Tuesday, December 06, 2005

நான்கு கில்லாடிகள்

நேற்றிரவு (05-Dec-2005) எங்கள் அறையில் தூங்கும் முன் சந்திரமுகி படத்தின் climax 'மட்டும்' பார்த்து உறங்கச் சென்றோம். உறங்கும் முன் சும்மா அரட்டையடித்துக் கொண்டிருந்தோம். அப்பொழுது எங்கள் பேச்சு பேய் படங்களைப் பற்றியும், சிறு வயதில் எப்படியெல்லாம் பயந்துக் கொண்டிருந்தோம் ("மை டியர் லிசா", "யார்?", "ஜென்ம நட்சத்திரம்", "பூவிழி வாசலிலே", கொம்பு முளைத்த பேய் குழந்தை...), பின் பொதுவாக பேய் பற்றி வந்தது. அப்பொழுது இரவை கிழித்துக் கொண்டு இடியென இறங்கியது எங்கள் சிரிப்பு. காரணம் என் அறைவாசிகளில் ஒருவனான சரவணகுமார்.

சரவணகுமார், இனி சரவணன், சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் M.M.D.A-வில் தன் மூன்று நண்பர்களுடன் (இவனுடன் சேர்த்து தான் "நான்கு கில்லாடிகள்") ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்தார்கள். வீடோ சற்றே பெரியது. வாடகையோ வெறும் 2500/- மட்டுமே. சரவணனுக்கு ரொம்ப சந்தோஷம். "அடடா! நமக்கு 2500/- ரூபாயில super வீடு கிடைச்சிடுச்சே" என்று. ஒரு நல்ல நாளில் barley பால் காய்ச்சி 'குடி' புகுந்தனர். அந்த வீட்டின் உரிமையாளார் சற்றே வயதானவர். Advance பற்றியும் அவர் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. சரவணனுக்கோ, சென்னையில் ஏன் இன்னும் சற்றேவாவது மழை பெய்கிறது, சென்னையில் தான் எவ்வளவு நல்லவர்கள் என்று ஆனந்தக் கண்ணீர் வேறு. இவையாவும் முதல் ஒன்றிரண்டு வாரங்கள் மட்டுமே. பின் தான் Run விவேக் போல ஆகப்போகிறோம் என்று தெரியாமல்...

ஒரு நாள், சரவணன் துணிகளை துவைத்துக் கொண்டிருந்த பொழுது, எதிர் வீட்டில் இருந்தவர்களுடன் பேச்சுக் கொடுத்திருக்கிறான். அவர்கள், சரவணனிடம் பேச்சுவாக்கில் அவர்கள் தங்கியிருக்கும் வீட்டில், வீட்டு உரிமையாளருக்கு இளம் மனைவி ஒருவர் இருந்ததாகவும், சில நாட்களுக்கு முன் வீட்டின் சமையற்கூடத்தில் தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறியுள்ளார். அவ்வளவு தான். புலிப்பாண்டியாய் இருந்தவர்கள் அன்று முதல் கிலிப்பாண்டியாக ஆனார்கள். அப்பொழுதுதான் அவனுக்கு பல உண்மைகள் விளங்கிற்று. இதை கேள்விப்பட்டு நான்கு கில்லாடிகளில் ஒருவன் escape.

"குளிச்சிட்டு இருப்பேன். திடீர்னு அந்தம்மா தூக்கு போட்டுக்கிட்டது ஞாபகத்துக்கு வரும். அவ்வளவு தான். மனசு திக் திக்-னு அடிச்சிக்கும். அடிச்சு புடிச்சு குளிச்சு முடிச்சு (கவித மாதிரி இல்ல?) வெளியே ஓடி வந்துடுவேன்".

"நான் தூங்கலாம்னு படுத்துட்டு இருப்பேன். அப்படியே என் மனசு இப்படியே போய் அந்த சமையல்கட்டுக்கு போகும். அங்க அந்தம்மா கழுத்துல சுருக்கு மாட்டிட்டு 'தபால்'னு குதிக்கிற மாதிரி நெனப்பு வரும். அப்படியே 'கப்புன்னு' எழுந்து ஓடிவந்துருவேன்".

"ராத்திரி தூங்கும் போது கூட light-அ அனைக்கமாட்டோம். Tube light போட்டுட்டு தான் தூங்குவோம். அந்த பழக்கம் தான் இப்பவும் தொத்திகிச்சு". எங்களுக்கு அப்பொழுதுதான் இவன் ஏன் Tube light போட்டுட்டு தூங்கறான்னு ரொம்ப நாளா இருந்த சந்தேகம் தெளிந்தது.

"நாங்க நாலு பேர். எப்பவும் ஒன்னாத்தான் போவோம், ஒன்னாத்தான் வருவோம். எங்களுக்கு பயம்னா என்னன்னு நல்லாத்தெரியும்" என்று கக்க கக்க style-ல (காக்க காக்க தான், பயத்துல இப்படி ஆயிடுச்சு) சொன்னான்.

அறை சற்றே நிசப்தம் ஆனது. அப்பொழுது ஹாரிஸ் அவன் காதின் ஓரத்தில் மெதுவாகத் தொட்டான். அவ்வளவு தான். பயந்து அலறி எங்களையெல்லாம் திட்ட ஆரம்பித்துவிட்டான்.

பிறகு ஆறுமாதம் கழித்து, அந்த வீட்டைக் காலிசெய்துவிட்டு, (ஓடி) வந்து விட்டார்கள். இல்லாவிட்டாலும், நாள் ஆகிவிட்டதால், அந்த வீட்டின் உரிமையாளர் வாடகையை அதிகரித்து புதிய tenant-ஐ தேடிக்கொண்டிருந்ததாக கேள்விப்பட்டதாக கூறினான்.

பிறகு, எங்கள் பேச்சு ஊரில் பேய் ஓட்டுவது, சித்த வைத்தியம், பில்லி சூன்யம் பற்றியெல்லாம் சுற்றிற்று. தூக்கம் வர சுமார் இரண்டு மணியாயிற்று.

"கைப்புள்ள. இன்னும் ஏன்டா முழிச்சுட்டு இருக்க. தூங்..."

Thursday, November 10, 2005

பொன்னியின் செல்வன்

சமீபத்தில் தான் "பொன்னியின் செல்வன்" படித்தேன். இவ்வளவு வருடம் படிக்காமல் வீணாக்கிவிட்டது வருத்தம் தான். Better Late than Ever. இதைப் படித்த பின் ponniyinselvan@yahoogroups.com -மிலும் உருப்படியாக உறுப்பினர் ஆகிவிட்டேன். இந்த பக்கம் புதினத்தை பாராட்ட அல்ல. பாராட்டு வார்த்தைகளுக்கு நான் எங்கே போவது? பொன்னியின் செல்வன் தந்த 'கிக்' "சிவகாமியின் சபதம்" மற்றும் "பார்த்திபன் கனவு" ஆகிய புதினங்களைப் படிக்க வைத்தது. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் விஷமாகுமாம். இதை பொய்யாக்குவதற்கே கல்கி அவர்கள் "பொன்னியின் செல்வன்"-ஐ எழுதியிருப்பார் என நினைக்கிறேன். இந்த புதினத்தை திரைப்படமாக எடுக்க முயற்சிப்பதாக பலர் கூறியிருக்கிறார்கள். அது எந்த அளவிற்கு வெற்றி பெரும்? வெற்றி என்றால், வணிக ரீதியாகவும் சேர்த்து. காரணம்,
1) திரைப்படமாக எடுத்தால் வியாபார நோக்கோடு எடுக்ககூடாது. (அப்படியானால், இதை திரைப்படமாக எடுக்கவே முடியாது என்கிறீர்களா?)
2) ஐந்து பாகத்தையும் இரண்டரை - மூன்றரை மணி நேரத்தில் எடுத்தால் சில (பல) சமரசங்கள் செய்ய வேண்டியிருக்கும். அது நிச்சயம் கதையை பாதிக்கும். (கதை என்றால் என்ன என்று அறியாத இயக்குனர்களுக்கு நிச்சயம் இது பேரிடி தான்)
3) நம் தமிழ் திரைப்பட செலவு (budget) இந்த தயாரிப்பைத் தாங்குமா? சில பெரிய தயாரிப்பாளர்கள் சேர்ந்து வேண்டுமானால், தங்கள் கருப்பு பணத்தை இதில் முதலீடு செய்யலாம் (விரப்பனுக்கே பொது மன்னிப்பு அளிக்க விழைந்தவர்கள்தானே, இவர்களுக்கு பொது மன்னிப்பும் அளிக்கலாம்).
4) முக்கியமாக, நடிக நடிகையர் தேர்வு. பாத்திரத்திற்கு தேவையான நடிக நடிகையர் தேவை. "ராஜ ராஜ சோழன்" போல சிவாஜி கணேசன் எல்லாம் (இப்போதைக்கு) தேவையில்லை. சும்மா build up கொடுக்கிறவர்கள் தேவை இல்லை. அப்புறம், நந்தினிக்கு மழையில் நனைந்து பாடலெல்லாம் இல்லை.
5) திரைப்படம் rich-ஆ எல்லோரையும் reach ஆகனும்.
6) படம் சாமனியர்களை சென்று சேருவது முக்கியம். உதாரணம், பாரதி.
7) படம் "பொன்னியின் செல்வன்"-ஆக எடுக்கப்படவேண்டும். "ராஜ ராஜ சோழன்" போல அல்ல.
மேற்கூறிய எல்லா மற்றும் பல மறைமுக சிக்கல்களையும் தாண்டி படமாக்கப்பட்டால், நிச்சயம் நாமெல்லாம் தமிழ் திரைப்பட உலகத்தை நினைத்து "தத்தம்" காலரை தூக்கி விட்டுக்கொள்ளலாம். ஆனால், எனக்கு என்னவோ இந்த முயற்சி சரியானதாக தோன்றவில்லை. அதற்கு முக்கியமான காரணமாக நான் கருதுவது எண்:2-ஐ தான். "பொன்னியின் செல்வன்"-ஐ திரைப்படமாக எடுப்பது சில Giga Bytes அளவை ஒரு Floppy-யில் அடைப்பது போல. நேரம் கருதி எந்த காட்சியை வெட்டுவது என்று போரே நடக்கும். இயக்குனர் மனிரத்னம் கூட இதற்கு திரைக்கதை எழுதியிருந்ததாக சுஜாதா கூறினார். அப்படியே எடுத்தாலும் எல்லோரும் "இது அந்த நாவலைப் போல இல்லை" என்று தான் கூறப்போகிறார்கள். சரி! இதற்கு என்ன தான் வழி. ஆங்! அது தான்!! அதே தான்!!! "பொன்னியின் செல்வனை" அழகாக ஒரு "அழுகை இல்லாத" தொலைக்காட்சி தொடராக, Mega Serial-ஆக எடுத்திறலாம். தற்போது தொலைக்காட்சி தொடராக எடுக்கப் படுவதாக அறிந்தேன். அதுவும் வந்தியத்தேவனாக ஒரு நடிகரை பார்த்தேன். ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும், ஒரு நல்ல புதினத்தை சாதாரன தொடராக எடுப்பதை நினைத்து வேதனை அடைந்தேன். யாராவது, ஏதாவது சீக்கிரமா செய்யுங்களேன்... தொலைக்காட்சி தொடராக எடுப்பதனால், மேலே சொல்லப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்யவும், சில பயன்கள் ஏற்படவும் கூடும்.
1) இவைகளில் முதன்மையானது, எடுக்கப்படும் அத்தியாயங்களளின் எண்ணிக்கை. கதைக்கு தகுந்தார்போல், வாரங்களை கூட்டலாம் குறைக்கலாம். இது கதையின் ஓட்டத்திற்கு நல்லது. (ஆனால், வாராவாரம் suspense வைக்க சில காட்சிகளை நீட்டவோ, குறைக்கவோ கூடாது)
2) கதையும், காட்சியும் தான் முக்கியம். பிதாமகன் போல சிம்ரன் டான்ஸ் compromise தேவையில்லையே.
3) ஒவ்வொரு பாகத்திற்கும் தயாரிப்பாளர்கள் மாறிக்கொள்ளலாம் அல்லது மாற்றிக்கொள்ளலாம்.
4) சரியான திட்டமிடல், தயாரிப்பு செலவைக் கட்டுப்படுத்தக் குடும். (இதற்கு மனிரத்னம் சரியான உதாரணம்)
5) நல்ல நடிக நடிகையரை தேர்வு செய்யலாம். நடுவில் "உருவங்கள் மாறலாம், ஆனால்..." போன்றவை தவிர்க்கப்படவேண்டும்.
6) செலவைப் பற்றி கவலை வேண்டாம். Good start is half done.

