Tuesday, July 13, 2004

இஸ்கான் கோவிலில் யோகா பயிற்சி...

இஸ்கான் கோவிலில் யோகா பயிற்சி...

இங்கே சொல்லப்பட்டவை யாவும் எனக்கு இஸ்கான் (ISKCON) கோவிலில் Yoga Retreat-ல் சொல்லப்பட்டவை.

அறிவின் 3 முகங்கள் (3Qs)

I) IQ - Intelligence Quotient
20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், மனநல நிபுனர்கள் ஒரு மனிதனின் புத்திசாலித்தனத்தை அளக்க சில வழிகளை கண்டுபிடித்தனர். IQ என்பது நாம் தர்க்க ரீதியாக (Logic) ஒரு பிரச்சினையை எப்படி அனுகுகிறோம் என்பதே. அதற்கு ஒரு சில தேர்வு முறைகளை வகுத்தனர் (Aptitude Test, Reasoning போன்றவை). இந்த முறைகள் புத்திசாலித்தனத்தை வைத்து மக்களை வரிசைப்படுத்த முடிந்தது. ஒருவனின் IQ அதிகமாக இருந்தால், அவன் அதிக புத்திசாலி என்று முடிவெடுக்கப்பட்டது.
உதாரணம் : கணினி. இது சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளை. அதற்கு கொடுக்கப்பட்ட வேலையை அதன் எல்லைக்குள் தவறு இல்லாமல் செய்து முடிக்கும்.
IQ-வின் ஆராய்ச்சி EQ-வை அறிந்து கொள்ள உதவிற்று.

II) EQ - Emotional Quotient
EQ என்பது தன்னுடைய அல்லது பிறருடைய மனநலம் மற்றும் உணர்ச்சிகளை புரிந்து கொள்வது. அது ஒருவருடைய சாதுரியம் மற்றும் சாகித்தியசக்தி (Skills) ஆகியவற்றின் தொகுப்பு. இவைகளின் மூலம் ஒருவன் சுற்றுப்புறத்திலிருந்து உருவாகும் அழுத்தங்கள் மற்றும் தேவைகளை எப்படி, எந்த வழியில் வெற்றி கொள்கிறான் என்பதை அறிவதே. 1990-களின் நடுவில் நரம்பியல் நிபுணர்கள் மற்றும் மனநல நிபுணர்கள் EQ என்பதும் IQ-க்கு இணையாக முக்கியமானது என்று நிரூபித்தார்கள். அவர்களின் ஆராய்ச்சிகளின் மூலம் ஒருவன் அளவு கடந்த உணர்ச்சி மிகுந்தவனாக இருந்தால் அவன் தனது புத்திசாலித்தனத்தையும், முடிவெடுக்கும் திரணையும் இழக்கிறான் என்று அறிந்தார்கள். இதை தான் தமிழில் "ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு" என்றார்கள். மேலும் ஒருவன் IQ-வை சரியாக பயன்படுத்த EQ முக்கியம் என்பதை அறிந்தார்கள்.
உதாரணம் : விலங்குகள். இவை சிந்திக்கும் செயலற்றவை. "ஏன்?" என்று கேள்வி கேட்கத் தெரியாதவை.

III) SQ - Spiritual Quotient
SQ என்பது தத்துவஞானம். இது ஒருவனை யோசிக்கவும், விடை தேடவும், என்னற்ற செயல் செய்யவும் அனுமதிக்கிறது. இது ஆன்மாவின் அறிவு. இது ஒருவனை முழுமையாக்குகிறது. இது ஒருவனின் Ego மற்றும் மனசாட்சியையும் தாண்டிய ஒரு அறிவுடன் பிணைக்கப்பட்டது.
உதாரணம் : மனிதன். மனிதன் சூழழுக்கு ஏற்ப சிந்தித்து முடிவெடுக்கும் சக்தி உள்ளவன்.
நம்முடைய வாழ்க்கை ஒரு சில மாயைகளால் சூழப்பட்டது. அவை பொருளாசை, சுயநலம் மற்றும் இலக்கில்லாத வாழ்க்கை போன்றவைகளை. SQ இன்றி ஒருவன் வெற்றி பெற்றிருக்களாம். ஆனால் அந்த வெற்றி வெறுமையான ஒன்று. மனிதன் என்பவன் அடிப்படை மற்றும் தத்துவ கேள்விகளை உடையவன். அந்த கேள்விகள், "நான் யார்?", "நான் ஏன் பிறந்தேன்?", (அட! தமிழ் சினிமா பேர் இல்லீங்க!!), "என் வாழ்க்கையின் அர்த்தம் என்ன?", "இறப்பிக்குப் பிறகு என்ன?" போன்றவை.

