Tuesday, May 23, 2006

சென்னையில் சினிமா

சென்னையைப் பற்றி ஏற்கனவே ஒரு பதிவு போட்டாயிற்று. அதிலே, சென்னையில் சினிமாவைப் பற்றி ஒரு பதிவு போடனும்னு நினைத்திருந்தேன்.
சென்னை தென்னிந்தியாவின் தலைநகரம் மட்டுமல்லாமல், தென்னிந்திய சினிமாவின் தலைநகரமும் கூட. இதுக்கு முக்கியமாக இந்தியை உள்ளே விடாததும் ஒரு காரணம்னு "நான்" நினைக்கிறேன். இதை விட முக்கியமான காரணம், சினிமாவை அதீதமாக நேசிக்கும் மக்கள். அதனால் தான் தமிழகத்துக்கு ஐந்து முதல்வர்களை (அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்ஜிஆர், வி.என்.ஜானகி, ஜெயலலிதா) தமிழ் சினிமா உலகில் இருந்து தேர்ந்தெடுத்திருக்கிறோம். அப்புறம் விஜயகாந்த் கிளம்பியிருக்கிறார். (இதில் அண்ணாவும், கலைஞரும் சினிமாவினால் புகழடைந்தவர்களில்லை. பொதுவாழ்விற்கு வந்து பின் சினிமாவில் கால்பதித்தவர்கள்).
சரி! விசயத்திற்கு வருகிறேன். சென்னையில் சினிமா பார்ப்பதே ஒரு வித்தியாசமான அனுபவம் தான். சினிமாவை (மற்றும் கிரிக்கெட்டை) நுட்பமாக ரசிப்பதில் சென்னை ரசிகர்கள் ஒரு படி மேலே தான். பெங்களூரில் பல படங்களை, தேமே என்று அரங்கத்தில் ஒரு சலணமும் இல்லாமல் பார்த்திருக்கிறேன். சென்னை சினிமா அரங்குகளை மூன்று விதமாக பிரிக்கலாம், A, B, C என்று. இவை ரசிகர்கள் மற்றும் cost பொருத்து. A என்றால், சத்யம் வளாகம், மாயாஜால், அபிராமி போன்றவை. நான் பெரும்பாலும் போவது / விரும்புவது B தான் (சத்யம்-ல் தேவையான படத்திற்கு டிக்கட் கிடைப்பதில்லை). B என்றால் தேவி வளாகம், ஆல்பர்ட் / பேபி ஆல்பர்ட், உட்லாண்ட்ஸ் / உட்லாண்ட்ஸ் சிம்பொனி, சாந்தி, உதயம் வளாகம் போன்றவை. பெரும்பாலும் போவது திருவல்லிக்கேணி மற்றும் அதன் சுற்றில் உள்ள அரங்குகளுக்கு தான்.
தேவிக்கு சென்றால், பெரும்பாலும் டிக்கெட் கறுப்பில் தான் (கலர் அல்ல) கிடைக்கும். "பட்டியல்" படத்திற்கு முதல் நாள் சென்றேன். 50ரூ டிக்கட் 150ரூ என்றார். அந்த 150 ரூபாயை அப்படியே எடுத்து சென்று ஆயிரம் விளக்கில் உள்ள சரவணபவனில் சென்று 1 தட்டு இட்லி, 1 தோசை மற்றும் ஒரு காபிக்கு (மட்டும் 22.50/-) கொடுத்தேன். (இதுக்கு பேசாம படத்துக்கே போயிருக்கலாமோ???). நான்/நாங்கள் தேவியில் பார்த்த பல படங்களுக்கு கறுப்பில் தான் டிக்கட். அப்புறம் பார்க்கிங் தொல்லை. இரண்டு சக்கர வாகனங்களுக்கு 10ரூ அழ வேண்டும் (சத்யமிலும் தான்). ஒழுங்காக நிறுத்த வில்லை என்றால், அங்கிருக்கும் organiser-க்கு கோபம் வரும். "சார்! ஓரமா தான் நிருத்துங்களேன். இப்படி நிறுத்துனா எப்படி?" என்று கடுகடுப்பார். (அப்புறம் அவர் எதற்கு?). இதே காட்சி தான் பெரும்பாலான B அரங்குகளில். ஒரு வழியாக இருப்பிடம் தேடிப் பிடித்து செட்டில் ஆவோம்.
