Sunday, March 18, 2007

"இந்தியா 250+ எடுக்கும்"-னு வங்கதேச கேப்டன் நம்பினார்

ரொம்ப நாளைக்கு அப்புறம் கிரிக்கெட் பாக்கலாம்னு நேத்து எல்லா வேளையும் அவசரம் அவசரமா முடிச்சுட்டு உக்காந்தேன். சரி! வழக்கம் போல முதல் மேட்ச சொதப்பிட்டு, தத்தம் வீடுகளில் ரசிகர்களின் கல்லடிகளோடு, அடுத்தடுத்த ஆட்டங்களில் தானே நம்மாளுங்க ஜொலிப்பார்கள்? அதனால், அதற்கேற்ப மனதளவில் என்னை தயார் செய்துகொண்டு தான் ஆட்டத்தை பார்க்க உட்கார்ந்தேன்.

டாஸ் போடப்பட்டு திராவிட் இந்தியா பேட்டிங் செய்யும் என்று தெரிவித்து நகர, வங்கதேச கேப்டனிடம் டாஸ் குறித்து கேட்க, அவர் 250+ என்பது டிஃபண்டபல் ஸ்கோர் என்றார். அதாவது, இந்தியாவை குறைந்தபட்சம் 250 ரண்களுக்குள் கட்டுப்படுத்த விரும்புவதாக கூறினார். அவ்வளவு கான்ஃபிடன்ட் இந்திய அணி மீது.

ஆட்டம் ஆரம்பமானது. முதல் ஓவரிலேயே விக்கெட் விழுந்திருக்க வேண்டும். எல்லாம் நம்ம திராவிட் ரெக்கமண்டேஷனில் உள்ளே வந்த சேவாக் தான். எப்படி? க்ரீஸை நெருங்கி விட்டாலும் பேட்டை கோட்டில் வைக்காமல், ஏதோ சோத்துக்கு செத்தவர் மாதிரி ஒரு பொருப்பின்மையோடு அந்திரத்தில் பேட்டை கொண்டு சென்றார். 'மயிரி'ழையில் தப்பித்தார். மேற்கு இந்திய உலகக் கோப்பைக்கு ஒரு சக பயணியாகத்தான் போயிருக்கிறார், டீம் இந்தியாவில் இல்லை போலும். சரி! முதல் இரு விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தது. அதனால் என்ன? கான்ஃபிடன்ட் வேண்டாமா? வெற்றி அல்லது வீர மரணம் என்பது இரு வேறு நிலை. சரண்டர் ஆவது போல விளையாடினால் என்ன அர்த்தம்? ஐயா! தோற்கலாம் தப்பில்லை. சரண்டர் ஆவதா? அதுவும் கடைசியில் 2 ரண்களில் 5 விக்கெட்கள்.

இதில் குறிப்பிடப்படவேண்டிய அம்சம், வங்கதேச அணியின் துல்லியமான பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங். ஒரு சாம்பியனை போல விளையாடினார்கள். அவ்வளவு கான்ஃபிடன்ட். சமீபத்தில் பெரிய அணிகளையெல்லாம் வென்றிருக்கிறார்கள். இந்தியா 250 எடுக்கும் என்ற வங்கதேச கேப்டனின் கான்ஃபிடன்ட் கூட நம்ம ஆட்களுக்கு இல்லை என்னும் பொழுது என்ன சொல்ல? உலகக் கோப்பையை இப்படிபட்ட ஒரு அணியா வெல்ல வேண்டும்? அந்த ஆசையே போய்விட்டது. தென் ஆப்ரிக்கா வென்றால் மிகுந்த சந்தோஷம் அடைவேன். அவர்கள் கோப்பையை வெல்ல முழு தகுதி உள்ளவர்கள். ஆஸ்திரேலியா...போதும். இத்தோட நிறுத்திகிடுவோம்.

இவ்வளவு நடந்த பிறகும் ஒரே ஆறுதல், நம் சக நண்பன் பாகிஸ்தானில் நிலை (!). கடுப்பாகி சோனி பிக்ஸ்-ல் ஒளிப்பரப்பான பாகிஸ்தான் மேட்சை பார்த்தால் அங்கே 58/6. ஆகா. நம்ம நெலைமையே பரவாயில்லையேன்னு தான் நினைக்க தோனினது. இதில் ஒன்று மட்டும் தெளிவாக தெரிந்தது. அதாவது, நம்மாளுங்க வீட்ல புலி, வெளியில எலி என்பது. (வங்கதேசம் வென்றது இந்தியாவை, மற்றொரு துணை கண்ட புலி).