பகவத்கீதை சொல்வது, "மனிதன் என்பவன் ஆன்மா மற்றும் உடம்பை கொண்டவன். ஆன்மா என்பது எந்த கருவியாலும் அளக்க முடியாதது. அது, ஒவ்வொரு 7 வருடங்களும் தன் உடம்பை மாற்றும். அதாவது, ஒரு மனிதனின் உடம்பு ஒவ்வொரு 7 வருடத்திற்கும் மாறுகிறது. (இது விஞ்ஞான ரீதியாக விளக்கப்பட்டது). ஒரு கருவில் நுழைகிற ஆன்மாவானது மனிதனின் ஒவ்வொரு நிலையிலும் சென்று பயனிகிறது. அவன் மரணத்திற்குப் பிறகு அந்த ஆன்மா மரணமடைவது இல்லை. மாறாக, அந்த ஆன்மா இன்னொரு பிறப்பு எடுக்கிறது (Re-incarnation). ஒரு ஆன்மா பின்வரும் நிலைகளை கடந்து வருகிறது.
1. நீர் வாழ்வன - ஓர் அறிவு
2. செடி, கொடிகள் - இரண்டறிவு
3. ஊர்வண - மூன்று அற்஢வு
4. பரப்பன - நாங்கு அறிவு
5. விலங்கு - ஐந்தறிவு
6. மனிதன் - ஆறறிவு
ஒவ்வொரு பிறவியும் முன் பிறவியின் பயன்களே."

SQ-வின் நலன்கள்:

1. ஒவ்வொருவரும் சமமான வாழ்க்கை வாழ முடிகிறது.
2. தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடிகிறது.
3. வாழ்க்கையின் இன்ப துன்பங்களை எதிர்கொள்ள முடிகிறது.
4. பிறருக்கு தீமை செய்வதை தடுக்கிறது.
5. வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை கொடுக்கிறது.
6. பகுத்தறிந்து செயல்பட வைக்கிறது.
7. கோபம், பயம், சோகம், வெறுப்பு, ஏமாற்றம் ஆகியவற்றை ஒரு கட்டுக்குள் கொண்டு வருகிறது.


எங்கே கடவுள்?

இந்த உலகில் உள்ள ஒவ்வொரு பொருளுக்குப் பின்னால் ஒரு படைப்பாளி இருப்பான். மோனாலிசா படத்தை வரைந்தது லியோனார்டோ டா வின்சி (Leonardo da Vinci) என்னும் ஓவியர். A Midsummer Night's Dream என்னும் கதைக்குப் பின்னால் ஷேக்ஸ்பியர் (Shakespere) என்னும் மனிதன் இருக்கிறார். திருக்குறளுக்குப் பின்னால் திருவள்ளுவர் என்னும் மனிதர் இருக்கிறார். இந்த உலகில் உள்ள எல்லா பொருளுக்கும் ஒரு சிருஷ்டிகர்த்தா (Creator) இருக்கிறார். இந்த உலகில் பல உயிருள்ள பொருள்களும் உயிரற்ற பொருள்களும் உள்ளன. மலை, மடு, காற்று, விலங்குகள், பறவைகள், மரங்கள், செடி கொடிகள், ஆறு, கடல், நீரோடைகள், பூக்கள் போன்ற பல வகையான உயிரிணங்கள் உள்ளன. இந்த பூமியானது சூரியனை ஒரு நீழ்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. அந்த பாதை சற்று மாறினாலும் இந்த பூமியானது அழிந்து போகும். பூமியை அந்த பாதையில் வைத்திருப்பது எது?. சூரியனில் இருந்து ஒரு வினாடியில் உருவாகும் சக்தி என்பது ஒரு மில்லியன் பில்லியன் கிலொவாட் ஆகும். அது இந்த பூமியில் இருந்த, இருக்கின்ற, இருக்கப்போகிற மனிதர்கள் மற்றும் மற்ற உயிர்களின் சக்தியை ஒன்றாக கூட்டினாலும் சற்றும் அருகே வராது. ஆனால் அந்த சூரியன் என்பது வின்வெளியில் உள்ள பல கோடானு கோடி நட்சத்திரங்களில் ஒன்று. அப்படியானால் இந்த பிரபஞ்சம் எவ்வளவு பெரியது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ஒரு சிரிய பொருளுக்கே ஒரு சிருஷ்டிகர்த்தா இருக்கும் பொழுது, இந்த பிரபஞ்சத்திற்கு ஒரு சிருஷ்டிகர்த்தா இருக்க முடியாதா. அவன் தான் அடியிம் முடியும் அறிய முடியா இறைவன். வின்வெளியில் மனிதனால் அனுப்பப்பட்ட ஒரு சிறு கோளுக்கே (உபக்கிரகம் அல்லது Satellite) ஒரு கட்டுப்பாட்டு அறை (Control Room) இருக்கும் பொழுது, இந்த அளவிள்ளா பிரபஞ்சத்திற்கு ஒரு கட்டுப்பாட்டு அறை இருக்காதா? அல்லது இருக்கக்கூடாதா?

