Wednesday, January 17, 2007

வெஜிடேரியனிசம்

2-3 வினாடிகள் மட்டுமே பார்த்த ஒரு விஷயம் ஏனோ என்னை உலுக்கியது. சென்ற வாரம் பேருந்தில் திருத்தணி செல்லும் வழியில் ஒரு கறி கடையில் ஒரு ஆடு செத்துக் கொண்டு இருந்தது. ஒருவர் இன்னும் இரண்டு ஆடுகளை அவற்றின் ஒற்றை பின்னங் கால்களை தன் ஒரே கையில் பிடித்து இழுத்துக் கொண்டு சென்றார். அந்த ஆடுகள் வர மறுத்து திமிரின. ஆனால், அவற்றால் என்ன செய்ய முடியும்?

மாமிசம் விற்கும் கடைகளுக்கென்று சில விதிமுறைகள் உண்டு. அதில் ஒன்று, இரண்டு உயிர்கள் (ஆடுகளோ அல்லது மாடுகளோ அல்லது கோழிகளோ) ஒன்றை ஒன்று பார்த்தபடி சாகக்கூடாது என்று. இந்தக் காட்சியை நினைத்துப் பாருங்கள், நீங்களும் கொல்லப்படுகிறீர்கள் உங்கள் கண் எதிரிலேயே உங்களுக்கு வேண்டப்படுபவரும் கொல்லப்படுகிறார். எப்படி இருக்கும்?
இந்தக் கட்டுரை 2 1/2 வருடங்களுக்கு முன் எழுதப்பட்டது (மொழிமாற்றப்பட்டது). அதன் ஒரு பகுதியை இங்கு மீண்டும் பதிகிறேன். நானும் அசைவம் தான். இஸ்கான் கோவிலில் இரண்டு நாள் யோகா பயிற்சி அளித்தார்கள். அங்கு சென்று வந்த பிறகு நானும் சைவம் ஆனேன், 6 மாதத்திற்கு. ஆனால், சரக்கடிக்கும் பொழுது சைட்டிஷ் சாப்பிடமுடியாததால், மீண்டும் அசைவம் ஆனேன் :)

சைவத்திற்க்கு அப்பால்...

நாம் என்ன உட்கொள்கிறோமோ நாமும் அதே தான். இன்றைய உலகில் புலால் உண்பது வாழ்க்கையின் அங்கமாக ஆகிவிட்டது. அதுவும் விரைவு உணவு வந்ததும் நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது. சைவமாக இருப்பதற்கும் அசைவமாக இருப்பதற்கும் அப்படி என்ன வித்தியாசம் இருக்கப்போகின்றது? முதலில் சைவத்திற்கும் அசைவத்திற்கும் என்ன வித்தியாசம் என்று பார்ப்போம்.இந்த உலகில் உள்ள ஒவ்வொரு உயிரிணத்திற்கும் மத்திய நரம்பு மண்டலம் (Central Nervous System) உள்ளது. இந்த மண்டலம் உணர்ச்சி சம்பந்தப்பட்டது. வலி என்றால் என்ன என்று இந்த மண்டலம் தான் ஒவ்வொரு உயிர்க்கும் உணர்த்துகின்றது. ஆடு, மாடு, கோழி, முயல், காடை, பாம்பு, ஏன் மனிதனுக்கும் மற்றும் நம் சாப்பிடும் அனைத்து உயிரினத்திற்கும் இந்த மத்திய நரம்பு மண்டலம் உள்ளது. அதனால் தான் இந்த உயிர்களை வதைக்கும் பொழுதும், கொல்லும் பொழுதும் வலி வந்து இந்த உயிர்கள் துடிக்கின்றது. சரி! நாம் சாப்பிடும் சைவ உணவு வகைகளான அரிசி, பருப்பு, பால், தாவரங்கள், ஏன் தண்ணீர் போன்றவையும் உயிருள்ளவைதானே என்ற கேள்வி எழலாம். அப்பொழுது இந்த உணவு வகைகளும் அசைவம் தானே ஆகின்றது? இல்லை! காரணம் இந்த உயிர்களுக்கு மேலே சொல்லப்பட்ட மத்திய நரம்பு மண்டலம் என்பது இல்லை. அதனால் அவற்றிற்கு வலி தெரியாது. இதுவும் ஒரு அசைவம் தான். ஆனால் நாம் இயற்கைக்கு உட்பட்டு, நமக்கு தரப்பட்டுள்ள எல்லை வரை செல்லலாம். கீதை சொல்கிறது : "இந்த உலகில் உயிர் வாழ ஒவ்வொரு உயிரும் அடுத்த உயிருக்கு உணவாக உள்ளது. ஆனால் நாம் நமக்கு அளிக்கப்பட்ட உணவை மட்டும் உண்டால், நாம் அனைத்து பாவங்களில் இருந்தும் விடுபடுவோம்".


கீழ்கானும் ஒப்பீட்டை பாருங்கள்...

Comparison Carnivore Herbivore Human
Teeth: Incisors Short and pointed

Broad, flattened and spade shaped Broad, flattened and spade shaped
Teeth: Canines Long, sharp and curved to

tear flesh
Dull and short (sometimes long for defense), or none Short and blunted
Teeth: Molars Sharp

Flattened Flattened
Chewing None; swallows food whole Extensive chewing Extensive chewing

Saliva Acidic saliva: Carbohydrate digesting enzymes not present Alkaline saliva: Carbohydrate digesting enzymes present

Alkaline saliva: Carbohydrate digesting enzymes present
Stomach Acidity with food in it <>pH 4 to 5 pH 4 to

5
Length of Small Intestine 3 to 6 times body length > 10 times body length 10 to 11 times body length

Colon Simple, short and smooth Long, complex Long, complex
Perspiration No skin

pores; perspires through tongue to cool body
Perspires through millions of skin pores Perspires through millions of skin pores

Nails Sharp claws Flattened nails or blunt hooves Flattened nails


நம்மிடம் உள்ள ஒரு தவறான கருத்து, "சைவ உணவு சாப்பிட்டால் புரதச் சத்து இருக்காது" என்பது. ஆனால் உண்மை என்னவென்றால் காய்கறிகள், பழங்கள், விதைகள், தானியங்கள், கொட்டைகள் முதலியவை அதிக அளவில் புரதச்சத்து கொண்டது. இந்த உலகின் சில பிரபல சைவர்கள்...1. மாகாத்மா காந்தி : "ஆன்மீகம் நம்முடைய தேவைக்காக செய்யப்படும் உயிர் கொலையை தவிர்க்க சொல்கிறது."

