Friday, January 19, 2007

50. மணி - ஒரு நண்பனின் கதையிது


நம்முடன் விளையாடி, உறவாடிய நண்பன் ஒருவன் மனநிலை பாதிக்கப்பட்டு பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதை கண்டால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருந்தது எனக்கும்.

அவன் பெயர் மணி. எங்கள் தெரு தான். எதிர் வீடு. 'வெயிலோடு விளையாடி, வெயிலோடு உறவாடி'யவன். என்னை விட ஓரிரு வயது மூத்தவன். எல்லோரையும் போலத்தான் இருந்தான். தந்தை சிறிய வயதிலேயே இறாந்து விட்டார். தாயும், அவன் அண்ணனுடனும் வாழ்ந்து வந்தான். சிறிய வயதில் அவன் வயதுக்குறிய வளார்ச்சி அவன் அறிவுக்கு இல்லை தான். ஆனால், மற்றவரை போல தான். "எல்லோரும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் தாம். என்ன நான் கொஞ்சம் அதிகம் பாதிக்கப்பட்டவன்" என்று (இயக்குனர்) பாலா சொல்வார். அப்படித்தான் அவனும். பேச்சு கொஞ்சம் போல குழரி குழரி பேசுவான். அதனால் அவனுக்கு தெருவில் வைத்த பெயர் "புளுத்த வாயன்" (அந்த வலியெல்லாம் உணராத வயசு). அவனை அப்படி ஏதாவது சொன்னால் போதும் அவன் அம்மா சண்டைக்கு வந்துவிடுவார்கள். எங்களுடன் தான் விளையாடுவான். எங்கள் வீட்டின் அருகில் உள்ள அரசு பள்ளியில் தான் படித்தான்.

பின், ஒருநாள் அவனுக்கு ஆறுதலாய் இருந்த ஒரே சீவனான அவன் தாயும் இறந்தார். அப்பொழுது அவனுக்கு கூட இருக்க வேண்டியவர் அவர் அண்ணன் மட்டுமே. ஆனால், அவர் அவனை கண்டுகொள்ளவில்லை. அவர் திருமணம் ஆகி அவனை நிர்கதியாய் விட்டுவிட்டு சென்றுவிட்டார். சொத்திலும் பங்கு கொடுக்கவில்லை போல் இருக்கிறது. பிறகு அவனுக்கு என்ன நடந்தது என்று எனக்கும் தெரியவில்லை. காரணம், நானும் வேலை தேடி வீட்டை விட்டு கிளம்பி வந்து விட்டேன்.

அவன் தீவிர தி.மு.க. அனுதாபி. அவனை சீண்டவேண்டும் என்றால் கலைஞரை ஏதாவது சொன்னால் போதும். உடனே கோபம் வந்துவிடும். எங்கு இருந்தாலும் தேர்தல் என்றால் கட்டாயம் பூத்திற்கு வந்துவிடுவான். அவன் தான் பூத் ஏஜென்ட். அதனால், தேர்தலுக்கு அவனை கட்டாயம் தெருவில் பார்க்கலாம்.

கொஞ்ச நாள் பார்க்காமல் இருந்தேன். சில வருடங்களுக்கு பிறகு, ஒரு நாள் ஊரில் இருந்து சென்னை செல்லும் இரயிலில் அவனை பார்த்தேன். கூட ஒரு 7-8 சிறுவர்களுடன் இரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான். இரயிலை சட்டையால் சுத்தப்படுத்தி பின் காசு கேட்பார்களே, அதுபோல. அவன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். முதலில் அவனை எனக்கு அடையாளம் தெரியவில்லை. பின் கொஞ்ச நேரம் கழித்து அவன் வேலையை தொடர போய்விட்டான். பின் தான் உறைத்தது அவன் மணி என்று. பொது இடத்தில் அவனிடம் பேச எனக்கும் வெட்கமாக இருந்தது (ம்ஹூம்...இதை சொல்ல மட்டும் வெட்கம் இல்லை இந்த ராஸ்கலுக்கு). பின் தான் அவனுக்கு உதவாதது வருத்தத்தை தந்தது. அவன் என்ன எதிர்பார்த்திருப்பான்? கொஞ்சம் போல பணம். அவனுக்கு கொடுக்காததை நினைத்து எனக்கு நானே வெட்கப்படவேண்டியிருந்தது.