அயர்லாந்து பன்னின லந்தில் பாகிஸ்தான் காணாமல் போனது. அவர்களின் ப்ளஸும் பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங். இன்டர்நேஷனல் கிரிக்கெட்டுக்கு அவர்கள் புதுசு. பாகிஸ்தானை வென்றால் அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய கொண்டாட்டமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அயர்லாந்து பேட்டிங் செய்யும் பொழுது ஒரு கட்டத்தில் 40+/2 என்று இருந்தது. அப்பொழுது ரண் எடுக்க ஓடும் பொழுது ஒரு ஓவர் த்ரோவில் ரண் எடுக்கும் வாய்ப்பு வந்தது. பாகிஸ்தான் ஃபீல்டர் ஒருவர் எரிந்த பந்து பேட்ஸ்மேனின் மட்டையில் பட்டு சென்றது. இருவர் மீதும் தப்பில்லை. அந்த ஓவர் த்ரோவில் ரண் எடுப்பது ஒன்றும் தப்பில்லை. ஆனால், அந்த அயர்லாந்து வீரை அந்த வாய்ப்பை பயன்படுத்தாமல் அமைதியாகவே இருந்தார். உண்மையிலேயே கிரிக்கெட் ஒரு ஜென்டில்மேன் கேம் தான். இந்த இரு அணிகளிடமும் நம்மவர்கள் கற்றுக் கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கிறது.

ஒன்று மட்டும் வேதனையான உண்மை. இந்தியா மட்டும் கோப்பையை வென்றால், அது நிச்சயம் கோப்பைக்கு அவமானம். இவர்கள் வெல்ல வேண்டுமா?

11 comments:

  1. //இதில் குறிப்பிடப்படவேண்டிய அம்சம், வங்கதேச அணியின் துல்லியமான பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங். ஒரு சாம்பியனை போல விளையாடினார்கள். அவ்வளவு கான்ஃபிடன்ட். சமீபத்தில் பெரிய அணிகளையெல்லாம் வென்றிருக்கிறார்கள். இந்தியா 250 எடுக்கும் என்ற வங்கதேச கேப்டனின் கான்ஃபிடன்ட் கூட நம்ம ஆட்களுக்கு இல்லை என்னும் பொழுது என்ன சொல்ல?//

    இது தான் உண்மை...அவங்க 100/100

    ReplyDelete
  2. I did the same.. i forwarded the live URL to almost 20 of my friends........ now everyone searching for me to kick............

    ReplyDelete
  3. //ஒன்று மட்டும் வேதனையான உண்மை. இந்தியா மட்டும் கோப்பையை வென்றால், அது நிச்சயம் கோப்பைக்கு அவமானம். இவர்கள் வெல்ல வேண்டுமா? //

    அண்ணா,
    இது எப்படிங்கண்ணா ஞாயம். அதுக்காக ஒரு அணி எல்லாப் போட்டியையும் வென்றுதான் உ.கோ வெல்லனுமா? சரி, சரண்டர் ஆகாதே. போராடு அப்படின்னு நீங்க சொல்றீங்க.
    இது இந்திய அணிக்கு தொட்டில் பழக்கம்.

    ReplyDelete
  4. சீனு,
    அவங்க பவுலிங் மற்றும் பேட்டிங்கில் ரொம்ப நல்லா பண்ணாங்க. முக்கியமா பவுலிங்கில் விக்கெட் to விக்கெட் போட்டாங்க.

    ReplyDelete
  5. பேசாம நாம world cup லே இருந்து withdraw பண்ணிக்கலாம்

    ReplyDelete
  6. இந்தப் பதிவை தேசிபண்டிட்ல் இணைத்துள்ளேன். நன்றி ஹை.

    http://www.desipundit.com/2007/03/18/worldcup/

    ReplyDelete
  7. //அதுக்காக ஒரு அணி எல்லாப் போட்டியையும் வென்றுதான் உ.கோ வெல்லனுமா?//

    ம்ஹூம்...நான் தான் சொன்னேனே...தோற்கலாம், ஆனா கேவலமா தோற்க வேண்டாம்னு.

