"உலகில் பெண்கள் 'மட்டும்' தான் சமையல் எக்ஸ்பர்டா? இது என்னடா கொடுமை"-னு மல்லாக்கப் படுத்து (சரக்கடிக்காம இருந்த போதுனு சொன்னா நம்பவா போறீங்க?) யோசிச்சு பாத்ததுல, ஆண்களும் தான் கஷ்டப்படுறாங்க. ஆனா, அவங்க ஒழுங்கா சமையல் செய்ய மாட்டாங்கனு ஒரு தாட் இருக்கு. மாத்தனும். இந்த எண்ணத்த தான் மாத்தனும்! என்ன பன்னலாம்னு யோசிச்சு பாத்தா, அட! ஆண்களுக்கும் சமையல் டிப்ஸ் கொடுக்கலாமேனு தோணிச்சு.
சென்னை தெருக்களில் இருக்கும் கையேந்தி பவன் முதல் தாஜ் ஹோட்டல் வரை சமையல் செய்வது ஆண்களே! ஆண்களே!! ஆண்களே!!! ஆனா இந்த ஒரு விஷயத்த வெச்சிகிட்டு இந்த பெண்கள் பன்னுற அலப்பரை இருக்கே...ஐயோ! ஐயோ!!
பல்வேறு காலகட்டங்களில் நான் சந்தித்த சோதனை, அதிலிருந்து மீண்டு பீனிக்ஸ் செஃப்பாக (என்னாது???) வந்த பாதைகளை மற்ற ஆண்களுடன் பகிரலாமே என்ற எண்ணம் வந்தது. அதுக்காகத்தான் இந்த ஆட்டோகிராஃப்...
1. போன வாரம் ஒரு நாள், டீ போடலாம்னு பால அடுப்புல வெச்சு காச்சினேன். பொங்கும் சமயம் அடுப்பை சிம்ல வெக்கிறது பழக்கம். அப்படியே வெச்சாச்சு. நாயர் கடை ஸ்டைல்ல டீ சப்பிடலாம்னு ட்ரை பன்ன இன்னொரு பக்கம் சின்ன பாத்திரத்துல தண்ணீயும் டீத்தூளும் போட்டு காய்ச்சி நல்லா கொதிக்கிற வரைக்கும் விட்டுட்டு அப்புறம் அதை எடுத்து வடிகட்டி, ஸ்ட்ராங்க் டிகாஷன் மட்டும் ஒரு டம்ளர்ல ஊத்தியாச்சு. அப்புறம் அடுப்பிலிருந்த பாலை எடுத்து ஒரு டம்ளர்ல ஊத்தி, கொஞ்சம் சக்கரை, அப்புறம் அந்த வடிகட்டின டிகாஷனையும் ஊத்தி ஒரு ஆத்து ஆத்துனா...நாயர் கடை ஸ்டைல் டீ ரெடி.
அன்னைக்கு ஏதோ கிரிக்கெட் மாட்ச். இந்த பக்கம் டீ, அப்புறம் கொஞ்சம் ஸ்நாக்ஸ், தொட்டுக்க கிரிக்கெட் மாட்ச்னு சுவாரஸ்யமாத்தான் இருந்துச்சு.
என் வீட்டுக்கு முன் இருப்பவர்கள் சில சமயம் கொசுவை விரட்ட சருகுகளையும் (அதுல சில சமயம் ப்ளாஸ்டிக் பேப்பர்களும் இருக்கும்) எரிப்பார்கள். ஒரு அரை மணிநேரம் கழிச்சு பாத்தா பயங்கர ஸ்மெல். எங்க இருந்து வருதுனு தெரியல. வெளியில போய் பார்த்தாலும் ஒன்னும் இல்ல. பின் பக்கம் சமயலரைக்கு போய் பார்த்தாலும் தெரியல. என்னடா இதுன்னு யோசிச்சு எதேச்சையா பாத்தா, மிச்சம் இருக்குற பாலில் இருந்து தான் வந்துச்சு. அடுப்பு இன்னும் சிம்-ல. டக்குன்னு கேஸை அணைச்சு (இதுவா சார் உங்க டக்கு) பாலை மூடியிருந்த தட்ட எடுத்து பாத்தா, பால் சுண்டிப்போய் அரை மணி நேரமாயிருந்தது. அப்ப இந்த அரை மணிநேரமா எரிந்திருந்தது? பால் பாத்திரத்தோடு ஒட்டி போய், பின் பால்கோவா ஆகி, பின் பல ஸ்டேஜ்களை கடந்து ஏதோ ஒரு வஸ்துவாகி போயிருந்தது. தீஞ்ச நாத்தம் தாங்க முடியல. அப்படியே தண்ணியில போட்டுட்டு வந்தாச்சு.