இந்த உலகின் மிகப்பெரிய கணினி மனிதனின் மூளை. ஒரு மனிதனின் மூளையில் உலகில் உள்ள அனைத்து நூலகங்களில் உள்ள தகவல்களை காட்டிலும் அதிகமாக இருப்பு வைக்க முடியும். "மனிதனின் மூளை என்பது ட்ரில்லியன் (Trillion) மூளை cell-களால் உருவானது. ஒவ்வொரு செல்லும் இந்த உலகில் உள்ள கணினிகளை விட மிகவும் சக்தி வாய்ந்தது" - என்று பிரிட்டிஷ் மனநல நிபுணர் முனைவர். டோ னி புசோன் கூரிகிறார். (அரசியல்வாதிகள் விதிவிலக்கு). இந்த இயற்கை அறிவை, சக்திவாய்ந்த கணினியை உருவாக்கியவர் யார்? இந்த உலகில் நம்மால் தாய், தந்தையை, அழகு, அறிவை நம்மால் தேர்ந்தெடுக்க முடிவதில்லை. அது நம் கையில் இல்லை. பின் அவைகளை யார் தேர்ந்தெடுக்கிறார்கள்? ஒரு பந்தை உதைத்தால் அது பரவளையமாக (Parabola) செல்கிறது. புவியீர்ப்பு சக்தி மற்றும் காற்றின் எதிப்பால் அது இந்த வழியில் செல்கிறது. இது எப்படி முடிகிறது? இவையெல்லாம் எப்படி முடிகிறது? யார் முடிவெடுக்கிறார்கள்? இதற்கென்று சட்ட திட்டங்கள் உள்ளதா? அவன் யார்? அவன் தான் கடவுள்...

வேதாந்த சூத்ரா சொல்வதை கேளுங்கள்.
"janmadyasya yatah"
விளக்கம் : "அவன் தான் உண்மையான ஆதபன்(Source). அவன் தான் நடப்பவை யாவற்றிற்கும் காரணகர்த்தா"

"anadi adir govindah sarva karana karanam"
விளக்கம் : "அவன் தொடக்கம் இல்லாதவன். அவன் தான் அனைத்தின் தொடக்கம். அவன் தான் அனைத்து காரணத்திற்கும் மூலகாரணம்"

அடுத்து அனைவரும் கேட்கும் கேள்வி..."உன்னால் கடவுளை காட்ட முடியுமா?". இது கடவுளை புரிந்து கொள்வதில் உள்ள ஒரு அடிப்படை தவறு. கடவுள் நம் உத்தரவை செயல்படுத்தும் னபர் அல்ல. நமக்கு கடவுளை பார்க்கும் தகுதி உள்ளதா?

ஒரு சில கதிர்கள் கண்ணுக்கு தெரியும். நம் கண்ணுக்குத் தெரியாத, தெரிய முடியாத அலைவரிசைகள் உள்ளன. அவை புறஊதாக்கதிர்கள் ஆகும். ரேடியோ அலைவரிசை, மற்றும் எக்ஸ்-ரே (X-Ray) கதிர்கள் நம் கண்களுக்கு புலப்படாது. அவற்றை உணர ஒரு சாதனம் தேவைப்படுகிறது. அதே போல கடவுளை காணமுடியாது. ஆனால் உணர முடியும். அதற்கு தான் நமக்கு SQ தேவைப்படுகிறது.இளம் தலைமுறையினருக்கு யோகா...

யோகா என்பது நம்மை பரம் பொருளுடன் இணைப்பது. யோகா என்பது எட்டு பகுதியினை கொண்டது.
1. யமா (Yama) - புலன்களை கட்டுப்படுத்துதல்
2. நியமா (Niyama) - சட்டம் மற்றும் வழிகளை பின்பற்றுதல்
3. ஆசனா (Aasana) - அமரும் நிலையை பயில்தல்
4. ப்ராயியாமா (praaeeaayaama) - சுவாசத்தை கட்டுப்படுத்துதல்
5. ப்ரத்யாஹார (Pratyaahaara) - புலன் வெளிப்பாடுகளின் மகிழ்ச்சியை கட்டுப்படுத்துதல் (controlling the senses from sense enjoyment)
6. தாரயே (Dhaaraeea) - கவனம்
7. த்யானா (Dhyaanaa) - தியானம்
8. சமாதி (Samaadhi) - முக்தி அடைதல்

கீதையில் தியானம் செய்யும் முறை:

1. சுத்தமான தூய்மையான இடத்துக்கு செல்லவும்.
2. முற்றிலும் பிரம்மச்சரியத்தை கடைபிடிக்க வேண்டும்.
3. குசா புற்களை தரையில் பரப்பி அதன் மேல் ஒரு மான் தோலை வைக்க வேண்டும்.
4. நேராக அசையாமல் அமரவும்.
5. கடவுளின் தூய நாமங்களை ஜெபிக்கவும்.

கடவுளின் தூய நாமங்களை மந்திரம் போல ஜெபிக்க வேண்டும். மந்திரம் என்றால் என்ன? 'மந்' என்றால் 'மனம்' என்று பொருள். 'த்ரா' என்றால் 'கொடுத்தல்', 'ஈடேற்று' என்று பொருள்.