இது போன்ற படங்களுக்கு, அதுவும் வார இறுதியில், வருவது பெரும்பாலும் இளைஞர்கள். அதுவும் இரவுக் காட்சி என்றால் கேட்கவே வேண்டாம். படத்தில் நல்ல காட்சிகள் வந்தால் கட்டாயம் கைத்தட்டல்கள் கிடைக்கும். சில நேரங்களில் நக்கலுடன். "ராம்" படத்திற்கு சென்ற பொழுது, ஆல்பர்ட்-ல், படத்தின் ஆரம்ப காட்சிகளில் வரும் பின்னனி இசைக்கு எழுந்த கைத்தட்டல்கள். அதே போல சத்யம்-ல் "Narnia" போயிருந்தேன். படம் பேர் போடும் பொழுது ஒரு மரங்களடர்ந்த பகுதியில் இரயில் போகும். அப்பொழுது காமெரா கூடவே Top angle-ல் பயனிக்கும். அந்த ஒளிப்பதிவும், காமெரா கோனமும், பின்னனி இசையும் பரவசமூட்டுவதாக இருந்தது. அந்த ஒளிப்பதிவாளருக்கு ஒரு "ஓ" போடனும் போல இருந்தது. நான் நினைத்த அதே நேரத்தில் அந்த காட்சிக்கு ஒரே கைத்தட்டல்.
ஒரு சனி இரவு, தேவி வாசலில், எந்த படத்திற்கு போகலாம் என்று நின்றுகொண்டிருந்தோம். எங்களைப் போலவே இன்னொரு குழுவும். எல்லா படமும் புதுசு. எதை தேர்ந்தெடுப்பது என்று குழப்பம். "எந்த படத்தையும் நம்ப முடியாது. 'அறிந்தும் அறியாமலும்' போகலாம். Atleast, படம் நல்லா இல்லேன்னாலும் music ஆவது நல்லா இருக்கும்" என்று அவர்கள் முடிவெடுத்தார்கள். சரின்னு நாங்களும் அதே படத்துக்கு போனோம். நல்ல வேளை, எதிர்பார்த்த மாதிரியே படமும் நன்றாக இருந்தது. உட்லாண்ட்ஸ்-ல் 'கள்வனின் காதலி'. படத்தின் இறுதியில் அந்த படத்தின் இயக்குனர் தமிழ்வாணன் (மொதல்ல பேர மாத்துங்க, மானம் போகுது) வந்து தமிழ் கலாசாரத்தின் பெருமைகளை (யாரு சொல்லுறதுன்னு வெவஸ்தை இல்லாமல்) சொல்லுவார். அந்தக் காட்சிக்கு அரங்கில் ஒரே நக்கல் சிரிப்பு. இதில் விசேடம் என்னவென்றால், அனைவரும் ஒரே அலைவரிசையில் இருப்பது தான். அதே உட்லாண்ட்ஸ்-ல் ஒரு முறை Time Killing attitude-லேயே 'கணா கண்டேன்' சென்றோம். அதை தேர்ந்தெடுத்ததற்கு காரணம், கே.வி.ஆனந்த் தான் இயக்குனர் + ஒளிப்பதிவாளர் என்று. அங்கே வந்த ஒருவர் எங்களிடம், தானும் கே.வி.ஆனந்த்-ன் ஒளிப்பதிவிற்காக தான் அந்த படம் பார்க்க வந்ததாக கூறினார். (ஆனால், இந்த படத்தின் ஒளிப்பதிவாளார், கே.வி.ஆனந்த்-ன் உதவியாளராக இருந்த செளந்தரராஜன் என்பவர்). இதே போல, பல technical விசயங்களையும் அறிந்தவர்கள் சென்னை ரசிகர்கள். இதை நானே கேட்டிருக்கிறேன். "அகிலா கிரேன்", "அந்நியன்-ல் time-freeze கேமரா" போன்றவற்றை பற்றி அலசுபவர்களை பார்க்கலாம்.
ஒரு படம் பார்க்கும் பொழுது, அதை ரசிப்பதற்கு சுற்றி இருக்கும் ரசிகர்களும் ஒரு முக்கியமான காரணம். இதை நான் உணர்ந்தது "மும்பை எக்ஸ்பிரஸ்" பார்க்கும் பொழுது. நான் பார்த்தது சத்யம்-ல். 50ரூ டிக்கட் 100ரூ. கோடை விடுமுறை. குடும்பத்துடன், மற்றும் சிறுவர்கள் கணிசமாக இருந்தனர். சாதாரணமாக ஒவ்வொரு கட்சிக்கும் அவர்கள் சிரிப்பது, எனக்கும் சிரிப்பை வரவழைத்தது. இந்த படத்தை, வேறொரு சூழலில் பார்த்தால், கண்டிப்பாக அறுவையாக தான் இருந்திருக்கும். ஆனால், "மும்பை எக்ஸ்பிரஸ்"-ஐ அந்த சூழலில் பார்த்ததால், எனக்கு அது ஒரு அருமையான நகைச்சுவைப் படமாகத் தெரிந்தது (இப்போதும் தான்). ஆனால், மற்றவர்கள் அதை சுலபமாக அறுவை என்று சொல்லிவிடுவார்கள். அதனால் தான், திருட்டு VCD-ல் பார்ப்பவர்கள் அந்தப் படங்களின் originality-ஐ இழக்கிறார்கள். இப்படி technical-ஆக நன்றாக கொடுத்தாலே திருட்டு VCD-ஐ கட்டுக்குள் கொண்டு வரலாம்.

