Wednesday, August 02, 2006

The Bicycle Thief (1948)

ஊருக்கு ரயிலில் சென்று வரும்பொழுது ரயிலில் விற்கப்படும் டி.வி.டி-க்களை பொழுதுபோக்கிற்காக வாங்குவேன். பெரும்பாலும் புதிய படங்கள் தான் என்றாலும், ஒரு முறை சில பழைய ஆங்கில B/W படங்களையும் பார்த்தேன். அந்தப் படங்களின் பெயர்கள் பள்ளிக்கூட நாட்களில் கேட்டமாதிரி இருந்ததாலும் (The Bicycle Thief, My Fair Lady மற்றும் The Sound Of Music ஆகியன), பழைய படங்களின் டி.வி.டி-க்கள் விற்கப்படுகிறதே என்ற ஆச்சரியத்திலும் அதை வாங்கினேன். அதில் ஒன்று தான் இந்த "The Bicycle Thief" படம். 1949-ல் வந்தது. ["LADRI DI BICICLETTE"]கடைசி வரை அது ஃபிரஞ்சு/இத்தாலி/துருக்கி/ரோமானிய மொழியா என்று தெரியவில்லை. ஆனால், கதை ரோம்-ல் நடப்பதாக ஒரு வசனத்தில் வருவதால் அது ரோமானிய மொழியாக இருக்கக்கூடும் என்று நினைக்கிறேன். (கடைசியில் அது இத்தாலிய மொழி திரைப்படமாம். (Google இட்டேன்). இந்தக் கதையை சுட்டு தான் தமிழில் சிவாஜியின் இரண்டாவது(?) படமான "முதல் தேதி" செய்தார்களா என்று தெரியவில்லை. "முதல் தேதி"? அதாங்க என்.எஸ்.கே பாடுவாரே "ஒன்னுல இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம்"-ன்னு. அது.


நம்ம ஊர் 60-களில் எப்படி இருந்திருக்குமோ, அதே நிலையில் தான் கதைக்களமும். ரோம் நகரம். வேலை கிடைக்காத நாட்கள். குழுமியிருக்கும் 30 பேர்களில் 2 பேருக்கு வேலை என்று அறிவிக்கும் முதல் காட்சியே வேலை இல்லா திண்டாட்டத்தை சொல்லிவிடுகிறது. அதில் கதாநாயகன் ரிஸ்ஸி அன்டோனியோ (Antonio Ricci)-விற்கும் கிடைக்கிறது. சுவரொட்டிக்களை ஒட்டும் வேலை. மாதம் 6000+ Lire(லிரா) சம்பளம். ஆனால் கட்டாயம் சைக்கிள் வேண்டும்.


மனைவி மரியா ரிஸ்ஸி (Maria Ricci)-யிடம் இதை சொல்ல, அவளோ தன் வரதட்சணையில் வந்த ஆறு படுக்கை விரிப்புகளை (யாருப்பா ஆறு போட கூப்பிட்டது?), நான்கு உபயோகித்தது, இரண்டு உபயோகப்படுத்தாதது என்று, 7500 லிரா-களுக்கு அடகு வைத்து, வட்டியுடன் 6500 லிரா-களை கொடுத்து சைக்கிளை மீட்டு தருகிறாள்.


