சென்னையில் + தமிழத்தில் restored, digitized அயிரத்தில் ஒருவன் வெளிவந்து சுமார் 150 நாட்களை கடந்து (ஒரு ஷோவுடன்) இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. சத்யம் திரையரங்கில் முதல் தடவை பார்த்த போது பாதி அரங்கு நிறம்பியிருந்தது. போன வாரம் மறுபடியும் போன போது (கொஞ்சம் சிறிய அரங்கு, ஆனாலும்) ஹவுஸ் ஃபுல். சத்தியமா எதிர்பார்க்கவேயில்லை..
.49 ஆண்டுகளுக்கு முன் 1965-ல் வெளிவந்த படம்., இன்னும் ஹவுஸ்ஃபுல் என்றால் நிச்சயம் ஹிஸ்டரி தான். படம் முழுக்க டிஜிட்டல் மயமாக்கப்பட்டிருக்கின்றது. 35mm-ஐ 70mm-ஆ மாற்றும் போது வெகு சில இடங்களில் பல்லிளித்தாலும் அதெல்லாம் குறையே அல்ல. மேலும், படத்தின் பின்னனி இசை முழுவதும் திரும்ப ரீ-ரெக்கார்டிங் செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டலில் கேட்பது இன்னும் இனிமை.
படம் எப்படினு எல்லாம் சொல்ல வேண்டியதில்லை. பழைய படமாச்சே, அதுவும் எம்.ஜி.ஆர். காலத்திய படம். போர் அடிக்கும் என்று இளசுகள் நினைத்தால் மாற்றிக் கொள்ளுங்கள். உங்களுக்காக சொல்லவேண்டுமென்றால் இது ஒரு ஆங்கில படத்தின் தழுவல்.
வாத்தியாருக்கே உண்டான ஹீரோயிஸம் இருந்தாலும், அவர் நேரடியாக அரசியலுக்குள் நுழைந்த பிறகு வந்த படங்களில் உள்ள ஹீரோயிஸத்தை விட, இப்பொழுது விரல் சுத்துற பசங்க பன்ற ஹீரோயிஸத்த விட ரொம்ப குறைவு. சில இடங்களில் பஞ்ச் தான்.
"மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?" என்று நம்பியார் கண்ணை உருட்டி ஆக்ரோஷத்துடன் கேட்க, வாத்தியார் கூலாக சொல்வது, "ஹூம். சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும்". செம பஞ்ச்.
அந்த கால எம்ஜிஆர் படங்கள் திரையில் வந்தால் எத்தனை குதூகலம் இருக்கும், ரசிகர்களின் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்ற நமக்கு தெரியாது. தெரிந்து கொள்ள, ஒன்று அந்த காலத்தில் இருந்திருக்க வேண்டும், அல்லது அப்பொழுதைய பழைய வீடியோக்கள் ஏதாச்சும் இருந்திருக்க வேண்டும். இரண்டும் இல்லை. ஆனால், இப்போது கிடைத்திருப்பது ஒரு விதத்தில் பாக்கியம். அந்த கால ரசிகர்கள் இப்பொழுது படத்தை பார்க்கும் போது தெரிந்து கொள்ளலாம்.
சுமார் 10 வருடங்களுக்கு முன் என் ஊரில் அலிபாபாவும் 40 திருடர்களும் திரையிட்டிருந்தார்கள். சும்மா ஒரு சேஞ்சுக்கு அந்த படம் போனேன். தியேட்டர் ஹவுஸ்ஃபுல். செம கூட்டம். படம் ஆரம்பித்தவுடன் ஒருத்தர் கை நிறைய கற்பூரம் கொண்டு வந்து ஸ்க்ரீன் முன் வைத்து கொழுத்தி விட தியேட்டர்காரங்க அலரிட்டாங்க.
