Thursday, August 24, 2006

The Green Mile (1999)

The Bicycle Thief (1948) திரைப்படம் விமரிசனம் எழுதும் பொழுதே, இனி விமரிசனம் எழுத வேண்டாம் என்று தான் நினைத்தேன், The Green Mile பார்க்கும் வரை. 'The Green Mile' என்பது மரண தண்டனை அளிக்கப்பட்ட கைதிகள் கடைசியாக தண்டனை நிறைவேற்றப்பட அழைத்துச் செல்லப்படும் பாதை. அது 'The Last Mile', ஆனால் அதன் தரை பசுமையாக, பச்சையாக, இருப்பதானால் 'The Green Mile' என்று அழைக்கப்படுகிறது. கதை, பால் எட்ஜ்கோம்ப் (Paul Edgecomb) என்ற 108 வயது பெரியவர், தன் 44வது வயதில், 1935-ல், நடப்பதாக தன் தோழியிடம் சொல்கிறார். அவர் ஒரு முதியவர் இல்லத்தில் வாழ்கிறார். தினமும் வாக்கிங் மட்டும் தவறாமல் செல்கிறார். அதன் காரணம் தான் இந்த flaskback. (தேவைப்பட்டதால், இந்தக் கதைச் சுருக்கம் சற்றே பெரியதாக இருக்கும்). படம் extraordinary எல்லாம் இல்லை தான். ஆனால் இந்தப்படத்தின் திரைக்கதையின் அமைப்பும், மரணத்தின் வலி, மரணத்தின் பயம், மரணத்தின் கொடூரம் ஆகியவையும் அதே நேரத்துல் அதிக வருடம் உயிர் வாழ்வதன் கொடுமையையும் சொல்லியிருக்கிறது. படத்தின் கதாநாயகன் அமைதியாக, அடுத்த இரைக்காக காத்திருக்கும் ஒரு மின்சார நாற்காலி.

1935, கோடை காலத்தில், லூசியானா மாகானத்தில் ஒரு சிறைச்சாலையில் பால் பாதுகாவலராக பணிபுரிகிறார். பால், இறக்கப்போகும் கைதிகளை நிம்மதியாக இருக்க வேண்டும் என்றும் கைதிகள் மனிதாபிமானத்துடன் நடத்தப் பட வேண்டும் என்றும் விரும்புகிறவர். அவர் ஒரு urinary infected நோயாளி. அவருடன் பணிபுரிபவர்கள் புரூட்டஸ் (Brutus Howell), பெர்சி (Percy Wetmore), டீன் (Dean Stanton) மற்றும் வார்டன் ஹால் (Warden Hal Moores). பெர்சி மூர்க்கமான, சாடிஸ்ட் பாதுகாவலன். அங்கிருக்கும் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கைதிகள் ஆர்லன் (Arlen Bitterbuck), டெல் (Eduard Delacroix).

Flashback ஆரம்பிக்கும் பொழுது, சிறைக்கு புதிய கைதி அழைத்து வரப்படுகின்றான். அவன் ஏழு அடி உயர, ஜான் காஃபி (John Coffey). இரண்டு சிறுமிகளை கற்பழித்து கொலை செய்த குற்றத்துக்காக மரண தண்டனை அளிக்கப்பட்டு, execution-க்காக கொண்டுவரப்பட்டிருக்கிறான். "I couldn't help it, boss. I tried to take it back, but it was too late."-என்பது அவன் கைது செய்யப்படும் பொழுது அவன் கூறுகிற வாசகம். அவன் case history-யை படித்து அவனைப் பற்றி அறிந்துக் கொள்கிறான் பால். இரவில் விளக்கனைத்தால் பயமாக இருப்பதாக காஃபி பாலிடம் கூற, அவன் வேண்டுகோளின் படி விளக்கு இரவிலும் எரிய அனுமதிக்கப்படுகிறது. இதற்கிடையில் ஆர்லனனின் தண்டனை நிறைவேற்ற ஒத்திகை பார்க்கப்படுகிறது. பின், ஆர்லனுக்கு தண்டனை நிறைவேற்றப்படுகிறது. எப்படி நிறைவேற்றப்படுகிறது என்று சொல்ல வேண்டும்.

