Tuesday, May 16, 2006

உதிரிப்பூக்கள், அறுவடை நாள்

சமீபத்தில் நான் பார்த்த இரண்டு படங்கள். "உதிரிப்பூக்கள்" மற்றும் "அறுவடை நாள்". இரண்டுமே இளையராஜா இசையமைத்த படங்கள். இந்த இடுகை அந்த இரு படங்களின் தலைப்பைப் (Title) பற்றி. முதலில் கதையை பார்ப்போம். அப்பொழுதுதான் இந்த தலைப்புக்கள் அந்தப் படங்களுக்கு எவ்வளவு பொருந்துகிறது எனத் தெரியும்.
1) உதிரிப்பூக்கள்
இது மகேந்திரனின் வெற்றிப் படைப்புகளில், மற்றும் தமிழ் சினிமாவின் வரலாற்றில், மிக முக்கியமான இடம் பெற்ற படம். 1977-ல் வெளிவந்து 175 நாட்களைக் கடந்து, அதை விட முக்கியமாக, பல பாராட்டுக்களைப் பெற்ற படம். இந்தப் படத்தில் ஊர் பெரிய மனிதர் விஜயன். அவர் மனைவி அசுவினி, இரண்டு குழந்தைகள் அஞ்சு, ஹாஜா ஷெரீப், தங்கை செண்பகம், தந்தை சாருஹாசன். கணவன் செய்யும் அக்கிரமங்களை எதிர்க்கத் திராணியில்லாதவர் அசுவினி. விஜயனின் தம்பி பூபதியே அண்ணனுக்கு எதிரானவன். மைத்துனியின் மேல் மோகங் கொண்டு நோய்வாய்ப்பட்ட அஸ்வினியையும், மாமனாரையும் மிரட்டுகிறார் சுந்தரவடிவேலு. மாமனார் மறுத்துவிட, வேறொருத்தியைத் திருமணம் செய்து கொள்கிறார். இதற்கிடையில் அசுவினியும் இறந்து விடுகிறாள். சுந்தரவடிவேலு நடத்தி வரும் பள்ளியின் ஆசிரியர் செண்பகம் மீது காதல் வசப்பட, சாருஹாசன் சம்மதத்துடன் திருமண ஏற்பாடுகள் செய்கிறார். திருமணத்துக்கு முந்தைய தினம், அக்காவின் குழந்தைகளை தானே வளர்க்க அனுமதி கேட்க, சுந்தர வடிவேலுவைப் பார்க்க வரும் போது (அதற்கு முன்னர் தான் கல்யாண மாப்பிள்ளை சுந்தரவடிவேலுவிற்கு பத்திரிக்கை வைத்து, கல்யாணத்திற்கு வரவேண்டாமென்றும், பள்ளியில் நடந்த தில்லு முள்ளுகளுக்காக சுந்தரவடிவேலுவை காவல்துறை கூடியவிரைவில் கைது செய்யும் என்றும் மிரட்டிவிட்டு செல்கிறார்), சுந்தரவடிவேலு அவளை மானபங்கப்படுத்தி விடுகிறார். அவர் (இரண்டாவது) மனைவியும் வீட்டை விட்டு போய்விடுகிறாள். கொதித்து எழும் ஊர்மக்கள், அவருக்கு தண்டனையாக அவரே ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்ள வைத்து விடுகின்றனர்.
படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில், சுந்தரவடிவேலு திருந்தியவராய் "உங்க எல்லோரையும் கடைசியில் நான் என்னைப் போல ஆக்கிட்டேன். அது தான் நான் செஞ்சதிலேயே பெரிய தவறு." என்று கூறி, குழந்தைகளை அழைத்து, "நல்லா படிக்கனும். அப்பா குளிக்கப் போறேன்" என்று கூறி ஆற்றில் இறங்குகிறார். (இங்கே அனைவரின் முகபாவங்கள் மட்டுமே காண்பிக்கப்படுகிறது). பின், அனைவரும் சென்றுவிடுகின்றனர். அந்த இரு குழந்தைகள் மட்டும் அப்பா எப்போ வருவார் என்று அந்த ஆற்றங்கரை ஓரம் நடந்து போகும். ஹாஜா ஷெரீப் அஞ்சுவின் கைகளைப் பிடித்து அழைத்து நடந்து செல்வதாக காட்சி உறையப்பட்டு (freeze) உதிரிப்பூக்கள் என்று title காட்டப்படும். அந்த குழந்தைகள் தான் உதிரிப்பூக்கள். எந்த மாலையிலும் சேராமல், பூசைக்கும் உதவாமல் கிடக்கும் பூக்கள்.
