Friday, May 21, 2010

சமையல் டிப்ஸ் - ஆண்களுக்காக

"உலகில் பெண்கள் 'மட்டும்' தான் சமையல் எக்ஸ்பர்டா? இது என்னடா கொடுமை"-னு மல்லாக்கப் படுத்து (சரக்கடிக்காம இருந்த போதுனு சொன்னா நம்பவா போறீங்க?) யோசிச்சு பாத்ததுல, ஆண்களும் தான் கஷ்டப்படுறாங்க. ஆனா, அவங்க ஒழுங்கா சமையல் செய்ய மாட்டாங்கனு ஒரு தாட் இருக்கு. மாத்தனும். இந்த எண்ணத்த தான் மாத்தனும்! என்ன பன்னலாம்னு யோசிச்சு பாத்தா, அட! ஆண்களுக்கும் சமையல் டிப்ஸ் கொடுக்கலாமேனு தோணிச்சு.

சென்னை தெருக்களில் இருக்கும் கையேந்தி பவன் முதல் தாஜ் ஹோட்டல் வரை சமையல் செய்வது ஆண்களே! ஆண்களே!! ஆண்களே!!! ஆனா இந்த ஒரு விஷயத்த வெச்சிகிட்டு இந்த பெண்கள் பன்னுற அலப்பரை இருக்கே...ஐயோ! ஐயோ!!

பல்வேறு காலகட்டங்களில் நான் சந்தித்த சோதனை, அதிலிருந்து மீண்டு பீனிக்ஸ் செஃப்பாக (என்னாது???) வந்த பாதைகளை மற்ற ஆண்களுடன் பகிரலாமே என்ற எண்ணம் வந்தது. அதுக்காகத்தான் இந்த ஆட்டோகிராஃப்...
 
1. போன வாரம் ஒரு நாள், டீ போடலாம்னு பால அடுப்புல வெச்சு காச்சினேன். பொங்கும் சமயம் அடுப்பை சிம்ல வெக்கிறது பழக்கம். அப்படியே வெச்சாச்சு. நாயர் கடை ஸ்டைல்ல டீ சப்பிடலாம்னு ட்ரை பன்ன இன்னொரு பக்கம் சின்ன பாத்திரத்துல தண்ணீயும் டீத்தூளும் போட்டு காய்ச்சி நல்லா கொதிக்கிற வரைக்கும் விட்டுட்டு அப்புறம் அதை எடுத்து வடிகட்டி, ஸ்ட்ராங்க் டிகாஷன் மட்டும் ஒரு டம்ளர்ல ஊத்தியாச்சு. அப்புறம் அடுப்பிலிருந்த பாலை எடுத்து ஒரு டம்ளர்ல ஊத்தி, கொஞ்சம் சக்கரை, அப்புறம் அந்த வடிகட்டின டிகாஷனையும் ஊத்தி ஒரு ஆத்து ஆத்துனா...நாயர் கடை ஸ்டைல் டீ ரெடி.

அன்னைக்கு ஏதோ கிரிக்கெட் மாட்ச். இந்த பக்கம் டீ, அப்புறம் கொஞ்சம் ஸ்நாக்ஸ், தொட்டுக்க கிரிக்கெட் மாட்ச்னு சுவாரஸ்யமாத்தான் இருந்துச்சு.

என் வீட்டுக்கு முன் இருப்பவர்கள் சில சமயம் கொசுவை விரட்ட சருகுகளையும் (அதுல சில சமயம் ப்ளாஸ்டிக் பேப்பர்களும் இருக்கும்) எரிப்பார்கள். ஒரு அரை மணிநேரம் கழிச்சு பாத்தா பயங்கர ஸ்மெல். எங்க இருந்து வருதுனு தெரியல. வெளியில போய் பார்த்தாலும் ஒன்னும் இல்ல. பின் பக்கம் சமயலரைக்கு போய் பார்த்தாலும் தெரியல. என்னடா இதுன்னு யோசிச்சு எதேச்சையா பாத்தா, மிச்சம் இருக்குற பாலில் இருந்து தான் வந்துச்சு. அடுப்பு இன்னும் சிம்-ல. டக்குன்னு கேஸை அணைச்சு (இதுவா சார் உங்க டக்கு) பாலை மூடியிருந்த தட்ட எடுத்து பாத்தா, பால் சுண்டிப்போய் அரை மணி நேரமாயிருந்தது. அப்ப இந்த அரை மணிநேரமா எரிந்திருந்தது? பால் பாத்திரத்தோடு ஒட்டி போய், பின் பால்கோவா ஆகி, பின் பல ஸ்டேஜ்களை கடந்து ஏதோ ஒரு வஸ்துவாகி போயிருந்தது. தீஞ்ச நாத்தம் தாங்க முடியல. அப்படியே தண்ணியில போட்டுட்டு வந்தாச்சு.

