இந்தப் பதிவு ஸ்ரீதர் அவர்களின் பதிவுக்கு ஒரு விளக்கம் கொடுப்பதற்காக.
கதை 2100-ல் நடப்பதாக நினைக்கிறேன். இந்த உலகில் மனிதன் தன் பாதுகாப்புக்காக இயந்திர போலீஸை உருவாக்குகிறான். அது தன்னை காப்பாற்றிக் கொள்ளும் சக்தியையும் சேர்த்து அதற்கு வழங்குகின்றான். ஒரு கட்டத்தில் இந்த உலகம் அழிந்து சூரிய ஒளியும் இல்லாமல் போய்விடுகிறது. அந்த இயந்திர போலீஸுக்குத் தான் தன்னை காப்பாற்றிக் கொள்ளத் தெரியுமே. அது வாழ உஷ்னம் தேவைப்படுகிறது. சூரிய ஒளி இல்லாததால் அது மனிதனின் உடம்பில் இருந்து வரும் உஷ்னத்தை உபயோகித்துக் கொள்கிறது. அதனால், மனிதன் பிறந்ததும் (அல்லது உருவாக்கப்பட்டதும்), அவனை கோமா நிலையில் வைத்திருந்து, அவன் உடம்பிற்கு ஊட்டச்சத்தாக + கெடாமல் இருக்க சுற்றியிருக்கும் நீர் போன்ற திரவம், மற்றும் அவன் உடம்பில் இயந்திரங்களால் அவன் மூளையை இயக்கும் சாதனங்கள். ஆனால் அவன் தான் 20-வது நூற்றாண்டில் இருப்பதாகவும், சாதாரண வாழ்க்கை வாழ்வது போலவும், தினமும் வேலைக்கு சென்று வருவது போலவும், ஒரு மாய உலகில் (அது தான் Matrix) உலவ வைக்கிறார்கள். அதில் நம் கதாநாயகன் நியோ ஒரு hacker. அதனால், Mophias (மொட்டைத் தலை) அவனை வேண்டி அழைத்து தன் குழுவில் சேர்க்கிறான். Mophias என்பவன் தன் குழுக்களோடு மற்ற மனிதர்களை விடுவிக்க போராடும் ஒரு தலைவன். அப்பொழுது தான் இந்த உலகில் உள்ள மக்கள் யாவரும் எவ்வாறு matrix-ல் இருக்கிறார்கள் என்று விளக்குகிறார். இது தான் படத்தின் அருமையான கட்டம். அதற்காகத்தான் Neo-விற்கு இரு மாத்திரைகள், ஒன்று சிகப்பு மற்றொன்று பச்சை. சிகப்பு அவன் நினைவை திரும்ப வைப்பதற்கு (இது one-way), மற்றொன்று அவன் Mophias-ஐ சந்தித்ததை மறந்து மீண்டும் தன் பழைய நிலைக்கே கனவு என நினைத்து திரும்புவது. இது முதல் பாகம். (மற்ற பாகங்கள் சுத்த பேத்தல்).
இந்த படத்தில் சிலிர்க்க வைப்பது, மனிதன் digital-ஆக மாறி தொலைபேசி வழியாக மறுமுனையை அடைவது, சண்டைக்காட்சிகள் + கிராபிக்ஸ், மூளையில் upload செய்யப்படும் சண்டை மற்றும் இத்யாதி செயலிகள் (softwares), illusion-ல் ஸ்பூன் போன்றவை வளைவதும் அதன் காரணங்களும், Neo எவ்வளவு வேகம் என்று காட்ட காற்றை கிழிக்கும் துப்பாக்கி குண்டுகள் போன்றவை.
இது நான் அறிந்த Matrix கதை. இதில் பிழையிருந்தால் கூறவும். இதைப் புரிந்து கொள்வதற்கு சுமார் 6 முறை பார்த்தேன்.
Wednesday, July 26, 2006
Monday, July 10, 2006
சச்சின் என்ன பெரிய்ய்ய்ய்ய சச்சின்?
