Thursday, June 22, 2006

"செல்லம்மாள்" பாரதி

நேற்று அதிகாலை House Drop-ல் வீட்டிற்கு போகும் வழியில், எல்லை இல்லாத, புத்தி எங்கெங்கோ சுற்றி மாகாகவியிடம் வந்து நின்றது. உடனே கைபேசியில் ஒரு reminder வைத்துவிட்டேன். பாரதியைப் பற்றி எத்தனையோ படைப்புகள். "பாரதி" என்றொரு திரைப்படம். மற்றும் இன்ன பிற இத்யாதிகள். ஒவ்வொரு முறை இதைப் பார்க்கும் பொழுதும் என்னுள் எழுந்த கேள்வி, பாரதியின் மனைவி செல்லம்மாள் பற்றி.


எனக்கு பாரதியை திரைப்படம் மற்றும் ஊடகங்கள் வழியாக மட்டுமே தெரியும். அதனால் எனக்குத் தெரிந்ததை எழுதுகிறேன். கண்டிப்பாக பிழையிருக்கும். சுட்டிக் காட்டவும். பாரதியை மிகவும் மதிப்பவன் நான். அதற்காக நான் நினைப்பதை சொல்லாமல் இருக்க முடியாது. (அடச்சே! நிலைமையை பார்த்தா எல்லத்துக்கும் ஒரு disclaimer போட வேண்டியிருக்கே!!).


பாரதியை இருக்கும் வரை யாரும் மதிக்கவில்லை. சமுதாயம் அவன் இறந்த பிறகு வருத்தப்பட்டது. வருத்தப்படுகிறது. ஒரு வேளை பாரதி இப்பொழுது இதே மண்ணில் இருப்பதாய் வைத்துக் கொள்ளுங்கள். இன்னமும் அவனுக்கு அதே நிலைமை தானா? அதே treatment தானா? எனக்குத் தெரிந்த வரை விடை "ஆமாம்" என்பதே. அது சமுதாயத்தின் குற்றமல்ல. பின்னே குடும்பம், குழந்தைகளைப் பற்றி கவலைப்படாமல் கவிதை எழுதுவதும், பாடல் எழுதுவதும், நாட்டிற்காக உழைப்பதும் எப்படி சோறு போடும். நான் பாரதியை குறை கூறுகிறேன். காரணம், பாரதி ஒரு bachelor-ஆ இருந்திருந்தால் எப்படியோ வாழட்டும். ஆனால் சிறுவயதில் கல்யாணம் செய்வித்து, குடும்பபாரம் சுமப்பவர்கள் குடும்பத்தை கவனிக்காமல் இருப்பது தப்பென்று நினைக்கிறேன். பின் செல்லம்மாள் திட்டாமல் என்ன செய்வாள்.


பாரதி ஒரு கவிஞனாக, தமிழனாக, இந்தியனாக, மனிதனாக வேண்டுமானால் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், ஒரு கணவனாக, தந்தையாக அவர் வெற்றிப் பெற்றிருக்கிறாரா? ஒரு சாதாரண பிரஜையாக நினைத்துக் கொள்ளுங்கள். சுப்பிரமணி பாரதி என்னும் ஓர் மனிதன், செல்லம்மாள் என்ற மனைவி, இரண்டு பெண் குழந்தைகள். இவையே பாரதியின் குடும்பம். அவரின் தினசரி அலுவல் என்ன? தோட்டத்தில் நண்பர்களுடம் அமர்ந்து கொண்டு "இன்று இலக்கியம், அரசியல் எதுவும் வேண்டாம். வேறு ஏதாவது பேசுவோம்" என்று தான் தன் அலுவல்களை(?) பார்க்கிறார். தன் குழந்தைகள் பசியால் வாடும்பொழுது அதனைப் பற்றி கவலைப்படாமல், தூரத்தில் பிஜி தீவில் வாடும் இந்தியர்களுக்காக கண்ணீர் வடிக்கிறார். "உன் கணவன் ஒரு ஏழை. உன் குடும்பம் பசியால் கிடந்து சாகவேண்டும் என்பது உன் விதி. ஆனால், பாரதி ஏழை இல்லை. அவன் ஒரு உயர்ந்த இடத்தில் அமர்ந்து கொண்டு இந்த உலகை பார்க்கிறான்." என்கிறார். எனக்கென்னவோ இது MPD என்றே தோன்றுகிறது.


