Thursday, July 23, 2009

கொள்ளையடிப்பது ஒரு கலை...

இந்த வருட கோட்டாவாக என் தந்தையிடம் இந்த வித்தையை காட்டிய காவல் துறையினருக்கு என் வீர வணக்கங்கள். அதனால் இந்த மீள் பதிவு...

எங்க ஊரு நகை கடை பஜாருல வித்தியாசமான திருட்டெல்லாம் நடக்கும்.

ஒரு நல்ல நாள் நட்சத்திரம் பார்த்து, பெரும்பாலும் வெள்ளிக்கிழமை (ஏன்னா? சனி, ஞாயிறு கோர்ட் லீவு), ஒரு மந்தையில் இருந்து இரண்டு ஆடுகள் போல, ஒரு போலீஸ் ஒரு திருடனை கூட்டி வருவார். போலீஸ் பெரும்பாலும் 'கார்டன் சிட்டி' பெங்களூருவில் இருந்து வருவார்கள். திருடனும் திருடனும் (அதாங்க அவர் கூட வந்த போலீஸ்) அகஸ்மாத்தா ஒரு நகை கடையை தேர்ந்தெடுப்பார்கள். பின் அந்த போலீஸ் அந்த கடையில் வந்து உட்கார்ந்து கொள்வார். போலீஸ் ஆரம்பிப்பார்.

"நீங்க இந்த திருடன் கிட்ட இருந்து 100 பவுன் திருட்டு நகையை வாங்கியிருக்கீங்க. இது சட்டப்படி குற்றம்(!)"-ன்னு ஆரம்பிப்பார். 100 பவுன் என்பது ஒரு சிறிய நகை கடைக்கு. 'சிறிய' என்றால் அந்த கடையில் கல்லா பெட்டி மட்டுமே இருக்கும். கொஞ்சம் போல Jewellery shop மாதிரி அலங்கரித்திருந்தால், கொஞ்சம் பட்ஜெட் அதிகமாகும். இது அடிக்கடி நடப்பதால், பஜாரில் சோம்பலோடு தான் பரவும், 'ஹூம்! ஆரம்பிச்சுட்டாய்ங்களா?"-ன்னு. "அண்ணே இன்னைக்கு நம்ம ****** கடையில வெச்சுட்டாங்க"-ன்னு சொல்லி அந்த கடையில ஒரு மினி பொதுக்கூட்டம் நடக்கும். கூட்டம் இந்த கடைக்காரருக்கு உதவ. ஏன்னா! பின்னால இவங்களுக்கும் உபயோகமா இருக்கும் இல்ல? மனித குலம் is a social animal தானே!!!

நெத்தியடி படத்துல சாவு வீட்டுல ஒரு பெரிசு திண்ணையில உக்காந்து சரக்குக்கு காசு கரக்க ஆரம்பிக்குமே, அதுபோல, "சரி! நடந்தது நடந்து போச்சு(!!!!!). இதை நான் அப்படியே மூடி மறைச்சுடறேன். ஒக்காந்து பேசலாமா?"-ன்னு ஆரம்பிப்பார். இல்லை நாங்க சட்டப்படி பார்த்துப்பேன்னா என்ன நடக்கும்? அந்த கடைக்காரரை விசாரணைக்கு அழைத்து போவார் போலீஸ்காரர். எங்கே? பெங்களூருக்கோ அல்லது கர்நாடக எல்லை போலீஸ் சரகத்துக்கு எங்கேயாவது கூட்டி போவார். 'எப்படியும்' திரும்புவோம், அல்லது திரும்பாமலும் போகலாம். (சேட்டு) ஒருத்தர் இப்படி போய், பயங்கர உள் காயங்களோட திரும்பி வந்து கடைசியில் செட்டில் தான் செய்தார்.

(இதுல இன்னொரு கூத்து. இப்படி தெரியாம திருட்டு நகை வாங்கி ஜெயிலுக்கு போன ஒரு பாய், ஜெயிலுக்கு போய் வந்து ஒரு கடை ஆரம்பித்தார். ஜெயிலில் ஒரு திருடன் அறிமுகம் போல. ஒரு நாள் இவர் கடையை க்ராஸ் செய்த அந்த திருடன் சும்மா "வணக்கம் பாய்"-ன்னு ஒரு சலாம் போட்டுட்டு போக, அடுத்த நாள் போலீஸ் இவர் கடைக்கு வந்துடுச்சு "இவன் எதுக்கு உனக்கு வணக்கம் வெச்சான்?". அது ஒரு தனி கூத்து...)