    தன்னம்பிக்கை இல்லாமல் வெற்றி கிட்டுகிறதென்றால் அது வெற்றியே இல்லை என்கிறேன். இந்திய வீரர்கள் என்றைக்குமே தன்னம்பிக்கையுடன் விளையாடியதே இல்லை. போராட்ட குணம் வேண்டும். அது நம் பசங்களிடம் சுத்தமாக இல்லை என்பதே என் கருத்து. விளையாட்டில், அதுவும் உலகக் கோப்பையில் மென்மையான அனுகுமுறை வெற்றி தராது. (அதற்காக ஆஸ்திரேலியாவை போல ரெளடியாக இருக்க சொல்லவில்லை).

    அயர்லாந்து ஆட்டத்தை பார்த்தீர்களா? இந்திய பந்துவீச்சை பார்த்து வெறுத்து போய் அயர்லாந்து ஆடினதை பார்த்தேன். முதல் ஓவரில் ஜாகீர் பந்து வீசும் பொழுது, முதல் 4 பந்துகள் பரவாயில்லை. ஆனால், வழக்கம் போல ஐந்தாவது பந்தை ஆஃப் சைடுக்கு வெளியிலா போடவேண்டும்? அது பவுன்டரி ஆனது. முதல் பத்து ஓவர்களை ஆஃப் மற்றும் மிடில் ஸ்டம்ஃபுக்களை நோக்கி மட்டுமே வீசவேண்டும், அதுவும் பந்துவீச்சாளார்களுக்கு உகந்த பிட்சில். செய்தார்களா நம்மவர்கள்? இதை கச்சிதமாக செய்தது வன்கதேசத்தினர். (ஹைலைட்ஸ் பார்க்கவும்).

    //இது இந்திய அணிக்கு தொட்டில் பழக்கம்.//

    சுடுகாடு வரைக்கும் அப்படித்தான் இருக்கும்னு சொல்லுறீங்க? அப்போ, "இவர்கள் வெல்ல வேண்டுமா?"-ன்னு நான் சொல்றது கரெக்ட் தானே?

    ReplyDelete
  8. //பேசாம நாம world cup லே இருந்து withdraw பண்ணிக்கலாம் //

    Mm...Even we can do that...

    ReplyDelete
  9. //முக்கியமா பவுலிங்கில் விக்கெட் to விக்கெட் போட்டாங்க.//

    You r right Santhosh. Even in this low score match, when Indians bowled, they did not bowled wicket to wicket.

    ReplyDelete
  10. //முதல் இரு விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தது. அதனால் என்ன? கான்ஃபிடன்ட் வேண்டாமா? வெற்றி அல்லது வீர மரணம் என்பது இரு வேறு நிலை. சரண்டர் ஆவது போல விளையாடினால் என்ன அர்த்தம்? ஐயா! தோற்கலாம் தப்பில்லை. சரண்டர் ஆவதா? அதுவும்//

    கடைசி வரை போராடற குணமே நம்மக்கிட்ட இல்லையே.. ஒருத்தர் அவுட் ஆனா போதும்..அடுத்து வரவங்க எல்லாம் மனசை விட்டுடறாங்க.. என்னா செய்யறது..

    fast bowler சொன்ன மாதிரி தொட்டில் பழக்கமா..போச்சி.. :)))

    ReplyDelete
  11. //விளையாட்டில், அதுவும் உலகக் கோப்பையில் மென்மையான அனுகுமுறை வெற்றி தராது. (அதற்காக ஆஸ்திரேலியாவை போல ரெளடியாக இருக்க சொல்லவில்லை).
    //
    சீனு, இப்ப இருக்கற டீம்னு இல்லை இதுவரைக்கும் ஆடின எல்லா இந்திய வீரர்களையும் எடுத்துகிட்டா, மைதானத்துல அக்ரெஸிவா இருந்தவங்களை விரல் விட்டு எண்ணிடலாம். ஏன் நம்ம ஆளுங்க மட்டும் இப்படின்னு தெரியலை.

    ReplyDelete