Monday, November 03, 2008

சீனச்சிரிப்பும் சில ஜோக்ஸும்...

ஒரு சீன படத்தில் (Wheels on Meals) பார்த்த மனநோய் மருத்துவமனை.

ஜாக்கியும் அவன் நண்பனும் அவன் நண்பனின் தந்தையை பார்க்க அந்த மனநோய் மருத்துவமணைக்கு வருகிறார்கள்.

வரும் வழியில் ஒருவன் இடம் வலமாக தலை சாய்த்து சாய்த்து வருகிறான்.

நபர் 1: டிங்...டாங்...டிங்...டாங்...டிங்...டாங்...
ஜாக்கி: என்ன பன்னுற?
நபர் 1: நான் கடிகாரம். சரியான நேரத்தை சொல்லுவேன்.
ஜாக்கி: அப்படியா? இப்போ மணி என்ன?
நபர் 1: இப்பொழுது மணி 2:30
ஜாக்கி: இல்லை. இப்போ மணி 2:45.
நபர் 1: ஆ! அப்போ நான் ஸ்லோவா போறேனா. (வேகமாக) டிங்.டாங்.டிங்.டாங்.டிங்.டாங்.

உள்ளே செல்ல அங்கே அவன் நண்பனின் தந்தை ஒரு சிறு கிண்ணத்தில் தூண்டில் போட்டு மீன் பிடித்து கொண்டிருக்கிறார். கவனிக்க, அப்பா எப்பவுமே முகத்துல ஒரு சீரியஸ்னஸோட தான் பேசுவார், மிலிட்டெரி மேன் மாதிரி.

ஜாக்கி: என்ன செய்றீங்க?
அப்பா: ஷ்...சத்தம் போடாத. சத்தம் கேட்டா மீன்கள் ஓடிடும்.

அங்கே பின்னால் ஒருவன் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருக்கிறான்.

ஜாக்கி: அவன் என்ன பன்னுறான்?
அப்பா: அதுவா? அவன் எப்பவுமே தனக்குத்தானே ஜோக் சொல்லி சிரிச்சிக்குவான்.

திடீரென்று அவன் முகம் சுழிக்க...

ஜாக்கி: இப்போ என்ன பன்னுறான்?
அப்பா: அந்த ஜோக் அவன் ஏற்கனவே கேட்டிருக்கான். அதனால அவன் அழுவறான்.

அப்பொழுது அந்த கடிகார ஆள் அங்கே வந்து ஆ-னு கத்த (அலார ஒலி)...அப்பா அவன் தலையில் தட்டி (அலாரத்தை நிறுத்தறாராம்)

அப்பா: ஆ! மணி மூனு ஆயிடுச்சா. எனக்கு வேற வேலை இருக்கு.
என்று சொல்லி அங்கிருந்து நகருகிறார்.




"எதுக்குடா அவன அடிச்சே"
"ஆறு வருஷத்துக்கு முன்ன என்ன தேவாங்குன்னு சொன்னான்"
"அதுக்கு இப்போ ஏன் அடிக்கிறே?"
"நான் நேத்து தான தேவாங்க பாத்தேன்..."



"தலைவர் இப்போ சின்ன வீட்டுல இருக்கரு"
"எப்படி சொல்ற?"
"நீங்கள் டயல் செய்த என் தற்சமயம் 'லைட் ஆஃப்' செய்யப்பட்டுள்ளது'ன்னு சொல்லுதே..."



"அம்மா அடிச்சதுக்கு ஏண்டா இப்படி அழறே?"
"உங்கள் மாதிரி என்னால அடி தாங்க முடியாதுப்பா"



"லோன்ல மாடு வாங்கிட்டு, கட்டாம போனா என்ன ஆகும்ன்னு தெரியுமா?"
"தெரியும் ஐயா...மாடு தொலஞ்சிடும்"



"என்ன...நம்ம செல் ரிங் ஆனதும் தடார்ன்னு கீழ வெச்சுட்டு விழுந்து கும்பிடுறாரு?"
"வந்திருக்கிறது தலைவரோட 'கால்'. அதான்".


"அந்த தொழிலதிபர் கிட்ட நான் 30 லட்சம் வாங்கியிருக்கிறதா எதிர்கட்சிக்காரங்க சொல்றாங்களாமே?"
"விடுங்க தலைவரே! அவங்களுக்கு தெரிஞ்சது அவ்வளவுதான்..."


"யார் என்ன சொன்னாலும் அப்படியே நம்பகூடாது...ஏன்னு கேள்வி கேட்கணும்..."
"ஏன்?"


மன்னர்: "யாரங்கே?"
குரல்: "யாருமில்லை..."


போலீஸ்: "ஏண்டா குடியிருந்த வீட்டுக்காரரை கொலை பன்னினே?"
கொலையாளி: "அவர்தான் அடிக்கடி காலி பன்னுன்னு சொன்னார் எசமான்..."