செய்வன:
1. ஜெபிக்கும் பொழுது மந்திரத்தை உரக்க, ஜெபம் செய்பவர்க்கு கேட்கும் படி, ஜெபிக்க வேண்டும்.
2. மந்திரத்தின் ஒவ்வொரு சொல்லையும் சுத்தமாக, புரியும் படி ஜெபிக்க வேண்டும்.
3. அர்ப்பணிப்புடன், கவனத்துடன், மரியாதையுடன் ஜெபிக்க வேண்டும்.
4. எங்கும், எப்பொழுதும், அமர்ந்தும், நின்று கொண்டும் ஜெபிக்கலாம். அதிகாலை (பிரம்ம முகூர்த்தத்தில்) ஜெபித்தல் மிகுந்த நன்மை பயக்கும்.
5. குளிப்பதற்கு முன்பும் அல்லது பின்பும் ஜெபம் செய்யலாம். மந்திரத்தை 108 முறை ஜெபித்தல் நன்மை பயக்கும்.

செய்யக்கூடாதது:
1. மந்திரத்தின் ஒரு பகுதியை மட்டும் ஜெபிக்கக்கூடாது.
2. ஜெப மாலையை உபயோகிக்கும் பொழுது முதலில் உள்ள மணியை (Krishna Beed) உபயோகிக்கக் கூடாது.
3. புத்தகம் அல்லது நாளிதழ் படிக்கும் பொழுதோ, தொலைக்காட்சியை பார்க்கும் பொழுதோ ஜெபிக்கக் கூடாது.

ஜெபத்தால் விளையும் நன்மைகள்:
1. பாவ காரியங்களில் இருந்து விடுதலை.
2. கெட்ட பழக்கங்களில் இருந்து விடுதலை.
3. மனதளர்ச்சி, மனஅழுத்தம் முதலியனவற்றில் இருந்து விடுதலை.
4. அமைதி.
5. உண்மையான சந்தோஷம்.எண்ணங்களை கட்டுப்படுத்தும் கலை

நாம் இப்பொழுது அறிவியலின் மூலம் காட்டுமிராண்டி வாழ்கையை விட்டு ஒரு நாகரீக உலகில் வாழ்கிறோம். ஆனால் இந்த நாகரீகத்தில் ஒளிந்திருக்கும், மறைந்திருக்கும் உண்மைகள் ஏராளம். அவற்றுள் சில...தீவிரவாதம், வன்முறை, வேலையில்லாத் திண்டாட்டம், கொலை, போதை வஸ்துக்களுக்கு அடிமை (இதில் தேநீர் மற்றும் குளம்பியும் அடங்கும்), லஞ்சம், ஊழல், விவாகரத்து, கற்பழிப்பு, மண அழுத்தம் மற்றும் மிக முக்கியமாக தன்னை தானே கொலை செய்யும் தற்கொலை. இவைகள் யாவும் எப்பொழுதும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. குறைந்த பாடில்லை. இவையாவும் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கின்றது. டைம் நாளிதழின் ஓட்டெடுப்பின் மூலம் இன்றைய சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் முன்னனியில் இருப்பது குற்றங்கள் மற்றும் நேர்மை, ஒழுக்கமின்மை ஆகியவை.
பின்வரும் புள்ளி விவரங்களை பாருங்கள்:
1. அமெரிக்காவில் 1980-ல் 4,00,000-மாக இருந்த சிறைக் கைதிகளின் எண்ணிக்கை 2000-ல் 13,00,000-மாக உயர்ந்திருக்கிறது.
2. மேலும் அமெரிக்காவில் கைத்துப்பாக்கிகளின் விற்பனை எண்ணிக்கை 1997-ல் 8,00,000-ல் இருந்து 2001-ல் 55,00,000-மாக உயர்ந்திருக்கிறது.
3. 1996-ல் இருந்து 2001-ல் கொலைகள் 124 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது.
4. தென் ஆப்ரிக்காவில் ஒவ்வொரு வருடமும் 33,000 கற்பழிப்பு சம்பவங்கள் பதிவு செய்யப்படுகின்றன.
5. ஒவ்வொரு குழந்தையும் பள்ளி முடிக்கும் முன்பு சராசரியாக தொலைக்காட்சிகளின் மூலம் 8,000 கொலைகளும், 1,00,000 வன்முறை சம்பவங்களும் பார்க்கின்றனர்.
6. ஐரோப்பிய யூனியன் பிரதேசத்தில் போதை வஸ்துக்களை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை 74 இலட்சம். அதற்குள் மீள முடியாத அடிமைகள் 18 இலட்சம்.
7. 100 கல்யாணத்தில் விவாகரத்துக்களின் எண்ணிக்கை: அமெரிக்கா - 55, கனடா - 45, டென்மார்க் - 40.
8. ஜப்பானின் சராசரி ஆண்டு தற்கொலை எண்ணிக்கை - 22,500.
9. அமெரிக்காவின் ஆண்டு தற்கொலை முயற்சியின் எண்ணிக்கை - 6,50,000.
10. இந்தியாவில் அதிக தற்கொலை நடக்கும் நகரம் - பெங்களூர் (2000-ல் தற்கொலை எண்ணிக்கை - 1,938).