மறுநாள் அன்டோனியோவும் அவன் பையன், புரூனோ (Bruno)-வும் வேலைக்கு போகின்றனர். புரூனோ ஒரு பெட்ரோல் பங்க்-ல் வேலை பார்க்கிறான். முதல் நாள் வேலை. மாலை ஏழு மணிக்கு வந்து கூட்டிச்செல்வதாக மகனிடம் சொல்லி செல்கிறான். சக ஊழியர் போஸ்டர் ஒட்டுவது எப்படியென்று செய்து காண்பித்து (demo class), செல்ல மும்முரமாக போஸ்டர் ஒட்ட ஆரம்பிக்க ஒரு திருடன் சைக்கிளை திருடிக் கொண்டு ஓடுகிறான். இவனும் துரத்திச் செல்ல, கண்டுபிடிக்க முடியவில்லை. திருடன் ஓடிவிடுகின்றான். (நம்ம ஊர் போல இருக்கும்) காவல்துறையில் புகார் கொடுக்கிறான். (போலீஸ்காரர் சக போலீஸ்காரரிடம் "Nothing! Just a Bicycle"). பேருந்தில் எழரைக்கு திரும்பி வந்து(!) மகனை கூட்டிச் செல்கிறான். வீட்டிற்கு செல்ல மனமில்லாமல், நண்பனைப் பார்த்து தன் கதையை சொல்கிறான். அவர்கள் மறுநாள் சைக்கிள் உதிரிபாகங்கள் விற்கும் இடத்துக்கு கூட்டிச் செல்வதாகவும், அங்கே தான் திருட்டுப் போன சைக்கிள்கள் கிடைக்கும், நம்ம சென்னை புதுப்பேட்டை மாதிரி, என்று சொல்கிறார்கள்.


மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு சைக்கிள் parts-களை தேட அறிவுறுத்தப்பட்டு, தேடுகிறார்கள். கிடைக்கவில்லை. மதியம் ஆகிறது. நண்பர்கள் திரும்பிக் கொள்ள, இவனுக்கோ சைக்கிளை தேட வேண்டிய கட்டாயம். மகனுடன் சேர்ந்து தேடுகிறான். அப்பொழுது பார்த்து மழை. ஒரு கட்டிடத்திற்கு கீழே ஒதுங்குகிறான். அங்கே சற்று தூரத்தில் அவன் சைக்கிளில் ஒரு பிச்சைக்காரனிடம் வந்து கணக்கு செட்டில் செய்யும் ஒருவனைப் பார்க்கிறான். அவனைத் துரத்த, மீண்டும் தப்பிக்கிறான். அந்தக் பிச்சைக்காரனை ஒரு தேவாலயத்தில் நடக்கும் மாஸ்-ல் கண்டுபிடிக்கிறான். அவன் எதுவும் கூற மறுக்க, இவன் சற்றே அங்கேயே சண்டைப் போடுகிறான். பிச்சைக்காரனும் அந்த களேபரத்தில் தப்பிக்கிறான்.


பையனுக்கோ உச்சா அவசரம். அனால் போகக்கூட நேரமில்லை. காரணம் திருடனைப் பிடிப்பதே வேலையாகிப் போனதால். பையன் சோர்வடைந்ததைப் பார்த்து, விரக்தி அடைந்து, இனி கவலைப்பட்டு பிரயோசனமில்லை என்று, அவனை ஒரு நல்ல உணவகத்துக்கு கூட்டிச் செல்கிறான். "Why should I kill myself worrying when I'll end up just as dead?". புல் பாட்டில் வைனும், இரண்டு Mozzrellaas-ம் ("வைனுடன் அம்மா நம்மை பார்த்தார்கள் அவ்வளவுதான். நாம ஆம்பளைங்கதானே. பரவாயில்லை") சாப்பிடுகிறார்கள். அங்கே கணக்கு வேறு. "12000 + 2000 ஓவர்டைம் + Family Ammowance (800/day). இவ்வளவையும் ஒரு நாளில் இழக்க வேண்டுமா? தேடுவோம். வேறு வழியில்லை. அந்த குறி சொல்பவளிடமே செல்வோம்" என்று தேடுகிறார்கள் (சைக்கிளை அடகு கடையில் இருந்து மீடு வரும் வழியில், 50 லிரா-கள் கொடுத்து மரியோ அந்தக் குறி சொல்பவளிடம் சென்று கேட்பதை கிண்டலடித்தான்). குறி சொல்பவளோ, "இன்று கிடைத்தால் தான் ஆச்சு. இல்லையேல் இனி கிடைக்காது" என்று சொல்கிறாள்.


வெளியே வரும்பொழுது வழியில் அந்தத் திருடனை பார்க்கிறார்கள். அவனை துரத்திச் சென்று, (அவன் ஏரியாவில்) பிடித்து கேட்க, அவனோ போலீசிடம் தான் நிரபராதி என்று கூறுகிறான். போலீசும் அவன் வீட்டில் சோதனை செய்து பார்க்கிறார்கள்.