எவ்வளவு அழகான தலைப்பு. படத்திற்கும் கதைக்காகவும் இதை விட சிறந்த தலைப்பு இருக்க முடியுமா? தெரியவில்லை.
பசியுடன் இருக்கும் அஞ்சுவை அழைத்துக் கொண்டு செண்பகம் வீட்டிற்கு செல்லும் ஹாஜா ஷெரீப் "இவளுக்கு பசிக்குதாம்" என்று சொல்லும் பொழுது, கள்ளம் கபடம் இல்லாமல் ஈறுகள் தெரிய சிரிக்கும் அஞ்சு;
தாய் இறப்பது கூட தெரியாமல் அவளின் வளையலை இழுத்து விளையாடும் காட்சி;
"நீங்க மனுஷனே இல்ல", "பரவாயில்ல", "இதுக்கெல்லாம் நீங்க பதில் சொல்லியே ஆகனும்", "பாக்கலாம்" - விஜயன்;
படத்தின் ஆரம்பத்தில் வரும் "எஸ் சார்!";
- ஆகியன மனதில் நிற்கும் அழகான இடங்கள்.
2) அறுவடை நாள்
இந்த படத்தை சுமார் 8 வருடங்களுக்கு முன் தொலைக்காட்சியில் பார்த்தது. அப்பொழுதே ரசித்திருக்கிறேன். கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த படத்தை ராஜ் டி.வி.யில் ஒளிபரப்பினார்கள். அட, நல்ல படமாயிற்றே என்று உட்கார்ந்து (சரி! படுத்துகிட்டே) பார்த்தேன். இயக்கம்: G.M. குமார். கதை பழைய கதை தான். ஆனால் கதைக்களமும், திரைக்கதையும் அருமை.
கதைக்களம்: ஒரு கிராமம், ஒரு தேவாலையம், ஊர் பணக்காரர் (அரண்மனை), பிரபு, பல்லவி, ராம்குமார், இந்திரா, வடிவுக்கரசி, முக்கியமாக இளையராசா. படம் flashback-ல் போகிறது. பிரபுவின் தாயார் வடிவுக்கரசியின் பார்வையில் படம் செல்கிறது. இதிலும்(!), ஊர்ப் பெரியவர் அரண்மனை (பெயர் மறந்துவிட்டது), அவர் மகன் பிரபு, வெகுளி. அதட்டி மிரட்டி வளார்க்கப்படுகிறார். ஊருக்கு மருத்துவராக வரும் பல்லவி. ராம்குமார் அந்த ஊரில் இருக்கும் தேவாலய பாதிரியார். பல்லவிக்கு கன்னியாஸ்திரியாக விருப்பம். பிரபுவுக்கும் பல்லவிக்கும் காதல் மலர்கிறது. பல்லவி பிரபுவை காதலிப்பதையே ராம்குமாரும் விரும்புகிறார். இதை கேள்விப்பட்டு அரண்மனை பிரபுவுக்கும் தன் அக்கா மகள் இந்திரா-வை (அல்லது அவர் சகோதரி ராசி? இருவரில் யார் என்று தெரியவில்லை) மணமுடிக்க விழைகிறார் (பால்ய விவாகம்). இதை கேள்விப்பட்டு பல்லவியை அழைத்துக் கொண்டு நேரே எல்லோர் எதிரிலும் பிரபு தான் பல்லவியை விரும்புவதாக கூறுகிறார். அரண்மனை இவர்கள் இருவரையும் சேர்த்து வைப்பதாக கூறி, சம்பந்தம் பேச பெரியவர்கள் யாரையாவாது வந்து பேச சொல்கிறார். பல்லவி இதற்காக ஊருக்குச் செல்லும் இடையில் இந்திராவின் நீராட்டு விழாவில், மாலையில் தாலியை மறைத்து வைத்து மாலையிடச் செய்து திருமணம் செய்வித்துவிடுகிறார். உண்மையில் இது பொம்மைக் கல்யாணம். இந்திரா இன்னும் சிறுமி தான். ஊரை ஏமாற்றி அரண்மனை இந்த கல்யாணாத்தை நடத்துகிறார். பல்லவி திரும்பி சம்பந்தம் பேச வர, உண்மையை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைகிறார். (TR ஸ்டைல்ல படிக்கவும்: இங்க தான் சார் "தேவனின் கோயில்" பாட்ட ராசா வைக்கிறார்). இந்த காதலுக்கு உதவி செய்ததற்காக