மேலே "சச்சினும் சென்செக்ஸும்"...(க்ளிக்கி பாருங்க)
இப்பொழுது மறுபடியும் இலங்கை கிரிக்கெட் அணி பழைய ஃபார்முக்கு வந்துவிட்டதாகத் தெரிகிறது(!?). காரணம். நேற்றுமுன்தினம் நெதர்லாந்து அணியிடம் பேட் செய்து 443 ஓட்டங்கள் எடுத்திருக்கிறது. இதில் இலங்கையின் நட்சத்திர வீரர் ஜெயசூர்யா 157 ஓட்டங்கள் எடுத்திருக்கிறார். நிச்சயம் கிரிக்கெட் உலகில் தலை சிறந்த ஆட்டக்காரர்களுள் ஒருவர். அதே போல, நிறைய ஆட்டக்காரர்கள் இருக்கிறார்கள். ஆனால், இவர்கள் எல்லோரையும் விட தூரத்தில் உயர்ந்த இடத்தில் இருப்பது என்னுடைய favourite சச்சின். சிறிய வயதில் அவ்வளவாக கிரிக்கெட் பார்க்க மாட்டேன். பின் தமிழக வீரர் சிறீகாந்த் வந்த பிறகு சற்று பார்க்க ஆரம்பித்தேன். அப்பொழுது வீட்டில் தொலைக்காட்சி பெட்டி இல்லை. பின் வீட்டில் ஒரு கருப்பு வெள்ளை தொலைக்காட்சிப் பெட்டி வாங்கினார்கள். அப்பொழுது உலகக் கோப்பை நடந்தது. எனக்குத் தெரிந்து நான் பார்த்த முதல் ஆட்டம் இந்தியா (எ) ஜிம்பாப்வே. கபில்தேவ் துவக்க ஆட்டக்காரர். வந்து ஒரு ஆறு மற்றும் ஒரு நான்கு ஓட்டங்கள் எடுத்து சென்றார். இந்தியா அந்த ஆட்டத்தில் சற்றே கடினமாக வெற்றி பெற்றது.
அதற்குப் பின் கூட கிரிக்கெட்டில் ரொம்ப ஆர்வம் எல்லாம் இல்லை. நேரம் கிடைக்கும் பொழுது (இப்பொழுது கால்பந்து பார்ப்பது போல) ஆர்வமில்லாமல் தான் பார்த்தேன். அப்பொழுது சச்சின் என்றொரு பையன் வந்தான். முதல் ஆட்டத்தில் 'டக்' (15-நவம்பர்-1989-ல் பாகிஸ்தான் உடன்). பின் ஒரு நாள் ஆட்டங்களில் ஒரு இடை நிலை ஆட்டக்காரர் (middle order batsman). அப்பொழுது யாரும் சச்சினை பாராட்டவும் மாட்டார்கள் திட்டவும் மாட்டார்கள், 1994 மர்ச் 27-ல் ஆக்லாந்தில், நியூசிலாந்துக்கு எதிராக ஈடன் பார்க்-ல், தன்னுடைய 70வது ஆட்டத்தில், 49 பந்துகளில் 82 அடிக்கும் வரை. அவற்றில் 72 ஓட்டங்கள் பவுன்டரிகளாக வந்தவை. அந்த ஆட்டம் எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. கபிலும், சிறீநாத்தும் நியூசிலாந்தை 142 ஓட்டங்களுக்கு சுருட்டினர். நியூசிலாந்துக்கு ஆட்டம் முடிந்து பெவிலியன் நோக்கி சென்று கொண்டிருக்கும் பொழுது சச்சின் அசாரிடம் தான் துவக்க ஆட்டக்காரராக இறங்குவதாக கூறினார். இதை வர்ணனையாளர் கூறிக்கொண்டே வந்தார். அந்த ஆட்டம் தான் தலைவரின் வாழ்க்கையில் திருப்பு முனை. அந்த ஆட்டம் 23.2 ஓவரிலேயே முடிந்தது. அதற்கு மறுநாள் தினமலரில் விளையாட்டுச் செய்தியில் வந்த செய்தி "ஸ்ரீகாந்த்தாக மாறினார் டெண்டுல்கர்".
பின் அந்த ஆட்டத்திற்கு பிறகு சச்சின் ஃகிராப்பில் ஏறுமுகம் தான். தன்னுடைய 79வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தான் தன் முதல் சதத்தை (130 பந்துகள்) பதிவு செய்தார். அதில் இந்தியா 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது. அப்பொழுது ஆரம்பித்தது இன்றும் தொடர்கிறது.
சச்சின் - தணித்துவம்
கிரிக்கெட் ஆட்டத்தில் எவ்வளவோ பெரிய ஜாம்பவாண்கள் இருந்தாலும், சச்சின் மட்டும் ஏன் மற்றவரிடம் இருந்து வேறுபடுகிறார்? கங்குலி 100 அடித்து 'அவுட்' ஆனாலும், "இன்னும் ஆடியிருக்கலாமோ?" என்று ஆதங்கப்படுபவர், சச்சின் "0" ஆனால், "ப்ச்...பாவம்" என்று தான் சொல்வார்கள். சச்சின் மற்ற வீரர்களிடமிருந்து தணித்துவம் பெற காரணங்கள் என்ன?