அப்புறம் அவனை தெரு பக்கம் காணவில்லை. இந்த பொங்கல் விடுமுறையில் ஊருக்கு சென்றிருந்த பொழுது (என் நண்பர்களில் ஒருவன் சொன்னது, "எல்லா சண்டாளன்களும் ஒன்னா வர்ராங்க. ஊர் என்ன ஆகப்போகுதோ?"), நண்பர்களுடன் அவன் கடையில் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தோம். அப்பொழுது நாங்களெல்லாம் சத்தம் போட்டு சிரித்துக் கொண்டிருந்தோம். அப்பொழுது அங்கு வந்து நின்றான் மணி. மழிக்காத தாடியுடனும், தலைவிரிகோலமாக பார்க்கவே பரிதாபமாக இருந்தது. சற்று நேரம் எங்களையே பார்த்துக் கொண்டிருந்தவன், எதுவும் பேசாமல் வெறித்து பார்த்துவிட்டு பின் சென்றுவிட்டான். அவன் என்ன நினைத்திருப்பானோ? பின் அவனைப் பார்த்ததும் அங்கு நிசப்தம் நிலவியது. எங்கள் யாருக்கும் பேச்சே வரவில்லை. வெங்கி, "ஏண்டா! நம்ம கூட வெளயாடின ஒருத்தன இப்படி பாகுறப்போ நமக்கே பகீர்ன்னு இருக்குடா" என்றான். வெலவெலத்து போய்விட்டேன். உண்மை தான். என சொல்வது என்றே தெரியவில்லை.

Wednesday, January 17, 2007

வெஜிடேரியனிசம்

2-3 வினாடிகள் மட்டுமே பார்த்த ஒரு விஷயம் ஏனோ என்னை உலுக்கியது. சென்ற வாரம் பேருந்தில் திருத்தணி செல்லும் வழியில் ஒரு கறி கடையில் ஒரு ஆடு செத்துக் கொண்டு இருந்தது. ஒருவர் இன்னும் இரண்டு ஆடுகளை அவற்றின் ஒற்றை பின்னங் கால்களை தன் ஒரே கையில் பிடித்து இழுத்துக் கொண்டு சென்றார். அந்த ஆடுகள் வர மறுத்து திமிரின. ஆனால், அவற்றால் என்ன செய்ய முடியும்?

மாமிசம் விற்கும் கடைகளுக்கென்று சில விதிமுறைகள் உண்டு. அதில் ஒன்று, இரண்டு உயிர்கள் (ஆடுகளோ அல்லது மாடுகளோ அல்லது கோழிகளோ) ஒன்றை ஒன்று பார்த்தபடி சாகக்கூடாது என்று. இந்தக் காட்சியை நினைத்துப் பாருங்கள், நீங்களும் கொல்லப்படுகிறீர்கள் உங்கள் கண் எதிரிலேயே உங்களுக்கு வேண்டப்படுபவரும் கொல்லப்படுகிறார். எப்படி இருக்கும்?
இந்தக் கட்டுரை 2 1/2 வருடங்களுக்கு முன் எழுதப்பட்டது (மொழிமாற்றப்பட்டது). அதன் ஒரு பகுதியை இங்கு மீண்டும் பதிகிறேன். நானும் அசைவம் தான். இஸ்கான் கோவிலில் இரண்டு நாள் யோகா பயிற்சி அளித்தார்கள். அங்கு சென்று வந்த பிறகு நானும் சைவம் ஆனேன், 6 மாதத்திற்கு. ஆனால், சரக்கடிக்கும் பொழுது சைட்டிஷ் சாப்பிடமுடியாததால், மீண்டும் அசைவம் ஆனேன் :)

சைவத்திற்க்கு அப்பால்...