பாதிரியாரை சபையை விட்டு நீக்கிவிடுகிறார்கள். ஊர் பஞ்சாயத்து அந்த கல்யாணம் செல்லாது என்று அறிவிக்கிறது (அட! நல்ல பஞ்சாயத்து சினிமாவில் மட்டுமே சாத்தியம்). வடிவுக்கரசி கேட்டுக் கொள்ள ஊரை விட்டு போக முடிவெடுக்கிறார் பல்லவி. ராம்குமார் இந்திராவின் வேண்டுகோளுக்கிணங்க பிரபுவுக்கும் பல்லவிக்கும் திருமண ஏற்பாட்டினை செய்கிறார். அரண்மனை ஆட்களை அனுப்பி ராம்குமாரை சிலுவையில் அறைந்து கொல்கிறார். பல்லவி இருக்கும் வீட்டிற்கு தீ வைக்கின்றனர் (உள்ளே இந்திராவும் இருப்பது தெரியாமல்). இறக்கும் தருவாயில் பல்லவி பிரபுவின் கையை எடுத்து தன் வயிற்றில் வைத்து தான் கர்ப்பமாக இருப்பதை சொல்கிறார்.
அறுவடை நாள். நிலத்தில் அறுவடைக்கு உள்ளூர் கூலியாட்கள் வேலைக்கு வரவில்லை என்பதால் அரண்மனையே வயலில் இறங்குகிறார். கையில் கதிரருக்கும் அரிவாள். பிரபு கோபத்துடன் அங்கே வந்து சேர அரண்மனை பிரபுவிடம் அரிவாளை கொடுத்து ஒத்தாசை செய்ய சொல்கிறார். அப்படியே சிலையக நிற்கும் பிரபுவைப் ஏளனமாக பார்த்து, "எரிஞ்சு போனவளா நெனச்சு கரையிரீகளோ" எனக் கேட்க, பிரபு கையில் இருக்கும் அரிவாளால் தந்தையை வெட்டிச் சாய்க்கிறார். அறுக்கப்பட வேண்டிய கதிரில் இரத்தம் தெரிக்கிறது.
Flashback முடிய, பிரபு விடுதலையாகிறார். இந்திரா சிறைச்சாலையின் வெளியே காத்திருக்கிறார். கையில் ஒரு கடிதம். "அம்மா வரலியா?" என்ற பிரபுவின் கேள்விக்கு கடிதத்தை நீட்டுகிறார் இந்திரா. வடிவுக்கரசி பிரபுவிற்கு எழுதியது. "என் தாலியை தான் நீ மதிக்கவில்லை. கட்டிய இவளின் (இந்திரா) தாலியையாவது மதிச்சு வாழ்க்கை கொடு" என எழுதியிருக்கிறார். இந்திராவை அழைத்துக் கொண்டு பிரபு செல்வதாக படம் முடிகிறது.
"அப்பா அம்மா இல்லாத பொன்னுன்னு சொன்னாங்க. ஆனா, அது என்ன J.நிர்மலா?" "அது Jesus நிர்மலா father";
"தேவனின் கோயில்" பாடல். கேட்டால் கரைத்துவிடும் பாடல். "கேட்டால் தருவேன் என்றவன் நீயே, கேட்டேன் ஒன்று தந்தாயா?";
அரண்மனையின் மகன் தான் பிரபு என்று தெரியாமல், பிரபுவைப் பற்றி புகார் கொடுக்க, விடிய விடிய பிரபுவை முட்டி போடச் சொல்லும் இடம். பிரபு நகைச்சுவையில் கலக்கியிருப்பார்;
இறக்கும் தருவாயில் பல்லவி பிரபுவின் கையை எடுத்து தன் வயிற்றில் வைத்து தான் கர்ப்பமாக இருப்பதை சொல்லும் காட்சி.
- ஆகியன மனதில் நிற்கும் அழகான இடங்கள்.
இந்த இரண்டு படங்களுக்கும் பொருத்தமே இந்த பொருத்தமான தலைப்பு தான். இன்றைய சினிமாக்களுக்கு வைக்கும் தலைப்பு பிரச்சினைகளை எழுப்ப, இப்படி கதைக்கு ஏற்ற தலைப்பை வைத்திருக்கும் இந்த இயக்குனர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். உதிரிப்பூக்களைப்போல இதற்கும் அருமையான தலைப்பு. "உதிரிப்பூக்கள்" CD-யை ராஜ் வீடியோ விஷன்-ல் வாங்கி பத்திரப்படுத்திவிட்டேன். அடுத்து, "அறுவடை நாள்"-ஐ அறுவடை செய்ய வேண்டும்.
இவை இரண்டும், miss பண்ணக்கூடாத படங்கள்.

