டு வீட்டிற்கு வந்தால், எங்கும் கோப்பை வாங்கிய க்ளிப்புகளை காட்டவே மாட்டேன் என்கிறார்கள். (காரணம், ஐசிசியின் கட்டுப்பாடுகள்?)

இந்தியாவின் தவறுகள்:

* ஸ்ரீசாந்தை சேர்த்தது. அஸ்வின் என்னும் கனியிருக்க காய் எதர்கு? இந்தியாவின் முதல் ஆட்டமான பங்களாதேதுடன் ஆடி சொதப்பிய ஸ்ரீசாந்த் கடைசியில் முக்கியமான இறுதி ஆட்டத்தில் சேர்க்கப்பட்டது ஏன்? காரணம், பிட்ச் சீமர்களுக்கு ஸ்விங் ஆகும் என்ற நினைப்பால். அஸ்வின் இந்த பிட்சுக்கு ஒத்து வரலைன்னாலும், ஸ்ரீசாந்தைவிட தேவலை. அஸ்வினாவது ஓவருக்கு 5 ரண்களுக்கு மேல் கொடுக்கமாட்டான். சொத்தை பந்து போட்டு அதை பேட்ஸ்மென் பவுன்டரிக்கு அடித்தாலும், ஏதோ மெர்வின் டில்லான் போல முறைத்து சண்டை போடத்தான் ஸ்ரீசாந்த் லாயக்கு. மொத்தத்தில் வேஸ்ட். ஏதோ ப்ரவீன் குமாருக்கு அடிபட்டதால் உள்ளே வந்த ஸ்ரீசாந்த், கொடுத்த வாய்ப்பை பயன்படுத்தவேயில்லை.

* டாஸுக்கு சண்டை போடாதது.

* வழக்கமாக கொஞ்சம் புத்திசாலித்தனத்துடன் விக்கெட் கீப்பிங் பன்னும் தோனி, சமரவீராவின் கேட்ச் என நினைத்து விக்கெட் முன்னால் வந்து பந்தை பிடித்து அப்பீல் செய்து அதுவும் இல்லாமல் போனது. பந்தை விட்டிருந்தால் அது ஸ்டம்ப் மேலேயாவது விழுந்திருக்கும்.

* பேட்டிங் பவர்ப்ளே நம்மால் கட்டுபடுத்த முடியாது என்றாலும், இந்த அளவுக்கு வாரி வழங்கியிருப்பது கவலை தரும் விஷயம்.

இலங்கையின் தவறுகள்:

* இலங்கை செய்த தவறு பிட்னஸ் இல்லாத முரளியை சேர்த்தது. அதுவும் அஜந்தா மென்டிஸை கழற்றி விட்டு. காரணம்? இது முரளிக்கு கடைசி மேட்ச். உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுகள் மெக்ராத்துடையது. முரளி 68, மெக்ராத் 71. அந்த சாதனையை முறியடிக்கவும், முரளியின் சாதனைகளை அங்கீகரிக்கவும் இந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டதாக கருதுகிறேன். அப்படி இருக்கும் பட்சத்தில் இது தவறு. முரளியால் பந்தை ட்ரோகூட செய்யமுடியவில்லை. அதனால் பந்தை அவ்வளவாக சுழல வைக்கமுடியவில்லை.

* மேத்யூஸ் இல்லாமல் போனதாலும் முரளியை சேர்த்ததாலும் கிட்டத்தட்ட 4 மாற்றங்களை செய்ய வேண்டியதாக போய்விட்டது சங்ககாராவால். ஸ்ரீசாந்தை போலவே இலங்கையின் முதல் போட்டியில் மட்டும் விளையாடிய ரந்தீவ்(?) உள்ளேஎ கொண்டுவரப்பட்டார்.

* 30 ரண்கள் இருக்கும் போது கம்பீரின் கேட்சை குலசேகரா விட்டது, சங்ககாரா கம்பீரின் ஒரு ரன் அவுட்டை மிஸ் பன்னியது மற்றும் சில பீல்டிங் + ஓவர் த்ரோக்கள் இலங்கைக்கு ஆப்பு வைத்தது.

இருந்தாலும், இந்த வெற்றியை பதிவு செய்ய, சில படங்கள் கீழே...

Tuesday, February 22, 2011

The Prestige (2006) - நோலனின் ஆடுகளம்

நல்ல படம் பார்க்க விரும்புகிறவர்கள் இந்த படத்தை மிஸ் பன்னவேண்டாம்.