டிப்ஸ் 1: தேவை இல்லாத போது அடுப்பை அணைக்கவும் (ஆண்களுக்கான சமையல் டிப்ஸ் வேற எப்படித்தான் இருக்கும்???!!!)

2. வருடம் 2001. வளசரவாக்கத்துல ஒரு வீட்டை வாடகைக்கு பிடிச்சு 7 பேர் குடியிருந்தோம். வேலை தேடி அலைஞ்ச வேளை (செப். 11-க்கு பிறகு). செலவை குறைக்க வீட்டிலயே சமையல் செஞ்சுகொள்ளலாம்னு முடிவு பண்ணி அதுக்கேத்த பத்திரங்களையும் வாங்கியாச்சு. 7 பேருல ஒருத்தன் எனக்கு சமைக்க தெரியும்னு சொல்லி பொதுகுழுவ கூட்டி ஃப்ரைடு ரைஸ் செய்யலாம்னு முடிவு பண்ணியாச்சு. ஆளாளுக்கு தெரிஞ்ச வேலைய செஞ்சு அவனுக்கு உதவ, குக்கர்ல சாதம் வெச்சாச்சு.

வேலை நடந்துகிட்டிருக்குற சமயம் "டேய். இத ப்ரைடு ரைஸ்க்கு போடலாமா?"னு ஒருத்தன் கேக்க, இந்த எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம், "போடலாம். போடலாம். எல்லாம் சாப்பிடுறது தான ப்ரதர்!" அப்படீன்னு சொன்னான். அப்பவே நாங்க சுதாரிச்சிருக்கனும். மிஸ் பன்னிட்டோம்.

சாதம் வெந்து குக்கரை ஓப்பன் பன்னியாச்சு. சாதமும் நல்லா தான் வந்தது. அடுத்து அந்த ரைஸ வெச்சு ஃப்ரைடு ரைஸ் செய்யனும். அவனும் என்னன்னவோ செஞ்சு பார்த்தான். கடைசி வரைக்கும் அந்த ரைஸ், ஃப்ரைடு ரைஸ் ஆகவேயில்ல. அதனால், வெட்டி வெச்சிருந்த காய்கறியை எல்லாத்தையும் போட்டு ("எல்லாம் சாப்பிடுறது தான ப்ரதர்!") மூடிவெச்சு எடுத்து, கடைசியில அதுக்கு அவன் வெச்ச பேர் 'வெஜிடபிள் பிரியாணி'.

டிப்ஸ் 2: "சமைக்க தெரிஞ்சத விட சமாளிக்க தெரியனும்".


3. அதே வீட்டுல ஒரு முறை நாங்க வெளிய போயிருந்தோம். வீட்டிலிருந்த ஒருத்தன் சமைக்க ஆரம்பிச்சிருந்தான். செஞ்சு வெக்க சொல்லி பக்கத்துல இருந்த ஃப்ரண்டு வீட்டுக்கு போயிருந்தோம். திரும்பி வந்து (மோந்து) பாத்தா, மீன் கொழம்பு. வாசம் தூக்குது. எங்களுக்கெல்லாம் ஆனந்த கண்ணீர். மணிரத்னம் படத்துல வர்ற மாதிரி "எப்படி? எப்படி இதெல்லாம்?"னு ஒரே சென்டிமென்ட் சீன். கடைசியில பாத்தா, இவன் வெக்குற லட்சனத்த பாத்து பக்கத்து வீட்டுல இருந்த ஒரு ஆன்ட்டி அவங்க வீட்டுல இருந்து "ஒரு நாளைக்கு மட்டும்" செஞ்சு கொடுத்து அனுப்பியிருக்காங்க.

