Thursday, March 25, 2010

Follow up: கல்யாணத்திற்கு கல்யாணம் - கத்தி முனையில்... :(

இது ஒரு மீள்பதிவு
-------------------------------
பதிவிட்ட நாள்: 11-July-2005

ஏன்? எங்கே?? எப்படி???

சில தினங்களுக்கு முன், என் ஊருக்கு (TIK திருப்பத்தூர்) சென்றிருந்தேன். ஒரு சுற்று சென்று என் நண்பர்களை காண சென்றிருந்தேன். என் நன்பனின் கடையில் அமர்ந்து போனது வந்தது பற்றி 'சாட்'டிக்கொண்டிருந்தோம். அப்பொழுது மற்றொருவன், அவன் தான் நம் கதையின் நாயகன் (Anti-hero) கல்யாணம் (எ) கல்யாணசுந்தரம், வந்து எங்கள் ஜோதியில் ஐக்கியமானான். எலி 'கெட்டுப் போன' மசால் வடையை மோப்பமிட்டுக் கொண்டு, சிங்கங்களின் குகைக்குள் வந்தது.(ஹி...ஹி...சிங்கங்கள்? நாங்கள் தான்...) உருப்படியில்லாத விடயங்கள் ஓவ்வொன்றாக பட்டியலிட்டு பேசிக்கொண்டிருந்தோம்,

அப்பொழுது தான் கதையில் ஒரு 'Hairpin Bend', அதாங்க, ஒரு அதிரடி திருப்பம். நான்காவதாக ஒருவன் வந்தான். வேறெங்கோ சென்று கொண்டிருந்தவன், கல்யாணத்துடன் நாங்கள் பேசிக்கொண்டிருப்பதை பார்த்து விட்டு, ஒரு சில வினாடிகள் தன் வாகனத்தை நிருத்திவிட்டு, "கத்தி முனையில் கல்யாணத்திற்கு கல்யாணம். தெரியுமா?" என்று சொல்லிவிட்டு சட்டென தன் 'வேலை'யை காட்டி விட்டு, சிட்டென தன் வேலையை பார்க்க சென்றுவிட்டான். அட! அவனுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா? அதுவும் எங்களுக்கு 'சொல்லாமலே'...சரி! ஏதாவது வில்லங்கமாயிருக்கும் என்று அவனை ஏதும் திட்டாமல் (எங்களுக்கு ரொம்ப நெருங்கின நண்பனும் இல்லை, அவனை நாங்கள் பார்த்தால் just 'hai' சொல்லும் பழக்கம் தான்), "என்னடா! என்னாச்சு!!"-ன்னு கேட்டோம். அவன் சொன்னதன் சாராம்சம் (ஆமா! அவன் கதை பெரிய இதிகாசம். இதுக்கு சாராம்சம் வேறையா?).

சுற்றிலும் உள்ள பத்து பட்டிக்கும் தலைநகரமான(?) திருப்பத்தூருக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்திலே ஒன்றிலிருந்து திருப்பத்தூருக்கு வரும் கல்யாணம் என்னும் இந்த கதாநாயகன் (அவனவன் கதைக்கு அவனவன் கதாநாயகன் தானே), ஒரு அன்றாடங் காய்ச்சி. சீ! சீ!! அதெல்லாம் காய்ச்ச மாட்டான். அவன் அன்று சம்பாதிப்பது அவனுக்கு உணவு, உடை, எல்லாம்னு சொல்ல வந்தேன். அவன் வாழ்விலும் தென்றல் வீச ஆரம்பித்தது. இது புயலுக்கு 'முன்னே' அமைதி. அவன் திருப்பத்தூருக்கு வரும் பேருந்தில் சக பயனியாக வரும் ஒரு கல்லூரியில் B.Com பயிலும் பெண், calm-ஆக கல்யாணத்தைப் பார்க்க, அவனுள்ளும் ஒரு 'அந்நியன்' வெளிப்பட்டுக்கிறான். அதிலிருந்து அவன் deposit இழந்தாலும், ஓட்டு சதவிகிதம் சொல்லி சப்புகொட்டும் ஒரு தேர்ந்த அரசியல்வாதியைப் போல அவளிடம் பந்தா காட்ட...அவ்வளவு தான். ஒரே மழை நீரில் இருக்கும் இரு வேறு மின் கம்பிகளும் நீரினால் ஒன்று பட்டு மின்சாரத்தை பாய்ச்சுவதைப் போல (அடங்கப்பா! என்ன உவமைடா சாமி!!), அவர்களும் அந்த காதல் என்னும் நீரில் நீச்சல் அடிக்கத் தெரியாமல் 'தொபுக்கடீர்'-னு விழுந்தார்கள். அவன் மனதில் ஒரு 'அந்நியன்'னு என்று சொன்னேன் இல்லையா? ஏன்னா, நம்ம கதாநாயகன் இந்த காதலை time pass கடலையாகவே 'பாவி'த்திருக்கிறார். இந்தக் 'ஒ(த)ருதலைக்' காதல் நாளொரு கடலையும், பொழுதொரு meeting-குமாக (decent-ஆ தான்) வளர்ந்தது.