சச்சின் ஆட ஆரம்பித்த பொழுது இந்திய அணி ஒன்றும் பெரிய அணி அல்ல. அதனால் முழுக்க முழுக்க சச்சினையே சார்ந்து இருந்தது இந்திய அணி. 100 கோடி மக்களின் பாரத்தையும் ஒருவனே சுமக்க வேண்டியது ஆயிற்று. இது நிதர்சனமான உண்மை. நீங்கள் மைதானதிற்கு போகிறீர்கள். சுற்றி இருப்பவர்கள் உங்களை மட்டுமே நம்பி இருக்கிறார்கள். நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு ஓட்டத்திற்கும் ஆரவாரம். நீங்கள் அடிக்கும் 4-க்கும் 6-க்கும் அப்படி ஒரு பரவசம். நீங்கள் உண்மையாகவே அவர்களுக்காகவேனும் விளையாட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுமா? இல்லையா? அந்த pressure-ல் விளையாடும் பொழுது சிறு தவறு நடந்தாலும் நூறு கோடி இதயங்களை நொடியில் நொறுக்கிவிடும். எனக்குத் தெரிந்து உலகத்தில் அதிகமாக ஃபிரஷர் கொடுக்கப்பட்ட மனிதர் சச்சினாகத்தான் இருக்க முடியும்.
மிஸ்டர் கிளீன்
இந்தியாவில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான ஒரு போட்டியில், அசாரும், ஜடேஜாவும் சேர்ந்து விலைபோய்விட்டார்கள் என்று பயிற்சியாளர் அன்ஷுமன் கெய்க்வாட் சச்சினிடம் கூறினாராம். சச்சின், "நான் இருக்கிறேன். கவலைப்படாதீர்கள்" என்று சொல்லியிருக்கிறார். மறுநாள் ஆட்டத்தில் அசாரும், ஜடேஜாவும் ரன்-அவுட் ஆக(?!), சச்சின் சதம் அடித்து வெற்றியை ஈட்டுகிறார். இந்த செய்தி அன்று இந்தியா டுடே-வில் வந்தது. (இதில் ஜடேஜாவின் பாணி தான் கிளாசிக். அதாவது அவுட் ஆக மாட்டார். ஆனால், மெதுவாக, ஆமை வேகத்தில் விளையாடி அணியின் ஒட்டுமொத்த ரண் விகிதத்தை கட்டுப்படுத்திவிடுவார்). அணியில் யார் விலை போனாலும் சச்சின் விலை போகாதது, மற்றும் தன் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையிலும் அவர் மிஸ்டர் கிளீன்-ஆகவே இருக்கிறார். கங்குலிக்கு சச்சின் போல புகழடைய ஆசை. சச்சின் தன் குடும்ப வாழ்க்கையில் மிஸ்டர் கிளீன். அந்த விடயத்தை வைத்து தான் கங்குலி நக்மாவை கழட்டிவிட வைத்தார்கள். டாரல் ஹார்ப்பர் முதல் ஸ்டீவ் 'ஃபக்'னர் வரை யார் யாரோ சச்சினை களங்கப்படுத்த முயன்றும் முடியவில்லை. மேலும் எந்த பிரச்சிணையிலும் தலையிடாமல், கரும்புள்ளி இருக்காமல் பார்த்துக் கொள்வது சச்சினின் ஸ்பெஷாலிட்டி (இது ஒரு வகையில் சுயநலமும் கூட. ஆனால், இதுவும் தேவையானதே).
சேர்க்கை @ 05-Feb-2014
2006-ல் எழுதியது இந்த கட்டுரை. இன்னைக்கு அதனை பற்றின ஒரு வீடியோ பார்த்தேன். அது இங்கே
நாகரீகம்
சச்சின் எந்த நாட்டுக்கு போனாலும் அனைத்து நாட்டவரும் அவரையே குறிவைப்பார்கள். ஆஸ்திரேலியாவில் 3 டெஸ்ட் ஆட்டங்களில், மொத்தம் 6-ல் 3 இன்னிங்க்ஸில், சச்சினுக்கு டேரல் ஹார்ப்பர் தவறான முறையில் அவுட் கொடுத்தார். ஒருமுறை பந்து தலைக்கு மேலே போகிறது என்று உட்காரும்பொழுது பந்து தலைக்கவசத்தில் பட்டதற்காக எல்.பி.டபிள்யூ முறையிலும், பந்து மட்டையில் படாமல் பேடில் பட்டு சில்லி போயின்ட்ல் பிடிக்கப்பட்டபொழுதும் காட்ச் என்று அவுட் கொடுத்தார்.