15 comments:

  1. வணக்கம் சீனு, நல்லதொரு பதிவு

    ReplyDelete
  2. இரு படங்களுமே நல்ல படங்கள்.
    "அறுவடை நாள்" படத்தில் அப்பா அரண்மனை கதாபாத்திரத்தில் ந்டித்தவர் ஆர்.பி.விஸ்வம்.அவர் சில படங்களை இயக்கியும் உள்ளார்.

    அன்புடன்,
    துபாய் ராஜா.

    ReplyDelete
  3. உதிரிப்பூக்கள் படத்தைப் பார்க்கவே எனக்குப் பிடிக்காது. ஏன் தெரியுமா? பார்த்த பிறகு மனதில் பதியும் அந்தச் சோகமும் இயலாமையுந்தான்.

    அறுவடைநாள் நான் பார்த்ததில்லை. ஆனால் கேள்விப்பட்டிருக்கிறேன்.

    ReplyDelete
  4. Yes! நீங்கள் சொல்வது சரி துபாய் ராஜா. அவர் பெயர் விஸ்வம்.

    ReplyDelete
  5. "Yes! நீங்கள் சொல்வது சரி துபாய் ராஜா. அவர் பெயர் விஸ்வம்."


    பதிவுகள் தொடரட்டும்.வாழ்த்துக்கள்.

    அன்புடன்,
    துபாய் ராஜா.

    ReplyDelete
  6. நன்றி துறை,
    "நினைத்தாலே இனிக்கும்" என்னுடைய favourite படங்களில் ஒன்று. அதன் VCD copy-ஐ வைத்து அடிக்கடி பார்ப்பேன். நிச்சயம் அதைப் பற்றின ஒரு பதிவை போடுகிறேன்.

    ReplyDelete
  7. அறுவடை நாள் இயக்குனர் தான் வெயிலில் கலக்கிய MG குமார் ( கசாப்பு கடைக்காரர்)
    நல்ல ரசனையான பதிவு

    ReplyDelete
  8. தகவலுக்கு நன்றி அருண்மொழி. அவர் பல்லவியில் கணவர் தானே???

    ReplyDelete
  9. நல்ல பதிவு

    எனக்கு மிகவும் பிடித்த படங்கள் உதிரிப்பூக்களும், அறுவடை நாளும்

    மிக நன்றி

    ReplyDelete
  10. நான் பார்க்கனும் பார்க்கனும்னு நெனைக்கிறப் படங்கள் இவை...

    சீக்கிரமே DVD வாங்கனும்!!!

    ReplyDelete
  11. Cheenu,
    I recently read 'Udhiripookkal' review in AV Pokkisham and tears filled my eyes. And I now have the same feel after reading this post.
    You have that thing in you to bring out the emotions by your writing. Good work.
    I shall surely watch this movie.

    Priya.

    ReplyDelete
  12. நீங்கள் குறிப்பிட்டிருக்கும்
    வசனங்கள் எனக்கும் மிகவும் பிடித்தவை,மேலும் வடிவுக்கரசி பல்லவியிடம் பிரபுவை மறக்க சொல்லி கேட்கும் இடத்தில்,இப்படி ஒரு வசனம் வரும்
    "ஆண்டவா இவ்வளவு நல்ல பொண்ணா இருக்காளே எங்க சாதியில பொறந்திருக்க கூடாதா" என,இதுவும் எனக்கு மிகவும் பிடித்த வசனம்.

    ReplyDelete
  13. //"அப்பா அம்மா இல்லாத பொன்னுன்னு சொன்னாங்க. ஆனா, அது என்ன J.நிர்மலா?" "அது Jesus நிர்மலா father";
    //
    i also liked the above dialogue...
    'uthirippookkaL'il vijayan "aaseervaatham" enRu solliya padiyee villaththanam seyyum idam...kalakki iruppaar vijayan

    ReplyDelete
  14. ஒ அவுங்க கர்ப்பம் ன்னு சொல்றாங்களா , இப்ப தான் புரியுது :(

    ReplyDelete