Monday, August 11, 2008

Univercell-ம் அயோக்கிய ஆடித்தள்ளுபடியும்...

நேற்று வேறொருவருக்கு நோக்கியா அலைபேசி வாங்கலாமென்று பான்டி பசாரில் இருக்கும் யூனிவர்செல்-லுக்கு சென்றிருந்தேன். நோக்கியா 3600 வாங்கும் யோசனையில் சென்றிருந்தேன். அங்கு சென்றவுடன் என் நாக்கில் சனி நர்த்தனம் ஆடிற்று. 'ஆடித்தள்ளுபடி எந்த எந்த மாடலுக்கு' என்று கேள்வி கேட்டேன். பின் தான் தெரிந்தது அது சும்மா ஒரு விளம்பரத்திற்கு தான் என்று. கடைசியில் வெகு வெகு சொற்பமான, ஓடாத மாடல்களுக்கே ஆடித்தள்ளுபடி என்று. சரி! விடக்கூடாது என்று மொபைல் மாடல்களை காட்டுங்கள் என்ரு கேட்டேன். சில மாடல்கள் சொன்னார்கள்.

எந்த மாடல் ஓடாதோ அந்த மாடல்களுக்கு ஆடித்தள்ளுபடி என்று தள்ளிவிடுகிறார்கள். அதுவும் ஒருவர் ஒரு மாடலை சொன்னால், அது நமக்கு பிடித்து போனால் உடனே இன்னொருவர் 'இல்லை, இந்த மாடலுக்கு இல்லை' என்பார். எல்.ஜி.-யில் (நாட் ப்ரம் ம.தி.மு.க) ஒரு மாடல் விலை 20K என்றும் அந்த மாடல் ஆடித்தள்ளுபடியில் 10K என்றும் சொன்னார்கள். சரி அதை காண்பியுங்கள் என்று சொல்ல, அதை எடுத்து வந்தார்கள். அது 5MP கேமரா உள்ள மாடல். மாடலும் ஓ.கே. நோக்கியா 3600-ன் விலை 9600 ரூபாய். சரி! 20K அலைபேசி 10K-க்கு கிடைக்கிறதே என்றும், வழக்கமாக நோக்கியா தான் வாங்குகிறோம், ஒரு சேஞ்சுக்கு மற்ற கம்பேனி வாங்கலாம் என்று ஒரு யோசனை இருந்ததாலும், முக்கியமாக யூனிவர்செல் மேல் நம்பிக்கை இருந்து தொலைத்ததாலும் வேறு எந்த கேள்வியும் கேட்காமல் வாங்கி வந்தேன். வாங்கும் நோக்கில் செல்லவில்லை. சும்மா பார்த்து வரலாமே என்று தான் சென்றேன். பின் காற்று வாங்க போன இடத்தில் கழுதை வாங்கி வந்த கதையாக, இதை வாங்கி வந்தேன்.

அவர்கள் சொன்னது இந்த மாடலின் விலை 20K, தள்ளுபடி போக 10K என்று. ஆனால், இன்று அலுவல் வந்ததும் அதன் விலையை அவர்களுடைய வலையில் பார்த்தால் அதன் விலை 10,500+ தான். சரி தள்ளுபடி போக போட்டிருப்பார்களோ என்று பார்த்தால் மற்ற கடைகளிலும் இதே விலை தான் (இதில் இன்னொருத்தர் அந்த மொபைல் விலை 13K என்றும் ஆடித்தள்ளுபடியில் 10K என்றும் உளரினார். அதுவும் தவறு). கோபமுடன் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டால், 'எங்கள் கடையில் விலை 10K தான்' என்றார்கள். அப்புறம் ஏன் தள்ளுபடி என்று போடுகிறீர்கள் என்றால், MRP விலை 27+ அதை ஒப்பிட்டு பார்த்தால் 5MP கொண்ட இந்த மொபைல் சீப் தானே என்று வியாக்கியானம் பேசினார்கள். அதை நீங்க சொல்லக்கூடாது, நாங்க சொல்லனும், 'சீப்'பா என்று.

மேலும், அந்த மாடலின் ஒர்ஜினல் விலை 27K. இப்பொழுது தள்ளுபடியில் எல்.ஜி.யே இந்த விலைக்கு கொடுகிறது. அப்புறம் எதற்கு இந்த மொள்ளமாறித்தனம்? கேட்டால் பதில் இல்லை.

இது தான் யூனிவர்செல்-லின் ஆடித்தள்ளுபடியின் லட்சனம்.