"சிஸ்டர். அந்த பேஷன்ட் எப்படி செத்தாரு?"
"நீங்க கிட்னி எடுத்தது தெரியம, நானும் ஒரு கிட்னியை திருடிட்டேன் டாக்டர்"


"நேத்து ராத்திரி உங்கள ஒரு திருடன் வந்து அடிச்சிருக்கான். ஏன் கத்தவேயில்ல?"
"வழக்கம் போல என் மனைவி தான் அடிக்கிறான்னு அமைதியா இருந்துட்டேன் இன்ஸ்பெக்டர்"


ஆசிரியர் : மூண்றாம் உலகப் போர் வந்தால் என்ன ஆகும் ?
மாணவன் : (சோகமாக) வரலாறில் இன்னும் நிறைய படிக்க வேண்டி இருக்கும்.


"'இது எதிர்கட்சியோட சதி'-ன்னு சொல்றாரே தலைவர், எதற்கு?"
"'உங்களுக்கு குழந்தை பிறந்திருக்கு தலைவரே'-ன்னு சொன்னேன்"




SMS தத்துவம்

தூங்கப் போறதுக்கு முன்னாடி குட்நைட் சொல்லலாம், ஆனா, தூங்க எந்திரிக்கிறதுக்கு முன்னாடி குட்மார்னிங் சொல்லமுடியுமா?

கண்டக்டருக்கும் டிரைவருக்கும் என்ன வித்தியாசம்?
கண்டக்டர் தனித்தனியா டிக்கெட் கொடுப்பார். டிரைவர் மொத்தமா டிக்கெட் கொடுத்திடுவார்.

எறும்பு நெனச்சா யார் காதை வேணும்னாலும் கடிக்கலாம்; ஆனா யார் நெனச்சாலும் எறும்பு காதை கடிக்க முடியாது.

ஒரு எறும்பு நூறு யானையை கடிக்கும். ஆனா, நூறு யானைங்க சேர்ந்தாலும் ஒரு எறும்ப கடிக்கமுடியாது.




"எங்க கட்சித்தலைவரை போட்டியின்றி தேர்ந்தெடுக்க நடத்துன கூட்டத்துல கைகலப்பாயிடுச்சு..."
"அடடே...அப்புரம்?"
"வேட்டியின்றி தேர்ந்தெடுக்கவேண்டியதாப் போச்சு"


"என்னய்யா இது...நடைபாதைல நின்ன பயணிகள்லாம் திடீட்னு தண்டவாளத்துல இறங்கி நிக்குறாங்க...!?"
"பின்னே. இரயில் 2வது நடைமேடைக்கு வரும்னுல்ல அறிவிச்சாங்க...!?"


"ஜோசியரே! நான் கபாலி பொண்ணை காதலிக்கிறேன். கை கூடுமா?"
"ம்ஹூம்! குறையும்!"


"ஆபரேஷன் பண்ணும் போது டாக்டர்கள் முகமூடி போட்டுக்கறாங்களே, ஏன்?"
"அதுவா? கிட்னி திருடினது யாருன்னு அடையாளம் தெரியாம இருக்கிறதுக்குத்தான்!"


"தலைவரே! அறிக்கை விடும் போது கொஞ்சம் கவணிக்க கூடாதா?"
"ஏன்?"
"உங்களை திட்டி நீங்களே அறிக்கை விட்டுட்டீங்க"




"ஜாக்கட்ல கையவிட்டு பர்ஸ எடுக்கிற வரை என்னம்மா பண்ணிகிட்டு இருந்த?"
"அந்த படுபாவி பர்ஸத்தான் எடுக்கறான்னு எனக்கெப்படி தெரியும் இன்ஸ்பெக்டர்?"


"நம்ம கதாநாயகன் நூறடி உயரத்துல இருந்து டூப் போடாம நானே தான் குதிப்பேன்னார்..."
"டைரக்டர் என்ன சொன்னார்?"
"அந்த ஷாட்டை மட்டும் கடைசியா எடுத்துக்கலாம்னு சொல்லிட்டார்"



பிற்சேர்க்கை:

"கடத்திட்டு வந்த பொண்ண இன்னும் மிரட்டவே ஆரம்பிக்கல பாஸ்"
"ஏன்டா?"
"செல்போன்ல யாரோடவோ நிறுத்தாம பேசிகிட்டே இருக்கா..."



"தோசைய ஆர்டர் பன்னிட்டு ஏன் சார் அவசரப்படுறீங்க?"
"அதுக்குள்ள விலை ஏறிடுமோங்கிற பயம் தான்..."


"ராத்திரியானா அந்த கோயில் மண்டபத்துல யாரும் படுத்துக்க மாட்டாங்க"
"ஏன்?"
"அங்க இருக்கிற யானைக்கு தூக்கக்துல நடக்குற வியாதி இருக்காம்..."


"தலைவர் பிறந்த நாளுக்கு எடைக்கு எடை என்ன கொடுத்தாங்க?"

"உடம்பு பூரா வியாதிங்கறதுனால எடைக்கு எடை மாத்திரையா கொடுத்திட்டாங்க"




"முன்ன பிரசவதுக்கு வந்தா குழந்தை தான் மாறும்"
"இப்ப?"
"பொன்டாட்டியே மாத்தி அனுப்பறாங்க..."