அந்த தொடரில் இந்தியா இன்னும் நெருக்கடி கொடுத்திருக்க முடியும், இந்த தவறான அம்பயரிங் மட்டும் இல்லாதிருந்தால். மேலும், 2001 நவம்பர் 19-ல் தென்னாப்பிரிக்காவின் போர்ட் எலிசபத்தில் நடந்த ஆட்டத்தில் பந்தை துடைத்ததற்காக (சச்சின் பந்தை சேதப்படுத்தமாட்டார் என்பது என் ஆழமான நம்பிக்கை) அவருடன் சேர்ந்து மேலும் ஐந்து பேருக்குத் தடை விதித்தார் நடுவர் மைக் டென்னஸ் (சித்துவின் கமென்ட், "White hen laying black eggs"). இதுவும் சச்சினையே குறி வைத்து செய்ததாகும். ஆனால், ஒவ்வொரு தீர்ப்பும் தனக்கு எதிராக தரப்பட்டபொழுதும் "அம்பையர்களும் மனிதர் தாம், அவர்களும் தவறுகள் செய்வார்கள்" என்று தான் சொன்னார். ஒரே ஒரு முறை தவறான தீர்ப்புக்காக ஒரு வினாடி அம்பையரை முறைத்தார். ஆனால், விளையாட்டின் என்றுமே நிதானம் இழக்காமல் அந்த நாகரீகத்தை கடைப்பிடித்தார் சச்சின்.
Consistent
இது ஒவ்வொரு கிரிக்கெட்டருக்கும் முக்கியமானது மற்றும் கடிணமானதும் கூட. லாராவின் சாதனைகளைப் பார்த்தால், ஒரு வருடம் 2000 ஓட்டங்கள் எடுத்திருப்பார். அடுத்த வருடம் 1000 கூட தாண்டியிருக்க மாட்டார். மீண்டும் அடுத்த வருடம் விசுவரூபம் எடுத்து 2500 எடுத்திருப்பார். ஆனால், சச்சின் அப்படியில்லை. எப்பொழுதும் அந்த consistent-ஐ காப்பாற்றியிருப்பார். ஒரு ஆட்டக்காரராக இருந்த பொழுதும், அணித் தலைவராக இருந்த பொழுதும் சச்சினின் average ஒரே மாதிரியாகவே இருக்கும். லாராவை போலவே தான் ஜெயசூர்யாவும். 1996 உலகக் கோப்பையில் விசுவரூபம் எடுத்தார். பின் அவரின் அணி தளர்ந்து போனதும் ஜெயசூர்யாவிம் ஆட்டத்தில் தொய்வு ஏற்பட்டது. இப்பொழுது மறுபடியும் பின்ன ஆரம்பித்திருக்கிறார். எனக்குத் தெரிந்து இந்த consistent-ஐ அப்படியே காப்பாற்றியிருப்பது சச்சினுக்கு அடுத்தபடியாக சிலரே. அவர்களில் முக்கியமானவர்கள் வாசிம் அக்ரம், ஆடம் கில்கிறிஸ்ட் ஆகியோர். மாத்யூ ஹேடன் என்ன ஆனார்? ஒரு கட்டத்தில் சச்சின் 15 சதத்துடனும், சயீத் அன்வர் 16 சதத்துடனும் இருந்தனர். ஆனால், சச்சின் 31வது சதம் அடிக்கும் பொழுது சயீத் அன்வர் தன் 17வது சதத்தை அடித்தார். (Of course, உடல் ரீதியாக பிரச்சினையால் சில காலம் சச்சினால் பழையபடி ரண்களை அடிக்க முடியவில்லை தான்). பழைய படி aggressive இல்லை என்று கூறுகின்றனர். ஆனால், அவர் ஆட்டம் மிகவிம் பக்குவப்பட்டிருக்கிறது என்பதே உண்மை. இப்பொழுது சேவாக்கை பார்த்தால் நின்றுகொண்டே கம்பு சுத்துவது மாதிரி தான் இருக்கிறது. ஆனால், சச்சினிடம் அந்த classic இருக்கும்.
