Thursday, April 29, 2010

சச்சினுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்!!!

கொஞ்சம் லேட்டான பதிவு...


சென்னை ஒரு வழியாக ஐ.பி.எல். கோப்பையை வென்றாகி விட்டது. முதல் முறை இறுதி போட்டிக்கு வந்த மும்பை, பரிதாபமாக தோற்றது. ஆனால், பரிசளிக்கும் போது சச்சின் கூறியவை தான் நெருடுகிறது. சென்னைக்கு வாழ்த்து சொல்லியவர், சைக்கிள் கேப்பில் சொன்னது, "நீங்கள் இந்த 'ஒரு' மேட்சில் எங்களை விட நன்றாக ஆடிவிட்டீர்கள்" என்று. இதில் சச்சினின் வருத்தம் கலந்த கோபம் வெளிப்படுவதாக உணருகிறேன். "கஷ்டப்பட்டு எல்லா மேட்சிலும் வென்று நாங்க பைனல் வருவோம், நீங்க நோகாம அந்த ஒரு மேட்சை ஜெயிச்சுட்டு கப் அடிச்சிடுவீங்க" என்ற தொனி. இது சச்சினிடமிருந்து வெளிப்படுவது தான் கவலை தருகிறது.

இந்த தொடரில் இந்த இரு அணிகளையும் எடை போட்டு பார்த்தால், மும்பை பல விஷயங்களில் சென்னையை ஜஸ்ட் லைக்-தட் ஓவர்டேக் செய்கிறது. காரணம், அந்த அணியின் பின்புலம் அப்படி. அணியின் ஓனர் அம்பானி. எவ்வளவு பணம் வேண்டுமானாலும் இறைக்க முடியும். திருப்பதி பாலாஜிக்கே 2 கோடி லஞ்சம் கொடுக்க கூடிய அளவு பரந்த மனது. இவர்களுடைய ஆசியால், ஒரே ஒரு மேட்சில் குறைந்த பந்தில் 50 ரண்களை எடுத்த பொல்லார்டை அதிக விலை கொடுத்து (6 கோடிகள்?) எடுத்துள்ளனர். இவர் கடைசி சில ஆட்டங்களில் சோபித்தாலும், இவரை விட குறைந்த விலைக்கு வாங்கப்பட்ட வீரர்கள் கலக்கினார்கள். பொல்லார்டுக்கு சச்சின் ரெக்கமன்டேஷன் வேறு.

மேலும் இந்த அணியில் உள்ள உலகின் ஆட்டக்காரர்கள் சில: பொல்லார்ட், ஜெயசூரியா, ப்ரேவோ, மலிங்கா, ஜான்டி ரோட்ஸ் (பீல்டிங் கோச்), பொல்லாக், ஹர்பஜன் சிங், ஜாகீர் கான், முக்கிமாக சச்சின். மும்பை அணியில் சேர்க்கபட்டவர்கள் மொத்தம் 7 கீப்பர்கள். இப்படிப்பட்ட அணியை வைத்துக் கொண்டு இவர்கள் சாதித்தது, 2008-ல் 5-வது இடமும், 2009-ல் 7-வது இடமும்.

ஆனால், சென்னை அணியை எடுத்து கொண்டால், இந்த அணியில் இருப்பது தோனி, ஹைடன், முரளி மட்டுமே. சென்னையிலோ தோனி மற்றும் பார்த்தீவ் பட்டேல் மட்டுமே கீப்பர்கள். ரெய்னா, பொல்லிங்கர், அஸ்வின் போன்றவர்கள் அணியில் சேர்க்கப்பட்ட பொழுது அவர்கள் எல்லாம் சாதாரண வீரர்கள் மட்டுமே. பிலின்டாப் விளையாடவே இல்லை.

இதில் சென்னை 2008-ல் இறுதி ஆட்டம் வரையிலும் (கடைசி பந்தில் தோற்றது), 2009-ல் அரை இறுதி வரையிலும், 2010-ல் கோப்பை. எப்படி சாத்தியம் ஆனது?

பெரிய பெரிய வீரர்களை சேர்த்தால் மட்டுமே ஒரு அணி வென்றுவிட முடியாது என்பது சச்சினுக்கு தெரியும் தான். முக்கியமாக அந்த வீரர்கள் பாஃம்மில் இருக்க வேண்டும். அதனால் தான் கடந்த 2 ஆண்டுகளும் இந்த அணி சோபிக்க வில்லை. 2008-லும், 2009-லும் கோப்பையை வென்றது யாரும் எதிர்பார்க்காத சிறிய அணிகளான ராஜஸ்தானும், ஹைதராபாத்தும். டெல்லியோ, மும்பையோ, கொல்கத்தாவோ, பெங்களூருவோ, சென்னையோ இல்லை. இந்த முறை மும்பையின் அனைத்து வீரர்களும் நல்ல பாஃம்மில் இருந்ததாலும், சில முக்கிய முடிவுகள் எடுத்ததாலும் (ஜெயசூர்யாவை சேர்க்காமல் இருந்தது) இந்த முறை வெற்றியின் விளிம்பு வரை வர முடிந்தது.