டிப்ஸ் 3: சரியா சமைக்கலைன்னாலும் அத பக்கத்து வீட்டுக்கு தெரியற மாதிரி சமைக்கனும்.

4. குக்கர்ல அரிசியை வெச்சாச்சுன்னா, நமக்கு அதை சாதமாக மாத்தித் தரக்கடவது குக்கரின் வேலை தானே? அதானே நியாயமும் கூட? ஆனா பாருங்க, ஒரு தடவை இப்படிதான் குக்கர்ல அரிசியை வெச்ச அப்புறம் கொஞ்சம் நேரம் கழிச்சு விசில் அடிச்சுகிட்டே இருந்துச்சு. 5 விசிலுக்கு அப்புறம் அணைக்கலாம்னு போனா, 'டமார்'னு ஒரு சத்தம். அப்புறம் உள்ளார இருந்த எல்லா காத்தும் 'புஸ்'ஸுனு வெளியேரிச்சு. அப்டியே ஷாக்காயிட்டேன். அப்புறம் நடந்தத ஸ்லோ மோஷன்ல ஓட்டி பார்த்த போது, குக்கரின் மூடியில் இருந்து ஒரு குட்டி ஏலியன் வஸ்து போல ஏதோ ஒன்று எகிரியது மாதிரி இருந்தது. அது ஏதோ சின்னாதா இருந்தது. அடுப்பை அணைச்சு மூடியை தொறந்து பாத்தா தான் தெரிஞ்சது...

டிப்ஸ் 4: அரிசி வெச்சாமட்டும் போதாதாம்...தண்ணியும் வெக்கனுமாம்.


5. இது ஒரு Mathematical and Technical ப்ராப்ளம்...ஒரு சமயம் மேகி (மரகதவள்ளி அல்ல) நூடுல்ஸ் செய்யலாம்னு முடிவெடுத்து(!), அதற்கான வேலைகளும் ஆரம்பிச்சாச்சு. அதுல போட்டிருந்தபடி முதலில் 225 மில்லி கொதிக்க வெச்ச தண்ணியில நூடுல்ஸை போடனுமாம். இப்ப தான் டெக்னிகல்லி ஒரு ப்ராப்ளம் வந்துச்சு. அதாவது 255 மில்லின்னா எவ்வளவுனு? புதுசா சமைக்கிறதுனால எதையும் பர்பெக்டா செய்யனும் இல்லையா? அதனால நல்லா யோசிச்சு ஒரு முடிவெடுத்தாச்சு. வீட்டுல போன வாரம் ஒரு ஃப்ரண்டு வந்திருந்தான். 'அவன்' அடிச்சு போட்ட (கண்டுக்காதீங்க) ஒரு காலி க்வாட்டர் பாட்டில் இருந்துச்சு. அது 180 மில்லி. அப்புறம் 180 / 2 = நைன்ட்டி, அதாவது 90. அப்புறம் 90 / 2 = கட்டிங் (சரி தானே!), அதாவது 45. ஸோ, ஒரு க்வாட்டரும் (180) + ஒரு கட்டிங்கும் (45) சேத்தா அது 225. இதை அளந்து பாத்தா ஒரு க்ளாஸ் 'ஃபுல்லா' வந்தது. அதுக்கப்புறம் இன்னொரு க்ளாஸ் எடுத்து அந்த அளவை மார்க் பன்னி வெச்சாச்சு.

டிப்ஸ் 5: "மேத்தமேடிக்ஸ் படிச்சா எந்த ஃபீல்டுலையும் கலக்கலாம்"னு எங்க கணக்கு வாத்தியார் சொன்னது சரிதான் போல...

டிப்ஸ் 5a: என்னதான் 225 மில்லி அளவெடுத்து வெச்சாலும், மேகி ஒழுங்கா வேகவேயில்ல. தண்ணி பத்தல. அப்புறம் தான் ஒன்னு புரிஞ்சது. அதுல போட்டிருந்தது "கொதிக்க வைக்கப்பட்ட 225 மில்லி தண்ணீரில்...". "225 மில்லி தண்ணீரை கொதிக்க வைக்கவேண்டும்"-னு போடல, இல்லையா? (லாஜிக்காமாம்...)