டிப்ஸ் 1: தேவை இல்லாத போது அடுப்பை அணைக்கவும் (ஆண்களுக்கான சமையல் டிப்ஸ் வேற எப்படித்தான் இருக்கும்???!!!)
2. வருடம் 2001. வளசரவாக்கத்துல ஒரு வீட்டை வாடகைக்கு பிடிச்சு 7 பேர் குடியிருந்தோம். வேலை தேடி அலைஞ்ச வேளை (செப். 11-க்கு பிறகு). செலவை குறைக்க வீட்டிலயே சமையல் செஞ்சுகொள்ளலாம்னு முடிவு பண்ணி அதுக்கேத்த பத்திரங்களையும் வாங்கியாச்சு. 7 பேருல ஒருத்தன் எனக்கு சமைக்க தெரியும்னு சொல்லி பொதுகுழுவ கூட்டி ஃப்ரைடு ரைஸ் செய்யலாம்னு முடிவு பண்ணியாச்சு. ஆளாளுக்கு தெரிஞ்ச வேலைய செஞ்சு அவனுக்கு உதவ, குக்கர்ல சாதம் வெச்சாச்சு.
வேலை நடந்துகிட்டிருக்குற சமயம் "டேய். இத ப்ரைடு ரைஸ்க்கு போடலாமா?"னு ஒருத்தன் கேக்க, இந்த எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம், "போடலாம். போடலாம். எல்லாம் சாப்பிடுறது தான ப்ரதர்!" அப்படீன்னு சொன்னான். அப்பவே நாங்க சுதாரிச்சிருக்கனும். மிஸ் பன்னிட்டோம்.
சாதம் வெந்து குக்கரை ஓப்பன் பன்னியாச்சு. சாதமும் நல்லா தான் வந்தது. அடுத்து அந்த ரைஸ வெச்சு ஃப்ரைடு ரைஸ் செய்யனும். அவனும் என்னன்னவோ செஞ்சு பார்த்தான். கடைசி வரைக்கும் அந்த ரைஸ், ஃப்ரைடு ரைஸ் ஆகவேயில்ல. அதனால், வெட்டி வெச்சிருந்த காய்கறியை எல்லாத்தையும் போட்டு ("எல்லாம் சாப்பிடுறது தான ப்ரதர்!") மூடிவெச்சு எடுத்து, கடைசியில அதுக்கு அவன் வெச்ச பேர் 'வெஜிடபிள் பிரியாணி'.
டிப்ஸ் 2: "சமைக்க தெரிஞ்சத விட சமாளிக்க தெரியனும்".
3. அதே வீட்டுல ஒரு முறை நாங்க வெளிய போயிருந்தோம். வீட்டிலிருந்த ஒருத்தன் சமைக்க ஆரம்பிச்சிருந்தான். செஞ்சு வெக்க சொல்லி பக்கத்துல இருந்த ஃப்ரண்டு வீட்டுக்கு போயிருந்தோம். திரும்பி வந்து (மோந்து) பாத்தா, மீன் கொழம்பு. வாசம் தூக்குது. எங்களுக்கெல்லாம் ஆனந்த கண்ணீர். மணிரத்னம் படத்துல வர்ற மாதிரி "எப்படி? எப்படி இதெல்லாம்?"னு ஒரே சென்டிமென்ட் சீன். கடைசியில பாத்தா, இவன் வெக்குற லட்சனத்த பாத்து பக்கத்து வீட்டுல இருந்த ஒரு ஆன்ட்டி அவங்க வீட்டுல இருந்து "ஒரு நாளைக்கு மட்டும்" செஞ்சு கொடுத்து அனுப்பியிருக்காங்க.
டிப்ஸ் 3: சரியா சமைக்கலைன்னாலும் அத பக்கத்து வீட்டுக்கு தெரியற மாதிரி சமைக்கனும்.