ஆனால், கடைசியில் சென்னை வென்றதற்கான காரணங்கள்:

1) 2 அரை இறுதி ஆட்டங்களும், 3-வது இடத்திற்கான ஒரு ஆட்டமும் நடந்த ஆட்டங்களின் ஸ்கோரை பார்த்தாலே தெரியும், அந்த மும்பை பிட்சின் நிலையை. 140+ எடுப்பதே கடினமாக இருந்தது. அதுவும், சென்னை 142 ரன்களை மட்டுமே எடுத்து, பின் டெக்கானை 38 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. சாதித்தவர்கள் ஸ்பின்னர்களும், ஸ்லோ பௌலர்களும். சச்சின் இதை கணிக்க தவறியது. அணியில் மாற்றம் இல்லை. வேக பந்து வீச்சாளர்களை மட்டுமே நம்பியது. அதனால் தான் கடைசி பத்து ஓவரில் 106 ரன்கள்.

2) பொல்லார்டை 3 ஓவர்கள் மட்டுமே இருக்கும் போது களமிறக்கியது. இன்னும் முன்னதாக களாமிறக்கியிருந்தால் முடிவு எப்படி வேண்டுமானாலும் மாறியிருக்கலாம். சச்சின் செய்த 2வது தவறு இது.

3) 18வது ஓவரில் 22 ரன்களை குவித்தார் பொல்லார்ட். அடுத்த ஓவரும் இதே போல் இருந்திருந்தால் சென்னை காலி. 19வது ஓவரை வீசியது ஆல்பி மார்கல். இவர் பொதுவாக ரன்களை வாரி வழங்குபவர் தான். ஆனால், இங்கே தோனியின் அறிவுரை உதவியது. பொல்லார்ட் அடித்த ரன்கள் பெரும்பாலும் மிட்-ஆன், மிட்-ஆஃப் மற்றும் மிட் விக்கெட் திசைகளில் மட்டுமே. அடிக்காத திசைகள் என்று பார்த்தால் கவர், பாயின்ட் மற்றும் பைன் லெக். பொல்லார்ட் (அஃப்ரிடி போல) 'கண்டபடி' அடித்து ஆடாதவர். அதனால் தான் தோனி, மார்கலிடம் சென்று பந்தை ஆஃப்-ஸ்டம்புக்கு வெளியே போடுமாறு கூறினார். அதனால் தான் அந்த ஓவரில் 6 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

முதல் பந்தில் ரன் இல்லை.

இரண்டாவது ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசப்பட்ட பந்தில் லாங்-ஆஃப் திசையில் ஒரு ரன்.

மூன்றாவது பந்தில் பொல்லார்ட் 4.

நான்காவது பந்தில் பொல்லார்ட் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே ரன் இல்லை.

ஐந்தாவது பந்து 1 ரன் மற்றும் ரன் அவுட்.

ஆறாவது பந்தில் பொல்லார்ட் மிட்-ஆஃபில் அவுட்.

ஆக, 0 - 1 - 4 - 0 - W1 - W

4) இது முக்கியமானது. பொல்லார்டை வெளியேற்றிய விதம். தோனி அமைத்த பீல்டிங் வியூகம் இது வரை யாரும் முயற்சி செய்யாதது. ஹைடனை மிட்-ஆஃபிலும், ரெய்னாவை லாங் ஆஃபிலும் நிற்க வைத்தது. இருவரும் சிறந்த பீல்டர்கள். இந்த இரு இடத்தினால், பைன் லெக்கில் யாரும் இல்லை. இது கொஞ்சம் டேஞ்சரான பீல்ட் செட்டிங். (கவனிக்க. பீல்டிங்கில் ஒருவரை 30 Yard வட்டத்தில் நிற்க வைத்தால், அவர்களுக்கு பின்னால் (Deep-ல்) மற்றொரு பீல்டரை நிறுத்த மாட்டார்கள். நிறுத்துவதும் வேஸ்ட்). எதிர்பார்த்தது போலவே பொல்லார்ட் ஹைடனிடம் அவுட்டானார்.

இந்த விஷயம் தான் தோனிக்கும் சச்சினுக்குமான வித்தியாசம். இந்த வித்தியாசம் தான் சென்னை கோப்பை வெல்ல உதவியது. இது சச்சினிடம் மிஸ்ஸிங். தோனியே இதை ஒரு வித்தியாசமான முயற்சி, இந்த முயற்சி பெயிலாகியிருந்தால் அதற்கான பலனும் தான் தான் சுமக்க வேண்டியிருக்கும் என்றார்.

ஆக, சச்சினுக்கும் தோனிக்கும் இருக்கும் முக்கியமான வேறுபாடு, இந்த சின்ன விஷயம் தான். இது சச்சினுக்கு வராது. அதனால் தான், சென்னை அணியின் ஓனர்கள் முதலில் தோனிக்கு குறி வைத்தது.

சச்சின் ஒவ்வொரு உலக கோப்பையிலும் வெளுத்து வாங்குவார். ஆனால், மற்ற இந்திய வீரர்களின் ஆட்டத்தால் வெற்றி பெறமுடியாமல் போய்விடும். இதே பிரச்சினை தான் மும்பைக்கும். அதன் வெளிப்பாடு தான் சச்சினின் அந்த வாசகம்.

இதில் இன்னும் இரண்டு விஷயம்.