நமக்கு வாழ்க்கையில் ஏமாற்றம் தாங்க முடியாதது தான். ஆனால், நம்மை ஏமாற்றுகிறார்கள் என்று தெரிந்தே நம்மை ஏமாற்ற அனுமதித்து அதை ரசிக்கும் நிலை ஒன்று உண்டென்றால் அது மேஜிக் நிபுனரிடம் மட்டும் தான். காரணம் அந்த ஏமாற்றம் நம்மை ஆச்சரியப்படுத்தும். மேஜிக் கலையை விரும்பாதவர் என்று எவரும் இருக்க மாட்டார். அந்த கலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் The Prestige. Christopher Nolan என்னும் அற்புத இயக்குநரின் அற்புத படைப்பு.

கதையையும் திரைக்கதையையும் படித்தால் ஆச்சரியப்படுவீர்கள்.

பெட்டிக்கடை

ஒரு படம் எடுத்தால் அதன் perfection-க்கு மெனக்கெடுதல் என்பது சாதாரண விஷயமாக தெரியவில்லை நோலனுக்கு. Insomnia-வில் தூக்கமின்மையால் அவதிப்படும் அல் பெசினோ, அதை எப்படி உணர்கிறார் என்பதை பார்வையாளனுக்கும் காட்ட வேண்டி அதற்காக அவர் வைத்த சில காட்சியமைப்புகள் பிரமாதம். தூக்கம் கெடும் போது ஒரு வித எரிச்சல் மனநிலையில் இருப்போம். அப்போது சிறு ஒளிக்கீற்று கூட நம்மை எரிச்சலாக்கும். அந்த படத்தின் கதை இடம் பெறுவது அமெரிக்காவின் அலாஸ்கா மாகானத்தில். இங்கு கோடையில் பகல் நீண்ண்ண்ண்ண்டிருக்கும். 'நடு இரவின் சூரியன் நீ' என்று பாராட்டு கவிதையெல்லாம் எழுதலாம். அதனால் அறையில் ஜன்னல்களை இருக்கும் ஜங்க் பொருட்களை கொண்டு மூடியிருப்பார் அல் பெசினோ. ஜன்னலின் ஓரத்திலிருந்து வெளிவரும் சிறு streak ஒளி அவரை எப்படி பாடாய்படுத்தும் என்பதை நாமே உணருவதை போல இருக்கும் நோலனின் இயக்கம்.
The Prestige. ஒரு மேஜிக் கலையில் மொத்தம் மூன்று பகுதிகள். முதல் பகுதியில் மேஜிக் நிபுணர் ஒரு பொருளை காண்பிப்பார் ("The Pledge"). இரண்டாவது பகுதியில் அந்த சாதாரண பொருளை அசாதரணமாக காட்டுவார் ("The Turn"), உதாரணம் மறையவைப்பது. இத்தோடு முடிவதில்லை மேஜிக் கலை. அந்த அசாதரணத்தை/ரகசியத்தை மனம் தேடும். இரண்டாவது பகுதியில் செய்ததை மூன்றாவது பகுதியில் மாற்றி மேலும் அதிசயிக்கவேண்டும். மூன்றாவது பகுதியில் அதை எப்படி எடுக்கிறார் அல்லது அந்த பொருளை வைத்து என்ன செய்கிறார் என்பதை வைத்து தான் அந்த கலையின் வெற்றியே அடங்கியிருக்கிறது. அந்த பகுதியின் பெயர் தான் "The Prestige". இந்த மூன்றாவது பகுதியை சிறப்பாக செய்தால் தான் அவர் சிறந்த Magician. உதாரணமாக, பார்வையாளர்களுக்கு கூண்டுக்குள் வைக்கப்பட்ட ஒரு லவ் பேர்ட் காண்பிக்கப்படுகிறது. இது முதல் பகுதி. அதை ஒரு மேஜையின் மீது வைத்து துணியால் போர்த்தப்படுகிறது. பின் அந்த துணி மீது ஓங்கி கையால் அடித்து துணியை விலக்க அங்கு கூண்டும் இல்லை பறவையும் இல்லை. இது இரண்டாவது பகுதி. பின் அந்த பறவையை தன் கைக்குள் இருந்து எடுப்பது. இது மூன்றாவது பகுதி.