நாம் என்ன உட்கொள்கிறோமோ நாமும் அதே தான். இன்றைய உலகில் புலால் உண்பது வாழ்க்கையின் அங்கமாக ஆகிவிட்டது. அதுவும் விரைவு உணவு வந்ததும் நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது. சைவமாக இருப்பதற்கும் அசைவமாக இருப்பதற்கும் அப்படி என்ன வித்தியாசம் இருக்கப்போகின்றது? முதலில் சைவத்திற்கும் அசைவத்திற்கும் என்ன வித்தியாசம் என்று பார்ப்போம்.இந்த உலகில் உள்ள ஒவ்வொரு உயிரிணத்திற்கும் மத்திய நரம்பு மண்டலம் (Central Nervous System) உள்ளது. இந்த மண்டலம் உணர்ச்சி சம்பந்தப்பட்டது. வலி என்றால் என்ன என்று இந்த மண்டலம் தான் ஒவ்வொரு உயிர்க்கும் உணர்த்துகின்றது. ஆடு, மாடு, கோழி, முயல், காடை, பாம்பு, ஏன் மனிதனுக்கும் மற்றும் நம் சாப்பிடும் அனைத்து உயிரினத்திற்கும் இந்த மத்திய நரம்பு மண்டலம் உள்ளது. அதனால் தான் இந்த உயிர்களை வதைக்கும் பொழுதும், கொல்லும் பொழுதும் வலி வந்து இந்த உயிர்கள் துடிக்கின்றது. சரி! நாம் சாப்பிடும் சைவ உணவு வகைகளான அரிசி, பருப்பு, பால், தாவரங்கள், ஏன் தண்ணீர் போன்றவையும் உயிருள்ளவைதானே என்ற கேள்வி எழலாம். அப்பொழுது இந்த உணவு வகைகளும் அசைவம் தானே ஆகின்றது? இல்லை! காரணம் இந்த உயிர்களுக்கு மேலே சொல்லப்பட்ட மத்திய நரம்பு மண்டலம் என்பது இல்லை. அதனால் அவற்றிற்கு வலி தெரியாது. இதுவும் ஒரு அசைவம் தான். ஆனால் நாம் இயற்கைக்கு உட்பட்டு, நமக்கு தரப்பட்டுள்ள எல்லை வரை செல்லலாம். கீதை சொல்கிறது : "இந்த உலகில் உயிர் வாழ ஒவ்வொரு உயிரும் அடுத்த உயிருக்கு உணவாக உள்ளது. ஆனால் நாம் நமக்கு அளிக்கப்பட்ட உணவை மட்டும் உண்டால், நாம் அனைத்து பாவங்களில் இருந்தும் விடுபடுவோம்".


கீழ்கானும் ஒப்பீட்டை பாருங்கள்...

Comparison Carnivore Herbivore Human
Teeth: Incisors Short and pointed

Broad, flattened and spade shaped Broad, flattened and spade shaped
Teeth: Canines Long, sharp and curved to

tear flesh
Dull and short (sometimes long for defense), or none Short and blunted
Teeth: Molars Sharp

Flattened Flattened
Chewing None; swallows food whole Extensive chewing Extensive chewing

Saliva Acidic saliva: Carbohydrate digesting enzymes not present Alkaline saliva: Carbohydrate digesting enzymes present

Alkaline saliva: Carbohydrate digesting enzymes present
Stomach Acidity with food in it <>pH 4 to 5 pH 4 to

5
Length of Small Intestine 3 to 6 times body length > 10 times body length 10 to 11 times body length

Colon Simple, short and smooth Long, complex Long, complex
Perspiration No skin

pores; perspires through tongue to cool body
Perspires through millions of skin pores Perspires through millions of skin pores

Nails Sharp claws Flattened nails or blunt hooves Flattened nails


நம்மிடம் உள்ள ஒரு தவறான கருத்து, "சைவ உணவு சாப்பிட்டால் புரதச் சத்து இருக்காது" என்பது. ஆனால் உண்மை என்னவென்றால் காய்கறிகள், பழங்கள், விதைகள், தானியங்கள், கொட்டைகள் முதலியவை அதிக அளவில் புரதச்சத்து கொண்டது. இந்த உலகின் சில பிரபல சைவர்கள்...1. மாகாத்மா காந்தி : "ஆன்மீகம் நம்முடைய தேவைக்காக செய்யப்படும் உயிர் கொலையை தவிர்க்க சொல்கிறது."

