இப்படத்தில் முதல் பாடல் 'பகவான்' என்று ஆரம்பிக்கும் பாடல். அமைதியான, ஆர்பாட்டமில்லாத இசை + பதிவு. இங்கே நான் ரசித்தது, அந்த 'பகவான்' பாடலின் வரிகளை. வசன நடையில், விவாதமாக செல்கிறது பாடல். இதில் நான் ரசித்தது அந்த அழகான விவாதம்.
பகவான் ஆகாயம், பூமி, வாயு, அக்னி, தண்ணீர், இவையாவும் படைத்து கடைசியாக மனிதனை படைத்தார் என்று ஒருவர் சொல்ல, கடவுளை யாரு படைத்தார்? என்று எதிர்கேள்வி. கடவுளை யாரும் படைக்கமுடியாது. அவர் சுயம்பு, தானா உண்டானவர். கண்காணாத உன் கடவுள் தானாக தோன்றும் பொழுது, கண்ணில் தெரிகின்ற அண்டம் தானாக ஆகாதோ? அசுர குணம் உள்ளவர்கள் தான் இப்படி கேள்வி கேட்பார்கள். தேவர் குணம் உள்ளவர்கள் இப்படி குதர்க்கமாக பேச மாட்டார்கள். இந்திரன் யாரு? தேவர் குல தலைவன். இராவணன் யாரு? அசுரர் குல அரசன். காட்டில் இருந்த முனிவர் மனைவியின் கற்பை கெடுத்தவன் இந்திரன். கொண்டு சென்ற மாற்றான் மனைவியை கற்புடன் விட்டவன் இராவணன். இப்பொழுது சொல் குணத்தில் உயர்ந்தவன் யார்? தேவனா? அசுரனா? அசுர குலத்திலும் அப்போ அப்போ நல்லவர்கள் இருந்திருக்கார்களே! நந்தனுக்கு நடராஜப் பெருமாள் மோட்சம் கொடுக்கவில்லையா? நந்தனுக்கு மோட்சம் கொடுத்தீர்களா? அல்லது, தீயிட்டு எரிமூட்டி மோசம் புரிந்தீர்களா? மோட்சம் தந்தது முற்றிலும் உண்மை என்றால், அவன் சந்ததியெல்லாம், சன்னிதி இழந்து, சந்தியிலேயே ஏன் நின்றான்? மனிதனாக இருந்தால் மடியாக இருக்கனும். தீட்டு என்று பெரியவர்கள் தெரியாமலா சொன்னார்கள்? தீட்டு என்ன தீட்டு? குடிக்கிற தண்ணீரை தொடக்கூடாது. குளத்தில் கால் படக்கூடாது. எப்படி வரும் சுத்தம்? உங்கள் மேல் குற்றம். குளிக்காத பசுவை கும்பிடுகிறீர்கள். அதை குளிப்பாட்டும் மனிதனை ஏனய்யா கொல்கிறீர்கள்? (தெலுங்கில்) வேத புராணம், இதிகாசங்களில் கூறப்பட்டதை அவமானம் செய்தவருக்கு சாப்பாடு போடக்கூடாது. புராணம் இதிகாசம் ஆகியன வெறும் பொய் மோசம். பொய் பேசி பேசியே பொய்யாய் போய்விட்டது தேசம். புராணம், இதிகாசம் பொய் இல்லை. ஆதாரம் கூறும். அணில் முதுகில் ஸ்ரீராமர் போட்ட கோடு மூன்று. அப்படியே இருக்கிறது. அழியவில்லை பாருங்கள். ஓஹோ! முதுகை தொட்டதும் மூன்று கோடுகள் விழுந்திருச்சோ? சீதையின் முதுகில் கோடுகள் இல்லையா? இல்லை. ஸ்ரீராமர் சீதையை தொடவே இல்லையா? இது விதண்டாவாதம். பேசக்கூடாது. இனிமேல் தான் சுவாமி பேசவே போகிறேன். |
ஆஹா! படத்தை பற்றி ரொம்பவே எதிர்பார்க்க வெச்சுட்டாங்கைய்யா!!
'இடை' என்று பழங்காலத்து இசை தோரணையில் (நாயகன் படத்தில் கூட வருமே 'நான் சிரித்தால் தீபாவளி', 'ஓ! ரசிக்கும் சீமானே'), குத்து போன்ற ஒரு பாடல்.
உன்னிலே காமசூத்திரம், கண்ட பின் என்ன சாத்திரம்; தாயவள் சொன்ன சேதியால், நானும் தான் ராஜ கோத்திரம்; பகதூரைய்யா! பதறாதைய்யா!! உறவு முறை பாரா உலகமய்யா |
'கடவுளா? நீ கல்லா?' என்று ஒரு பாடல். இதற்கும் நல்ல பாடல் வரிகள். பெரும்பாலும் கேள்விகள்.
நீங்கள் மட்டும் நீங்கள் மட்டும் விந்து விழுந்து பிறந்தவர்கள்! நாங்கள் என்ன நாங்கள் என்ன எச்சில் விழுந்தா பிறந்தவர்கள்?" |
'தை தை' - சுமாரான பாடல். கர்நாடக சங்கீதம். விஜயலக்ஷ்மி சுப்பிரமணியம் பாடியிருக்கிறார். கேட்க கேட்க நன்றாக இருக்கலாம். சுதா ரகுநாதனை பாடச் சொல்லியிருக்கலாமோ?
'தாயும் யாரோ?' என்று மற்றொரு பாடல். யேசுதாஸ் பாடியது. அருமையான பாடல் + வரிகள். மற்றும் அருமையான பீட்.
சாதாரணமாகவே பாடல்கள் பரவாயில்லை. 'பெரியார்' என்ற மாஸுடன் கேட்டால் நன்றாகவே இருக்கும்.
இளையராஜா இசையமைக்க மறுத்தது, அவர் பார்வையில் பார்த்தால், சரி தான் என்றே தோன்றுகிறது. கொடுத்து வைக்காதவர்கள் நாம் தான்.