மேஜிக் கலையின் தீவிர ரசிகரா நீங்கள்? அந்த ரசனையை தொடரவேண்டுமானால் இந்த படத்தை பார்க்க வேண்டாம். காரணம், இந்த படத்தில் சொல்லப்பட்டிருப்பது பெரும்பாலும் மேஜிக் கலையின் dark side. ஒரு மேஜிக் நிபுணர் என்னவெல்லாம் செய்கிறார், அதை எப்படியெல்லாம் செய்கிறார் என்பதை பட்டவர்த்தனமாக போட்டு உடைக்கிறார். கதை இரு மேஜிக் நிபுணர்கள் இடையிலனது. ஒருத்தன் வில்லன். மற்றொருவன் வில்லனுக்கு வில்லன். இவர்கள் இருவருக்கும் இடையிலான (கொலை முயற்சி தவிர்த்து) போட்டி, பொறாமை, குரோதம், துரோகம், பழிவாங்கல் அப்புறம் தொழில் மீதான அர்ப்பனிப்பு போன்றைவைகளை அடுக்கடுக்காக சொல்லிக்கொண்டே போகிறார். இடையில் ஒவ்வொரு மேஜிக்கும் எப்படி நிகழ்த்தப்படுகிறது என்பதையும் போட்டும் உடைக்கிறார். மேலே சொல்லியபடி சாதாரன மேஜிக்கான ஒரு லவ் பேர்ட்டை மறையவைத்து அதை மீண்டும் வேறு இடத்தில் இருந்து எடுப்பதில் மேஜிக்கெல்லாம் ஒன்றும் இல்லை. இரண்டும் வேறு வேறு லவ்பேர்ட்ஸ். சரி, கூண்டுக்குள் இருந்த முதல் பறவை எங்கு போனது? அந்த டேபிளுக்கு அடியில், கூண்டுடன் நசுங்கி இறந்து கிடக்கும். பார்க்கும் நமக்கு பகீரென்று இருக்கும். ஷாக்காயிட்டீங்களா? இப்படித்தான் படம் முழுவதும்...படத்தின் முடிவில் மேஜிக் ஷோக்களின் மீது ஒரு வெறுப்பே வந்துவிட்டது.

கதை?

ராபர்ட் ஆஞ்சியர் (Robert Angier) - Van Helsing ஹீரோ ஜாக்மேன் (Hugh Jackman).

ஆல்ப்ரட் பார்டன் (Alfred Borden) - Batman புகழ் கிரிஸ்டியன் பேல்.

ஜான் கட்டர் (John Cutter) - ஜாம்பவான் Sir Michael Caine. இவர் பல படங்களில் கலக்கியிருந்தாலும் நான் பார்த்தவை Sleuth, (1969) The Italian Job, The Dark Knight, Inception. நல்ல நடிகர் மற்றும் அவருடைய வசன உச்சரிப்பு பிரமாதம்.

கதை நடப்பது 19ம் நூற்றாண்டின் இறுதியில். ஆல்ப்ரட் & ராபர்ட் இருவரும் "Milton the Magician" என்பவரிடம் வேலை பார்ப்பவர்கள். அந்த குழுவின் மேஜிக் சம்பந்தப்பட்ட சாதனங்களின் இஞ்சினியர் ஜான் கட்டர். ஆல்ப்ரட் & ராபர்ட் இருவருக்கும் ஆகாது. தண்ணீருக்குள் இருந்து கைகள் கட்டப்பட்ட நிலையில் தப்பிக்கும் சாகசத்தில் (Chinese water torture cell) ராபர்ட்டின் மனைவி ஜூலியா கொல்லப்படுவதில் இருந்து ஆரம்பிக்கிறது அதகளம். ஆல்ப்ரட் வேண்டுமென்றே போட்ட கஷ்டமான முடிச்சால் தான் ஜூலியாவால் தப்பிக்கமுடியாமல் போகிறது. ஆல்ப்ரட்டோ தான் எந்த முடிச்சு போட்டதாக நியாபகம் இல்லை என்று சாதாரணமாக சொல்லுகிறான்.

இருவரும் தனித்தனி போட்டி குழுவாக மேஜிக் செய்கிறார்கள். ஆனால் ராபர்ட்டுக்கு ஆல்ப்ரட்டை பழிவாங்கும் உணர்ச்சி குறைவவில்லை. மேலும், ஆல்ப்ரட் ரகசியமாக சாரா என்பவளை மணந்து ஒரு குழந்தையும் உள்ளதை அறிந்து கோபம் அதிகமாகிறது. தன் சந்தோஷத்தை அவன் அனுபவிக்கிறானே! அதனால், ஒருவர் மற்றொருவரின் மேஜிக் ஷோவில் பார்வையாளராக நுழைந்து அடுத்தவரின் இமேஜை டேமேஜ் ஆக்குகிறார்கள். துப்பாக்கியில் இருந்து வெளிவரும் குண்டை பிடிப்பதாக சவால் விடும் ஆல்ப்ரட்டின் மேஜிக் ஷோவில் நுழைந்து அவனுடைய இரண்டு விரல்களை இழக்க வைக்கிறான் ராபர்ட் ("What knot did you tie?"). பதிலுக்கு ஆல்ப்ரட், ராபர்ட்டின் கூண்டுக்குள் இருந்த புறாவை மறையவைக்கும் ஷோவில் நுழைந்து புறாவை கொன்று ஷோவை கெடுக்கிறான். இப்படி மாறி மாறி சூழ்ச்சி செய்ய, ஆல்ப்ரட் தன் உருவத்தையே வேறு இடத்திற்கு மாற்றும் உத்தியான "The Transported Man"-ஐ கண்டுபிடிக்கிறான். பதிலுக்கு ராபர்ட் தன்னை போலவே உருவ அமைப்புள்ள ஒருத்தனை கண்டுபிடித்து அதே ஷோவை "The New Transported Man" என்று இவனும் நடத்தி காட்டுகிறான். கோபமுற்ற ஆல்ப்ரட் ராபர்ட்டின் ஷோவை கெடுத்து, அவன் இடது காலையும் உடைக்க வைக்கிறான். பதிலுக்கு ராபர்ட்டும் ஜான் கட்டரும் சேர்ந்து ஆல்ப்ரட்டின் இஞ்சினியர் ஃபாலனை (Bernard Fallon) உயிருடன் புதைக்கின்றனர். ஃபாலனை காப்பாற்ற ஆல்ப்ரட்டின் "The Transported Man" மேஜிக்கின் சூட்சுமத்தை கேட்கிறான். அவன் "TESLA" என்கிறான்.