1) கவாஸ்கர் மும்பைகர். சச்சினின் பாதங்களுக்கு முத்தமிட விரும்பியவர். கட்டாயம் சச்சினுக்கு தான் சப்போர்ட் செய்வார். சந்தேகமில்லை. டாஸ் போடும் முன், சச்சினை ரவி சாஸ்திரி பேட்டி எடுக்க, தோனியை கவாஸ்கர் 'பார்த்து' கொண்டார். அவர் தோனியை கேட்ட கேள்வி, அவரை மனதளவில் பலவீனப்படுத்த கேட்கப் பட்ட கேள்வி. "பெரிய பைனல் இது. (இதயத்தை காட்டி) இங்கே படபடப்பும், (வயிற்றை காட்டி) இங்கே கொஞ்சம் பட்டாம்பூச்சிகளும் பறக்கவில்லையா?". இதை ஏன் கேட்டார் என்று புரியவில்லை. (பின் சச்சினிடமும் கேட்டிருக்கிறார் கவாஸ்கர். "முதல் இரண்டு செமியிலும் முதலில் பேட் செய்தவர்களே வென்றிருக்கிறார்கள்? Are you not worried?". சுட்டிக் காட்டிய ராஜாவிற்கு நன்றி).

2) வட இந்திய ஊடகங்களின் செயல்பாடு. மும்பை வென்றிருந்தால் அன்று இரவு முழுவதும் அதையே காண்பித்திருப்பார்கள். ஆனால், சென்னை வென்றதை வெறும் விளையாட்டு செய்திகளில் மட்டுமே காட்டினார்கள். அவர்களுக்கு அப்போதைய ப்ரேக்கிங் நியூஸ் 'லலித் மோடி' பற்றியது. சென்னை இந்தியாவில் இல்லை என்ற மனோபாவம் தான்.

அவர்களுக்கு + சச்சினுக்கு தோனி வைத்தது தான் ஐ.பி.எல். 2010-ன் மிகப்பெரிய ஆப்பு.

சென்னையின் ஆட்டமும், ஆட்டம் கண்ட மும்பையும்...

42 comments:

  1. //சென்னை இந்தியாவில் இல்லை என்ற மனோபாவம் தான். //

    Media should come out of Delhi / Mumbai.. Unfortunately it is not happening..

    Good Write Up!

    ReplyDelete
  2. Unga pathivu late ha vandhalum latest ha vandhurruku.

    //அவர்களுக்கு + சச்சினுக்கு தோனி வைத்தது தான் ஐ.பி.எல். 2010-ன் மிகப்பெரிய ஆப்பு.

    super.

    IPL2010 MI lost mukiya karanam sachin than.

    ReplyDelete
  3. நன்றி Anonymous, செந்தில் குமார், palPalani.

    செந்தில்,

    //IPL2010 MI lost mukiya karanam sachin than.//

    லீக் மேட்சுகளில் இந்த அளவுக்கு மும்பை வென்றதற்கு காரணமும் அவரே...

    ReplyDelete
  4. சென்னை வென்றதும் நான் செய்த முதல் காரியம் - ndtv, cnn-ibn, headlines today சானல்களைப் பார்த்ததுதான்... ஒருத்தனும் ஃபைனல் வெற்றியைப்பற்றி பேசவேயில்லை - மோடி - சஸ்பெண்ட் பற்றிதான் செய்தியே..! இப்போவாச்சும் உணருங்க மக்கா.

    ReplyDelete
  5. சச்சினுக்கு இந்த கோப்பையை எப்படியாவது வென்றே ஆகவேண்டும் என்ற வெறி இருந்ததே தவிர, Sportsmanship இல்லவே இல்லை.

    #1) அரையிறுதியில்: ட்ராவிட்டின் கேட்சை பிடித்து அவர் போட்ட ஆட்டம். அது கேட்ச் இல்லை என்பது தெளிவாகவோ குறைந்தது சந்தேகமோ வரக்கூடிய வகையில் பிடித்ததற்கே குதித்தார். இதற்கு முன் எத்தனை முறை இது போன்ற சூழலில் ஃபீல்டர் தானே அவுட் இல்லை/சந்தேகம் என அறிவித்திருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். இதை சச்சினிடமிருந்து நான் எதிர்பார்க்கவில்லை.

    #2)இறுதி ஆட்டத்தில் அவரது கையுறையில் பட்டு பிடித்ததை தோனியும் ராய்னாவும் முறையிட்டபோது, அவரது நடிப்பு. சே! இத்தனை பெரிய மனிதனாக புகழப்படும் சச்சினிடமிருந்து இதையும் எதிர்பார்க்கவில்லை.

    அவரது ஒரே குறிக்கோள் கோப்பை. இதெல்லாம் ஒரு பொழப்பா???

    ReplyDelete
  6. //Media should come out of Delhi / Mumbai.. Unfortunately it is not happening..
    //சென்னை இந்தியாவில் இல்லை என்ற மனோபாவம் தான்.

    அதே மாதிரி தமிழ்நாடு இந்தியாவின் ஒரு அங்கமுன்னு இங்க இருக்குற நம்மவங்களும் மனதளவுல நினைக்கணும்; உதட்டளுவில பேசுறதோட நிக்க கூடாது. நம்மாளு ஈழத்துல தமிழன் அடிவாங்குனா இந்திய நாசமா போகணுமுன்னு சொல்லுறவன். கர்நாடகாவுல அடி வாங்குன உடனே ஊருக்கு ஊர் தெருமுக்குல தனி தமிழ்நாடு குடும்பான்(அதுவும் தமிழ் ஈன தலைவர்கள் மு.க., வைகோ, இராமதாசு, குறுமா எர்.. திருமா மாதிரி ஆளுங்கள நம்பிகிட்டு ). உடனே மகாராஷ்டிரா-ல தாக்கரே பன்னுரநேன்னு சொல்லுறவங்களுக்கு, அப்படி சொன்னாலும் அந்த மாநிலத்த இன்டியாவாதான் நினைக்கிறாங்க.