2. ஆல்பெர்ட் ஐண்ஸ்டீன் : "நம்முடைய வேலை உயிர் கொல்லும் மக்களிடம் மற்ற உயிர் மேல் அன்பு செலுத்துவதை எடுத்து சொல்ல வேண்டும்"

3. ஜான் ஊல்மேன் : "நாம் கடவுளை வணங்குவதும், அந்த கடவுள் உருவாக்கிய உயிரை கொல்லுவதும் ஒன்றுக்கொன்று முறன்பாடாக இருக்கிறது"

4. லியோ டால்ஸ்டாய் : "மனிதன் தன் வாழ்க்கையை சரியான பாதையில் செலுத்த விரும்பினால், முதலில் உயிர் கொலையை தடுப்பதில் இருந்து ஆரம்பிக்கட்டும்"

5. ஐசக் நியூட்டன்

6. தத்துவ ஞானி பிளேட்டோ

7. சாக்ரடீஸ்

8. பிதோகரஸ்

9. லியோனார்டோ டா வின்சி

10. கிரெக் சாப்பல்

11. ஓட்டப் பந்தைய வீரர் காரல் லீவிஸ்

12. மார்டினா நவரத்திலோவா


அசைவத்தின் விளைவுகள்...முதலிடத்தில் இருப்பது இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள். பிரிட்டனில் 50 சதகிவித மரணங்கள் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களே. 1961-க்கு முன்னாலேயே அமெரிக்க மருத்துவ சங்கத்தின் செய்திக் குறிப்பு "90 முதல் 97 சதவிகித இதய நோய்கள் சைவ உணவு உண்டால் தவிர்க்கலாம்" என்கிறது.இதய நோய்க்கு அடுத்து இருப்பது புற்று நோய். நன்கு வேகவைக்கப்பட்ட இரைச்சி மற்றும் மீன்களில் கார்சினொஜென்ஸ் (carcinogens) உள்ளது. இது நம்முடைய DNA செல்களை தாக்கி, அவற்றை மாற்றி, புற்றுநோயை வளர்க்கிறது. மாமிசமானது தாவரங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை விட 14 மடங்கு அதிக பூச்சிக்கொல்லி மருந்தும் ரசாயணமும் கொண்டது.பசி...பசி...பசிஒவ்வொரு வருடமும் சுமார் 2 கோடி பேர் உணவு இல்லாமல் மற்றும் தவறான உணவு ஆகியவற்றால் இறக்கிறார்கள். இவர்கள் உணவு எங்கே போகிறது? ஐ.நா.வின் தலைமைச் செயலர் கூருவது "பணக்கார நாடுகளின் அசைவ (இரைச்சி) உணவுதான் உலகின் பசிக்கும் பசி சம்பந்தமான இறப்புகளுக்கு காரணம்" என்கிறார். இது எந்த அளவுக்கு உண்மை? இதை பாருங்கள். 7.5 கிலோ தாணியங்கள் 20 பேருடைய பசியை போக்கும். ஆனால் அசைவ உலகில் இந்த 7.5 கிலோ தாணியத்தை ஒரு மாடு சாப்பிடும். அந்த ஒரு மாட்டை 2 பேர் மட்டுமே உட்கொள்கின்றனர். ஆக மேலும் 14 பேருக்கு தேவையான உணவுக்கு பல கிலோ அதிக தாணியங்கள் தேவைப்படுகின்றது. அது மட்டுமல்ல, ஒரு கிலோ அளவுள்ள மாட்டிரைச்சியை தயாரிக்க 16 கிலோ தாணியங்கள் தேவைப்படுகின்றன (John Robbins' book ஓDiet for a New Americaஔ). இந்த 16 கிலோ தாணியங்கள் மற்றவரின் பசியை போக்கலாம் அல்லவா?மற்றும் அமெரிக்கர்கள் தங்கள் அசைவ உணவில் 10 சதவிகிதம் குறைத்தாலேயே 10 கோடி பேருக்கு அதிகமாக உணவளிக்கலாம். ஒரு அமெரிக்கரின் 72 வயது சராசரி வாழ்க்கையில் உட்கொள்ளப்படும் உணவு:


1. 11 - கால்நடைகள்

2. 3 - ஆடுகள் மற்றும் ஆட்டுக்குட்டிகள்

3. 23 - பன்றிகள்

4. 45 - வான் கோழிகள்

5. 1100 - கோழிகள்

6. 391 கிலோ - மீன்கள்


மேலும், இந்த உலகில் உள்ள ஒவ்வொருவரும் சைவ உணவை உட்கொண்டால், உணவு உற்பத்தி 1000 கோடி மக்களுக்கு உணவளிக்கும் படி எட்டும். 1000 கோடி மக்கள் என்பது 2050-ல் இருக்கும் மக்கள் தொகை. அமெரிக்காவில் மட்டும் ஒவ்வொரு நிமிடமும் சுமார் 6,60,000 விலங்குகள் கொல்லப்படுகின்றன. அமெரிக்காவில் பயன்படுதப்படும் தண்ணீரில் பாதியளவு அசைவ உணவு தயாரிக்கவே பயன்படுத்தப்படுகிறது. மேலும் கன்றுகளை தொடர்ந்து உணவு இன்றி ஆடாமல் அசையாமல் ஈவு இரக்கம் இன்றி நிற்கவைத்து விடுவர். இதனால் அதன் நரம்புகள் இருகும். அந்த விலங்குகள் தன் வாழ்நாளில் இப்படி அப்படி திரும்பமுடியாது. மேலும் அவை வளர ஹார்மோன் ஊசிகளும் போடப்படும். அப்படிப்பட்ட மாடுகள் 4 மடங்கு அதிக விலைபோகும். உலகம் போற்றும் ஒரு மிகப்பெரிய தலைவரின் விசேஷ உணவு இதுதான். நாம் உட்கொள்ளும் அசைவமானது எவ்வாறெல்லாம் தயாரிக்கப்படுகின்றது? கோழிப் பண்னையில் பராமரிக்கப்படும் கோழிகள் கூண்டுக்குள் 'அடைக்கப்பட்டுள்ளன'. அவற்றால் அங்கு இங்கு என் எங்கும் நகர முடியாது. மேலும் ஒவ்வொரு கோழியும் வருடத்திற்கும் 200 முதல் 220 முட்டைகள் இட நிர்பந்திக்கபடுகிறது. இதனால், அவைகளின் எலும்புகள் மெலிந்து, இறகுகள் உதிர்கிறது.சைவத்தை பற்றி ஜார்ஜ் பெர்னார்ட் ஷா கூரும்போது "நம்முடைய உடம்பு இறந்து போன விலங்குகளின் சுடுகாடாக இருக்கும் வரை, இந்த இலட்சிய பூமி எப்படி நலமாக இருக்கும்?" என்கிறார். சில நாட்களுக்கு முன்பு தாய்லாந்தில் ஒரு உணவகத்தில் கலைக்கப்பட்ட கருவின் மாமிசம் விற்கப்பட்டன. நம்முடைய உணவு பழக்கத்திற்கும் கர்ம விணைகள் உள்ளன. சீனாவில் 'தயாரிக்கப்பட்டு' உலகையே அச்சுரித்திய சார்ஸ் நோய்க்கு முக்கிய காரணம் அவைகள் புனுகுப் பூனை எனப்படும் காட்டுப் பூனையை உணவாக உட்கொண்டதால் தான். நாம் செய்யும் பாவ செயல்களுக்கு துன்பப்படவேண்டும் என்பது இயற்கையின் மாற்ற முடியாத விதி. இதைத் தான் நியூட்டனின் மூன்றாவது விதி! இந்த உலகின் ஒவ்வொரு உயிரும், எரும்பாக இருந்தாலும் அல்லது எருமையாக இருந்தாலும், அவை பரமாத்மாவின் குழந்தையே. அந்த உயிருக்கு இழைக்கப்படும் கொடுமைகளை பரமாத்மா மன்னிக்காது. அதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.
பிற்சேர்க்கை...