சரி இனி வீட்டுக்கு செல்லலாம் என்று கூறி, அங்கே ஒரு விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு நடக்கிறது. சைக்கிள் நிறுத்துமிடத்தைப் பார்க்கிறான். அதற்கு ஒரு காவலாளி. அதை விடுத்து சற்று தூரத்தில் ஒரு வீட்டின் வாசலில் தனியாக இருக்கும் ஒரு சைக்கிளைப் பார்க்கிறான். ஒரு முடிவு செய்தவனாய், பையனிடம் பணம் கொடுத்து அவனை பேருந்து பிடித்து வீட்டிற்கு செல்லுமாறும், தான் வந்து விடுவதாகவும் கூறுகிறான். பையன் பேருந்து அருகில் செல்ல பேருந்து நகர்ந்து விடுகிறது. தந்தையை நோக்கி வருகிறான். தந்தையோ நேரம் பார்த்து, விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு விட்டு சைக்கிள் எடுக்க வரும் கூட்டத்துடனே சேர்ந்து விடலாம் என்று அந்தத் தனியாக நிற்கும் சைக்கிளை திருடி ஓடுகிறான். இவையாவையும் அந்ததப்பையனும் பார்க்கிறான். சைக்கிள் சொந்தக்காரன் கத்த, (அப்பொழுது மட்டும்) அவனைப் பிடித்து விடுகிறார்கள். அவமானம். கண்ணத்தில் சில் அடிகள் விழுகின்றது. தந்தை அடி வாங்குவதைப் பார்த்து அவரிடம் வருகிறான். போலீசும் வந்துவிடுகின்றது. அவனை இழுத்து செல்கிறார்கள். கீழே விழுந்த தொப்பியில் இருந்த தூசியைத் தட்டி எடுத்து வருகிறான் பையன். சைக்கிள் சொந்தக்காரனோ, அவனுக்கு ஒரு பையன் இருப்பதைப் பார்த்து, பரிதாபப்பட்டு, புகார் கொடுக்காமல் அவனை விட்டுவிட சொல்லுகிறான். "I don't want to bother. The man has enough trouble" என்று க்கூறி அண்டோனியோ பக்கம் திரும்பி "A fine example you set for your son". அனைவரும் கலைந்து செல்கிறார்கள்.


பையன் தொப்பியை கொடுக்க, கண்ணீர், அவமானம், வெட்கம் எல்லாம் சேர்ந்து கொண்டு, (பையன் தந்தையைப் பார்க்க, விசும்பலுடம்) வீடு நோக்கி நடப்பதாக படம் முடிகிறது.


இதை எழுதும் பொழுது கூட அந்தக் கதையின் தாக்கம் எனக்கு கண்ணிரை வரவழைத்தது. படத்தில் குறிப்பிட வேண்டிய அம்சம், அண்டோனியோ மற்றும், முக்கியமாக, அந்தப் பையன் புரூனோ. அருமையான நடிப்பு. வேலைக்கு செல்லும் பொழுது கைக்குழந்தையான தங்கையை பாதிக்கும் என்று வீட்டு சன்னலை மூடும் இடம், சாப்பிடும் இடத்தில் அருகில் இருக்கும் இருக்கும் மற்றொரு பணக்கார பையன் சாப்பிடும் Mozzrellaas-க்களை ஏக்கத்துடன் பார்ப்பதும், தன்னை மற்றவர்கள் நசுக்கி இடிப்பதைகூட பார்க்காமல் சைக்கிள் நியாபகத்திலேயே இருக்கும் தந்தையை பரிதாபமாக பார்க்கும் இடம், தந்தை கணக்கு சொல்ல சொல்ல எழுதிவிட்டு "We will find it" என்று சொல்லும் இடம், தந்தையை மற்றவர்கள் அடிக்கும் இடத்தில் வெறும் கண்ணீரை மட்டுமே விட்டு மற்றவர்களின் பரிதாபத்தை சம்பாதித்து, இப்படி பல இடங்கள் நம் நெஞ்சை உருக்கிவிடுகின்றான். அண்டோனியோ. ஒன்றும் செய்ய முடியாமல் கையாலாகாதத்தனத்தை வெளிப்படுத்தி, பையனை பார்க்க முடியாமல் கண்ணீர் விட்டு...அருமையான பாத்திர படைப்பு.