ம்ம்...இப்பொதைக்கு ஏக்கப் பெருமுச்சு தான் விட முடியும் போலிருக்கிறது.

பொன்னியின் செல்வரும்
பூங்குழலி அம்மையும்
வந்திய தேவனும்
வானதியும், குந்தவையும்
பழுவூர் நந்தினியும்
பழுவேட்டரையரும்
பாடாய் படுத்துகின்றனர்...
நாங்கள்
பாகாய் உருகுகிறோம்.

Wednesday, September 21, 2005

சில நேரங்களில் சில மரணங்கள்...

சமீபத்தில் நான் கேட்ட ஒரு மரணச் செய்தி சற்றே மிகுந்த மனவேதனையை அளித்தது. சில மாதங்களுக்கு முன் நான் பெங்களூரில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அங்கே ஸ்ரீராமபுரத்தில் ஒரு mansion-ல் நண்பர்களுடன் வசித்து வந்தேன். அங்கே நாங்கள் இருந்தது மூன்றாவது மாடியில். இரண்டாவது மாடியில் எங்கள் அறைக்கு எதிர் கீழே இருந்த அறையில் சீனிவாசன் என்று ஒரு பிராமனர் தனியாக வசித்து வந்தார் (என் பெயரே தான்...!!!). அவர் பிராயம் சுமார் 35-ல் இருந்து 40 இருக்கும். பிரம்மச்சாரி, வங்கி ஊழியர். அறையில் தொலைக்காட்சி பெட்டி இருக்கும். அவர் அறையில் எப்பொழுது இருந்தாலும் அந்த தொலைக்காட்சி தன் பணியை செய்துகொண்டே இருக்கும். சமையலும் அவரே தான் (எங்களுக்கு ஒரு நாள் சமைத்துப் போடுவதாக கூறினார்). நாங்கள் ஒரே கட்டிடம் என்றாலும் அவர் அறைக்கு அவ்வளவாக போனது கிடையாது. அதுவும், அவர் என் Room Mate-ன் நன்பர், நான் அவ்வளவாக பேசியது கூட கிடையாது.
பின், நான் சென்னையில் வேலை கிடைத்து மாற்றலாகி வந்துவிட்டேன். ஒரு நாள் பெங்களூர்வாசிகளிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது, "உனக்குத் தெரியுமா? சீனிவாசன் இறந்து விட்டார்..." என்று கூறினர். எனக்கு நம்ப முடியாத வேதனையைத் தந்தது. பின் நடந்தது என்ன என்று கேட்ட பொழுது அவர்கள் சொன்னது:
தினமும் காலையில் 6 மணிக்கு எழுந்திருக்கும் அவர், அறையில் தொலைக்காட்சியை அலற விட்டு தன் வேலையை ஆரம்பிப்பார். அவர் ஒரு நாள் (அது தான் அவர் கடைசி நாள்) காலையில் எழுந்து தொலைக்காட்சியை அலற விட்டு, தன் அறைக் கதவை பாதி திறந்த நிலையில் விட்டிருக்கிறார். குளியலறையில் வாளியில் தண்ணீர் நிரம்பிக்கொண்டிருக்கிறது. அப்பொழுது குளியலறையை விட்டு வெளியே வந்திருக்கிறார். அப்பொழுது கால் வழுக்கி அவர் நெற்றி அந்த அறையில் இருந்த இரும்புக் கட்டிலின் மூலையில் அடிப்பட்டிருக்கிறது. அந்த அதிர்ச்சியில் வலிப்பும் வந்திருக்கிறது. (முன்பே அவருக்கு வலிப்பு நோய் இருக்கிறதா என்று தெரியவில்லை). தொலைக்காட்சிப் பெட்டியின் சத்தத்தினால் இவையாவும் வெளியில் கேட்கவில்லை. சற்று நேரத்திற்கெல்லாம் உயிர் பிரிந்திருக்கிறது.
இவையாவும் அந்த கட்டிடத்தில் இருந்த யாருக்கும் தெரியவில்லை. அவர் அலுவலகத்திற்கு எப்பொழுதும் விடுப்பு எடுப்பதில்லை. அப்படியே அதிசயமாக எடுத்தாலும், அலுவலகத்திற்கு தெரியப்படுத்துவார். ஆனால், அன்று அவர் அலுவலகத்திற்கு செல்லவில்லையாதலால் வங்கியில் இருந்து ஒருவர் வந்து பார்த்துச் செல்ல வந்திருந்தார். அவர் தாம் சீனிவாசன் இறந்திருப்பதை கண்டறிந்தார். காலையின் இருந்து 2 - 3 முறை தண்ணீர் தொட்டிக்கு மோட்டார் மூலம் நீர் இரைத்திருக்கிறார்கள். அதன் காரணம் அப்பொழுதுதான் அவர்களுக்கு விளங்கிற்று.
அவருக்கு ஒரே ஒரு சகோதரர் என்றும் அவர் திருச்சியில் இருப்பதாகவும் தெரியவந்தது. (அவர் இந்த செய்தியை எந்த அதிர்ச்சியும் காட்டாமல் இருந்தது ஆச்சரியம்). அவர் வந்து கையெழுத்து போட்டால் தான் பிணத்தை (காலை வரை சீனிவாசனாக இருந்தவர்) கொடுப்பதாக கூறினார்கள். பின்னர் அவர் வந்து சீனிவாசனை பெற்றுக் கொண்டு சென்றார். இறக்கும் பொழுது தன் உயிர் காப்பதற்கு என்ன என்ன முயற்சி செய்தாரோ...???
ஒரே கட்டிடத்தில் இருந்தவர், இறந்தது கூடத் தெரியாமல் மற்றவர்கள் இருந்திருக்கிறார்கள் என்று நினைத்தால் சற்றே கலக்கமாகத்தான் இருக்கிறது. இப்பொழுது சென்னையில் நான் இருக்கும் அடுக்ககத்தில் கூட இப்படித்தான் இருக்கிறது. எப்பொழுதும் எல்லா வீட்டுக் கதவுகளும் சாத்தியே இருக்கும். அடுத்த வீட்டில் (flat-ல்) என்ன நடக்கிறது என்று கூடத்தெரியாமல் இருக்கிறோம். இதையெல்லாம் பார்க்கும் பொழுது சிறு வயதில், தொலைக்காட்சி பெட்டி அவ்வளவு பரவலாக இல்லாத பொழுது எங்களுக்கு தெருவில் மற்ற சிறுவர்களுடன் மாலையில் விளையாடுவதும், எங்கள் தெருவில் இருக்கும் வீடுகளில் இருப்பவர்கள் வெளியில் அமர்ந்து பேசுவதும் தான் நியாபகத்துக்கு வருகிறது. மீண்டும் அந்த நாள் வந்தால் தேவலை...

Tuesday, April 26, 2005

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் !!!

நாம் பலமுறை "ஐ.நா. சபையில் இந்தியாவிற்கு நிரந்தர உருப்பினர் பதவி - so and so நாடு ஆதரவு, பாகிஸ்தான் எதிர்ப்பு" என்று கேள்விப்பட்டிருப்போம். அதி இன்னா ரப்சரு-பா? ஐ.நா. என்பதன் விரிவாக்கம் "ஐக்கிய நாடுகள் சபை" (ஆங்கிலத்தில் UN - United Nations). இராக்கியருக்கு சதாம் ஹுசேனிடமிருந்து "சுதந்திரம்" வாங்குவதர்க்கு அமெரிக்கா "போர்" தொடுத்த போது, உம்மனாம் மூஞ்சியாக வெறும் அறிக்கை மட்டுமே வாசித்த அதே ஐக்கிய நாடுகள் சபை தான். இது என்ன அமைப்பு? எதற்காக இந்தியா அதில் நிரந்தர உருப்பினர் ஆக வேண்டும்?? அதற்கு எதற்கு பல நாடுகளின் ஆதரவைக் கோரவேண்டும்???

ஐ.நா. சபையில் தற்போது இந்தியாவையும் சேர்த்து மொத்தம் 189 உருப்பு நாடுகள் உள்ளன. ஐ.நா. சபையின் ஒரு அங்கம் தான் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில். இதன் முக்கிய நோக்கமே நாடுகளுக்கு இடையே அமைதியையும், பாதுகாப்பையும் உருதிப்படுத்துவது தான். தற்போது ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உருப்பினராக உள்ள நாடுகள் சீனா, பிரான்சு, ருஷ்யா, இங்கிலாந்து மற்றும் "பெரிய அண்ணன்" அமெரிக்கா. இந்த நாடுகள் யாவும் இரண்டாம் உலகப்போரின் வெற்றியால் உருப்பினராக்கப்பட்டவை. (1971-ல் "சீன மக்கள் குடியரசு" "சீனா"வாகவும், 1991-ல் "சோவியத் யூனியன்" "ருஷ்யா"வாகவும் மாற்றம் பெற்றன). இவைதவிர, மற்ற பத்து நாடுகள் 2 வருடத்திற்கு ஒரு முறை தேர்வு செய்யப்படும். இவற்றில் 5 நாடுகள் ஒவ்வொறு ஆண்டும் மாற்றப்படும். இந்த தேர்தல் ஒவ்வொறு சனவரி 1-ம் தேதியும் நடக்கும். ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா நாடுகள் ஒவ்வொன்றும் தலா இரண்டு நாடுகளையும் (மொத்தம் ஆறு), அரேபியா, ஆசியா மற்றும் கிழக்கு ஐரோப்பா நாடுகள் ஒவ்வொன்றும் தலா ஒரு நாட்டையும் (ஆறு + மூன்று = மொத்தம் ஒன்பது). பத்தாவது நாடாக ஒரு ஆசிய அல்லது ஆப்ரிக்க நாடு மாறி மாறி வரும். 2005-2006-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 நாடுகள்: அல்ஜீரியா, அர்ஜென்டினா, பெனின், பிரேசில், டென்மார்க், கிரேக்கம், ஜப்பான், பிலிபைன்ஸ், ரோமானியா மற்றும் தான்சானியா ஆகியவை.

இந்த பதினைந்து நாடுகளில் தற்போது ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உருப்பினராக உள்ள நாடுகள் special நாடுகள்.