மேலும், இவர்கள் வைத்திருப்பது கருப்பு பணம். அதுவும் இவர்கள் பயப்படுவதற்கு ஒரு காரணம்.

ஸோ, இப்பொழுது கடைக்காரர் தன் மற்ற கடைக்கார சகாக்களோடு 'உக்காந்து யோசிச்சு' இந்த சிக்கலான பிரச்சினைக்கு டீல் பேசுவார். கடைசியில் எல்லோரும் சேர்ந்து (திருடன் 1 + திருடன் 2 + கடைக்காரர்கள்), டார்கெட்டட் கடைக்காரருக்கு மொட்டை அடித்து, 50-75 பவுன் வரை, பைசல் செய்து திருடன் 1 + திருடன் 2 ஆகியோரை பாசத்தோடு வழியனுப்பி வைத்து, அடுத்த சான்ஸுக்கு காத்திருப்பார்கள்...16 வயதினிலே ஸ்ரீதேவி மாதிரி...

13 comments:

 1. Thirundan 2 padike vendeye mukkiye seythi ithu

  ReplyDelete
 2. Cheenu, what a wide knowledge boundary u have got my dear.... Hats off..... I wish u that ur contribution to this society continues......

  ReplyDelete
 3. வாங்க 'போண்டா' மணி.

  //what a wide knowledge boundary u have got//

  பொய் சொன்னாலும் பொருத்தமா சொல்லகூடாதா?

  Null pointer exception தான் துப்பும்.

  ReplyDelete
 4. இப்படிலாம் கூட நடக்குதா...

  திருடன் போலீஸ் வாழ்க.

  ReplyDelete
 5. வாங்க தம்பி.

  பணநாயகத்துல இதெல்லாம் சகஜமப்பா...

  ReplyDelete
 6. அந்த திருடன் + திருடன் கொஞ்ச நல்லவங்களால் இருக்காங்களேப்பா!

  ReplyDelete
 7. //மெய்யாலுமா? !!!!!!!!!//

  அட! நெசம்மாதானுங்க அம்மனி.

  ReplyDelete
 8. சூப்பர் சாரே, உங்க ஊர்ல மட்டுமில்ல அண்ணாச்சி... தமிழ்நாடு முழுசும் இப்படித்தான் இருக்குது... நீங்க உலகம் முழுசும் திருடன் + திருடன பிரபலப்படுத்துப்புட்டீங்களே...

  ReplyDelete
 9. //நீங்க உலகம் முழுசும் திருடன் + திருடன பிரபலப்படுத்துப்புட்டீங்களே...//

  அடடா! படிக்கிற போலீஸ் ஏதாச்சும் இந்த பதிவுல இருந்து தொழில் கத்துக்க போறாங்க...

  இந்த வருடத்திய கணக்காக, சென்ற வாரம் என் நண்பன் ஒருவனை, அவன் நண்பன் கொஞ்சம் வந்து போகும்படி சொல்ல இவனும் அவன் கூப்பிட்ட இடத்துக்கு மற்றொருவனின் வண்டியை வாங்கி கொண்டு போயிருக்கிறான். அங்கே ஆள் அரவமில்லாத இடத்தில் ஒரு (கர்நாடக) போலீஸும் கூட ஒரு ஆளும் இருந்திருக்கிறார்கள். அவன் என்ன ஏது என்று விசாரிப்பதற்குள் அவனை மிரட்டி வண்டியில் ஏற்றி (கடத்தி) பெங்களூரு கூட்டி சென்றிருக்கிறார்கள். இதெல்லாம் எங்களுக்கு தெரியாது.

  என் மற்றொரு நண்பனுக்கு மொபைலில் பெங்களூரு நம்பரில் இருக்து பேசியிருகிறான். "மாப்ள எதுவும் கேக்காத. நான் காலையில வந்திடுவேன்" என்று சொல்லி வைத்திருக்கிறான். இவன் அடிக்கடி இப்படி வெளியூரு செல்வது வழக்கம். அதனால் யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. மறுநாள் வந்து விவரம் சொன்ன பிறகு தான் தெரிந்தது, இது "மீண்டும் ஒரு (போலீஸ் திருடன்) காதல் கதை" என்பது.