ஆனால், என் கவலை, படம் பொதுவாக எல்லா மக்களுக்கும் பாடமான ஒரு படமாக ஆக்கப்படுமா?, அல்லது 'தி.க.வினரின் படமாக' மட்டும் முத்திறை குத்தப்படுமா? இது நிச்சயம் தி.க.வினரின் கையில் தான் இருக்கிறது. காரணம், இவர்கள் பன்னும் சேட்டை தான்.
//இந்திரன் யாரு?
ReplyDeleteதேவர் குல தலைவன்.//
இந்துமதத்தில் இந்திரன் என்பவன் இந்திரியங்களின் அதிபதி. (இந்திரியங்கள்= Five Organs of senses + five Organs of actions)
உடலளவில் மட்டும் அதிகம் வாழ்கின்ற நிலையில் இந்திரியங்களின் உந்துதலுக்கு உட்பட்டு அல்லலுக்கு ஆட்படுவான் என்பதே இந்திரனின் அகலிகை முதலான இந்திரிய அத்துமீறல் புராணங்கள் வாயிலாகச் சொல்வது.
இந்திரியங்களின் அதிபதியே மனக்கட்டுப்பாடு இல்லாமல் போனால் இந்திரியங்களின் உந்துதலுக்குட்பட்டு அல்லல் பட்டே ஆகவேண்டும் என்பதே இந்தப் புராணவாயிலாக நாம் கற்க வேண்டியது.
மாறாக பகுத்தறிவுகள் சாமியாகிய இந்திரனே பெண்களைத் தவறாக நடத்தினான் என்று சாமியாடி பகுத்தறிவு, சுயமரியாதை என மாரடிக்கிறோம்.
//இராவணன் யாரு?
அசுரர் குல அரசன்.
காட்டில் இருந்த முனிவர் மனைவியின் கற்பை கெடுத்தவன் இந்திரன். கொண்டு சென்ற மாற்றான் மனைவியை கற்புடன் விட்டவன் இராவணன். இப்பொழுது சொல் குணத்தில் உயர்ந்தவன் யார்? தேவனா? அசுரனா?//
ராவணனுக்கு இருந்த சாபம் பெண்ணின் அனுமதியின்றி உறவு கொள்ள முடியாது என்பது.
மாதரை மதிக்கும் உயர்ந்த குணமுடையவன் ராவணன் எனில் அடுத்தவன் மனைவியைக் கவர்ந்து சென்றது ஏனோ?
//அணில் முதுகில் ஸ்ரீராமர் போட்ட கோடு மூன்று. அப்படியே இருக்கிறது. அழியவில்லை பாருங்கள்.
ஓஹோ! முதுகை தொட்டதும் மூன்று கோடுகள் விழுந்திருச்சோ? சீதையின் முதுகில் கோடுகள் இல்லையா? இல்லை. ஸ்ரீராமர் சீதையை தொடவே இல்லையா?//
அணில் அம்மணமா இருக்கு கோடு தெரியுது!
அடுத்தவன் பொண்டாட்டி முதுகில் கோடு தேடி அலைபவர்கள் கேடிகள் தானே பகுத்தறிவு வாதிகள் எப்படி?
இந்த லட்சணத்தில் பகுத்தறிவு வெங்காயங்கள் பெண்ணுரிமை என்று பேச்சு வேறு!
//இனிமேல் தான் சுவாமி பேசவே போகிறேன்.//
வெளங்கினமாதிரிதான் பண்பாடு, கலாச்சாரம் பற்றி இனிப் பேசும் பிழைப்புவாத அரசியல் திரா"விட"ப் பெத்தடின் ஊசி போடும்!
இந்தக் கண்றாவிக்கு சுயமரியாதைப் படம்னு தமிழக அரசுநிதி ஒருகோடி விரயம்!
தமிழ்த் தெய்வமே முருகா! தமிழ்நாட்டைக் காப்பாற்று இக்கயவர்களிடமிருந்து!
நன்றி நாடோடி, ஹரிஹரன்.
ReplyDelete//இளையராஜா டப்பா தட்டியிருந்தால் வைரமுத்துவின் வைர வரிகளை இழந்திருப்போம்.//
ஓ! நீங்க இப்படி யோசிக்கரீங்களா? ஏன் இந்த காண்டு, ராசா மேல? எனக்கு தெரிந்து இளையராஜா பாடல்களில் வைரமுத்துவின் வரிகள் இரண்டாம் பட்சமே. ஏ.ஆர்.ரகுமான் பாடல்களில் இசையை விட வரிகளே பிராதனமாக இருக்கும். அதனால் தான் இளையராஜாவை 'ராக தேவன்' என்று சொல்வது சரியாக இருக்கும்.
ஹரிஹரன்,
நீங்க சொல்வது, கெட்டதிலும் நல்லதையே தேட வேண்டும் என்பதை. நானும் ஒப்புக் கொள்கிறேன். மத்தபடி இந்த பாடலில் வார்த்தைகளின் உபயோகம் அருமை நண்பரே.
//ராவணனுக்கு இருந்த சாபம் பெண்ணின் அனுமதியின்றி உறவு கொள்ள முடியாது என்பது.//
புது செய்தியா இருக்கு. உங்கள் வழிக்கே வருகிறேன். அடுத்தவர் மனைவியை கவர்ந்து சென்றதுக்கு தானே தண்டனை அனுபவித்தான் இராவணன்? இந்திரன் தவறு செய்தான். அதன் மூலம் பாடம் கற்றுக் கொள்ளவேண்டுமெனில், இராவணன் தவறு செய்தான். அதன் மூலமும் நாம் பாடம் கற்றுக் கொள்ளவேண்டும். இல்லையா?
//அடுத்தவன் பொண்டாட்டி முதுகில் கோடு தேடி அலைபவர்கள் கேடிகள் தானே பகுத்தறிவு வாதிகள் எப்படி?//
ம்ம்...நியாயமான கேள்வி.