சத்யம் போன்ற தியேட்டருக்கெ வராதவர்களே குடும்பத்தோடு வந்து பார்க்கின்றனர். நான் பார்க்கும் போது, முதல் வரிசையில் (10 ரூ டிக்கெட்) ஒரு பாட்டி ஒவ்வொரு சீனுக்கும் சிரித்து சிரித்து பார்த்துக் கொண்டிருந்தார். அவரோட சிரிப்பு பின்னிருக்கையில் இருந்து படம் பார்த்த எனக்கே கேட்டது.
இன்னொருத்தர் வெளியூர் போல. இருக்குற மொத்த டிக்கெட்டையும் வாங்கிவிட்டிருந்தார். சுமார் 20-25 பேர். ஆங்காங்கே சிதறி உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். எல்லாம் 50+
இன்னொன்றையும் சொல்ல வேண்டும். அந்த கால ரசிகர்களின் ரசனை உண்மையில் நம் காலத்தை விட மேம்பட்டது. இந்த கால இளசுகளால் புரிந்து கொள்ள சிரமமா இருக்கும் வசனங்களையெல்லாம், வசனம் வரும் முன்னே கைதட்டி ஆரவாரம் செய்துகொண்டிருந்தனர்.
வாத்தியார் படங்களில் வந்த கத்தி சண்டைகள் பெரும்பாலும் நிஜமானவை. இந்த படம் வந்த காலகட்டங்களில் டூப் .வந்தாலும், எங்கும் டூப் இருப்பது போல் தெரியவில்லை, அதற்கான தேவையும் இல்லை.
இதையெல்லாம் விட எனக்குகைன்னொரு தடவை படம் பார்க்க வைத்தது, படத்தில் பாடல்கள். 7 பாடல்கள். அத்தனையும் முத்துக்கள். படம் டைட்டிலில் ஒரு பக்கம் வாலியும் இன்னொரு பக்கம் கண்ணதாசன் படம். கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போலிருந்தது.
டிஜிட்டல் வெர்ஷனில் தியேட்டரில் பாடல்களை கேட்கும் போது சுத்தமாக உறுத்தவில்லை. இன்னும் சொல்லப் போனால் பழைய பாடல்களுக்கே உரிய இசை கொஞ்சம்+வார்த்தைகள் தெளிவு.
ஜெ-வின் இன்ட்ரோ பாடல் 'பருவம் எனது பாடல்' முதல் கடைசி பாடலான 'அதோ அந்த பறாவை போல' வரை சூப்பர் சூப்பர் சூப்பர்ஜி.
இரண்டு பாடல்களை குறிப்பிட வேண்டும்.
1. 'உன்னை நான் சந்தித்தேன்' என்று சட்டென்று சுசீலா குரலில் இன்ட்ரோ இசை இல்லாமல் பாடல் வரி ஆரம்பிப்பது நச்.
2. 7 பாடல்களில் எனக்கு கடைசியா சுமாரா பிடித்த பாடல் 'நானமோ' பெரும்பாலும் கேட்க மாட்டேன். ஆனால், இங்கே கேட்கும் போது, முதல் 5 செகன்ட் ஒரு வாத்தியம் வந்து நிறக; 'சடாரென்று' டெம்பொவை ஏத்தும் அடுத்த பத்து செகன்ட், அதுவும் 'தியேட்டரில்' கேட்கும் போது, ரியலி வொன்டர்புல். கேட்டு பாருங்க.
இந்த படம் நிச்சயம் அந்த கால ஜாம்பவான்களின் மெகா கூட்டணி. எம்ஜிஆர்+ஜெ+நம்பியார்+நாகேஷ்+கண்ணதாசன்+வாலி+டிஎமெஸ்+சுசீலா+விசு ராமு+பந்துலு. வேறென்ன வேண்டும்?
நிச்சயம் மறக்க முடியாத அனுபவம். ட்ரை பன்னி பாருங்க. உங்க 120 ரூ கண்டிப்பா வொர்த். வேறென்ன சொல்ல...?