'முதலில்' அந்த பதிவில் இருந்து 'கொஞ்சம்':
காலம் என்பது நான்காவது பரிணாமம். காலத்தில் பயணம் என்பது முன்னோக்கியோ அல்லது பின்னோக்கியோ செல்வது. ஒருவனால் பூமியில் இருந்து மேலே பறந்து சென்று, முன்பிருந்த நிலையில் (past) பூமிக்கு திரும்ப முடியுமா? இப்படி பல கேள்விகள் தன்னகத்தே அடக்கி வைத்துள்ளது. ஒருவனால் சுலபமாக காலத்தை நோக்கி பயனிக்க முடிந்தால், எப்படி இருக்கும்? General Theory of Relativity-ன் படி, உலகில் ஒளியை விட வேகமாக பயனிக்கும் பொருள் கிடையாது. ஆனால், அந்த வேகமே பத்தாமல் போனால்? ஒரு உதாரணம், ஒளி (light) ஒரு வினாடியில் 1,86,000 மைல்கள் பயனிக்கும். அதாவது 2,99,793 கிலோ மீட்டர். ஒரு பொருளை நாம் பார்ப்பது, அந்தப் பொருள் வெளிப்படுத்தும் ஒளியாலேயே. ஒரு பொருள் சிகப்பாகத் தோன்றுகிறது என்றால், அந்தப் பொருள் அனைத்து வண்ணங்களையும் தன்னகத்தே எடுத்துக் கொண்டு, வெறும் சிகப்பு வண்ணத்தை மட்டுமே வெளியிடுகிறது என்று அர்த்தம். நீங்கள் ஒரு நட்சத்திரத்தைப் பார்க்கிறீர்கள். அது அங்கிருப்பது, அந்த நட்சத்திரம் வெளிப்படுத்தும் ஒளியாலேயே. ஆனால் அந்த ஒளி உங்களை வந்து சேர பல ஒளி ஆண்டுகள் ஆகும். அதனால், நீங்கள் பார்ப்பது எதுவும் அங்கு இல்லாமல் கூட இருக்கலாம். அந்த நட்சத்திரம் நகர்ந்து போய் இருக்கலாம். காரணம், இந்த உலகம் விரிவடைந்துகொண்டிருக்கிறது. அதனால், நாம் பார்ப்பது எல்லாமே கடந்த காலங்கள் தாம் (எல்லாம் மாயா). இது மட்டும் அல்ல, நீங்கள் பார்ப்பது எல்லாம் நீங்கள் பார்க்கும் இடத்தில் இல்லை. அதாவது, இந்த பிரபஞ்சமே வளைந்துள்ளது. அதனால், நீங்கள் நேராக பார்க்கும் எதுவும் நேர்க்கோட்டில் இல்லை. சற்றே பரவளையமாக இருக்கும். அதனால், ஒருவர் ஒளியை விட வேகமாக பயனிப்பவராக இருப்பாராயின்(??), General Theory of Relativity-ன் படி அவரால், காலத்தில் பின்னோக்கியும் பயனிக்க முடியும். |
படத்தில் நம் நாயகன் அலெக்ஸான்டர் (Guy Pearce) ஒரு விஞ்ஞானி. காதலுக்கு நடுவில் அவ்வப்போது ஆராய்ச்சியில் இறங்குகிறார். ஒரு முறை காதலியுடன் ஒரு மாலை வேளையில் ஒரு பூங்காவில் இருக்கும் போது, இவர்களிடம் வழிப்பறிக்காக வந்த ஒரு திருடன் தவறுதலாக துப்பாக்கியை அழுத்திவிட, அது வெடித்து காதலி மரணமடைகின்றார்.
இதில் இருந்து மீள முடியாமல், 4 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து, காலத்தை நோக்கி பயனப்படும் ஒரு கலனை கண்டுபிடிக்கிறார். அதில் ஏறி 4 ஆண்டுகள் பின்னோக்கி சென்று, அதே பூங்காவிற்கு சென்று, முன்பு சென்ற நேரத்தை விட கொஞ்சம் முன் சென்று, காதலியை வேறு இடத்திற்கு அழைத்து செல்கிறார். அவளை காப்பாற்றிவிட்டதாக நினைக்கிறார். காதலிக்காக ரோஜாப்பூ வாங்க சாலையை கடந்து செல்லும் போது, காதலி தெருவில் செல்லும் ஒரு குதிரை வண்டி மேலே விழுந்து இறந்து போகிறார்.