    ஏன் நாம்ம ஊருல மார்வாடி குடுக்குற பணத்துக்கு சொந்த ஊரானையே நம்ம ஆளு வெட்டுரதில்லையா...

    ReplyDelete
  7. chandru / RVC,

    //ஒருத்தனும் ஃபைனல் வெற்றியைப்பற்றி பேசவேயில்லை - மோடி - சஸ்பெண்ட் பற்றிதான் செய்தியே..!//

    மோடி - லலித் மோடி ;)

    Naufal MQ,

    அரை இறுதி பார்க்கவில்லை. ஆனால், ஃபைனலில் அவர் தானாக வெளியேறாதது ஆச்சரியம் + ஏமாற்றம் தான். மேலும் இதை பற்றி எந்த வர்ணனையாளரும் குறிப்பிட்டு கூட பேசாததும் ஆச்சரியம் தான். அவர் இந்தியாவுக்காக ஆடும் பொழுது இதை செய்திருந்தால், இதை நாம் ஒரு வேளை வரவேற்றிருப்போம். இந்த விஷயத்தில் கில்லி சச்சினை விட அருமையான மனிதர். அவுட் என்று தெரிந்தால் தானாக வெளியேறுவார். சச்சின் மேல் இருந்த மதிப்பு கொஞ்சம் குறந்தது உண்மை தான்.

    ReplyDelete
  8. yes nanum chennai win panniyathum NDTV channel parthen but highlights la nama ipl award win panniyathu kattave ella avangaluku lalith modi news than maina erunthathu.. very bad mumbaichannels&team

    ReplyDelete
  9. நல்ல அலசல்.

    //சென்னை இந்தியாவில் இல்லை என்ற மனோபாவம் தான்.//

    நான் இங்கு (பெங்களூரில்) மேட்ச் பார்த்துக் கொண்டு இருந்தபோது அருகில் இருந்த கன்னட நண்பர்கள் சென்னைஅணியின் விக்கெட்கள் விழும் பொது எல்லாம் கைதட்டி விசில் அடித்து ஆர்பரித்துக்கொண்டு இருந்தார்கள் அப்பொழுது எனக்கும் இதே சந்தேகம் வந்தது.


    பதிவுக்கு நன்றி நண்பரே...

    ReplyDelete
  10. Dhoni 2010 T20 west-indies world cup'la enna panurarunu paappom...,

    ipl oru suthaattam atha pathi aetharrkku vimarsanam....,
    ennakku onnum puriyala.......

    ReplyDelete
  11. //சென்னை இந்தியாவில் இல்லை என்ற மனோபாவம் தான். ///

    இது எப்ப விளங்குமோ எல்லாருக்கும் ??

    ReplyDelete
  12. நல்ல இடுகை.. விளக்கமாக இருந்தது.

    சச்சின் மேலிருந்த மரியாதை எனக்கும் கொஞ்சம் குறைந்தது.. After all this he can not be called God anymore..

    தோனியின் தலைமைப் பண்புகள் அட்டகாசம். இளையத்தலைமுறைக்கு ஒரு நல்ல முன்னுதாரனம்.

    ReplyDelete
  13. //1. கவாஸ்கர் மும்பைகர். சச்சினின் பாதங்களுக்கு முத்தமிட விரும்பியவர். கட்டாயம் சச்சினுக்கு தான் சப்போர்ட் செய்வார். சந்தேகமில்லை. டாஸ் போடும் முன், சச்சினை ரவி சாஸ்திரி பேட்டி எடுக்க, தோனியை கவாஸ்கர் 'பார்த்து' கொண்டார். அவர் தோனியை கேட்ட கேள்வி, அவரை மனதளவில் பலவீனப்படுத்த கேட்கப் பட்ட கேள்வி. "பெரிய பைனல் இது. (இதயத்தை காட்டி) இங்கே படபடப்பும், (வயிற்றைகாட்டி) இங்கே கொஞ்சம் பட்டாம்பூச்சிகளும் பறக்கவில்லையா?". இதை ஏன் கேட்டார் என்று புரியவில்லை.
    ///

    கவாஷ்கர் சச்சினிடம் " 2 செமி பைனலிலும் முதலில் பேட்டிங் செய்த அணி வென்றது, இப்போது நீங்கள் 2வது பேட்டிங், இதை எப்படி எடுத்து கொள்கிறீர்கள் என்றும் கேட்டார்

    ReplyDelete
  14. அப்படியா? கவாஸ்கர் மேட்ச் ஆரம்பிக்கும் முன் சச்சினிடம் பேசினாரா? டாஸ் போடும் போது அங்கிருந்தது தோனி, சச்சின், வெங்கட்ராகவன், லலித் மோடி மற்றும் ரவி சாஸ்திரி என்று நினைவு. டாஸ் போட்ட பின்பு ரவி சாஸ்திரி தான் பேசியிருக்க முடியும்.

    ReplyDelete
  15. சச்சின் நல்ல விளையாட்டு வீரர் ஆனால் நல்ல கப்டன் அல்ல. மும்பைக்கு தோணி வைத்தது சச்சினால் மறக்கமுடியாத ஆப்பு.

