Friday, September 29, 2006

கம்யூனிக்கேஷன் கேப்(மாரித்தனம்)

இரண்டு வாரங்களுக்கு முன் நண்பனின் திருமணத்திற்காக சென்னையில் இருந்து கள்ளக்குறிச்சி சென்றிருந்தேன். முதல் நாள் வரவேற்பு முடிந்து அடுத்த நாள், வழக்கம் போல், முகூர்த்தம் முடிந்து கல்யாண மண்டபம் சென்றோம் (முதல் நாள் இரவு தண்ணியெல்லாம் இல்லை). கையில் காமெரா இருந்தது. சில பல படங்களை எடுத்துவிட்டு பின் மணமக்களுடன் புகைப்படம் எடுக்கலாமென்று நின்றிருந்தோம். எங்களுக்கு முன் இருந்தவர்கள், அனேகமாக, மணப்பெண்ணின் தோழிகளாக இருக்க வேண்டும், நான்கு பேர். சரி! அடுத்து நாம் தான் என்று நினைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருப்பவரிடம் சென்று அங்கே ஃபோகஸ் லைட் பிடிப்பவரிடம், "போட்டோ எடுத்து தரீங்களா?" என்று மொட்டையாகக் கேட்டேன். காரணம், எங்களில் யாராவது ஒருவர் எடுத்தால் அவர் அந்தப் புகைப்படத்தில் இருக்கமாட்டார் ஆல்லவா? அவர் முதலில் எடுப்பதில்லை என்று சொன்னார். என்னடா இது! ஒரு போட்டோ எடுக்க இவ்வளவு பிகு பன்னுறாரே என்று நினைத்தேன். அவருடன் இருந்த ஃபோட்டோ எடுப்பவர், "பரவாயில்லை எடுத்துக் குடு" என்று எனக்காக ரெக்கமன்ட் செய்தார். சரி என்று அவரும் என் காமெராவை வாங்கிக் கொண்டார்.

வாங்கியதும் அப்பொழுது அங்கே மணமக்களுடன் நின்றிருந்த அந்த தோழிகளை உடனே என் காமெராவினால் ஃபோட்டோ எடுத்து விட்டார். அப்பொழுது தான் புரிந்தது, அடடா! அவரிடம் நான் ஃபோட்டோ எடுக்கச் சொன்னது அந்தப் பெண்களை என்று நினைத்து விட்டார் என்று. ஒரு கணம் எனக்கு சிரிப்பு தாங்கவில்லை. அடுத்து நாங்களும் நின்று பின் ஃபோட்டோ எடுத்துக் கொண்டோம்.

பின் கணினியில் பதிவிறக்கம் செய்து பார்த்தேன். "இருக்கட்டும் பாவம்! இது கூட நல்லா தான் இருக்கு" என்று வைத்துக் கொண்டேன்.

பி.கு: தமிழ்மணத்தில் ஏதோ பிரச்சினையின் காரணமாக "அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள்" பகுதியில் இந்த இடுகை தெரிவதில்லை. சிரமம் பார்க்காமல் வந்து தங்கள் பின்னூட்டங்களை பார்த்துக் கொள்ளுங்களேன். சிரமத்திற்கு மன்னிக்கவும்.

23 comments:

  1. சுவையான அனுபவந்தான்.

    கம்யூனிக்கேசன் கேப்ல வூடுகட்டிய ஒரே ஆளு நீங்களாத்தான் இருக்கணும்.

    :)

    ReplyDelete
  2. எங்க ஊருக்கு போயி எங்க ஊர் பொண்ணுங்களை போட்டோ எடுத்து பெருமையா வேற சொல்றீங்களா???

    ஆமாம் எந்த மண்டபம்?

    ReplyDelete
  3. நன்றி சிறில், வெட்டிப்பயல்,

    //ஆமாம் எந்த மண்டபம்? //

    மகாலட்சுமி மண்டபம். தியேட்டரும் மண்டபமும் அருகருகில் இருக்குமே! அது!!

    ReplyDelete
  4. ஓ!!! 7 மாசமாயிடுச்சு.. ஊரு பக்கம் போயி...

    இப்பவெல்லாம் தமிழ்மணத்துல "அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள்" பகுதியில் வரதுக்கு கொஞ்சம் நேரமாகுது :-(

    ReplyDelete
  5. எங்க ஊரு எப்படிங்க இருந்தது?

    பின்னாடி வில்லங்கம் ஏதும் வரக்கூடதுன்னுதான் அவர் போட்டொ எடுக்க மறுத்திருக்கிறார். விவரமான ஆளுங்கதான்.