//இந்தக் கண்றாவிக்கு சுயமரியாதைப் படம்னு தமிழக அரசுநிதி ஒருகோடி விரயம்!//
விரயம் எல்லாம் இல்லை. இன்வெஸ்ட்மென்ட் ஃபார் பகுத்தறிவு.
// உங்கள் வழிக்கே வருகிறேன். அடுத்தவர் மனைவியை கவர்ந்து சென்றதுக்கு தானே தண்டனை அனுபவித்தான் இராவணன்? இந்திரன் தவறு செய்தான். அதன் மூலம் பாடம் கற்றுக் கொள்ளவேண்டுமெனில்//
ReplyDeleteபுராணத்தில் அதிகமாக தண்டனை பெற்றது இந்திரன் தானே?
இந்திரன் பற்றியது புராணம். வேத நெறிகளை கதைகள் மூலம் கல்வி அதிகம் கற்காத எளியவரைச் சென்றடையக் கையாண்ட நேர்த்தியான ஒரு உத்தி.
இதிகாசம் என்பது History as it has happened என்பதான வரலாற்றுச் சம்பவங்களின் தொகுப்பு.
//இராவணன் தவறு செய்தான். அதன் மூலமும் நாம் பாடம் கற்றுக் கொள்ளவேண்டும். இல்லையா//
ராவணனின் வீழ்ச்சியில் கற்க வேண்டியது இருக்கிறது. மறுப்பதற்கு ஏதும் இல்லை. இதிகாசம் புராணத்தை மறுப்பவர்களுக்குத்தான் குளிர்விட்டுப் போய் சீதையின் முதுகில் ராமன் வருடியதால் விளைந்த வரிகளை
வரைமுறையற்ற சிந்தனையைப் பகுத்தறிவு, சுயமரியாதை என்று பேசி சமூகத்தினை குழியில் தள்ளும்!
//இதிகாசம் என்பது History as it has happened என்பதான வரலாற்றுச் சம்பவங்களின் தொகுப்பு.//
ReplyDeleteஆனால், as it happened-ஐ அப்படியே சொல்லாமல், இடத்திற்கு தகுந்தார் போல மாற்றிக்கொண்டிருக்கிறார்களே! உதா, கம்பர் தன் இராமாயணத்தில் சீதையை தொடாமல் தூக்கி சென்றதாகத்தானே எழுதப்பட்டிருக்கிறது (correct me if I'm wrong).
//இதிகாசம் புராணத்தை மறுப்பவர்களுக்குத்தான் குளிர்விட்டுப் போய் சீதையின் முதுகில் ராமன் வருடியதால் விளைந்த வரிகளை வரைமுறையற்ற சிந்தனையைப் பகுத்தறிவு, சுயமரியாதை என்று பேசி சமூகத்தினை குழியில் தள்ளும்!//
Yes! I accept this. வரைமுறையற்ற சிந்தனைகள் தாம். அதனால் தானோ என்னவோ, பெரியாரின் சீடர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள், பெரும்பாலும் மரியாதை குறைவாக பேசுபவரும், எழுதுபவராகவும் இருக்கிறார்கள்.
//ஆனால், as it happened-ஐ அப்படியே சொல்லாமல், இடத்திற்கு தகுந்தார் போல மாற்றிக்கொண்டிருக்கிறார்களே! உதா, கம்பர் தன் இராமாயணத்தில் சீதையை தொடாமல் தூக்கி சென்றதாகத்தானே எழுதப்பட்டிருக்கிறது (correct me if
ReplyDeleteI'm wrong).//
ராவணன் தன் தங்கை சூர்ப்பனகையினால் தூண்டப்பட்டு, அதனால் பிறன் மனைவியான சீதையைத் தூக்கிச்சென்ற அதர்மமான செயல்தான் இங்கு பிரதானம்.
அங்கனம் தூக்கிச் சென்றபோது ராவணன் சீதையைத் தொட்டானா இல்லையா என்பதல்லவே?
கம்பர் தொடாமலே தூக்கிச்சென்றது என்பதாக எழுதியிருப்பது ராமர்-சீதா மீதான அவரது பக்தியை மரியாதையான பண்பை எழுத்தில் காட்டிருக்கிறார்.
//அங்கனம் தூக்கிச் சென்றபோது ராவணன் சீதையைத் தொட்டானா இல்லையா என்பதல்லவே?//
ReplyDeleteம்ஹூம்...நான் சொல்ல வந்தது, "இதிகாசம் என்பது History as it has happened என்பதான வரலாற்றுச் சம்பவங்களின் தொகுப்பு" என்று நீங்கள் சொன்னதற்கான பதில் தான்.
//கம்பர் தொடாமலே தூக்கிச்சென்றது என்பதாக எழுதியிருப்பது ராமர்-சீதா மீதான அவரது பக்தியை மரியாதையான பண்பை எழுத்தில் காட்டிருக்கிறார்.//
அப்போ அவரோட பக்திக்காக "as it has happened"-ஐ மாற்றிக் கொள்ளலாம்னு சொல்லவரீங்களா ஹரிஹரன்? அப்புறம் எப்படி அது "as it has happened"?
//அப்போ அவரோட பக்திக்காக "as it has happened"-ஐ மாற்றிக் கொள்ளலாம்னு சொல்லவரீங்களா ஹரிஹரன்? அப்புறம் எப்படி அது "as it has happened"?//
ReplyDeleteராமாயணத்தின் மூலம் வால்மீகி எழுதியதே. தமிழில் ராமபக்தரான கம்பர் எழுதியது, ராமபக்தரான துளசிதாசர் எழுதியது என்பனவை வால்மீகியின் மூலத்தினைத் தழுவி எழுதப்பட்டவை.