4. குக்கர்ல அரிசியை வெச்சாச்சுன்னா, நமக்கு அதை சாதமாக மாத்தித் தரக்கடவது குக்கரின் வேலை தானே? அதானே நியாயமும் கூட? ஆனா பாருங்க, ஒரு தடவை இப்படிதான் குக்கர்ல அரிசியை வெச்ச அப்புறம் கொஞ்சம் நேரம் கழிச்சு விசில் அடிச்சுகிட்டே இருந்துச்சு. 5 விசிலுக்கு அப்புறம் அணைக்கலாம்னு போனா, 'டமார்'னு ஒரு சத்தம். அப்புறம் உள்ளார இருந்த எல்லா காத்தும் 'புஸ்'ஸுனு வெளியேரிச்சு. அப்டியே ஷாக்காயிட்டேன். அப்புறம் நடந்தத ஸ்லோ மோஷன்ல ஓட்டி பார்த்த போது, குக்கரின் மூடியில் இருந்து ஒரு குட்டி ஏலியன் வஸ்து போல ஏதோ ஒன்று எகிரியது மாதிரி இருந்தது. அது ஏதோ சின்னாதா இருந்தது. அடுப்பை அணைச்சு மூடியை தொறந்து பாத்தா தான் தெரிஞ்சது...
டிப்ஸ் 4: அரிசி வெச்சாமட்டும் போதாதாம்...தண்ணியும் வெக்கனுமாம்.
5. இது ஒரு Mathematical and Technical ப்ராப்ளம்...ஒரு சமயம் மேகி (மரகதவள்ளி அல்ல) நூடுல்ஸ் செய்யலாம்னு முடிவெடுத்து(!), அதற்கான வேலைகளும் ஆரம்பிச்சாச்சு. அதுல போட்டிருந்தபடி முதலில் 225 மில்லி கொதிக்க வெச்ச தண்ணியில நூடுல்ஸை போடனுமாம். இப்ப தான் டெக்னிகல்லி ஒரு ப்ராப்ளம் வந்துச்சு. அதாவது 255 மில்லின்னா எவ்வளவுனு? புதுசா சமைக்கிறதுனால எதையும் பர்பெக்டா செய்யனும் இல்லையா? அதனால நல்லா யோசிச்சு ஒரு முடிவெடுத்தாச்சு. வீட்டுல போன வாரம் ஒரு ஃப்ரண்டு வந்திருந்தான். 'அவன்' அடிச்சு போட்ட (கண்டுக்காதீங்க) ஒரு காலி க்வாட்டர் பாட்டில் இருந்துச்சு. அது 180 மில்லி. அப்புறம் 180 / 2 = நைன்ட்டி, அதாவது 90. அப்புறம் 90 / 2 = கட்டிங் (சரி தானே!), அதாவது 45. ஸோ, ஒரு க்வாட்டரும் (180) + ஒரு கட்டிங்கும் (45) சேத்தா அது 225. இதை அளந்து பாத்தா ஒரு க்ளாஸ் 'ஃபுல்லா' வந்தது. அதுக்கப்புறம் இன்னொரு க்ளாஸ் எடுத்து அந்த அளவை மார்க் பன்னி வெச்சாச்சு.
டிப்ஸ் 5: "மேத்தமேடிக்ஸ் படிச்சா எந்த ஃபீல்டுலையும் கலக்கலாம்"னு எங்க கணக்கு வாத்தியார் சொன்னது சரிதான் போல...
டிப்ஸ் 5a: என்னதான் 225 மில்லி அளவெடுத்து வெச்சாலும், மேகி ஒழுங்கா வேகவேயில்ல. தண்ணி பத்தல. அப்புறம் தான் ஒன்னு புரிஞ்சது. அதுல போட்டிருந்தது "கொதிக்க வைக்கப்பட்ட 225 மில்லி தண்ணீரில்...". "225 மில்லி தண்ணீரை கொதிக்க வைக்கவேண்டும்"-னு போடல, இல்லையா? (லாஜிக்காமாம்...)
6. கல்யாணமான அப்புறம், வீட்டுல என் மனைவி மொத தடவையா இட்லி செஞ்சா, ம்ஹூம்...செய்ய முயற்சி பன்னினா. என்னை 'சோதனை கூடத்து' எலி ஆக்குறதுல அவளுக்கு ஒரு சந்தோஷம். உள்ள ஏதோ ஒரு வேளையா போனவ, எனக்கு ஒரு அஸைன்மென்ட் கொடுத்துட்டு போனா. அதாவது 5 விசில் அடிச்சப்புறம் நான் கேஸ் அணைக்கனும். அப்ப பாத்து ஐ.பி.எல். மேட்ச். டிவி.யில விசில் போடுன்னு தோனி சொன்னதால, விசில் மேல விசில் பறந்துகிட்டு இருந்தது. இந்த பக்கம் குக்கரிலும் விசில் மேல விசில் பறந்துகிட்டு இருந்துச்சு. கடைசியில குத்துமதிப்பா ஒரு 12 விசிலுக்கு(!) அப்புறம் நியாபகம் வந்து ஓடிப்போய் கேஸை அணைச்சு, குக்கர ஓப்பன் பன்னி பாத்தா, அட, இட்லி சுப்பரா வந்துச்சு.