ஆர்லன், தலையில் உச்சி நடுவில் மழிக்கப்பட்டு, தண்டனை நிறைவேற்றப்படும் மின்சார நாற்காலி இருக்கும் அறைக்கு அழைத்து வரப்படுகின்றான். அந்தப் பாதை தான் 'THE LAST MILE', இங்கே 'THE GREEN MILE'. அவனுடைய தண்டனை நிறைவேற்றப்படிவதை பார்க்க (அல்லது சாட்சிகள்?) ஒரு கூட்டம் அமர்ந்திருக்கிறது. அங்கே ஒரு மெல்லிய நிசப்தம். கை கால்கள் நாற்காலியுடன் கட்டப்படுகிறது. சற்றே அதிகமாக மூச்சு ஆர்லனிடமிருந்து வெளிப்படுகிறது. அது மரண பயத்தின் வெளிப்பாடு. வாயில் துணி கொடுக்கப்படுகிறது. மழிக்கப்பட்ட தலையின் மேல், உப்பு நீரில் நணைக்கப்பட்ட பஞ்சு வைக்கப்பட்டு, அதன் மேல் மிண்சார கம்பி இணைக்கப்பட்ட தகடு வைக்கப்படுகிறது. உப்பு நீரில் நணைக்கப்பட்ட பஞ்சு எதற்கு என்றால், அதன் காரணமாக மின்சாரம் மூளையில் அதி வேகமாக இறங்கி, மரணம் மிக விரைவில் நேரும் என்பதால். இல்லையென்றால்...அதை பிறகு பார்ப்போம். முகம் கருப்பு துணியால் மறைக்கப்படுகிறது. சரியாக பத்து மணிக்கு, "Roll on Two" என்று சொல்ல, ஒரு சுவிட்சை இயக்கப்பட (ஒரு வித மரண ஒலியுடன்), மின்சாரம் பாய்கிறது. சில வினாடிகளில், ஆர்லன் உடல் துடித்து, உடலிலெங்குமிருந்து புகை கிளம்பி தலை சாய்கிறது. மருத்துவர் பார்த்து ஆர்லன் இறக்க வில்லை என்று தலையாட்ட, மீண்டும் மின்சாரம் கொடுக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப்படிகிறது. இந்த தண்டனையின் ஊடே பெர்சிக்கு ஒரு டெமோவாகவும் அமைகிறது.

ஒரு நாள், சிறைக்கு புதிய கைதியாக வார்ட்டன் ('Wild Bill' Wharton) என்னும் doped, சைகோ அழைத்து வரப்படுகின்றான். அவன் உள்ளே வரும்பொழுது "Boss! carefull" என்று காஃபி பாலிடம் எச்சரிக்கின்றான். வார்ட்டன் உள்ளே வந்தவுடன் திடீரென்று அனைவரையுன் தாக்கி தப்பிக்க முயற்சிக்கிறான். பின், அவன் doped போல நடித்தான் என்று தெரிகிறது. பிற நேரங்களில் வார்ட்டன் வாயில் பிஸ்கட்டை மென்று புரூட்டஸ் முகத்தில் துப்புகிறான். மற்றொரு முறை, ஹாரி மீது சிறுநீர் கழிக்கிறான். அதற்காக ஒரு இருட்டரையில் வைத்து தண்டிக்கப்படுகிறான்.

ஒரு முறை பால் சிறுநீர் கழிக்க அவதிப்படுவதைப் பார்த்து காஃபி அவனை அருகில் அழைக்கிறான். சற்றே சினேக உணர்வுள்ள பாலும் அவன் அருகில் வருகிறான். திடீரென்று, காஃபி பாலின் உயிர்நிலையை கையில் பிடிக்கிறான். பால் திமிர முயர்சிக்கிறான். காஃபி அவனுக்கு ஏதோ சிகிச்சை அளிக்கிறான் என்று புரிந்து கொள்கிறான். "Awful tired now, boss. Dog tired" என்று காஃபி உடல் தளர்ந்து படுக்கிறான். அதன் பின் பாலின் சிருநீரக பிரச்சினை தீர்ந்துவிடுகிறது. காஃபியிடம் ஏதோ அற்புதம் இருப்பதாக உணர்கிறான்.