1) இந்த நாடுகள் யாவும் Nuclear Non-Proliferation Treaty (NPT)-யின்படி அனு ஆயுதங்களை வைத்துக் கொள்ளலாம். மற்ற நாடுகள் அனு ஆயுதங்களை வைத்துக் கொள்ளக் கூடாது. ஏன், அனு ஆயுத சோதனை கூட செய்யக் கூடாது. இதைத் தான், Comprehensive Test Ban Treaty (CTBT) மூலம் நம் நாட்டை சில வருடங்களுக்கு முன் அமெரிக்கா நெருக்குதல் கொடுத்தது.

2) இதை விட முக்கியமானது, இந்த நாடுகள் யாவும் வைத்திருக்கும் வீட்டோ (Veto) அதிகாரம். வீட்டோ என்பது லத்தீனில் இருந்து வந்த வார்த்தை. ஐ.நா.வில் உருப்பினராக உள்ள எல்லா நாடுகளுமே மற்ற நாடுகளுக்கு பரிந்துரை மட்டுமே செய்ய முடியும். அவற்றின் மேல் திர்மானம் போடும் பொழுது இந்த பதினைந்து நாடுகளில் மூன்றில் இரண்டு பங்கு நாடுகள் (பதினைந்தில் ஒன்பது நாடுகள்) ஆதரிக்க வேண்டும். ஆனால் வீட்டோ அதிகாரத்தை வைத்து இந்த தீர்மானத்தை மேற்கூரிய ஐந்து நிரந்தர உருப்பினராக உள்ள நாடுகளில் ஏதேனும் ஒரு நாடு பயன்படுத்தியும் ரத்து செய்ய முடியும் (பதினைந்தில் ஒன்பது நாடுகள் ஆதரித்த பின்பும்). இது தான் அந்த வீட்டோ அதிகாரம். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஆரம்பித்த பிறகு இந்த வீட்டோ அதிகாரத்தை சீனா 5 முறையும், பிரான்சு 18 முறையும், ருஷ்யா 122 முறையும், இங்கிலாந்து 32 முறையும், அமெரிக்கா 79 முறையும் பயன்படுத்தி இருக்கின்றது. இந்த ஐந்து நாடுகளைத் தவிற, ஐ.நா.வில் உருப்பினராக உள்ள மற்ற நாடுகள், இந்தியாவையும் சேர்த்து, பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்ள மட்டுமே முடியும், அதுவும், இந்த கவுன்சில் ஒப்புக் கொண்டால் மட்டுமே.

இந்த special நாடுகள், ஒரு பிரச்சினை மற்ற நாடுகளை பாதிக்கும் பட்சத்தில், அவை விசாரனை நடத்த உரிமை உண்டு. இந்த பிரச்சினைகளுக்கான தீர்வை இந்த நாடுகள் சிபாரிசு செய்யலாம். இந்த உரிமை மற்ற நாடுகளுக்குக் கிடையாது. மேலும், இந்த கவுன்சில், சில தவிர்க்க முடியாத சூழ்நிலையில், அதிரடியாக காரியத்திலும் இறங்கலாம். உதா"ரணம்", 1950-ல் கொரியாவிற்கு எதிரான நடவடிக்கை, 1991-ல் கூட்டுப் படையை உபயோகித்து நடத்தப்பட்ட வளைகுடாப் போர். இவற்றிற்கு ஐ.நா.வின் உருப்பினர்கள் கொடை வள்ளல்களாக இருப்பார்கள். அதுவே, ஐ.நா.வின் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு அமெரிக்கா வாங்கிக் கட்டிக் கொண்ட வியட்னாம் பிரச்சினை, சதாம் வாங்கிக் கட்டிக் கொண்ட ஈராக் யுத்தம் ஆகியவற்றை சொல்லலாம். சமீபத்தில் (சதாம் ஹுசைனுக்கு எதிராக) நடந்த ஈராக் யுத்தத்திற்கு ஐ.நா. ஒப்புதல் அளிக்காததால் தான் அமெரிக்கா தன்னிச்சையாக போர் தொடுத்தது. அதனால் ஐ.நா.வின் கூட்டுப் படை கலந்துகொள்ளாததால் இந்தியாவும் தன் படைகளை அனுப்பத் தேவையில்லாமல் போய்விட்டது.

இந்த ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தர உருப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் திட்டமும் இருக்கிறது. ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் நிரந்தர உருப்பினர் ஆவதற்கு பெரும் பாடு படுகின்றன (இந்த இரண்டு நாடுகள் தான் ஐ.நா.விற்கு அதிகமாக படைகளை அனுப்பும் நாடுகளில் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளது). ஜெர்மனியை பிரான்சு ஆதரிகின்றது. ஆனால், இத்தாலி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் ஜெர்மனிக்குப் பதிலாக பொதுவன ஒரு ஐரோப்பிய கூட்டமைப்பிற்கு இந்த இடத்தை வழங்கலாம் என விருப்பம் தெரிவித்துள்ளன. பிரான்சும், இங்கிலாந்தும் தங்கள் இடங்களை விட்டுக்கொடுத்தால் ஜெர்மனி இந்த மேற்கூரிய திட்டத்திற்கு உடன்படுவதாக தெரிவித்துள்ளது. உலகின் ஐந்தில் ஒரு பங்கு (!?) மக்கள் தொகையை வைத்திருக்கும் நம்மை பிரான்சு, இங்கிலாந்து, ருஷ்யா ஆகியவை ஆதரிக்கின்றன. இந்திய-சீன உறவின் முன்னேற்றத்தால் சீனாவும் நம்மை ஆதரிக்கின்றது. வழக்கம் போல் பாகிஸ்தான் இதை எதிர்க்கிறது. இன்னொரு புறம், ஜப்பான் நிரந்தர உருப்பினர் ஆவதற்கு எதிர்ப்பு இல்லாமல் இல்லை. கிழக்கு ஆசிய நாடுகள், குறிப்பாக சீனா, வட மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் ஜப்பானை எதிர்க்கிறது.

தற்போதைய ஐ.நா. பொதுச் செயலாளர் திரு.கோபி அன்னானும் இந்த நிரந்தர உருப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு ஒரு குழுவை பரிசீலிக்கச் சொன்னார். அந்த குழு கூறியது, இந்த எண்ணிக்கையில் இன்னும் ஐந்து நாடுகளை சேர்த்துக் கொள்ளலாம் என்று சிபாரிசு செய்தனர். அந்த ஐந்து நாடுகள்: ஜப்பான், ஜெர்மனி, இந்தியா, பிரேசில் மற்றும் ஆப்ரிக்காவில் இருந்து ஒரு முக்கியமான நாடு. செப்டம்பர் 21, 2004-ல் இந்த நாடுகள் கூட்டாக மற்ற நாடுகளை ஆதரிப்பதாக ஒரு அறிக்கை வெளியிட்டது. இதை பிரான்சு மற்றும் இங்கிலாந்து ஆகியவை இதை ஆதரிப்பதாக கூரியது.

நம் நாடும் கூடிய விரைவில் நிரந்தர உருப்பினர் ஆகும் என்று நம்புவோம்...வாழ்க பாரதம்...வளர்க தமிழ்...

Tuesday, April 05, 2005

The Expanding Universe

மனித குலம் இப்பொழுது இருக்கும் நிலைக்கு எடுத்ததும் வந்து விடவில்லை. ஆதியில் மனிதன் இயற்கையை கண்டு பயந்தான். இயற்கை சீற்றங்கள் அவனை பாடாய் படுத்தி விட்டது. முனுக்கென்றால் அவன் உயிர் இழந்தான். இவை யாவும் அவனை யோசிக்க வைத்து விட்டது. இயற்கையை வெல்ல முடியுமோ முடியாதோ, அதன் சீற்றங்களிடமிருந்து தப்பிக்கவாவது வேண்டும் என்று யோசித்தான். அதன் விளைவு தான் விஞ்ஞானம். அது அறிவியல். மனிதன் discovery செய்ய போக அவன் invention செய்ய ஆரம்பித்தான். Discovery-யின் விளைவாக இந்த பிரபஞ்சத்தை ஆராய ஆரம்பித்தான். மண்னை உருக்கி பூதக் கண்ணாடி (lens) செய்ய ஆரம்பித்தான். அந்த ஆடியை வைத்து இந்த பிரபஞ்சத்தை ஆராய்ந்தான். அந்த ஆராய்ச்சி தலைமுறைகளைத் தாண்டி சென்றது. அங்கே கண்ட பல கோடி நட்சத்திரக் குடும்பங்களும், galaxy-க்களும் அவனை ஆச்சரியப்படுத்தின. அவன் பல கேள்விகளுக்கு விடை தேட ஆரம்பித்தான். அந்த கேள்விகளில் ஒன்று தான் "இந்த பிரபஞ்சம் விரிவடைகிறதா?". இதன் விடை "Universe is Expanding".

இந்த கேள்வியை கேட்கும் பொழுது எல்லோரும் ஒருவருக்கு நிச்சயம் நன்றி சொல்ல வேண்டும். அவர் தான் எட்வின் ஹப்பிள் (Edwin Hubble). அவர் தான் நாம் இந்த பிரபஞ்சத்தை நாம் பார்க்கும் பார்வையை மாற்றியவர். 1929-ல் அவர் இந்த பிரபஞ்சம் விரிவடைகிறது என்று காண்பித்தார். (ஆனால் அவரை 1983-ல், அவர் மறைந்து 36 ஆண்டுகளுக்கு பிறகு, தான் அங்கீகரித்து, Space Telescope-க்கு அவர் பெயரை வைத்தார்கள்.

20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஹப்பிள் தன் ஆராய்ச்சியை தொடங்குவதற்கு முன், "nebulae" (லத்தீனில் mist / cloud) என்ற நட்சத்திரக் கூட்டத்தை பற்றிய வாக்குவாதம் நடைப்பெற்றது. அந்த காலகட்டதில் நம் பால் வெளித் தோற்றத்திற்கு (Milky Way Galaxy) வெளியே பிற Galaxy-க்கள் இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை. ஹப்பிள் அந்த nebulae-க்கள் நம்முடைய பால் வெளித் தோற்றத்தை சேர்ந்தது இல்லை என்று கண்டுபிடித்தார். எப்படி கண்டுபிடித்தார்? இதற்கு அவர் அந்த காலக்ஸி-க்கள் வெளியிடும் வெளிச்சத்தின் wavelength-ஐ உபயோகித்தார். WaveLength என்பது இரு அலைகளின் தூரம். ஒளி (light) என்பது சீரான மற்றும் தொடர்ச்சியான அலைகளைக் கொண்டது. இந்த இரு பக்கத்து அலைகளுக்கான தூரத்தை wavelength என்பர். இந்த wavelength தான் ஒரு ஒளியின் நிறத்தை தீர்மானிக்கும். Wavelength அதிகமாக அதிகமாக நிறம் சிகப்பாகவும், குறைவாக குறைவாக ஊதா வாகவும் இருக்கும் (இது மனித கண்களுக்கான ஒரு விளக்கம்). நம் கண்களுக்கு ஒரு குறிப்பிட்ட wavelength (400 nm - ஊதா to 700 nm - சிகப்பு) உள்ள வெளிச்சம் மட்டுமே தெரியும். மற்றவை கண்ணுக்கு புலப்படாத ரேடியோ அலைகளாகவும் (அதிக wavelength, 10 சென்டிமீட்டர் முதல் சுமார் 100 கிலோ மீட்டர் வரை) , புற ஊதாக் கதிர்களாகவும் (குறைந்த wavelength உதா, X-Ray, Gamma-Ray, 100 நேனோ மீட்டர் முதல் 0.0000001 நேனோ மீட்டர் வரை) கண்ணுக்குத் தெரியாமல் வெளிப்படும்.