பொதுவாகவே மொழிபெயர்ப்பு, தழுவல் எழுத்துக்களில் சில விஷயங்கள் லோக்கல் கண்டிஷன்களுக்கு ஏற்ப சிறிய மாறுதலுக்கு உட்படாதிருக்காது.
வால்மீகி எழுதிய மூலமான வால்மீகி ராமாயணம் "as it has happened" இதிகாசமே.
//இதிகாசம் என்பது History as it has happened என்பதான வரலாற்றுச் சம்பவங்களின் தொகுப்பு.//
ReplyDeleteஅண்ணா, ராவணன் எந்த தேதில சீதையை தூக்கி கொண்டு போனான் என்று சற்று விளக்கமாக சொல்லுங்கள்.
//பொதுவாகவே மொழிபெயர்ப்பு, தழுவல் எழுத்துக்களில் சில விஷயங்கள் லோக்கல் கண்டிஷன்களுக்கு ஏற்ப சிறிய மாறுதலுக்கு உட்படாதிருக்காது.//
ReplyDeleteஅப்போ அது தவறான செய்கைதானே! வரலாற்றை திரிப்பதாகத்தானே பொருள்? எதற்காக செய்கிறார்கள் என்பது முக்கியம் அல்ல. செய்கிறார்களா என்பதே இங்கு கேள்வி.
//அண்ணா, ராவணன் எந்த தேதில சீதையை தூக்கி கொண்டு போனான் என்று சற்று விளக்கமாக சொல்லுங்கள்.//
வாங்க அருண்மொழி,
நக்கல் தொனியில் உங்கள் கேள்வி இருக்கிறதே?
//அண்ணா, ராவணன் எந்த தேதில சீதையை தூக்கி கொண்டு போனான் என்று சற்று விளக்கமாக சொல்லுங்கள்.//
ReplyDeleteதம்பி அருண்மொழி,
எந்தத் தேதியில் கைபர் போலன் கணவாய் வழியாக சரியாக எத்தனை ஆடுகள், எத்தனை ஆட்டுக் குட்டிகளுடன் ஆரியர்கள் வந்தேறினார்கள் என்று நீங்கள் கூறுங்கள்!
//அப்போ அது தவறான செய்கைதானே! வரலாற்றை திரிப்பதாகத்தானே பொருள்? எதற்காக செய்கிறார்கள் என்பது முக்கியம் அல்ல. செய்கிறார்களா என்பதே இங்கு கேள்வி.//
ReplyDeleteஇது மொழி பெயர்ப்பு / தழுவி எழுதுதலில் இருக்கும் குறைபாடு. முழுமையான தகவல்களுக்கு மூலநூலைப் படியுங்கள்.
இது மொழிமாற்றத்தினால் விளையும் குறைபாடே அன்றி வரலாற்றைத் திரிப்பது என்பதாக எடுத்துக்கொள்ள முடியாது.
//இது மொழிமாற்றத்தினால் விளையும் குறைபாடே அன்றி வரலாற்றைத் திரிப்பது என்பதாக எடுத்துக்கொள்ள முடியாது.//
ReplyDelete'வரலாற்றைத் திரிப்பது என்பதாக எடுத்துக்கொள்ள முடியாது' என்பதில் உடன்படுகிறேன். இப்படி எழுதுவது இராவணன் கையால் தூக்கி சென்றான் என்ற திரிபெல்லாம் பெரிய விஷயம் இல்லை தான். ஆனால், இது மற்ற விஷயங்களிலும் நடக்கக்கூடாது அல்லவா?
//'வரலாற்றைத் திரிப்பது என்பதாக எடுத்துக்கொள்ள முடியாது' என்பதில் உடன்படுகிறேன். இப்படி எழுதுவது இராவணன் கையால் தூக்கி சென்றான் என்ற திரிபெல்லாம் பெரிய விஷயம் இல்லை தான். ஆனால், இது மற்ற விஷயங்களிலும் நடக்கக்கூடாது அல்லவா?//
ReplyDeleteவரலாற்றுத் திரிபு எங்கே நடக்கிறது என்பதற்கு சாம்பிள். தாஜ்மஹால் ஷஹகான் மும்தாஜூக்காகக் கட்டிய காதல் மாளிகை எனப்படித்து மார்க் வாங்கியதில் 100% இருக்கிறது.
தேஜோமஹால்->தாஜ்மஹாலான வரலாறு
http://stephen-knapp.com/was_the_taj_mahal_a_vedic_temple.htm
படிச்சு போட்டோ போட்டோவா ஆதாரம் பாருங்க இந்திய வரலாறு யாரால் திரிக்கப்பட்டது என்று.
ஈ.வெ.ராமசாமி ஒரு மிகவும் அய்தீகமானக் குடும்பதிலே பிறந்து வளர்ந்தார்.சிறுவனாக இருக்கும் போதே பல இந்துமத "அறிஞர்கள்" "சுவாமிகள்" தினம் அவர் வீட்டிற்கு வந்து ராஜ மரியாதை பரிசுகள் பெற்றுச் செல்வதைப் பார்த்தார்.ஆனால் ஒருவர்கூட அவர் கேட்ட உண்மையான கேள்விகட்கு நம்பு,கேள்வி கேட்காதே என்பதைத்தவிர வேறு நம்பகரமான பதில் தரவில்லை.
ReplyDeleteஅந்தக் கேள்விகளும் அதற்கு அவர் பிற்காலத்தில் மிகுந்த ஆராய்ச்சிக்குப்பின் கண்ட பதில்களுந்தான் இந்தப் பாடல் வரிகள்.
(குறுக்கு சால் விடும் தவளைகளே பெரியாரிடம் இருந்த ராமாயணம் பற்றிய மத்த புராண நூல்கள்,அதை அவர் ஆராய்ச்சி மாணவனைப் போல் படித்து மற்றவர்களிடம் கேள்விகள் கேட்டு அறிந்துகொண்டது,எதையும் ஆதாரம் காட்டிப்பேசுவது இவற்றைக் குறைத்துப் பேசி உங்கள் தலையில் என்ன இருக்கிறது என்று வெளிப்படுத்த வேண்டாம்).