அந்த சிறையில் உள்ள ஒரு எலி, ஜிங்கிள்ஸ் (Mr. Jingles) நாளாடைவில் சிறையில் இருக்கும் மற்றொரு கைதியான டெல்-லிடம் சினேகமாகிறது. அது சிறிய சிறிய வித்தை காட்டுகிறது. டெல் ஆசையுடன் வளர்ப்பதால், அது அனைவரின் நண்பனாகிறது. மேலும் தன் மரணத்திற்கு பிறகு, ஜிங்கில்ஸை ஃப்லோரிடாவில் இருக்கும் "Mouseville"-ல் விடவேண்டும் என்று தன் ஆழையை சொல்லுகிறான். பால்-ம் அதற்கு சம்மதிக்கிறார். பெர்சி டெல்-ஐ வெறுக்கிறான். பின் ஒரு முறை வார்ட்டன் பெர்சி-யை திடீரென்று தாக்க, பெர்சி தன் உடையிலேயே சிறுநீர் கழித்துவிடுகிறான். அது தான் சமயம் என்று டெல்-லும் தன் கை எழும்பை உடைத்த பெர்சியை பார்த்து சிரித்து கேலி பேசுகிறான். இதையெல்லாம் மனதில் வைத்து டெல்-லின் அறையில் இருந்து வெளியில் வரும் சமயம் அதை காலால் மிதித்து கொன்றுவிடுகிறான் பெர்சி. டெல் உடடைந்து அழுகிறான். அதற்கு காஃபி தன் கையால் தொட்டு ஜிங்கிள்ஸ்-க்கிற்கு உயிர் கொடுக்கிறான். பின் டெல்-லிற்கு தண்டனை நிறைவேற்றும் நேரம் வருகிறது. ஒரு நல்ல நாளில் ஒத்திகைப் பார்த்து டெல்-ஐயும் The Green Mile-ல் கொண்டு செல்கிறார்கள்.

இந்த முறை தண்டனையை நிறைவேற்றும் பொருப்பு, பால்-ன் மேற்பார்வையில், பெர்சியிடம் கொடுக்கப்படுகிறது. ஆர்லனைப் போலவே டெல்லிற்கும் உச்சியில் மழிக்கப்பட்டு நாற்காலியில் அமர வைத்து கட்டிப் போடுகிறார்கள். தலையில் கருப்புத் துணியை மாட்டும் முன் டெல் தன் ஜிங்கில்ஸை "Mouseville"-ல் விடவேண்டும் என்று சொல்ல, பெர்சி அப்படி ஒரு இடம் இல்லை என்றும் அது டெல்-ஐ சமாதானப்படுத்த பால் பொய் சொன்னார் என்றும் (தன் சாடிச முகம் காட்டி) சொல்ல, டெல் நொந்து போகிறான். முகத்தில் துணி மாட்டப்படுகின்றது. இப்பொழுது பெர்சி, அனைவரும் பார்க்காத நேரம், மழிக்கப்பட்ட தலையின் மேல் பஞ்சை உப்பு நீரில் நணைக்காமல் வைத்து அதன் மேல் மிண்சார கம்பி இணைக்கப்பட்ட தகடு வைத்து பொருத்துகிறான். இதை அருகில் இருந்த பால் உணரவில்லை. நேரம் சரியாக பத்து ஆக, பெர்சி "Roll on Two" சொல்லி முடிக்க, பால் பக்கெட்டில் இருந்த உப்புத் தண்ணீர் சலனமற்று கிடைப்பதையும், அது கீழே சற்றும் சிந்தாமல் இருப்பதையும் பார்த்து, சுவிட்சை போட வேண்டாம் என்று சொல்ல வாய் திறப்பதற்கு முன், நேரம் கடந்து விடுகிறது. சுவிட்சை போட, மின்சாரம் டெல்-ன் உடலில் பாய்கிறது. இந்த முறை மரணம் மிகக் கொடியதாக இருக்கிறது. டெல் மரண அவஸ்தையில் துடிக்கிறான். மின்சாரம் அவனை கொல்லவில்லை, அல்லது மிக மிக மெதுவாக கொல்கிறது. ஒவ்வொரு வினாடியும் ஒவ்வொரு ய்கமாக இருக்கிறது (படம் பார்த்த எனக்கும் தான்). ஆனால், இடையில் அதனை நிறுத்தவும் முடியாது. மின்சாரம் டெல்-ன் உடலில் பாயப் பாய, அவன் உடல் தீய்ந்து போக தொடங்குகிறது. சிறையில் உள்ள விளக்குகள் வெடிக்கிறது. அங்கே தன் அறையில் காஃபி-யால் டெல்-ன் வலியை உணரமுடிகிறது. ஜிங்கில்ஸ்-ஐ கையில் வைத்திருந்து அதற்கு தன் ஆயுளில் சில பாகங்களை கொடுக்கின்றான். மற்றொரு அறையில் வார்ட்டன் டெல் துடிப்பதை உணர்ந்து 'சந்தோஷத்தில்' பாடுகிறான்,
"Barbecue, me and you! Stinky pinky, pew, pew! Or dilly, Jilly, Hilly or Bob! It was a french-fried Cajun named Delacroix!".
அங்கே டெல்-ன் உடல் இறக்காமல் தீய்ந்து போக ஆரம்பித்து, அவன் உடல் வெடிக்க ஆரம்பிக்கிறது. அவன் உடலிருந்து கரும் புகையும், நாற்றமும் வெளிப்பட சுற்றி அமர்ந்து 'வேடிக்கை' பார்த்துக் கொண்டிருப்பவர்கள் கதவை நோக்கி பயத்தில் ஓட ஆரம்பிக்கிறார்கள். இந்தக் கொடுமை சில நிமிடங்கள் நீடிக்கிறது. பின் உருக்குலைந்த நிலையில் டெல்-ன் உடல் ஒரு வழியாக ஓய்ந்து சாய்கிறது. அவன் உயிர் பிரியும் நேரம், காஃபியின் கையில் இருந்த ஜிங்கில்ஸ் குதித்து ஒரு அறையில் நுழைந்து காணாமல் போகிறது. பெர்சிக்கு சரியான பாடம் கற்பிக்கப்படுகிறது. இன்னும் ஓரிரு வாரங்களில் அவன் பணி மாற்றல் வாங்கி சொல்ல வேண்டும் என்று மிரட்டப்படுகின்றான். (இந்த மேற்கூறிய தண்டனை காட்சி காண மிகுந்த தைரியம் வேண்டும். இதைப் பார்த்து இரண்டு நாட்கள் எனக்கு பயத்தில் தூக்கம் வரவில்லை). இந்தக் கொடுமையாவும், பஞ்சை உப்புத் தண்ணீரில் நனைக்காததால் வந்த விணை.

