Monday, September 08, 2008

விகடன்ல வாங்கிட்டோம்ல ஒரு 'கிராம்' தங்கம்... :)

விகடன்ல வாங்கிட்டோம்ல ஒரு 'கிராம்' தங்கம்... :)

இது ஒரு சுயதம்பட்ட பதிவு. புதுப்பொலிவில் வெளிவரும் 'All new யூத்ஃபுல் விகடன்'-ன் சில வார இதழ்களில் அறிவித்திருக்கும் பரிசுக்குறிய / பரிசு இல்லாத போட்டிகளில், நான் எழுதிய சிலவற்றை அனுப்பினேன். அதில் இருமுறை நான் எழுதி அனுப்பியவை தேர்வாகியுள்ளது. இதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். காக்கைக்கும் தன் குஞ்சு (ஒரு கிராம்) பொன் குஞ்சு அல்லவா?



விகடன்ல இருந்து தொலைபேசி வந்தது, 'வந்து பரிசு வாங்கிக்கங்க'ன்னு. இன்னைக்கு போய் வாங்கிட்டு வந்துட்டோம், விகடன் தாத்தா படம் அச்சிட்ட தங்க நாணயம் கே.சீனிவாசனிடம் கொடுத்தார் விகடனின் கே.சீனிவாசன்.


கீழே உங்கள் பார்வைக்கு...


இதழ்: 03-செப்-2008

பக்கம்: 87





கே.ஸ்ரீனிவாசன், சென்னை

மை மெயில்!


நீங்கள் சென்னைவாசியாக சில உபயோக டிப்ஸ்!




  • சினிமா சூட்டிங்னு நின்னு வேடிக்கை பார்த்துத் தொலையாதீங்க. அது நிஜ என்கவுன்ட்டரா இருக்கப் போகுது!

  • இங்க சிக்னல்ல தனக்கு பச்சை விழுந்ததும் நகர ஆரம்பிக்கிறதைவிட, அடுத்தவனுக்கு மஞ்சள் விழ ஆரம்பிச்சதும் பாதி ரோட்டுக்கு வந்துடணும்! க்ரீன் விழுந்ததும், பத்து வண்டிக்கு பின்னால இருக்கிறவனும் ஹாரன் அடிச்சுட்டே இருப்பான், என்னவோ அவனுக்கு முன்னால நிக்கிறவனெல்லாம் வேண்டுதலுக்காக நிக்கிறவன் மாதிரி. கண்டுக்காதீங்க!

  • படம் பார்க்க தியேட்டர் போறீங்கனு வெச்சிக்குங்க, டிக்கெட் 50 ரூபான்னா கையில 100 ரூபாயாவது இருக்கணும். ஏன்னா, கலர் படம்னாலும், டிக்கெட் பிளாக்தானே!

  • சென்னையில் பான்பராக் தடை செய்யப்பட்டுள்ளது. அதனால ஹான்ஸ் மட்டுமே யூஸ் பண்ணுங்க. ஆங்காங்கே பெயின்ட் பண்ணுங்க!


  • நாளைக்கு என்னென்ன படம் ரிலீஸ் ஆகுதுன்னு தெரிஞ்சுக்க, இன்னைக்கு ரிச்சி ஸ்ட்ரீட், பர்மா பஜார் போனீங்கன்னா தெரிஞ்சுக்கலாம். அங்கேதான் ரிலீஸாகப் போற படத்தோட ஒரிஜினல் திருட்டு டி.வி.டி கிடைக்கும்!

  • கடைசி ரெண்டு நாள் மட்டும் இ.பி. பில், டெலிபோன் பில் போன்ற இத்யாதிகளைக் கட்டவும். ஏன்னா, மத்த சொச்ச நாளுக்கு அங்கே இருக்கிறவங்களுக்கு ரெஸ்ட் வேணுமே! கையில ஒரு மார்க்கர் இருந்தா போதும், யாருமில்லாத நேரத்துல ரயில் பூரா உங்க மொக்கை கவிதையைச் செதுக்கலாம்!

  • டி.டி.இ டிக்கெட் கேட்கும்போதுதான் உங்க பாக்கெட்டையே சுத்தம் பண்ணணும். உங்க பாக்கெட் உள்ளே இருக்கிற எல்லா பழைய டிக்கெட்டுகளையும் அவரிடம் கொடுத்து, சரியானதைத் தேர்வு செய்யச் சொல்லுங்க. (இந்த விஷயத்துல பொண்ணுங்கதான் ஹேண்ட்பேக் எக்ஸ்பர்ட்ஸ்!)

  • குளிக்கிற ஆசை இருந்தா, ஒரு தண்ணி வண்டி பக்கத்திலேயே போங்க. அதுல இருந்து சிந்துற ஷவர்லயே குளிச்சுடலாம் (பாத்துப்பா, அது கழிவுநீர் வண்டியா இருக்கப் போகுது!).