2. ஆல்பெர்ட் ஐண்ஸ்டீன் : "நம்முடைய வேலை உயிர் கொல்லும் மக்களிடம் மற்ற உயிர் மேல் அன்பு செலுத்துவதை எடுத்து சொல்ல வேண்டும்"

3. ஜான் ஊல்மேன் : "நாம் கடவுளை வணங்குவதும், அந்த கடவுள் உருவாக்கிய உயிரை கொல்லுவதும் ஒன்றுக்கொன்று முறன்பாடாக இருக்கிறது"

4. லியோ டால்ஸ்டாய் : "மனிதன் தன் வாழ்க்கையை சரியான பாதையில் செலுத்த விரும்பினால், முதலில் உயிர் கொலையை தடுப்பதில் இருந்து ஆரம்பிக்கட்டும்"

5. ஐசக் நியூட்டன்

6. தத்துவ ஞானி பிளேட்டோ

7. சாக்ரடீஸ்

8. பிதோகரஸ்

9. லியோனார்டோ டா வின்சி

10. கிரெக் சாப்பல்

11. ஓட்டப் பந்தைய வீரர் காரல் லீவிஸ்

12. மார்டினா நவரத்திலோவா


அசைவத்தின் விளைவுகள்...முதலிடத்தில் இருப்பது இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள். பிரிட்டனில் 50 சதகிவித மரணங்கள் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களே. 1961-க்கு முன்னாலேயே அமெரிக்க மருத்துவ சங்கத்தின் செய்திக் குறிப்பு "90 முதல் 97 சதவிகித இதய நோய்கள் சைவ உணவு உண்டால் தவிர்க்கலாம்" என்கிறது.இதய நோய்க்கு அடுத்து இருப்பது புற்று நோய். நன்கு வேகவைக்கப்பட்ட இரைச்சி மற்றும் மீன்களில் கார்சினொஜென்ஸ் (carcinogens) உள்ளது. இது நம்முடைய DNA செல்களை தாக்கி, அவற்றை மாற்றி, புற்றுநோயை வளர்க்கிறது. மாமிசமானது தாவரங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை விட 14 மடங்கு அதிக பூச்சிக்கொல்லி மருந்தும் ரசாயணமும் கொண்டது.பசி...பசி...பசிஒவ்வொரு வருடமும் சுமார் 2 கோடி பேர் உணவு இல்லாமல் மற்றும் தவறான உணவு ஆகியவற்றால் இறக்கிறார்கள். இவர்கள் உணவு எங்கே போகிறது? ஐ.நா.வின் தலைமைச் செயலர் கூருவது "பணக்கார நாடுகளின் அசைவ (இரைச்சி) உணவுதான் உலகின் பசிக்கும் பசி சம்பந்தமான இறப்புகளுக்கு காரணம்" என்கிறார். இது எந்த அளவுக்கு உண்மை? இதை பாருங்கள். 7.5 கிலோ தாணியங்கள் 20 பேருடைய பசியை போக்கும். ஆனால் அசைவ உலகில் இந்த 7.5 கிலோ தாணியத்தை ஒரு மாடு சாப்பிடும். அந்த ஒரு மாட்டை 2 பேர் மட்டுமே உட்கொள்கின்றனர். ஆக மேலும் 14 பேருக்கு தேவையான உணவுக்கு பல கிலோ அதிக தாணியங்கள் தேவைப்படுகின்றது. அது மட்டுமல்ல, ஒரு கிலோ அளவுள்ள மாட்டிரைச்சியை தயாரிக்க 16 கிலோ தாணியங்கள் தேவைப்படுகின்றன (John Robbins' book ஓDiet for a New Americaஔ). இந்த 16 கிலோ தாணியங்கள் மற்றவரின் பசியை போக்கலாம் அல்லவா?மற்றும் அமெரிக்கர்கள் தங்கள் அசைவ உணவில் 10 சதவிகிதம் குறைத்தாலேயே 10 கோடி பேருக்கு அதிகமாக உணவளிக்கலாம். ஒரு அமெரிக்கரின் 72 வயது சராசரி வாழ்க்கையில் உட்கொள்ளப்படும் உணவு:


1. 11 - கால்நடைகள்

2. 3 - ஆடுகள் மற்றும் ஆட்டுக்குட்டிகள்

3. 23 - பன்றிகள்

4. 45 - வான் கோழிகள்

5. 1100 - கோழிகள்

6. 391 கிலோ - மீன்கள்


மேலும், இந்த உலகில் உள்ள ஒவ்வொருவரும் சைவ உணவை உட்கொண்டால், உணவு உற்பத்தி 1000 கோடி மக்களுக்கு உணவளிக்கும் படி எட்டும். 1000 கோடி மக்கள் என்பது 2050-ல் இருக்கும் மக்கள் தொகை. அமெரிக்காவில் மட்டும் ஒவ்வொரு நிமிடமும் சுமார் 6,60,000 விலங்குகள் கொல்லப்படுகின்றன. அமெரிக்காவில் பயன்படுதப்படும் தண்ணீரில் பாதியளவு அசைவ உணவு தயாரிக்கவே பயன்படுத்தப்படுகிறது. மேலும் கன்றுகளை தொடர்ந்து உணவு இன்றி ஆடாமல் அசையாமல் ஈவு இரக்கம் இன்றி நிற்கவைத்து விடுவர். இதனால் அதன் நரம்புகள் இருகும். அந்த விலங்குகள் தன் வாழ்நாளில் இப்படி அப்படி திரும்பமுடியாது. மேலும் அவை வளர ஹார்மோன் ஊசிகளும் போடப்படும். அப்படிப்பட்ட மாடுகள் 4 மடங்கு அதிக விலைபோகும். உலகம் போற்றும் ஒரு மிகப்பெரிய தலைவரின் விசேஷ உணவு இதுதான். நாம் உட்கொள்ளும் அசைவமானது எவ்வாறெல்லாம் தயாரிக்கப்படுகின்றது? கோழிப் பண்னையில் பராமரிக்கப்படும் கோழிகள் கூண்டுக்குள் 'அடைக்கப்பட்டுள்ளன'. அவற்றால் அங்கு இங்கு என் எங்கும் நகர முடியாது. மேலும் ஒவ்வொரு கோழியும் வருடத்திற்கும் 200 முதல் 220 முட்டைகள் இட நிர்பந்திக்கபடுகிறது. இதனால், அவைகளின் எலும்புகள் மெலிந்து, இறகுகள் உதிர்கிறது.சைவத்தை பற்றி ஜார்ஜ் பெர்னார்ட் ஷா கூரும்போது "நம்முடைய உடம்பு இறந்து போன விலங்குகளின் சுடுகாடாக இருக்கும் வரை, இந்த இலட்சிய பூமி எப்படி நலமாக இருக்கும்?" என்கிறார். சில நாட்களுக்கு முன்பு தாய்லாந்தில் ஒரு உணவகத்தில் கலைக்கப்பட்ட கருவின் மாமிசம் விற்கப்பட்டன. நம்முடைய உணவு பழக்கத்திற்கும் கர்ம விணைகள் உள்ளன. சீனாவில் 'தயாரிக்கப்பட்டு' உலகையே அச்சுரித்திய சார்ஸ் நோய்க்கு முக்கிய காரணம் அவைகள் புனுகுப் பூனை எனப்படும் காட்டுப் பூனையை உணவாக உட்கொண்டதால் தான். நாம் செய்யும் பாவ செயல்களுக்கு துன்பப்படவேண்டும் என்பது இயற்கையின் மாற்ற முடியாத விதி. இதைத் தான் நியூட்டனின் மூன்றாவது விதி! இந்த உலகின் ஒவ்வொரு உயிரும், எரும்பாக இருந்தாலும் அல்லது எருமையாக இருந்தாலும், அவை பரமாத்மாவின் குழந்தையே. அந்த உயிருக்கு இழைக்கப்படும் கொடுமைகளை பரமாத்மா மன்னிக்காது. அதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.
பிற்சேர்க்கை...

