Thursday, March 01, 2007

'சாம்பலாகக் கடவாய்' - ஒரு விஞ்ஞான பார்வை


ஒருவருடைய உடல் படுக்கையில் எலும்பு முதற்கொண்டு சாம்பலாக எரிந்து கிடக்க, அவர் படுத்த அந்த படுக்கை மட்டும் எந்த வித சேதாரமும் இல்லாமல் இருக்க முடியுமா? உடல் முழுவதும் எரிந்தாலும், ஒருவர் கழுத்தில் இருக்கும் மஃப்ளார் மட்டும் எரிந்து போகாமல் இருக்க முடியுமா? முடியும். "Spontaneous human combustion" சுருக்கமாக "SHC", தமிழில் "நெருப்பு மரணங்கள்", என்பது விஞ்ஞானபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படாத, கற்பனை என்றே எடுத்துக் கொள்ளப்பட்ட ஒரு கருத்து. இது விஞ்ஞான உலகுக்கு இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது. "நெருப்பு மரணங்கள்" சொல்வது, உடலுக்கு வெளியில் இருந்து நெருப்பிடப்படாமல், ஒருவருடைய உடலிலுக்குள்ளே இருந்து வரும் நெருப்பே அவரை கொல்வது. கொல்வது என்றால் சாதாரணமாக அல்ல. 640 டிகிரி செல்சியஸில் ஒருவருடைய உடல் முற்றிலும் சாம்பலாக குறைந்தது 4 மணி நேரமாவது தேவைப்படும். ஆனால், 20 முதல் 60 நிமிடங்களில்(!) இப்படி உடல் முற்றிலும் எரிந்து, எலும்பு முதற்கொண்டு, சாம்பலாக முடியுமா? அப்படிப்பட்ட நெருப்பு, வெளியில் இருந்து உடலில் செலுத்தப்படாமல், உடலுக்குள்ளே இருந்து கிளம்பினால்...? அது தான் இந்த "நெருப்பு மரணங்கள்". ஆனால், இது வெளியில் இருந்து பற்ற வைக்கப்பட்ட நெருப்பு மட்டும் அல்ல என்று விஞ்ஞானிகள் அடித்து சொல்கின்றனர். இது அரிதிலும் அரிதான ஒன்று. அதனால், பயப்படவேண்டாம் (ஏன்னா? நான் பயந்தேன்). ஆனால், அதனை பற்றி தெரிந்து கொள்ளலாம்.







இது வரை உலகில் 300 வருடங்காளில் 200க்கும் அதிகமாக இத்தகைய மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன, முதல் மரணம் பதியப்பட்டது 1663-ல். அதுவும் மனிதனுக்கு மட்டுமே...!!! அதனால் சோதனையும் செய்ய முடியாது. நேரடி சாட்சிகள் மட்டுமே உண்டு. அதுவும் மிக அரிதாகவே. காரணம், இது திடீரென்று நிகழ்ந்து விடுவதால். பிரிட்டனில் வருடத்திற்கு 5 மரணங்கள் இவ்வாறு நிகழ்கின்றன. உலகம் முழுவதும் வருடத்திற்கு 50 பேராவது இவ்வாறு இறகின்றனர்.







"நெருப்பு மரணங்கள்"-க்கான அறிகுறிகள்.



* நெருப்பு எந்த ஒரு வெளிதொடர்பில்லாமல் வெளிப்பட்டிருப்பது.

* நெருப்பானது பாதிக்கப்பட்டரின் உடலை தவிற, அருகில் இருக்கும் வேறு எந்த ஒரு பொருளுக்கும் சேதாரம் விளைவிக்காமல் இருப்பது.

* வழக்கமாக நெருப்பினால் ஏற்படும் மரணங்களை விட அதிக அளவில் உடல் எரியப்பட்டிருக்கும்.

* இந்த மரணங்கள் பெரும்பாலும் உள்ளரங்கில் நடைபெற்றிருக்கின்றன (வீடு, அறை...)

* கடும் சூட்டினால், அந்த நெருப்பை தாண்டியுள்ள பொருட்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

* நெருப்பு மரணங்களில் இறந்தவர்கள் பெரும்பாலும் வயதானவர்கள்.

* வழக்கமாக நெருப்பினால் ஏற்படும் மரணங்களில் உடல் தவிற மற்ற பாகங்கள் எரிந்து விடும். ஆனால், நெருப்பு மரணங்களில் இறந்தவர்களின் உடல் மட்டுமே பெரும்பாலும் எரிந்தும், மற்ற பாகங்களான தலை, கை, கால்கள் ஆகியன கொஞ்சமும் பாதிக்கப்படாமல் இருந்திருக்கின்றன.



"இது வரை உலகில் 300க்கும் அதிகமாக இத்தகைய நெருப்பு மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஆனால், இது வெளியில் இருந்து பற்ற வைக்கப்பட்ட நெருப்பு மட்டும் அல்ல என்று விஞ்ஞானிகள் அடித்து சொல்கின்றனர்."


விஞ்ஞானம் எப்படி விளக்குகிறது? ஒரு விளக்கம்: 'மெழுகுவர்த்தி' பற்றிய கற்பனை (the 'wick effect'). மெழுகுவர்த்தி ஆனது உள்ளே திரியை கொண்டு எரிகிறது. அந்த திரியை சுற்றியுள்ள மெழுகை கொண்டு எரிகிறது. மெழுகிவர்த்தி எரிந்தவுடன் அதன் திரியும் கூடவே எரிந்து விடுகிறது. அதே போல, மனித உடலுக்கு அவனுடைய எழும்புகள் திரியாகவும், உடலில் உள்ள கொழுப்புகள் மெழுகாகவும் இருக்கின்றது. மெழுகிவர்த்தி எரிந்து முடிய 1 மணிநேரம் கூட ஆகிறது. ஆனால், நெருப்பு மரணங்களின் படி 20 - 60 நிமிடங்களில் எல்லாமே முடிந்து விடுகிறது.



மெழுகுவர்த்தி எபெஃக்டை விளக்க ஒரு பன்றியை போர்வையில் சுற்றி, கொஞ்சம் போல பெட்ரோலை ஊற்றி எரித்தார்கள். நெருப்பு மரணங்கள் என்னவெல்லாம் செய்யுமோ அவற்றை நேரடியாக செய்து காண்பித்தார்கள்.









இதன் படி எடுக்கப்பட்ட முடிவுகள்:


* இது மெல்ல, சீறாக நடக்கக்கூடிய முறை. அதனால் 5 முதல் 10 மணி நேரங்கள் பிடிக்கும். மேலே குறிப்பிடப்பட்ட பன்றி எரிய 7 மணி நேரங்கள் ஆனது, ஆனாலும் முழுவதுமாக எரிந்து முடியவில்லை.


* நெருப்பு மரணங்கள் ஏற்பட ஏதேனும் ஒரு சிறு நெருப்பு பொறியாவது தேவைப்படுகிறது. தீக்குச்சி, சிகரெட், எரிபொருள், ஸ்பார்க், பெர்ஃப்யூம், சாராயம் போன்றவை.


* இது மெல்ல, சீறாக உடம்பில் உள்ள கொழுப்பை எரிப்பதால், இதனால் இரையாக்கப்பட்டவர் கட்டாயம் இறக்கிறார்.



நெருப்பு மரணங்களில் இறந்தவர்களில் சில (கவனிக்க, வேறு வழியில்லாமல் 'நெருப்பு மரணங்கள்' என்று முடிவு கட்டப்பட்டவர்கள் இவர்கள்)







1) மேலே இருக்கும் ஹெலன் கான்வே என்னும் பெண்மனி, சில் வருடங்களுக்கு முன் எல்லோர் முன்பும் எரிந்து போனார். அது ஒரு நெருப்பு மரணம் என்பதற்கான அறிகுறிகளை தீயனைக்கும் படையில் இருந்த ஆர்னால்ட் என்னும், நெருப்பு மரணங்களை பற்றி ஓரளவேனும் தெரிந்த, இளைஞர் நுணுக்கமாக விசாரித்தார்.



கான்வே வயதான பெண்மனி. அவர் ஒரு தொடர்ந்து புகை பிடிப்பவர். எரிந்து போன பல சிகரெட் துண்டுகள் அவர் அறையில் இருந்தன. 1964 நவம்பர் 8ம் தேதி, நெருப்பு மரணம் அவரை தழுவும் பொழுது ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவரின் இரண்டு கால்கள் மட்டுமே மிஞ்சியிருந்தன. அவர் சாம்பலாக எடுத்துக் கொண்ட நேரம் 21 நிமிடங்கள் என்று ஆர்னால்டு ஊகித்திருந்தார். அவரே கான்வே வெறும் ஆறே நிமிடத்தில் சாம்பலாகியிருக்கவும் வாய்ப்புள்ளதாகவும் கூறினார். காரணம், நெருப்பு பிடிப்பதற்கு மூன்று நிமிடத்திற்கு முன்பு தான் கான்வேயின் பேத்தி பாட்டியுடன் பேசிக்கொண்டிருந்தாள். பின் அதன் 3வது நிமிடத்தில் தீயனைப்பு துறைக்கு சொல்லப்பட்டது. தீயனைக்கும் துறை வந்து சேர்ந்தது மற்றொரு 3 நிமிடத்தில்.
இந்த பெண்மனி இறக்கும் பொழுது, நெருப்பு அவரின் இருக்கைக்கு அடியில் இருந்து கிளம்பி மேல் நோக்கி எரிந்திருக்கலாம் என்றும், அவர் உடலில் இருந்த அபரிமிதமாக கொழுப்பு அந்த நெருப்பு மேலும் கொழுந்து விட்டெரிய காரணம் என்றும் பின் எரிந்து மிச்சம் இருந்த 'வஸ்து'வில் வழவழப்பான ஒரு திரவம் இருந்ததாகவும் (கொழுப்பின் மிச்சம்) கூறுகிறார். இதில் கவனிக்க வேண்டியது, அவர் சாய்ந்திருந்த முதுகு புறத்தில் இருந்த நாற்காலியின் பாகம் மட்டுமே எரிந்திருந்தது.



2) மற்றொரு சாட்சி, 1982-ல் லண்டன் எட்மான்டன்-ல், 62 வயதான ஜேன் சஃப்பின் என்ற மன நிலை பாதிக்கப்பட்ட பெண்மனியின் நெருப்பு மரணம். அவர் எரிந்தது அவரின் தந்தை மற்றும் உறவினரின் கண்ணெதிரில். எரிந்து பிற்பாடு மருத்துவமனையில் இறந்தார். அவர் தந்தை ஜேனின் மிக அருகில் அமர்ந்திருந்தார். திடீரென்று அவர் கண்களில் பளிச்சென்று ஒரு ஒளிப்பிழம்பு தெரிந்தது. ஜேனின் முகம் மற்றும் கைகளை சுற்றி நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. அவர் தந்தை கூறியது, கேன் கதறவோ அல்லது நகரவோ இல்லை என்றும், மாறாக அவர் தன் கைகளை அமைதியாக மடியில் வைத்து அமர்ந்திருந்ததாகவும் கூறினார். பின் அவர் தந்தை மற்றும் மருமகன் ஆகியோர் சேர்ந்து அவரை சமையலரையில் தண்ணீரின் அருகில் இழுத்து சென்று தீயை அனைத்தார்.



இதில் கவணிக்க வேண்டியது, அந்த சமையலரையில் எந்த பொருளும் நெருப்பினால் பாதிக்கப்படவில்லையென்றும், அவரின் உடையும் நெருப்பினால் பாதிக்கப்படவில்லையென்றும் கூறினர். மேலும் சாட்சிகளில் கூற்றுப்படி, அவர் உடலில் இருந்து வந்த நெருப்பின் புகை ஒரு மாதிரியான உருமல் சத்தத்துடன் வந்தது. ஜேன் மருத்துவமணையில் சுயநினைவோடு இருந்ததாகவும், ஆனால், அவரால் எதையும் பேச முடியவில்லை.8 நாட்கள் கோமாவின் இருந்து பின் இறந்தார். பின் விசாரணையில் ஜேன் நெருப்பு மரணத்தினால் தான் இறந்திருப்பார் என்று ஊகிக்கப்பட்டது.



3) 1967, செப்டம்பர் 13ம் தேதி, அதிகாலை, இலண்டனில் உள்ள லாம்பெத்-ல், 49 ஆக்லாந்து சாலையில் உள்ள ஒரு வீட்டில் இருந்து பளிச்சென்று வெளிச்சம் வந்தது. காலை 5:19 மணிக்கு ஒருவர் தீயணைக்கும் துறைக்கு தகவல் தெரிவித்தனர். 5:24-க்கு தீயணைக்கும் துறையினர் வந்தனர். அங்கு ராபர்ட் பெய்லி எரிந்து கொண்டிருந்த நிலையில் கண்டனர். ஆச்சர்யபடுத்தும் விதமாக, அந்த வீடோ அல்லது வீட்டில் இருந்த எந்த பொருளோ நெருப்பினால் பாதிக்கப்படவில்லை. அங்கே எரிந்து கொண்டிருந்த ஒரே பொருள்(!) ராபர்ட் பெய்லி மட்டுமே.



பார்த்தவர்கள் கூறியபடி, அவர் வயிற்றில் நான்கு இன்ச்க்கு ஒரு வெட்டு இருந்ததாகவும், அந்த வெட்டில் இருந்து மிக வேகமாக நீல நிற தீஜ்வாலைகள் வந்ததாகவும் கூறினர். அவர் படியில் இடது புறமாக திரும்பி படுத்துக்கொண்டிருந்ததாகவும், அவர் கால்களை மடக்கி வைத்திருந்து வலியில் புரண்டு கொண்டிருந்ததாகவும் கூறினர். தீ அவர் உடம்பில் இருந்து தான் வந்தது. வேறெங்கிலிருந்தும் இல்லை.



பெய்லியின் உடம்பில் இருந்த உடை, நெருப்பு வெளிவந்த அடி வயிற்றை தவிற மற்ற பகாங்களில் எந்த வித சேதாரமும் இன்றி இருந்தது. அவர் உடல் இருந்த படியில் மட்டும் சிறு துளை இருந்தது. அது நெருப்பினால் ஏற்பட்ட துளை. அந்த வீட்டில் மின்சாரமும் கேஸும் நிறுத்தப்பட்டிருந்தன.



இங்கு கவணிக்க வேண்டியது, தீயணைக்கும் துறை ஐந்து நிமிடத்தில் அங்கு வந்துவிட்டது. அவர் உடலிலும் நெருப்பு வந்த இடம் தவிற வேறு எந்த எடத்திலும் தீக்காயம் இல்லை. நெருப்பும் நீல தீப்பிழம்பு. அதனால், மெழுகுவர்த்தி (wick effect) பாணி கற்பனையும் இல்லை.



4) மிக சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் 1998 ஆகஸ்டு 24ம் தேதி ஸிட்னியில் நடந்தது. இந்த சம்பவத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட சாட்சிகள் உண்டு என்பதும் பாதிக்கப்பட்டவர் சிறிது காலம் வாழ்ந்தார் என்பதும் சிறப்பம்சம். அவர் பெயர் ஏக்னஸ் பிலிஃப். ஒரு காரில் அமர்ந்திருந்தார் ஏக்னஸ். திடீரென்று ஏக்னஸின் மகள் ஜாக்கி காரில் இருந்து புகை வருவதை பார்த்தார். ஒரு வழிப்போக்கர் காரிலிருந்த ஏக்னஸை வெளியே இழுத்து போட்டார். தீ அணைக்கப்பட்டது. ஏக்னஸிடமிருந்து வெறும் முனகல் சத்தம் மட்டுமே கேட்டது. அவருடைய மார்பு, அடிவயிறு, கழித்து, கை, கால்கள் ஆகிய இடங்களில் அதிக தீப்புண்கள் ஏற்பட்டன. ஒரு வாரம் கழித்து மருத்துவமணையில் இறந்தார் ஏக்னஸ்.







விசாரணையில் தீ எங்கிருந்து வந்தது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. அதாவது, வெளியில் இருந்து தீ வரவில்லை. காரின் எந்த மின்கசிவோ அல்லது பெட்ரோல் கசிவோ இல்லை. ஆனால், ஒரு வித்தியாசம், மற்ற நெருப்பு மரணங்களை போல தீ வெகுநேரம் நீடிக்கவில்லை. மாறாக, ஒரு சில நிமிடங்களே நீடித்தன.



5) இந்த நெருப்பு மரணத்தின் வெகு அறுகாமையில் சென்று மீண்ட ஜீனா வின்செஸ்டர் என்ன கூறுகிறார்? 1980 அக்டோபர் 9-ம் தேதி தன் தோழியுடன் காரில் சென்று கொண்டிருந்த அவரை சுற்றி திடீரென்று நெருப்பு. அவர் தோழி தான் அவரை காப்பாற்றினார். கார் ஒரு தொலைபேசி பூத்தை மோதி நின்றது. உயை பிழைத்துவிட்டார். உடம்பில் 20 சதவிகிதம் காயம். காவல்துறை விசாரணையில் வழக்கம் போல அவரை சுற்றி எந்த பிரச்சினையும் இல்லை. ஜீனா சொல்வது அவரால் எதையும் நியாபகப்படுத்த முடியவில்லை என்பது...



சரி! இதிலிருந்து தப்பித்த சிலர் கூறுவது?



1) ஜாக் ஏஞ்சல் - நான்கு நாட்கள் தூங்காமல் கண் விழித்த இவர், பின் தூங்க போயிருக்கிறார். தூக்கத்தில் தன் மார்பில் ஒரு வெடிப்பு ஏற்பட்டதாகவும், அதில் ஒரு ஓட்டை விழுந்ததாகவும், பின் தன் புட்டங்கள் எரிந்து விட்டதாகவும் கூறுகிறார். அவர் வலது கையில் மணிக்கட்டு முதல் விரல்கள் வரை வீக்கங்கள் இருந்ததாகவும், எந்த வலியும் தெரியாததால், வழக்கம் போல குளித்தல், உடை அனிதல் போன்ற வேலைகளை செய்திருக்கிறார். பின் அவர் தம் ஹோட்டலில் மயங்கி விழுந்திருக்கிறார். இவருக்கு தன் உடம்பு எரிந்தது, பிறகு மருத்துவமணையில் கண் விழித்தது, அதன் பிறகு தான் வலி தெரிந்திருக்கிறது. மருத்துவர்களால் இதை விளக்க முடியவில்லை.



2) வில்ஃபிரட் கெளதோர்ப் - சமையலறையில் விழுந்து கிடந்த இவர், ஸ்ட்ரோக் அடிக்கப்பட்டுவிட்டதாக நினைத்து மருத்துவமணைக்கு கொண்டுவரப்பட்டார். ஆனால், மருத்துவர் இவருக்கு ஸ்டிரோக் இல்லையென்றும், அவர் கை மிக மோசமாக எரிந்திருப்பதாகவும் கூறியிருக்கிறார். ஆனால் அவர் கையை மூடியிருந்த உடைகள் எதுவும் தீயால் பாதிக்கப்படவில்லை. இதில் முக்கியமாக, அவருடைய கையில் பெருவிரல் எரிய வில்லை என்பது தான். அவர் தற்கொலையும் முயற்சிக்க முடியாது. காரணம், அவர் அப்படி செய்திருந்தால் அது அவர் உயிருக்கே ஆபத்தாக இருந்திருக்கும். ஆனால் இந்த காயங்களை பார்த்தால் அவர் தற்கொலை முயற்சி செய்திருக்கவில்லை என்று கூறினர். பதினைந்து வாரங்கள் மருத்துவமணையில் இருந்தார் அவர். ஆனால், கெளதோர்ப்பால் என்ன நடந்தது என்று நினைவுப்படுத்த முடியவில்லை. பின் பதினெட்டு மாதங்கள் கழித்து இறந்தார்.



இவைகள் ஒரு பக்கம் என்றாலும், மற்றொரு பக்கம், SHC என்பது ஒரு மாயை (Myth) என்றே கூறுகின்றனர். உடம்பில் நாம் சாப்பிடும் பொருட்களால் சில வாயுக்கள் உருவாகிறதென்றும், அந்த வாயுக்கள் தீப்பிடிப்பதால் இது நிகழ்கிறது என்கின்றனர். அதனால், இவற்றை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவேண்டாம் என்றும் கூறுகின்றனர். மேலும், இந்தகைய மரணங்களில் ஏன் கால்கள் மட்டும் எரியாமல் இருக்கின்றன? இந்த கேள்விக்கு பொத்தாம் பொதுவாகவே விடை கிடைக்கின்றன. தீயினால் ஏற்படும் மரணங்களில் சில இப்படி, கால்கள் மட்டும் விடுபட்டு, நிகழலாம் என்றும் அவற்றை கண்டுகொள்ள தேவையில்லை என்றும் கூறுகின்றனர்.



சில ஒற்றுமைகள்:



* இறப்பவர்கள் பெருன்பாலும் வயதானவர்கள்.

* பெரும்பாலும் புகை பிடிக்கும் பழக்கம், மது அருந்தும் பழக்கம், அசைவம் உண்பவர்களாக உள்ளவர்கள்.

* பெரும்பாலும் சாட்சி இல்லாமல் நிகழ்கின்றன (திடீரென்று நடப்பதாலும் இருக்கலாம்).

* பாதிக்கப்பட்டவர் உடனடியாக இறக்கிறார்.

* சிறு தீப்பொறி எப்பொழுதும் தேவைப்படுகிறது.

* மெழுகுவர்த்தி எஃபெக்ட் நடக்கிறது.

* அனைவரும் சாம்பலாகின்றனர்.

* பெரும்பாலும் உள்ளரங்கில் நடக்கிறது.


நம் ஊரிலும் இவைகள நடந்திருக்கலாம். ஆனால், நமக்கு அது தெரியாமல் போகிறது. கிராமத்தில் வைக்கோல் போர்களில் ஏற்பவும் தீயை SHC-யுடன் ஒப்பிடலாம். காரணம், சூடான காற்று வைக்கோல் போர்களில் மோதும் பொழுது அவை உள்ளுக்குள் சூடேரி திடீரென்று பற்றி கொள்கிறது.



நெருப்பு மரணங்கள் எப்படி வேலை செய்கிறது என்பதின் 3 நிலைகளை இங்கே பாருங்கள்:





புள்ளி விவரங்கள்:



1950-களில் - 11 வழக்குகள்

1960-களில் - 7 வழக்குகள்

1970-களில் - 13 வழக்குகள்

1980-களில் - 22 வழக்குகள்


The remains of Dr John Irving Bentley, who possibly dies of spontaneous human combustion at his home in Northern Pennsylvania, USA, on 5 December 1966.







மற்ற புகைப்படங்கள்
















அறிவியலும், வானவியலைப் பற்றியும் என் மற்ற பதிவுகள்

அணுப்பிளவு (Nuclear Fission)

கால இயந்திரம்

E = MC2

கருந்துளைகள்

1-D, 2-D, 3-D, 4-D...

விண்கற்கள்

The Expanding Universe

அறிவியல் - வரமா / சாபமா?

13 comments:

  1. என்னப்பா இப்படி திகிலூட்டறீங்க?
    நல்லவேளை எனக்கு இன்னும்
    வயதாகவில்லை.
    நான் மது புகை பழக்கமுடையவள் இல்லை. அசைவமும் உண்பதில்லை.
    அப்பாடா.

    ReplyDelete
  2. This is not something unusal. Many saints and siddars have attained samadhis like this. for instance...
    There is a tradition in Tiruvannamalai that Guhai Namasivaya was accompanied on his journey by Virupaksha Deva, the man who gave his name to Virupaksha Cave. Ramana Maharishi occasionally told his devotees that the two of them were Virasaivas who came from Karnataka to Tiruvannamalai at the same time. It is reported that both of them had served Sivananada Desikar for twelve years. Almost nothing is known about the life of Virupaksha Deva except that he lived in Virupaksha Cave for a long time, and that when he died there his body transformed itself into vibhuti (sacred ash). That vibhuti is still kept in the cave and puja is done to it every day.

    for more details visit
    http://davidgodman.org/asaints/guhainam.shtml

    ReplyDelete
  3. முத்துலட்சுமி,

    //நல்லவேளை எனக்கு இன்னும் வயதாகவில்லை.//
    சைக்கிள் கேப்ல ஆட்டோ ஓட்டிட்டீங்க...

    Dear Anony,

    //This is not something unusal. Many saints and siddars have attained samadhis like this.//

    Yes! I knew that. அதனால் தான் தலைப்பை 'சாம்பலாகக் கடவாய்' என்று வைத்தேன் B-)

    ஆனால், இந்த பதிவு விஞ்ஞானம் நெருப்பு மரணாங்களை பற்றி என்ன சொல்கிறது என்று விளக்கவே. இல்லாவிட்டால், என் பதிவின் நோக்கம் மாறிவிடும்...:)

    ReplyDelete
  4. இது பற்றி பிபிசியில் சில வருடங்களுக்கு முன் Horizon என்ற அறிவியல் நிகழ்ச்சியில் பார்த்தேன். அவர்களுடைய முடிவு: இப்படி நடப்பதற்கு சாத்தியம் மிகக் குறைவு. இப்படி நடந்திருந்தால் அது மிகவும் வயதாகி, தீப்பிடித்தவுடன் உதவியை நாடவோ அல்லது அதைக் கட்டுப்படுத்தவோ இயலாத தருணத்தில் தான் நடைபெற்றிருக்கிறது. மற்றும் நீங்கள் கூறியுள்ளது போல, தானாகத் தீப்பிடிப்பதில்லை.

    மெழுகுவர்த்தி விளைவு இதில் இருப்பதால், குண்டாக இருப்பவர்களுக்கு இது நடப்பதற்கு சாத்தியம் அதிகமோ?

    வைசா

    ReplyDelete
  5. வைசா,

    //அவர்களுடைய முடிவு: இப்படி நடப்பதற்கு சாத்தியம் மிகக் குறைவு.//
    ஆமாங்க. 300 வருடத்தில் 200 சம்பவங்கள் தாம். அதனால் தான் இப்படி ஒரேமாதிரியாக நடப்பதை "SHC" என்கிறார்கள்.

    //மற்றும் நீங்கள் கூறியுள்ளது போல, தானாகத் தீப்பிடிப்பதில்லை.//

    ஆஹா, தலைவா...

    "நெருப்பு மரணங்கள் ஏற்பட ஏதேனும் ஒரு சிறு நெருப்பு பொறியாவது தேவைப்படுகிறது. தீக்குச்சி, சிகரெட், எரிபொருள், ஸ்பார்க், பெர்ஃப்யூம், சாராயம் போன்றவை."

    அதாவது ஒரு ஸ்பார்க் தேவைப்படுகிறது. பார்த்தவர்களுடைய கூற்றுபடி 'தானாக தீப்பிடித்தது'.

    ReplyDelete
  6. very interesting post , this is the first time im visiting ur page ..keep goin.

    ReplyDelete
  7. Welcome and Thanx கார்த்திக் பிரபு.

    ReplyDelete
  8. தலைப்பை பார்த்தவுடனே,விவகாரமான விஷயம் என்று ஓரளவு புரிந்தது.
    ஆனா,செம விபரம் உள்ள பதிவு என்று படித்தவுடன் தெரிந்தது.
    ரொம்ப மென்க்கெட்டுரிப்பீங்க என்று தெரிகிறது.
    நன்றி

    ReplyDelete
  9. //ரொம்ப மென்க்கெட்டுரிப்பீங்க என்று தெரிகிறது.//

    கொஞ்சம் போல. மதனின் 'மனிதனும் மர்மங்களும்'-ல் இருந்து தொடங்கியது (இங்கு 2 chapter-ல் மட்டுமே கொடுக்கப்பட்டது, விலாவாரியாக இல்லை. அதனால் இங்கு பதித்தேன்). பின் Wikipedia, howstuffworks.com போன்ற வலைகளில் இருந்தும். இந்த பட்டியலை பதிவின் கடைசியில் போடவேண்டும் என்று நினைத்தேன். மறந்துவிட்டேன். நியாபகப்படுத்தியதற்கு நன்றி வடுவூர் குமார்.

    ReplyDelete
  10. Hi Seenu,
    The content of " Sambalaka kadavai" is really interesting and informative. keep going dear Seenu...... i hope that u r a man of many matters..... am i correct dear Seenu....

    ReplyDelete
  11. வாம்மா...மணி. நக்கலா???

    ReplyDelete
  12. நன்றாக விரிவாக நிகழ்வுகளையும் சேர்த்து எழுதி இருக்கிறீர்கள்.

    ReplyDelete
  13. வாங்க கோவியாரே. நன்றி...

    ReplyDelete