17 comments:

  1. 'சென்னையில் சினிமா' காட்சிகள் தொடர வாழ்த்துக்கள்.

    அன்புடன்,
    துபாய் ராஜா.

    ReplyDelete
  2. இந்தியாவுக்கேப் பொருத்தமானது என்றாலும், ஓரளவு கூட்டமுள்ள அரங்கில் விமர்சனங்களைப் படிக்காமல் தமிழ்ப்படம் பார்ப்பதை ரசனையாகப் பகிர்ந்ததற்கு நன்றி.

    ReplyDelete
  3. சீனு,

    பெரிய திரையில் சினிமா பக்கறதே ஒரு அலாதியான அனுபவம்தான்.

    எவ்வளோ நாளாச்சு? இப்படி ஒரு தமிழ்படம் பார்த்து? ஹூம்.....

    கடைசியா தியேட்டர்லே (தேவி காம்ப்ளெக்ஸ்லேன்னு நினைக்கிறேன்)
    மகளிர் மட்டும்.12 வருசமாச்சு(-:

    ஆமாம். கமெண்ட்ஸ் மாடரேஷன் இருக்குல்லே. இன்னும் எதுக்கு வேர்டு வெரிஃபிகேஷன்?

    ReplyDelete
  4. நல்லதொரு நினைவு மீட்டல்

    ReplyDelete
  5. நன்றி துபாய் ராசா, பாலா.

    // விமர்சனங்களைப் படிக்காமல் தமிழ்ப்படம் பார்ப்பதை //

    இப்பொழுதெல்லாம் எந்த விமரிசணங்களையும் படிக்க முடியவில்லை. 'திருட்டுப்பயலே' படத்தின் கிளைமாக்ஸ்ல், ஜீவன் கிண்டி ரேஸ் கோர்ஸ்ல் தன்னை அடிக்க வரும் ரெளடிகளை ஓடவிட்டு ஓடவிட்டே களைப்பாக்கி அடித்துத் தள்ளுவார். இந்தக் காட்சியை விகடனில் நன்றாக இருக்கிறதென்றும், குமுதத்தில் சகிக்கவில்லை என்றும் போட்டிருந்தார்கள். காரணம், இவர்கள் விமர்சனம் செய்வது just படத்தைப் பார்த்துதான். மற்றும் விமர்சனங்கள் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். அதனால், risk எடுக்ககூடிய படங்களுக்கு மட்டும் விமர்சனங்களைப் பார்ப்பேன்.