Horrible N Fact about KFC
KFC has been a part of our American traditions for many years. Many people, day in and day out, eat at KFC religiously. Do they really know what they are eating? During a recent study of KFC done at the University of New Hampshire, they found some very upsetting facts. First of all, has anybody noticed that just recently, the company has changed their name?
Kentucky Fried Chicken has become KFC. Does anybody know why? We thought the real reason was because of the "FRIED" food issue.
IT'S NOT! !
The reason why they call it KFC is because they can not use the word chicken anymore. Why? KFC does not use real chickens. They actually use genetically manipulated organisms. These so called "chickens" are kept alive by tubes inserted into their bodies to pump blood and nutrients throughout their structure. They have no beaks, no feathers, and no feet. Their bone structure is dramatically shrunk to get more meat out of them. This is great for KFC.
Because they do not have to pay so much for their production costs. There is no more plucking of the feathers or the removal of the beaks and feet. The government has told them to change all of their menus so they do not say chicken anywhere. If you look closely you will notice this. Listen
to their commercials, I guarantee you will not see or hear the word chicken. I find this matter to be very disturbing.
I hope people will start to realize this and let other people know. Please forward this message to as many people as you can. Together we make KFC start using real chicken again.
30 comments:

 1. சீனு,

  சரக்கடிப்பதால் சைட்-டிஷ்ஷூக்காக மீண்டும் அசைவத்தினுள் இழுக்கப்படுவது சைல்டிஷ் ஆர்க்யூமெண்ட்.

  சரக்கடிப்பதை நிறுத்துங்கள். சரக்க்கு+சைட்டிஷ் சேமிப்பில் ரெண்டுபேருக்கு மனநிறைவாக கல்விகற்க நீங்கள் ஸ்பான்ஸர் செய்யலாம்!

  இதைச்செய்யும்போது முன்னெப்பொழுதையும் விட மன உறுதி கூடியும், மனதில் மிக நிறைவான உணர்வும் பேரானந்தத்தைத் தரும்.

  வெஜிடேரியனான அடியேன், வெஜிடேரியனான 12 ஆண்டுகள் புகைப்பழக்கத்தில் இருந்து இரண்டாண்டுகளாக முழுமையாக மீண்டு அதனால் நான் தினசரி சேமிக்கும் 200 ரூபாயில் உதவிகள் தேவைப்படும் சிலர்க்கு உதவ முடிகிறது.

  சுயதம்பட்டத்திற்காக இத்தகவலில்லை. கெட்டதில் இருந்து முழுமையாய் மீளும்போது நம்மால் முடியும் நல்லதைச் சொல்லவே.

  அன்புடன்,

  ஹரிஹரன்

  ReplyDelete
 2. காடாறு மாசம் நாடாறு மாசம் என்பது போல மாறி மாறி வெஜிட்டேரியன், நான் வெஜிட்டேரியனாக இருந்தேன்.

  இப்போ 1 வருஷமா புலால் உண்ணவில்லை. இந்த தடவை கண்டிப்பாக உண்ணுவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன்.

  நல்ல பதிவு. புலால் உண்ணாமை ஒரு மிகச் சிறந்த நல்ல பழக்கம்.

  வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்கிறார் வள்ளலார்.

  அந்த நிலை வராவிட்டாலும் பிற உயிரை உணவுக்காக கொல்லாமை நன்றே.

  ReplyDelete
 3. //சரக்கடிப்பதால் சைட்-டிஷ்ஷூக்காக மீண்டும் அசைவத்தினுள் இழுக்கப்படுவது சைல்டிஷ் ஆர்க்யூமெண்ட்.//
  இல்லை. நான் அப்படித் தான் அசைவத்திற்கு மாறினேன் என்று சொன்னேன். சரக்கடிப்பது ச்சும்மா ஜாலிக்காகவே. நான் புரபஷனல் குடிகாரன் இல்லை.

  அதான், இன்னும் கொஞ்ச நாளைக்கு சைவமாகலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

  ReplyDelete
 4. ஹரிகரன் தம்மடிக்கிறதை விட்டுட்டீங்களா.. அதுவும் ரெண்டு வருசமாவா?
  என்னால் ரெண்டு மாசத்திற்கு மேல் தாக்குப்பிடிக்க முடிவதில்லை. அறுபத்தி ஒன்றாவது நாள் ஆறாவது விரலாக ஒட்டிக்கொள்கிறது சிகரெட்.
  :-((((

  (சீனு நானே அதர் ஆப்ஷன் வழியாக வந்திருக்கேன்)

  ReplyDelete
 5. வாங்க செந்தில், பாலா,

  //இப்போ 1 வருஷமா புலால் உண்ணவில்லை. இந்த தடவை கண்டிப்பாக உண்ணுவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன்.//
  பரவாயில்லையே! நான் 6 மாதங்கள் சைவமாக இருந்தபொழுது physically strength குறைந்ததாக உணார்ந்தேன். ஒருவேளை, சத்தான சைவம் உட்கொள்ளாததாலோ என்னவோ. அதுவும், சென்னை திருவல்லிக்கேணியில் இருக்கும் மதுரை சாரதா மெஸ் அயிரை மீன் குழம்பு அட்டகாசமாக இருக்குமா, அது வேறு உசுப்பிவிட்டது.

  //அந்த நிலை வராவிட்டாலும் பிற உயிரை உணவுக்காக கொல்லாமை நன்றே.//
  நானும் அதையேத்தான் நினைக்கிறேன். At least, குறைத்துக்கொள்ளலாம்.

  //என்னால் ரெண்டு மாசத்திற்கு மேல் தாக்குப்பிடிக்க முடிவதில்லை. அறுபத்தி ஒன்றாவது நாள் ஆறாவது விரலாக ஒட்டிக்கொள்கிறது சிகரெட்.//

  தல, சிகரெட்க்கு டெஃபனிஷன் தெரியுமா?