பெரியார் அவரிடம் கேட்கப்பட்ட அத்துனைக் கேள்விகட்கும் பதிலளித்தார்,மிக்க அவமானப்படும்படியான்க் கேள்விகட்குந்தான்.ஆனால் அவர் கேட்ட் கேள்விகட்குத்தான் இதுவரை இன்று இந்த இணையத்திலே வந்து பதிவிடும் அறிவு மே(ல்)தாவிகள் வரைப் பதிலளிக்கமுடியாமல் மழுப்புவதும்,நெளிவதும்,திசை திருப்புவதும் வேடிக்கையாக இருக்கிறது.பெரியாராவதற்கு முன்னும் பெரியார் ஆன பிறகும் சொன்னார்.நான் ஆதாரத்துடன் கேட்கின்றேன் சொல்லுகின்றேன் நீங்கள் சிந்தித்து எது உங்களுக்குச் சரி என்று படுகிறதோ அதை எடுத்துக் கொள்ளுங்கள் என்றார்.
நான் சொல்வதை அப்படியே நம்பு,கேள்வி கேட்காதே,கடவுள் கடவுள்ச்சிக் கதைகள் எவ்வள்வு அசிங்கமாக் இருந்தாலும் உன்னை நல்லவராக்கத்தான் ,பெண்ணடிமை,மனித அடிமை சொல்லும் மநு,கொலை பொய் சூது நிறைந்த கீதை,முக்கால் வாசி வெவ்வேறு கடவுளுக்கும் எப்படியெல்லாம் நான் உனக்கு லஞ்ச்ம் கொடுப்பேன் அதற்காக என் எதிரிகளை நீ எப்படி அழிக்கவேண்டும் என்ற சோமபான உளற்ல்கள் இதை எதிர்த்துச் சொன்னால் உன்க்கு ஒன்றுும் தெரியாது என்று சொல்லும் ஆணவம் இதெல்லாம் புரிய வைக்கத்தான் இந்தப் படம்.
பெண்கள் அனைவரும் ஒரு நல்ல மொழி பெயர்ப்பில் மநு தர்மத்தைப் படிப்பது நல்லது.
இருளிலிருந்து மக்களை மதங்கள் மீட்டு வந்திருக்கின்றன. இப்போது மதங்களிலிருந்து மீண்டு தெளிவுக்கு செல்லவேண்டிய நேரம். ஆனால் மதங்களிலிருந்து மீட்டு இருளான இன்னொரு மதத்துக்கு இட்டுச்செல்லும் பிரச்சாரத்தின் வசனங்களை சிலாகிப்பதில் என்ன பயன்?
ReplyDeleteபெரியாரை தங்கள் உன்னத மூர்த்தியாகக் கொண்டு உருவாகிவரும் பெரியார் மதத்தின் வளர்ச்சிக்கு இந்த படம் பெரும் துணையாக அமையலாம்.
கேள்விகளை பதில்களுக்ககாகக் கேட்கிறது அறிவியல். கேள்விகளை கேள்விகளுக்காகவே கேட்கிறது நாத்திகம்.
அறிவியல் ஆர்வலர் சீனு கவனிப்பாராக!
//வாங்க அருண்மொழி,
ReplyDeleteநக்கல் தொனியில் உங்கள் கேள்வி இருக்கிறதே?//
அவர் "History as it has happened" என்று சொன்னதால் கேட்டேன். தெரியாத விஷயத்தை தெரிந்து கொள்வது சரிதானே?
/எந்தத் தேதியில் கைபர் போலன் கணவாய் வழியாக சரியாக எத்தனை ஆடுகள், எத்தனை ஆட்டுக் குட்டிகளுடன் ஆரியர்கள் வந்தேறினார்கள் என்று நீங்கள் கூறுங்கள்! //
ReplyDeleteஅண்ணா, இந்த டகால்டி வேல வேண்டாம் அண்ணா. முதலில் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கோ. Please stay on the subject.
ஓகை,
ReplyDelete//பெரியாரை தங்கள் உன்னத மூர்த்தியாகக் கொண்டு உருவாகிவரும் பெரியார் மதத்தின் வளர்ச்சிக்கு இந்த படம் பெரும் துணையாக அமையலாம்.//
நானும் ஒப்புக் கொள்கிறேன்.
//அறிவியல் ஆர்வலர் சீனு கவனிப்பாராக!//
"நான் பாடல்களை பெரும்பாலும் வரிகளுக்காக, வரிகளின் கோர்வையை, வரிகளை பயன்படுத்திய விதத்திற்காக கேட்பவன்." அதனால் தான் இந்தப் பாடலைப் பற்றின பதிவை போட வேண்டும் என்று இட்டேன். இந்தப் பாடல் பாடலுக்காம மட்டுமே இந்த பதிவு. வேறு எந்த உள் நோக்கமும் கிடையாது. மற்றபடி நான் பெரியாரை மதிப்பவன்.
அருண்மொழி,
//அவர் "History as it has happened" என்று சொன்னதால் கேட்டேன். தெரியாத விஷயத்தை தெரிந்து கொள்வது சரிதானே?//
"as it has happened" என்ற வார்த்தைகளுக்காக நீங்கள் இப்படி கேட்பது என்பது (விளையாட்டான) நக்கல் தானே?
//அண்ணா, இந்த டகால்டி வேல வேண்டாம் அண்ணா. முதலில் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கோ. Please stay on the subject. //
ReplyDeleteஅருண் மொழி,
5000 ஆண்டுகள் பழைய நிகழ்வுகள் தேதி நேரத்துடன் இருந்தால் தான் வரலாறு என்று ஏற்றுக்கொள்ளப்படும் என்று நான் அறிந்து எங்குமே பண்டைய நிகழ்வுகள் எவையும் அணுகப்படுவதில்லை.