"மயக்கம் போட்டு விழுந்த தலைவர், கண்முழிச்சதும் என்ன கேட்டார்?"
"இப்போ நான் எந்த கட்சியில இருக்கேன்னு கேட்டார்..."


"அந்த டைரக்டர் கேட்டாருங்கிறதுக்காக அவரோட படத்துல நீங்க நடிச்சிருக்கக்கூடாது தலைவரே!"
"ஏன்யா...?"
"இப்ப பாருங்க...'இதுவரை தொகுதிப் பக்கமே தலை காட்டாதவர், எங்கள் படத்தில் தலையைக் காட்டிடுள்ளார்'னு விளம்பரம் பண்றாங்க...!"


"நான் அஞ்சு வயசுலயே அரசியலுக்கு வந்தவன்னு தலைவர் சொல்றாரே...?"
"அவர் படிக்காதவர்ங்கறதை சூசகமா சொல்றாரு...!"


"என் மனைவி ரொம்ப நல்லவ"
"அப்புறம் ஏன் ரெண்டாவது கல்யாணம் பன்னிகிட்ட?"
"அவ நல்லவன்னு ரெண்டாவது கல்யாணம் பண்ண பிறகு தான தெரிஞ்சது..."


"என்னது உங்க பேரு 'நல்ல காலம்'மா?
"ஆமாம். எங்க வீட்டு வாசல்ல குடுகுடுப்பைக்காரன் நின்னு 'நல்ல காலம் பொறக்குது...நல்ல காலம் பொறக்குது' சொன்னப்போ நான் பிறந்தேனாம்..."


ஆற்காடு வீரா'ஸ்'வாமி ஸ்பெஷல்...

"புதுசா வாங்கியிருக்கிற காலண்டர்ல அப்படி என்ன விசேஷம்?"
"தினமும் கரண்ட் கட் ஆகுற நேரத்தை கரெக்டா போட்டிருக்கிறாங்க!"
 
 
"நான் மின்சாரத்துறையில வேலை செய்யுறேன்"
"அப்ப வேலையே இல்லைன்னு சொல்லுங்க"


"இன்னும் எங்க கிராமத்துக்கு மின்சாரமே வரலைன்னு புகார் கொடுக்கலாம்னு வந்தேன். ஆனால், இங்கேயும் மின்சாரம் இல்லையாமே?"


நர்ஸ்: "கொழந்தை பொறந்துடுச்சு. பெண்ணா, ஆணானு கரன்ட் வந்தப்புறம் தான் சொல்லமுடியும்"


பிறந்த குழந்தை: "என்னடா இது. நான் பொறந்துட்டேன்னு நர்ஸ் சொல்லிச்சு. ஆனா, வெளியிலையும் ஒரே இருட்டா இருக்கே...!"

"யோவ். உன் வீட்டுல ஃபீஸ் போயி ஒரு மாசம் ஆகுது. இப்ப வந்து கம்ப்ளெயின்ட் கொடுக்குற?"

"ஹி...ஹி! பவர் கட்னு நினைச்சுட்டோம்..."

7 comments:

  1. வாங்க சென்ஷி, சிறில்.

    //நல்ல கலெக்ஷன்//

    நன்றி. :)

    ReplyDelete
  2. படித்தேன்.
    ரசித்தேன்..
    சிரித்தேன்...

    (இது ஒரு கவுஜ பின்னூட்டம் :))

    ReplyDelete
  3. ஹா..ஹா.. நல்லாயில்லிருக்கு மக்கா:)))

    ReplyDelete
  4. வாங்க வெட்டிப்பயல், ரசிகன்.

    ReplyDelete
  5. \\"எதுக்குடா அவன அடிச்சே"
    "ஆறு வருஷத்துக்கு முன்ன என்ன தேவாங்குன்னு சொன்னான்"
    "அதுக்கு இப்போ ஏன் அடிக்கிறே?"
    "நான் நேத்து தான தேவாங்க பாத்தேன்..."\\


    \\"ஜோசியரே! நான் கபாலி பொண்ணை காதலிக்கிறேன். கை கூடுமா?"
    "ம்ஹூம்! குறையும்!"\\

    தன்னை மறந்து சிரித்தேன்.

    \\"என் மனைவி ரொம்ப நல்லவ"
    "அப்புறம் ஏன் ரெண்டாவது கல்யாணம் பன்னிகிட்ட?"
    "அவ நல்லவன்னு ரெண்டாவது கல்யாணம் பண்ண பிறகு தான தெரிஞ்சது..."\\

    யாருக்கோ அனுபவம்


    \\"தோசைய ஆர்டர் பன்னிட்டு ஏன் சார் அவசரப்படுறீங்க?"
    "அதுக்குள்ள விலை ஏறிடுமோங்கிற பயம் தான்..."\\

    சிரிப்புக்கு அல்ல சிந்திக்க

    ReplyDelete