  • 12.பி_க்கு வெயிட் பண்றீங்களா? அப்படின்னா மொத பஸ்ஸை மிஸ் பண்ணவும். ஏன்னா, பின்னாடியே காலியா இன்னொரு 12.பி வரும்!

  • உங்ககிட்டே யாராச்சும் வழி கேட்டாங்கன்னா, தெரியலைன்னு சொல்லாதீங்க. சும்மா, ஏதாவது ஒரு வழி சொல்லி அனுப்புங்க. மறுபடியும் வழி கேட்டவரைப் பார்க்கவா போறீங்க? (இதுவரை கரெக்ட்டா வழி சொன்ன மவராசனை பார்த்ததே இல்லீங்கோ!)

  • நம்ம வீட்டை நாமதான் சுத்தமா வெச்சுக்கணும். அதனால குப்பைகளையெல்லாம் தெருவுல கொட்டுங்க. உங்க வீட்டுக்குப் பக்கத்து வீடு காலியா இருந்துச்சுன்னா, யூ ஆர் லக்கி. உங்களுக்கு பெரிய குப்பைத்தொட்டி கிடைச்சுதுன்னு அர்த்தம்!

  • ஒரு இடத்துல மட்டும் நிறைய வண்டிங்க + மக்கள் கூடியிருந்தாங்கன்னா, அது நிச்சயம் கல்யாண மண்டபம் அல்லது டாஸ்மாக். இது நியூட்டனின் நான்காவது விதி!

  • புதுசா சிமென்ட் ரோடு போடுறாங்கனு வெச்சுக்கங்க, அது காயுறதுக்கு முன்னாடி, முதல் வேலையா, உங்க அழகான கால் தடத்தைப் பதிச்சு ஆர்ம்ஸ்ட்ராங் ரேஞ்சுக்கு ஒரு கலக்கு கலக்குங்க!


தொடர்புடைய சுட்டி :
இங்கே Or
இங்கே


ஒரிஜினல் சுட்டி :
இங்கே




இதழ்: யூத்ஃபுல்.விகடன்.காம்




சென்னை வாசிகளே... பார்த்து போங்கப்பா..!




-கே.சீனிவாசன், சென்னை.


ரவு சுமார் 11:30 அளவில் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு காரில் திரும்பி கொண்டிருந்தேன். மீனம்பாக்கம் விமான நிலையம் தாண்டி பழவந்தாங்கல் சிக்னல் அருகே வண்டி சென்று கொண்டிருந்தது. அப்பொழுது எங்கள் வண்டியை வெள்ளை மாருதி ஸ்விஃப்ட் ஒன்று ஓவர் டேக் செய்தது. வழக்கமாக இப்படி இன்னொரு வண்டி ஓவர் டேக் செய்யும் பொழுது என் வண்டியின் வேகத்தை கணிப்பேன். எங்கள் வண்டி 80 காட்டியது. அந்த கார் எப்படியும் 110-க்கு மேல்தான் சென்றிருக்க வேண்டும். எங்களை மட்டுமல்ல... முன்னால் சென்ற எல்லா வண்டியையும் ஓவர் டேக் செய்துகொண்டுதான் சென்றது.


எங்கள் வண்டிக்கு முன்னால் பாறைகளையும் ஜல்லிக்கற்களையும் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றது. அதையும் ஓவர் டேக் செய்ய முயன்றது அந்த ஸ்விஃப்ட் கார். அப்போது இடதுபுறத்தில் இன்னொரு கார். இடையில் வெகு சில இடைவெளி மட்டுமே. 'இந்த நேரத்தில் ஓவர் டேக் செய்கிறானே, அந்த கார் சற்று வலப்புறம் வந்தாலும், அந்த லாரி சற்று இடப்புறம் வந்தாலோ என்ன ஆவது?" என்று நினைத்து கொண்டிருந்தேன். ஆனால் அதையும் தாண்டி அந்த இரு வண்டிகளுக்கு இடையில் புகுந்து ஒருவாறு சென்றுவிட்டது அந்த மாருதி ஸ்விஃப்ட்.


இந்த நேரத்தில் மாருதி ஸ்விஃப்ட் 100-லும், அதன் பின்னால் அந்த லாரி 80-லும் அந்த வண்டியின் பின் 5 - 8 மீட்டர் இடைவெளியில் 80-ல் எங்கள் வண்டியும் சென்று கொண்டிருந்தது. இப்பொடுது சரியாக பழவந்தாங்கல் சிக்னலில் சிகப்பு விழுந்தது. அந்த மாருதி ஸ்விஃப்ட் சிக்னல் அருகில் வரும்போது தான் சிகப்பு விழுந்தது. ஆனால் அவன் சிக்னலை கடந்து விட்டான். கடந்தவன் சென்றிருக்க வேண்டும். என்ன நினைத்தானோ... சடாரென்று ப்ரேக் அடிக்க வண்டி செம கன்ட்ரோல் போல, அப்படியே நின்றது. இதை சற்றும் எதிர்பார்க்காத லாரியின் ஓட்டுனர், மாருதி ஸ்விஃப்டின் மிக அருகில் சென்று அதன் மேல் மோதாமல் தவிர்க்க வண்டியை வ்லது பக்கமாக ஒடித்தார். அப்பொழுது சாலைக்கு நடுவில் 2 அடி உயர சுவர் மேல் வண்டியின் வலது பின்புறம் பயங்கர சத்தத்துடன் மோதியது.