  "A pinch of tobacco, rolled in a piece of paper, with fire at one end and a fool at the other". முளிச்சிகோங்க!!! நாமெல்லாம் அறிவாளிங்க.

  //சீனு நானே அதர் ஆப்ஷன் வழியாக வந்திருக்கேன்//
  அதர் ஆப்ஷன்? நீங்க சொல்லுறத பத்தி தெரியல தல...

  ReplyDelete
 6. புலால் உண்ணாமை மட்டும் அல்ல..இந்த விலங்குகள் கொலை விசயத்தில் பல விசயங்கள் உள்ளது

  * கடவுளுக்கு சாத்தும் பட்டு/பெண்கள் அணியும் பட்டு/ஆண்கள் அணியும் பட்டு/குழந்தைகளின் பட்டு .... எல்லாம் பட்டுப்புழுவை பாடாய்ப் படுத்தி எடுக்கப்படுபவை :-(


  * கடவுளுக்கு அடிக்கும் கொட்டு/ சங்கீதத்தில் வாசிக்கப்படும் கொட்டு/சாவு வீட்டில் அடிக்கப்படும் பறை/இடுப்பு பெல்ட்/ஷூ தோல் எல்லாம் விலங்குகளின் தோல் உரிக்கப்பட்டவை. உயிரோடு எடுத்தால்தான் தோல் நல்லா வரும் என்று 6 அடி பாம்பை உயிருடன் தோலை உரித்து விட்டு அப்படியே அதை உரித்த கோழியைப்போல் புதரில் தூக்கி காடாசிவிட்டு சென்றார்கள். மொத்த நிகழ்ச்சியையும் 10 வயதில் நேரில் பார்த்தேன் :-((

  * கடவுள் அணியும் முத்து மாலை/நம் பெண்கள் அணியும் முத்து மாலைகளுக்காக திறந்து வீசப்படும் சிப்பிகள் எத்தனை :-(((


  பூமியில் உள்ள கேவலமான பிராணி மனிதன்.

  மற்ற பிராணிகள் உயிர்வாழ்தலுக்காக குறைந்தபட்ச கொலைகளை நடத்துகிறது.மனிதன் சுற்றுப்புறக் கொலையில் ஆரம்பித்து சுற்றத்தார் வரை அனைத்தையும் உணவு சாராத் தேவைக்காக கொல்கிறான்.

  ReplyDelete
 7. திரு. சீனு,

  இது பற்றி சென்ற வருடம் நான் எழுதிய பதிவிலிருந்து ஒரு பகுதியை இங்கு தருகிறேன். இது விவாதமாக அல்லாது ஒரு தகவலாக தெரிவிக்கிறேன்.

  //மனிதர்கள் அசைவ உணவு சாப்பிடுவது இயற்கைக்கு மாற்றமானது அல்ல!

  இயற்கைக்கு எதிரான மனிதன் செயல்படும்போது அது அவனை தண்டிக்கவே செய்கிறது என்பது நாம் கண்கூடாக கண்டு வரும் நிதர்சனமான உண்மை. தினமலர் கட்டுரை இதற்கு ஒரு நல்ல உதாரணத்தைக் காட்டுகிறது. “சாக பட்சிணியான மாட்டுக்கு, மாட்டு எலும்புத் தூள் கலந்த உணவைக் கொடுத்தனர்… பால் மற்றும் இறைச்சி அதிகமாகத்தான் கிடைத்தது. ஆனால், ஒரு கட்டத்தில் மாடுகளுக்கு பைத்தியம் பிடித்து விட்டது. இதை “Mad Cow disease” என்றனர்.”

  இவ்வாறு நிகழ்ந்தது உண்மைதான். இதற்கு காரணம் என்ன? ஆடு, மாடு போன்ற பிராணிகள் தாவர உண்ணிகள். இவற்றின் செரிமான அமைப்பு தாவர வகை உணவுகளை மட்டுமே செரிமானம் செய்வதற்கு ஏற்றதாக அமைந்துள்ளது. அது போலவே, சிங்கம், புலி போன்ற விலங்குகளின் செரிமான அமைப்பு மாமிச உணவு வகைகளை செரிமானம் செய்வதற்கு ஏற்றதாக அமைந்துள்ளது. அதனால்தான் ‘புலி பசித்தாலும் புல் தின்பதில்லை’. இந்த இயற்கை அமைப்பிற்கு மாற்றமான உணவு வகைகளை இந்த பிராணிகள் உட்கொள்ள நேர்ந்தால், Mad Cow Disease போன்ற வியாதிகளின் மூலம் இயற்கை தனது எதிர்ப்பைத் தெரிவிக்கிறது.

  ஆனால், மனிதன் புலால் உணவு உண்பது இயற்கைக்கு மாற்றமானதல்ல என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. மனிதனின் செரிமான அமைப்பு மட்டுமே, மாமிச உணவு, தாவர உணவு என இருவகை உணவுகளையும் செரிமானம் செய்வதற்கு ஏற்றதாக அமைந்துள்ளது. இந்த அமைப்பு, இருவகை உணவுகளையும் மனிதன் உட்கொள்ளலாம் என்பதற்கு இயற்கையே வழங்கியிருக்கும் அனுமதி.

  மேலும், பிராணிகள் மற்றும் மனிதர்களின் பற்கள் அமைப்பிலும் இதற்கு ஒரு ஆதாரம் இருக்கிறது.

  ஆடு, மாடு போன்ற தாவர உண்ணிகள், தாவர உணவு மட்டுமே உண்ணுவதற்கு ஏற்றவாறு தட்டையான பற்களை கொண்டிருக்கின்றன. இந்த பிராணிகள் இலை தழைகளை நன்கு மென்று உண்ண இந்த பற்கள் உதவுகின்றன. அது போல சிங்கம், புலி போன்ற மாமிச உண்ணிகளின் பற்கள், மாமிசத்தை கடித்து தின்பதற்கு வசதியாக கூராக அமைந்துள்ளன. ஆனால், மனிதனுக்கு மட்டுமே, மாமிச உணவு உண்ண வசதியாக கூரான முன்பற்களும், தாவர உணவுகளை மென்று உண்ண வசதியாக தட்டையான கடைவாய்ப் பற்களும் அமைந்துள்ளன. மனிதன் சைவ உணவுகளை மட்டுமே உண்ண வேண்டுமென்பது இறைவனின் சித்தமாக இருந்தால், மனிதனுக்கு கூரிய பற்களை ஏன் படைக்க வேண்டும்? //

  முழுபதிவும் இந்தச் சுட்டியில் இருக்கிறது.
  http://ibnubasheer.blogsome.com/2006/01/14/non-vegetarianism/