மேலும், என் நோக்கியா 6300-ன் டிஸ்ப்லே அவுட். எவ்வளவு ஆகும் என்று விசாரித்தால் வெளியில் 1300 ரூபாய் ஆகும் + ஒரு நாளின் மற்றிவிடலாம் என்று சொன்னார்கள். அதுவும் ஒரிஜினல் டிஸ்ப்ளே. (இது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை). அதே யூனிவர்செல்-ல் 2800 ரூபாய் + 7 நாட்கள் ஆகுமாம்.

இனி யூனிவர்செல்-க்கு செல்லவேகூடாது என்று முடிவெடுத்துவிட்டேன்.

இது இங்கு மட்டும் இல்லை. சென்ற வாரம் சரவணா ஸ்டோருக்கு சென்றிருந்தேன். திரும்பும் இடமெல்லாம் ஆடித்தள்ளுபடி விளம்பரங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. வழக்கமாக சோப் + அதன் சம்பந்தப்பட்ட பொருட்கள் இருந்தால் அதன் மேல் ஒரு தகவல் பலகை இருக்கும். உதா, 1+1 ஆஃப்பர் என்று. அதே போல எல்லா இடங்களிலும் ஆடித்தள்ளுபடி என்று தொங்க விட்டிருந்தார்கள். 'சரிங்க! இதுக்கு தள்ளுபடி உண்டா' என்று கேட்க. 'இல்லை! அதோ அங்கு ஒரு மூளையில் இருக்கே, அந்த ஷெல்ஃபுக்கு மட்டும் தான்' என்றார்கள்.' அப்புறம் எதற்கு எல்லா இடங்களிலும் ஆடித்தளுபடின்னு போட்டிருக்கீங்க?' என்றால் சிரிப்பு தான் பதில்.

ஆக, வாடிக்கையாளர்களே தெய்வம்! வாடிக்கையாளர்களே முட்டாள்களும்.

போங்கடா நீங்களும் உங்க, அயோக்கிய, ஆடித்தள்ளுபடிகளும்.

26 comments:

 1. இந்தியாவில் ஏன் கைபேசி மோகம் அதிகம் என்று சொல்லுங்கள்?

  கடைகளுக்கு விலை கேட்கப் போவதற்கும் கூட கையில் அதிகமாக பணம் எடுத்துக்கொண்டு செல்லாதீர்கள்.காரணம் பணம் நம்மிடம் அந்த தருணத்திலிருக்கும் போது மூளை எதையாவதை வாங்கவிட வேண்டும் என சிபாரிசு செய்யும்.ஒரு முறை கையில் பணம் இல்லாமல் பந்தா மட்டும் காட்டிவிட்டு வந்து பாருங்கள்.பின் பொருளை வாங்கலாமா வேண்டாமா என மனதளவிலும் நண்பர்களுடன் ஆலோசிக்கவும் நேரமிருக்கும்.

  ReplyDelete
 2. நீங்க சொல்லுறது சரிதான் ராஜ நடராஜன்.

  ஆனா பாருங்க...நேத்து கையில் டெபிட் கார்டுடன் போயிட்டேன்...B-)

  ReplyDelete
 3. நீங்கள் என் சுபிச்க்ஷா சென்று பார்க்ககூடாது ? அங்கு இந்த தள்ளுபடியும் இல்லை ஆனால் விலை மிக குறைவு

  ReplyDelete
 4. வாங்க sharevivek.

  //நீங்கள் என் சுபிச்க்ஷா சென்று பார்க்ககூடாது ?//

  அடுத்த முறை(!) முயற்சி செய்து பார்க்க வேண்டும்.

  //அங்கு இந்த தள்ளுபடியும் இல்லை ஆனால் விலை மிக குறைவு//

  அங்கே விலை குறைவு என்பதில் ஒரு தகிடுதத்தம் உள்ளதாக 'கேள்வி' பட்டேன். அங்கு போடப்படும் ரசீதில் வாட் இல்லாமல் போடுகிறார்களாம். அப்படி போட்டால் அது சட்டப்படி செல்லுமா என்று தெரியவில்லை.

  ReplyDelete
 5. யுனிவெர்சல் என்றில்லை, ஊரெல்லாம் இதே ஏமாற்று வேலதான் நடந்துகொண்டிருக்கிறது. நான் போன மாதம் வசந்த்&கோவில் ஒரு .:பிரிட்ஜ் வாங்கினேன், நாக்கு வெளியே வந்துவிட்டது அவர்கள் சர்வீஸில். அடுத்தது எங்கே சுபிக்ஷாவா? விளங்கிரும்..!