6. கல்யாணமான அப்புறம், வீட்டுல என் மனைவி மொத தடவையா இட்லி செஞ்சா, ம்ஹூம்...செய்ய முயற்சி பன்னினா. என்னை 'சோதனை கூடத்து' எலி ஆக்குறதுல அவளுக்கு ஒரு சந்தோஷம். உள்ள ஏதோ ஒரு வேளையா போனவ, எனக்கு ஒரு அஸைன்மென்ட் கொடுத்துட்டு போனா. அதாவது 5 விசில் அடிச்சப்புறம் நான் கேஸ் அணைக்கனும். அப்ப பாத்து ஐ.பி.எல். மேட்ச். டிவி.யில விசில் போடுன்னு தோனி சொன்னதால, விசில் மேல விசில் பறந்துகிட்டு இருந்தது. இந்த பக்கம் குக்கரிலும் விசில் மேல விசில் பறந்துகிட்டு இருந்துச்சு. கடைசியில குத்துமதிப்பா ஒரு 12 விசிலுக்கு(!) அப்புறம் நியாபகம் வந்து ஓடிப்போய் கேஸை அணைச்சு, குக்கர ஓப்பன் பன்னி பாத்தா, அட, இட்லி சுப்பரா வந்துச்சு.

டிப்ஸ் 6: Mistakes are the secret of Succeeeeeeeeeeeess.

அப்புறம், இது அவுட் ஆஃப் சிலபஸ்...

வீட்டுல ஒரு முறை வெளிய போய்ட்டு வந்தேன். வீட்டில் கண்ணாடி முன் ஒரு பேப்பரின் மேல் பாதி 5* சாக்லேட் இருந்தது. நாங்க தான் எதையும் ஃபர்பெக்டா செய்வோமே. அதனால முகமெல்லாம் அலம்பிட்டு ஃப்ரஷ்ஷா வந்து சப்டுவோம்னு போய் முகமெல்லாம் கழுவிட்டு வந்தேன். அந்த சாக்லேட்ட எடுக்கலாம்னு போனேன். என் அக்கா, "என்ன பன்னுற?"னு கேட்டா. "சாப்பிட போறேன்"னு சொன்னேன். "போய்டுவ பரவாயில்லையா?"னு கேஷுவலா கேட்டா. ஒன்னுமே புரியல. அப்புறம் தான் தெரிஞ்சது, அது 5* சாக்லேட் இல்ல, எலிய கொல்றதுக்காக வெச்சிருந்த எலி மருந்துனு. அப்பல்லாம் சாக்லேட் ஸ்டைல்ல எலி மருந்து தயாரிக்கிறது தான் பேமஸ் போல...

18 comments:

 1. நீதி: ஆண்களுக்கு சமையல் செய்ய வந்தாலும் சாபிடுற மாதிரி சமைக்க வராது.

  ReplyDelete
 2. //நீதி: ஆண்களுக்கு சமையல் செய்ய வந்தாலும் சாபிடுற மாதிரி சமைக்க வராது.//

  அப்ப நீங்க ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டதே இல்ல, அப்படித்தானே?!

  ReplyDelete
 3. //அப்ப நீங்க ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டதே இல்ல, அப்படித்தானே?!

  அதை சாப்பிட்டுகிட்டு இருக்குறதும் ஒரு காரணம்.

  ReplyDelete
 4. Sreenivasan,

  உங்களுக்கு இதுவரைக்கும் நல்ல மெஸ் கிடைக்கலைன்னு நெனைக்கிறேன். சென்னைக்கு வாங்க. நல்ல சாப்பாடு எங்க எங்க கிடைக்கும்னு நான் சொல்றேன்.

  நான்பெங்களூர்ல இருந்து சென்னைக்கு வந்ததுக்கு இந்த சாப்பாட்டு பிரச்சினையும் ஒரு காரணம்.

  ReplyDelete
 5. //உங்களுக்கு இதுவரைக்கும் நல்ல மெஸ் கிடைக்கலைன்னு நெனைக்கிறேன். சென்னைக்கு வாங்க. நல்ல சாப்பாடு எங்க எங்க கிடைக்கும்னு நான் சொல்றேன்.