இந்த wavelength-களை வைத்து இந்த பிரபஞ்சம் விரிவடைகிறதா என்று கண்டுபிடித்தார். ஒரு காலக்ஸியில் இருந்து வெளிப்படும் வெளிச்சமானது (light) அதிக wavelength-ஐ கொண்டதாகவும், அதன் நிறம் சிகப்பை நோக்கி செல்வதாகவும் இருந்தால், அந்த காலக்ஸி நம்மிடம் இருந்து விலகி செல்கிறது என்று அர்த்தம். அதுவே குறைந்த wavelength-ஐ கொண்டதாகவும், அதன் நிறம் நீலத்தை நோக்கி செல்வதாகவும் இருந்தால், அந்த காலக்ஸி நம்மை நோக்கி வருகிறது என்று அர்த்தம். இவைகளை முறையே Red shift மற்றும் Blue shift என்று கூறுவர். அது என்ன Red Shift மற்றும் Blue shift? இதை அறிந்து கொள்வதற்கு முன், Doppler Effect-ஐ பற்றி தெரிந்து கொள்வோம். சாலையில் செல்லும் பொழுது ஒரு வாகனம் உங்களை (சேற்றை வரி இறைக்காமல்) கடந்து செல்வதைப் போல நினைத்துக் கொள்ளுங்கள். அந்த வாகனம் உங்களை நோக்கி வரும்பொழுது அதன் சத்தம் அதிகமாகவும், உங்களை கடந்து செல்லும் பொழுது அதன் சத்தம் குறைவாகவும் இருக்கும். இது எப்படி? அந்த வாகனம் உங்களை நோக்கி வரும் பொழுது அது ஒலி (sound) அலைகளை எல்லா பக்கமும் அனுப்பும். ஏதோ ஒரு பக்கத்தில் நீங்கள் இருப்பீர்கள். அந்த ஒலி (sound) உங்களையும் வந்து சேரும். (வந்து சேருவதை உங்களால் உணர முடியவில்லை என்றால் ஒரு நல்ல என்ட் specialist-ஐ, அதாவது ENT specialist-ஐ, பார்க்கவும்). அந்த ஒலி உங்களை நோக்கி வர வர அதன் wavelength சிறுகும். இப்படி சிறுகும் பொழுது அதன் frequency அதிகமாகும். (Frequency - ஒரு குறிப்பிட்ட நேரத்தில், பெரும்பாலும் ஒரு நொடியில், ஏற்படும் அலைகளின் எண்ணிக்கை) Frequency அதிகமாக அதிகமாக அதன் சப்தம் (அல்லது சங்கீதம்) அதிகரிக்கும். இதுவே, அந்த ஒலி (sound) உங்களை விட்டு விலகி செல்ல செல்ல அதன் wavelength அதிகமாகும். இப்படி அதிகமாகும் பொழுது அதன் frequency குறையும். Frequency குறைய குறைய அதன் சப்தம் குறையும். (இதை வைத்துத் தான் போக்குவரத்துக் காவலர்கள் நீங்கள் ஒரு வாகனத்தில் செல்லும் வேகத்தை கணக்கிட்டு, வேகமாக சென்றால் கண்டிக்கிறார்கள்).

ஆக, இந்த Doppler Effect-ஐ வைத்து Red Shift மற்றும் Blue Shift-ஐ விவரிக்கின்றனர். ஒரு பொருள் ஒரு குறிப்பிட்ட தூரத்தில் நிலையாக இருந்தால், அது பொதுவாக பச்சை நிர ஒளி அலைகளை வெளிப்படுத்தும். ஒரு பொருள் உங்களை நோக்கி வந்தால், அதன் wavelength குறைவாக இருக்கும். அதனால் அதன் frequency அதிகமாக இருக்கும். அதன் நிறம் நீல நிறமாக இருக்கும் (400 nm). இது Blue shift. அதுவே, ஒரு பொருள் உங்களை விட்டு விலகி சென்றல், அதன் wavelength நீளமாக (lengthy) இருக்கும். அதனால் அதன் frequency குறைவாக இருக்கும். அதன் நிறம் சிகப்பு நிறமாக இருக்கும் (700 nm). இது Red Shift. (அம்மாடியோவ்! ஒரே குழப்பமாக இருக்கிறதா...இது வரை புரியவில்லை என்றால் இன்னொரு முறை படிக்கலாம்...)

ஆக...ஒரு காலக்ஸியில் இருந்து வெளிப்படும் ஒளி Red Shift-ஆக இருந்தால் அந்த காலக்ஸி நம்மை விட்டு விலகிச் செல்வதாக அர்த்தம். அதுவே, அந்த காலக்ஸியில் இருந்து வெளிப்படும் ஒளி Blue Shift-ஆக இருந்தால் அந்த காலக்ஸி நம்மை நோக்கி வருவதாக அர்த்தம். இந்த பிரபஞ்சத்தில் உள்ள பெரும்பாண்மையான காலக்ஸிக்கள் Red shift-ஆகவே இருக்கிறது. அதனால், இந்த பிரபஞ்சம் விரிவடைகிறது. அவரால் இந்த சிகப்பு நிறங்களை (Red shift) வெளிப்படுத்தும் காலக்ஸிக்களின் தூரத்தை அளக்க முடியவில்லை. ஆனால், அவர் கண்டுபிடித்தது, இந்த காலக்ஸிக்கள் எவ்வளவு Red shift வெளிப்படுத்துகிறதோ அந்த அளவிற்கு தூரமானதாகும் என்று. அதாவது, தூரம் அதிகரிக்க அதிகரிக்க அது நம்மை விட்டு விலகிச் செல்லும் வேகம் அதிகரிகும். அதாவது, This Universe must be Expanding.

இந்த பிரபஞ்சம் விரிவடைகிறது என்றால் அதற்கு ஒரு மையப் புள்ளி இருக்கவேண்டும் அல்லவா? அது? அடுத்த blog-ல் பார்ப்போம்.

Thursday, March 31, 2005

விண்கற்கள்

விண்கற்களைப் பற்றி பெரும்பாலும் நமக்கு தெரிந்ததெல்லாம் கதைகள் தாம். விண்கற்கள் என்பது ஆங்கிலத்தில் Asteroids - Any of numerous small celestial bodies composed of rock and metal that move around the sun (mainly between the orbits of Mars and Jupiter). இந்த விண்கற்களை பெரிய கற்களாக உருவகம் செய்து கொள்ளலாம். இவை எப்படி உருவாகிறது? இந்த சூரிய குடும்பம் உருவாக்கத்தில் உதிர்ந்த கழிவுகள் தாம் இந்த விண்கற்கள். இவை பெரும்பாலும் கடினமான பாறை மற்றும் உலோகங்களால் உண்டானவை. அவைகள் இந்த புவியீர்ப்பு விசை இல்லாத பிரபஞ்சத்தில் (அனாமத்தாக) மிதந்து சென்று கொண்டிருக்கும். இப்படி அலைந்து கொண்டிருக்கும் கற்களும் தேவையான அளவு புவியீர்ப்பு விசை கொண்டால் ஒரு கிரகம் ஆகி அது தன் சொந்த பாதையில் "என் வழி, தனி வழி" என்று பயனிக்கும். இந்த புவியீர்ப்பு சக்தி இல்லாததால் அவையால் மற்ற விண்கற்களையோ அல்லது மற்ற கிரகங்களையோ ஈர்க்க முடிவதில்லை. இந்த சூரிய குடும்பத்தில் உள்ள எல்லா விண்கற்களும் ஒன்று சேர்ந்தாலும், அதன் அளவு நம் பூமியின் நிலவை விட சிறியதாக இருக்கும். இவற்றில் ஒன்று நம் பூமியை, பேருந்தில் செல்லும் பெண்களை உரசும் ரோமியோக்களைப் போல சும்மா just like that உரசினால்? வடிவேலு பாஷையில், "அம்புட்டு தேன்...பனக்காரன், ஏழை, நல்லவன், கெட்டவன், படித்தவன், படிக்காதவன், ஆட்டம் போட்டவன், அடங்கி இருப்பவன், Software Engineer எல்லா பயலுவளும் போக வேண்டியதுதேன்".

இந்த விண்கற்கள் பெரும்பாலும் செவ்வாய் மற்றும் வியாழன் கிரகத்திற்கு இடையில் சுற்றுபவை. இவை நம் பூமியைத் தாக்குவதற்கு எந்த அளவு சாத்தியம் இருக்கிறது என்று பார்த்தால், அது ஒவ்வொரு 100 மில்லியன் வருடத்திற்கு ஒரு முறை. அதனால் நாம் பதுகாப்பாகத்தான் இருக்கிறோம் (விண்வெளியின் மொழியில் "இப்போதைக்கு"). இந்த விசயத்தில் நம் முன்னோர்களான டைனோசர்ஸ் என்னவோ சுத்தமாக அதிர்ஷ்டம் அற்றவை தான். சுமார் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அவை இந்த மாதிரி ஒரு விண்கல்லால் தான் அதன் இனம் பூண்டோ டு அழிந்தன. அந்த நிகழ்ச்சியால் பூமியில் பல கால நிலை மாற்றங்கள் நிகழ்ந்தன. குளிர்ந்த பகுதிகள் சூடாகவும், சூடான பகுதிகள் குளிர்ந்த பகுதியாகவும் மாறின.

நம் சூரிய குடும்பத்தில் ஒரு aestroid belt உள்ளது. அது இரு பகுதிகளைக் கொண்டது. Inner Belt மற்றும் Outer Belt. Inner Belt என்பது நம் சூரியனில் இருந்து 250 மில்லியன் மைல் தொலைவிற்குள் இருப்பவை. மற்றவையாவும் இருப்பது Outer Belt-ல். இந்த belt-களுக்கு அப்பாலும் மிக சில விண்கற்கள் உள்ளன. நம் சூரிய குடும்பத்தில் சுமார் 26 பெரிய விண்கற்கள் உள்ளன. மேலும் லட்சக்கணக்கான சிறிய விண்கற்கள் உள்ளன. இந்த சிறிய விண்கற்கள் மணலின் அளவு கூட இருக்கும். இதில் மிகப்பெரிய விண்கல் ஜூன் 4, 2002-ல் கண்டுபிடிக்கப்பட்ட "Quaoar" ஆகும். இதன் விட்டம் 1,200 கி.மீ ஆகும். நம் பூமியில் பத்தில் ஒரு பகுதி விட்டம், அல்லது, நிலவின் மூன்றில் ஒரு பகுதி விட்டம் கொண்டது. அது சூரியனை 6 பில்லியன் கி.மீ சுற்றுகிறது. அது சூரியனை ஒரு சுற்று சுற்றி வர பூமியின் 286 வருடங்கள் ஆகிறது. இது பாறைகள் மற்றும் ஐஸ்களால் உருவானதாக "நம்பப்படுகிறது". மற்றொரு பெரிய விண்கல், "2001 KX76" ஆகும். இது புளூட்டோ கிரகத்தின் அருகில் சுற்றுகிறது. இதற்கு அடுத்து பெரிய விண்கல், "Ceres" ஆகும்.