  ReplyDelete
 8. மனைவி கொடுத்த கீரை சாதம் இருந்தும் இப்பதான் அலுவலக canteen-ல கோழி சாப்பிட்டு வந்தேன். இனி அசைவம் தொடுறதில்லை..........

  http://internetbazaar.blogspot.com

  ReplyDelete
 9. வருகைக்கு நன்றி கல்வெட்டு,

  //மற்ற பிராணிகள் உயிர்வாழ்தலுக்காக குறைந்தபட்ச கொலைகளை நடத்துகிறது.மனிதன் சுற்றுப்புறக் கொலையில் ஆரம்பித்து சுற்றத்தார் வரை அனைத்தையும் உணவு சாராத் தேவைக்காக கொல்கிறான்.//

  GODS must be crazy படத்தில் ஒரு காட்சி வரும். கதாநாயகன் மனிதர்களையே பார்க்காத ஒரு காட்டிவாசி. உணவுக்காக ஒரு மானை வேட்டையாடுகிறான். அதுவும், அந்த மானுக்கு வலிக்காமல் ஒரு சிறு ஊசி மூலம் தூக்க மருந்தை கொடுத்து அது மயக்கமுற்ற பின் அதனை கொன்று சாப்பிடுவார்கள். அதற்கு அவன் இறைவனிடம் மன்னிப்பு கேட்பதாக ஒரு காட்சி வரும். அந்த காட்டுவாசி எவ்வளவோ மேல்.

  ReplyDelete
 10. சீனு, நல்ல பதிவு, நன்றாக தொகுத்து கொடுத்து இருக்கிறீர்கள். இதில் மனிதர்களின் வளர்ச்சியின் அளவையும் நாட்டுக்கு நாடு வேறு படுவதை சுட்டி காட்டியிரூக்கலாம். ஒரு இந்தியரின் உடல் வளர்ச்சிக்கும், ஒரு அமெரிக்கரின் உடல் வளர்ச்சிக்கும் வித்தியாசம் நிறைய உள்ளது. அதற்கு முதல் காரணம் உணவு முறை மட்டுமே என்று நினைக்கிறேன்.. என்னுடைய அண்ணன் இந்தியாவில் பிறந்து இங்கு வளர்ந்து அமெரிக்காவில் தங்கிவிட்டவர். ஆனால் அவரின் பிள்ளைகளின் வளர்ச்சி ஆச்சரியமாக உள்ளது. நம்மை போல் இல்லை அவர்கள். அதற்கு உணவு மட்டுமே காரணம் இல்லையா?.

  ReplyDelete
 11. இப்னு பஷீர்,
  //மனிதன் சைவ உணவுகளை மட்டுமே உண்ண வேண்டுமென்பது இறைவனின் சித்தமாக இருந்தால், மனிதனுக்கு கூரிய பற்களை ஏன் படைக்க வேண்டும்?//
  நீங்கள் சொல்வது உண்மை என்றே கொண்டாலும், at least, அந்த உயிர்களின் மேல் இரக்கம் கொண்டேவேனும் சைவமாகலாம் இல்லையா?

  ReplyDelete
 12. //மனைவி கொடுத்த கீரை சாதம் இருந்தும் இப்பதான் அலுவலக canteen-ல கோழி சாப்பிட்டு வந்தேன். இனி அசைவம் தொடுறதில்லை..........//
  நல்லது LFC fan! இது உணர்ச்சிவசப்பட்டு எடுத்த முடிவு இல்லைலே???

  ReplyDelete
 13. //ஹரிகரன் தம்மடிக்கிறதை விட்டுட்டீங்களா.. அதுவும் ரெண்டு வருசமாவா?
  என்னால் ரெண்டு மாசத்திற்கு மேல் தாக்குப்பிடிக்க முடிவதில்லை. அறுபத்தி ஒன்றாவது நாள் ஆறாவது விரலாக ஒட்டிக்கொள்கிறது சிகரெட்.//

  பாலபாரதி,

  யோசிக்காம அப்ரப்டா அப்படியே விட்டுடணும். சிந்தனைக்கு உதவுவதாகவும், ஸ்டைலுக்காகவும், டென்சனுக்காகவும் இந்த சிகரெட் பின்னாடி ஒளிஞ்சு ஒழிந்தது நிறைய.
  எனக்கு தெய்வ நம்பிக்கை கை குடுத்தது. உங்களுக்கும் அதுமாதிரி இஷ்டமான நம்பிக்கை கை கொடுக்கும்.

  வீட்டம்மாவுக்கு பிடிக்காம தேஞ்ச ரிக்கார்டு கம்ப்ளைண்ட் வர்றாது நிக்கும். சின்னக் குழந்தைகளோடு பேசும்போது சிகரெட் வாசமில்லாமல் குற்ற உணர்வில்லாமல் கொஞ்சலாம். நம்ம மேலேயே நமக்கு நம்பிக்கை இன்னும் கூடும். இது மாதிரி நிறைய நல்லது நடக்கும் பாலா.

  விட்டுடுங்க சிகரெட்ட உடனே :-))

  ReplyDelete
 14. //பூமியில் உள்ள கேவலமான பிராணி மனிதன்.//

  ரொம்பச் சரிங்க கல்வெட்டு.

  முத்துமாலைக்கும், பட்டுச்சேலைக்கும் முழு எதிரி நான்.

  இதுவரை நான் காசுபோட்டு கடவுள், அம்மா, தங்கை, மனைவிக்கு இவை ஏதும் இதுவரை வாங்கித் தந்து கொடுமைகளை விலைதந்து வாங்கியதில்லை எனும் சிறிய சந்தோஷம்.

  ReplyDelete
 15. //விட்டுடுங்க சிகரெட்ட உடனே :-))//
  ஹூம்...விட்டுட்டாலும். இங்க என் சக தோழன் ஒருவன் சிகரெட்டை இந்த வருடத்திலிருந்து விட்டுவிட்டான். இதற்கு மின் சில முறை விட்டிருக்கான். ஆனால், இந்த முறை ஸ்டிரிக்டா ஃபாலோ பன்னுறான்.

  பாலா, சிகரெட்டை விட சூயிங்கம் எல்லாம் இருக்காம்...

  ReplyDelete
 16. //மனிதன் சைவ உணவுகளை மட்டுமே உண்ண வேண்டுமென்பது இறைவனின் சித்தமாக இருந்தால், மனிதனுக்கு கூரிய பற்களை ஏன் படைக்க வேண்டும்?//

  இப்னு பஷீர்,
  என்ன சொல்வது என்று தெரியவில்லை. எதை எடுத்தாலும் இறைவனின் சித்தம் என்று சொன்னால் என்ன செய்வது? :-((

  மனிதனுக்கு முடி கூடத்தான் அதுபாட்டுக்கு இறவைன் கொடுத்த சித்தப்படி வளர்கிறது. பிறகு ஏன் மழித்தலும் நீட்டலும் ? அப்படியே காடாய் வளர்க்க வேண்டியது தானே ஆணும் பெண்ணும்?