  T.Nagar, மாம்பலம், சைதாபேட், LIC பக்கம் நல்ல மெஸ் கிடைக்குமா

  ReplyDelete
 6. எல்.ஐ.சி - பின்புறம் திருவல்லிக்கேனி. அங்க இல்லாத மெஸ்ஸா?

  http://chennapattinam.blogspot.com/2006/10/blog-post_06.html

  சைதை - சிக்னல் அருகே இருக்கும் மெஜஸ்டிக் உணவகம். நல்லா இருக்கும்.

  திருவல்லிக்கேனி - ரத்னா கஃபே, சீ லார்ட், அம்பாள் மெஸ் (இந்து பள்ளி எதிரில்), காசி விநாயகா, (வாலாஜா ரோடு) சாரதா மெஸ், ஆந்திரா மெஸ்.

  மாம்பலம், தி.நகரில் சில மெஸ்கள் தெரியும். ஆனா, பெயர் நியாபகமில்லை. சைதை மேட்டுப்பாளையத்தில் இரு மெஸ். பெயர் நியாபகமில்லை.

  ReplyDelete
 7. //When the lion of Vedanta roars, the foxes run to their holes என்றார் சுவாமி விவேகானந்தர்.

  chillsam என்ற கிறிஸ்தவ மதவெறியரின் துவேஷத்தில் ஊறிய அபத்தக் கருத்துகளுக்கு உறுதியாகவும், அறிவுபூர்வமாகவும் எதிர்வினையாற்றிக் கொண்டிருக்கிறார்கள் இந்து சிங்கங்கள்.

  நண்பர்களே, உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. //

  நல்லவர் ஜடாயு'வுக்கு மிக அழகாக கட்டுரை வரைகிறீர்கள்;ஆனால் என்னை உள்ளே நுழையவிடாமல் தடுத்துவிட்டு மாற்றுக் கருத்துக்களுக்கு ஜனநாயக முறையில் மதிப்பளிக்காமல் நான் ஓடிவிட்டதைப் போன்ற மாயையை தோற்றுவிக்கும் உங்களுக்கு மனசாட்சி கிடையாதா..?

  நான் கூட உங்கள் கருத்துக்களையும் இந்து மக்களின் எழுச்சியையும் பார்த்து ஒருவேளை அதுவே உண்மையான பாதையாக இருக்குமோ என அஞ்சியதுண்டு;ஆனால் நீங்களோ மிகத் தீர்க்கமாகவும் நிர்தாட்சண்யமாகவும் மெய்வழியை அவதூறு செய்வது மிகவும் வருந்தத்தக்கது.

  ReplyDelete
 8. jilljam
  7 June 2010 at 8:43 pm

  இங்கே தடைசெய்யப்படும் எனது கருத்துக்களை வாசகர்கள் திருச்சிக்காரனின் தளத்தில் காணலாம்..!

  http://thiruchchikkaaran.wordpress.com/2010/05/31/god-looks-like-man-as-per-bible/

  ReplyDelete
 9. ஏம்பா chillsam,

  //நல்லவர் ஜடாயு'வுக்கு மிக அழகாக கட்டுரை வரைகிறீர்கள்;ஆனால் என்னை உள்ளே நுழையவிடாமல் தடுத்துவிட்டு மாற்றுக் கருத்துக்களுக்கு ஜனநாயக முறையில் மதிப்பளிக்காமல் நான் ஓடிவிட்டதைப் போன்ற மாயையை தோற்றுவிக்கும் உங்களுக்கு மனசாட்சி கிடையாதா..?//

  எங்கேயோ போடவேண்டிய பின்னூட்டத்த இங்கன போட்டா, அங்க எப்படிப்பா நுழைய முடியும் ;)

  ReplyDelete
 10. நண்பரே,நான் தவறுதலாக இங்கே போடவில்லை; அங்கு எனது பின்னூட்டங்களைத் தடைசெய்கிறார்கள்;

  பரிசீலனை பகுதிக்குக் கூட எனது எழுத்துக்கள் நுழையாதபடி தடைசெய்யப்பட்டுள்ளது;

  இதனால் நான் பதிலளிக்காமல் ஓடிவிட்டதைப் போன்ற சூழ்நிலையை உருவாக்குவதுடன் வாசகர்களிடையே வெறியைத் தூண்டி குளிர்காய்கிறார்கள்;