இந்த புள்ளிவிவரங்களை பார்க்கும் பொழுது, நாம் சரியான பாதையில் தான் செல்கிறோமா என்ற கேள்வி எழுகிறது. ஏன் நம் சமூகத்தில் இவ்வளவு குழப்பம்? குழப்பமான மனம், நம்பிக்கையின்மை, நம்பகத்தன்மையின்மை, பைத்தியக்காரத்தனம், தனக்கும் குடும்பத்திற்கும் மற்றவற்கும் ஏற்படுத்தப்படும் ஆபத்துக்கள், மனதளர்ச்சி, மனஅழுத்தம், மோசமான வியாதிகள் போன்றவை இருக்க காரணம் என்ன??? இவற்றிக்கு தீர்வு தான் என்ன? விடை : மனக் கட்டுப்பாடு.

நம்மிடையே எழும் மிக முக்கியமான கேள்வி "நான் யார்?". 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு விஞ்ஞானி நம் உடம்பில் உள்ள பகுதிகளை ஆராய்ந்து நம் உடம்பில் உள்ள வேதிப் பொருள்களை பட்டியலிட்டு பார்த்தார். நம் உடம்பில் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், நீர் மற்றும் வேறு சில வேதிப் பொருள்கள் இருந்தன. அவற்றின் மொத்த மதிப்பு 210/- ரூபாய். அப்படியானால் னமக்கு வெறும் 210/- ரூபாய் தான் மதிப்பா?

ஒரு வாகனம் எவ்வாறு ஒரு ஓட்டுனர் இல்லாமல் நகராதோ, அதே போல் நம் உடம்பு ஆன்மா என்னும் ஓட்டுனர் இன்றி வேலை செய்யாது. நாம் பகவான் கிருஷ்னர் ஐந்து குதிரைகள் கொண்ட தேரை அர்ச்சுனனை வைத்து ஓட்டும் காட்சியை பார்த்திருப்போம். அதற்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த ஐந்து கடிவாளம் போடப்படாத குதிரைகள், ஐந்து புலன்களை குறிக்கின்றது. அந்த ஐம் புலன்களையும் ஓட்டுனாரான அறிவானது தன் கட்டுக்குள் வைத்திருக்கும். அந்த தேரை சரியான திசையில் செலுத்துவது ஆன்மாவகிய பயனி. பயனியின் சொல்படி அந்த தேர் சரியான பாதையில் செல்ல வேண்டும். ஆனால் ஒரு மனிதனுக்கு இந்த SQ இல்லாமல் போனால் அறிவானது ஆன்மா சொன்னபடி கேட்காது. அப்பொழுது தேரானது தறிகெட்டு போகும். ஆபத்தை விளைவிக்கும்.

கிருஷ்னர் சொல்வது...

"bandhur யூtmயூtmanas tasya
yenயூtmaivயூtmanயூ jitaவ்
anயூtmanas tu வூatrutve
vartetயூtmaiva வூatru-vat"

விளக்கம் : "ஒருவன் தன் மனதை ஆக்கிரமித்து தன் கட்டுக்குள் வைத்திருந்தால், அவன் மனம் அவனுடைய நண்பர்களில் சிறந்த நண்பன். அவ்வாறு செய்ய முடியாமல் போனால் அவன் மனம் தான் அவனுடைய எதிரிகளில் பெரிய எதிரி."

மனதை கட்டுப்படுத்தும் வழிகள்
1. உணர்வை, அறிவை அலையவிடாமல் சரியான பாதையில் செலுத்த வேண்டும். அவைகளை தவறான பழக்கங்களில் இருந்து விடுபட வைக்க வேண்டும்.
2. உணர்வை, அறிவை கடவுளின்பால் செலுத்துங்கள்.
3. வாழ்க்கையின் தத்துவத்தை கீதை, குரான், பைபிள் போன்ற புத்தகங்கள் படிப்பதன் மூலம் புரிந்துகொள்ளுங்கள்.
4. உங்களை நீங்கள் பக்தர்களிடமும், கடவுளிடமும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
5. வாய்ப்புகளையும் நல்ல சேர்க்கையையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மனக்கட்டுபாட்டின் பயன்கள்:
1. சுத்தமான அறிவு
2. சுத்தமான புலன்கள்
3. நல்ல கவனச்சக்தி
4. மன அமைதிகர்மா பலன்கள்

விதைக்கும் விதை தான் முளைக்கும் என்பது இயற்கை நியதி. இந்த உலகின் ஒவ்வொரு உயிரும் தனித்தன்மை உடையது. அந்த உயிர் செடி கொடியாகவோ, விலங்காகவோ அல்லது மனிதனாகவோ இருக்கலாம். ஒவ்வொருவரும் மற்றொருவருடன் வேறுபடுகின்றனர். அந்த வேறுபாடு பணமாகவோ, பொருளாகவோ, அழகாகவோ அல்லது பலமாகவோ இருக்கலாம். கடவுள் எல்லோருக்கும் பொதுவானவர் என்றால் ஏன் இந்த வேறுபாடு? அடுத்து குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்கள். அப்படியானால் ஒன்றும் அறியாத குழந்தைகள் துண்பப்படுவது ஏன்? அவர்கள் இறப்பது ஏன்? சில குழந்தைகள் கருவிலேயே அழிவது ஏன்? கடவுள் ஏன் இப்படி கருணை இல்லாமல் இருக்கிறார்? கடவுள் ஒரே நேரத்தில் சக்தி உள்ளவராகவும், கருணை உள்ளவராகவும் இருக்க முடியாதா? கீதையில் கிருஷ்ணன் "நான் எல்லொருக்கும் பொதுவானவன்" என்கிறார். பிறகு ஏன் இந்த பாகுபாடு? நீதிமன்றத்தில் நீதிபதி ஒருவனுக்கு மரண தண்டனையும், மற்றொருவனுக்கு பரிசும் கொடுக்கிறார். ஏன் இந்த பாகுபாடு? இல்லை. இது பாடுபாடு இல்லை. செய்யும் செயலுக்கு தகுந்தார் போல தண்டனையும், பரிசும் கொடுக்கப்படுகின்றது. பரமாத்மாவின் கட்டுபாட்டில், நாம் செய்யும் செயலின் தாக்கத்திற்கேற்ப நமக்கு ஆன்மாவும் அதற்குரிய உடலும் கொடுக்கப்படுகின்றது.