இதற்கிடையில் தனி ட்ராக்கில், ஆல்ப்ரட்டை மடக்க தன்னிடம் வேலை பார்க்கும் ஒலிவியா (Scarlett Johansson) என்பவளை ஒற்று வேலை பார்க்க ஆல்ப்ரட்டிடம் அனுப்ப, அவளோ ஆல்ப்ரட்டின் காதலில் விழுந்து தவறான தகவலை ராபர்ட்டிடம் கொடுக்கிறாள். இவள் தரும் தகவல்படி தான் ஆல்ப்ரட் ராபர்ட்டின் ஷோவுக்குள் புகுந்து அவன் காலை உடைக்க வைக்கிறான். ஆல்ப்ரட் எழுதியதாக என்கிரிப்ட் செய்யப்பட்ட அவனுடைய டைரியை கொடுக்கிறாள். ஆனால், அந்த டைரியில் ஒன்றும் இல்லை. அதை டிக்ரிப்ட் செய்ய மாதக்கணக்காக நேரம் தேவைப்படும். ராபர்ட்டின் நேரத்தை வீணடிக்க இவ்வாறு செய்கிறான் ஆல்ப்ரட். கொலராடோவுக்கு சென்று தங்கி அந்த டைரியை டிக்ரிப்ட் செய்கிறான் ராபர்ட். கொலராடோவுக்கு சென்ற ராபர்ட், அங்கிருக்கும் நிக்கோலா டெஸ்டாவை (Nikola Tesla) சந்திக்கிறான். இந்த டெஸ்லா தான் அந்த "The Transported Man"-ன் காரணகர்த்தா என்று நம்புகிறான் ராபர்ட். டெஸ்லா (அப்பொழுது தான் கண்டுபிடிக்கபட்ட) மின்சாரத்தை வைத்து உருவத்தை மறையவைக்கும் உத்தியை (teleportation) கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். பின் அதன் அட்வான்ஸ்டு வெர்ஷனை கண்டுபிடிக்கிறார். ஆனால் side effect-ஆக அது ஒரு cloned உருவத்தை எக்ஸ்ட்ராவாக தருகிறது. அதை வாங்கிய பணத்திற்கு ராபர்ட்டிடம் தந்துவிட்டு அதை அழித்துவிடுமாறு எச்சரிக்கிறார்.

இதற்கிடையில் ஆல்ப்ரட்-ஒலிவியா இடையிலான உறவு தெரியவர, அவன் மனைவி சாரா தற்கொலை செய்து கொள்கிறாள். ராபர்ட் அந்த மெஷினை வைத்து இப்போது "The Real Transported Man" நடத்துகிறான். சூப்பர் ஹிட் ஆகிறது. ஒரு ஷோவில் மேடைக்கு கீழே விழுந்த ராபர்ட் நேராக அங்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீர் தொட்டியில் விழுந்து கதவு தானாக மூடிக்கொள்ள, உள்ளிருக்கும் ராபர்ட் ஆல்ப்ரட் கண் முன்னாலேயே இறக்கிறான். ஆல்ப்ரட் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. அந்த நேரத்தில் கட்டர் அங்கு வர, கீழே அந்த தண்ணீர் தொட்டியை வைத்தது ஆல்ப்ரட் தான் என்று கட்டர் நினைக்க, ஆல்ப்ரட் ஜெயிலுக்கு அனுப்பப்படுகிறான் தூக்கு தண்டனை கைதியாக. (இது தான் படத்தின் ஆரம்பமே. Non-linear திரைக்கதை உத்தி!)