Asteroid Name and NumberDiameter (km)Mass (kg)Mean Distance from the Sun (km)Orbital PeriodDiscoverer, Date of Discovery
1. Ceres960 x 9328.7 x 10204.139 x 108 km4.60 yearsPiazzi, 1801
2. Pallas570 x 525 x 482 km3.18 x 10204.145 x 108 km4.61 yearsHeinrich Olbers,1802
3. Juno240 km2.0 x 10192.7 AU4.36 yearsK. Harding, 1804
4. Vesta530 km3.0 x 10203.534 x 108 km3.63 yearsH. Olbers, 1807
5. Astraea..3.89 x 108 km (2.58 AU)4.13 yearsHencke, 1845
10. Hygiea430 km.4.703 x 108 kmxx yearsDe Gasparis, 1849
15. Eunomia272 km.3.955 x 108 kmxx yearsDe Gasparis, 1851
433. Eros(NEA)34.7 x 17.4 x 14 km7 x 1015 kg2.25 x 108 km
(1.5 AU)
1.76 yearsGustav Witt andAuguste H.P. Charlois, 1893
951. Gaspra34 x 20 km10 x 1015 kg2.05 x 108 km3.29 yearsGrigoriy N.Neujamin, 1916
1221. Amor (NEA)..1.45 x 108 km (0.97 AU)2.66 yearsE. Delporte, 1932
1862. Apollo (NEA)1.6 km2 x 1012 kg2.20 x 108 km (1.47 AU)1.81 yearsK. Reinmuth,1932
2062. Aten (NEA)..2.20 x 108 km (1.92 AU)0.95 yearsHelin, 1976


1989-ல் 0.4 கி.மீ விட்டமும், 74,000 கி.மீ வேகமும் கொண்டு பூமிக்கு மிக அருகில் ஒரு விண்கல் வந்தது. பூமியும் மயிரிழையில் தப்பியது. மயிரிழையின் தூரம் 6,40,000 கி.மீ. அதாவது 4,00,000 மைல்கள். பூமிக்கு மிக அருகில் வந்து சாதனை(!) படைத்தது டிசம்பர் 9, 1994-ல், 1,03,500 கி.மீ தூரத்தில் வந்த ஒரு கல். இதை 0.0007 AU என்று குறிப்பர். 1 AU அல்லது Astronomical unit என்பது பூமிக்கும் நிலவிற்கும் உள்ள தூரம். ஜூன் 2002-ல் visit அடித்த ஒரு விண்கல்லின் தூரம் பூமியில் இருந்து 1,20,000 கி.மீ. என்ன நாம் டைனோசர்களை விட மிகுந்த பாகியவான்கள் தானே? இல்லை என்று சொல்பவர்கள் இதையும் படியுங்கள்.

1970 வரை, விண்கற்கள் பற்றிய ஆர்வம் குறைவாகத்தான் இருந்தது. ஆனால், பிறகு சில சம்பவங்கள் இதை மாற்றியது. செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய கிரகங்களுக்கு இடையில் இருந்த aestroid belt-ல் இருந்து சில கற்கள் அதன் சுற்றுப்பாதையில் இருந்து பூமியின் அருகில் இருக்கும் முனைக்கு நகர்வது தெரிந்தது தான் இந்த மாற்றங்களுக்குக் காரணம். இவ்வாறு நுழையும் கற்கள் பூமியின் ஈர்ப்பு சக்தியால் பூமியை நோக்கி வருகின்றது.

சுமார் 200 மீட்டர் விட்டமுள்ள ஒரு கல், கடலில் விழுவதாக வைத்தாலும், அது ஆழிப் பேரலைகளை (சுனாமி) உருவாக்கும். சுமார் 1 கி.மீட்டர் விட்டமுள்ள ஒரு கல் எழுப்பும் புகை மண்டலம் இந்த பூமியில் சுமார் 1 வருடம் சூரிய ஒளி படாமல் வைக்கும். இதன் காரணமாக பூமியில் குளிர் அதிகரிக்கும். உணவுத் தட்டுப்பாடு வரும். இந்த 1 கி.மீட்டர் கல் தான் டைனோசார்ஸ் & Co. இனத்தின் அழிவுக்கும் காரணமாம்.

மார்ச் 23, 1989-ல் "1989 FC" என்னும் பெயரில், 0.3 மைல் விட்டத்தில், 1,000 one-megaton hydrogen bombs kinetic energy கொண்ட விண்கல் ஒன்று (ஹிரோஷிமாவில் போடப்பட்ட அனுகுண்டைப் போல 50,000 மடங்கு சக்தி வாய்ந்தது) பூமியில் அருகில் வந்து சென்றது. அருகில் என்றால், 2 A.U தான். அதுவும் இது கடந்து போகும் பொழுது தான் கண்டுபிடிக்கப்பட்டது.

ஜூன் 30, 1908-ல் சுமார் 70 மீட்டர் (கனிக்கப்பட) விட்டமுள்ள ஒரு கல் 1000 சதுர கி.மீ பரப்பளவில் சைபீரியன் காட்டை அழித்தது. அதுவும் அந்த கல், பூமியில் மோதவில்லை. மாறாக, அது பூமியை நோக்கி பயணித்த வழியில் பூமியில் இருந்து 5 கி.மீ உயரத்தில் சைபீரியன் காட்டின் மேல் வெடித்தது (அதாவது ஆவியானது). ஆனால் அதன் சக்தி ஒரு பெரிய அனுகுண்டை விட சக்தி வாய்ந்தது. 30 கி.மீ சதுர காடுகள் தட்டையானது. மரங்கள் சட்டென்று ஒரு நொடியில் எரிந்து சாம்பலானது. 14 கி.மீ வரை மரங்கள் "ஒரு பக்கத்தில்" நிர் உரிஞ்சப்பட்டு வற்றியது. 200 கி.மீ தொலைவில் ஒரு வீட்டில் வேலை பார்த்திருந்த தச்சர்கள் தூக்கி எரியப்பட்டனர். Ground zero-வில் (பாதித்த பகுதியின் மையப் பகுதி) இருந்து 80 கி.மீ-க்குள் இருந்தவர்கள் இறந்தனர். அதுவும் இந்த கல் ஆவியாகக் கூடிய பொருளால் ஆனது. அதுவே பாறையாக இருந்திருந்தால்...???

"இதெல்லாம் சும்மா trailer தாம்மா...இன்னும் main picture-ஐ பாக்கலையே..."

Wednesday, March 16, 2005

1-D, 2-D, 3-D, 4-D...

சில விசயங்களை நாம் அறிந்திருப்போம், அனுபவித்திருப்போம். ஆனால் அவைகள் என்ன, எவ்வாறு நடக்கிறது என்று தெரியாது...அதில் ஒன்று தான் 3-D படங்கள். தமிழில் வந்த முதல் மற்றும் ஒரே 3-D திரைப்படம் "மை டியர் குட்டிச்சாத்தான்".

அது என்ன 3-D திரைப்படம்? இதற்கும் மற்ற படங்களுக்கும் என்ன வித்தியாசம்?

3-D-யை பார்ப்பதற்கு முன், முதலில் 1-D மற்றும் 2-D ஆகியவை என்ன என்று பார்க்கலாம். இங்கு "D" என்பது Dimension-ஐ குறிக்கிறது. அதாவது பரிமாணம். அதற்கு விளக்கம்...Dimension என்பது "the magnitude of something in a particular direction (especially length or width or height)".

1-D என்பது...ஒரு காகிதத்தில் ஒரு கோட்டை வரைந்து கொண்டு, அதில் ஒரு புள்ளியை வைக்கவும். இப்பொழுது அந்த புள்ளி அந்த கோட்டில் எங்குள்ளது என்ற கேள்விக்கு உதாரணமாக 5 சென்டிமீட்டர் தூரத்தில் என்பது பதிலாகும். இந்த 5 சென்டிமீட்டர் தூரம் என்பது "அந்த கோட்டின் ஏதாவது ஒரு மூலையில் இருந்து 5 சென்டிமீட்டர் தூரத்தில்..." என்று பொருள். இது 1-D ஆகும். (2-D பற்றி வரும் பொழுது இது இன்னும் தெளிவாகும்). இங்கு அந்த கோடு இருப்பது 1-D-ல். இங்கு ஒரு பரிமாணத்திலேயே அந்த புள்ளி இருக்கும் இடம் தெரிகிறது.

ஒரு காகிதத்தை எடுத்துக் கொள்ளவும். அந்த காகிதத்தில் எங்கேனும் ஒரு புள்ளியை குறித்துக் கொள்ளவும். இப்பொழுது அந்த புள்ளி அந்த காகிதத்தில் எங்கிருக்கிறது என்று சரியாக சொல்ல வேண்டும். முன்பு சொன்னதைப் போல 5 சென்டிமீட்டர் என்று சொல்ல முடியாது. காரணம், 5 சென்டிமீட்டர் என்பது எந்த திசையில் வேண்டுமானாலும் இருக்கலாம் (5 சென்டிமீட்டர் அரைவிட்டம், radius, கொண்ட ஒரு வட்டத்தைப் போல). எப்படிச் சொல்ல? இப்பொழுது ஒரே ஒரு co-ordinate பத்தாது. மற்றொன்று தேவை. இப்படிச் சொல்லலாம்...அந்த புள்ளி அந்த காகிதத்தின் ஒரு மூலையில் இருந்து 3 சென்டிமீட்டர் வலமாகவும் (X-Axis), அங்கிருந்து 4 சென்டிமீட்டர் வடக்கு நோக்கிச் சென்றால் (Y-Axis) கிடைக்கும் என்று. இது மிகச் சரியாக அந்த புள்ளியை கண்டுபிடிக்கும். இப்பொழுது அந்த புள்ளி இருப்பது ஒரு தட்டையில் (Plane). தட்டை என்பது இரு பரிமாணங்களை கொண்டது. இங்கு இந்த இரண்டு பரிமாணங்களும் இருந்தால் தான் தட்டையில் ஒரு புள்ளியை கண்டுபிடிக்க முடியும். இங்கு இந்த இரண்டு பரிமாணங்களும் ஒன்றை ஒன்று 90 டிகிரி கோனத்தில் perpendicular-ஆகத்தான் இருக்க வேண்டும். அதாவது ஆங்கில "L" போல.

அடுத்து, முப்பரிமாணம். ஒரு பெட்டியை எடுத்துக் கொள்ளலாம். அல்லது இன்னும் பரிச்சயமாக ஒரு அறையை எடுத்துக் கொள்ளலாம். அந்த பெட்டி அல்லது அறை என்பது என்னவென்றால், அடுக்கி வைக்கப்பட்ட காகிதங்கள். அவ்வளவே. அதாவது நீளம், மற்றும் அகலம் ஆகிய இரு பரிமாணத்துடன் மூன்றாவதாக "உயரம் / ஆழம்" என்ற பரிமாணத்தையும் சேர்த்துக் கொள்வது. அந்த அறையில் ஒரு பறவை இருப்பதாக நினைத்துக் கொள்ளவும். அந்த பறவை சரியாக எந்த இடத்தில் இருக்கிறது எனத் தெரிந்து கொள்ள, இரு பரிமாணத்தில் பார்த்தது போல "ஒரு மூலையில் இருந்து 3 சென்டிமீட்டர் வலமாகவும் (X-Axis), அங்கிருந்து 4 சென்டிமீட்டர் வடக்கு நோக்கிச் சென்றால் (Y-Axis) கிடைக்கும்" என்று கூரமுடியாது. காரணம் அந்த அறையில் இந்த இரு புள்ளிகள் குறிக்கும் இடங்கள் நிறைய உள்ளன. அதனால், மூன்றாவதாக ஒரு co-ordinate-ம் தேவைப்படுகின்றது. அந்த மூன்றாவது பரிமாணம் தான் உயரம். இப்பொழுது அந்த பறவை, அந்த அறையில், "ஒரு மூலையில் இருந்து 3 சென்டிமீட்டர் வலமாகவும் (X-Axis), அங்கிருந்து 4 சென்டிமீட்டர் வடக்கு நோக்கியும் (Y-Axis), அங்கிருந்து மேல் நோக்கி (Z-Axis) 5 சென்டிமீட்டர் சென்றால் கிடைக்கும்" எனக் கூறலாம். இங்கு இந்த மூன்று பரிமாணங்களும் இருந்தால் தான் அந்த அறையில் அந்த பறவையின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியும். இங்கு இந்த மூன்று பரிமாணங்களும் ஒன்றை ஒன்று 90 டிகிரி கோனத்தில் perpendicular-ஆகத்தான் இருக்க வேண்டும்.