  ReplyDelete
 6. நன்கு விசாரித்துவிட்டு சென்றிருக்கலாம். யூனிவர்செல் ஒரு டுபாக்கூர் என பலர் நான் சென்னையிலிருக்கும் போது சொல்லியிருக்கின்றனர்.

  ReplyDelete
 7. இனி யூனிவர்செல்-க்கு செல்லவேகூடாது என்று முடிவெடுத்துவிட்டேன்.

  ஒரு வருடத்திற்கு முன்பு என் தலையிலும் இப்படித்தான் ஒரு LG மொபைலை கட்டி விட்டார்கள். அதன் பிறகு அந்தப் பக்கமே செல்வதில்லை என்று முடிவு செய்து விட்டேன்.

  நல்லவேலை நீங்கள் பதிவாக போட்டு பலருக்கும் தெரியப்படுத்தி இருக்கிறீர்கள்.

  ReplyDelete
 8. Univercell is a bogus firm, I bought a nokia mbl for 12800 and the same was available in Sangeetha for 12k. Unfortunately I only realised it when I bought another mbl for my wife!

  I will never buy at univercell.
  Hell with those bastards and hell with Madhavan who promotes it!

  ReplyDelete
 9. hey..nenga solratha partha universal pogatha nu solra mathri iruku.vera mobile company panra velaiya ithu???

  ReplyDelete
 10. வாங்க அனானி'ஸ், தாமிரா, வெங்கட்ராமன், satheesh.

  //நான் போன மாதம் வசந்த்&கோவில் ஒரு .:பிரிட்ஜ் வாங்கினேன், நாக்கு வெளியே வந்துவிட்டது அவர்கள் சர்வீஸில்.//

  ஆமாங்க. இப்போ எல்லாம் முடிந்த அளவு மார்கெட்டிங் செய்து பொருட்களை தள்ளி விடுகிறார்கள். பின் சர்வீஸ் என்ற பெயரில் மகா கொள்ளை நடைபெறுகிறது. என் வீட்டில் உள்ள ஸோனி வேகா டி.வி. வாங்கினோம். நல்ல டி.வி. அது. ஆனா, சமீபத்தில் பழுதடைந்துவிட்டது. அதனை கழட்டி பார்க்கவே மினிமம் 250 ரூபாயாம். கடைசியில் 1300 பில் போட்டார்கள்.

  அவர்களின் சட்டங்கள் வேறு கடுமையானது. நீங்கள் அந்த டி.வி.யை ஸோனி சர்வீஸ் சென்டரில் இருந்து வந்தவர்கள் அல்லாதவர் சர்வீஸ் செய்யக்கூடாது. அப்படி செய்தால் பின் ஏற்படும் ரிப்பேர்களுக்கு அவர்கள் பொருப்பேற்க முடியாது என்கிறார்கள்.

  //Univercell is a bogus firm, I bought a nokia mbl for 12800 and the same was available in Sangeetha for 12k.//

  ஆமாங்க. "Where you buy, matters"-ன்னு சொல்லி சொல்லியே ஏமாத்தறானுங்க. முதல் முறை வாங்கும் பொழுது ஏகப்பட்ட ஃப்ரீ என்றார்கள். என்னடா என்று பார்த்தால் எல்லாம் வவுச்சர்கள். உதா, க்ளோபஸ் போய் 1000 ரூபாய்க்கு துணி எடுத்தால் 100 ரூபாய் தள்ளுபடி என்று. க்ளோபஸ்ல ஒரு சட்டையே 1000 ரூபாய் ஆகிடும். மேலும், எந்த ஒரு இலவசங்களும் கிடையாது, அதாவது, மற்ற கடைகளை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது. அப்புறம் ஏன் அங்கே போய் எல்லோரும் விழவேண்டும்?

  //vera mobile company panra velaiya ithu???//

  ஆமாமா...மத்தவங்க எல்லாம் காந்தி பாருங்க...அட போங்க.

  //I always hate Univercell.//

  I just started :)

  ReplyDelete
 11. //Hell with those b******s and hell with Madhavan who promotes it!//

  ஆகா அனானி,

  மாட்டிவிட்டுடுவீங்க போல இருக்கே...!!! உணர்ச்சிய கட்டுப்படுத்துங்க.

