Friday, February 02, 2007

முத்தமிடுதல்


வரலாறு

முத்தங்களை பற்றின வரலாறு கடவுளைப்போல, ஆதியும் இல்லை அந்தமும் இல்லை. முத்தங்களின் வரலாறு தெரியவில்லை. கி.மு.1500-க்கு முன் எழுதப்பட்ட வேதங்கள் முத்தங்களின் பரிமாற்றத்தினை விளக்குகின்றனவாம். அப்படியானால் அதற்கு முன் முத்தங்கள் இல்லையா? கட்டாயம் இருந்திருக்கும். ஆனால், அன்றைய கலை மற்றும் இலக்கியம் முத்தத்தினை ரகசியமாக வைத்திருந்தது என்றே கூறலாம்.

மகாபாரதம் உதட்டில் முத்தமிடுவதை அன்பின் அடையாளமாக விவரிக்கிறது. கி.பி. 350 வரை மகாபாரதம் வாய்மொழியாகவே கற்பிக்கப்பட்டது. கி.பி. 6ம் நூற்றாண்டில் எழுத்தப்பட்ட வாத்ஸ்யாயன காமசூத்திரமும் பல்வேறு முத்தப் பரிணாமங்களை விவரிக்கிறது. கி.மு.326-ல் அலெக்ஸாந்தர் இந்தியா மேல் போர் தொடுத்த பின்பு தான் கிரேக்கர்கள் முத்தங்களை பற்றி அறிந்துகொண்டார்கள் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளார்கள்.

ரோமானியர்கள் நண்பர்களையும், உறவினர்களையும் வாழ்த்த முத்தமிடுவார்கள். தங்கள் அரசரின் கைகளில் முத்தமிட்டனர். மூன்று வகையான முத்தங்களை ரோமானியர்கள் பரிசளித்தனர்:

1) Osculum - கன்னத்தில் முத்தமிட்டால்
2) Basium - உதட்டில்
3) Savolium - ஆழ்ந்த முத்தம்

ரோமானியர்களின் அந்த கால முத்தங்களின் வகைகள் இன்றும் வழங்கப் பெற்று வருகின்றன. திருமண நிச்சயம் நடைபெறும் பொழுது பொது மக்களின் முன்பு முத்தமிட்டுக் கொள்வார்கள். இது இன்று வரை தொடர்கிறது. பண்டைய ரோமானியர்கள் முத்தமிடுதலை தேர்தல்களிலும் பயன்படுத்தினர், "kisses for votes".

கிருத்துவ தேவாலயங்களிலும் முத்தமிடுதல் முக்கிய பங்காற்றின. கிருத்துவர்கள் மற்றவரை வாழ்த்த கன்னத்தில் முத்தமிட்டனர். இது ஹோலி கிஸ். இந்த வழக்கத்தின் படி முத்தமிட்டுக் கொண்டவர்களின் ஊடே அவர்களின் ஆன்மா பரிமாறிக்கொள்வதாக நம்பினார்கள்.

எல்லா
முத்தங்களும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதாக இல்லை. 'ரோமியோ ஜூலியட்' காப்பியத்தில் தவறானவர்களிடம் பரிமாறப்படும் முத்தங்கள் கொடூரமானதாக சித்தரிக்கப்பட்டது.

முத்தம் இனி...

உதட்டு முத்தம் எச்சிலும், எச்சில் சுரக்கும் சவ்வு, எப்பொழுதோ மென்று சாப்பிட்ட உணவின் மீதம் கொண்டது. உதட்டு முத்தமிடலின் பொழுது இலட்சக் கணக்கான கிருமிகள் ஒரு வாய்க்குள் இருந்து மற்றொரு வாய்க்கு மாறும். சிற்சில வியாதிகள் பரவும். இருந்தாலும் 90 சதவிகித மக்கள் முதமிடுகின்றனர். காதலின் முதல் முத்தம், குழந்தைகளை பெற்றோர் முத்தமிடுதல், தலைவர்கள் / ஆன்மீகவாதிகளாஇ முத்தமிடுதல், ஜோடிகள் தங்களுக்குள் முத்தங்களை பரிமாறிக் கொள்ளுதல் போன்றவை அடக்கம். சிலர் தங்கள் மண்ணை கூட முத்தமிடுவர்.