பின், காஃபியை வைத்து மூளையில் கட்டியுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் தன் வார்டன் ஹால்-ன் மனைவி மெலிண்டா-வை (Melinda Moores) காப்பாற்ற காஃபியை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக ஓர் இரவில், வார்ட்டன்-க்கு (வார்டன் வேறு, வார்ட்டன் வேறு) மயக்க மருந்து கொடுத்தும், பெர்சியை ஓர் இருட்டரையில் பூட்டி வைத்தும், ஹால்-ன் வீட்டிற்கு அழைத்து செல்கின்றனர். (ஆனால், சிறையில் வார்ட்டன் திடீரென்று காஃபியின் கையை பிடித்து இழுக்கின்றான். அதனை வைத்து அவன் நல்லவனில்லை என்றும், அவன் மனதில் உள்ளவற்றையும், அவன் யார் என்பதையும் உணர்கிறான்). ஹாலின் வீட்டில் உள்ளே கட்டிலின் ஹால்-ன் மனைவி படுத்திருக்க, அவளை குணப்படுத்த நெருங்குகின்றான் காஃபி. அவள் அவனை பார்த்து "Pig fucker" என்று கூறுகிறாள் (கவனிக்க, கதை 1935-ல் நடக்கிறது. அந்த காலகட்டம் நிற வெறி மிகுந்த காலகட்டம்). இதனைப் பொருட்படுத்தாமல், மெலிண்டா-வை நெருங்கி, அவள் உதட்டில் வாய் வைத்து அவளின் நோயை வாங்கிக்கொள்கிறான். வழக்கம் போல அந்த நோயை சிறு பூச்சிகளாக வெளியேவிடாமல் உள்ளேயே வைத்துக் கொள்கிறான்.

பின் சிறைக்கு வந்து அந்த நோயை பெர்சிக்கு கொடுத்துவிடுகின்றான் காஃபி. திடீரென்று ஏற்பட்ட ஒரு வித மன அழுத்தத்தால் பெர்சி நேரே சென்று வார்ட்டனை துப்பாக்கியால் சுட்டு கொன்று விடுகின்றான். இவை யாவும் கன நேரத்தில் நடந்து விடுவதால் யாராலும் தடுக்க முடியவில்லை. பின் பெர்சி மனநோயாளியாகி மருத்துவமனையில் அனுமதிக்கப் படுகின்றான். பால்-ஐ அழைத்து அவன் கரம் பிடிக்க, தன் ஆயுளில் சிலவற்றை அளித்து, தான் உணர்வதை அவனுக்கும் உணர்த்துகிறான். அதன் படி, எந்த குழந்தைகளை கொன்றதாக பழி சுமத்தப்பட்டு மரண தண்டனை கொடுக்கப்பட்டதோ, அந்தக் குழந்தைகளை கற்பழித்துக் கொன்றவன் தான் வார்ட்டன். வார்ட்டன் ஒரு வீட்டில் வேலை பார்க்கிறான். அந்தக் குழந்தைகளை ஒரு நாள் அதிகாலை மிரட்டி அழைத்து சென்று கற்பழித்துக் கொன்று விடுகின்றான்.