Lord Caldlow என்பவர் ஆல்ப்ரட்டிடம் வந்து அந்த The Transported Man ரகசியம் மற்றும் அவனிடம் உள்ள அந்த டெஸ்லா சாதனத்தையும் கேட்கிறான். அப்படி தந்தால் பதிலுக்கு அவன் மகளை நல்ல நிலையில் வளர்ப்பதாக உறுதி கொடுக்கிறான். அவனும் அந்த ரகசியத்தை எழுதி கொடுக்கிறான். வேஷத்தை கலைத்த Lord Caldlow தான் ராபர்ட் என்று காட்டுகிறான். பின் அதை படிக்காமல கிழிக்கிறான். தான் வென்றுவிட்டதாக சொல்கிறான் ராபர்ட்.

சட்டப்படி ஆல்ப்ரட் இறந்ததால் அந்த மெஷின் இப்போது Lord Caldlow (என்னும் ராபர்ட்) வாங்கிக்கொள்கிறான். அதை Lord Caldlow-விடம் ஒப்படைக்க வரும் கட்டர், அவன் தான் ராபர்ட் என்றும் ஆல்ப்ரட் நிரபராதி என்றும் உணர்கிறார். ஆனாலும் ராபர்ட்டுக்கு ஆல்ப்ரட் செய்த குற்றதுக்கு ஆல்ப்ரட்டுக்கு தூக்கு தண்டனை கிடைப்பது சரிதான் என்று நினைக்கிறார்.

டெஸ்லாவின் மெஷினை ஒளித்து வைக்க ராபர்ட் மற்றும் கட்டர் ஆகிய இருவரும் ஒரு பாழடைந்த கட்டிடத்திற்கு வருகிறார்கள். அந்த இடத்தை ஆல்ப்ரட்டுக்கு சொல்கிறார் கட்டர். அங்கு வரும் ஆல்ப்ரட்(!) ராபர்ட்டை சுட்டு கொல்கிறான். சாகும் நிலையில் ராபர்ட்டிடம் தான் ஆல்ப்ரட் இல்லையென்றும், ஆல்ப்ரட்டும் தானும் இரட்டை சகோதரர்கள் என்கிறான். பின் ராபர்ட்டுக்கு The Transported Man-ன் ரகசியம் புரிகிறது. இவன் தான் ஆல்ப்ரட்டின் இஞ்சினியர் ஃபாலன். இவர்கள் இருவரும் அவ்வப்போது உருவம் மாறிக்கொள்கின்றனர். அதன் படி ஃபாலன் தான் சாராவின் கணவன் மற்றும் அவள் குழந்தைக்கு தந்தை. ஆல்ப்ரட்டோ உண்மையாகவே ஒலிவியாவை நேசிக்கிறான். இது சாராவுக்கும் தெரியாது. இதை உணரும் போது தான் சாரா தற்கொலை செய்து கொள்கிறாள்.

சரி! டெஸ்லாவின் அந்த side effect? இந்த ஷோவின் படி மின்சாரம் தெரிக்கும் மெஷினில் ஒவ்வொரு முறை உட்செல்லும் போதும் அங்கிருந்து ராபர்ட் மறையவெல்லாம் இல்லை. அவன் நிற்பதற்கு கீழே இருக்கும் சிறு கதவின் மூலம் மேஐக்கு அடியில் விழ அங்கு சரியாக வைக்கப்பட்டிருக்கும் தண்ணீர் தொட்டியில் விழுந்து இறக்கிறான் ஒவ்வொரு ஷோவிலும். அவனுடைய clone-ஐ அந்த அரங்கத்தின் பால்கனியில் வைக்கிறான் (teleported). அதனால் ஒவ்வொரு ஷோவிற்கும் ஒவ்வொரு தற்கொலை, ஒவ்வொரு பிணம். அங்குள்ள தண்ணீர் தொட்டிகளின் நிறைய ராபர்ட்கள், ம்ஹூம் ராபர்ட்டின் க்ளோன்கள்.

பின் அங்கிருந்து வெளியேரும் ஃபாலன் அந்த இடத்திற்கு தீவைக்கிறான். ஃபாலனை அவன் குழந்தையுடன் கட்டர் சேர்க்கிறார்.

படத்தின் கடைசி ஐந்து நிமிடங்கள் நிறைய ட்விஸ்டுகள் மற்றும் உண்மைகள் உடைகின்றன (The prestige?). அதனால் மறுபடியும் முதலில் இருந்து படத்தை பார்த்தால் படம் 'இன்னும்' புரியும்!!! ஆங்காங்கே சின்ன சின்ன க்ளூக்கள் விதைக்கப்பட்டிருக்கின்றன.