இந்த நிலையில், அந்த பெண்ணுக்கு அவள் வீட்டில் மாப்பிள்ளை பார்க்கும் படலம் ஆரம்பித்தது. இதை அந்த பெண் எதிர்ப்பார்த்திருந்தாலும், இவ்வளவு சீக்கிரம் வரும் என்று எதிர்ப்பார்க்கவில்லை. பின் ஆப்புறம் என்ன? ஒரே திரைக்கதை தான். இவனைப் பார்க்க வேண்டும் என்று முயற்சிக்க, தலைவர் அந்த பெண்ணை பார்க்க தவிர்க்க, அந்த பெண் அவள் வீட்டில் போட்டு உடைக்க, அவள் வீட்டிலும் இதற்கு எதிர்ப்பு எழ, என்ன நிகழ்ந்திருக்கும் என்று ஊகிக்க முடிகிறதா? இவனை அவள் மிகவும் serious-ஆ காதலித்திருக்கிறாள். அதனால், தடாலடியாக, நீங்கள் ஊகித்த மாதிரியும் இல்லாமல், "பையன் தொட்டுட்டான்...பொன்னு கெட்டுட்டா"-னு ஒரு குண்டை தூக்கிப் போட்டாள். இந்த இடத்தில் நானும் என் நன்பனும், கல்யாணத்தின் நிலையை நினைத்து, 'அடிபடாமல்' விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தோம்.

இந்த விவகாரம் காவல்துரை வரை சென்றது. கல்யாணம், தான் DNA சோதனை எடுக்கவும் த(஡)யார் என்று வக்கீல் மூலம் notice விட்டான். ஆனால், DNA சோதனை செய்ய சுமார் அருபதினாயிரம் ரூபாய் வரை செலவாகும் என்று தெரிந்தது. அவனால் தன்னால் அது முடியாது என்று சொல்லி கடைசியில் வேறு வழியின்றி...

சரி! தற்போது அவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று விசாரித்தோம். தன் மனைவி மேல் கோபமா இருக்கிறானா என்று கேட்டோ ம். "முதல்ல என்னை ஏமாத்திடா-ன்னு எனக்கு அவ மேல பயங்கர கோபம் இருந்துச்சு. ஆனால், என் மேல் இருந்த love-ன்னால தான் இப்படியொரு பொய் சொன்னா. அதுவும் இல்லாமல், என் மேலும் தப்பு இருந்தது. அவ என்ன serious-ஆ love பன்னியிருக்கா. நான் அவள் love-அ time paas-ஆ நினைச்சேன். அதனால, எனக்கு கிடைச்ச தண்டனை + பிராயச்சித்தம் தான்"-னு சொன்னான்.