    //எங்க ஊருக்கு போயி எங்க ஊர் பொண்ணுங்களை போட்டோ எடுத்து பெருமையா வேற சொல்றீங்களா???

    ஆமாம் எந்த மண்டபம்? //

    நீங்க எந்த ஊரு வெட்டி?

    நான் கச்சிராயபாளையம் என்ற ஊரை சேர்ந்தவன்.

    சீனு இங்கே ஊர் கும்மி அடித்தமைக்கு மன்னிக்கவும்!!

    ReplyDelete
  6. //எங்க ஊரு எப்படிங்க இருந்தது?//
    சென்னை அளாவுக்கு இல்லைன்னாலும், பயங்கர வெய்யில்.

    //photo எங்கே? காணோம்? //
    ஃபோட்டோவா? ஐயோ வேணாம்...அந்த ஊர் காரங்க கோவிச்சுக்கப் போராங்க...

    ReplyDelete
  7. அந்த ஊருகார பசங்க இன்நேரம் தனீமெயிலில் அனுப்பியிருப்பாங்களே..:))


    ஹி ஹி ஹி


    அப்படியே நமக்கும்...

    ReplyDelete
  8. //அந்த ஊருகார பசங்க இன்நேரம் தனீமெயிலில் அனுப்பியிருப்பாங்களே..:))//

    சே! சே!! இதுவரைக்கும் இல்ல.

    //அப்படியே நமக்கும்...//
    அதானே! உங்க குடுமி சும்மா ஆடாதே!!!

    ReplyDelete
  9. மின்னல்,
    இதுவரைக்கும் கேக்கல... இனிமே தான் கேக்கனும்!!! ;)

    ReplyDelete
  10. //நீங்க எந்த ஊரு வெட்டி?//
    நான் கள்ளக்குறிச்சி தாம்பா!!

    //ஃபோட்டோவா? ஐயோ வேணாம்...அந்த ஊர் காரங்க கோவிச்சுக்கப் போராங்க...
    //
    அதெல்லாம் கோவிச்சக்க மாட்டோங்க!!! தாராளமா போடுங்க!!!

    தெரிஞ்ச முகம் இருக்கானு பாக்கலாம் ;)

    ReplyDelete
  11. ஏன் உங்களுக்கும் ஃபோட்டோ வேணுமா வைசா? ;-))

    அஸ்கு, புஸ்கு.

    ReplyDelete
  12. போட்டோ வேற எடுத்துட்டு.. அத எழுத வேற செய்கிறீரா?
    ஆட்டோ வருது.... :-)))))))))))

    ReplyDelete
  13. //அஸ்கு, புஸ்கு.//
    தமிழில் எழுதுங்க...

    ReplyDelete
  14. //வாங்கியதும் அப்பொழுது அங்கே மணமக்களுடன் நின்றிருந்த அந்த தோழிகளை உடனே என் காமெராவினால் ஃபோட்டோ எடுத்து விட்டார். அப்பொழுது தான் புரிந்தது, அடடா! அவரிடம் நான் ஃபோட்டோ எடுக்கச் சொன்னது அந்தப் பெண்களை என்று நினைத்து விட்டார்//

    சீனு நம்பிட்டோமுல்ல. ஆனாலும் நீங்க ரொம்ப நல்லவரு சீனு.

    வெட்டி நீங்க கள்ளக்குறிச்சியா? நமக்கு ரொம்ப பழக்கமான ஊர் ஆச்சே.

    ReplyDelete
  15. //photo எங்கே? காணோம்? // துளசியக்கா கேட்டும் போட்டோ போடாததை கண்டிக்கிறோம்.

    ReplyDelete
  16. """நாங்களும் நின்று பின் ஃபோட்டோ எடுத்துக் கொண்டோம்."""""

    ஏங்க...முன் ஃபோட்டோவே எடுத்துக் கொண்டிருக்கலாமே...முகம் தெரியுமுல்ல :)))

    ReplyDelete
  17. //வெட்டி நீங்க கள்ளக்குறிச்சியா? நமக்கு ரொம்ப பழக்கமான ஊர் ஆச்சே. //
    ஆமாம் சந்தோஷ்...

    ReplyDelete
  18. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  19. இது ரொம்ப நல்லாவே இருக்கு.. அதான் அந்த புகைப்பட காரரு போட்டோ பிடிக்க மாட்டேன் என்று சொன்னரோ?

    ReplyDelete
  20. //அதான் அந்த புகைப்பட காரரு போட்டோ பிடிக்க மாட்டேன் என்று சொன்னரோ?//

    ஹி...ஹி...ஆமாம்.

    ReplyDelete