Wednesday, July 26, 2006

The Matrix - கதை

இந்தப் பதிவு ஸ்ரீதர் அவர்களின் பதிவுக்கு ஒரு விளக்கம் கொடுப்பதற்காக.

கதை 2100-ல் நடப்பதாக நினைக்கிறேன். இந்த உலகில் மனிதன் தன் பாதுகாப்புக்காக இயந்திர போலீஸை உருவாக்குகிறான். அது தன்னை காப்பாற்றிக் கொள்ளும் சக்தியையும் சேர்த்து அதற்கு வழங்குகின்றான். ஒரு கட்டத்தில் இந்த உலகம் அழிந்து சூரிய ஒளியும் இல்லாமல் போய்விடுகிறது. அந்த இயந்திர போலீஸுக்குத் தான் தன்னை காப்பாற்றிக் கொள்ளத் தெரியுமே. அது வாழ உஷ்னம் தேவைப்படுகிறது. சூரிய ஒளி இல்லாததால் அது மனிதனின் உடம்பில் இருந்து வரும் உஷ்னத்தை உபயோகித்துக் கொள்கிறது. அதனால், மனிதன் பிறந்ததும் (அல்லது உருவாக்கப்பட்டதும்), அவனை கோமா நிலையில் வைத்திருந்து, அவன் உடம்பிற்கு ஊட்டச்சத்தாக + கெடாமல் இருக்க சுற்றியிருக்கும் நீர் போன்ற திரவம், மற்றும் அவன் உடம்பில் இயந்திரங்களால் அவன் மூளையை இயக்கும் சாதனங்கள். ஆனால் அவன் தான் 20-வது நூற்றாண்டில் இருப்பதாகவும், சாதாரண வாழ்க்கை வாழ்வது போலவும், தினமும் வேலைக்கு சென்று வருவது போலவும், ஒரு மாய உலகில் (அது தான் Matrix) உலவ வைக்கிறார்கள். அதில் நம் கதாநாயகன் நியோ ஒரு hacker. அதனால், Mophias (மொட்டைத் தலை) அவனை வேண்டி அழைத்து தன் குழுவில் சேர்க்கிறான். Mophias என்பவன் தன் குழுக்களோடு மற்ற மனிதர்களை விடுவிக்க போராடும் ஒரு தலைவன். அப்பொழுது தான் இந்த உலகில் உள்ள மக்கள் யாவரும் எவ்வாறு matrix-ல் இருக்கிறார்கள் என்று விளக்குகிறார். இது தான் படத்தின் அருமையான கட்டம். அதற்காகத்தான் Neo-விற்கு இரு மாத்திரைகள், ஒன்று சிகப்பு மற்றொன்று பச்சை. சிகப்பு அவன் நினைவை திரும்ப வைப்பதற்கு (இது one-way), மற்றொன்று அவன் Mophias-ஐ சந்தித்ததை மறந்து மீண்டும் தன் பழைய நிலைக்கே கனவு என நினைத்து திரும்புவது. இது முதல் பாகம். (மற்ற பாகங்கள் சுத்த பேத்தல்).

இந்த படத்தில் சிலிர்க்க வைப்பது, மனிதன் digital-ஆக மாறி தொலைபேசி வழியாக மறுமுனையை அடைவது, சண்டைக்காட்சிகள் + கிராபிக்ஸ், மூளையில் upload செய்யப்படும் சண்டை மற்றும் இத்யாதி செயலிகள் (softwares), illusion-ல் ஸ்பூன் போன்றவை வளைவதும் அதன் காரணங்களும், Neo எவ்வளவு வேகம் என்று காட்ட காற்றை கிழிக்கும் துப்பாக்கி குண்டுகள் போன்றவை.

இது நான் அறிந்த Matrix கதை. இதில் பிழையிருந்தால் கூறவும். இதைப் புரிந்து கொள்வதற்கு சுமார் 6 முறை பார்த்தேன்.

5 comments:

  1. உங்கள் வருகைக்கும் .. கதையை தெளிவாக விளக்கினதுக்கும் நன்றி.. இப்பொழுது என் பதிவில் உள்ள பிழைகளை அறிந்தேன்..

    நன்றி,

    ஸ்ரீதர்

    ReplyDelete
  2. //
    Mophias என்
    //
    Morpheus!!