பேட் பேசும்
சச்சின் தன்னைப் பற்றிய விமரிசனம் எழும்போதெல்லாம், அதற்கான பதில் ஆட்டத்தின் மூலமாகவே இருக்கும். ஜிம்பாப்வேயின் ஹென்றி ஒலங்கா, ஷோயப் அக்தர், ஆண்டி காடிக், ஷேன் வார்னே மறந்திருக்க மாட்டார்கள். சென்ற உலகக் கோப்பையில் சச்சினைப் பற்றி பேசினவர்கள் எல்லோருக்குமே அடி விழுந்தது. ஷோயப் அக்தரின் ஒரே ஓவரில் 18 ரண்கள். மறக்க முடியாதது இங்கிலாந்துக்கு எதிராக ஆண்டி காடிக் பந்தில் leg side-ல் flick செய்து அடித்த சிக்ஸர்.
அந்த சிக்ஸர்...
அதன் விடியோ...
"I would not even dream of becoming a bowler if I have to face this little man. Sachin has to his credit a lot of under-rated test match centuries. Centuries which I have seen on tv, and for which I would have given more money than watching a double or a triple century from Lara or Hayden or Richards." - ஆண்டி காடிக். இது பல முறை நிரூபிக்கப்பட்ட ஒன்று. அதிகம் பேசுபவர்களுக்கு தன் ஆட்டத்தால் அடி.
சார்ஜாவில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியின் இரண்டு சதங்களும் கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம். நாம் மறந்தாலும் மைக்கேல் காஸ்ப்பரோவிச்சும், ஷேன் வார்னேவும் மறக்க பாட்டார்கள். ஆட்டம் முடிந்து வரும் பொழுது பவுன்டரிக்கு வெளியே நின்று சக ஆட்டக்காரர் சித்து "சல்யூட்" அடித்து வரவேற்பார். சச்சின் "என்ன சித்து இது?" என்பது போல பார்த்து சிரித்துக் கொண்டு கேட்பது போல ஒரு படம் Sportstar இதழில் வந்தது. ஷேன் வார்னே தன் மேல் சட்டையை கழற்றி அதில் சச்சினின் கையெழுத்தை வாங்கினார். அந்த தொடர் முந்த பிறகு வார்னே ஒரு பேட்டியில், "சச்சின் இறங்கி வந்து பந்தை அடித்தபொழுது பந்து பேட்டின் விளிம்பில் பட்டது. அது லாங்-ஆன் திசையில் காட்ச் போகும் அன்று நினைத்திருந்தேன். ஆனால் அது சிக்ஸர் ஆனது.", "படுத்துத் தூங்கும் பொழுதும் கணவில் சச்சின் சிக்ஸர் அடிப்பது தான் வருகிறது." என்று கூறினார்.
ருத்ர தாண்டவம்...
இந்த ஆட்டத்தின் நடுவே மனற் புயல் வீசியது. அப்பொழுது மற்ற வீரர்கள் உடம்பை வளைத்து கீழே படுத்துக் கொண்டார்கள், மணற்புயலில் இருந்து தப்பிக்க. ஆனால், சச்சின் மட்டும் அந்த புயலுக்கு முகம் கொடுக்காமல், ஒற்றை காலை மடக்கி, மட்டையை ஊன்றி கொண்டு மறு திசை பார்த்துக் கொண்டிருந்தார். (வர்ணனையாளரும் இந்த gesture-ஐ வெகுவாக புகழ்ந்தார்.
ஒருமுறை தெனாப்பிரிக்காவிற்கு எதிரான சகாரா தொடரில், ஆலன் டொனால்டு ஒரு short pitch பந்தை வீச, சச்சின் ஒரு அடி முன்னே வந்து போயின்ட் திசையில் ஒரு ஷாட் அடிப்பார். அந்தப் பந்து நேராக போயின்டில் நின்றிருந்த டேரல் கல்லினன் கைக்கு வந்தது. ஆனால் பந்து வந்த வேகத்தைப் பார்த்த கல்லினன் கையை எடுத்துவிட பந்து கண் இமைக்கும் நேரத்தில் பவுன்டரிக்கு சென்றது.
சச்சினின் staright drive, மாஸ்டரின் ஸ்பெஷாலிடிக்களில் ஒன்று.
சச்சினிடம் எனக்குப் பிடித்தது அவரின் singles-ஐ முடிவு செய்யும் திறமை. அதற்கு நல்ல கணிதமூளை அவசியம். அவ்வளவாக ரன்-அவுட் ஆகமாட்டார் சச்சின். மேலும் கச்சிதமாக 'ஒற்றை ரண்'களை சேகரிப்பார். அதுவும் "மின்னலு" வேகத்தில். இது ஒரு சிறந்த ஆட்டக்காரருக்கான அழகு. நல்ல பேட்ஸ்மேன்கள் பெரும்பாலும் ஸ்லிப்பிலேயே ஃபீல்டிங் செய்வர் (அல்லது ஸ்லிப்பில் ஃபீல்டிங் செய்பவர்கள் பெரும்பாலும் நல்ல பேட்ஸ்மேன்களாக உருவாகுவர்). காரணம், ஸ்லிப்பில் பந்து வீச்சாளர் வீசும் பந்து துல்லியமாக கவணிக்கப்படுவதால்.