ஆக, எத்தனை முறை திரும்ப சென்றாலும் விதியை மாற்ற முடியாது என்று அறிகிறான். ஏன் இறந்த காலத்தை மாற்ற முடிவதில்லை என்ற கேள்வி எழுகிறது? அந்த கேள்விக்கான விடையை அறிய காலத்தின் முன் நோக்கி பயனிக்கிறான். ஆண்டு கி.பி. 2030-க்கு செல்லும் பொழுது இவனின் கேள்வி சம்பந்தப்பட்ட ஒரு விளம்பரத்தை திரையில் பார்க்க, அங்கே இறங்கி ஒரு நூலகம் செல்கிறான். வேறு இடமெல்லாம் இல்லை. அவன் முன்பிருந்த இடமே இப்போது நூலகமாக மாறி இருக்கிறது. அங்கு கண்ணாடியில் பின்னால் மட்டும் இருக்கும் செயற்கை மனித பிம்பமான (Holographic AI Librarian) வாக்ஸ் 114-ஐ கேட்க, அது இன்னும் விடை கிடைக்கவில்லை என்று சொல்கிறது.
கி.பி. 2037-க்கு செல்லும் பொழுது அங்கே நிலவு வெடித்து சிதறுவதால் பூமி அழிவதை பார்க்கிறான். அந்த இடிபாடுகளில் இருந்து தப்பிக்க கலனில் ஏறும் போது, அடிபட்டு சுயநினைவை இழக்கிறான். நினைவு திரும்பும் போது அவன் பயனம் செய்யும் ஆண்டு கி.பி. 802,701.
அவனை மருத்துவம் பார்த்து காப்பாற்றுவது (மேலே இருக்கும் ;)) மாரா என்ற பெண். மனிதன் மறுபடியும் ஆரம்ப கால வாழ்க்கையில் இருப்பதை பார்க்கிறான். அங்கே இரு விதமான மனிதர்கள். குரங்குகள் போன்ற முக அமைப்பும் சுமார் 12 அடி உயர மெகா வேட்டையாடுபவர்கள் (Morlocks) மற்றும் வேட்டையாடப்படுபவர்கள் (Eloi). அவர்களால் மனிதர்களின் கனவுக்குள் ஊடுருவ முடியும். அப்படி ஊடுருவி அவர்களை பயமுறுத்துகிறார்கள் மார்லாக்ஸ். தினம் தினம் உணவுக்காக மனிதர்களை வேட்டையாடுகிறார்கள் மார்லாக்ஸ். ஒரு நாளைய வேட்டையில் மாராவை தூக்கி சென்று விடுகிறார்கள்.
அலெக்ஸ் அங்கே அந்த வோக்ஸ் 114 இன்னும் 'உயிருடன்' உள்ளதை கண்டுபிடித்து, மாராவை காப்பாற்ற, மார்லாக்ஸ் குகை அடைய வழி கேட்டுக் கொள்கிறான். வழி அறிந்து, உள்ளே செல்லும் அலெக்ஸ் அவர்களிடம் மட்டிக்கொள்கிறான். அங்கே கூண்டுக்குள் அடைக்கப்பட்ட மாராவையும், அங்கே அந்த மார்லாக்ஸின் தலைவனையும் பார்க்கிறான். அவன், மனிதனை போல் இருக்கும், புத்திசாலியான Über-Morlock. நிலவு உடைந்த பொழுது பூமியின் அடியில் தங்கி பிழைத்து வாழ்ந்தவர்கள் இந்த வேட்டையாடுபவர்கள். பூமியின் பேற்பரப்பிலேயே வாழ்ந்து பிழைத்து வந்தவர்கள் சாதாரன மனிதர்கள் (Eloi) என்று புரிய வைக்கிறான் அந்த தலைவன். அவனுடைய கலனையும் அங்கே கொண்டு வந்து விடுகிறார்கள் மார்லாக்ஸ்கள்.
அங்கே அலெக்ஸின் கேள்விக்கு அந்த தலைவன் மூலம் விடை கிடைக்கிறது. அவன் காதலி இறந்ததால் தான் அந்த கலனை அவனால் கண்டுபிடிக்க முடிகிறது. ஒரு வேளை இறக்கவில்லை என்றால் அந்த கலனை கண்டுபிடித்திருக்க மாட்டான். இவை இரண்டும் Mutually Exclusive (டாஸ் போடும் போது பூ/தலை, ஏதாவது ஒன்று மட்டும், மட்டுமே விழுவதை போல). அதனால் அந்த கலன் இருப்பதால், அவன் காதலி உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்று புரிய வைக்கிறான். அலெக்ஸுக்கு இப்பொழுது அவன் காதலி கிடைக்க வாய்ப்பில்லை என்று உணருகிறான்.
அலெக்ஸான்டர் திரும்ப அவன் காலத்திற்கு செல்ல கலன் ஏறுகிறான். அந்த கலன் கிளம்பும் போது அந்தன் தலைவனை உள்ளே இழுத்துக் கொள்கிறான் அலெக்ஸ். அந்த கலன் காலத்தின் முன்னே நோக்கி பயனிக்கும் போது உள்ளே அவர்கள் இருவரும் சண்டை போடுகிறார்கள். ஒரு (கால) கட்டத்தில் அந்த கலனில் இருந்து வெளியே தள்ளுகிறான் அந்த ஊபெர் மார்லாக்கை. அதாவது, எதிர்காலத்திற்கு சென்று அவனை வெளியே தள்ளிவிடுவதால், அவன் இறக்கிறான்.
கலனை நிறுத்தும் போது வருடம் 635,427,810. அந்த காலகட்டத்தில் அவர்கள் இருந்த குகை எல்லாம் அழிந்துவிடுவதை பார்க்கிறான். பின் திரும்ப அந்த குகைக்கே வந்து அந்த கலனை இயக்கி, கியரை செயலிழக்க வைக்கிறான். அது பயங்கரமான Time distortion-ஐ உருவாக்குகிறது. அதன் விளைவாக அந்த இடம் வெடித்து சிதறி பாதாள உலகம் அழிகிறது. அலெக்ஸ் அங்கேயே தங்கிவிடுகிறான்.
மறுபடியும் அந்த பதிவில் இருந்து:
இந்த படத்தில் எனக்கு பிடித்த சில காட்சிகள் 1) கதாநாயகன், ஒரு காட்சியில், கால இயந்திரத்தின் ஃபார்முலாவை கரும்பலகையில் எழுதிக்கொண்டிருப்பான். அந்தக் காட்சி க்லோஸ் அப்-ல் காட்டப்படும். மெள்ள காமெரா பின்னால் நகரும். அந்தக் காட்சியில், திரையில் ஒரு ஏனி தெரியும். அதாவது, கதாநாயகன் ஒரு ஏனியின் மேல் நின்று ஃபார்முலாவை எழுதிக் கொண்டிருப்பான். காமெரா பின்னால் நகரும். அந்தக் காட்சியில், அந்த அறை முழுக்க கரும்பலகையாக இருக்க, ஒரு ஏனியில் நின்றுக்கொண்டு அந்த ஃபார்முலாவின் continuation-ஐ எழுதிக்கொண்டிருப்பான். 2) கால இயந்திரத்தில் அமர்ந்து அதை இயக்க ஆரம்பிக்க, அந்த அறையில் இருக்கும் (பல) கடிகாரங்கள் ஒரு கணம் நின்று, பின் பின்னோக்கி ஓட ஆரம்பிக்கும். அந்தக் காட்சி பார்க்கும் பொழுது ச்சும்மா 'நச்'னு இருக்கும். 3) அந்தப் படத்தின் கடைசி காட்சியில் திரை இரண்டாகப் பிரிக்கப்பட்டிருக்கும். ஒன்று நிகழ்காலம், மற்றொன்று எட்டு இலட்சம் வருடங்களுக்குப் பிறகு. இரண்டும் ஒரே நேரத்தில் synchronised-ஆக வரும். இரண்டும் ஒரே இடத்தைக் காட்டுகிறது. முதல் பாதியில், கதாநயகனின் பாட்டி காவலரிடம், தன் பேரன் அந்த அறையில் தான் கடைசியாக இருந்ததாகவும், பின் காணாமல் போய்விட்டதாகவும் கூறுவாள். மற்றொரு பாதியில் (அதே இடத்தில், எட்டு இலட்சம் வருடங்களுக்குப் பிறகு) கதாநாயகன், அதுதான் தன் அறை என்றும், அதன் தொடர்பான காட்சியை விளக்கிக்கொண்டிருப்பான். 4) தற்காலத்தில் இருந்து 50 வருடம் கழித்து பயனிக்கும் இடத்தில் ஒரு அருங்காட்சியகத்தில் பார்வையாளர்களுக்கு விளக்கமளிக்க ஒரு கண்ணாடியும் அதில் ஒரு உருவமும் தெரியும். அது ஒரு Virtual reality உருவம். |