Wednesday, April 16, 2008
பகுதி 2 :: தொட்டால் பூ மலரும் - சைக்கான்கள்
போ..........ன பதிவில் உடலின் இயக்கங்களுக்கு பக்'கா' பலமாக இருக்கும் நியூரான்களை பற்றி பார்த்தோம். இப்போ சைக்கான்கள். சைக்கான்கள் பற்றி பொதுவான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. அதனால் தான் இந்த தாமதம்.
உங்களை யாராவது தொட்டால் உங்கள் மூளைக்கு, இருப்பை பொருத்து, 'உன்னை யாரோ தொடுறாங்க' என்று மூளைக்கு சிறு சிறு மின்சார அதிர்வுகள் மூலம் சமிக்சை கொடுப்பது இந்த நியூரான்களின் வேலை.
உடம்புக்கு நியூரான்கள். சரி! மனதுக்கு? இருக்கவே இருக்கிறது, இளிச்சவாய 'சைக்கான்'கள், கண்ணுக்கு புலப்படாத சைக்கான்கள். சைக்கான்கள் என்பவை "Mental units".
பொதுவான ஒரு விளக்கம், உதா, நாம் ஒரு கைவிளக்கை (டார்ச்)ஐ உபயோக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள் அதிலிருந்து ஒளிக்கற்றை வெளியேரும். ஆனால் அந்த கைவிளக்கில் ஒளி இல்லை. துப்பாக்கியின் விசையை அழுத்தும் பொழுது, அந்த துப்பாக்கியில் இருந்து குண்டு வெளிவருகிறது. ஆனால், அது போல அல்ல கைவிளக்கில். ஒளிக்கற்றை அந்த கைவிளக்கில் "இருக்கு. ஆனா இல்லை", "வரும். ஆனா வராது" போலத்தான். Potential என்று சொல்லப்படுவதை போல. இதைப்போன்ற கண்ணால் கான முடியாத "Mental units" தான் சைக்கான்கள்.
இந்த சைக்கான்கள், முன்பே பார்த்த நியூரான்களின் டென்ட்ரைட்களுடன் இணைக்கப்பட்டிருக்கும். அதாவது, ஒவ்வொறு டென்ட்ரைட்களும் ஒவ்வொரு சைக்கான்களுடன் இணைக்கப்பட்டிருக்கும். உடம்பின் உணர்ச்சி பகுதிகள் நியூரான்களால் ஆனது போல மனதின் அல்லது ஆன்மாவின் அணுக்கள் தாம் சைக்கான்கள். அதாவது, சைக்கான்கள் ஒன்று சேர்ந்து ஆன்மாவை உருவாக்குகின்றன. இவைகள் அடிப்படை அணுக்கள். அடிப்படை என்றால்? நாமெல்லாம் (நன் ஆன்மாக்கள்) சில பில்லியன் வருடங்களுக்கு முந்தைய சைக்கான்கள். அணுக்கள், செல்கள், நியூரான்கள், விலங்குகள், குரங்குகள் மற்றும் நம் மூதாதையர்கள் ஆகியோறின் செயல்பாடுகளுக்கு இந்த (நம்முடைய) சைக்கான்களே காரணம்! இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த பிரபஞ்சத்தில் ஒரு குறிப்பிட்ட அளவுள்ள ஆன்மாக்களே இருப்பதாக நம்பப்படுகிறது. அந்த அளவு: 700 கோடி-க்கும் குறைவாக!!
சைக்கான்களின் பொதுவான குணங்கள்:
சைக்கான்களுக்கு மரணம் இல்லை. நாம் இறந்தவுடன் நம்முடைய நினைவுகள் எங்கும் போவதில்லை. ஒரு மனிதன் பிறப்பதற்கு ஒரு ஆன்மா தேவை. அந்த ஆன்மாவானது மறு அவதாரம் மூலமாக பரிணாம வளர்ச்சி கண்டிருக்கும். சைக்கான்கள் தங்கள் பரிணாம வளர்ச்சியின் பொழுது தங்கள் பொதுவான அடையாளத்தை தொலைக்காது. இது சைக்கான்களின் குணம். இறப்பு என்பது பிறப்பிற்கும் பரிணாம வளர்ச்சிக்கும் மிகத் தேவையானதாக இருக்கின்றது.