Alfred Borden: Everything's going to be alright, because I love you very much.
Sarah: Say it again.
Alfred Borden: I love you.
Sarah: Not today.
Alfred Borden: What do you mean?
Sarah: Well some days it's not true. Maybe today you're more in love with magic. I like being able to tell the difference, it makes the days it is true mean something. 


படத்தில் சில குறிப்புகள்

இந்த படத்தில் மேஜிக் நிபுணர்களின் வாழ்க்கையை அவர்கள் கூடவே இருந்து பார்க்கும் அனுபவம் கிடைக்கிறது.

* ஒவ்வொரு மேஜிக் பின்னாலும் இருக்கும் சூட்சுமத்தை உடைக்கிறார் நோலன். பார்வையாளர்களை அசத்துவதற்காக எப்படி வாயில்லா பிராணிகள் கொல்லப்படுகின்றன என்பதை பார்க்கும் போது மனசு கஷ்டப்படுவதை தவிர்க்க முடியவில்லை.

* துப்பாக்கியால் சுடப்படும் போது அந்த குண்டை பிடிப்பதாக காட்டும் போது, மருந்து போடும் போதும் பின் குண்டை நுழைக்கும் போதும் அந்த குண்டை அடைப்பது போல பார்வையாளர்கள் நம்பவைக்கப்படுகிறார்கள். பின் வெறும் மருந்து மட்டும் வெடிக்கும் போது கையில் இருக்கும் குண்டை பிடித்துவிட்டதாக காட்டுகிறார்கள்.

* கூண்டுக்குள் பறவை அடைத்து அதை மேசையில் வைத்து அதன் மேல் ஒரு துணியை போர்த்தி ஓங்கி அடிக்கும் போது அந்த கூண்டு மடிகிறது. மடியும் தன்மையுள்ள கூண்டு அது. உள்ளிருக்கும் பறவை நசுங்கி இறக்கிறது. அந்த மேசையில் உள்ள சிறு கதவு மூலம் அந்த கூண்டும், நசுங்கி செத்த பறவையும் உள்ளே போய்விடுகிறது. பின் தன் கோட்டுக்குள் இருக்கும் மற்றொரு பறவையை வெளியே எடுத்து பார்வையாளர்களுக்கு காட்டுகின்றனர்.

[In reference to a bird from a trick]
Alfred Borden: See? He's fine! 

Boy: But where's his brother?

* மற்றொரு முறை கூண்டை அடிக்கும் போது உள்ளே புறா. கொஞ்சம் பெரியது. அதனால், அது நசுங்காது. அதனால் கோட்டுக்குள் ஸ்பிரிங் போன்ற ஒரு செட்-அப் மூலம் விரைவாக அந்த புறாவை வெளியே இழுக்கவேண்டும். அதன் வேகம் கண்ணுக்கு தெரியாது. சில சமயம் அப்படி இழுக்கப்படும் போது அந்த புறா இறந்து போகும் சாத்தியம் மிக மிக அதிகம்.

* Chinese water torture cell என்னும் தண்ணீர் தொட்டியில் ஒரு பெண்ணின் கைகள் மற்றும் கால்கள் கட்டப்பட்டு உள்ளே போடப்படுவாள். வெளியே தாழ் போடப்பட்டிருக்கும். பின் அந்த தொட்டியை துணியால் மூடுவர். சரியாக ஒரு நிமிடம் டைம். அந்த பெண் வெளியே வருவாள். அந்த பெண்ணின் கைகள் மற்றும் கால்களை கட்டுவது அந்த கூட்டத்தில் இருக்கும் இருவர். அந்த இருவர் ராபர்ட் மற்றும் ஆல்ப்ரட் ;) இப்பொழுது புரியுமே அவள் எப்படி வெளியே வருகிறாள் என்று. சிம்பிள் முடிச்சு மற்றும் தாழ்ப்பாள் திறக்க ஒரு ஓட்டை. சிம்பிள்.

இதில் ஆல்ப்ரட் வேண்டுமென்றே கஷ்டமான முடிச்சு போடுவதால் தான் ஜூலியா இறக்கிறாள்.

* The Transported Man ஷோவில் ஆல்ப்ரட் அவனுடைய இரட்டையான ஃபாலன் மூலம் அதிசயிக்க வைக்கிறான். இரு அறைகள். பந்தை முதல் அறை வாசலில் நின்று எரிந்து விட்டு ஆல்ப்ரட்/ஃபாலன் அந்த அறைக்குள் போகிறான், பந்து இரண்டாவது அறைக்கு அருகில் வரும் போது அந்த அறையில் இருந்து ஃபாலன்/ஆல்ப்ரட் வெளிப்பட்டு பந்தை பிடிக்கின்றனர். இது இரட்டையர்கள் உத்தி என்பதை கட்டர் ஊகிக்கிறார். ஆனால் ராபர்ட் நிராகரிக்கிறான்.

* காப்பி அடிக்கும் ராபர்ட் இரு கதவுகள். முதல் கதவுக்கு முன்னால் இருந்து தன் தொப்பியை இரண்டாம் கதைவை நோக்கி எரிந்து அந்த கதவுக்குள் நுழைந்து மறைந்து, அந்த தொப்பி இரண்டாம் கதவை தாண்டி பறக்கும் போது அந்த இரண்டாம் கதவை திறந்து ராபர்ட்டின் டூப்ளிகேட் வெளியே வந்து அந்த தொப்பியை பிடிப்பார். நடப்பது என்ன? முதல் கதவை திறந்ததும் அந்த கதவின் கீழே இருக்கும் பலகை விலக அவன் மேடைக்கு கீழே இருக்கும் மெத்தையின் மீது விழுந்து மறைந்து விடுவான். மற்றொரு கதவுக்கு அடியில் இருக்கும் இன்னொருவர் லிப்ட் மூலம் மேலே வந்து அந்த தொப்பியை பிடிப்பார்.

இதில் ஆல்ப்ரட் உள்ளே வந்து கீழே இருக்கும் மெத்தையை விலக்கி விடுவதால் ராபர்ட்டின் இடது கால் உடைந்து விடுகிறது.

* Chung Ling Soo என்னும் நிஜ கதாபாத்திரத்தை தழுவி இந்த படத்தில் ஒரு magician வருகிறார். அவர் செய்யும் மேஜிக் என்னவென்றால் மேடையில் 3 ஸ்டூல்கள் போடப்பட்டிருக்கும். மூன்றும் காலி ஸ்டூல்கள். ஒவ்வொரு ஸ்டூலிலும் அவர் வந்து ஒரு துணியால் மூடி பின் விலக்கினால், முதல் ஸ்டூலில் ஒரு மேளம் போன்ற ஒரு கருவியும், இன்னொரு ஸ்டூலில் ஒரு சிறு மீன் தொட்டியில் தண்ணீரும் சில மீன்களும் ஆடாமல் அசையாமல் இருக்கும்.

இதை எப்படி செய்கிறார்? கான்பிப்பது இல்லை என்றாலும், அவர் வரும் போது இரு கால்களை பரப்பி மெல்ல மெல்ல ஆடி அசைந்து வருவார். அதன் அர்த்தம் அவர் இரு கால்களுக்கிடையில் அந்த மீன்தொட்டியையும் மேளத்தையும் கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதில் விஷயம் என்னவென்றால், அவர் தன் வாழ்நாளில் எப்பொழுதுமே இப்படித்தான் நடக்கிறார் என்பது. தன் நடையே அப்படித்தான் என்று எல்லோரையும் நம்பவைத்து அதையும் தன் மேஜிக் கலைக்கு பயன்படுத்திக் கொள்வது. அது தான் Meaning of Dedication.

Chung Ling Soo என்பவர் ஒரு மேஜிக் நிபுனர். அவர் துப்பாக்கி குண்டை பிடிக்கும் மேஜிக் ஷோவின் போது தவறுதலாக இறந்தவர்.

* ஆல்ப்ரட்டுக்கு ராபர்ட்டால் இரண்டு விரல்கள் போய்விட்டது. சரி! அடுத்து The Transported Man ஷோ செய்யும் போது அவருடைய இரட்டையான ஃபாலனின் கைவிரல்களை யாராவது பார்த்தால் ட்ரிக் தெரிந்துவிடும் இல்லையா? அதற்காக ஃபாலனும் தன் இரண்டு விரல்களை இழக்கிறான். இந்த dedication எப்படி?

* படத்தில் வரும் டெஸ்லா கதாபாத்திரம் Nikola Tesla என்னும் விஞ்ஞானியின் கதாபாத்திரம். அவர் தாமஸ் ஆல்வா எடிசனிடம் பணிபுரிந்தவர்.

* TESLA என்று சொல்லி ராபர்ட்டை சுத்தலில் விடும் அல்ப்ரட் உண்மையில் அந்த மெஷினை வைத்து ஷோவை நடத்தவில்லை. அது ஒரு கண்துடைப்பே. மாறாக, தன் இரட்டையான ஃபாலனை வைத்தே அந்த மேஜிக் ஷோவை நடத்துகிறான்.

