அடிச்சு பிடிச்சு முதல் நாள் முதல் ஷோவுக்கு டிக்கெட் வாங்கி, சீட் பிடித்திட வேண்டும் என்ற 'வெறி'யுடன் உள்ளே நுழைந்து, எனக்கும் என் நண்பர்களுக்கும் சேர்த்து 8 சீட்கள் பிடித்தாகிவிட்டது. நாங்கள் இரண்டு பேர் தான் அந்த 8 சீட்டுக்கும் காவல். இவனுங்க எங்க போனானுங்க? போன் போட்டால், வெளியே தான் இருக்கிறோம். சிகெரட் வாங்கி 5 நிமிஷத்துல வந்துடுவோம்னாங்க. 15 நிமிஷம் ஆச்சு. வருபவர்களிடமெல்லாம், "ஹலோ பாஸ். ஆள் வர்றாங்க", "ஆமாமா. ஆள் வர்றாங்க" என்று சொல்லியே அலுத்துவிட்டது. எவன் வந்து சண்ட போட போறானுங்களோ.
படம் போட்டு 10 நிமிஷம் கழிச்சு வந்து தொலஞ்சானுங்க. ஒரு வழியா எல்லாரும் செட்டிலாகி, லைட்டை அனைக்க, விசில் சத்தம் காதை பிளக்கிறது. இப்படியே போனால் படம் எப்படி பாக்குறது? சரி! இதுவும் ஒரு வித்தியாசமான சூழல் தானே? விளம்பரங்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக, சத்தமும் அதிகமாகிறது. ஆப்பரேட்டர்கள், தியேட்டர் ஓனர், அவர் குடும்பம் என்று அனைவரும் இழுக்கப்படுகின்றனர்.
சுறா - சர்டிப்பிகேட் திரையில் ஒட, அத்தனை பேரும் பரவசம் வந்தவர்களாக விசில் சத்தமும், கத்தலுமாக படத்தை வரவேற்றனர். சன் பிக்சர்ஸ் கலாநிதியின் பெயர் வந்தால், அதற்கும் விசில். ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தேன். அட! இவர் கூட இம்புட்டு ரீச் ஆகிட்டாரேனு. விஜய்-ன் பெயர் திரையில் வந்தது தான் தாமதம். அதற்கும் விசில் பறக்கிறது. சரியான விசிலடிச்சான் குஞ்சுகள். ஆர்ப்பாட்டமெல்லாம் அடங்கி படம் ஆரம்பமாகிறது.
யாழ்நகர்(?!) மக்களின் தலைவன் விஜய். அவர் எல்லோருக்கும் செல்லம். இன்ட்ரோவில் கடலுக்கு மீன் பிடிக்க போனவர்கள் காணாமல் போக, அனைவரும் தேடுகிறார்கள். எல்லோரும் திரும்பிவிட, விஜய் மட்டும் காணவில்லை. எல்லோரும் விஜய்யை காணாமல் தேட, அவர் மட்டும் நீச்சல் அடித்தபடி கரையை நெருங்க, ஓப்பனிங் சீன் ஆச்சே, விசில் அடிக்காமல் இருப்பானுங்களா? கற்பூரம் வேறு கொளுத்தினார்கள். நல்ல வேளை திரையை மட்டும் கொளுத்தவில்லை...ஏதோ பாட்டு ஆரம்பமிக்க போகுதுனு தெரியுது. பாட்டும் வந்தது. பாடல் வரிகளும் காதில் விழவேயில்லை. பாடல் முடிந்ததும் படம் கதை வேகம் பிடிக்கிறது.
அவர் சார்ந்திருக்கும் குப்பத்தை இடித்து விட்டு அங்கு ஒரு தீம் பார்க் கட்ட திட்டம் போடுகிறார். அந்த குப்பத்து மக்களின் ஒரே பாதுகாவலன் விஜய். இதை கேள்விப்பட்டதும் சீறுகிறார். வில்லனுக்கும் அவருக்குமான லடாய் ஆரம்பமாகிறது. இடையில் விஜய் முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்ற வெறியுடன், எல்லா கோக்கு மாக்குகளையும் செய்கிறார். இதில் யார் வென்றார்கள் என்பதை வெண் திரையில் காண்க.