    ReplyDelete
  6. ///"ஒரு படம் பார்க்கும் பொழுது, அதை ரசிப்பதற்கு சுற்றி இருக்கும் ரசிகர்களும் ஒரு முக்கியமான காரணம்."///

    உண்மைதான்.கடந்த தீபாவளிக்கு துபாயிலும் 'சிவகாசி' படம் ரிலீஸ்
    ஆனது.நண்பர்களுடன் பார்க்கச் சென்றிருந்தேன்.அரங்கம் நிறைந்த
    தமிழ்க்கூட்டத்தை கண்டவுடனே
    உள்ளம் உற்சாகமானது.படம் தொடங்கியதுதான் தாமதம்.விசில்கள்
    பறந்தன பாருங்கள்.அடடா!!அதை
    வார்த்தையால் விவரிக்க முடியாது.
    எங்கோ ஒரு நாட்டில்,எமதருமை
    தமிழ்மக்களுடன் இரண்டரைமணி
    நேரம் இனிமையாக கழித்ததை
    எந்நாளும் மறக்கமுடியாது.

    அன்புடன்,
    துபாய் ராஜா.

    ReplyDelete
  7. நல்ல அலசல் சீனு.. உங்கள் சென்னை சினிமா அனுபங்களைத் தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  8. //எவ்வளோ நாளாச்சு? இப்படி ஒரு தமிழ்படம் பார்த்து? ஹூம்.....
    //

    எங்கும் போய்டாது. கவலைப்படாதீங்க.

    //ஆமாம். கமெண்ட்ஸ் மாடரேஷன் இருக்குல்லே. இன்னும் எதுக்கு வேர்டு வெரிஃபிகேஷன்? //

    துளசி கோபால், "வேர்டு வெரிஃபிகேஷன்" எடுத்துட்டேன். நன்றி.

    ReplyDelete
  9. //கடந்த தீபாவளிக்கு துபாயிலும் 'சிவகாசி' படம் ரிலீஸ்
    ஆனது.நண்பர்களுடன் பார்க்கச் சென்றிருந்தேன்//

    துபாய் சிவகாசிக்கே இப்படீன்னா, சாந்தி சந்திரமுகிக்கு என்ன சொல்வீங்க?

    ReplyDelete
  10. அடே! 2004ல் சென்னை சென்றும் ;இந்த அனுபவத்தைப் பெறத் தவறிவிட்டேன்.
    யோகன்
    பாரிஸ்

    ReplyDelete
  11. பரவாயில்லை யோகன். அடுத்த முறை வரும்பொழுது சொல்லுங்கள்.

    ReplyDelete
  12. டேஸ்ட் புரிஞ்சுபோச்சு..
    நல்ல அலசல்.

    ReplyDelete
  13. சிறில்,

    நீங்க நக்கலா சொல்லுரீங்களா இல்ல எப்படி சொல்லுரீங்கன்னு புரியலையே.

    ReplyDelete
  14. 1999 முதல் 2002 வரை சென்னையில் சுற்றிக்கொண்டிருந்தேன். பேச்சிலர் வேறு, படம் பார்ப்பது முக்கியத் தொழிலாக இருந்த்து. சென்னை அனைத்து முக்கிய திரைஅரங்குகளிலும் படம் பார்த்துள்ளேன்.
    பழைய நினைவுகளை ஞாபகப்படுத்திவிட்டீர்கள்.

    ReplyDelete
  15. எல்லாம் நல்லாத்தான் சொல்லுறேங்கோ

    ReplyDelete
  16. வணக்கம் சீனு சார். நல்ல விமர்ச்சனக்கட்டுரை... நன்றாக இருக்கிறது....தொடர வாழ்த்துக்கள்...
    வீரமணி

    ReplyDelete
  17. Cheenu sir,

    i really liked your writing. very interesting and like minded.

    Priya.

    ReplyDelete