அடுத்து, நான்காவது பரிமாணம். இந்த நான்காவது பரிமாணம் என்பது "நேரம்". அதாவது, அதே அறையில், அந்த பறவை பறந்து கொண்டே இருக்கும் பொழுது, அதன் இடம் மாறும். அந்த பறவையின் சரியான / நிலையான இருப்பிடத்தை காண நமக்கு நான்காவதாக ஒரு பரிமாணம் தேவைப்படுகின்றது. இப்பொழுது அந்த பறவை, அந்த அறையில், "ஒரு மூலையில் இருந்து 3 சென்டிமீட்டர் வலமாகவும் (X-Axis), அங்கிருந்து 4 சென்டிமீட்டர் வடக்கு நோக்கியும் (Y-Axis), அங்கிருந்து மேல் நோக்கி (Z-Axis) 5 சென்டிமீட்டர் சென்றால், அந்த பறவை ஒரு குறிப்பிட்ட 'நேரத்தில்' இருந்த இடம் கிடைக்கும்" எனக் கூறலாம். இங்கு இந்த நான்கு பரிமாணங்களும் இருந்தால் தான் அந்த அறையில் அந்த பறவையின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியும். இந்த நான்காவது பரிமாணம் எப்படி வந்தது என்பதற்கு ஒரு சுவையான வரலாறு உள்ளது. அதை "அப்பால கண்டுப்போம்".

கீழே படத்தில் இருப்பது முதல் 4 பரிமானங்களை விளக்கும் படம்.


இதைப் போல கணிதத்தில் மொத்தம் ஆறு பரிமாணங்கள் உபயோகிப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன். ஐந்தாவதும், ஆறாவதும் என்ன என்று எனக்குத் தெரியவில்லை. தெரிந்தால் கூறலாம்.

என்ன முப்பரிமாணங்கள் என்றால் என்ன என்பது விளங்கியதா? இப்பொழுது 3-D படத்திற்கு வருவோம். நாம் இரு கண்களால் பார்த்தால் நமக்குத் தெரிவது முப்பரிமாணத்தில். "ஒரு கண்ணை மூடிக்கொண்டு பார்த்தால் உலகம் தட்டையாகத்தான் தெரியும்" என்ற அன்னி பெசன்ட் அம்மையார், மகாகவி பாரதியாரிடம் கூரியது போல, நம் ஒரு கண்ணை மூடிக்கொண்டு பார்த்தால், நமக்குத் தெரிவது இரு பரிமானங்களில் (plane). ஒரு கண்ணை மூடிக்கொண்டு ஒரு பொருளை உயரத்தில் தூக்கிப் போட்டு பிடிப்பது சற்றே கடினமானது. நாம் நம் "இரு" கண்களால் பார்க்கும் பொழுது, இரண்டு கண்களுக்கும் வெவ்வேறு பிம்பங்கள் தெரியும். ஒரு பொருளை பார்க்கும் பொழுது நம் இரு கண்களும் அந்த பொருளை நோக்கி focus செய்கிறது. இந்த நிலையில், நாம் பார்க்கும் பொருளுக்கு பின்னாலும், முன்னாலும் இருக்கும் பொருள்கள் இரண்டு பிம்பங்களில் தெரிவதை "உணரலாம்". இதற்கு ஒரு சிறிய பயிற்சி.
ஒரு வெள்ளைத் தாளில் ஒரு சிறு படத்தை போடவும். இப்பொழுது அந்த தாளின் முன்பு ஒரு பேனாவை வைத்து, இப்பொழுது அந்த எழுதுகோலை நோக்கவும். அப்பொழுது பின்னால் உள்ள தாளில் உள்ள படம் இரண்டாகத் தெரிவதை உணரலாம்...(இதே போலத்தான், சில வருடங்களுக்கு முன்பு ஆனந்த விகடனின் பின்புற அட்டைகளில், 3-D உருவில் பார்க்க வாராவாரம் படங்களை வெளியிட்டதை வாசகர்கள் நினைவு கூறலாம்...)

அதே போல, நாம் பார்க்கும் திரைப்படங்கள் யாவும் இரு பரிமாணங்களில் மட்டுமே காட்டப்படுகிறது (அதாவது, plane-ல்). அதனால், இரு கேமராக்கள் உதவியுடன், சற்று தள்ளி வைத்து, ஒரே காட்சியை எடுக்கும் பொழுது (நம் கண்களைப் போல) ஒவ்வொரு கேமராவிற்கும் ஒவ்வொரு பிம்பம் (image) தெரியும். இந்த இரு பிம்பங்களும் overlap ஆகும் பொழுது, நம் பார்வை மாறுவதால், நமக்கு 3-D படங்கள் மங்கலாகத் தெரிகிறது. அதனால் தான், இந்த 3-D படங்களைப் பார்க்க சிறப்பு கண்ணாடி தேவைப்படுகின்றது. இந்த கண்ணாடி ஒரு கண்ணில் சிகப்பாகவும், மற்றொரு கண்ணில் நீலம் / பச்சை வண்ணத்திலும் இருக்கும். சிகப்பு வண்ணம் நீலம் / பச்சை கேமராவில் ஒளிபரப்பாகும் படத்தையும், நீலம் / பச்சை வண்ணம் சிகப்பு கேமராவில் வரும் படத்தையும் பிரித்து காட்டும். அதனால் நமக்கு நேரில் (இரு கண்களால்) பார்ப்பது போல தெரியும்.
இது ஒரு விதமான ஏமாற்று வேலையே. அதாவது, நம் மூளைக்கு 'அங்கு தெரிவது முப்பரிமாணம்' என்ற சேதி சொல்லப்படுவதால், மூளை அதற்கேப்ப நம் கண்களை அட்ஜஸ்ட் செய்கிறது.

Monday, February 21, 2005

கருந்துளைகள் (The Black Holes)

இந்த பரந்து விரிந்த பிரபஞ்சத்தில் என்னற்ற பல அதிசயங்களும், ஆச்சரியங்களும், மனிதனால் உணர்ந்துகொள்ள முடியாத பல விசித்திரங்களும் உள்ளன. பிரபஞ்சத்தில் இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் "என்னற்ற" விஷயங்கள் எல்லாமே பிரபஞ்சத்தின் பிரம்மாண்டத்திற்கு ஒப்பிட்டால் ஒன்றுமே இல்லை என சொல்லலாம். அவற்றில் ஒன்று தான் இந்த கருந்துளைகள் (Black Holes).

இங்கு சூரியன் என்பதை, சூரியன் போன்ற ஒரு நட்சத்திரத்தை என்று படித்துக்கொள்ளவும். சூரியன் கருந்துளை ஆவதற்கு அந்த அளவு அதற்கு 'கெப்பாகுட்டி' இல்லை.