  நாம் நேரடியாகச் சொல்ல விரும்பும் காரியம் சென்று சேராவிட்டால் வேறொருவர் மூலம் சொல்ல முயற்சிப்போமல்லவா,அதுபோலவே உங்கள் உதவிநாடி வந்திருக்கிறேன்;

  ஆனாலும் உங்கள் தளத்தின் அமைதியைக் கெடுப்பதற்காகப் பொறுத்துக்கொள்ளவும்;

  இந்த தளம் ஆலமரத்தின் இதமான நிழலில்
  கவலை,விச்சாரம் இல்லாது அமர்ந்திருப்பது போன்ற உணர்வைத் தருகிறது;ஆனாலும் எனக்கு வேறு வழி தெரியவில்லை;

  வரைமுறையில்லாமல் சகோதர மார்க்கத்தைத் தாக்குவதும் அதற்குத் தரும் விளக்கங்களைப் புறக்கணித்து ஓரங்க நாடகம் நடத்தும் ஜனநாயகத்துக்கும் கருத்துரிமைக்கும் ஏற்புடையதுதானா என்று நல்லவர்கள் யோசிக்கட்டும்..!

  "தமிழ்ஹிந்து" எனும் இந்துவெறியர்களின் தளத்தின் முகமூடி எப்படியாவது கிழிக்கப்படும் நாள் நெருங்குகிறது;

  ReplyDelete
 11. chillsam,

  //வரைமுறையில்லாமல் சகோதர மார்க்கத்தைத் தாக்குவதும் அதற்குத் தரும் விளக்கங்களைப் புறக்கணித்து ஓரங்க நாடகம் நடத்தும் ஜனநாயகத்துக்கும் கருத்துரிமைக்கும் ஏற்புடையதுதானா என்று நல்லவர்கள் யோசிக்கட்டும்..!//

  அப்ப அவங்க சொல்றதெல்லாம் பொய்ங்கறீங்களா? :)

  //"தமிழ்ஹிந்து" எனும் இந்துவெறியர்களின் தளத்தின் முகமூடி எப்படியாவது கிழிக்கப்படும் நாள் நெருங்குகிறது;//

  காமெடி பன்னாதீங்க. வேணும்னா நீங்க ஒரு தளம் ஆரம்பிச்சு (ஃப்ரீ தானே) தமிழ் இந்துவை கலாயுங்கள்.

  ReplyDelete
 12. சீனு said:
  // அப்ப அவங்க சொல்றதெல்லாம் பொய்ங்கறீங்களா? :) //

  சகோதரரே,அவ‌ங்க சொல்றதெல்லாம உண்மையுமில்லே,நாங்க சொல்றதெல்லாம் பொய்யுமில்லே (((:)))

  நாங்கள் சுயநினைவுடன் மெய்வழியினையடைந்த இந்திய கிறித்தவர்கள்; எமது சுயாதீனத்தையும் சுயமரியாதையையும் கேள்விக்குறியாக்கும் மதவெறிப் பிரச்சாரத்தை நடத்துவது யாரென்பதை நீங்களே ஆராய்ந்து பாருங்கள்;

  நாங்களெல்லாம் பணத்துக்காக மதம் மாறவில்லை; சோற்றுக்கு அல்லாடியதுமில்லை;ஆண்டிமடம் காலியாகும்போது ஆண்டிகள் புலம்புவதுபோல புலம்பிக்கொண்டிருப்பது யாரென்றும் தெரியவரும்..!

  ஒப்பீட்டளவில் சீனா தனது ஞானத்தினாலும் உழைப்பினாலும் மட்டுமே வேகமாக வளர்ந்துவருகிறது;

  ஆனால் இந்தியாவோ ஒவ்வொன்றுக்கும் அந்நியரிடம் தலைவணங்கி நிற்கிறது;

  அதாவது கிறித்தவ நிறுவனங்களின் முதலீடுகள், கிறித்தவ நிறுவனங்களின் வேலைவாய்ப்புகள், கிறித்தவ நிறுவனங்களின் கல்வி ஞானம் இப்படி அனைத்து துறைகளிலும் இந்தியா முன்னேற உதவியாக இருப்பது இவர்களால் குற்றஞ்சாட்டப்படும் கிறித்தவ நாடுகளின் பிரதிநிதிகளே..!