பாரதியின் கவிதைகளை பொருத்தவரை சொல்லப் போனால், பாரதி அந்த காலத்து கானா கவிஞர். வெண்பாக்களை பாடல்களாக வடித்த காலத்தில், அனைவருக்கும் புரியவேண்டும் என்று பேச்சுத் தமிழில் பாடல்களை, கவிதைகளை கொடுத்தவர். அதனாலேயே பலர் குறை கூறினர். என்ன இப்பொழுது அந்த கவிதைகள் "தூய" தமிழில் இருப்பதால் அவை மதிக்கப்படுகின்றன. உதா, அந்த காலத்து டப்பாங்குத்தான "மச்சானப் பாத்தீங்களா", இப்பொழுது classical ஆகவில்லையா?


செல்லம்மாள் என்ன பாவம் செய்தாள், இப்படி ஒருத்தருக்கு மனைவியாய் வாய்த்து துன்பப்பட? கலப்புத் திருமணம் பற்றி வாய் கிழியப் பேசுபவர்களுக்கு மத்தியில் தன் மகளுக்கு கலப்புத் திருமணம் செய்விக்க ஆசைப்பட்டார். ஆனால், செல்லம்மாள் அதனை தவிர்பதற்காக பிறந்தகம் சென்றாள். செல்லம்மாள் பார்வையில், அது தவறாகாது (இது நடந்தது சென்ற நூற்றாண்டு என்பதை நினைவில் கொள்க).


"நான் எத்தனையோ முறை உன்னை கை நீட்டி அடித்திருக்கிறேன்", "புருஷான்னா ஆம்படையாளை அடிக்கத் தான் செய்வா" என்று செல்லம்மாவின் பதில், அந்த காலகட்டத்தில் இருந்த பெண்ணடிமைத்தனத்தை வெளிச்சம் போட்டு காண்பிக்கிறது.


இதுவே பாரதி ஒரு கவிஞனாக, சுதந்திர போராட்ட வீரனாக இருந்தத்னால் தானே நாம் இத்துனை negative-களுக்கு மத்தியிலும் பாரதியை மதிக்கிறோம். இந்த extra fittings இல்லை என்று நினைத்துக் கொள்ளுங்கள், நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது புரியும்.


"காலத்தை மீறி கனவு காண்பவர்கள் சக கால மனிதர்களாலேயே ஒதுக்கப்படுவார்கள்" என்று பாரதி உணர்ந்திருந்தால் செல்லம்மாள் இப்படி கஷ்டப்படவேண்டியிருந்திருக்காது. உணராததால் நமக்கு ஒரு பாரதி கிடைத்தார். (இதுக்குப் பேர்தான் Mutually Exclusive-வோ?)

10 comments:

 1. //என்று பாரதி உணர்ந்திருந்தால் செல்லம்மாள் இப்படி கஷ்டப்படவேண்டியிருந்திருக்காது.// உணராமல் இல்லை. உணர்ந்த பின்னும் சராசரியாக இருக்க அவரால் முடியவில்லை என்றே நான் நினைக்கிறேன். அதற்காக குடும்பத்தில் அவரின் போக்கு சரி என்று சொல்லவில்லை. 'பாரதி' படம் பார்த்தபோது நீங்கள் சொல்வது போல் பல இடங்களில் எனக்கும் பாரதி மேல் கோபம் வந்தது.

  திருமணம் தனக்குத் தேவையா என்று யோசிக்கத்தெரியாத சிறுவயதிலேயே திருமணம் செய்து வைக்கப்பட்டது அவரின் தவறா நம் சமூகத்தின் தவறா? - இப்படியும் யோசிக்கத்தோன்றுகிறது!