  பெங்களூரு கூட்டி சென்று அடி பின்னியிருக்கிறார்கள். எல்லாம் உள் காயம். இவனிடம் பேரம் பேசி பேசி கடைசியில் 20,000/- பணம் கொடுக்கும் படி அடித்திருக்கிறார்கள். இரவெல்லாம் டார்ச்சர் (அதனை இங்கே எழுத முடியவில்லை). அவனோ, 'ஐயா! என் தொழிலே நஷ்டம் அடைந்திருக்கிறேன். என்னை எப்படி வேண்டுமானாலும் அடியுங்கள். என்னிடம் காசு இல்லை' என்று கதறியிருக்கிறான். (கடைசியில் போலீஸிடமிருந்தே சிகரெட் எல்லாம் வாங்கி) பின் ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்திருக்கிறான். அவனை கூட்டி போன நண்பன் போலீஸ் அவனை மிரட்டி இவனை வரவழைத்திருக்கிறார்கள்.

  இதனை சங்கத் தலைவரிடம் முறையிட்டால், 'அட! போனா போகுது. கெட்ட கணவா நெனச்சு விட்டுடுப்பா'-ன்னு சொல்லிட்டார். என்ன செய்ய?

  ReplyDelete
 10. என்ன செய்வது ? நிதர்சன உண்மைகள் . தவிர்க்க இயலாத செயல்கள். ஒரு தவறு செய்யும் நகைக் கடைக்காரர்கள் செய்யாத தவறுக்கு தண்டம் செலுத்த வேண்டி இருக்கிறது

  ReplyDelete
 11. வணக்கம், எல்லோர்க்கும் எப்படியும் ஏதாவ்தோரு நல்ல விஷயத்தை மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானமாக செய்து வரும் மனமாஎந்த பாரட்டுதல்களுக்குரிய உங்களிடம் ஒரு வேண்டுகோள்! தயவு செய்து என் ப்ளாக் http://chinthani.blogspot.com/ கடந்த இரு பதிவுகளையும் அதை தொடர்ந்து அதில் குறிப்பிட்டுள்ள மற்ற ஆங்கில இணையப்பக்கங்களையும் படித்து உங்கள் மனதுக்கு சரியென்று படுவதை உங்கள் ப்ளாக்கை படிப்பவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும்!! இது ஒரு மொத்த இனத்தின் வாழ்வாதார போராட்டத்துக்கு நம்மால் முடிந்த உதவி!

  ReplyDelete
 12. மீண்டும் மீண்டும் சிரிப்பு...

  http://www.maalaimalar.com/2012/07/09153011/tiruppathur-police-arrest-mid.html

  திருப்பத்தூர், ஜூலை.9-

  திருப்பத்தூர் தர்மராஜா கோவில் தேருவை சேர்ந்தவர் பழனி (60). இவர் திருப்பத்தூர் பஜாரில் நகை அடகு கடை வைத்துள்ளார். முனிகுப்பம் பகுதியை சேர்ந்தவர்கள் தானாஜி (43) கர்ஜிராவ் (55) இருவரும் நகையை உருக்கும் தொழில் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு 2 வேனில் வந்த 4 பேர் பழனி, தானாஜி, சர்ஜ்ராவ் ஆகியோரின் வீடுகளுக்கு சென்று கதவை தட்டியுள்ளனர்.

  அப்போது வெளியே வந்த 3 பேரையும் எந்தவித தகவலும் கூறாமல் வேனில் ஏற்றி சென்றனர். இதனால் அவர்களின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து 3 பேரின் உறவினர்கள் மற்றும் நகை அடகு கடை வியாபாரிகள் திருப்பத்தூர் டவுன் போலீசில் நேற்று புகார் செய்தனர். போலீசாரின் விசாரணையில் திருட்டு நகை வாங்கியது தொடர்பாக 3 பேரையும் சென்னை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றது தெரியவந்தது.

  இந்நிலையில் 3 பேரையும் எந்த தகவலையும் கூறாமல் போலீசார் பிடித்து சென்றதை கண்டித்து இன்று திருப்பத்தூரில் உள்ள அனைத்து நகைக்கடைகள் மற்றும் அடகு கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

  ReplyDelete