* நீங்கள் புத்திசாலியான பார்வையாளராக இருக்கும் பட்சத்தில் படத்தில் இருக்கும் சின்ன சின்ன நுண்ணிய அரசியலை உணரலாம். ஆல்ப்ரட் பேசும் மொழியின் accent உழைப்பாளி வர்க்கம் போலவும் ராபர்ட் பேசும் மொழியின் accent மேல்தட்டு அமெரிக்கன் போலவும் இருக்கும். இருவருக்கும் இடையிலான சண்டை வர்க்கப்போரை போன்று இருக்கும். ஆல்ப்ரட் ஷோ நிகழ்த்துவது சிறிய மேடையில், Bar போன்ற இடங்களில். ஆனால் ராபர்ட் நடத்துவதோ பெரிய பெரிய ஹால்களில்.

* இருவரில் புத்திசாலி ஆல்ப்ரட் தான். ஆனால் அவனுக்கு மார்கெட்டிங் உத்தி பத்தாது. ராபர்ட் புது உத்தியை கண்டுபிடிப்பதில் ஆல்ப்ரட் அளவு திறமைசாலி இல்லையென்றாலும், எந்த வகையான உத்தியை எந்த மாதிரி மக்களுக்கு எடுத்து செல்வது என்பதில் தேர்ந்தவன்.

* இருவருக்கும் இடையிலான யுத்தம் அளவுக்கு மீறிவிடுவதால் ராபர்ட் கட்டரின் நட்பை இழக்கிறான். ராபர்ட் போகும் பாதை கட்டருக்கு பிடிக்கவில்லை. குரூரம் தான் இருவரிடமும் மிஞ்சுகிறது. அதே போல் ஒலிவியாவை ராபர்ட் தான் ஆல்ப்ரட்டிடம் அனுப்புகிறான். அதனால் அவளுக்கு ராபர்ட் மேல் இருந்த ஈர்ப்பு போய்விடுகிறது. ஆல்ப்ரட்டும் குரூரமானவன் என்று தெரியவரும் போது ஒலிவியா அவனை விட்டும் விலகிவிடுகிறாள்.

* பிரச்சினையை ஆரம்பிப்பது ஆல்ப்ரட் தான். கடைசியில் இருவருமே இறந்தாலும், மிஞ்சுவது ஆல்ப்ரட்டின் இரட்டையான ஃபாலன். கடைசியில் ராபர்ட்டின் கடைசி clone-ம் ஃபாலனால் கொல்லப்படுகிறான்.

* நிஜத்தில் மேஜிக் நிபுணர்களுக்கு இடையிலான சண்டைகளின் நகல்கள் இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும். மேஜிக் நிபுணர்கள் மட்டுமெ அல்லாமல் டெஸ்லா மற்றும் தாமஸ் ஆல்வா எடிசன் ஆகியோருக்கு இடையில் நிகழ்ந்த பனிப்போரும் இடம் பெறுகிறது. எடிசனின் தூண்டுதலால் தான் சட்டத்திற்கு புறம்பான தன் teleportation பற்றின தன் ஆராய்ச்சியை நிறுத்த வேண்டியதாக ஆயிற்று.

* சாராவுக்கு தெரியாது ஆல்ப்ரட்டு ஒரு இரட்டை உண்டு என்று. இருவரும் சில இடங்களில் மாறிவிடுகிறார்கள். இரண்டு விரல்களை இழக்கும் போது அதற்கு மருந்து தடவி விடுகிறாள் சாரா. பின் ஃபாலனும் விரல்களை இழக்கிறான். சாரா கேட்கிறாள் "ஏன் உனக்கு திரும்பவும் ரத்தம் வருகிறது" என்று. சாராவுக்கும் தெரியாது இரண்டாவது முறை இரத்தம் வருவது ஃபாலனுக்கு என்று. ஃபாலன் தான் அவள் குழந்தைக்கு தந்தை, அவளை உண்மையாக நேசிக்கிறாள். கடைசியில் சாரா இதை ஒருவாறு ஊகித்து விடுகிறாள். அதனால் தான் தற்கொலை செய்கிறாள்.

Sarah: Do you love me?
Alfred Borden: Not today.

* வழக்கம் போல் நோலனின் வழக்கமான Non-linear உத்தியிலேயே திரைக்கதை நகர்கிறது. முதலில் ராபர்ட் இறக்க, ஆல்ப்ரட் ஜெயிலுக்கு செல்ல, ராபர்ட்டின் டைரியை படிப்பதிலிருந்து கதை நகர்கிறது. முதலில் பார்கும் போது எது நிஜம் எது ஃப்ளாஷ்பேக் என்று எனக்கு தெரியவில்லை. காரணம், Wiki-ல் linear plot-ஐ தான் போடிருக்கிறார்கள் ;) இரண்டாவது முறை பார்க்கும் போது ஓரளவு விளங்குகிறது.

நல்ல படம் பார்க்க விரும்புகிறவர்கள் இந்த படத்தை மிஸ் பன்னவேண்டாம்.