முத்தமிடுதல் எப்படி ஆரம்பித்திருக்கலாம்? இது பொதுவாக தாய் தன் குழந்தைக்கு உணவூட்டும் பொழுதில் இருந்து வந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளார்கள் கருதுகின்றனர். தாய் தன் குழந்தைக்கு உணவூட்டுதல் என்பது, பறவை தன் குஞ்சுகளுக்கு உணவூட்டுவதை போல. தாய் உணவை நன்றாக மென்று பின் மெல்லப்பட்ட உணவை குழந்தைகளுக்கு முத்தம் மூலம் பரிமாரப்பட்டிருக்கலாம். குழந்தைகள் பின் திடமான உணாவை தானாக உண்ண கற்றுக் கொண்டபிறகு தாய் தன் குழந்தையின் மீதான அன்பை வெளிப்படுத்த / ஒரு பாதுகாப்பை உணரவைக்க முத்தமிட்டனர்.



முத்தமிடுதல் என்பது வழிவழியாக கொண்டு செல்லப்பட்ட ஒரு பழக்கம். நம் பெற்றோர்களிடமிருந்தும் சமுதாயத்திடமிருந்தும் நாம் கற்றுக் கொண்டது. முத்தமிடுதல் என்பது சுபாவம். மனிதனின் மூதாதையர்களான குரங்குகளுக்கும் இந்த பழக்கம் இருப்பதாக கண்டறிந்துள்ளனர். விலங்குகள் பொதுவாக தன் குட்டிகளாஇ நாவினால் தடவி கொடுக்கும். இதுவும் ஒருவகை முத்தமிடுதலே. பறைவகள் தன் அலகாலும், நத்தைகள் தன் antenna-க்களாலும் உரசிக் கொள்ளும். இப்படி ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு மாதிரி முத்தமிடும் பொழுதும், அவை பொதுவாக தன் அன்பையும், அரவணப்பையும், காதலையும், நம்பிக்கையையும், உறவையும் வெளிப்படுத்துவதாகவே அமைகிறது. முத்தமிடுதல் என்பது கற்றுக் கொள்ளப்பட்டதாகவும், சுபாவமாகவும் விஞ்ஞானிகள் ஒத்துக் கொள்கிறார்கள்.



முத்தமிடுதல் ஏன் நல்லது?

1) பல் துலக்குவதை காட்டிலும் முத்தமிடுதல் பற்சிதைவை தடுக்கிறது. உணவை உட்கொண்ட பிறகு நம் வாய் நிறைய சர்க்கரை கரைசல்களும், உமிழ் நீரும் தங்கும். இவை தான் வாயில் கிருமிகள் உருவாக முதற்காரணம். முத்தமிடுதல் இந்த கிருமிகளை நீக்க இயற்கையான ஒரு முறை. முத்தமிடும் பொழுது வாயில் இருக்கும் உமிழ்நீர் ஒரு இடத்தில் தங்காமல் துப்புரவு செய்து கொண்டே இருப்பதால், வாயில் உருவாகும் கிருமிகளை கட்டுக்குள் வைக்கிறது.

2) மனச்சோர்வையும், டென்ஷனையும் தடுக்கிறது. முத்தமிடுதல் என்பது உங்களை நீங்களே ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் ஒரு நுட்பம், கூறுவது ஒரு மனநல ஆலோசகர். நம் உதடுகள் முத்தமிடும் நிலையில் இருக்கும் பொழுது நாம் பெரும்பாலும் புன்னகையுடனும், இருவரது உடலும் நெருங்கிய நிலையில் இருப்பதால் அந்த நிலையில் டென்ஷனுக்கு வழியில்லை. உங்கள் மூச்சும் ஆழமாகிறது. இமைகள் மூடப்படுகிறது. தியானம் அல்லது நம்மை நாம் ஆசுவாசுப்படுத்திக் கொள்ளும் பொழுதும் இந்த நிலையில் தானே இருக்கிறோம்? உலகத்தை வெல்ல இது மிகச்சரியான வழி.