டிப்ஸ் 6: Mistakes are the secret of Succeeeeeeeeeeeess.
அப்புறம், இது அவுட் ஆஃப் சிலபஸ்...
வீட்டுல ஒரு முறை வெளிய போய்ட்டு வந்தேன். வீட்டில் கண்ணாடி முன் ஒரு பேப்பரின் மேல் பாதி 5* சாக்லேட் இருந்தது. நாங்க தான் எதையும் ஃபர்பெக்டா செய்வோமே. அதனால முகமெல்லாம் அலம்பிட்டு ஃப்ரஷ்ஷா வந்து சப்டுவோம்னு போய் முகமெல்லாம் கழுவிட்டு வந்தேன். அந்த சாக்லேட்ட எடுக்கலாம்னு போனேன். என் அக்கா, "என்ன பன்னுற?"னு கேட்டா. "சாப்பிட போறேன்"னு சொன்னேன். "போய்டுவ பரவாயில்லையா?"னு கேஷுவலா கேட்டா. ஒன்னுமே புரியல. அப்புறம் தான் தெரிஞ்சது, அது 5* சாக்லேட் இல்ல, எலிய கொல்றதுக்காக வெச்சிருந்த எலி மருந்துனு. அப்பல்லாம் சாக்லேட் ஸ்டைல்ல எலி மருந்து தயாரிக்கிறது தான் பேமஸ் போல...
Friday, May 21, 2010
Sunday, May 02, 2010
சுறா - நல்ல படம்
அடிச்சு பிடிச்சு முதல் நாள் முதல் ஷோவுக்கு டிக்கெட் வாங்கி, சீட் பிடித்திட வேண்டும் என்ற 'வெறி'யுடன் உள்ளே நுழைந்து, எனக்கும் என் நண்பர்களுக்கும் சேர்த்து 8 சீட்கள் பிடித்தாகிவிட்டது. நாங்கள் இரண்டு பேர் தான் அந்த 8 சீட்டுக்கும் காவல். இவனுங்க எங்க போனானுங்க? போன் போட்டால், வெளியே தான் இருக்கிறோம். சிகெரட் வாங்கி 5 நிமிஷத்துல வந்துடுவோம்னாங்க. 15 நிமிஷம் ஆச்சு. வருபவர்களிடமெல்லாம், "ஹலோ பாஸ். ஆள் வர்றாங்க", "ஆமாமா. ஆள் வர்றாங்க" என்று சொல்லியே அலுத்துவிட்டது. எவன் வந்து சண்ட போட போறானுங்களோ.
படம் போட்டு 10 நிமிஷம் கழிச்சு வந்து தொலஞ்சானுங்க. ஒரு வழியா எல்லாரும் செட்டிலாகி, லைட்டை அனைக்க, விசில் சத்தம் காதை பிளக்கிறது. இப்படியே போனால் படம் எப்படி பாக்குறது? சரி! இதுவும் ஒரு வித்தியாசமான சூழல் தானே? விளம்பரங்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக, சத்தமும் அதிகமாகிறது. ஆப்பரேட்டர்கள், தியேட்டர் ஓனர், அவர் குடும்பம் என்று அனைவரும் இழுக்கப்படுகின்றனர்.
சுறா - சர்டிப்பிகேட் திரையில் ஒட, அத்தனை பேரும் பரவசம் வந்தவர்களாக விசில் சத்தமும், கத்தலுமாக படத்தை வரவேற்றனர். சன் பிக்சர்ஸ் கலாநிதியின் பெயர் வந்தால், அதற்கும் விசில். ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தேன். அட! இவர் கூட இம்புட்டு ரீச் ஆகிட்டாரேனு. விஜய்-ன் பெயர் திரையில் வந்தது தான் தாமதம். அதற்கும் விசில் பறக்கிறது. சரியான விசிலடிச்சான் குஞ்சுகள். ஆர்ப்பாட்டமெல்லாம் அடங்கி படம் ஆரம்பமாகிறது.