பந்தும் பேசும்
சச்சின் பேட்ஸ்மேனாக மட்டும் அணிக்கு வெற்றியைத் தேடித்தரவில்லை. 1993 நவம்பர் 24-ல் ஹீரோ கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக, அரையிறுதி போன்ற ஆட்டத்தில், பந்து வீசி அணிக்கு வெற்றியை தேடித் தந்தார் சச்சின். வெற்றிக்குத் தேவை 6 ரண்கள். ஆனால் சச்சின் அபாரமாக வீசி 3 ரண்களை மட்டுமே கொடுத்து வெற்றித் தேடித் தந்தார். கவாஸ்கரின் பாராட்டு "The man with the golden arms". மேலும் பல இக்கட்டான சூழ்நிலையில் அணிக்கு விக்கெட் விழ்த்தித் தந்தார். ஆனால், கங்குலியின் தலைமையில் அணி இருந்த பொழுது சச்சினுக்கு பந்து வீச வாய்ப்புத் தராதது வேதனையானது. (இதனைப் பற்றின உண்மைகள் கண்டிப்பாக யாராவது ஒரு வீரர் ஓய்வு பெற்ற பின் புத்தகம் எழுதும் பொழுது தெரிய வரும்). சச்சினின் பந்துவீச்சு பெரும்பாலும் ஏமாற்று வீச்சே. ஒரு முறை பந்து வீசும் பொழுது இப்படி போட்டார்கள் "சச்சின் - Right Arm Off Break, Leg Break, Medium, Medium Fast".
சச்சினை இரண்டு வெவ்வேறு தடவைகளில் செய்தது எனக்குப் பிடிக்காமல் போனது.
1) சச்சின் எப்பொழுதும் ஒற்றை ஓட்டத்தை (single but calculated run) மிகச்சரியாக கணிக்கும் திறன் அதிகம். அதனால், அதிக தடவை ரன்-அவுட் ஆனதில்லை. ஆனால், ஒரு முறை, இக்கட்டான நிலை. சச்சின் டெஸ்ட்டில் தன் (முதல்?) இரட்டைச் சதம் அடிக்கும் ஆட்டம் மற்றும் ஃபார்ம்-அவுட்டான சமயம். மூன்றாவது ரண் எடுக்கும் பொழுது அசட்டையால் வந்த பொழுது ரன்-அவுட் ஆகும் நேரம். எந்த காலகட்டத்திலும் ரண் முடிப்பதற்காக கீழே விழமாட்டார். ஆனால் தலைவர், அன்று தான் ஆட்டமிழக்கக்கூடாது என்பதற்காக கீழே விழுந்தான். அன்று சச்சின் ரன் அவுட் என்று நினைக்கிறேன். இது தான் சச்சின் வாழ்க்கையில் விழுந்த ஒரே தடவை என்று நினைக்கிறேன்.
2) எப்பொழுது நடுவர் தவறு செய்தாலும் பெருந்தன்மையோடு மன்னிக்கும் சச்சின், ஒருமுறை நடுவர் சச்சினுக்கு அவுட் தரவில்லை. ஆனால், பந்து பேட்டில் உரசிச் சென்று கீப்பர் கையில் தஞ்சம் அடைந்தது நன்றாக தெரிந்தது. அப்பொழுது சச்சின் தானாக வெளியேரவில்லை (ஒருவேளை சச்சினே அறியலையோ?).
எனக்கு இரண்டு ஆசைகள்.
1) சச்சினுக்கு கிரிக்கெட் ஆடும் பொழுதே "சர்" பட்டம் கொடுக்க வேண்டும்.
2) சச்சினுடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளவேண்டும்.
சுருங்கச் சொன்னால், லாராவின் back lift power, டிராவிட்டின் style, கில்கிறிஸ்ட்டின் consistent, க்ளூஸ்ணரின் அதிரடி, ஒரு mathematician-ன் முடிவெடுக்கும் திறன், மெக் கிராத் - வாசிம் அக்ரமின் துல்லியம், கங்குலியின் sixer, ஷாட்டை அழகாக முடிக்கும் அந்த perfection, தாமஸ் ஆல்வா எடிசனின் அர்ப்பனிப்பு, ஷாஜகானின் காதல், பாலே நடனக்காரரின் foot work, ஹன்சி கிரோனியேவின் பெருந்தண்மை ஆகியவையின் கலவை தான் சச்சின். சும்மாவா சொல்வோம், "If Cricket is our religion, then Sachin is our GOD"-னு.