Horrible N Fact about KFC
KFC has been a part of our American traditions for many years. Many people, day in and day out, eat at KFC religiously. Do they really know what they are eating? During a recent study of KFC done at the University of New Hampshire, they found some very upsetting facts. First of all, has anybody noticed that just recently, the company has changed their name?
Kentucky Fried Chicken has become KFC. Does anybody know why? We thought the real reason was because of the "FRIED" food issue.
IT'S NOT! !
The reason why they call it KFC is because they can not use the word chicken anymore. Why? KFC does not use real chickens. They actually use genetically manipulated organisms. These so called "chickens" are kept alive by tubes inserted into their bodies to pump blood and nutrients throughout their structure. They have no beaks, no feathers, and no feet. Their bone structure is dramatically shrunk to get more meat out of them. This is great for KFC.
Because they do not have to pay so much for their production costs. There is no more plucking of the feathers or the removal of the beaks and feet. The government has told them to change all of their menus so they do not say chicken anywhere. If you look closely you will notice this. Listen
to their commercials, I guarantee you will not see or hear the word chicken. I find this matter to be very disturbing.
I hope people will start to realize this and let other people know. Please forward this message to as many people as you can. Together we make KFC start using real chicken again.
Tuesday, January 09, 2007

49. 'பெரியார்' படம் - 'பகவான்' பாடல்...

'பெரியார்' படப் பாடல்களை தரவிறக்கம் செய்து, என் கணினியில் தூங்கிக்கொண்டிருந்தது. சரி! பொழுது போகவில்லை என்று கேட்டேன். நான் பாடல்களை பெரும்பாலும் வரிகளுக்காக, வரிகளின் கோர்வையை, வரிகளை பயன்படுத்திய விதத்திற்காக கேட்பவன். இசை இரண்டாம் பட்சம் தான். 'சீனா தானா' பாடல் ஆகட்டும், 'பூங்காற்றிலே' ஆகட்டும் இரண்டையுமே ரசிப்பேன்.இப்படத்தில் முதல் பாடல் 'பகவான்' என்று ஆரம்பிக்கும் பாடல். அமைதியான, ஆர்பாட்டமில்லாத இசை + பதிவு. இங்கே நான் ரசித்தது, அந்த 'பகவான்' பாடலின் வரிகளை. வசன நடையில், விவாதமாக செல்கிறது பாடல். இதில் நான் ரசித்தது அந்த அழகான விவாதம்.பகவான் ஆகாயம், பூமி, வாயு, அக்னி, தண்ணீர், இவையாவும் படைத்து கடைசியாக மனிதனை படைத்தார் என்று ஒருவர் சொல்ல,


கடவுளை யாரு படைத்தார்? என்று எதிர்கேள்வி.


கடவுளை யாரும் படைக்கமுடியாது. அவர் சுயம்பு, தானா உண்டானவர்.


கண்காணாத உன் கடவுள் தானாக தோன்றும் பொழுது, கண்ணில் தெரிகின்ற அண்டம் தானாக ஆகாதோ?


அசுர குணம் உள்ளவர்கள் தான் இப்படி கேள்வி கேட்பார்கள். தேவர் குணம் உள்ளவர்கள் இப்படி குதர்க்கமாக பேச மாட்டார்கள்.


இந்திரன் யாரு?


தேவர் குல தலைவன்.


இராவணன் யாரு?


அசுரர் குல அரசன்.


காட்டில் இருந்த முனிவர் மனைவியின் கற்பை கெடுத்தவன் இந்திரன். கொண்டு சென்ற மாற்றான் மனைவியை கற்புடன் விட்டவன் இராவணன். இப்பொழுது சொல் குணத்தில் உயர்ந்தவன் யார்? தேவனா? அசுரனா?


அசுர குலத்திலும் அப்போ அப்போ நல்லவர்கள் இருந்திருக்கார்களே! நந்தனுக்கு நடராஜப் பெருமாள் மோட்சம் கொடுக்கவில்லையா?


நந்தனுக்கு மோட்சம் கொடுத்தீர்களா? அல்லது, தீயிட்டு எரிமூட்டி மோசம் புரிந்தீர்களா? மோட்சம் தந்தது முற்றிலும் உண்மை என்றால், அவன் சந்ததியெல்லாம், சன்னிதி இழந்து, சந்தியிலேயே ஏன் நின்றான்?