    ReplyDelete
  16. Plz avoid comments against SACHIN, before criticizing him watch the match video again. And dont compare captainship too.

    As a Tamilan i request dont do it again.
    Raja

    ReplyDelete
  17. Raja,

    Hello. Even am a BIG fan of Sachin.

    Watch my earlier post.

    http://jeeno.blogspot.com/2006/07/blog-post.html

    ReplyDelete
  18. Its ok dear. Have u watched the match fully.
    Raja

    ReplyDelete
  19. What he had said after finishing game, we (MI) played well except this match, he wished chennai team.
    raja

    ReplyDelete
  20. "நீங்கள் இந்த 'ஒரு' மேட்சில் எங்களை விட நன்றாக ஆடிவிட்டீர்கள்"

    given this is wrong statement, he never said like this. and most of your words on 2010 IPL final also is not correct.
    Raja

    ReplyDelete
  21. //Have u watched the match fully.//

    Of course.

    //What he had said after finishing game, we (MI) played well except this match, he wished chennai team.//

    I don think so. As far as I reember, he wished Chennai and stressed "you have played well 'this' match". His gesture is not as we expect from this master. But still am a big fan of him...

    //given this is wrong statement, he never said like this. and most of your words on 2010 IPL final also is not correct//

    I think you can watch the full match on youtube.

    ReplyDelete
  22. sachin is always god , who is that idiot saran to tell he is not god

    ReplyDelete
  23. u chennai people only supporting the idiot dhoni and chennai team , rest of tamilnadu always support the god only.

    ReplyDelete
  24. Highly biased article. First thing, am from Chennai. I watch cricket for past 16 years. Do you remember the happy moments that Sachin gave us for past 20 years? Do you remember how peacefully we switched off TV and went to sleep after India winning with the help of Sachin? Do you remember the 25 year old Sachin crying before 99 WC Kenya match but he played the match and hit century? He has given us happier moments in life than most of our friends.

    You guys support a team that has captain from Jarkhand, Vice captain from UP, Keeper from Gujarat, 2 batsmen from australia, 2 main bowlers from Aus and SA/SL, just because a team has the name "CHENNAI" in it?? That too against the player who has given us hundreds of sweet memories for past 20 years?? We can to be regionalistic, but without losing gratefulness. Support the team which has players you like. Supporting the team that has your city/region name is ridiculous. It shows you are more a regionalist than a cricket lover. (I am against anybody supporting a team just because it is from their region. It applies to Mumbai and other cities too)

    // அணியின் ஓனர் அம்பானி. எவ்வளவு பணம் வேண்டுமானாலும் இறைக்க முடியும் //
    Pointless argument. Chennai is the costliest IPL team.

    // "கஷ்டப்பட்டு எல்லா மேட்சிலும் வென்று நாங்க பைனல் வருவோம், நீங்க நோகாம அந்த ஒரு மேட்சை ஜெயிச்சுட்டு கப் அடிச்சிடுவீங்க" //
    Have you ever thought why there are so many league matches but only two semis and one final in all world tours? Why cant it be a 6 match round with 4 teams in semis? Why cant it be a best of 3 in finals? Because when there are more matches, more chances are there for the stronger team. When there is only one match, the odds are equal, and hence the thrill is more. (Aus lost to Zimbabwe in yesterday's practice match in T20, this can happen in semis/final too) So, in order to keep the match interesting for viewers, they keep knock-out semis and finals. And if the stronger team which performs good throughout doesn't perform on that day, it suffers.

    // ஒரே ஒரு மேட்சில் குறைந்த பந்தில் 50 ரண்களை எடுத்த பொல்லார்டை அதிக விலை கொடுத்து (6 கோடிகள்?) எடுத்துள்ளனர் //
    He is just 23. This is done with a view of future tours. Also, in 3rd IPL auction, there were less players, so more competition for IPL team owners quoting high prices.

    // மும்பை அணியில் சேர்க்கபட்டவர்கள் மொத்தம் 7 கீப்பர்கள். சென்னையிலோ தோனி மற்றும் பார்த்தீவ் பட்டேல் மட்டுமே கீப்பர்கள் //
    Are you kidding? You comparing part time keepers with Dhoni?

    @ Naufal MQ
    // இறுதி ஆட்டத்தில் அவரது கையுறையில் பட்டு பிடித்ததை தோனியும் ராய்னாவும் முறையிட்டபோது, அவரது நடிப்பு. சே! இத்தனை பெரிய மனிதனாக புகழப்படும் சச்சினிடமிருந்து இதையும் எதிர்பார்க்கவில்லை. அவரது ஒரே குறிக்கோள் கோப்பை. இதெல்லாம் ஒரு பொழப்பா??? //
    Sachin had taken 4 painkillers that would help to make the right hand to become numb and decrease pain. With the painkiller, he would not have felt the touch. How many years have you been seeing Cricket, sir? I see only kids who are less than 10 years and people who started watching cricket recently (basically who doesnt know about sachin raise questions like this) speak like this about Sachin.

    Anybody who has different opinion can comment, I will answer.