    //
    இது முதல் பாகம். (மற்ற பாகங்கள் சுத்த பேத்தல்).
    //


    சரியே...இரண்டாவது மூன்றாவது பாகங்கள் அதிக சண்டைகாட்சிகள் லாஜிக் இடிப்புகள்...

    முதல் பாகத்தில் இருந்த தத்துவ நெடி இல்லாமல்...ஒரே சண்டை...குண்டுவெடிப்பு etc.,

    அந்த Architecht பேச்சைத் தவிர மற்றதெல்லாம் வேஸ்ட்...(Monica bellucci தவிர)

    கடைசி பாகத்தில் கட்ட கடைசியாக, உபனிடதங்களிலிருதந்து பாடல் ஒலிக்கவிட்டிருந்ததை கவனித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்...

    வாச்சோவ்ஸ்கி சகோதரர்கள் உலகில் உள்ள மத நம்பிக்கைகளிலிருந்து சுட்ட கதை...(இந்து, பௌத்தம், யூதம், )

    Zion, Nebuchadnezzer போன்ற வார்த்தைகள் தோராவில் முக்கிய வார்த்தைகள்...Nebuchadnezzer யூதர்கள் கோவிலை இடித்த மன்னர். Zion யூதர்கள் தங்கள் நாட்டை அழைக்கும் விதம்...

    ..
    Matrix என்பது ரோபாட்டுகள் மக்களை உயிருடன் அடிமைகளாக வைத்திருக்கப் பயன் படுத்தும் Virtual reality programme என்பதைச் சொல்லியிருந்தீர்கள் என்றால் சிரப்பு..

    மனிதர்களை உயிருடன் வைத்திருக்க காரணம், Duracell battery போல் மனித உடல் வெப்பத்தைப் பயன் படுத்தி எடுக்கப் படும் சக்தி கொண்டுதான் மெஷின்கள் இயங்குகின்ரது...சூரிய ஒளி வராத வகையில் பூமியின் மேல் கரிய மேகம் சூழ்ந்துகொண்டது போரின் விளைவாக...

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி ஷங்கர்.

    //கடைசி பாகத்தில் கட்ட கடைசியாக, உபனிடதங்களிலிருதந்து பாடல் ஒலிக்கவிட்டிருந்ததை கவனித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்...//
    ம்ஹூம்...நான் இரண்டாவது பாகம் பார்த்ததிலேயே முன்றாவதை பார்க்கும் ஆசையை இழந்து விட்டேன். ஆனால், சற்று இந்திய நெடி இருந்ததை (சில காட்சிகளில்) கண்டேன். (மூன்றாவது பாகத்தின் சில காட்சிகள் மட்டுமே பார்த்தேன்). ஹாலிவுட் இப்பொழுதெல்லாம் இந்திய மற்றும் சீன ரசிகர்களை குறிவைக்கிறது. அதனால் தான் என்றே நினைக்கிறேன்.

    //Matrix என்பது ரோபாட்டுகள் மக்களை உயிருடன் அடிமைகளாக வைத்திருக்கப் பயன் படுத்தும் Virtual reality programme என்பதைச் சொல்லியிருந்தீர்கள் என்றால் சிரப்பு..

    மனிதர்களை உயிருடன் வைத்திருக்க காரணம், Duracell battery போல் மனித உடல் வெப்பத்தைப் பயன் படுத்தி எடுக்கப் படும் சக்தி கொண்டுதான் மெஷின்கள் இயங்குகின்ரது...சூரிய ஒளி வராத வகையில் பூமியின் மேல் கரிய மேகம் சூழ்ந்துகொண்டது போரின் விளைவாக... //

    உண்மையைச் சொல்லனும்னா, இந்தப் படத்தை பார்த்து 4-5 வருடங்கள் ஆகிறது. அதனால், எனக்கு நியாபகம் இருந்தவரை கதை சொன்னேன் ;-)

    அட! இது என் 50-வது பதிவு!!

    ReplyDelete
  4. //
    அட! இது என் 50-வது பதிவு
    //

    வாழ்த்துக்கள்



    வருவேன்........

    ReplyDelete
  5. யப்பா 6 முறை பார்க்க எனக்கு பொறுமை இல்லை..இவ்வளவு நாள் கழித்து ஒரு வழியாக matrix கதை புரிந்து கொண்டேன்... :-)

    ReplyDelete