  ReplyDelete
 2. தேசத்துக்காக வாழ்வை அர்ப்பணித்தவர்களின் தனிப்பட்ட வாழ்வு பெரும்பாலும் சிறந்ததாக இருப்பதில்லை.தேசத்தை கவனிப்பவன் குடும்பத்தை கவனிக்க முடியாது(சில விதிவிலக்குகள் தவிர)

  பாரதியின் செல்லம்மா கண்ணமாவாக நம்முடன் நீங்காது வாழ்கிறாள்.இதை விட சிறந்த பேறு எந்த பெண்ணுக்கு கிடைக்கும்?தமிழ் உள்ளவரை செல்லமாவின் பெயர் நீங்காது வாழும்

  ReplyDelete
 3. ஜீனோ,

  'பாரதி' திரைப்படத்தில் காட்டியது போல செல்லம்மாள் பாரதிக்கு வாழ்க்கைப்பட்டதால், காலம் முழுவதும் துன்பப்பட்டார் என்பது உண்மையில்லை. பாரதி மறைந்த பின்பு செல்லம்மாள் எழுதியதை இங்கே காணலாம்:

  இன்று பிறந்தனன்

  அதிலிருந்து:

  "திடீர் திடீர் என்று எண்ணங்கள், புதிய புதிய கொள்கைகள், புதிய புதிய பாட்டுக்கள், அப் பாட்டுக்களுக்குப் புதிய புதிய மெட்டுக்கள் - எனது இரு காதுகளும், மனமும், ஹிருதயமும் நிரம்பித் ததும்பும் இந்த ஒரு பாக்கியம் நான் பெற்றேன்.இம்மாதிரி பாக்கியம் பெற எத்தனை கோடி ஜென்மம் வேண்டுமானாலும் திரும்பத் திரும்பப் பெறத் தயாராக இருக்கிறேன்."

  நன்றி,

  ஸ்ரீகாந்த்

  ReplyDelete
 4. பாரதி படம் உண்மையில் முழுவதும் உண்மையைக் கொண்டிருக்கவில்லை. அதில் பல விஷயங்கள் பொய்யானவை. பாரதி பற்றிய தவறான பிம்பங்களை மக்கள் மனத்தில் ஏற்படுத்தவேண்டும் என்பதற்காகச் செய்யப்பட்டவைகள் என்று எனக்கு சந்தேகம்.

  பாரதியார் தன் மனைவியை கை நீட்டி அடித்திருப்பார் என்பது நம்பும்படி இல்லை. அவருடைய வாழ்க்கையில் நடந்ததாக நான் படித்தது பின்வருமாறு:

  பாரதியார் தன் நண்பர்களுடன் வீட்டில் உணவருந்திக்கொண்டிருக்கிறார். அப்போது பெண்களைப் பற்றி விளையாட்டுப் பேச்சில் சற்று ஏளனத் தொனியில் பாரதியார் கூறிவிடுகிறார். மனைவியான செல்லம்மா பெண்கள் எல்லோரும் பராசக்தியின் வடிவம் என்று சொல்லும் நீங்கள் இப்படி சொல்கிறீர்களே என்று கேட்டவுடன் ஸ்தம்பித்த பாரதி, சடாரென்று உணவிலிருந்து எழுந்து, நண்பர்கள் முன்னிலயில் தன் மனைவியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டாராம்.

  ஒரு மனிதரிடமிருந்து கற்றுக்கொள்ள எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கும்போது, தேடி தேடிக் கண்டுபிடித்து, அல்லது கற்பனை செய்தாவது குற்றம் சொல்லுவது சரியல்ல.

  ஏற்கனவே அவர் ஒரு குறிப்பிட்ட ஜாதியில் பிறந்துவிட்டார் என்பதற்காக அவரை எவ்வளவு தாழ்த்த முடியுமோ, அவ்வளவு தாழ்த்த மக்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

  இப்படியே விட்டால் வ உ ஸி போன்ற மேன்மக்களையும் தாழ்த்த இந்தக்கூட்டம் தயங்காது.