  ReplyDelete
 12. The fundamental economic theory is that no trader will sell anything for a loss. So, it is so obvious that there is no "genuine" sale. For the same reason, Nalli silks have steadfastly not given any advertisement for Aadi. They say clearly "this is our price, no discount, if you are satisfied you can buy it". This is a straightforward way of doing business.

  ReplyDelete
 13. The fundamental economic theory is that no trader will sell anything for a loss. So, it is so obvious that there is no "genuine" sale. For the same reason, Nalli silks have steadfastly not given any advertisement for Aadi. They say clearly "this is our price, no discount, if you are satisfied you can buy it". This is a straightforward way of doing business.

  ReplyDelete
 14. //The fundamental economic theory is that no trader will sell anything for a loss.//

  You may be right. But, sometime clearance sale will yield a little margin profit (in loss).

  ReplyDelete
 15. வாங்க தமிழ்நெஞ்சம்,

  //Now, how is your new mobile? is it working?//

  மொபைல் ஓகே தான். பிரச்சினையே ஒன்னு ஆடித்தள்ளுபடின்னு ஏமாத்தினது. மற்றும் இது கொஞ்சம் பழைய மாடல் (ஆரம்பத்தில் இதன் விலை 27+). 5MP கேமரா. அதனால் பரவாயில்லைன்னு தான் சொல்லனும்.

  ஆனா, ஏமாத்திப்புட்டாய்ங்களே மக்கா...

  நோக்கியாவுக்கு ஒப்பிட்டால் வசதி குறைவு மற்றும் user friendly குறைவு, விண்டோஸுக்கும் மற்ற ஓஎஸ்-க்கும் இருக்கிற வித்தியாசம் மாதிரி.

  ReplyDelete
 16. Discounts are nothing but ways of making people buy things, when they dont want it. I have noticed twice in e-zone, the discount drama. i had been enquiring price for a geyser which was sold @ 5,700/- on regular times. During sale i saw the same geyser sold @ 30% off. The deal was put up as, MRP 8300/- and after discount the price is 5800/-. Another instance a dining table sold @ 33000/- regularly. During sale, the deal was MRP. 50000/-, with 35% off the price is 32500/-. Wow what a deal !!! Becareful about any sale @ any place.

  ReplyDelete
 17. இப்படித்தான் இங்க தில்லியில் எல்லா ஷோரூம்லயும் 50% தள்ளுபடிங்கறாங்க போனா.. நமக்கு வேண்டியதுஎல்லாம் 30% இல்லாட்டி 20% ன்னு போட்டு தனியா வச்சிருப்பாங்க..எதுதாங்க 50% ன்னு கேட்டா ஒன்னோ இரண்டோ தான் காட்டுவாங்க... கடை பூரா 50% ங்கற விளம்பரங்க்ள் தொங்கிக்கிட்டிருக்கும்.. :)

  ReplyDelete
 18. //இப்படித்தான் இங்க தில்லியில் எல்லா ஷோரூம்லயும்...//

  அப்போ இந்த பிரச்சினையும் UniverSAL-ன்னு சொல்லுங்க...

  ReplyDelete
 19. Univercell... The mobile expert ன்னு... நம்ம maddy சொல்லுவாரே.....அந்த கடையா....என்ன கொடுமைங்க இது....'
  Thanks for infor sharing.

  ReplyDelete
 20. ஆமாங்க...பயங்கர எக்ஸ்பர்ட்...

  ReplyDelete
 21. யூனிவர்சல். ஒரு கேடிவர்சல்..

  பூர்விகா சற்று பரவாயில்லை..

  சூர்யா
  சென்னை
  butterflysurya@gmail.com

  ReplyDelete
 22. பூர்விகாவிலும் சென்று ஒரு மொபைல் வாங்கினேன். நோக்கியா 6210 நேவிகேட்டர். அவர்கள் சொன்னது முதல் 6 மாதம் நேவிகேட்டர் உபயோகிக்கலாம், ஃப்ரீயாக. சரி நாமளும் ஜேம்ஸ் பான் ட் ஆகலாமென்று நினைத்து மொபைல் வாங்கி நோக்கியா கஸ்டமர் கேர் அனுகி ஜி.பி.ஆர்.எஸ் ஆக்டிவேட் செய்ய கேட்டால், அப்படி ஒரு ஆப்ஷனே இல்லை என்கிறார்கள். நான் பூர்விகா ஏமாற்றிவிட்டார்களா அல்லது தவறாக சொல்லிவிட்டார்களா தெரியவில்லை.

  ஆனா, யூனிவர்செல் ஒரு கேடிவர்சல் தான்.

  ReplyDelete