    ReplyDelete
  25. @Seenu, Yes Kavaskar spoke to him after the toss. Refer the link below. And Even after match presentation he said that CSK played better today. Yes after read your blog i watched that also. And SACHIN didn't speak like wat u said.... refer this link http://www.youtube.com/watch?v=ma46bUMTCu8 ans see the post ceremony. Please give CORRECT COMMENTS when you comment about SUCH A GREAT MAN.... PLEASE..... PLEASE.... WE ALREADY FEEL FOR SACHIN's BAD LUCK.... PLEASE....

    ReplyDelete
  26. ANd this is what happened when we play with club teams... SEE.... Even now, we are pin pointing Sachin's failures.... I'm not against giving Commets... But the way the comments are pointing here is something bad as i feel..... Soory if i am wrong....

    ReplyDelete
  27. உண்மைதான் சார்.. அன்று புனேவில் குண்டுவெடித்த பொழுது தமிழக‌ சேனலில் அதை ஒரு செய்தியாகக்கூட வெளீயிடவெல்லை.. எப்பொழுதும் தெற்க்கிற்க்கும் வடக்கிற்க்கும் ஒரு புகைச்சல் இருக்கிறதென்பதையே இது காட்டுகிறது!!

    ReplyDelete
  28. ஜெய் பாஸு,

    நாங்களும் சச்சின் ஃபேன் தான். இது ஒன்றும் சச்சினை பற்றி விமரிசிக்கும் பதிவு அல்ல. ஆனால், அவர் சொன்ன கருத்து, அவரை போன்ற ஒரு ப்ளேயர் வாயிலிருந்து வருவது தான் என்னை போன்றவர்களுக்கு வருத்தத்தை தந்தது.

    //You guys support a team that has captain from Jarkhand, Vice captain from UP, Keeper from Gujarat, 2 batsmen from australia, 2 main bowlers from Aus and SA/SL, just because a team has the name "CHENNAI" in it??//

    Thats what IPL is for, right? What about MI? No players from other states/countries? If you can support a team who have a captain from Mumbai, can't I support a team who have a captain from Jharkand? Even Jharkand is in India Jai...

    //We can to be regionalistic, but without losing gratefulness. Support the team which has players you like.//

    மும்மை மக்கள் சச்சினை என்ன தான் சப்போர்ட் பன்னினாலும், மற்ற அணியையும் மதிக்க தெரியனும். ஆனால், கடைசி 2 ஓவர்களில் மும்பை தோற்கிறது என்று தெரிந்ததும், மைதானமே காலியானது. அவ்வளவு பெரிய தொடர் முடிவுறும் போது, கோப்பையை அளிக்கும் போது வெற்றி பெற்ற அணிக்கு கை தட்ட கூட ஆளில்லை. முதல்ல அவங்க கிட்ட போய் இத சொல்லுங்க.

    இதே ஃபைனல் சென்னையில் நடந்திருந்தால், யார் ஜெயிச்சாலும், தோத்தாலும் மரியாதை ஒன்று தான். சென்னையில் சச்சின் ஆடிய ஆட்டத்துக்கு ஆதரவளிக்கவில்லையா சென்னை ரசிகர்கள்?

    //Supporting the team that has your city/region name is ridiculous.//

    ஐ.பி.எல். என்ற அமைப்பே நகரத்தை வைத்து நடத்தப்பட்டது தானே. நான் சென்னையை ஆதரிக்கிறேன். ஆனால், அதற்காக சச்சின் சென்னையிடம் ஆட்டமிழந்த போது சந்தோஷப் படவில்லை. சச்சினுக்கு மட்டும் ஏன் தோல்வியை சகிச்சிக்க முடியவில்லை? சென்னை வென்றவுடன், வட இந்திய சேனல்களை பார்த்தீர்களா?

    //So, in order to keep the match interesting for viewers, they keep knock-out semis and finals. And if the stronger team which performs good throughout doesn't perform on that day, it suffers.//

    அப்புறம் ஏன் சார் சச்சின் இந்த கமென்ட் கொடுத்தார்? கேட்டு சொல்லுங்க. ஃபைனல் முடிந்ததும் அவர் முகத்தை பார்த்தீர்களா? சச்சின் போன்ற மேதைகளிடம் இதை எதிர்பார்க்கவில்லை.

    //He is just 23. This is done with a view of future tours. Also, in 3rd IPL auction, there were less players, so more competition for IPL team owners quoting high prices.//

    என் கருத்தை நீங்கள் சரியாக உள்வாங்கிக் கொள்ளவில்லையோ என்று நினைக்கிறேன். நான் சொல்ல வந்தது, உலகின் பெஸ்ட் ப்ளேயர்ஸை வாங்கிவிட்டால் அந்த அணி வென்றுவிடும் என்ற நினைப்பு தவறு என்பதை தான். முதல் தொடரில் வென்றது யாரும் எதிர்பார்க்காத ராஜஸ்தான். வெறும் கத்துக் குட்டி அணி அது.

    //Are you kidding? You comparing part time keepers with Dhoni?//

    Am not comparing the count / comparing Dhoni with them. Rather, why do they are so keen to select these much keepers? Of course, its their wish. But still, I want to make clear the point that selecting best players may not lead to a win. Why do MI cannot come into SF in 2008 and 2009, with the best players with them. Do you still think MI is not the costlier team than others?

    //Sachin had taken 4 painkillers that would help to make the right hand to become numb and decrease pain. With the painkiller, he would not have felt the touch.//

    I agree with this point.

    ராஜா,

    //Yes Kavaskar spoke to him after the toss.//

    You are correct.