  மனித நகம் கூட விட்டால் அதுபாட்டுக்கு வளரும் அதுவும் இறைவனின் சித்தம் என்றால் ஏன் வெட்ட வேண்டும்.

  சைவ/அசைவ உணவு வகைகள் வாழும் இடம் சார்ந்த ஒரு சாதரண உணவுப் பழக்கம் மட்டுமே. இதற்கும் இறைவனுக்கும் என்ன சம்பந்தம்?

  கடலுக்கு அருகில் வாழ்பவனுக்கு மீன் தான் பிரதான உணவு. அவனைப் போய் நெய் சாப்பிடு என்றால் எப்படி?

  பசிக்காக மட்டும் கொல்வதானால் அது இயற்கையின் உணவுச் சுழற்சி என்று சொ(கொ)ல்லலாம்.பாலைவனத்தில் இருப்பவன் ஒரு காலத்தில் குர்பானிக்காக ஒட்டகம் பலியிட்டார்கள் என்றால் அதுக்காக கொடைக்கானல்லிலும் ஒட்டகத்தை வரவழைத்துக் கொல்வது கொடுமை அய்யா கொடுமை.

  சாமிக் குத்தம் என்று ஆட்டையும் கோழியையும் பிடித்து டன் கணக்க்கில் வெட்டி கூத்தடிப்பது பசிக்காக மட்டுமே நடத்தப்படும் கொலைகள் அல்ல என்று உங்களுக்குத் தெரியும்.

  இவைகள் எப்படிக் கொடுமையோ அதற்குமேல் கொடுமை வேண்டுதல் என்ற பெயரில் பாலையும்,தேனையும் மற்ற உணவுப் பொருள்களையும் சாமி தலையில் குடம் குடமாக ஊற்றி வீணடிப்பது. :-(((

  என்னளவில் அசைவம்/சைவம் என்பது ஒரு உணவுப் பழக்கம் மட்டுமே.உயிர் வாழ்வதற்காக மனிதன் காய் கறி சாப்பிடுவதா அல்லது கழுதையை சாப்பிடுவதா என்பதை அவன் வாழும் இடம்தான் தீர்மானிக்கிறது.எல்லாம் கிடைக்கும்போது எதைச் சாப்பிடலாம் என்பது அவரவர் விருப்பம்.இறைக்கு இதில் தொடர்பு கண்டே ஆகவேண்டும் என்றால் எல்லாவற்றிலும் காணலாம்.

  கூர்மையான பல்லைக் கொடுத்த இறைவன் மனிதனுக்கு மூளையையும் கொடுத்து உள்ளான்.அறிவியலையும் ஆண்டவன் தான் கொடுத்துள்ளான் என்றால் அணுகுண்டும் அவனது சித்தமே.எல்லாம் அவன் சித்தமே நாம் எது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் ஏன் என்றால் நாம் நினைக்கும் எண்ணம் முதல் செய்யும் செயல் வரை எல்லாம் அவன் சித்தமே.

  உணவு மட்டும் அல்ல பிற எல்லாத் தேவைகளுக்காகவும் மனிதர்களாகிய நாம் இயற்கையை அளவுக்கு மீறி பாழடிக்கிறோம் என்பதே நான் சொல்ல வருவது.மனிதன் வாழும் இடத்தில் என்ன கிடைக்கிறதோ அதில் சூழ்நிலைக்கேற்ப வாழ வேண்டும்.தன்னால் முடிந்த அளவு இயற்கைக்கு பாதகம் இல்லாமல் மற்ற உயிர்களுக்கும் வழிவிட்டு வாழவேண்டும்.

  ReplyDelete
 17. சீனு/ பாலா

  வாயில் ரோத்மென்ஸ் சிகரெட், கையில் கோக்டின், கோட் வலது பாக்கெட்டில் லைட்டர், போலோ மிண்ட், இடது பாக்கெட்டில் ஸ்பேர் ரோத்மென்ஸ் 20" சிகரெட் பெட்டி, Wrigley's chewing gum, இப்படி நடமாடும் மினி டிபார்ட்மெண்ட் ஸ்டோராக நான் இருந்த அனுபவம் நிறைய.

  தனியாக யாரும் அருகில் இல்லை எனில் இவைகளுக்கு அடிமையாகிப் போன என்னை நானே ஆட்டோ சஜெஷென் டெக்னிக்கில் "கண்றாவிடா வெட்கம் கேவலமா இல்லையா"ன்னு ஏக எகத்தாளம் செஞ்சு செஞ்சு நல்லவேளை ஆண்டவன் அருள் சொந்த செலவில நானே வைச்சுக்கிட்ட சூனியத்திலிருந்து ஒருவழிக்கா ஒரு மாமாங்கம் கழிச்சு சுயமா வெளியேறி வந்துட்டேன். :-)))

  அன்புடன்,

  ஹரிஹரன்

  ReplyDelete
 18. சிகரெட்டை விடுவது ரொம்ப சுலபம். என் தோழன் ஒருத்தன் ஒரே மாசத்திலே முப்பது தடவை அதை செஞ்சான், அதாங்க சிகரெட்டை விடறதை சொன்னேன். :))))

  நான் கூட சிகரெட் பிடிக்கிறேன். வருஷத்துக்கு 12 என்று கணக்கு. மாசத்துக்கு ஒண்ணு, ஒரு மாசம் விட்டுப் போனா அடுத்த மாதத்துக்கு கேரி ஓவர் செய்வதில்லை.

  அந்த முறையிலே நான் கடைசி சில ஆண்டுகளா சிகரெட்டை பிடிக்கவில்லை.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  ReplyDelete
 19. //இதுவரை நான் காசுபோட்டு கடவுள், அம்மா, தங்கை, மனைவிக்கு இவை ஏதும் இதுவரை வாங்கித் தந்து கொடுமைகளை விலைதந்து வாங்கியதில்லை எனும் சிறிய சந்தோஷம்.//

  ஹரிகரன்,
  நீங்கள் பரவாயில்லை. நான் கடவுளுக்கு எதுவும் வாங்கிக் கொடுத்தது இல்லை.ஆனால் அடுத்தவாரம் நடக்கும் ஒரு குடும்பவிழாவுக்கு என்ன பட்டு கட்ட என்று கேட்கும் மனைவியை ஒன்றும் செய்ய முடியவில்லை.அதுபோல் எனது இடுப்பில் இருக்கும் பெல்ட்டும் பையில் இருக்கும் பர்ஸும் காலில் இருக்கும் சூவும் என்னைக் கேவலாமாகப் பார்க்கிறது.சூழ்நிலைக்கைதி என்று சொல்லி தப்பிக்க விரும்பவில்லை. நானும் அந்த கேவலமான மனிதன்களில் ஒருவன் தான். எனது உணவுப் பழக்கம் மட்டுமே தாவர கட்சி அதுவும் பல சில நேரங்களில் முட்டைக்கட்சி :-(((

  பூமியில் உள்ள பிராணிகளில் நானும் நான் சார்ந்த மனித இனமும் ஒரு கேவலமான பிராணிகள் என்று சொல்வதே சிறந்தது.

