Friday, May 26, 2006

மதுமிதா. ஆமா! என்னய வெச்சு காமெடி கீமெடி ஏதும் பண்ணலியே?வலைப்பதிவர் பெயர்: சீனு

வலைப்பூ பெயர் : கோழி கிறுக்கல், நான் சிரித்துக் கொண்டே அழுகின்றேன்

சுட்டி(url) : http://jeeno.blogspot.com, http://sirippu.blogspot.com

ஊர்: திருப்பத்தூர் (வேலூர் மாவட்டம்)

நாடு: இந்தியா

வலைப்பூ அறிமுகம் செய்தவர்: சிவா

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : ஏப்ரல், 30, 2004 - வெள்ளிக்கிழமை - ஒரு சுபயோக சுபதினத்தில் (அல்ல என்று நினைக்கிறேன்)

இது எத்தனையாவது பதிவு: 43

இப்பதிவின் சுட்டி(url): http://jeeno.blogspot.com/2006/05/blog-post_114864490405041429.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: தமிழ். கடைசியாக கல்லூரி பரீட்சையில் எழுதியது. வேறு எங்கேயும் தமிழை காணவில்லை. சரி! அப்புறம் தமிழே மறந்திடும்னு நினைச்சப்போ, சிவா சொல்லி இந்த தளம் தெரிந்தது.

சந்தித்த அனுபவங்கள்: நான் பெரும்பாலும் நல்ல விசயம் சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் ஆரம்பித்தேன்.

பெற்ற நண்பர்கள்: பெரும்பாலும் முகமற்ற நண்பர்கள்.

கற்றவை: அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: என்ன வேண்டுமானாலும் எழுதலாம். அது படிக்கிறவர் தலையெழுத்து ;) (ஆனால், நாகரீகமாக எழுதவேண்டும் என்பது எனக்கு நானே போட்டுக் கொண்ட வேலி!)

இனி செய்ய நினைப்பவை: தினமும் நான் காண்பவையையும், கேட்பவையையும், தெரிந்ததையும், அறிந்ததையும் கிறுக்கவேண்டும்.

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: "This Glass Is Half Full"-ன்னு நினைக்கிற பார்ட்டி. இப்போதைக்கு நாத்திகவாதி. அப்படியே இருப்பேன் என்று நம்புறேன். நகைச்சுவை ரொம்ப ரொம்ப பிடிக்கும். என்னைச்சுற்றி இருப்பவர்களை சந்தோஷமாக வைத்திருக்க முயற்சிப்பேன்.

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்:
இந்த அறிவியல் அளித்திருக்கும் இந்த இணையத்தை ஆக்கத்திற்காக பயன்படுத்தவேண்டும் என்பதே என் விருப்பம். தேவையில்லாமல், தனி மனித துவேசங்களும், சாதி மதத் தூற்றல்களும் தான் இருக்கின்றன. Of course, கலகம் பிறந்தால தான் நியாயம் கிடைக்கும் என்றால் பரவாயில்லை. ஆனால், இங்கே தான் தமிழனின் உண்மையான முகம் வெளிப்பட ஆரம்பித்து இருக்கிறது. இதை முளையிலேயே கிள்ளி எரியவேண்டும். (அட! நீங்க கேட்டப்புறம் தான் என்னைப்பற்றி ஒரு முறை யோசிக்க நேரமும், காலமும் கிடைத்தது. நன்றி!!). Life is Once! Live it...Peacefully!!

4 comments:

 1. இந்த அறிவியல் அளித்திருக்கும் இந்த இணையத்தை ஆக்கத்திற்காக பயன்படுத்தவேண்டும் என்பதே என் விருப்பம். தேவையில்லாமல், தனி மனித துவேசங்களும், சாதி மதத் தூற்றல்களும் தான் இருக்கின்றன. Of course, கலகம் பிறந்தால தான் நியாயம் கிடைக்கும் என்றால் பரவாயில்லை. ஆனால், இங்கே தான் தமிழனின் உண்மையான முகம் வெளிப்பட ஆரம்பித்து இருக்கிறது. இதை முளையிலேயே கிள்ளி எரியவேண்டும்.

  ஆழமான கருத்து. இதையேதான் நானும் சொல்லியிருக்கிறேன். வலைப்பதிவாளர்கள் தாங்கள் அனைவரும் தமிழர்கள் என்பதை மறந்துவிடாமல் துவேசத்தை ஒதுக்கி தமிழ் வளர்க்க இணையத்தை ஒரு கருவியாகக் கொண்டு பாடுபடுவோம்.

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. வேணா..விட்டுறுங்க..அப்புறம் அழுதுறுவேன்..

  கொஞ்சம் இங்க வந்து பாருங்க..

  http://nilavunanban.blogspot.com/2006/05/blog-post_25.html

  ReplyDelete
 3. ஆஹா...அதே தலைப்பு.

  உக்காந்து யோசிப்பீங்களோ?

  ReplyDelete