அப்படியானால் யார் நம்மை கட்டுபடுத்துவது? மனசாட்சி!!! கடவுள் நம் மனதில் மனசாட்சியாக வீற்றிறுந்து நம்மை கண்காணிக்கிறார். கீதையில் கிருஷ்ணர் கூருவது, "ஒருவனுடைய ஆன்மா அவன் உடம்பில் இருந்து வெளியேரும் பொழுது எந்த மன நிலையில் இருக்கிறானோ, அவன் அதே நிலையை நிச்சயம் அடைவான்". (இதைத்தான் "சாகும் பொழுது 'சங்கரா சங்கரா' என சொல்" என்பார்கள்) மனிதனுக்கு மட்டுமே சிந்திக்க ஆறறிவு தரப்பட்டிருக்கிறது. அதை நல்ல வழிகளில் பயன்படுத்தாமல் பாவகாரியங்களில் ஈடுபட்டால், அதன் விளைவுகள் தண்டனையாகவும், பிறப்பில் இரக்கமும் (விலங்குகள்) தரப்படும். பாவகாரியங்களில் முக்கியமானவைகளாக கருதப்படுவது நான்கு. அவை பாவ வாழ்க்கையின் நான்கு தூண்களாக கருதப்படுகின்றது. அவை மாமிசம் உட்கொள்ளுதல், சூதாட்டம், போதை வஸ்த்துக்கள் உட்கொள்ளுதல் மற்றும் தகாத உறவுகள். ஒரு பெண்ணை கண்டால் அவளை தாயாக பார்க்கும் தன்மையை உருவாக்கிக்கொள்ள வேண்டும். இப்படி நாம் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்தால், நமக்கு தெய்வீகம் கிடைக்கும். கடவுளிடம் செல்லலாம்.


சைவத்திற்க்கு அப்பால்...

நாம் என்ன உட்கொள்கிறோமோ நாமும் அதே தான். இன்றைய உலகில் புலால் உண்பது வாழ்க்கையின் அங்கமாக ஆகிவிட்டது. அதுவும் விரைவு உணவு வந்ததும் நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது. சைவமாக இருப்பதற்கும் அசைவமாக இருப்பதற்கும் அப்படி என்ன வித்தியாசம் இருக்கப்போகின்றது? முதலில் சைவத்திற்கும் அசைவத்திற்கும் என்ன வித்தியாசம் என்று பார்ப்போம்.

இந்த உலகில் உள்ள ஒவ்வொரு உயிரிணத்திற்கும் மத்திய நரம்பு மண்டலம் (Central Nervous System) உள்ளது. இந்த மண்டலம் உணர்ச்சி சம்பந்தப்பட்டது. வலி என்றால் என்ன என்று இந்த மண்டலம் தான் ஒவ்வொரு உயிர்க்கும் உணர்த்துகின்றது. ஆடு, மாடு, கோழி, முயல், காடை, பாம்பு, ஏன் மனிதனுக்கும் மற்றும் நம் சாப்பிடும் அனைத்து உயிரினத்திற்கும் இந்த மத்திய நரம்பு மண்டலம் உள்ளது. அதனால் தான் இந்த உயிர்களை வதைக்கும் பொழுதும், கொல்லும் பொழுதும் வலி வந்து இந்த உயிர்கள் துடிக்கின்றது. சரி! நாம் சாப்பிடும் சைவ உணவு வகைகளான அரிசி, பருப்பு, பால், தாவரங்கள், ஏன் தண்ணீர் போன்றவையும் உயிருள்ளவைதானே என்ற கேள்வி எழலாம். அப்பொழுது இந்த உணவு வகைகளும் அசைவம் தானே ஆகின்றது? இல்லை! காரணம் இந்த உயிர்களுக்கு மேலே சொல்லப்பட்ட மத்திய நரம்பு மண்டலம் என்பது இல்லை. அதனால் அவற்றிற்கு வலி தெரியாது. இதுவும் ஒரு அசைவம் தான். ஆனால் நாம் இயற்கைக்கு உட்பட்டு, நமக்கு தரப்பட்டுள்ள எல்லை வரை செல்லலாம். கீதை சொல்கிறது : "இந்த உலகில் உயிர் வாழ ஒவ்வொரு உயிரும் அடுத்த உயிருக்கு உணவாக உள்ளது. ஆனால் நாம் நமக்கு அளிக்கப்பட்ட உணவை மட்டும் உண்டால், நாம் அனைத்து பாவங்களில் இருந்தும் விடுபடுவோம்"

கீழ்கானும் ஒப்பீட்டை பாருங்கள்...