நமக்கு, நம் மூளைக்கு தெரிந்த செய்திகள் கணக்கிலடங்கா. நினைத்து பாருங்கள். பலவருடங்களுக்கு முன் நிகழ்ந்தவற்றையெல்லாம் நம் மூளை நியாபகம் வைத்திருக்கிறது. பல வருடங்களுக்கு முன் பார்த்த நண்பனை மறுபடியும் பார்த்தால் உடனே பழைய நியாபகங்கள் நம்மையும் அறியாமல் நம் மூளை தன்னுடைய hard disk-ல் இருந்து எடுத்து வருகிறது. உடனே நம் மனதில் பலப்பல எண்ணங்கள் ஓடுகிறது. அவனால் பெற்ற நன்மைகள், அவனுடன் ஏற்பட்ட சண்டைகள், சமாதானங்கள், சந்தோஷங்கள், துக்கங்கள், இப்படி பலப்பல. இவையாவும் ஒலியை விட, மின்னலை விட, ஒளியை விட அதிக வேகத்தில் நமக்கு கிடைக்கிறது, சட்டென்று. இவை யாவற்றையும் எங்கு சேமித்து வைக்கிறது? எவ்வாறு சேமித்து வைக்கிறது? எப்படி அவை நியாபகத்திற்கு கொண்டு வரப்படுகிறது? அவ்வளவும் சுமார் 1.3 - 1.4 கிலோ எடையுள்ள திசுக்களால் ஆன 'மூளை' என்னும் பெயருடன் அழைக்கப்படும் ஒரு பொருளில்! (இவையெல்லாம் ஏன் மூளையில் சேமிப்பதாக சொல்லுகிறோம். காரணம், இவையெல்லாம் நம் மரபணுவில் அல்ல என்று சொல்லத்தான். மரபணுக்களால் கொஞ்சம் போல, ஆனால் சக்தி வாய்ந்த, தகவல்கள் சேமிக்கப்படுகின்றன, கணினியின் BIOS battery போல.).
ஆன்மாவிற்கும் மூளைக்கும் தொடர்பு உள்ளது. உதா, நாம் ஏதாவது ஒரு புகைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தால் நம் மூளையின் சில பகுதி துடிப்புடன் இருக்கும். இந்த இடங்களிளெல்லாம் நம் ஆன்மா துடிப்புடன் இருக்கிறதாக அர்த்தம். அதை போலவே நம் மற்ற உடல் சார்ந்த இயக்கங்களும். இவைகளை தற்போது உள்ள விஞ்ஞான சாதனங்களின் உதவியுடனேயே அறிந்துகொள்ளலாம். நாம் மனதில் நினைக்கும் எண்ணங்கள் உடல் சார்ந்த, உணரக்கூடிய சக்தியை கொடுக்கும் என்பது தெரிகிறது. எண்ணங்களுக்கும் உடல் ரீதியான சக்தி உண்டு.
ஆக, நம் ஆன்மா என்னும் மனம் சம்பந்தப்பட்டவையும், மின் அதிர்வுகள் என்னும் உடல் அல்லது உணர்ச்சி சார்ந்தவையும் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளவை.
அடுத்து, ஆன்மாவும் சைக்கானும் ஒன்றை ஒன்று ஒத்துப்போகக்கூடியவை. இம்மானுவேல் கன்ட் என்னும் ஜெர்மானிய தத்துவ மேதையின் கூற்றுப்படி, சைக்கன்கள் என்னும் mental unit-கள் ஒரே நேரத்தில் வெவ்வேறு இடங்களில் துடிப்புடன் இருக்கும். எப்படி?
இப்படி. இந்த பிரபஞ்சத்தின் வெற்றிடங்களில், இன்ன பிற துகள்களின் நடவடிக்கைகள் ஆன்மாக்களின் நடவடிக்கைகளுடன் ஒத்துப் போகவேண்டும் என்ற கட்டாயம் தேவை இல்லை. மற்ற துகள்கள் என்றால் என்ன வேண்டுமானாலும் இருக்கலாம். கண்ணால் காணக்கூடிய எந்த பொருளும். தூசு அல்லது எரி கற்களோ அல்லது கோள் போன்றவை. மற்ற துகள்களின் நடவடிக்கைகள் போலவே ஆன்மாக்களின் துகள்களும், நம் சைக்கான்கள், இருக்காது அல்லது நடக்காது. காரணம், மற்ற துகள்களைப் போலவே ஆன்மாக்களையும் நடவடிக்கைகளால் அதன் இருப்பிடத்தை அறியலாம் என்றால் அதில் ஒரு சிக்கல் உள்ளது. முன்பே சொன்னது போல நடவடிக்கை அற்ற ஆன்மாகளின் இருப்பிடத்தை அறிய முடியாது அல்லவா?
ஆன்மாக்கள் சைக்கான் என்னும் அணுக்களால் ஆனவை. ஆன்மாக்களில் தான் புத்திக்கூர்மை இருக்கின்றது, மூளையில் அல்ல. புத்திக்கூர்மை அடைய முக்கிய காரணம், ஒரு உயிரினத்தின் கைகள். ஆமாம். கைகள் சுதந்திரமானால் தான் யோசிக்க முடியும். நாம் பிறந்த பின் நாம் நம் மனதுக்குள் கேள்விகள் எழும் தருனம் எது என்றால் நாம் நம் கைகளை உபயோகிக்க ஆரம்பித்த பின் தான். கவனித்துப் பாருங்கள். குழந்தை தவழ்ந்து சென்று அமர்ந்து தன் கைகளில் உள்ள தூசுக்களை பார்க்கும். அது தன் கைகளின் உபயோகத்தை பயன்படுத்திக்கொள்ள / புரிந்து கொள்ள ஆரம்பிக்கிறது. மீன்களில் டால்பின்களைவிட எட்டு கைகள் கொண்ட ஆக்டோபஸ் மீன்கள் தாம் புத்திக்கூர்மை அதிகம் உடையவை!