இப்போ சொல்லுங்க! சச்சின் நெசமாலுமே பெரிய்ய்ய்ய்ய சச்சின் தானே??
கடைசியாக...
Comments on Sachin
Commit all your crimes when Sachin is batting. They will go unnoticed because even the Lord Is watching.
- Placard at the SCG as Sachin was making his century,2008 January
I saw him (Sachin) playing on television and was struck by his technique, so I asked my wife to come look at him. Now I never saw myself play, but I feel that this player is playing much the same as I used to play, and she looked at him on Television and said yes, there is a similarity between the two...hi compactness, technique, stroke production... it all seemed to gel.
- Sir Don Bradman
Don't bowl him bad balls, he hits the good ones for fours.
- Michael Kasprowicz
"I have seen God, he bats at no. 4 for India"
- Mathew Hayden:
"On a train from Shimla to Delhi, there was a halt in one of the stations. The train stopped by for few minutes as usual. Sachin was nearing century, batting on 98. The passengers, railway officials, everyone on the train waited for Sachin to complete the century. This Genius can stop time in India!!"
- Peter Roebuck
Sachin is a genius. I'm a mere mortal.
- Brian Lara
"There are 2 kind of batsmen in the world. One Sachin Tendulkar. Two all the others."
- Andy Flower
I'll be going to bed having nightmares of Sachin just running down the wicket and belting me back over the head for six. He was unstoppable. I don't think anyone, apart from Don Bradman, is in the same class as Sachin Tendulkar. He is just an amazing player.
- Shane Warne
The pressure on me is nothing as compared to Sachin Tendulkar. Sachin, like God, must never fail. The crowd always expects him to succeed and it is too much pressure on him
- Mark Waugh
Sachin Tendulkar - The 'CRICKET GOD'
பிற்சேர்க்கை:
சச்சினின் மிக நீண்ட........ சாதனைப் பட்டியல்!
1. Highest Run scorer in the ODI
2. Most number of hundreds in the ODI 41
3. Most number of nineties in the ODI
4. Most number of man of the matches(56) in the ODI's
5. Most number of man of the series(14) in ODI's
6. Best average for man of the matches in ODI's
7. First Cricketer to pass 10000 run in the ODI
8. First Cricketer to pass 15000 run in the ODI
9. He is the highest run scorer in the world cup (1,796 at an average of 59..87 as on 20 March 2007)
10. Most number of the man of the matches in the world cup
11. Most number of runs 1996 world cup 523 runs in the 1996 Cricket World Cup at an average of 87..16
12. Most number of runs in the 2003 world cup 673 runs in 2003 Cricket World Cup, highest by any player in a single Cricket World Cup
13. He was Player of the World Cup Tournament in the 2003 Cricket World Cup.
14. Most number of Fifties in ODI's 87
15. Appeared in Most Number of ODI's 407
16. He is the only player to be in top 10 ICC ranking for 10 years.
17. Most number of 100's in test's 38
18. He is one of the three batsmen to surpass 11,000 runs in Test cricket, and the first Indian to do so
19. He is thus far the only cricketer to receive the Rajiv Gandhi Khel Ratna, India's highest sporting honor
20. In 2003, Wisden rated Tendulkar as d No. 1 and Richards at No. 2 in all time Greatest ODI player
21. In 2002, Wisden rated him as the second greatest Test batsman after Sir Donald Bradman.
22. he was involved in unbroken 664-run partnership in a Harris Shield game in 1988 with friend and team mate Vinod Kambli,
23. Tendulkar is the only player to score a century in all three of his Ranji Trophy, Duleep Trophy and Irani Trophy debuts
24. In 1992, at the age of 19, Tendulkar became the first overseas born player to represent Yorkshire
25. Tendulkar has been granted the Rajiv Gandhi Khel Ratna, Arjuna Award and Padma Shri by Indian government. He is the only Indian cricketer to get all of them.
26. Tendulkar has scored over 1000 runs in a calendar year in ODI's 7 times
27. Tendulkar has scored 1894 runs in calendar year in ODI's most by any batsman
28. He is the highest earning cricketer in the world
29. He has the least percentage of the man of the matches awards won when team looses a match.. Out of his 56 man of the match awards only 5 times India has lost.