  ReplyDelete
 5. பாரதி படம் உண்மையில் முழுவதும் உண்மையைக் கொண்டிருக்கவில்லை. அதில் பல விஷயங்கள் பொய்யானவை. பாரதி பற்றிய தவறான பிம்பங்களை மக்கள் மனத்தில் ஏற்படுத்தவேண்டும் என்பதற்காகச் செய்யப்பட்டவைகள் என்று எனக்கு சந்தேகம்.

  பாரதியார் தன் மனைவியை கை நீட்டி அடித்திருப்பார் என்பது நம்பும்படி இல்லை. அவருடைய வாழ்க்கையில் நடந்ததாக நான் படித்தது பின்வருமாறு:

  பாரதியார் தன் நண்பர்களுடன் வீட்டில் உணவருந்திக்கொண்டிருக்கிறார். அப்போது பெண்களைப் பற்றி விளையாட்டுப் பேச்சில் சற்று ஏளனத் தொனியில் பாரதியார் கூறிவிடுகிறார். மனைவியான செல்லம்மா பெண்கள் எல்லோரும் பராசக்தியின் வடிவம் என்று சொல்லும் நீங்கள் இப்படி சொல்கிறீர்களே என்று கேட்டவுடன் ஸ்தம்பித்த பாரதி, சடாரென்று உணவிலிருந்து எழுந்து, நண்பர்கள் முன்னிலயில் தன் மனைவியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டாராம்.

  ஒரு மனிதரிடமிருந்து கற்றுக்கொள்ள எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கும்போது, தேடி தேடிக் கண்டுபிடித்து, அல்லது கற்பனை செய்தாவது குற்றம் சொல்லுவது சரியல்ல.

  ஏற்கனவே அவர் ஒரு குறிப்பிட்ட ஜாதியில் பிறந்துவிட்டார் என்பதற்காக அவரை எவ்வளவு தாழ்த்த முடியுமோ, அவ்வளவு தாழ்த்த மக்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

  இப்படியே விட்டால் வ உ ஸி போன்ற மேன்மக்களையும் தாழ்த்த இந்தக்கூட்டம் தயங்காது.

  ReplyDelete
 6. பின்னூட்டமிட்ட அன்பர்கள் அனைவருக்கும் நன்றி.

  //"திடீர் திடீர் என்று எண்ணங்கள், புதிய புதிய கொள்கைகள், புதிய புதிய பாட்டுக்கள், அப் பாட்டுக்களுக்குப் புதிய புதிய மெட்டுக்கள் - எனது இரு காதுகளும், மனமும், ஹிருதயமும் நிரம்பித் ததும்பும் இந்த ஒரு பாக்கியம் நான் பெற்றேன்.இம்மாதிரி பாக்கியம் பெற எத்தனை கோடி ஜென்மம் வேண்டுமானாலும் திரும்பத் திரும்பப் பெறத் தயாராக இருக்கிறேன்."//

  இது செல்லம்மாளின் பெருந்தன்மையையே காட்டுகிறது. அந்த காலத்து பெண்கள் பெரும்பான்மையாக இதே கருத்தைத் தான் சொல்வார்கள். மாறாக யாரும் கணவனை திட்டித் தீர்ப்பதில்லை. தங்களின் விதியென்றே நினைத்துக் கொள்கிறார்கள்.

  //ஒரு மனிதரிடமிருந்து கற்றுக்கொள்ள எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கும்போது, தேடி தேடிக் கண்டுபிடித்து, அல்லது கற்பனை செய்தாவது குற்றம் சொல்லுவது சரியல்ல.
  //

  Muse. நான் தான் சொன்னேனே. இது பாரதியை குறை சொல்வதற்காக பதியப்படவில்லை. இவை என் கருத்துகள் மட்டுமே. பாரதி மட்டும் என்ன விமரிசனத்துக்கு அப்பாற்பட்டவரா? அவரின் தியாகத்தின் நிழலின் அருகில் கூட நாம் நெருங்க முடியாது. ஆனால், அதற்காக அவரை குறை சொல்லக் கூடாது என்பது எவ்வாறு சரியாகும்?