யாழ்நகர்(?!) மக்களின் தலைவன் விஜய். அவர் எல்லோருக்கும் செல்லம். இன்ட்ரோவில் கடலுக்கு மீன் பிடிக்க போனவர்கள் காணாமல் போக, அனைவரும் தேடுகிறார்கள். எல்லோரும் திரும்பிவிட, விஜய் மட்டும் காணவில்லை. எல்லோரும் விஜய்யை காணாமல் தேட, அவர் மட்டும் நீச்சல் அடித்தபடி கரையை நெருங்க, ஓப்பனிங் சீன் ஆச்சே, விசில் அடிக்காமல் இருப்பானுங்களா? கற்பூரம் வேறு கொளுத்தினார்கள். நல்ல வேளை திரையை மட்டும் கொளுத்தவில்லை...ஏதோ பாட்டு ஆரம்பமிக்க போகுதுனு தெரியுது. பாட்டும் வந்தது. பாடல் வரிகளும் காதில் விழவேயில்லை. பாடல் முடிந்ததும் படம் கதை வேகம் பிடிக்கிறது.
அவர் சார்ந்திருக்கும் குப்பத்தை இடித்து விட்டு அங்கு ஒரு தீம் பார்க் கட்ட திட்டம் போடுகிறார். அந்த குப்பத்து மக்களின் ஒரே பாதுகாவலன் விஜய். இதை கேள்விப்பட்டதும் சீறுகிறார். வில்லனுக்கும் அவருக்குமான லடாய் ஆரம்பமாகிறது. இடையில் விஜய் முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்ற வெறியுடன், எல்லா கோக்கு மாக்குகளையும் செய்கிறார். இதில் யார் வென்றார்கள் என்பதை வெண் திரையில் காண்க.
படத்தில் விஜய் அவ்வளவு அழகாக தெரிகிறார். அவர் காஸ்ட்யூம் டிசைனர் அவரது மனைவி சங்கீதா. வடிவேலுவுடன் அவர் அடிக்கும் கும்மிகள் அனைத்தும் குபீர் ரகம். போக்கிரிக்கு பிறகு இருவரும் சேர்த்து கலக்கியிருக்கிறார்கள்.
தமன்னா, சோ க்யூட். நாய் காணாமல் போனதற்காக தற்கொலை வரை செல்லும் வெகுளிப்பெண் பாத்திரம். கவர்ச்சியும் சற்று தூக்கல். இருந்தாலும் அழகு. வழக்கமான ஹீரோயின்கள் போல் இல்லாமல், படம் முழுவதும் சற்று வெயிட்டான கேரக்டருடன் வருகிறார். தமன்னாவுக்கு ரசிகர் மன்றம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
பாடல்கள் சுமார் ரகம் என்றாலும் பின்னனி இசையில் பின்னி பெடலெடுக்கிறார் மணிசர்மா. வெற்றிக்கொடி, நான் நடந்தா பாடல்கள் ஓகே ரகம். தியேட்டர் அதிருகிறது. விசில் சத்தத்தில் வரிகள் கேட்கவேயில்லை.
அதிரடியான திரைக்கதை, சூடான பஞ்ச் வசனங்கள், அசத்தலான பாடல்கள், காமெடி கலாட்டா, க்யூட் தமன்னா என்று படம் போரடிக்காமல் போகிறது. கொடுத்த காசுக்கு ஒரு நல்ல என்ட்டர்டெயின்மென்ட் படம் பார்த்த திருப்தி.
சில இடங்களில் போர் அடித்தாலும், மொத்தத்தில் படம் ஓகே.
படம் முடிந்து அனைவரும் எழுந்து போகும் போது, மீண்டும் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும் இசை. ஒரே கன்ப்யூஷன். திடீரென்று என்னை யாரோ தட்டி எழுப்புவது போல இருக்க கண்ணை திறந்து பார்த்தால், திரையில் படத்தின் டைட்டில் ஓடிக்கொண்டிருந்தது. படம் பார்க்க ஆயத்தமானோம்...!!!
சரி! படம் எப்படி? அதான் தலைப்பு சொல்லுதே...(தலைப்பை படிக்கும் போது சரியான மாடுலேஷனில் படிக்கவும்).
Very ஹாப்பி பர்த்டே 'தல'
பிற்சேர்க்கை - 06/May/2010
பாத்தீங்களா நான் கண்டது போலவே தினகரன் விமர்சகரும் இன்று கண்டிருக்கிறார்.

வகைகள்
சினிமா
Subscribe to:
Posts (Atom)