Comparison Carnivore Herbivore Human
Teeth: Incisors Short and pointed Broad, flattened and spade shaped Broad, flattened and spade shaped
Teeth: Canines Long, sharp and curved to tear flesh Dull and short (sometimes long for defense), or none Short and blunted
Teeth: Molars Sharp Flattened Flattened
Chewing None; swallows food whole Extensive chewing Extensive chewing
Saliva Acidic saliva: Carbohydrate digesting enzymes not present Alkaline saliva: Carbohydrate digesting enzymes present Alkaline saliva: Carbohydrate digesting enzymes present
Stomach Acidity with food in it < pH 1 (to digest tough animal muscle, bone, etc.) pH 4 to 5 pH 4 to 5
Length of Small Intestine 3 to 6 times body length > 10 times body length 10 to 11 times body length
Colon Simple, short and smooth Long, complex Long, complex
Perspiration No skin pores; perspires through tongue to cool body Perspires through millions of skin pores Perspires through millions of skin pores
Nails Sharp claws Flattened nails or blunt hooves Flattened nails

நம்மிடம் உள்ள ஒரு தவறான கருத்து, "சைவ உணவு சாப்பிட்டால் புரதச் சத்து இருக்காது" என்பது. ஆனால் உண்மை என்னவென்றால் காய்கறிகள், பழங்கள், விதைகள், தானியங்கள், கொட்டைகள் முதலியவை அதிக அளவில் புரதச்சத்து கொண்டது. இந்த உலகின் சில பிரபல சைவர்கள்...

1. மாகாத்மா காந்தி : "ஆன்மீகம் நம்முடைய தேவைக்காக செய்யப்படும் உயிர் கொலையை தவிர்க்க சொல்கிறது."
2. ஆல்பெர்ட் ஐண்ஸ்டீன் : "நம்முடைய வேலை உயிர் கொல்லும் மக்களிடம் மற்ற உயிர் மேல் அன்பு செலுத்துவதை எடுத்து சொல்ல வேண்டும்"
3. ஜான் ஊல்மேன் : "நாம் கடவுளை வணங்குவதும், அந்த கடவுள் உருவாக்கிய உயிரை கொல்லுவதும் ஒன்றுக்கொன்று முறன்பாடாக இருக்கிறது"
4. லியோ டால்ஸ்டாய் : "மனிதன் தன் வாழ்க்கையை சரியான பாதையில் செலுத்த விரும்பினால், முதலில் உயிர் கொலையை தடுப்பதில் இருந்து ஆரம்பிக்கட்டும்"
5. ஐசக் நியூட்டன்
6. தத்துவ ஞானி பிளேட்டோ
7. சாக்ரடீஸ்
8. பிதோகரஸ்
9. லியோனார்டோ டா வின்சி
10. கிரெக் சாப்பல்
11. ஓட்டப் பந்தைய வீரர் காரல் லீவிஸ்
12. மார்டினா நவரத்திலோவா

அசைவத்தின் விளைவுகள்...

முதலிடத்தில் இருப்பது இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள். பிரிட்டனில் 50 சதகிவித மரணங்கள் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களே. 1961-க்கு முன்னாலேயே அமெரிக்க மருத்துவ சங்கத்தின் செய்திக் குறிப்பு "90 முதல் 97 சதவிகித இதய நோய்கள் சைவ உணவு உண்டால் தவிர்க்கலாம்" என்கிறது.

இதய நோய்க்கு அடுத்து இருப்பது புற்று நோய். நன்கு வேகவைக்கப்பட்ட இரைச்சி மற்றும் மீன்களில் கார்சினொஜென்ஸ் (carcinogens) உள்ளது. இது நம்முடைய DNA செல்களை தாக்கி, அவற்றை மாற்றி, புற்றுநோயை வளர்க்கிறது. மாமிசமானது தாவரங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை விட 14 மடங்கு அதிக பூச்சிக்கொல்லி மருந்தும் ரசாயணமும் கொண்டது.

பசி...பசி...பசி

ஒவ்வொரு வருடமும் சுமார் 2 கோடி பேர் உணவு இல்லாமல் மற்றும் தவறான உணவு ஆகியவற்றால் இறக்கிறார்கள். இவர்கள் உணவு எங்கே போகிறது? ஐ.நா.வின் தலைமைச் செயலர் கூருவது "பணக்கார நாடுகளின் அசைவ (இரைச்சி) உணவுதான் உலகின் பசிக்கும் பசி சம்பந்தமான இறப்புகளுக்கு காரணம்" என்கிறார். இது எந்த அளவுக்கு உண்மை? இதை பாருங்கள். 7.5 கிலோ தாணியங்கள் 20 பேருடைய பசியை போக்கும். ஆனால் அசைவ உலகில் இந்த 7.5 கிலோ தாணியத்தை ஒரு மாடு சாப்பிடும். அந்த ஒரு மாட்டை 2 பேர் மட்டுமே உட்கொள்கின்றனர். ஆக மேலும் 14 பேருக்கு தேவையான உணவுக்கு பல கிலோ அதிக தாணியங்கள் தேவைப்படுகின்றது. அது மட்டுமல்ல, ஒரு கிலோ அளவுள்ள மாட்டிரைச்சியை தயாரிக்க 16 கிலோ தாணியங்கள் தேவைப்படுகின்றன (John Robbins' book ஓDiet for a New Americaஔ). இந்த 16 கிலோ தாணியங்கள் மற்றவரின் பசியை போக்கலாம் அல்லவா?