Antonio Ricci - Lamberto Maggiorani
Bruno - Enzo Staiola
Maria - Lianella Carell
Begger - Carlo Jachino
Directed by Vittorio DeSi


Wikipedia-வில்


Quotes from the film


Antonio Ricci: "You live and you suffer."
Antonio Ricci: "Why should I kill myself worrying when I'll end up just as dead?"
Antonio Ricci: "There's a cure for everything except death."


சான்ஸ் கிடைத்தால் நிச்சயம் பாருங்களேன்.








10 comments:

  1. //தந்தை அடி வாங்குவதைப் பார்த்து அவரிடம் வருகிறான்//
    //பையன் தொப்பியை கொடுக்க, கண்ணீர், அவமானம், வெட்கம் எல்லாம் சேர்ந்து கொண்டு, (பையன் தந்தையைப் பார்க்க, விசும்பலுடம்) வீடு நோக்கி நடப்பதாக படம் முடிகிறது.//

    நல்ல படம், இந்தப் படத்தின் கதையை நான் கல்லூரி படிக்கும் போது ஏதோ ஒரு புத்தகத்தில் படித்தேன்,
    அப்போழுதே அந்த பையன் மீதும், பையன் முன்னால் மற்றவர்களிடம் அடி வாங்கி அவமானப் படும் அப்பாவின் மீதும் பரிதாபம் ஏற்பட்டது, உங்களின் கதையை மீண்டும் படித்த பொழுது இப்பொழுது மீண்டும் அந்த பரிதாபம்,
    ஆனால் இந்தப் பார்க்க இதுவரை கொடுத்து வைக்கவில்லை(கிடைத்தால் கண்டிப்பாக பார்க்க வேண்டும்)

    ReplyDelete
  2. நன்றி என் நண்பா,

    நேற்று அந்த டி.வி.டி.யில் இருந்த மற்றொரு படமான 'The Sound Of Music'-ஐ கொஞ்சம் பார்த்தேன். அட! நம்ம 'சாந்தி நிலையம்' கதையை எடுப்பதற்கு சில வருடங்களுக்கு முன்னே ஆங்கிலத்தில் சுட்டுவிட்டார்களே என்று வியந்தேன்!!!

    ReplyDelete
  3. அருமையான படம் சீனு. இந்த படத்தின் திரைக்கதை வடிவம் தமிழில் கிடைக்கிறது.

    அஜயன் பாலா எழுதியிருக்கிறார். "கனவுப்பட்டரை" வெளியிட்டிருக்கிறது.

    திரைக்கதையில் ஆர்வமுள்ளவர்களுக்கு நிச்சயம் பயன்படும்.

    ReplyDelete
  4. நல்ல படம்.நல்ல விமர்சனம்.
    வாழ்த்துக்கள் சீனு.

    ReplyDelete
  5. சீனு...
    இது போன்ற ரசிக்கக் கூடிய ஆங்கிலப் படங்கள் பற்றிய விமர்சனங்கள் அடிக்கடி எழுதுங்கள்..


    அன்புடன்...
    சரவணன்.

    ReplyDelete
  6. பார்க்க இதுவரை கொடுத்து வைக்கவில்லை(கிடைத்தால் கண்டிப்பாக பார்க்க வேண்டும்)
    //

    அதே அதே

    ReplyDelete
  7. அது சரி! எல்லோரும் 6 போட கூப்பிடுரீங்களே! அப்படீன்னா என்னன்னு சொல்லவே இல்லையே!!

    ReplyDelete
  8. நல்லா இருக்கு சீனு.

    இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. நல்லா இருக்கு சீனு

    இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
    :)

    ReplyDelete
  10. நன்றி அருள் குமார், (துபாய்) ராஜா, மின்னுது மின்னல், யெஸ்.பாலபாரதி, நாகை சிவா.

    ReplyDelete