  அது சுனாமி நிதியாக இருப்பினும் வளர்ச்சி நிதியாக இருப்பினும் மதச்சார்பு இல்லாமல் அள்ளிக் கொடுப்பது வெளிநாட்டு கிறித்தவ சேவை நிறுவனங்களே அந்த பணம் மட்டும் இனிக்குமா..?

  ReplyDelete
 13. இந்த பதிவுக்கும் இந்த கருத்துகளுக்கும் சம்பந்தம் இல்லை. இருந்தாலும் நீங்க கேட்டதுக்கு 'ஒரு முறை' சொல்றேன்.

  //எமது சுயாதீனத்தையும் சுயமரியாதையையும் கேள்விக்குறியாக்கும் மதவெறிப் பிரச்சாரத்தை நடத்துவது யாரென்பதை நீங்களே ஆராய்ந்து பாருங்கள்;//

  யாரென்று சொல்லுங்களேன்...அப்புறம் ஆங்காங்கே இருக்கும் கல்லூரி மைதானங்களில் நடக்கும் அந்த எழுப்புதல், இந்த எழுப்புதல் கூட்டங்களை நடத்துவது யாரென்று கொஞ்சம் நீங்களே ஆராய்ந்து கூறுங்களேன்...

  //நாங்களெல்லாம் பணத்துக்காக மதம் மாறவில்லை; சோற்றுக்கு அல்லாடியதுமில்லை;ஆண்டிமடம் காலியாகும்போது ஆண்டிகள் புலம்புவதுபோல புலம்பிக்கொண்டிருப்பது யாரென்றும் தெரியவரும்..!//

  :) போட்டு வைக்கிறேன்.

  //அதாவது கிறித்தவ நிறுவனங்களின் முதலீடுகள், கிறித்தவ நிறுவனங்களின் வேலைவாய்ப்புகள், கிறித்தவ நிறுவனங்களின் கல்வி ஞானம் இப்படி அனைத்து துறைகளிலும் இந்தியா முன்னேற உதவியாக இருப்பது இவர்களால் குற்றஞ்சாட்டப்படும் கிறித்தவ நாடுகளின் பிரதிநிதிகளே..!

  அது சுனாமி நிதியாக இருப்பினும் வளர்ச்சி நிதியாக இருப்பினும் மதச்சார்பு இல்லாமல் அள்ளிக் கொடுப்பது வெளிநாட்டு கிறித்தவ சேவை நிறுவனங்களே அந்த பணம் மட்டும் இனிக்குமா..?//

  நாங்களா கேட்டோம்? இந்த நாய்களை உள்ளே விட்டதே தப்பு. சொல்றதுக்கு வெக்கமா இல்லை?

  உலகத்துல இப்போது முன்னேறிவிட்டோம் என்று மார் தட்டிக் கொள்ளும் 'கிறித்துவ' நாடுகள் முன்னேரியது யாருடைய பணத்தால். இந்தியா போன்ற மூன்றாம் தர நாடுகளின் மேல் படையெடுத்தும், போர் புரிந்தும் சம்பாதித்த பணம் தான். தெரிந்து கொள்ளுங்கள். 100 ரூபாய் திருடிவிட்டு 1ரூபாய் பிச்சை போட்டால் நாக்கை தொங்க போட்டுகிட்டு பின்னாலேயே போவீங்களா?

  ஓடி போய்டு...சொல்லிட்டேன்...(அப்புறம் என்னை சகோதரரே என்று கூப்பிடவும் வேண்டாம்).

  ReplyDelete
 14. பேசி தீராத பிரச்சனையும் இல்லை!. எழுத்து தராத தீர்வுகளும் இல்லை !.
  உங்கள் வெற்றியின் திறவுகோல் உங்களிடமே இருக்கிறது - மடை திறவுங்கள் !!
  www.jeejix.com இல் இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் பரிணாமங்களை
  எழுதுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் !!!

  ReplyDelete
 15. hii.. Nice Post

  Thanks for sharing

  For latest stills videos visit ..

  More Entertainment

  www.ChiCha.in

  ReplyDelete