  //ஏற்கனவே அவர் ஒரு குறிப்பிட்ட ஜாதியில் பிறந்துவிட்டார் என்பதற்காக அவரை எவ்வளவு தாழ்த்த முடியுமோ, அவ்வளவு தாழ்த்த மக்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
  //

  இந்த கேள்வியை எதிர்ப்பார்த்திருந்தேன். நான் எழுதும் பொழுது எனக்கு பாரதியின் சாதியெல்லாம் கண்ணுக்குத் தெரியவில்லை. அவர் சாதிக்கெல்லாம் அப்பாற்பட்டவர். நீங்கள் தான் எனக்கு நியாபகப்படுத்துகிறீர்கள். (தயவு செய்து சாதியைப் பற்றின விவாதமெல்லாம் இங்கு வேண்டாமே...). அப்படியே அவரை மற்றவர் தாழ்த்தினாலும் (என்னையும் சேர்த்து, உங்கள் பார்வையில்), சூரியனை வெறுங்கையால் மறைக்க முடியாதென்று விட்டுத் தள்ளுங்களேன்.

  ReplyDelete
 7. There is a problem we have in common. We as fans/admirers (few have a thought they are critics) analyze a person beyond the reason of popularity.

  Like asking Maniratnam's son, "who is your favourite actor ?"... Worrying about Ajith's drinking habits.. Questioning Gandhiji's personal habits..

  One Word - Unnecessary.

  I know it is hard, but we should control and direct the thoughts about a celebrity. Give them some peace.. I would blame the media for focussing too much on the other interests of the celebrity.

  Barathiyar Kanja adichaara enbadhu namakku mukkiyam illadha vishayam...
  "Kadamai Purivaar, Inburuvaar !" appdinnu sollittu pona vishayaththai Aaraynja podhum..

  I appreciate your Post. But just letting you know about what I think.

  ReplyDelete
 8. Thanx Keerthi.

  //Like asking Maniratnam's son, "who is your favourite actor ?"... Worrying about Ajith's drinking habits.. Questioning Gandhiji's personal habits..//

  I too accept that these things are unnecessary, as far as these can be categorised as just entertainment (not Gandhi's).

  //I know it is hard, but we should control and direct the thoughts about a celebrity. Give them some peace.. I would blame the media for focussing too much on the other interests of the celebrity.//

  ஆனால், இது மேற்கத்திய பாப்பரசி கலாச்சாரம் அல்லவே. நம் நாட்டைப் பொருத்த வரை, தனி மனித ஒழுக்கம் என்பது பொது வாழ்க்கைக்கும் தேவையானதாக இருக்கிறதே. மேற்கத்திய நாட்களில் Celebrity Worship-ஐ ஊக்குவிக்கிறார்கள். காரணம், Celebrity Worship தனி மனித முன்னேற்றத்திற்கு உதவுகின்றது என்பதே அதற்கு காரணம். அதன் படி பார்த்தால் ஒரு Celebrity பற்றி விமரிசிப்பது தவறாகது என்பதே என் கருத்து.

  //Barathiyar Kanja adichaara enbadhu namakku mukkiyam illadha vishayam...//

  கடவுளே ஆனாலும் தவறு செய்தால் தண்டனை என்று இந்து மதம் சொல்கிறது. அதன் படி பார்த்தாலும் பாரதியார் after all ஒரு மனிதர் தானே. கடவுள் அல்லவே.

  ReplyDelete
 9. சீனு,
  இப் பின்னூட்டம் தங்களின் பதிவு பற்றியதல்ல. மன்னிக்கவும்.

  தங்களை ஆறுப்பதிவு போடுவதற்கு நான் அழைத்திருக்கிறேன். என் அழைப்பை ஏற்று நேரம் கிடைக்கும் போது ஆறுப்பதிவு போடுவீர்களென நம்புகிறேன்.

  நன்றி.

  அன்புடன்
  வெற்றி

  ReplyDelete