மற்றும் அமெரிக்கர்கள் தங்கள் அசைவ உணவில் 10 சதவிகிதம் குறைத்தாலேயே 10 கோடி பேருக்கு அதிகமாக உணவளிக்கலாம். ஒரு அமெரிக்கரின் 72 வயது சராசரி வாழ்க்கையில் உட்கொள்ளப்படும் உணவு:
1. 11 - கால்நடைகள்
2. 3 - ஆடுகள் மற்றும் ஆட்டுக்குட்டிகள்
3. 23 - பன்றிகள்
4. 45 - வான் கோழிகள்
5. 1100 - கோழிகள்
6. 391 கிலோ - மீன்கள்

மேலும், இந்த உலகில் உள்ள ஒவ்வொருவரும் சைவ உணவை உட்கொண்டால், உணவு உற்பத்தி 1000 கோடி மக்களுக்கு உணவளிக்கும் படி எட்டும். 1000 கோடி மக்கள் என்பது 2050-ல் இருக்கும் மக்கள் தொகை. அமெரிக்காவில் மட்டும் ஒவ்வொரு நிமிடமும் சுமார் 6,60,000 விலங்குகள் கொல்லப்படுகின்றன. அமெரிக்காவில் பயன்படுதப்படும் தண்ணீரில் பாதியளவு அசைவ உணவு தயாரிக்கவே பயன்படுத்தப்படுகிறது. மேலும் கன்றுகளை தொடர்ந்து உணவு இன்றி ஆடாமல் அசையாமல் ஈவு இரக்கம் இன்றி நிற்கவைத்து விடுவர். இதனால் அதன் நரம்புகள் இருகும். அந்த விலங்குகள் தன் வாழ்நாளில் இப்படி அப்படி திரும்பமுடியாது. மேலும் அவை வளர ஹார்மோன் ஊசிகளும் போடப்படும். அப்படிப்பட்ட மாடுகள் 4 மடங்கு அதிக விலைபோகும். உலகம் போற்றும் ஒரு மிகப்பெரிய தலைவரின் விசேஷ உணவு இதுதான். நாம் உட்கொள்ளும் அசைவமானது எவ்வாறெல்லாம் தயாரிக்கப்படுகின்றது? கோழிப் பண்னையில் பராமரிக்கப்படும் கோழிகள் கூண்டுக்குள் 'அடைக்கப்பட்டுள்ளன'. அவற்றால் அங்கு இங்கு என் எங்கும் நகர முடியாது. மேலும் ஒவ்வொரு கோழியும் வருடத்திற்கும் 200 முதல் 220 முட்டைகள் இட நிர்பந்திக்கபடுகிறது. இதனால், அவைகளின் எலும்புகள் மெலிந்து, இறகுகள் உதிர்கிறது. (இவற்றைப் பற்றின படங்களுக்கு haiseenu2000@yahoo.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்...)

சைவத்தை பற்றி ஜார்ஜ் பெர்னார்ட் ஷா கூரும்போது "நம்முடைய உடம்பு இறந்து போன விலங்குகளின் சுடுகாடாக இருக்கும் வரை, இந்த இலட்சிய பூமி எப்படி நலமாக இருக்கும்?" என்கிறார். சில நாட்களுக்கு முன்பு தாய்லாந்தில் ஒரு உணவகத்தில் கலைக்கப்பட்ட கருவின் மாமிசம் விற்கப்பட்டன. நம்முடைய உணவு பழக்கத்திற்கும் கர்ம விணைகள் உள்ளன. சீனாவில் 'தயாரிக்கப்பட்டு' உலகையே அச்சுரித்திய சார்ஸ் நோய்க்கு முக்கிய காரணம் அவைகள் புனுகுப் பூனை எனப்படும் காட்டுப் பூனையை உணவாக உட்கொண்டதால் தான். நாம் செய்யும் பாவ செயல்களுக்கு துன்பப்படவேண்டும் என்பது இயற்கையின் மாற்ற முடியாத விதி. இதைத் தான் நியூட்டனின் மூன்றாவது விதி! இந்த உலகின் ஒவ்வொரு உயிரும், எரும்பாக இருந்தாலும் அல்லது எருமையாக இருந்தாலும், அவை பரமாத்மாவின் குழந்தையே. அந்த உயிருக்கு இழைக்கப்படும் கொடுமைகளை பரமாத்மா மன்னிக்காது. அதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.