நான் கைபர், போலன் வரலாற்று நிகழ்வுக்குத் தேதி நேரம் கேட்டது பகுத்தறிவுகளிடமாவது வரலாற்று நிகழ்வாக மேடைதோறும் வந்தேறி ஆரியர்கள் கூப்பாட்டு வரலாற்றுக்கு தேதி நேரம் இருக்கிறதா என அறியவே!
அணில் கோடு சீதைக்கு இல்லை ஏன்னு யோசிக்கிற ஆட்கள் ராமர்,சீதை, ராவணனைப் நேரிலேயே பார்த்தவர்கள் பகுத்தறிவுகள் ஆச்சே ஆத்திகர்கள் கூட இவர்களை உணர்ந்தவர்கள் மட்டுமே
//5000 ஆண்டுகள் பழைய நிகழ்வுகள் தேதி நேரத்துடன் இருந்தால் தான் வரலாறு என்று ஏற்றுக்கொள்ளப்படும் ....//
ReplyDeleteஅண்ணா, இன்னும் என் கேள்விக்கு நேரடியான பதில் வரவில்லை.
//அணில் கோடு சீதைக்கு இல்லை ஏன்னு யோசிக்கிற ஆட்கள் ராமர்,சீதை, ராவணனைப் நேரிலேயே பார்த்தவர்கள் பகுத்தறிவுகள் ஆச்சே //
பாட்டின் வரிகளை மீண்டும் ஒரு முறை படியுங்கள். சீதைக்கு கோடுகள் உள்ளதா என்றுதான் கேட்கிறார்கள்? அவர்களுக்கு சரியாக தெரியவில்லை. ராமாயணத்தை கரைத்து குடித்த உங்களை போன்ற பண்டிதர்கள் சற்று விளக்கமாக சொல்லாம் அல்லவா?
சம்பந்தமில்லா சிறு தகவல்: படக்காட்சியில் பெரியாரிடம் வாதிடும் ஆத்திகர்களாக நடித்திருப்பது மதன்பாப் மற்றும் ஒய்.ஜி.மகேந்திரன்.
//இருளிலிருந்து மக்களை மதங்கள் மீட்டு வந்திருக்கின்றன. இப்போது மதங்களிலிருந்து மீண்டு தெளிவுக்கு செல்லவேண்டிய நேரம். ஆனால் மதங்களிலிருந்து மீட்டு இருளான இன்னொரு மதத்துக்கு இட்டுச்செல்லும் பிரச்சாரத்தின் வசனங்களை சிலாகிப்பதில் என்ன பயன்?//
ReplyDeleteஓகை தங்களுடைய வரிகள் குழப்புகின்றன. நீங்கள் சொல்வதை பார்த்தால் மதங்கள் மக்களை தெளிவடைய வைக்கவில்லை என்று பொருள் படுகிறது. சரிதானா?
மதங்கள் மக்களை இருளில் இருந்து மீட்டன என்று சொல்கின்றீர்கள். பிறகு எப்படி பெரியார் மதம் அவர்களை இருளில் தள்ளும்?. மதமாகிய அதுவும் மக்களை இருளில் இருந்து மீட்கும்தானே?
/////
ReplyDelete//இருளிலிருந்து மக்களை மதங்கள் மீட்டு வந்திருக்கின்றன. இப்போது மதங்களிலிருந்து மீண்டு தெளிவுக்கு செல்லவேண்டிய நேரம். ஆனால் மதங்களிலிருந்து மீட்டு இருளான இன்னொரு மதத்துக்கு இட்டுச்செல்லும் பிரச்சாரத்தின் வசனங்களை சிலாகிப்பதில் என்ன பயன்?//
ஓகை தங்களுடைய வரிகள் குழப்புகின்றன. நீங்கள் சொல்வதை பார்த்தால் மதங்கள் மக்களை தெளிவடைய வைக்கவில்லை என்று பொருள் படுகிறது. சரிதானா?
/////
நான் நினைப்பது. இருளில் இருந்து மீட்பது ஒரு நிலை. தெளிவுக்கு செல்ல வேண்டியது மற்றொரு நிலை. மதங்கள் முதல் நிலையை செய்தன. ஆனால் தெளிவுக்கு வழிவகை செய்யவில்லை என்று சொல்கிறார் என்று நினைக்கிறேன். தெளிவுக்கு செல்லாமல், அது மீண்டும் இன்னொறு மதத்திற்கு (அவர் குறிப்பிடும் இன்னொறு மதம் "பெரியார் மதம்") இட்டுச் செல்கின்றது. ஓகை, சரிதானா?
இந்து மூடர்களின் இராமயணத்தில் ஏழாயிரம் ஆண்டுகள் முன்பாக நடந்த வரலாற்று இதிகாசத்தில் சீதையை இலங்கையினின்று மீட்க ராம, லட்சுமணர்கள் எனும் மனிதர்கள் (வானர சேனையோடு சேர்ந்து )கட்டப்பட்டதாகச் சொல்லப்படும் கடற்பாலம் தலைமன்னாருக்கும் ராமேஸ்வரத்திற்கும் இடையே நாஸாவின் போட்டோவில் ஆடம்ஸ் பிரிட்ஜ் என வெளியிட்டு வந்திருந்ததே பார்க்கவில்லையா?
ReplyDeleteமிக முக்கியமான நிகழ்வு ஆதாரம் சுனாமிகள் பல தாங்கிப் பலகாலமாய் நிகழ்ந்த வரலாற்றினைப் பதிவு செய்வதை மறக்க வேண்டாம்.
இராமயண நிகழ்வில் இராவணனை வதம் செய்து சீதையை மீட்கப் பிரத்தியேகமாக இலங்கையின் உள்ளே செல்ல சேதுக்கடலில் கட்டப்பட்ட இந்தப் பாலம் சரித்திரச் சான்றில்லாமல் வேறென்ன?