ஆனால், அவன் தற்போது கட்டப்படுவது தங்கள் தினசரி வாழ்க்கையை நடத்துவதற்கு. தான் தினமும் சம்பாதிப்பது சாப்பாட்டிற்கே சரியாகிறது என்றும், வாழ்க்கை நடத்துவதே கடினமாக இருப்பதாகவும் சொன்னான். அவன் மனைவி தற்போது final year படிப்பதாகவும். அது முடிந்ததும் அவள் வேலைக்கு போவதாகவும் சொல்லியிருக்கிறாள். ஆனால், அவளுக்கு மேலும் B.L. படிக்க ஆசை இருப்பதால் தான் அவளை எப்படியாவது படிக்க வைக்க ஆசைப்படுவதாகவும் கூறினான். இதற்கிடையில் அவளை கட்டப்படாமல் பார்த்துக் கொள்வேன் என்றும் கூறினான். பிறகு அவனுக்கு சில அறிவுரைகள், ஆலோசனைகள், எங்களுக்கு தகுதி இருப்பதாக நினைத்துக் கொண்டு, கூறினோம்.

பிற்சேர்க்கை: 25-Mar-2010

சென்ற வாரம் மேற்கண்ட காட்சியில் இருந்த ஒருவன் எனக்கு ஃபோன் செய்து சொன்னது அதிர்ச்சியாக இருந்தது. அந்த பெண் கடந்த 6 மாதங்களுக்கு முன், 2வது பிரசவத்தில் அதிகபட்ச உதிரப் போக்கால் இறந்து விட்டாள் என்பது தான் அது. கேட்க அதிர்ச்சியாகவும், வேதனையாகவும் இருந்தது. அந்த பெண் இறந்தது ஒரு அற்ப காரணத்தான் என்னும் போது என்னவென்று சொல்வது? (மிக சமீபத்தில் தான் கல்யாணத்தின் அண்ணன் மாரடைப்பால் காலமானார். அவர் வயது 40-க்குள் தான் இருக்கும்).

5 comments:

  1. கல்யாணத்துக்கு வாழ்த்துக்கள்!!!!

    எல்லாம் சரியாகிடும்!!!!
    ஆமாம் உங்க கல்யாணம் எப்ப?

    என்றும் அன்புடன்,
    துளசி.

    ReplyDelete
  2. துளசி,

    உங்களுக்கு என் மேல் அப்படி என்ன கோபம்?

    சீனு

    ReplyDelete
  3. எல்லாம்
    நான் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம் என்ற பெருந்தன்மைதான்:-)

    ReplyDelete
  4. வீடு வாடகைக்காக நெட்டிலும், ரோட்டிலும் சமீபமாய் அலைந்தேன். பல இடங்களில் பிராமின்ஸ் ஒன்லி என்று சொல்கிறார்கள். நெட்டிலும் அதே நிலைதான். இது மற்றவர்களைக் கேவலப்படுத்துவது போல இல்லையா? வேண்டுமானால் வெஜிடேரியன் ஒன்லி என்று போட்டுக் கொள்ளலாமே? அது தவறாகத் தெரிவதில்லை. இதைப் போல் மற்றவர்கள் போட்டால் என்ன ஆகும் என்று இவர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். பிராமணாள் ஓட்டல்களை தார் வைத்து அழித்த தி.க.வினர்தான் இதற்கும் ஏதாவது பண்ண வேண்டும். வெள்ளையர்கள் ஓட்டல்களில் "கறுப்பர்களும், நாய்களும் உள்ளே வரக் கூடாது" என்று எழுதி வைத்தார்களாம். அதைப் போல இது இருக்கிறது. திருமாவளவன் ஏன் இதைக் கண்டு கொள்ளவில்லை? இது ரொம்ப காலமாக நடக்கிறது. மற்ற எல்லோரும் பிராமினைத் தவிர என்று போட்டுக் கொண்டால் இவர்கள் கதி? சமூகத்தோடு ஏன் ஒத்துப் போக மறுக்கிறார்கள்? இது அவர்கள் தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரிப் போடும் முயற்சி என்று புரிந்து கொள்ள வேண்டும். இந்த சில காரணங்களால்தான் மீண்டும் ஜெயலலிதா வரவே கூடாது என்று தோன்றுகிறது. வந்தால் இவர்களைக கையில் பிடிக்க முடியாது.

    ReplyDelete