  சந்நியாசியாகப் போனால் ஒருவேளை நினைத்தபடி வாழமுடியுமோ? :-((((

  ReplyDelete
 20. ஹரி சொல்லுறத கேட்டுக்குங்க பாலா...சிகரெட்டை விட்டுடலாம்...

  ReplyDelete
 21. கல்வெட்டு மிக நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.

  ReplyDelete
 22. பாலா,

  பாருங்க. உங்களுக்கு சப்போர்ட் கூடிக்கிட்டே போகுது...டோண்டு சாரும் களாத்தில் இறங்கிவிட்டார், உங்களுக்காக.

  //நீங்கள் பரவாயில்லை. நான் கடவுளுக்கு எதுவும் வாங்கிக் கொடுத்தது இல்லை.ஆனால் அடுத்தவாரம் நடக்கும் ஒரு குடும்பவிழாவுக்கு என்ன பட்டு கட்ட என்று கேட்கும் மனைவியை ஒன்றும் செய்ய முடியவில்லை.//

  ஆமாம் கல்வெட்டு. சில நேரங்கள் அதுவாக அமைகிறது. எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை தான். ஆனால், என்ன செய்வது? சென்ற வாரம் என் அம்மா வேண்டுதலுக்காக திருத்தணி சென்று (அவளால் போக முடியாது) 1005/- காணிக்கை செலுத்திவந்தேன். ஆனாலும் அவள் நிம்மதிக்காக செய்யத்தான் வேண்டியுள்ளது. கால் அறுவை சிகிச்சைக்காக அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் பொழுது வேண்டிக்கொண்டதாம்.

  ReplyDelete
 23. //சந்நியாசியாகப் போனால் ஒருவேளை நினைத்தபடி வாழமுடியுமோ?//
  கல்வெட்டு...ம்ம்...புரியுது! புரியுது!!

  ReplyDelete
 24. //சந்நியாசியாகப் போனால் ஒருவேளை நினைத்தபடி வாழமுடியுமோ?//

  ///கல்வெட்டு...ம்ம்...புரியுது! புரியுது!!///

  ஆஹா..சீனு நீங்க பிரேமானந்தா, ஜெயேந்திரர் அல்லது இப்ப சமீபத்தில் மாட்டிக்கிட்ட பாஸ்டர் ரேஞ்சில் யோசிச்சு புரியுது.. புரியுதுன்னு சொல்றீங்க

  அதுக்காக சந்நியாசிக போக விரும்பல (அட நம்புங்க) குறைந்த பட்சம் இந்த பட்டு மேட்டரிலாவது பாவம் பண்ணாமல் இருக்கலாம் என்றுதான்

  ReplyDelete
 25. சீனு!
  புலாலுண்ணாமைக்கு முதல் கொல்லாமை, அதுவும் சகமனித உயிரையும் கொல்லாமை என்னும் கொள்கையும் வேண்டும். குஜாரத்தில் சில வருடங்களுக்கு முன் மாட்டை வெட்டிச் சாப்பிட்ட 4 ஹரிசன்கள் கொல்லப்பட்டதை ,அதுவும் ஊரவர் முன் வைத்து அடித்துக் கொல்லப்பட்டதையும் நீங்கள் படித்திருப்பீர்கள். அதைச் சரியென்றதும் நம்ம நாட்டு நீதிபதிதான்!!
  ஐயா!! ஆட்டுக்கும்,கோழிக்கும்,மாட்டுக்கும் இருக்கும் உணர்வை எங்களுக்குப் போதிக்கும் பெரியோர்களே!!
  மனிதனுக்கு இருக்கும் உணர்வை முதல் படிக்க சிறு முயற்சி எடுங்கள்!!!
  நீ காலால் பிறந்தவன் கீழானவன் என்பது, கொல்வதிலும் கொடியதாக சம்பத்தப்பட்டவரைத் தாக்குகிறது.உங்களுக்குப் புரியவில்லையா,?
  நிற்க !
  மனித சமுதாயம் காலாதிகாலமாக புலாலுண்ணிதான்.ஆனால் அன்றைய மனிதன் உடல் உழைப்பால் உழைச்சதையையும், கொழுப்பையும் கரைத்தான்;
  இன்றையவர்கள் உடல் உழைப்புக் குறைந்தவர்கள்...அதன் பாதிப்பே பல இருதயவியாதிகள்; அமேசன் காட்டுக்குள்ளும்;இந்தோனெசிய;ஆபிரிக்கக் காட்டுக்குள்ளும் இன்றும் நாகரீகத்தில் சுவடுதெரியாமல்; உடம்பில் எதையும் மறைக்காத ஒழிவுமறைவற்ற பழங்குடி மக்கள் ,வேட்டையே பிரதான தொழில் கால்நடை வளர்ப்பு பக்கத்தொழில் அவர்களில் 80 வயதைக்கடந்த முதியோர் பலர் உள்ளார்கள். மாமிசம் அவர்களைக் கொல்லவில்லை.மகிழ்வுடன் பலகாலம் வாழ்கிறார்கள்.
  இந்தியத் துணைக்கண்டத்தைத் தவிர உலகில் மாமிசம் கூடாது; எனும் கொள்கையுடையோர் உண்டா?,
  அவர்கள் எல்லாம் சொற்ப வயதில் செத்தாவிட்டார்கள். அவர்கள் தானே நம்மை வந்து 400 வருடங்களுக்கு மேல் அடிமையாக வைத்திருந்தார்கள். இன்றைய நவீனங்கள் அவர்கள் மாமிசம் சாப்பிட்டு உலகுக்குப் போட்ட பிச்சை.
  அதனால் நான் என்ன சாப்பிடுகிறோம் என்பதல்ல பிரச்சனை. எந்த அளவு உடல் உழைத்து கலோரியை எரிக்கிறோம் என்பதே!! பிரச்சனை.
  இன்று ...எதைச்சாப்பிட்டாலும் நோய் வரும்; இன்றைய மரக்கறிகளும் ,பழங்களுமே நச்சுத் தன்மையுடையவையே!!
  காற்றுக்கூட சுத்தமில்லை. இதையெல்லாம் யோசித்தால் ;சட்டையைக் கிழித்துக் கொண்டு தெருவில் ஓட வேண்டும்.
  அதனால் மரக்கறி உணவு சாப்பிட ஆசைப்படுவதோ;அதைப் பழக்கமாக உடையதோ உங்கள் தனிப்பட்ட விரும்பமாக இருக்கட்டும்.
  இவற்றைப் பொதுமைப் படுத்த முயலவேண்டாம்
  மனிதன் தன் வாழ்விடத்துக்கமைய தன் உணவை நிர்ணயிக்க வேண்டியுள்ளது.எஸ்கிமோவும்;மங்கோலியரும்..கோதுமைக்கும்,நெல்லுக்கும் கத்தரிக்காயுக்கும் எங்கே போவது.
  முதல் இந்திய சமுதாயமாகிய நாம் மனிதனை மனிதனாக மதிப்பதைப் பழகட்டும். அதற்குப் பின் என்ன?? சாப்பிடுவது, உடுப்பது என்பதை யோசிப்போம்.
  யோகன் பாரிஸ்