    //Even after match presentation he said that CSK played better today. Yes after read your blog i watched that also. And SACHIN didn't speak like wat u said//

    I will check and come back to you.

    //Even now, we are pin pointing Sachin's failures//

    சச்சின் இதற்கு முன் பலமுறை தவறியிருந்த போதும் அப்பொழுதெல்லாம் சச்சினை குறை சொல்லவில்லை. ஆனால், இந்த ஃபைனல் மட்டும் ஏன் எல்லோருக்கும் சென்னை மட்டும் தோற்க வேண்டும்? டி.வி.களின் கவரேஜை பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். How can a media can be biased? If they are, then why not me?

    ReplyDelete
  29. //உண்மைதான் சார்.. அன்று புனேவில் குண்டுவெடித்த பொழுது தமிழக‌ சேனலில் அதை ஒரு செய்தியாகக்கூட வெளீயிடவெல்லை.. எப்பொழுதும் தெற்க்கிற்க்கும் வடக்கிற்க்கும் ஒரு புகைச்சல் இருக்கிறதென்பதையே இது காட்டுகிறது!!//

    அப்படியா? சரியான தகவல் தானா?

    ReplyDelete
  30. //அவர்களுக்கு + சச்சினுக்கு தோனி வைத்தது தான் ஐ.பி.எல். 2010-ன் மிகப்பெரிய ஆப்பு//

    Super appu...

    ReplyDelete
  31. //2) பொல்லார்டை 3 ஓவர்கள் மட்டுமே இருக்கும் போது களமிறக்கியது. இன்னும் முன்னதாக களாமிறக்கியிருந்தால் முடிவு எப்படி வேண்டுமானாலும் மாறியிருக்கலாம். சச்சின் செய்த 2வது தவறு இது.//

    இது சச்சின் செய்த தவறு அல்ல. கிரிக்கெட்டில் கத்துக்குட்டிகள் நாமே இதை யோசிக்கும் போது சச்சின் யோசித்திருக்க மாட்டாரா என்ன? உண்மை என்னவெனில் பொல்லார்ட் சுழற்பநத்தை எதிர்கொள்ள சிரமப்படுகிறார்(இரண்டு லீக் ஆட்டங்களிலும் சுழற்பந்தில் தான் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்துள்ளார்.). டோனி 17 வது ஓவர் வரை சுழற்பந்து தாக்குதலை தொடர்ந்ததால் சச்சின் போலார்டை அனுப்பாமல் தாமதபடுத்தி வந்தார். கடைசி 3/4 ஓவர்கள் கண்டிப்பாக வேக பந்து வீச்சாளர்களை தான் எந்த கேப்டனும் பயன்படுத்துவார்கள். அதனாலேயே 17 வது ஓவரில் போலார்ட் விளையாட வந்தார். இது சச்சினின் தவறல்ல... தோனியின் தந்திரம்... அதை முறியடிக்க சச்சினிடம் பதில் இல்லை என்பதே உண்மை.

    ReplyDelete
  32. sachin have played only for money

    ReplyDelete
  33. //கடைசி 3/4 ஓவர்கள் கண்டிப்பாக வேக பந்து வீச்சாளர்களை தான் எந்த கேப்டனும் பயன்படுத்துவார்கள்.//

    ம்ஹூம்...இது அந்த ஆட்டத்தின் போக்கை பொருத்து மாறும். சரி! நம்மகிட்ட தான் பார்ட் டைம் பௌலர்கள் இருக்காங்க. சுரேஷ் ரெய்னா மாதிரி. அவங்கள கடைசி 3 ஓவர் யூஸ் பன்ன முடியாதா?

    சரி! ஸ்பின் ஆட முடியலன்னா பொல்லார்டை இறக்கலைங்கிறது நல்ல கேப்டனுக்கு அழகாக இருக்க முடியாது. நல்ல ப்ளேயருக்கும் (பொல்லார்ட்) அழகாக இருக்க முடியாது.

    //இது சச்சினின் தவறல்ல... தோனியின் தந்திரம்... அதை முறியடிக்க சச்சினிடம் பதில் இல்லை என்பதே உண்மை.//

    பதில் இல்லைன்னா எப்படி ராஜ்? அதானே இரண்டு கேப்டனுக்கும் உள்ள வித்தியாசம்.

    ReplyDelete
  34. @ சீனு,

    // Thats what IPL is for, right? What about MI? No players from other states/countries? If you can support a team who have a captain from Mumbai, can't I support a team who have a captain from Jharkand? Even Jharkand is in India Jai... //

    IPL is about Cricket.
    I am NOT in favour of Mumbai city, also NOT against Chennai.
    I am in favor of who supports any team which has players they like. I am NOT in favor of people who support a team just because it is from their region.
    If somebody likes Dhoni or Raina or Murali or any CSK player and hence ONLY support CSK, then I admire them. Just like I support MI because I like Sachin, anybody can support CSK because they like any CSK player.
    If somebody likes Sachin, but supports CSK JUST because it is "Namma Chennai Team", then it is ugly. they are more regionalist than cricket lover.
    Again am saying, you can support any team. Am not speaking in favor of MI. Support any team that has players you always liked. IPL team have region names. That has been done to capture the foolish audiences who will blindly support their region. I know a lot of people who never watch test ot ODI matches, (or dont even know cricket rules fully), but just watch IPL for fun and support the team from their region. I like when a Mumbaikar supports CSK because he likes Dhoni and a Chennaite supports MI because he likes Sachin.