3) உடல் எடையை குறைக்கிறது. காரணம், 1 கிலோ எடையை குறைக்க உங்களுக்கு 6600 கலோரிக்கள் தேவைப்படுகிறது. ஒரு நீளமான முத்தம் உடலில் உள்ள சர்க்கரையை சாதாரண அளாவை விட வேகமாக எரிக்கிறது. 10 நிமிடத்திற்கும் 10 கலோரிக்களை எரிக்கிறது. இது போதாதா உங்கள் உடல் எடையை குறைக்க?

4) முத்தம் உடல் மூப்பை தாமதமாக்குகிறது. முத்தமிடுதல் உங்கள் கண்ணங்களுக்கும் தாடை தசைகளுக்கும் இருக்கத்தை தளர்த்துகிறது.

5) முத்தமிடும் பொழுது பரவசமடைகிறீர்கள். பரவசமடையும் பொழுது இரத்தத்துடன் அட்ரீனலின் சுரந்து கலக்கிறது. அதனால் இதயத்துடிப்பு அதிகமாகி, நாடித்துடிப்பும் அதிகமாகிறது. அதனால் உங்கள் முழு உடலும் அதிக காற்றை (O2) பெறுகிறது. இது ஒரு சிறந்த cardiovascular பயிற்சி.

6) ஃபிரனோம்கள் (pheromones) என்னும் இரசாயணம் இருவருக்கும் இடையில் ஒரு wavelenght-ஐ தூண்டுகிறது. புதிதாக முதல் முதலாக முத்தமிடும் பொழுது இந்த ஃபிரனோம்கள் தான் தன் வேலையைக் காண்பிக்கும். ஆழ்நிலை மனதை வசீகரப்படுத்த வாசம் ஒரு மிக்கிய காரணகர்த்தாவாகிறது. இந்த ஃபிரனோம்கள் சரியாக இருந்தால், வெற்றி தான்.

7) முத்தமிடுதல் உங்கள் தற்பெருமையை கூட்டுகிறது. சந்தோஷமாக இருக்கும் பொழுது முத்தமிடும் பழக்கத்தை வைத்து கொள்வது நல்லது. காரணம், எப்பொழுதெல்லாம் நீங்கள் சோகம் ஆகிறீர்களோ அப்பொழுதெல்லாம் முத்தமிடுங்கள். நீங்கள் சந்தோஷமடைவீர்கள்.



முத்தமிடுதல் இச்சையை கிளிர்த்தெழுப்பும் செயலாக மட்டுமே பார்க்ககூடாது. மாறாக, தாய் தன் குழந்தையின் காயத்தில் முத்தமிடுவது கூட குழந்தையின் காயத்தை மனதளாவில் ஆற்றவே. நண்பர்கள் தங்களுக்குள் முத்தமிடுவது அவர்களின் நட்பை வெள்ளிப்படுத்த ஆகியவை. நபர்கள் வேறுபட்டாலும், முத்தமிடுவது கூறுவது ஒன்றைத்தான், அது அன்பை.



முத்தமிடும் பொழுது உங்கள் மூளைக்கும் (இருப்பவர்க்கு), முகத்தில் இருக்கும் சதைகளுக்கும் இடையில் சிறு மினதிர்வை அனுப்புகிறது. அந்த மின் அதிர்வு உங்கள் உதடு, நா மற்றும் முகத்தில் இருந்து அனுப்பப்படும் அஞ்சல். உங்கள் மூளை உங்கள் உடலுக்கு பின் வரும் ரசாயணங்களை சுரக்க கட்டளை அனுப்பும்:

ஆக்ஸிடோசின் - இருவருக்கும் உள்ள உணர்ச்சி, பற்று, அன்பு, ஆர்வம், பக்தி, ஆசை முதலான எண்ணங்களை உருவாக்குவதில் உதவுகிறது.
டோபமைன் - அகச்சுவை, பரவசம், வலி ஆகியவற்றை மூளை செயல்படுத்த ஒரு முக்கியமான காரணி.
செரோடொனின் - ஒருவரின் மனநிலையை, உணார்ச்சியை பாதிக்கும்.
அட்ரீனலின் - இதயத் துடிப்பை, இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், உடலின் தனிச்சை செயலிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

கடைசியாக, இத்தாலிய ஓவியர் ஃபிராண்சிஸ்கோ ஹயீஸ் வரைந்த இந்த ஓவியம் தான் சிறந்த ஓவியமாக அறியப்படுகிறது. இது இத்தாலிய காதலை எடுத்துறைக்கிறது.

15 comments:

  1. இது வரலாற்று சிறப்புமிக்க பதிவு :)) சூப்பரா கீது நைனா !!!

    ReplyDelete
  2. வாங்க ரவி.

    //இது வரலாற்று சிறப்புமிக்க பதிவு :))//

    ஹ...ஹா...

    ReplyDelete
  3. //இது வரலாற்று சிறப்புமிக்க பதிவு :)) சூப்பரா கீது நைனா !!! //

    ரீப்பிட்டே :)

    ReplyDelete
  4. avlooo thana?? nalla villkangal! muthatha patri innum niraya iruke..part II iruka?

    ReplyDelete
  5. //part II iruka?//

    ஹி...ஹி...முத்தத்தை மற்றி பார்ட்-II என்ன? பார்ட்-n வரைக்கும் போடலாமே!!!

    ReplyDelete
  6. இவ்வளவு விஷயங்கள் இருக்கா?
    நல்ல பதிவு. இப்படித் தலைப்பு வைத்துக்கூட யாரும் கண்டுகொண்ட மாதிரித் தெரியவில்லையே?

    ReplyDelete
  7. முத்தத்தில் இவ்வளவு செய்திகள் உண்டா? :))

    ReplyDelete
  8. வருகைக்கு நன்றி வசந்தன்.

    //இப்படித் தலைப்பு வைத்துக்கூட யாரும் கண்டுகொண்ட மாதிரித் தெரியவில்லையே? //

    :))) ஒருவேளை எல்லோரும் திருந்திட்டாங்களோ???

    ReplyDelete
  9. பாரதி பாடிய கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி ஞாபகம் வருதே.

    முத்தமிடும் நேரமெப்போ?

    ReplyDelete
  10. //முத்தமிடும் நேரமெப்போ?//

    அடடா! இதுக்கு நேரமெல்லாம் தேவையா என்ன?

    ReplyDelete
  11. ஜில்லுன்னு ஒரு பதிவு :)

    ////இப்படித் தலைப்பு வைத்துக்கூட யாரும் கண்டுகொண்ட மாதிரித் தெரியவில்லையே? //

    :))) ஒருவேளை எல்லோரும் திருந்திட்டாங்களோ???//

    இதப் படிச்சிட்டு குபீர்னு சிரிப்பு என்னையும் அறியாம ப்பீறிக்கிட்டு வந்துருச்சு.
    :)))

    ReplyDelete
  12. //இதப் படிச்சிட்டு குபீர்னு சிரிப்பு என்னையும் அறியாம ப்பீறிக்கிட்டு வந்துருச்சு. :)))//

    ம்ம்...உங்க உள்குத்து எனக்கு புரியுது...:)

    ReplyDelete
  13. //இப்படித் தலைப்பு வைத்துக்கூட யாரும் கண்டுகொண்ட மாதிரித் தெரியவில்லையே? //

    ////:))) ஒருவேளை எல்லோரும் திருந்திட்டாங்களோ???////

    திருந்தலைன்னாலும் அமைதியா படிப்போம்ல :)))

    ReplyDelete