Wild Bill Wharton: You love your sister? You make any noise, you know what happens. I'm gonna kill her instead of you. Understand?
John Coffey: He kill them wi' their love. Wi' their love fo' each other. That's how it is, every day, all over the world.


காஃபி, அந்தக் குழந்தைகளுக்கு உயிர் கொடுக்க முயற்சிக்கிறான். ஆனால் முடியவில்லை. (அந்த வாசகம் தான் "I couldn't help it, boss. I tried to take it back, but it was too late"). ஆனால் அவன் தான் குழந்தைகளை கொன்றதான சந்தர்ப்பமும் சாட்சியும் முடிவுகட்ட அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகின்றது. இதை உணர்ந்து பால், காஃபி-யிடம் அவனுக்கு உதவுவதாகவும், எங்காவது தப்பி ஓடிவிடுமாறும் கூறுகிறான். ஆனால் காஃபி, தான் மிக சோர்ந்து இருப்பதாகவும், நடப்பவைகளை பார்த்து வெறுத்து போய் விட்டதாகவும் அதனால் தான் சாக விரும்புவதாகவும் கூறுகிறான்.


Paul Edgecomb: What do you want me to do John? I'll do it. You want me to let you walk out of here and see how far you get?
John Coffey: Now why would you want to do a foolish thing like that?
Paul Edgecomb: When I die and I stand before God awaiting judgment and he asks me why I let one of HIS miracles die, what am I gonna say, that it was my job?
John Coffey: You tell God the Father it was a kindness you done. I know you hurtin' and worryin', I can feel it on you, but you oughta quit on it now. Because I want it over and done. I do. I'm tired, boss. Tired of bein' on the road, lonely as a sparrow in the rain. Tired of not ever having me a buddy to be with, or tell me where we's coming from or going to, or why. Mostly I'm tired of people being ugly to each other. I'm tired of all the pain I feel and hear in the world everyday. There's too much of it. It's like pieces of glass in my head all the time. Can you understand?
Paul Edgecomb: Yes, John. I think I can.


பின் கடைசியாக காஃபி-ன் execution. 'The Green Mile'-ல் அழைத்து வரும்பொழுது காஃபி அன்று மதியம் தூங்கியதாகவும் கனவில், Mouseville-ல் ஜிங்கில்ஸ் வித்தைகள் செய்து காட்டுவதாகவும், அங்கே அந்த இரு குழந்தைகளும் தன் மடியில், தலையில் ரத்தம் இல்லாமல், அமர்ந்திருந்ததாகவும், அவர்கள் ஜிங்கில்ஸ்-ன் விதைகளை கை கொட்டி சிரித்து ரசித்ததாகவும் கூறுகிறான். இந்த முறை வழக்கம் போல இல்லாமல் அனைவரின் கண்களிலும் கண்ணீர். தண்டனையை பார்க்க அந்த இரு குழந்தைகளின் பெற்றோரும் வருகின்றனர். அவனை கரிச்சுக் கொட்டுகின்றனர்.


John Coffey: There's lotsa people here that hate me, lots. I can feel it. It's like bees stingin' me.
Brutus 'Brutal' Howell: Well feel how we feel then. We don't hate you. Can you feel that?


பஞ்சை உப்புத்தண்ணீரில் நனைத்து தலையில் வைத்து அதன் மேல் மிண்சார கம்பி இணைக்கப்பட்ட தகடு பொருத்துகின்றனர்.


John Coffey: [singing as he's being strapped to the electric chair] Heaven, I'm in heaven... heaven... heaven...


முகத்தை கருப்புத் துணியால் மூடுகின்றனர். முகத்தை மூடினால் இருட்டாக இருக்கும். அதனால் மூட வேண்டாம் என்று காஃபி கூறுகிறான். அதன்படி துணியை எடுத்து விட்டு, சரியாக பத்து மணிக்கு "Roll on Two" சொல்ல, தண்டனை நிறைவேற்றப்படுகின்றது, அங்குள்ள சிறைக்காவலர்களின் கண்ணீருடன். இந்த முறை காமெரா தண்டனை விதிக்கப்படுபவரை தவிர்த்து, அங்குள்ளவர்களின் முகபாவங்களிலேயே நிகழும் சோகம் சொல்லப்படுகின்றது.