மனிதனாக இருந்தால் மடியாக இருக்கனும். தீட்டு என்று பெரியவர்கள் தெரியாமலா சொன்னார்கள்?


தீட்டு என்ன தீட்டு? குடிக்கிற தண்ணீரை தொடக்கூடாது. குளத்தில் கால் படக்கூடாது. எப்படி வரும் சுத்தம்? உங்கள் மேல் குற்றம். குளிக்காத பசுவை கும்பிடுகிறீர்கள். அதை குளிப்பாட்டும் மனிதனை ஏனய்யா கொல்கிறீர்கள்?


(தெலுங்கில்) வேத புராணம், இதிகாசங்களில் கூறப்பட்டதை அவமானம் செய்தவருக்கு சாப்பாடு போடக்கூடாது.


புராணம் இதிகாசம் ஆகியன வெறும் பொய் மோசம். பொய் பேசி பேசியே பொய்யாய் போய்விட்டது தேசம்.


புராணம், இதிகாசம் பொய் இல்லை.


ஆதாரம் கூறும்.


அணில் முதுகில் ஸ்ரீராமர் போட்ட கோடு மூன்று. அப்படியே இருக்கிறது. அழியவில்லை பாருங்கள்.


ஓஹோ! முதுகை தொட்டதும் மூன்று கோடுகள் விழுந்திருச்சோ? சீதையின் முதுகில் கோடுகள் இல்லையா? இல்லை. ஸ்ரீராமர் சீதையை தொடவே இல்லையா?


இது விதண்டாவாதம். பேசக்கூடாது.


இனிமேல் தான் சுவாமி பேசவே போகிறேன்.ஆஹா! படத்தை பற்றி ரொம்பவே எதிர்பார்க்க வெச்சுட்டாங்கைய்யா!!'இடை' என்று பழங்காலத்து இசை தோரணையில் (நாயகன் படத்தில் கூட வருமே 'நான் சிரித்தால் தீபாவளி', 'ஓ! ரசிக்கும் சீமானே'), குத்து போன்ற ஒரு பாடல்.

உன்னிலே காமசூத்திரம், கண்ட பின் என்ன சாத்திரம்;


தாயவள் சொன்ன சேதியால், நானும் தான் ராஜ கோத்திரம்;


பகதூரைய்யா! பதறாதைய்யா!!


உறவு முறை பாரா உலகமய்யா


'கடவுளா? நீ கல்லா?' என்று ஒரு பாடல். இதற்கும் நல்ல பாடல் வரிகள். பெரும்பாலும் கேள்விகள்.நீங்கள் மட்டும் நீங்கள் மட்டும் விந்து விழுந்து பிறந்தவர்கள்!


நாங்கள் என்ன நாங்கள் என்ன எச்சில் விழுந்தா பிறந்தவர்கள்?"


'தை தை' - சுமாரான பாடல். கர்நாடக சங்கீதம். விஜயலக்ஷ்மி சுப்பிரமணியம் பாடியிருக்கிறார். கேட்க கேட்க நன்றாக இருக்கலாம். சுதா ரகுநாதனை பாடச் சொல்லியிருக்கலாமோ?'தாயும் யாரோ?' என்று மற்றொரு பாடல். யேசுதாஸ் பாடியது. அருமையான பாடல் + வரிகள். மற்றும் அருமையான பீட்.சாதாரணமாகவே பாடல்கள் பரவாயில்லை. 'பெரியார்' என்ற மாஸுடன் கேட்டால் நன்றாகவே இருக்கும்.இளையராஜா இசையமைக்க மறுத்தது, அவர் பார்வையில் பார்த்தால், சரி தான் என்றே தோன்றுகிறது. கொடுத்து வைக்காதவர்கள் நாம் தான்.

ஆனால், என் கவலை, படம் பொதுவாக எல்லா மக்களுக்கும் பாடமான ஒரு படமாக ஆக்கப்படுமா?, அல்லது 'தி.க.வினரின் படமாக' மட்டும் முத்திறை குத்தப்படுமா? இது நிச்சயம் தி.க.வினரின் கையில் தான் இருக்கிறது. காரணம், இவர்கள் பன்னும் சேட்டை தான்.