வின்வெளியில் இந்த கருந்துளைகள் என்றால் என்ன? இந்த பிரபஞ்சத்தில் உள்ள கோடானு கோடி நட்சத்திரங்களில் ஒன்று நம் சூரியன் (அட! சரத் குமார் படம் இல்லை...). இந்த சூரியனானது தன்னுடைய வாழ்நாளில் பெரும்பகுதி நாட்களில் அதனுடைய மையப் பகுதியிலிருந்து சூட்டை வெளிப்படுத்தும். இந்த சூட்டை தன்னுள் உள்ள ஹைட்ரொஜெனை (H), Nuclear Fusion என்னும் முறையில் ஹீலியமாக (He) மாற்றி சூட்டை வெளிப்படுத்துகிறது.. இந்த பிரபஞ்சத்தில் அதிகமாக கிடைக்கக் கூடிய வாயு ஹைட்ரொஜென் ஆகும். ஒவ்வொறு ஹீலியம் உட்கரு (Nuclues) உருவாக நான்கு ஹைட்ரொஜென் உட்கருக்கள் தேவைப்படுகின்றன.ஒவ்வொறு ஹீலியம் உட்கருவும் ஹைட்ரொஜெனின் 4 உட்கருக்களின் 99.3% எடையை கொண்டுள்ளன. மீதி உள்ள 0.7% ஹைட்ரொஜென் சக்தியாக வெளிப்படுகின்றது. அதனால், சூரியனில் இருந்து வெளிப்படும் சக்தியை E=MC2 என்னும் ஐண்ஸ்டீனின் விதிப்படி கண்டுபிடிக்கலாம். இதன் படி, ஒவ்வொரு நொடிக்கும் 600 மில்லியன் டன் ஹைட்ரொஜெனை 596 மில்லியன் டன் ஹீலியமாக மாற்றுகிறது. மீதியுள்ள 4 மில்லியன் டன் சக்தியாக வெளிப்படுகிறது. (ஒரு மில்லியன் என்பது 10 இலட்சம், ஒரு டன் என்பது 1000 கிலோ கிராம்). இதன் படி, ஒவ்வொரு சதுர அங்குலத்திலிருந்து சூரியன் 40,000 வாட் வெளிச்சத்தை கொடுக்கிறது. இவையாவும் நம்முடைய சூரியனை பற்றியது. நம்முடைய சூரியனைப்போல 10 மடங்கு எடை அதிகம் கொண்ட ஒரு சூரியனை கற்பனை செய்து கொள்ளுங்கள். இவ்வாறு ஒரு நட்சத்திரம் (சூரியன்) சில பில்லியன் ஆண்டுகள் சக்தியை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும். ஒரு பில்லியன் என்பது 100 மில்லியன், ஒரு மில்லியன் என்பது 10 இலட்சம். சூரியனும் தன் சொந்த புவியீர்ப்பு சக்தியை கொண்டிருக்கும். இப்படி சூரியன் சக்தியை வெளிப்படுத்தும் ஆற்றலால் தான் அது தன் சொந்த புவியீர்ப்பு விசையால் சுருங்காமல் இருக்கிறது. சூரியனின் மேற்பரப்பில், இந்த புவியீர்ப்பு விசை Escape Velocity-யாக கணக்கிடும்பொழுது அது ஒரு நொடிக்கு சுமார் ஆயிரம் கிலோ மீட்டர் (1000) ஆகும் (நம் பூமியில் இது 9.8 Meter/Second 2 என நினைக்கிறேன்). அதாவது, ஒரு பொருளை சூரியனின் மேற்பரப்பில் இருந்து ஒரு விநாடிக்கு 1000 கிலோமீட்டர் வேகத்திற்குள் மேல் நோக்கி எரிந்தால், அது திரும்பவும் சூரியனை நோக்கி இழுக்கப்படும். அதுவே, 1000 கிலோமீட்டர்க்கு மேல் இருந்தால் அது வேகமாக துப்பப்படும். இது சூரியனின் சாதாரன நிலை.ஆனால், ஒவ்வொரு தொடக்கமும் ஒவ்வொரு முடிவைக் கொண்டிருக்கும். அதன் படி, சூரியனில் உள்ள எரிபொருளும் சில பில்லியன் ஆண்டுகளில் தீர்ந்துவிடும். அப்படி தீரும் பொழுது, வெளியில் இருக்கும் அழுத்தம் தீர்ந்து போய்விடுகிறது. அதனால், சூரியன் தன் சொந்த புவியீர்ப்புக்கு பலியாக ஆரம்பிக்கிறது. அந்த புவியீர்ப்பு சூரியனை சுருங்கச் செய்கிறது. அப்படி சுருங்கும் பொழுது சூரியனின் பேற்பரப்பில் உள்ள புவியீர்ப்பு சக்தி அதிகமாகிறது. அதனால், அதன் Escape Velocity பலவாறு உயர்கின்றது. சூரியனின் விட்டம் சுமார் 60 கிலோமீட்டராக சுருங்கும் பொழுது, இந்த Escape Velocity-யானது ஒரு நொடிக்கு 300,000 கிலோமீட்டராக அதிகரிக்கின்றது. இந்த எண் ஒரு முக்கியமான எண். காரணம், இந்த வேகம் தான் இந்த பிரபஞ்சத்திலேயே ஒரு பொருள் அதிகமாக செல்லகூடிய வேகம். அது என்ன? அது தான் ஒளி. அதாவது, ஒரு பொருளை சூரியனின் (இனி அதன் பெயர் சூரியன் இல்லை) மேற்பரப்பில் இருந்து ஒரு விநாடிக்கு 300,000 கிலோமீட்டர் வேகத்திற்குள் மேல் நோக்கி எரிந்தால், அது திரும்பவும் சூரியனை நோக்கி இழுக்கப்பட்டுவிடும். ஆக, வேகமாக செல்லக்கூடிய ஒளியாலேயே சூரியனின் மேற்பரப்பில் இருந்து தப்பிக்க முடியாது. மேலும், அந்த கருந்துளை அருகில் இருக்கும் கிரகங்களும், விண்கற்களையும் (aestroids) தன் புவியீர்ப்பு சக்தியால் கபளீகரம் செய்ய ஆரம்பிக்கும். இங்கே ஒரு கேள்வி எழலாம். நாம் ஒரு பொருளை பார்ப்பதே ஒளியால் தான். ஒளியாலேயே கருந்துளைகளிடம் தப்பிக்கமுடியாது என்றால், பின் எவ்வாறு அந்த கருந்துளைகளை பார்க்கமுடியும்? அதற்கு திரு. மதன் அவர்கள் ஒரு அழகான விளக்கத்தை கொடுக்கிறார். "இப்படிப்பட்ட கருந்துளைகளை எவ்வாறு அறியலாம் என்றால், அரசியல் பொதுக்கூட்டத்திற்கு தலைவர் வந்துவிட்டாரா என்பதை தொண்டர்களிடம் எழும் பரபரப்பிலேயே அறிய முடியும். அதைப்போல, அந்த கருந்துளையின் சுற்றி இருக்கும் சிறு சிறு கிரகங்கள் மற்றும் விண்கற்கள் கருந்துளையை நோக்கி இழுக்கப்படும்".Black Holes - A region of space-time from which it is not possible to escape to infinity. கருந்துளையின் மேற்பரப்பு "Event Horizon" என்று குறிப்பிடப்படுகிறது. இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் எண்ணற்ற கருந்துளைகள் இப்படி நட்சத்திரங்கள் சுருங்குவதால் மட்டுமே ஏற்பட்டதில்லை. மாறாக, Big Bang எனப்படுகின்ற இந்த பிரபஞ்சத்தின் பிறப்பு காலத்தில் இருந்த சூடான அண்ட வெளிகள் சுருங்கியதாலும் ஏற்பட்டிருக்கலாம். சுமார் ஒரு பில்லியன் டன் எடையுள்ள ஒரு கருந்துளையின் விட்டம் (Radius) என்னவாக இருக்கும். அசர வேண்டாம் 10 -13 சென்டிமீட்டர் தான். அதாவது பூஜ்யம் புள்ளிக்கு பிறகு 13 பூஜ்யம் பிறகு ஒரு ஒன்று சென்டிமீட்டர் (0.00000000000001 சென்டிமீட்டர்). இப்படிப் பட்ட ஒரு கருந்துளையை நம் பூமியின் மேற்பரப்பில் வைத்தால், அது பூமியின் மையப்பகுதியை நோக்கி மிக வேகமாக விழுவதை யாராலும் தடுக்க முடியாது. ஆக இந்த கருந்துளையை வைத்து அதன் சக்தியை உபயோகிக்க ஒரே வழி, அதை பூமியின் சுற்றுப்பாதைக்கு அருகாமையில் ஒரு சுற்றுப்பாதையில் வைத்திருப்பது தான். அதை அங்கு கொண்டு வருவதற்கு ஒரே வழி, நியூட்டனின் விதிப்படி, அந்த கருந்துளைக்கு முன் அதை விட ஒரு பெரிய எடை கொண்ட ஒரு பொருளை அதற்கு முன்னே tow செய்ய வேண்டும்!!! (இந்த விசயத்தை தயவு செய்து எந்த அரசியல்வாதிகளிடமும் சொல்ல வேண்டாம்... காரணம் இதற்கும் tender விட்டுவிடுவார்கள்...)இந்த பிரபஞ்சத்தில் பல கருந்துளைகள் இருப்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. நம் பால்வெளித் தோற்றத்தில் Cygnus X-1 என்னும் கருந்துளையும், நமக்கு அருகாமையில் உள்ள காலக்ஸியில் Magellanic Clouds என்னும் கருந்துளையும் இருக்கின்றது. இப்படிப்பட்ட கருந்துளைகளின் மொத்த எண்ணிக்கை நிச்சயம் அதிகமாக இருக்கும். காரணம், இந்த பிரபஞ்சத்தின் வரலாற்றில் பல எண்ணற்ற நட்சத்திரங்கள் எரிபொருள் தீர்ந்து கருந்துளைகளாக ஆவியாகி போயிருக்கும். அவைகளின் எண்ணிக்கை நிச்சயம் இப்பொழுது இருக்கும் நட்சத்திரங்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கும். நம் பால்வெளித் தோற்றத்தில் மட்டும் சுமார் ஒரு இலட்சம் மில்லியன் கருந்துளைகள் இருக்கும். இந்த கணிப்பைப் பாருங்கள்...ஒளி (light) ஒரு வினாடியில் 1,86,000 மைல்கள் பயனிக்கும். அதாவது 2,99,793 கிலோ மீட்டர். இந்த ஒளி ஒரு வருடத்தில் எவ்வளவு தூரம் பயனிக்கிறதோ அதுவே ஒரு ஒளி ஆண்டு (Light Year) எனப்படும். அது, 9500000000000 கிலோ மீட்டர்கள். இப்பொழுது ஒரு ஒளி ஆண்டு நீளம், ஒரு ஒளி ஆண்டு அகலம், ஒரு ஒளி ஆண்டு உயரம் கொண்ட ஒரு பெட்டியை எடுத்துக் கொள்ளவும் (அதாவது கற்பனையில்). அந்த பெட்டியில் 300-க்கும் குறைவான கருந்துளைகளே இருக்கும்.

ஒரு கருந்துளையின் எடை குறைய குறைய (கவனிக்க, இது கருந்துளை ஆனபிறகு) அதன் தட்டவெட்ப நிலை கண்டபடி உயரும். வெப்பம் உயர உயர, அது மேலும் எடை இழக்கிறது. அது எடையற்று போகும் நிலையில், கடைசியாக அது வெடித்து கானாமல் போய்விடுகிறது. அந்த கடைசி நேர வெடியின் சக்தி மில்லியன் கணக்கான ஹைட்ரஜன் குண்டுகளை ஒரே இடத்தில் வைத்து வெடிக்கும் சக்திக்கு ஈடானது. சூரியனை விட சற்றே (!) பெரிய கருந்துளையின் வெப்பம், அதிகமில்லை gentlemen, ஒரு டிகிரியில் பத்து மில்லியன் பங்குதான் (மீண்டும் கவனிக்க, இது கருந்துளை ஆனபிறகு). இந்த வெப்பத்திலும் அது முழுவதும் கானாமல் போவதற்கு ஒரு மில்லியன் மில்லியன் மில்லியன் மில்லியன் மில்லியன் மில்லியன் மில்லியன் மில்லியன் மில்லியன் மில்லியன் மில்லியன் ஆண்டுகள் ஆகும்.

என்ன நாமெல்லாம் எம்மாத்திரம் எனப் புரிகிறதா?

Friday, February 18, 2005

Formals கலாச்சாரம்...

வேலைகளில் வகைகள் உண்டு. Blue Collar Job, White Collar Job இப்படி. தகவல் தொழில் நுட்பத்துறை அல்லது மற்ற White Collar job செய்யும் வேலை இடங்களில், வேலை செய்பவர்களை நாம் பெரும்பாலும் formals உடையில் பார்க்கலாம். Formals உடை என்றால் கால்சட்டை (trousers), முழுக்கை சட்டை அல்லது அரைக்கை சட்டை, ஷூ, மற்றும் டை ஆகியவை அணிந்து கொண்டு வரவேண்டும். இதில் டை அணிவது பெரும்பாலும் தேவையில்லை. சில நிறுவனங்களில் இது கட்டாயமாக்கப்படுகிறது. அதாவது தினமும் இத்தகைய உடையில் தான் வரவேண்டும். இத்தகைய நிறுவனங்களில் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் இதற்கு விதிவிலக்கு, சில நிறுவனங்களில் இந்த விதிவிலக்குக்கும் விதிவிலக்கு. அதாவது, எல்லா நாட்களிலும் formals உடையில் வரவேண்டும்.

இந்தியா போன்ற பூமத்திய ரேகை செல்லும் நாட்டில் (அதுதாங்க உஷ்ணம் அதிகம் உள்ள) இது தேவையா என்பது என் கேள்வி? மதம் எவ்வாறு மக்கள் வாழும் சூழ்நிலைகளைப் பொருத்து உருவானதோ, அதேபோல உடை கலாச்சாரமும் மக்கள் வாழும் சூழ்நிலைகளைப் பொருத்தே வளர்ந்தது. உதாரணமாக, நம் நாட்டில் நாம் வேட்டிக் கட்டுகிறோம் என்றால் அதற்கு காரணம் உண்டு. வேட்டி பெரும்பாலும் பருத்தியிலிருந்து நெய்யப்படுகிறது. இது நம் நாட்டின் வெப்பத்திற்கு ஏற்றது. அதே சமயம், இங்கிலாந்தை எடுத்துக் கொண்டால், அங்கு குளிர் அதிகம் அதனால் அவர்கள் அணியும் உடையே வேறுபாடானது. இதை விளக்கமாக பார்ப்போம்.