இத்துடன் flashback முடிவுபெற்று வயதான பால் பேசுகிறார். அதுதான் தான் கடைசியாக நிறைவேற்றிய தண்டனை என்றும் அதன் பிறகு தான் பணி மாற்றல் வாங்கிக் கொண்டு வேறு இடத்திற்கு வந்துவிட்டதாகவும் கூறுகிறார். காஃபி இறந்த பிறகு ஜிங்கில்ஸ் வந்து பால் கையில் வந்து சேர்கிறது. அறுபது வருடங்களுக்கு முன் இருந்த ஒரு எலி இன்னும் உயிருடன் இருக்கிறது. அதுவே இவ்வளவு நாள் வாழும் பொழுது இன்னும் தான் எவ்வளவு ஆண்டு வாழவேண்டும் என்று தெரியவில்லை. அதுவும் தன் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் தன் கண் எதிரிலேயே ஒவ்வொருவராக இறந்து போனாலும் தான் மட்டும் இன்னும் உயிருடன் இருப்பதாகவும், காஃபி தனக்கும் ஜிங்கில்ஸ்-க்கும் கொடுத்தது வரமா அல்லது சாபமா என்று தெரியவில்லை என்று கூறி தூங்கப்போவதோடு படம் முடிகிறது.

நடிகர்கள்

Tom Hanks - Paul Edgecomb
David Morse - Brutus "Brutal" Howell
Bonnie Hunt - Jan Edgecomb
Michael Clarke Duncan - John Coffey
James Cromwell - Warden Hal Moores
Michael Jeter - Eduard Delacroix
Graham Greene - Arlen Bitterbuck
Doug Hutchison - Percy Wetmore
Sam Rockwell - 'Wild Bill' Wharton
Barry Pepper - Dean Stanton
Jeffrey DeMunn - Harry Terwilliger
Patricia Clarkson - Melinda Moores
Harry Dean Stanton - Toot-Toot
Dabbs Greer - Old Paul Edgecomb
Eve Brent - Elaine Connelly

8 comments:

  1. ஜான் காஃபி போட்டோ கிடைத்தால் போடுங்க.. அது தான் என்னைப் படம் பார்க்க வைத்தது... நல்ல படம்..

    Coffee as in drink :)

    ReplyDelete
  2. சீனு,

    நீங்கள் சொன்னமாதிரி extraordinary படமில்லை. ஆனாலும் 1999ல் பார்த்தது இப்போதும் அப்படியே பசுமையாக நிற்கிறது.

    திரை விமர்சனம் எழுதுவதை ஏன் நிறுத்தப்போகிறீர்கள்? தொடர்ந்து எழுதுங்கள்.

    -மதி

    ReplyDelete
  3. just another ordinary film instead of the hype

    ReplyDelete
  4. மதி,
    //திரை விமர்சனம் எழுதுவதை ஏன் நிறுத்தப்போகிறீர்கள்?//
    ச்சும்மா, ஒரே விசயத்தை அரைத்த மாவையே அரைக்காமல் இருக்க.

    ReplyDelete
  5. நான்கைந்து வருடங்களுக்கு முன் பார்த்தேன். என்னவொரு ஓங்குதாங்கான தோற்றம் John Coffeyக்கு!!

    ReplyDelete
  6. 'Shawshank Redemption' பற்றி ஒரு விமர்சனம் போடுங்க. இதுவும் சிறை சார்ந்த கதைதான்.

    Green Mile-ஐவிட எனக்கு மிகவும் பிடித்த படம்.

    ReplyDelete
  7. //என்னவொரு ஓங்குதாங்கான தோற்றம் John Coffeyக்கு!! //

    தெரியுமா? காஃபி-க்கும் Brutus Howell-க்கும் உயர வித்தியாசம் just ஒரு இன்ச் தானாம். ஆனால், காமெரா கோனம் மாற்றி அமைத்து காஃபி உயரமானவன் போல காட்டியிருப்பார்கள்.

    //'Shawshank Redemption' பற்றி ஒரு விமர்சனம் போடுங்க.//
    அடடா! இப்போ தான் கேள்வியே படுறேன். DVD தேடிப் பார்க்கிறேன்.

    ReplyDelete