  ReplyDelete
 26. //அதுக்காக சந்நியாசிக போக விரும்பல (அட நம்புங்க) குறைந்த பட்சம் இந்த பட்டு மேட்டரிலாவது பாவம் பண்ணாமல் இருக்கலாம் என்றுதான்//

  இது...இது...இதுதாங்க வேண்டும். மகாத்மாவாக மாற அறைகூவல் விடுக்கவில்லை. மனிதனாகவேணும் இருப்போமே என்று தான். செய்யும் தவறை குறைத்துக் கொள்ளவேண்டும் என்பது முதல் நிலை. தவறே செய்யக்கூடாது என்பது அடுத்த நிலை. ஒவ்வொரு நிலையாகத்தான் கடக்க வேண்டும்.

  ReplyDelete
 27. Johan-Paris,

  நீங்கள் சொல்வதைப் பார்த்தால், நாங்கள் என்னவோ குஜராத்தில் நடந்ததையெல்லாம் சப்போர்ட் செய்கிறோம் என்பது போல உள்ளது. அது உங்கள் பார்வை.

  //இந்தியத் துணைக்கண்டத்தைத் தவிர உலகில் மாமிசம் கூடாது; எனும் கொள்கையுடையோர் உண்டா?//

  ம்ம்...உலகில் கணிசமானவர்கள் அசைவம் கூடாது என்று கொடிபிடிப்பவர்கள் இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் இயற்கையின் ஊடே மட்டுமே வாழ்வோம் என்று விடாப்பிடியாக வாழ்பவர்களும் உண்டு. சமீபத்தில் ஆ.வி.யில் வந்த ஒரு கட்டுரை. அவர்கள் பெயர் தெரியவில்லை.

  //இன்று ...எதைச்சாப்பிட்டாலும் நோய் வரும்; இன்றைய மரக்கறிகளும் ,பழங்களுமே நச்சுத் தன்மையுடையவையே!!//

  ஒரு நச்சை தவிர்ப்பதற்காக மற்றொரு நச்சை எடுத்துக் கொள்வீர்களா என்ன?

  //எஸ்கிமோவும்;மங்கோலியரும்..கோதுமைக்கும்,நெல்லுக்கும் கத்தரிக்காயுக்கும் எங்கே போவது.//

  கல்வெட்டு சொல்வதை படியுங்கள்.
  "கடலுக்கு அருகில் வாழ்பவனுக்கு மீன் தான் பிரதான உணவு. அவனைப் போய் நெய் சாப்பிடு என்றால் எப்படி?"
  "உயிர் வாழ்வதற்காக மனிதன் காய் கறி சாப்பிடுவதா அல்லது கழுதையை சாப்பிடுவதா என்பதை அவன் வாழும் இடம்தான் தீர்மானிக்கிறது.எல்லாம் கிடைக்கும்போது எதைச் சாப்பிடலாம் என்பது அவரவர் விருப்பம்."

  //முதல் இந்திய சமுதாயமாகிய நாம் மனிதனை மனிதனாக மதிப்பதைப் பழகட்டும். அதற்குப் பின் என்ன?? சாப்பிடுவது, உடுப்பது என்பதை யோசிப்போம்.//

  அப்படிப் பார்த்தால் நீங்களும் நானும் மனிதனை மனிதனாக மதிக்க கற்றுக் கொடுப்பதை தவிர்த்து வேறு எதுவும் எழுத முடியாது Johan-Paris. இரண்டும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இருப்பது போல நீங்கள் கூறினாலும், இரண்டின் context-ம் வெவ்வேறானது என்றே 'எனக்கு' தோன்றுகிறது.

  மேலே கல்வெட்டுக்கு கூறியதை தான் உங்களுக்கும் கூறுகிறேன் Johan-Paris.

  ReplyDelete
 28. சீனு,
  நல்ல பதிவு :)

  கல்வெட்டு,
  உங்களின் பின்னூட்டம் அருமையாக இருக்கிறது, தேவை, இருக்கும் இடம், இவற்றை உத்தேசித்து கூடியவரை அடுத்த உயிரைத் தொல்லை செய்யாமல் இருக்க வேண்டும் என்பது உண்மை தான்.

  நான் சுத்த சைவம். வெளிநாட்டுக்குப் போன போது அதனால் கூட வந்த நண்பர்களின் உயிரை வாங்கி சைவம் சாப்பிட வைத்ததைத் தவிர இன்றும் வேறு எந்த உயிரையும் அனாவசியமாக வாங்காமல் இருக்கிறேன்.

  பட்டு நெய்வதில் உள்ள உயிர்க்கொலை தெரிந்தபின், பதினைந்து வயதில் பட்டை விட்டுவிட்டேன். முத்துக்கள் பற்றி இன்றுவரை யோசித்ததில்லை. இப்போது தான் அதைப் பற்றித் தோன்றுகிறது. இனி அவற்றை வாங்குவதையும் விட வேண்டியது தான்.

  சர்வேசன் அவர்களின் பதிவில் சொன்னது போல், தோல் என்று பயன்படுத்துவது ஷூவும் பர்ஸும் தான். அடுத்த முறை அவை வாங்கும் போதும் கவனமாக செயற்கை லெதர், ரெக்ஸின் ஏதும் கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும்..

  ReplyDelete
 29. சைவ உணவைப் பற்றி இவ்வளவு எழுதிவிட்டு, சைட் டிஷுக்காக இன்னும் அசைவமாக இருப்பது, ஏற்புடையதல்ல நண்பா.

  ReplyDelete
 30. இல்லை. அது ஒரு விளையாட்டாய் சொன்ன lame reason தான். இப்பொழுதெல்லாம் அசைவம் குறைத்துக் கொள்கிறேன். மேலும், சைவத்தில் ருசியாக சமைத்துப் போட ஆள் இல்லை. அது தான் முக்கிய காரணம்.

  ReplyDelete