உலகில் இருக்கும்அனைத்து மதங்களும் மனிதனின் குழப்பங்களை அம்மதங்கள் தோன்றிய பூகோள, கலாச்சார, பண்பாட்டு அடிப்படைகள் சார்ந்து அப்பிரதேச மக்களிடையே பிரதானமாகக் காணப்பட்ட குழப்பங்கள், அச்சங்களிடமிருந்து மக்களை மீட்டெடுக்க வழிமுறைகள் தத்துவங்களாகச் சொல்கின்றன.
ReplyDelete"பெரியார் மதம்' என்கிற ஒன்று மக்களைக் குறிப்பாகக் குழப்பி அதில் பச்சையாக சுயநலப் பிழைப்பு நடத்துவது என்பதை அடிப்படையாகக் கொண்டது. இது வெறும் இருள் அல்ல. இருளோடு பெரிய பள்ளத்தினுள்ளேயே பகுத்தறிவு, சுயமரியாதை என்று வைக்கும்!
//இருளோடு பெரிய பள்ளத்தினுள்ளேயே //
ReplyDeleteஹரிஹரன் அய்யா,
பெரியார் மதம் எல்லாவற்றையும் தன்னுள் விழுங்கி கபளீகரம் செய்யும் black hole என்று சொல்கிறீர்களா?
அது சரி,தற்போது பெரியார் மத குரு யார்? மஞ்ச துண்டா,அல்லது ஜெயலலிதா அடிவருடின சூரமணி அய்யாவா?
பாலா
சொல்வதையே பல வழிகளில் பொய்களை உண்மையாக்க முயலுவோர்களுக்கு---
ReplyDeleteபெரியார் மதம் உண்டாக்குகிறார்களா?எந்த மததில் ஆதாரபூர்வமானக் கருத்துக்களை எடுத்துச் சொல்லி கேள்விகள் கேளுங்கள் எதையும் அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று நம்பாதீர்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது?
உள்ள அசிங்க்ங்களைச் சொன்னால் அதைநீக்கி அறிவுடன் மனிதர்களாக மனிதனை மனிதன் மதித்து மகிழ்ச்சியாக வாழ் என்றால் அது எப்படி எனக்கு யார் தோள்மீதாவ்துதான் இருந்து பழக்கம் என்பதா?
கல்லணை கட்டியவனுக்கு ஈழத்திற்குப் பாலம் கட்டியிருக்கத்தெரியாதா?அணில் வந்துதான் கட்டவேண்டுமா?குரங்குகள் யாரைக்குறிக்கின்றன் என்று பண்டித நேரு"ஆரிய திராவிட வர்க்கப்போராட்டதின் படைப்பே ராமாயணம்"என்பது பார்ப்பன்த்துவேசத்தால் தானோ?
புத்த விகாரங்கள் ஏன் அழிக்கப்பட்டன் அங்கு என்ன தோற்றுவிக்கப்பட்டன?
மதங்களால் மதம் பிடித்து அலைய வேண்டுமா அல்லது பொருளை வீணாக்காமல் மூடப்பழக்கங்களை ஒழித்துத் தன்னம்பிக்கையுடன் மனிதன் முன்னேற வேண்டுமா?
தயைசெய்து நம்பும்படியான பதில் சொல்லுங்களேன்.
//எந்த மததில் ஆதாரபூர்வமானக் கருத்துக்களை எடுத்துச் சொல்லி கேள்விகள் கேளுங்கள் எதையும் அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று நம்பாதீர்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது?//
ReplyDeleteபெரியார் மதத்தில் தான். :)
பெரியார் பக்தர்களுக்கு சகிப்புத்தன்மை என்பது சுத்தமாக இல்லை என்பதை சமீபத்து உதாரணங்கள் காட்டுகின்றன. பெரியார் ஆரம்பித்த இயக்கம் இப்பொழுது அவரின் வழித்தோன்றல்களினால் மதமாக மாறிக்கொண்டிருக்கிறது என்பது என் கருத்து.
//கல்லணை கட்டியவனுக்கு ஈழத்திற்குப் பாலம் கட்டியிருக்கத்தெரியாதா?//
ReplyDeleteகல்லணை கட்டப்பட்டது சமீபமாக சில நூற்றாண்டுகளுக்கு முன்பாக ஐயா. கட்டப்பட்டது உப வேதமான ஸ்தபதி சாஸ்திர தொழில் நுட்ப முறைப்படித்தானே.
//அணில் வந்துதான் கட்டவேண்டுமா?//
சிறு விலங்கான அணிலின் பங்களிப்பும் அங்கீகரிக்கப்பட்டு மதிக்கப்பட்டதை ஏன் தங்களால் பார்க்க இயவில்லை?
//எந்த மததில் ஆதாரபூர்வமானக் கருத்துக்களை எடுத்துச் சொல்லி கேள்விகள் கேளுங்கள் எதையும் அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று நம்பாதீர்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது?//
இந்துமதத்தில் இருக்கிற, தரப்பட்ட சுதந்திரம்தானே ஐயா நீங்கள் இந்தமாதிரியான கருத்துக்களை எழுப்ப அனுமதிக்கிறது. என்மாதிரி நம்புபவர்கள் கோபம் கொள்ளாமல் அறிந்ததை பொறுமையாக விளக்க முற்படவும் வைக்கிறது.
//உள்ள அசிங்க்ங்களைச் சொன்னால் அதைநீக்கி அறிவுடன் மனிதர்களாக மனிதனை மனிதன் மதித்து மகிழ்ச்சியாக வாழ் என்றால் அது எப்படி எனக்கு யார் தோள்மீதாவ்துதான் இருந்து பழக்கம் என்பதா?//
நேற்றைய சடங்குகள் இன்றைய அசிங்கங்கள். சடங்குகள் சமுதாயத்தின் அன்றைய தீர்வுகள்... இவை என்றும் தொடர் மாற்றங்களுக்கு உட்பட்டவை.