    // முதல்ல அவங்க கிட்ட போய் இத சொல்லுங்க.//
    vidave maateengala? again, am never supporting a city called Mumbai and not against Chennai city. Am against stupid supporters who forget great players and just support a team from their region. They support Sachin for 10 months and support Rainas and Muralis for 2 months?? If Mumbai people have done it, they are definitely wrong.

    //நான் சென்னையை ஆதரிக்கிறேன்.//
    Why? probably because you are from Chennai/TN.
    // சென்னை வென்றவுடன், வட இந்திய சேனல்களை பார்த்தீர்களா?//
    Because they are from North India. Am saying both you and the TV channels are WRONG in supporting their regions.

    // அப்புறம் ஏன் சார் சச்சின் இந்த கமென்ட் கொடுத்தார்? கேட்டு சொல்லுங்க. ஃபைனல் முடிந்ததும் அவர் முகத்தை பார்த்தீர்களா? சச்சின் போன்ற மேதைகளிடம் இதை எதிர்பார்க்கவில்லை. //
    You haven't understood my point. Read again.
    Have you ever thought why there are so many league matches but only two semis and one final in all world tours? Why cant it be a 6 match round with 4 teams in semis? Why cant it be a best of 3 in finals? Because when there are more matches, more chances are there for the stronger team. When there is only one match, the odds are equal, and hence the thrill is more. (Aus lost to Zimbabwe in yesterday's practice match in T20, this can happen in semis/final too) So, in order to keep the match interesting for viewers, they keep knock-out semis and finals. And if the stronger team which performs good throughout doesn't perform on that day, it suffers.
    Players are made scapegoat to make ONE interesting final for viewers. This is why Sachin felt sad. Even we will feel sad if India wins more matches in WC league and other rounds, but loses to a team in final which had won less matches in league and other rounds. Right?

    // How can a media can be biased? If they are, then why not me?//
    This is not a good mentality for a writer. When you are writing in public, you need to tell what is right. Yuo cant point your fingers at others who are doing the mistake. Will you do a mistake or an unlawful event if many other persons do? Don't get support from wrong examples. they are wrong, you are also as wrong as they are.

    ReplyDelete
  35. Very interesting and detailed analysis. This I had tweeted the same thing about Dhoni's captaincy and even add it is one of the over confident by Mumbaikars that they WILL win. Dhoni was very cool. Hope I had not seen any such captain cool in my age.

    ReplyDelete
  36. //You haven't understood my point. Read again.//

    I understood your point. If that is the case, Sachin knows that it is the part of the game to loose in just the 'one BIG match'.

    //Will you do a mistake or an unlawful event if many other persons do? Don't get support from wrong examples. they are wrong, you are also as wrong as they are.//

    I am not a Mahathma.

    You support a team, because you have your favourite person in the team. I support a team because it is Chennai. I don think it is wrong. It does not mean that I hate Sachin. When Sachin got out against am not happy nor unhappy.

    Moreover, I don support MI and RCB just because of the owners of their respective team.

    இன்று ஆப்கானுடனான மேட்சின் போதும் தோனி பேசியதை நான் ரசிக்கவில்லை. "Its always good to win a team like Afganistan".

    ReplyDelete
  37. /சென்னை இந்தியாவில் இல்லை என்ற மனோபாவம் தான். /
    உங்களின் கருத்து சில எனக்கு உடன்படு இல்லை ...முதலில் நாம் அனைவரும் இந்தியர் பிறகு தன மும்பை ,தமிழ்நாடு இதெல்லாம் ..//பிறகு டோனி இந்தெர்விஎவ் செய்தது ரவி சாஸ்திரி தன தவிர கவாஸ்கர் அல்ல .....சச்சின் சென்னை மனதார பாரடினரி தவிர எதையும் மனதில் வைத்து பேசவில்லை ......//அவர்களுக்கு + சச்சினுக்கு தோனி வைத்தது தான் ஐ.பி.எல். 2010-ன் மிகப்பெரிய ஆப்பு.//
    இந்த சொல்லிலும் எனக்கு உடன் பாடு இல்லை .....விளையாட்டு என்பது நட்புறவை வளர்க்க தான தவிர இது போன்ற விமர்சங்கள் எல் அல்ல ....மற்ற படி உங்கள் பதிவு அருமை ...

    ReplyDelete
  38. நன்றி RajaS* Forever *,

    //உங்களின் கருத்து சில எனக்கு உடன்படு இல்லை ...முதலில் நாம் அனைவரும் இந்தியர் பிறகு தன மும்பை ,தமிழ்நாடு இதெல்லாம்//

    இதை அவர்களும் சொல்ல வேண்டுமே...

    //பிறகு டோனி இந்தெர்விஎவ் செய்தது ரவி சாஸ்திரி தன தவிர கவாஸ்கர் அல்ல//

    முதலில் கவாஸ்கர், பின் டாஸ் போட்ட பின்பு கவாஸ்கர்.

    ReplyDelete
  39. முன்னரே உங்களது இந்த பதிவை படித்திருக்கிறேன் என நினைக்கிறேன். கமெண்டவில்லை அவ்வளவே. வட இந்தியர்களுக்கு நம்மள பாத்தா ஆகவே செய்யாது போல இருக்கு.

    ReplyDelete