பூமத்திய ரேகை செல்லும் நாடுகளைத் தவிற மற்ற நாடுகள் பெரும்பாலும் குளிர் பிரதேசம். அவைகளில் இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா (இங்கு குளிரும், வெய்யிலும் மாறி மாறி இருக்கும்), பிரான்சு, ஜெர்மனி, நியூசிலாந்து, கனடா (இங்கு -25 டிகிரி செல்சியஸ் கூட இருக்குமாம்) போன்றவைகளை எடுத்துக் கொள்வோம். இவை பெரும்பாலும் அதிக குளிர் உள்ள பிரதேசங்கள். இந்த பிரதேசங்களில் உள்ள மக்கள் வெளியே செல்லும் பொழுது தங்கள் உடம்பில் குளிர் காற்று புகாதவாறு பார்த்துக் கொள்வார்கள். முழுக்கைச்சட்டை அணியும் பொழுது கையில் cuff இருக்கும். அது குளிர் காற்று கைகளின் உள்ளே புகாமல் இருப்பதற்கு. கழுத்தில் டை அணிந்திருப்பது உடம்பில் குளிர் காற்று புகாமல் இருப்பதற்கு. காலில் ஷூ அணிந்திருப்பது பாதங்களின் நுனிகளில் எழும்புகள் இல்லாததால் அவைகள் கடும் குளிரில் கடுமையாக பாதிக்கப்படாமல் இருப்பதற்காக. உடம்பில் over coat அணிவதும் குளிருக்காகத்தான். குளிருக்காக பணியில் (வேலையில்) இருக்கும் போது sweater அணிய முடியாது. அதனால் coat அணிகின்றனர்.

ஆனால், நாம் என்ன செய்கிறோம்! அவர்கள் அணியும் உடை தான் decency எனக் கருதி அதை அப்படியே நகல் எடுக்கிறோம் (அதாங்க, காப்பி). நம் ஊரில் சாக்ஸ் துர்நாற்றத்தை, செத்துப் போன எலிக்கு உவமையாகக் கூறுவது நன்றாக அறிந்திருப்பீர்கள். சென்னை போன்ற சூடான நகரங்களை நினைத்துப் பாருங்கள். மேற்கத்திய நாடுகளைப் போல உடை அணிந்து இருப்பது எவ்வளவு கடினம் (டை, coat ஆகியவை இல்லாதிருப்பினும்). அதற்காக வேட்டி சட்டை அணிய வேண்டும் எனக் கூறவில்லை. அது ஏன் கட்டாயமாக்கப்படுகிறது என்று தான் கேட்கிறேன். அலுவலகத்திற்கு பேருந்து ஏரும் வரையில் தான் நாம் ராஜா. பேருந்திலிருந்து இறங்கி அலுவலகத்திற்குள் நாம் நுழையும் பொழுது இந்த உடையும், வெய்யில் கொடுமையும் சேர்ந்து நம்மை என்ன பாடு படுத்திவிடுகிறது?

நம்ம ஊரில் அயல் நாட்டு மோகம் நம்மை எப்படி எல்லாம் ஆட்டுவிக்கிறது? நான் முக்கியமாக சொல்வது உடையை விட இந்த ஷூக்கள் அணிவது தான். அதுவும் அஹிம்சையை போதிக்கும் நாடு என்ற போர்வையில் எத்தனை மிருகங்களை இந்த ஷூக்களுக்காக கொல்கிறோம்!!! இந்த வெய்யிலில் நாம் ஷூக்களை அணிவதால் ஏற்படும் கொடுமை இருக்கிறதே...என்ன பாதங்கள் மிருதுவாக இருக்கும். அதற்காக துர்நாற்றத்துடன் அலைய முடியுமா என்ன? சிந்திப்போம்...

Thursday, February 17, 2005

E = MC2

இந்த உலகில் சில விஷயங்கள் மாறாதது...அதில் ஒன்று ஒளியின் வேகம் (ஒளி - Light). ஒளி மட்டும் தான் இந்த உலகின் வேகமாக பயனிக்கக் கூடியது. ஒளியின் வேகத்தை உலகில் வேறெதுவும் மிஞ்சமுடியாது...இதை அடித்தளமாக கொண்டது தான் திரு. ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் "Theory of Relativity". இந்த சித்தாந்தம் சொல்வது "அறிவியலின் விதிகள் அனைத்தும் அனைத்து சுதந்திரமாக நகரும் பொருட்களுக்கும் அவைகளின் வேகத்தை கணக்கில் கொள்ளாமல் சமமாக இருக்க வேண்டும்". (ஐயோ! ஆங்கிலத்திலேயே படியுங்கள். அதாவது "The laws of science should be the same for all freely moving observers, no matter what their speed"). ஐன்ஸ்டீனின் மிகவும் பிரபலமான வான E = MC2 என்பது என்ன?

இங்கே E என்பது "சக்தி" அதாவது "Energy"
M என்பது "எடை" அதாவது "Mass"
C என்பது ஒளியின் "வேகம்" அதாவது "Velocity of Light"

நினைவில் கொள்க, ஒளியின் வேகம் என்றும் மாறாதது. அதனால், Energy-யும், Mass-ம் மட்டும் கருத்தில் கொண்டால், Mass கூடக் கூட in-take Energy கூடும் அதனால் வேகம் (Velocity) குறையும். அதாவது, வேகத்தால் ஏற்படக் கூடிய சக்தியுடன் (Energy) அதன் எடை (Mass) சேர்ந்துக் கொள்ளும். இன்னொரு கோனத்தில், எடை (Mass) கூட்டுதல், வேகத்தைக் (Velocity) குறைக்கும். அதனால், எடை (Mass) குறைய குறைய வேகம் (Velocity) அதிகரிக்கும். ஒளியில் எடை இல்லாததால் அதுவே உலகில் வேகமாக செல்லக்கூடியது.

உதாரணத்திற்கு, ஒளியில் 10 சதவிகிதம் வேகமாகச் செல்லும் ஒரு பொருள் தன் எடையில் இருந்து 0.5 சதவிகிதம் கூடுவதாக வைத்துக் கொள்வோம். ஒளியில் 90 சதவிகிதம் வேகமாகச் செல்லும் அதே பொருள் தன் எடையை விட இரு மடங்கு எடை கொள்ளும். இப்பொழுது அந்த பொருள் ஒளியின் வேகத்திற்கு இணையாக பயனிப்பதாக வைத்துக் கொள்வோம், அதன் எடை இன்னும் வேகமாக அதிகரிக்கும். அப்பொழுது அது மேலும் மேலும் வேகமாக செல்ல அதிக சக்தியை எடுக்கும். இது சாத்தியமாகாத காரணத்தினால், தனக்குள் எந்த எடையும் இல்லாத ஒளி மட்டுமே இந்த உலகில் வேகமாகச் செல்லும்.

சரி, இன்னும் புரியாமல் இருப்பவர்களுக்கு, Real Analysis முறையில் ஒரு நிரூபனம்...

இப்பொழுது நாம் (எடை இல்லாத) ஒளியை விட வேகமாக ஒரு (எடை உடைய) பொருளால் பயனிக்க முடியும் என்று வைத்துக் கொள்வோம். (இதற்கு ஆங்கிலத்தில் Hypothesis என்று பெயர்). அந்த பொருள் ஒளியின் வேகத்தை அடையும் பொழுது, E=MC2 என்னும் விதிப்படி அதிகப்படியான சக்தியை (Energy) எடுத்துக் கொள்ளும். காரணம் அதற்கு எடை (Mass) உள்ளது. எடை (Mass) கூடும் பொழுது அதன் வேகம் கண்டிப்பாய் குறையும். வேகம் குறையும் என்பது நாம் எடுத்துக் கொண்ட Hypothesis-க்கு முரனானது. இந்த முரண்பாடு எதனால் வந்தது என்று பார்த்தால், அது நாம் அந்த பொருளுக்கு எடை கொடுத்ததால். அதனால், ஒளியை விட இந்த உலகில் வேகமாக எந்த பொருளும் பயனிக்க முடியாது...


பிற்சேர்க்கை...

ஒளி என்பது Photon என்னும் துகள்களால் ஆனது. Photon - Unit of Light. எப்படி எடையின் அளவை கிராம் என்கிறோமோ, அதை போல ஒளியின் அளவு இந்த Photon. Photon-களின் எடை என்ன தெரியுமா? பூஜ்யம். அதற்கு எடை கிடையாது. எடை இல்லாத ஒரு பொருள் தான் வேகமாக செல்லும். உங்களை சுமந்து கொண்டு பேருந்து 100 கி.மீ. வரை செல்ல முடியும். ஆனால், ஒரு யானையை சுமந்து கொண்டால், அதன் எடை காரணமாக வேகம் குறையும். அதனால், எடை வேகத்தை கட்டுப்படுத்துகிறது. இதையே மாற்றி சொல்ல வேண்டுமென்றால், எடை குறைவான ஒரு பொருளால் மிக வேகமாக பயனிக்க முடியும். எடையே இல்லாததால் ஒளி இந்த உலகின் வேகமாக பயனிக்கக் கூடியதாக இருக்கிறது.

Another பிற்சேர்க்கை...

'It's the Magna Carta of physics!' Albert Einstein's original theory of relativity manuscript goes on display for the first time


The original manuscript of Albert Einstein's groundbreaking theory of relativity has gone on display in its entirety for the first time.

Einstein's 46-page handwritten explanation of his general theory of relativity is being shown at the Israel Academy of Sciences and Humanities in Jerusalem as part of its 50th anniversary celebration.

In the manuscript, which helps explain everything from black holes to the Big Bang and contains the famous equation of E=MC², Einstein demonstrates an expanding universe and shows how gravity can bend space and time.Israeli students inspect Albert Einstein's General Theory of Relativity on display in its entirety for the first time

The academy's president Menahem Yaari said: 'We wanted something unique that would have global significance, and fortunately we could have access to a manuscript that has never been seen in its entirety before.'

First published in 1916, the general theory of relativity remains a pivotal breakthrough in modern physics.This is the first time the original manuscript has gone on display in its entirety for the first timeThe manuscript contains Einstein's explanations of his theory, including equations such as the E=MC²


anoch Gutfreund, former president of the Hebrew University and chair of its academic committee for the Albert Einstein Archives said: 'It changed our understanding of space, time, gravitation, and really the entire universe.
'I refer to it as the Magna Carta of physics. It's the most important manuscript in the entire archives.'

Despite its central place in the canon of Einstein's work, the original manuscript has never attracted as much attention as the man himself.Einstein left his papers to the Hebrew University in his will

According to Mr Gutfreund, museums around the world have been content to display only a few pages of the manuscript at a time, as part of larger features on the personal and professional accomplishments of perhaps the modern era's most influential scientist.

That is partly because the contents of the general theory, especially in the original German, remain too obscure for non-scientists.

It took Einstein eight years after publishing his theory of special relativity to expand that into his theory of general relativity, in which he showed that gravity can affect space and time, a key to understanding basic forces of physics and natural phenomena, including the origin of the universe.

But exhibit organisers say the significance of Einstein's pages of careful writing and diagrams will not be lost on casual viewers.

They say the display will present the manuscript in the context of the theory's legacy - which includes everything from modern space exploration to commercial satellite and GPS technology.

Mr Gutfreund said: 'The greatest challenge at the frontier of physics is to make progress on these issues, the ideas that Einstein developed, discarded, and the errors he made.

'People will be able to appreciate this even if they're not able to understand the contents.'

Einstein was one of the founders of the Hebrew University in Jerusalem.

He contributed the manuscript to the university when it was founded in 1925, four years after he was awarded the Nobel Prize in physics.

His will bequeathed the rest of his papers to the university upon his death in 1955.

The university is lending the manuscript to the academy for the anniversary celebration.

The manuscript will be on display until March 25, overlapping with the 131st anniversary of Einstein's birth on March 14.


Source:The Daily Mail Reporter