படத்தில் விஜய் அவ்வளவு அழகாக தெரிகிறார். அவர் காஸ்ட்யூம் டிசைனர் அவரது மனைவி சங்கீதா. வடிவேலுவுடன் அவர் அடிக்கும் கும்மிகள் அனைத்தும் குபீர் ரகம். போக்கிரிக்கு பிறகு இருவரும் சேர்த்து கலக்கியிருக்கிறார்கள்.
தமன்னா, சோ க்யூட். நாய் காணாமல் போனதற்காக தற்கொலை வரை செல்லும் வெகுளிப்பெண் பாத்திரம். கவர்ச்சியும் சற்று தூக்கல். இருந்தாலும் அழகு. வழக்கமான ஹீரோயின்கள் போல் இல்லாமல், படம் முழுவதும் சற்று வெயிட்டான கேரக்டருடன் வருகிறார். தமன்னாவுக்கு ரசிகர் மன்றம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
பாடல்கள் சுமார் ரகம் என்றாலும் பின்னனி இசையில் பின்னி பெடலெடுக்கிறார் மணிசர்மா. வெற்றிக்கொடி, நான் நடந்தா பாடல்கள் ஓகே ரகம். தியேட்டர் அதிருகிறது. விசில் சத்தத்தில் வரிகள் கேட்கவேயில்லை.
அதிரடியான திரைக்கதை, சூடான பஞ்ச் வசனங்கள், அசத்தலான பாடல்கள், காமெடி கலாட்டா, க்யூட் தமன்னா என்று படம் போரடிக்காமல் போகிறது. கொடுத்த காசுக்கு ஒரு நல்ல என்ட்டர்டெயின்மென்ட் படம் பார்த்த திருப்தி.
சில இடங்களில் போர் அடித்தாலும், மொத்தத்தில் படம் ஓகே.
படம் முடிந்து அனைவரும் எழுந்து போகும் போது, மீண்டும் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும் இசை. ஒரே கன்ப்யூஷன். திடீரென்று என்னை யாரோ தட்டி எழுப்புவது போல இருக்க கண்ணை திறந்து பார்த்தால், திரையில் படத்தின் டைட்டில் ஓடிக்கொண்டிருந்தது. படம் பார்க்க ஆயத்தமானோம்...!!!
சரி! படம் எப்படி? அதான் தலைப்பு சொல்லுதே...(தலைப்பை படிக்கும் போது சரியான மாடுலேஷனில் படிக்கவும்).
Very ஹாப்பி பர்த்டே 'தல'
பிற்சேர்க்கை - 06/May/2010
பாத்தீங்களா நான் கண்டது போலவே தினகரன் விமர்சகரும் இன்று கண்டிருக்கிறார்.
சரியாக சொன்னாய் அமைச்சரே ! கககபோ !
ReplyDeletethanka mudiyala
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
ReplyDeleteகனவுலயாவது நல்லா இருந்திச்சே
ReplyDeleteகேபிள் சங்கர்
கேபிள் சங்கர்,
ReplyDeleteதிருத்தம்...கனவுல மட்டும் தான் நல்லா இருக்கும். ;)
Very interesting
ReplyDeleteநானும் பார்த்தேன். நல்ல இருக்கு. ஹாங்.. நீங்க ட்ரைலர் பத்தி தான சொல்றீங்க..
ReplyDelete//நானும் பார்த்தேன். நல்ல இருக்கு. ஹாங்.. நீங்க ட்ரைலர் பத்தி தான சொல்றீங்க..//
ReplyDelete(பாண்டு ஸ்டைலில்) ஹாங்...