இந்த மோதலில் வண்டி நிலை தடுமாறி வலது பக்கம் சாயத் தொடங்கியது. ஓட்டுனர் சுதாரித்து சடாரென்று இடது பக்கம் ஒடிக்க, ஷங்கர் படத்தில் வருவது போல தடாரென்று நிலைக்கு வந்தது. துணியை பிழிந்தால் எப்படி துணியின் முன் பக்கம் ஒரு பக்கமாகவும், பின் பக்கம் இன்னொரு பக்கமாகவும் முறுக்குமோ அப்படி இருந்தது லாரி. இந்த களேபரத்தில் அந்த மாருதி ஸ்விஃப்ட் ஒரு கீரல் கூட விழாமல் எஸ் ஆனது. லாரி கடைசியில் நிலைக்கு வந்து ஓரமாக நின்றது. எனக்கு பக்கத்தில் மற்றொரு காரில் வந்த வட மாநிலத்தவர் அந்த ஓட்டுனரை பார்த்து இந்தியில் கெட்ட கெட்ட வார்த்தையில் திட்டிக்கொண்டிருந்தார். நான் மாருதி ஸ்விஃப்ட் செய்த தவறு என்று சொல்லிக் கொண்டிருந்தேன். அதற்கு அவர், 'இவன் சிக்னலுக்கு நிறுத்தியிருக்க வேண்டும் இல்லையா?' என்று கேட்டார். நியாயம்தான்.


அப்புறம் தான் தெரிந்தது, லாரி சுவற்றில் மோதிய இடத்தில் சிக்னலுக்காக ஒருத்தர் நின்று கொண்டிருந்தது. அவர் அந்த சுவற்றை தாண்டி வலது புறம் திரும்புவதற்காக நின்று கொண்டிருந்தார். லாரி சுவற்றில் மோதிய இடத்தில் சில அங்குல இடைவெளியில் தான் அவர் நின்றுகொண்டிருந்திருக்கிறார். அவர் மட்டும் ஒரு அடி பின்னே நின்றிருந்தாலும் சட்னி தான்.


இங்கே தவறுகள்,




  • இரவில் அந்த நேரத்தில் சிக்னல் தேவையா?


  • சிக்னல் இருந்தாலும் இரவில் மதிக்கத் தேவையில்லை என்பது 'உண்மையான' சென்னைவாசிக்கு தெரியும். (ஸோ, மாருதி ஸ்விஃப்டும், லாரி ஓட்டுனரும் சென்னையை சேர்ந்தவர்களாக இருக்க முடியாது என்பது புரிகிறது).


  • மாருதி ஸ்விஃப்ட் 110-ல் சென்றது முதல் தவறு.


  • சிக்னலை தாண்டியவன் அப்படியே போய் தொலைந்திருந்தால் பரவாயில்லை. தாண்டி சென்று சடாரென்று நிறுத்தியது பெருந்தவறு.


  • பின்னால் வந்த லாரி ஓட்டுனர் சிக்னலை மதிக்காமல் செல்ல முற்பட்டது அடுத்த தவறு.


இதில் பாவப்பட்டவர் என்று பார்த்தால் அங்கு சிக்னலுக்காக நின்றிருந்தவர் தான். அவரும் வேறு ஏதாவது சிக்னல் ஜம்ப் செய்திருப்பார் என்பது வேறு விஷயம். ஆனால், அன்று அவர் உயிர் பிழைத்தது பெரிய அதிஷ்ர்டம்தான். தவறு செய்தவர்கள் அந்த மாருதி ஸ்விஃப்டும், லாரியும். ஆனால் அவர்கள் சேஃப். பிழைத்தவர் அதிர்ச்சியில் வண்டியை அப்படியே போட்டுவிட்டு பேந்த பேந்த விழித்துகொண்டிருந்தார். (அவரால் வேறு என்ன செய்ய முடியும்?). இவர் மட்டும் என்னவாம்.? கோட்டை தாண்டி அந்த சுவற்றுக்கு முன்னேதான் நின்று கொண்டிருந்தார். ஆனால் அப்படி நின்றதால்தான் அவர் பிழைத்தார். ஒரு வேளை ரூல்ஸ் பேசிக்கொண்டு கோட்டின் அருகிலேயே நின்றிருந்தால் சட்னிதான். இவையாவும் 15 முதல் 20 வினாடிகளுக்குள் நிகழ்ந்து முடிந்துவிட்டன. வேற என்ன சொல்றது...சென்னை வாசிகளே பார்த்துப் போங்கப்பா..!

தொடர்புடைய சுட்டி :
இங்கே


ஒரிஜினல் சுட்டி :
இங்கே

No comments:

Post a Comment