முதலில் வேதம் என்ன சொல்கிறது என்பதை நேரிடையாகக் கற்றுக் கேள்வி கேளுங்கள். அவர் சொன்னார், இவர் இப்படியாகச் சொன்னார் என்பதாக மற்றவரின் குறைகளுடனான புரிதல்களைக் கொண்டு புரிதல்களைப் புதிதாக என்றுமே ஏற்படுத்த முடியாது.
மயிலைப் பார்த்து ஓவியத்திறன் குன்றியவர் வரைந்ததை காலகாலமாகப் பார்த்து வரைந்து அது காகம் போன்று தோன்றுவதை வைத்து இது எப்படி மயில் என்றால் இது யாருடைய குற்றம்?
புராணங்கள் வேத தத்துவங்களை எடுத்துச்செல்லும் உத்தியில் உயர் தத்துவங்களை மிகவும் எளிமைப்படுத்திச் சொல்லப்பட்டவை என்பதை உணருங்கள்.
ம்ழுமையான தத்துவநெறிகளை அறிய நேரிடையாக ஆரம்ப நூலில் இருந்து வேதங்கள், உபநிடங்கள் என இந்துமத நெறிகளை அறியுங்கள்.
//இந்து மூடர்களின் இராமயணத்தில் ஏழாயிரம் ஆண்டுகள் முன்பாக நடந்த வரலாற்று இதிகாசத்தில் சீதையை இலங்கையினின்று மீட்க ராம, லட்சுமணர்கள் எனும் மனிதர்கள் (வானர சேனையோடு சேர்ந்து )கட்டப்பட்டதாகச் சொல்லப்படும் கடற்பாலம் தலைமன்னாருக்கும் ராமேஸ்வரத்திற்கும் இடையே நாஸாவின் போட்டோவில் ஆடம்ஸ் பிரிட்ஜ் என வெளியிட்டு வந்திருந்ததே பார்க்கவில்லையா?//
ReplyDeleteஅண்ணா,
நான் பார்க்கவில்லை. Can you please publish the URL?
ஏழாயிரம் வருடம் முன்பு நடந்தது என்று சொல்கின்றீர்கள். அப்போ 4994 BC என்று வைத்துக்கொள்ளலாமா? தேதி இன்னும் வரவில்லையே?
//பெரியார் பக்தர்களுக்கு சகிப்புத்தன்மை என்பது சுத்தமாக இல்லை என்பதை சமீபத்து உதாரணங்கள் காட்டுகின்றன. பெரியார் ஆரம்பித்த இயக்கம் இப்பொழுது அவரின் வழித்தோன்றல்களினால் மதமாக மாறிக்கொண்டிருக்கிறது என்பது என் கருத்து. //
ReplyDeleteபெரியாருக்கு பல வழித்தோன்றல்கள் உள்ளன. இப்போது பலர் பெரியார் படத்தை போட்டு வியாபாரம் நடத்துகின்றனர். யாரை குற்றம் சொல்ல முடியும்?
//பெரியாருக்கு பல வழித்தோன்றல்கள் உள்ளன. இப்போது பலர் பெரியார் படத்தை போட்டு வியாபாரம் நடத்துகின்றனர். யாரை குற்றம் சொல்ல முடியும்?//
ReplyDeleteவியாபாரிகளை விடுங்க. வியாபார நோக்கம் இல்லையென்று சொல்லிக் கொண்டு இருக்கும் குழுவை சொல்கிறேன். இவர்கள் செய்யும் செய்கைகள் நடுநிலைவாதிகளை அவர்களுக்கு எதிராகவே திருப்பும்.
அருண்மொழி,
ReplyDeleteஇந்த இணைப்பு உரலில் பாருங்கள்
http://eol.jsc.nasa.gov/scripts/sseop/photo.pl?mission=STS033&roll=74&frame=74
//இந்த இணைப்பு உரலில் பாருங்கள்
ReplyDeletehttp://eol.jsc.nasa.gov/scripts/sseop/photo.pl?mission=STS033&roll=74&frame=74 //
அண்ணா,
சுட்டிக்கு மிக்க நன்றி. அவங்க இதை ராமபிரான் கட்டிய பாலம் என்று எங்கும் குறிப்பிடவில்லையே?
//இதை ராமபிரான் கட்டிய பாலம் என்று எங்கும் குறிப்பிடவில்லையே?//
ReplyDeleteB-)
//சுட்டிக்கு மிக்க நன்றி. அவங்க இதை ராமபிரான் கட்டிய பாலம் என்று எங்கும் குறிப்பிடவில்லையே?//
ReplyDeleteதொன்மையான இராமயண காலத்தில் கட்டப்பட்ட பாலத்திற்கான சான்று இது.
இராமாயண இதிகாசம் இந்தியாவின் பண்டைய பெருமை விளக்குவது. சான்றும் நிகழ்வும் இந்தியர்க்கானது.
இதற்கு நீங்கள் ஏன் அமெரிக்கனிடமிருந்து சான்றிதழ் எதிர்பார்க்கின்றீர்கள்?
அமெரிக்காவும் தந்துவிடும்? அமெரிக்கா தந்தால்தான் ராமாயணம் வரலாற்று நிகழ்வென்று ஆகப்போவதில்லை. அமெரிக்க சாட்டிலைட் சான்று ராமாயணப் பாலம் கட்டப்பட்ட நிகழ்வுதனை இன்னொருமுறை உறுதிப்படுத்துகிறது.
கடல்நீர் மட்டமே சேதுப் பகுதியில் மிகக் குறைவாகவும் , பாறைகள் நிறைந்ததுமாக இருப்பது தரையிலேயே இருக்கும் சான்று.
அமெரிக்கா சொன்னால்தான் இந்திய வரலாறு சரி என்பீர்களா? நீங்கள்?
தமது வரலாறு, தொன்மையை சுயமாக வெறுக்க வைக்கும் அடிமைத்தன மெக்காலே கல்வியின் தாக்கம் புரிகிறது. வேதனை தருகிறது.