30. Tendulkar most number man of match awards(10) against Australia
31. In August of 2003, Sachin Tendulkar was voted as the "Greatest Sportsman" of the country in the sport personalities category in the Best of India poll conducted by Zee News.
32. In November 2006, Time magazine named Tendulkar as one of the Asian Heroes.
33. In December 2006, he was named "Sports person of the Year
34. The current India Poised campaign run by The Times of India has nominated him as the Face of New India next to the likes of Amartya Sen and Mahatma Gandhi among others.
35. Tendulkar was the first batsman in history to score over 50 centuries in international cricket
36. Tendulkar was the first batsman in history to score over 75 centuries in international cricket:79 centuries
37. Has the most overall runs in cricket, (ODIs+Tests+ Twenty20s) , as of 30 June 2007 he had accumulated almost 26,000 runs overall.
38. Is second on the most number of runs in test cricket just after Brian Lara
39. Sachin Tendulkar with Sourav Ganguly hold the world record for the maximum number of runs scored by the opening partnership. They have put together 6,271 runs in 128 matches
40. The 20 century partnerships for opening pair with Sourav Ganguly is a world record
41. Sachin Tendulkar and Rahul Dravid hold the world record for the highest partnership in ODI matches when they scored 331 runs against New Zealand in 1999
42. Sachin Tendulkar has been involved in six 200 run partnerships in ODI matches - a record that he shares with Sourav Ganguly and Rahul Dravid
43. Most Centuries in a calendar year: 9 ODI centuries in 1998
44. Only player to have over 100 innings of 50+ runs (41 Centuries and 87 Fifties)(as of 18th Nov, 2007)
45. the only player ever to cross the 13,000-14,000 and 15,000 run marks IN ODI.
46. Highest individual score among Indian batsmen (186* against New Zealand at Hyderabad in 1999).
47. The score of 186* is listed the fifth highest score recorded in ODI matches
48. Tendulkar has scored over 1000 ODI runs against all major Cricketing nations.
49. Sachin was the fastest to reach 10,000 runs taking 259 innings and has the highest batting average among batsmen with over 10,000 ODI runs
50. Most number of Stadium Appearances: 90 different Grounds
51. Consecutive ODI Appearances: 185
52. On his debut, Sachin Tendulkar was the second youngest debutant in the world
53. When Tendulkar scored his maiden century in 1990, he was the second youngest to score a century
54. Tendulkar's record of five test centuries before he turned 20 is a current world record
55. Tendulkar holds the current record (217 against NZ in 1999/00 Season) for the highest score in Test cricket by an Indian when captaining the side
56. Tendulkar has scored centuries against all test playing nations.[7] He was the third batman to achieve the distinction after Steve Waugh and Gary Kirsten
57. Tendulkar has 4 seasons in test cricket with 1000 or more runs - 2002 (1392 runs), 1999 (1088 runs), 2001 (1003 runs) and 1997 (1000 runs).[6] Gavaskar is the only other Indian with four seasons of 1000+ runs
58. He is second most number of seasons with over 1000 runs in world.
59. On 3 January 2007 Sachin Tendulkar (5751) edged past Brian Lara's (5736) world record of runs scored in Tests away from home
60. Tendulkar and Brian Lara are the fastest to score 10,000 runs in Test cricket history. Both of them achieved this in 195 innings
61. Second Indian after Sunil Gavaskar to make over 10,000 runs in Test matches
62. Became the first Indian to surpass the 11,000 Test run mark and the third International player behind Allan Border and Brian Lara.
63. Tendulkar is fourth on the list of players with most Test caps. Steve Waugh (168 Tests), Allan Border (158 Tests), Shane Warne (145 Tests) have appeared in more games than Tendulkar
64. Tendulkar has played the most number of Test Matches(144) for India (Kapil Dev is second with 131 Test appearances) .
65. First to 25,000 international runs
66. Tendulkar's 25,016 runs in international cricket include 14,537 runs in ODI's, 10,469 Tests runs and 10 runs in the lone Twenty20 that India has played.
67. On December 10, 2005, Tendulkar made his 35th century in Tests at Delhi against Sri Lanka. He surpassed Sunil Gavaskar's record of 34 centuries to become the man with the most number of hundreds in Test cricket.
68. Tendulkar is the only player who has 150 wkts and more than 15000 runs in ODI
69. Tendulkar is the only player who has 40 wkts and more than 11000 runs in Tests
70. Only batsman to have 100 hundreds in the first class cricket.
வகைகள்
சச்சின்,
விளையாட்டு
Subscribe to:
Posts (Atom)