மூளை சம்பந்தப்பட்ட விபத்துக்களின் நினைவுகளை இழந்தவர்கள் தனக்கு தெரியாதவற்றை கற்றுக்கொள்வதை விட, கூடிய சீக்கிரம் தாங்கள் மறந்தவற்றை கற்றுக்கொள்கிறார்கள். அதை போலவே, நாம் நம் முற்பிறவியின் நினைவுகளை நாம் சட்டென்று கற்றுக்கொள்ளலாம் (முற்பிறவி/மறுபிறவி இருப்பதாக வைத்துக்கொண்டால், இந்த சைக்கான் தத்துவம் படி).
ஆன்மாக்களை இயற்பியல் சொல்லும் சக்தி (எனர்ஜி)யுடம் ஒப்பிடலாம். எனர்ஜி என்பதை ஆக்கவும் முடியாது, அழிக்கவும் முடியாது. ஆனால் அதனை ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு மற்றலாம், ஒரு பொருளில் இருந்து மற்றொரு பொருளுக்கு உருமாற்றம் செய்யலாம், கூடு விட்டு கூடு பாய்வது மாதிரி. உதா, ஒரு யந்திரம் (மோட்டார்) சுற்றுவதாக வைத்துக் கொள்ளலாம். யந்திரம் சுற்ற சுற்ற அதில் இருந்து வெப்பம் வெளிப்படுகிறது. இங்கு இரண்டு சக்திகள் இருக்கின்றன. ஒன்று யந்திரம் என்னும் சக்தி, மற்றொன்று வெப்பம் என்னும் சக்தி. ஒன்றில் இருந்து மற்றொன்று உருவாகின்றது. இரண்டும் இந்த பிரபஞ்சத்தில் தான் இருந்தது. ஒன்று கரைய கரைய மற்றொன்று உருவாகின்றது. அதே போல ஆன்மாக்களுக்கும் அழிவில்லை. அவை இந்த பிரபஞ்சத்தில் தாம் இருக்கும். எங்கும் ஓடிவிடாது.
மற்றொரு சுவையான தகவல். ஒரு வகையில், இந்த உலகில் நாமெல்லாம் மேட்ரிக்ஸ் படத்தில் சொல்லப்படும் பேட்டரி போலத்தான். இந்த உலகின் மக்கள் தொகை ஒரு சம நிலையில் தான் இருக்குமாம். அதாவது இந்த உலகம் இயங்கக்கூடிய அளவில். மக்கள் தொகை அதிகமாக அதிகமாக ஏதாவது ஒரு பேரழிவோ அல்லது ஏதாவது ஒரு வகையில் (உதா, ஓரினச் சேர்க்கையாளர்கள் அதிகமாவது) போன்ற வழிகளில் மக்கள் தொகை கட்டுப்படுத்தப்படுவது உண்டு. அதேபோல, திடீரென்று மக்கள் தொகை கணிசமாக குறையும் பொழுது அதனை சமம் செய்ய மற்ற வழிகளில் மக்கள் தொகை அதிகரிக்க செய்யப்படும். உதா, இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய காலகட்டத்தில் உலகில் மக்கள் தொகை அதிகரித்ததை சொல்லலாம். இதற்கு காரணம், போரினால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் இருந்து வெளிவர என்று கூட குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும் வாதிடலாம். மேலும் 9/11 தாக்குதலுக்கு பிறகு சரியாக பத்து மாதங்கள் கழித்து அமெரிக்காவில் பிரசவங்கள் வழக்கதை விட அதிகமாக நடந்ததையும் குறிப்பிடுகிறார்கள். இதெல்லாம் காக்காய் உட்கார பனம்பழம் விழுவதை போலத்தான்.
மனிதர்களுக்கு மட்டும் தான் இது பொதுவானதா என்றால் மனிதனே ஒரு social animal தானே! அதலால் மிருகங்களுக்கும் இது பொருந்தும் தானே! அமெரிக்காவில் இயந்திரங்களில் பயன்பாடு அதிகரித்த காரணத்தினால், காட்டுக் குதிரைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது, கடந்த 10 - 20 வருடங்களாக. காரணம், காட்டுக் குதிரைகள் பழக்கப்பட்டு வீட்டுக் குதிரைகளாக உபயோகப்படுத்தப்பட்டன. இயந்திரங்களின் வரவால் அவைகளின் பயன்பாடு குறைந்தது.
இவற்றில் இருந்து என்ன தெரிகிறது? நியூரான்கள், சைக்கான்கள், மூளை, ஆன்மா ஆகியவை ஒன்றை ஒன்று சார்ந்துள்ளது.
மனம் சம்பந்தப்பட்டது தான் சைக்கான்கள். சரி! அப்படியென்றால் ஆன்மாவிற்கும் சைக்கானுக்கும் என்ன சம்பந்தம்?
பின் குறிப்பு: மறுமொழி மட்டுறுத்தலின் சோதனைக்காக இது ஒரு மீள்பதிவு.
வகைகள்
அறிவியல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment